Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன?

-என்.கே. அஷோக்பரன்

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இலங்கையை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமூகப் பரவல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், தினந்தோறும் நாடெங்கிலும் ஆங்காங்கே, புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வண்ணமே இருக்கின்றார்கள்.   

 கொரோனா வைரஸ், முழு உலகத்துக்குமே சவாலாக மாறியிருக்கிறது. கொரோனா வைரஸின் சுகாதாரத் தாக்கம் ஒரு புறமென்றால், அதன் பொருளாதாரத் தாக்கம் அதைவிடப் பயங்கரமானதாக இருக்கிறது.   

தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர, நீண்ட கால முடக்கல் நிலை அமல்படுத்தப்பட்டால், தொற்றுப் பரவல் குறையும். ஆனால், அதனால் விழும் பொருளாதார அடி, நீண்ட காலத்துக்கு மீண்டெழ முடியாத பாதாளத்தில் நாட்டைத் தள்ளிவிடும். ஆகவே, நோய்த்தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் வரை அல்லது, குறைந்தபட்சம் ஆற்றல்மிகு நோய்க்கொல்லி மருத்துவ சிகிச்சை முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் வரை, கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றோடு வாழ்வதற்கு, நாம் இயைபடைய வேண்டிய தேவை இருக்கிறது. புதியதோர் அசாதாரண நிலைமையின் கீழ்தான், ஏறத்தாழ அடுத்த இரண்டு வருடங்களும் கடந்து செல்லப் போகின்றன என்பது, நிபுணர்கள் கூறும் ஆரூடம்.   

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கம், தமிழர் தாயகத்தில் கடுமையான பாதிப்பை விளைவித்திருக்கிறது. நோய் பரவல் ஒருபுறமிருக்க, ஏலவே பொருளாதார ரீதியில் பெருஞ்சவாலைச் சந்தித்து வந்த வடக்கு-கிழக்கு, இன்னமும் கடுமையாகப் பாதிப்படைந்து கொண்டிருக்கிறது.   

மத்திய வங்கியின் 2017, 2018 மதிப்பிடலின்படி, இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைந்த கடைசி இரண்டு மாகாணங்கள் கிழக்கும் வடக்கும் ஆகும். முதலிடத்திலிருக்கும் மேல்மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியளவில் ஏறத்தாழ 10 சதவீதமே வடமாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியளவாகும். 

பாலியகொட மீன் சந்தை, கொரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்டமையானது, வடமாகாண மீனவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “மீன்களை விற்க, சந்தையில்லாமல் இருக்கிறோம்” என்று, வடமாகாண மீனவர் சங்கங்களின் தலைவர்கள், தமது கையறு நிலையை, அண்மையில் ஊடகங்களுக்குத் தௌிவுறுத்தி இருந்தார்கள். 

அரசாங்கத்தின் இன்றைய முன்னுரிமை, தேசிய பொருளாதாரத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது. சறுக்குப் பலகையில், அதள பாதாளத்தை நோக்கிச் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை, கடனெடுத்துக் காப்பாற்றும் நடவடிக்கைகளுக்குத்தான் அரசாங்கம் முன்னுரிமை காட்டுவதாகத் தெரிகிறது. 

உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு பற்றி, அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கினாலும், அதிலும்கூட, முன்னுரிமை அடிப்படையில் வடக்கு-கிழக்கு பின்தங்கியே நிற்கும். ஏனென்றால், ஏலவே வடக்கு-கிழக்கின் விவாசாயம், உற்பத்தித் துறை ஒப்பீட்டளவில் மிகச் சிறியது. ஆனால், வடக்கு-கிழக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தார்மீகக் கடமை, தமிழ்த் தேசியவாதிகளாகத் தம்மை முன்னிறுத்துகின்றவர்களுக்கே முக்கியமாக இருக்கிறது.   

‘தமிழ்த் தேசியம்’ என்பது, அர்த்தபுஷ்டி உள்ளது என்றால், அந்தத் தேசியத்தின் உயிர்நாடியான மக்களின் நலன்களை முன்னிறுத்துவது, தமிழ்த் தேசிய அரசியலில் முன்னுரிமை பெற்றதாக அமைய வேண்டும். மக்களின் முக்கிய உயிர்நாடிகளில் ஒன்று பொருளாதாரம். தமிழ் மக்களின் பொருளாதார மீட்சி, எழுச்சி, வளர்ச்சி பற்றிய பேச்சுகளைக் கேட்பது கூட, ‘தமிழ்த் தேசிய’ அரசியல் பரப்பில் அரிதானதாக இருக்கிறது. 

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், எதிர்ப்பு சார்ந்த அரசியலில் புடம்போனவர்களாக இருக்கிறார்கள். அதில் அவர்கள் விண்ணர்கள். ஆனால், சமூக, பொருளாதார, வளர்ச்சி, அபிவிருத்தி சார்ந்த பிரக்ஞை, அவர்களிடம் இல்லாதிருக்கிறது. இதனாலேயே, ‘அபிவிருத்தி அரசியல்’ என்ற சொற்றொடர், தேசிய கட்சிகளதும் அவர்களது சகாக்களதும் ஆதரவுத்தள அரசியலைக் குறிக்கும் சொல்லாக மாறிப்போனது. இது கவலைக்குரியது.   

பொருளாதாரம் பற்றி மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு பற்றிய கொள்கைகள், திட்டங்கள், நிகழ்ச்சிநிரல்கள் அற்றதாகவேதான், தமிழ்த் தேசிய அரசியல் நடந்துகொண்டிருக்கிறது என்பது வருத்தத்துக்கு உரியது. விடுதலை, தனிநாடு என்று பேசி, 30 வருடங்களும் யுத்தம் முடிந்த பின்னர், முடிந்த யுத்தத்தைப் பற்றிப் பேசி, 10 வருடங்களும் கடந்து சென்று விட்டன.   நடந்தவற்றுக்கான நீதியைத் தேடுவதிலுள்ள அதே பிரக்ஞையும் வீரியமும், எதிர்காலத்தைக் கட்டமைப்பதிலும் காட்டப்பட வேண்டும். அந்தச் சமநிலை, தமிழ்த் தேசிய அரசியலில் பேணப்படவில்லை. மாறாக, ‘அபிவிருத்தி’ என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்களை, சந்தேகக் கண் கொண்டு பார்க்கும், நிலைதான் இங்கு காணப்படுகிறது.

இன்றிருக்கும் தமிழ் மக்களும், நாளை பொருளாதார, சமூக ரீதியில் பின்னடைந்து வலுவிழந்து போனபின்னர் யாருக்காக நீதி, யாருக்காகத் தமிழ்த் தேசியம், யாருக்காக இந்த அரசியல்?   

இன்றைக்குப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. சில மாதங்கள், பாடசாலைகள் மூடப்பட்டதன் தாக்கம், இன்னும் ஒரு தசாப்தம் கழிந்தும் உணரப்படும். கல்வியைக் கொண்டாடும் சமூகத்தின் ‘தலைவர்கள்’ என்படுவோர், தேசத்தின் எதிர்காலமான மாணாக்கரின் கல்வி தடைப்பட்டதைச் சரி செய்ய, அதற்கான தீர்வுகள், மாற்று வழிகள், திட்டங்கள் பற்றிக் குறைந்த பட்சம் பேசவாவது செய்தார்களா? 

இல்லை! தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தாம் தலைமையேற்றிருக்கும் தேசத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடாமலும் அதைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல், அந்தத் தேசத்துக்கான  தலைவர்களாக, எப்படி அவர்களால் தம்மை முன்னிறுத்திக் கொள்ள முடிகிறது எனக் கேட்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.   

தமிழ்த் தேசிய கட்சிகளின், நிதித் தேவை பற்றிய நடைமுறைப் பிரச்சினை புரிந்துகொள்ளக் கூடியது. அதற்காக அவர்கள், புலம்பெயர் தமிழ் மக்களின் நிதிமூலங்களிலும் ஆதரவுதரும் வௌிநாட்டு அரசாங்கங்களினதும் ஆதரவில் தங்கியிருக்கிறார்கள் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியது. 

ஆனால், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களைத்தாண்டி, தமது அனுசரணையாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்படும் போது, தமிழ்த் தேசிய தலைவர்கள் எனப்படுவோர், மக்கள் பிரதிநிதியாகவோ, தேசத்தின்  பிரதிநிதியாகவோ இல்லாது போய், வணிகர்கள் ஆகிவிடுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில், தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களினதும் தேசத்தினதும் நலன்களுக்கு முரணாகக் கூட, அனுசரணையாளர்களின் நலன்களை முன்னிறுத்தும் துர்ப்பாக்கிய நிலைமைகளும் இருந்திருக்கின்றன. 

இந்த இடத்தில், சமரசம் செய்ய முடியாத குறைந்தபட்ச கொள்கை என்ற ஒன்றையாவது, தமிழ்த் தேசிய கட்சிகள் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது.   

மறுபுறத்தில், இன்றும் தமிழ்த் தேசிய அரசியலானது வெறும் எதிர்ப்பு அரசியலாகவே தொடர்கிறது. இது ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் ஒன்றை எதிர்த்தால், அதற்கான மாற்றை முன்வைப்பதும் அந்த மாற்றைக் கட்டியெழுப்பும் வழிவகைகளைக் கண்டறிவதும், அதற்கான திட்டங்களை வகுத்தலும், நடவடிக்கைகளை முன்னெடுத்தலும் அவசியம். 

இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசிய அரசியலில், இவற்றைச் செய்வதற்கான ஒரு வெற்றிடம் உணரப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலானது, நாம் எல்லாவற்றையும் எதிர்ப்போம் என்பதைத் தாண்டி, சமயோசிதமாகச் சிந்திக்கவும் தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிடவும் கொள்கைகளை வகுக்கவும் செயற்றிட்டங்களை உருவாக்கவும் வினைத்திறனாகச் செயற்படவும் வேண்டும். அதற்கான வழிகாட்டித் தளம், ஸ்தாபிக்கப்பட வேண்டும்.   

பதவிகளுக்காவும் தனிநபர் குரோதங்களுக்காகவும் இன்னபிற காரணங்களாலும், தமிழ்த் தேசிய கட்சிகள் இன்று சில்லறைகளாகச் சிதறிக் கிடக்கின்றன. அதை மாற்றுவது என்பது, முன்னுரிமையான பிரச்சினையல்ல. 

ஆனால், இவை அனைத்தும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துவதால், தமிழ்த் தேசிய கொள்கை அளவிலேனும், ஒரு தளத்தில் சந்தித்தல் அத்தியாவசியமானது. இது நேரடி அரசியல் முகாந்திரமாக அல்லாது, குறைந்த பட்சம், தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் பற்றிய கொள்கை, திட்டமிடல் தளமாக இருப்பது கூடப் போதுமானது. 

வீம்பு பேசும் அரசியல் மேடையாக அல்லாமல், ஒன்றுபட்ட தொலைநோக்குப் பார்வையை, தமிழ்த் தேசியத்துக்காகக்  கட்டமைக்கும் சிந்தனைக் கூடமாக, இது அமைய வேண்டும். அப்போதுதான், தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் பற்றிய பிரக்ஞை, தமிழ்த் தேசிய அரசியலில்  கட்சி பேதங்களைத் தாண்டியதாக மாறும். அதுதான், தேசத்தின் நலனுக்குச் சிறந்தது.   

தமிழ்த் தேசிய தலைமைகளும் கட்சி விசுவாசிகளும், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் உள்ளவரைதான் தமிழ்த் தேசியமும் அதன் ஊடான அரசியலும் இருக்கும். தமிழ் மக்களின் எதிர்காலத்தை மறந்துவிட்டு, வாய்ச்சவடால் அரசியல் செய்வது, எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலை, ‘யாருமில்லாத கடையில், யாருக்கு ரீ ஆத்துற’ என்ற நிலைமையில், கொண்டுபோய் விட்டுவிடும் கவனம்!   

 http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியலில்-அடுத்தது-என்ன/91-258423

3 hours ago, கிருபன் said:

‘தமிழ்த் தேசியம்’ என்பது, அர்த்தபுஷ்டி உள்ளது என்றால், அந்தத் தேசியத்தின் உயிர்நாடியான மக்களின் நலன்களை முன்னிறுத்துவது, தமிழ்த் தேசிய அரசியலில் முன்னுரிமை பெற்றதாக அமைய வேண்டும். மக்களின் முக்கிய உயிர்நாடிகளில் ஒன்று பொருளாதாரம். தமிழ் மக்களின் பொருளாதார மீட்சி, எழுச்சி, வளர்ச்சி பற்றிய பேச்சுகளைக் கேட்பது கூட, ‘தமிழ்த் தேசிய’ அரசியல் பரப்பில் அரிதானதாக இருக்கிறது. 

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், எதிர்ப்பு சார்ந்த அரசியலில் புடம்போனவர்களாக இருக்கிறார்கள். அதில் அவர்கள் விண்ணர்கள். ஆனால், சமூக, பொருளாதார, வளர்ச்சி, அபிவிருத்தி சார்ந்த பிரக்ஞை, அவர்களிடம் இல்லாதிருக்கிறது. இதனாலேயே, ‘அபிவிருத்தி அரசியல்’ என்ற சொற்றொடர், தேசிய கட்சிகளதும் அவர்களது சகாக்களதும் ஆதரவுத்தள அரசியலைக் குறிக்கும் சொல்லாக மாறிப்போனது. இது கவலைக்குரியது.   

நடைமுறை யதார்த்தங்களை புறம் தள்ளி  கற்பனைவாத  தமிழ்தேசியம் பேசுவது அவரவர் உணர்சிகளில் அவரவருக்கு தம்மளவில் மட்டும்  இனிப்பானதாக இருந்தாலும் அது தமிழ் தேசியத்தை இன்னும் பின்னடைவிற்கே கொண்டு செல்லும். எதிர் காலத்தில் தமிழ் தேசியத்தை வலியுறுத்துவதடன் அந்த மக்களின் சமூக, பொருளாதார வாழ்ககைத்தரத்தை உயர்ததும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விளையும் அரசியல்வாதிகளையே மக்கள் தெரிவு செய்யவேண்டும். தமிழ் தேசியம் என்பது ஒரு நீண்ட கால, மெதுவாக நகரவேண்டிய, ஒரு  அரசியல் திட்டம் அதை மட்டும் தீவிரமாக பேசுவது, வலியுறுத்துவது உண்சசிவசப்படுவது  தற்கொலைக்கு ஒப்பானது என்பதை கண்ட பட்டறிவு எம்மை மாற்றிக்கொள்ள உதவ வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

. தமிழ் தேசியம் என்பது ஒரு நீண்ட கால, மெதுவாக நகரவேண்டிய, ஒரு  அரசியல் திட்டம் அதை மட்டும் தீவிரமாக பேசுவது, வலியுறுத்துவது உண்சசிவசப்படுவது  தற்கொலைக்கு ஒப்பானது என்பதை கண்ட பட்டறிவு எம்மை மாற்றிக்கொள்ள உதவ வேண்டும். 

இவற்றைப்பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக விளக்க முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

இரு மாதங்களில் பைடனின் நிர்வாகம் அமெரிக்காவில் உருவாகும் போது, இலங்கையின் தூதுவர் மாறுவாரா தெரியாது. ஆனால், தென்னாசியாவுக்கான உதவிச் செயலாளராக இருக்கும் டீன் தொம்சனின் இடத்திற்கு வேறொருவர் பெரும்பாலும் வருவார். இதை மட்டும் தான் செய்வார்கள். 

தமிழர்கள் செய்ய வேண்டியது: இப்பவே ஒரு பொதுவான முகத்தையும் செய்தியையும் அமெரிக்காவுக்கு காட்ட தயார் செய்ய வேண்டும். சுமந்திரன், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், இந்த மூவரும் ஒன்றாகச் சந்திப்பை மேற்கொள்வது மிகச் சிறப்பாக இருக்கும். Presentation என்பது மிக முக்கியம் இராசதந்திரத்தில். கட்சிகளுக்கு சம அந்தஸ்துக் கொடுக்கிறோம் என்று கும்பலாகப் போய் பிஸ்கற் சாப்பிடாமல், இந்த மூவரும் மட்டுமே வெளிநாட்டுப் பிரதுநிதிகளைச் சந்திப்பது நமக்கு நல்லது என்று நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த மூவரில் சுமந்திரனைத் தட்டிவிட்டு மற்ற விக்கியும் கஜேயும் போகேலாதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இந்த மூவரில் சுமந்திரனைத் தட்டிவிட்டு மற்ற விக்கியும் கஜேயும் போகேலாதா?

போகலாம். ஆனால் "சிறு பான்மை வாக்குகள் பெற்ற தமிழ் கட்சிகள் வந்து சந்தித்தார்கள்.." என்று வாராந்த தகவல் அறிக்கை வாஷிங்ரனுக்கு அனுப்பும் போது எழுதுவார்கள். இன்னொரு 10 ஆண்டுகள் கழித்து யாராவது diplomatic cable ஐ கசிய விடும் போது மட்டும் எங்களுக்குத் தெரியவரும்!

சுமந்திரனும் விக்கினேஸ்வரனும் போன கூட்டங்கள் பற்றி தெரியும். அதோட சேர்த்து கஜனும் என்றால் விலக்குப்பிடிக்க சொல்ஹெமாலையும் முடியாது. முதலில் வெளியில் ஒருதரம் ஒருத்தர் மக்கள் நலன் கொண்டு பொறுத்துக்கொள்ள (agree to disagree, tolerance of political views) பழக வேண்டும். அதை விக்கினேஸ்வரன் செய்வார். ஆனால் மற்றவர்கள், கடந்தகால அனுபவப்படி கீரியும் பாம்பும் போல!

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட ஒரு விவசாய பொது மகனை அனுப்பினால் அவர் என்ன கோரிக்கை வைப்பார்.

22 hours ago, உடையார் said:

இவற்றைப்பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக விளக்க முடியுமா? 

எண்ணிக்கையில் மிக அதிகமான ஒரு மக்கள் கூட்டத்தையும் ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பையும் கொண்ட எதிரியுடன் மோதும் போது சற்றே புத்திசாலித்தனத்தையும் உபயோகிப்பதே சரியான நடைமுறையாக இருக்கும் என்பதையே குறிப்பிட்டேன்.  70 களின் ஆரம்பத்தில் சிறிய இராணுவமாக இருந்த சிறீலங்கா இராணுவத்தை பாரிய அளவில்  பலப்படுத்தி அந்த இராணுவ பலத்தையே முன்னிறுத்தி இனவாத அரசை நிறுவி இன வெறியை பாரியளவில் விதைப்பதற்கு எமது ஆயுத போராட்டமும் தனது பங்களிப்பை செய்த‍த‍து என்ற ஜதார்த்ததையே குறிப்பட்டேன். 

உடையார் சாதாரண பொது மக்களாகிய  நீங்களும் நானும் இங்கு எமது கருத்தையும் எதிர்கருத்தையும் மட்டமே எழுத முடியும். அதற்கு மேல் என்னாலோ உங்களாலோ பெரிதாக எதுவும் செய்து விட முடியாது. தனது மக்களின் எதிர்காலத்தை சிந்தித்து நடைமுறைப்படுத்தியிருக்க  வேண்டியவை எமது தலைமைகளே. இதுவரை எமது எந்த தலைமையும் அவ்வாறு சிறந்த முறையில் செயற்படவில்லை  என்பதை  சொல்வதற்கு யாருக்கும் பெரிய அரசியல் அறிவு ஒன்றும் தேவையில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. 

வெற்றி களிப்பினால் உருவான ம‍மதையால் உருவான இனவெறி அரசியலின் தேசியத்தை பாதுகாப்பது என்பது முன்னைய காலங்களை விட மிக கடினமான செயலாகவே எமது எதிர்கால சந்த‍த்திக்கு இருக்கும். பழைய தலைமைகளின் நோய்த்தாக்கத்தில் இருந்து விடுபட்டு புதிய சிந்தனைகளுடன் செயற்படுவதே அவர்களாவது அதை வெற்றி கொள்வதற்கான வழி.  அதை தீர்மானிக்க வேண்டியவர்கள் எதிர்கால தலைவர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் அனுதாரபுரத்தில் தோற்றத்துக்கும் புலிகள்தான் காரணம் என்பார்கள் 
சுத்தி சுத்தி சுப்பரின் கொள்ளைக்குள் குப்பை கொட்டுவது ஒன்றுதான் இவர்கள் 
இலக்கு. தேசியம் என்பது அது அமெரிக்க தேசியம் என்றாலும் ஆப்ரிக்க தேசியம் என்றாலும் உணர்வு சார்ந்தது ..... உணர்வு இல்லாதவன் முதலில் மனிதனாகவே இருக்க தகுதி  அற்றவன்.உணர்வுகளை விலைக்கு விற்பவன் வாங்குபவனை விபச்சராம் என்றுதான் தமிழில்  சொல்லுவது 

புலிகள் போன்றதொரு இராணுவ சிர்த்தார்ந்த்தத்தை உலகில் இதுவரை யாரும் நிறுவியதில்லைபிராந்திய பூகோள அமைவாகினும்  ... பிராந்திய அரசியல் போக்காக்கினும் எல்லாமே அவர்களுக்கு சாதகம் அற்றதாகவே அமைந்தது. நாலு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவை  ஒரு சுற்றி எதிரி இராணுவங்களால் சூழபட்ட ஒரு சிறி நிலப்பரப்பில் நின்றுகொண்டு ஒரு இராணுவத்தை தோற்றுவித்து 
ஒரு நிழல் அரசை உருவாக்குவது என்பது சாத்தியம் அற்ற ஒன்று. அதை சாதித்து  என்பதுக்கு பின்னால்  ஆயிர கணக்கான  தமிழ் இளைஞர்களின்  யுவதிகளின் உலகம் இதுவரை கேட்டிராத அர்ப்பணிப்பும்  உயிர்கொடையும்  இருக்கிறது. இதை போன்றதொரு வெற்றி என்பது உலகின் எந்த வரலாற்றிலும் இதுவரை 
இல்லாதது. விமான படை  வங்கி இந்த இரண்டும் அங்கீகரிக்கபட்ட அரசுகள் இன்றி உலகில் நடைமுறை படுத்தியவர்கள்  புலிகள் மட்டுமே. இவாறான தொரு வெற்றி வரலாறு ஈழத்தமிழருக்கு அவர்கள் வரலாற்றில் உண்டு. 

எழுத தெரியும் என்பதுக்காக எழுதப்படும் கூமுட்டை எழுத்துக்களை வாசித்து எந்த இனமும் ஒரு ஒரு புல்லுகூட புடுங்கியது இல்லை. ராஜேந்திர  சோழன் தோற்றுப்போயிருக்கலாம் ஆனால் இன்றும் ராஜ ராஜ சோழன் தமிழன் என்றும் ராஜேந்திர சோழன் என் வழிகாட்டி என்று யார் ஒரு தமிழன் உணர்கிறானோ அவன்தான் முதலில் தமிழன். ராஜேந்திர சோழனின் தோல்விக்கு பின்னால் இருக்கும்  சூழலை நேர்த்தியாக பார்க்க வேண்டிய தேவை அவனுக்குத்தான் இருக்கிறது. ஏனெனில் என் இனம்  மீண்டும் எழவேண்டும் என்ற நெருப்பு அவன் நெஞ்சுக்குள் இருக்கும். மாறாக ராஜேந்திர சோழன் வெற்றியாக அரசமைத்ததுதான் தமிழர்களுக்கு தோல்வி  வந்தது  என்பவன் துரோகியிலும் கீழ் ஆனவன் காரணம் அவன் இரண்டு சூழ்ச்சிகளை லாபகமாக செய்ய முனைகிறான். ஒன்று எமது வீர வரலாறை  அழிக்க பார்க்கிறான்  இரண்டு இனி அவாறானதொரு பெருமை மிகு அரசு எழாது முளையிலேயே கிள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டு  செயல்படுகிறான். இந்த வேறுபாடுகளை எமது தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டிய  கடமை எமக்கு இருக்கிறது. 

புத்திசாலி போல குப்பை கொட்டுபவன் குப்பைகள் எமக்கு தேவை இல்லை 
கொட்ட பட்டிருக்கும் குப்பைகளை கொஞ்சம் என்றாலும் அள்ளி  எறியும் கரங்கள்தான் எமது இனத்தின் 
இன்றைய தேவை.

Edited by Maruthankerny
paragraph structure

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

 நீங்களும் நானும் இங்கு எமது கருத்தையும் எதிர்கருத்தையும் மட்டமே எழுத முடியும். அதற்கு மேல் என்னாலோ உங்களாலோ பெரிதாக எதுவும் செய்து விட முடியாது. தனது மக்களின் எதிர்காலத்தை சிந்தித்து நடைமுறைப்படுத்தியிருக்க  வேண்டியவை எமது தலைமைகளே. இதுவரை எமது எந்த தலைமையும் அவ்வாறு சிறந்த முறையில் செயற்படவில்லை  என்பதை  சொல்வதற்கு யாருக்கும் பெரிய அரசியல் அறிவு ஒன்றும் தேவையில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. 

உண்மையான கருத்து.

தமிழ்மக்களின் தலைமைகளோ மக்களின் எதிர்காலத்தை சிந்தித்து நடைமுறைப்படுத்துவதற்குபதிலாக தங்கள் அரசியல் வெற்றியை எப்படி அதிகரிக்கலாம் தக்கவைத்து கொள்ளலாம் என்பதிற்காக பைடன் கமலா கரிஸ் எங்களுக்கு உதவுவார்கள் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Maruthankerny said:

எல்லாளன் அனுதாரபுரத்தில் தோற்றத்துக்கும் புலிகள்தான் காரணம் என்பார்கள் 

இதே மன நிலையில் இங்கும் இருக்கின்றார்கள்.

பல ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அதே கொள்கையை கைவிடாமல் தக்க வைத்துக்கொள்கின்றார்கள்

காரணம் எல்லாம் அரைசாண் வயிறு தான்...

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2020 at 01:32, Justin said:

இரு மாதங்களில் பைடனின் நிர்வாகம் அமெரிக்காவில் உருவாகும் போது, இலங்கையின் தூதுவர் மாறுவாரா தெரியாது. ஆனால், தென்னாசியாவுக்கான உதவிச் செயலாளராக இருக்கும் டீன் தொம்சனின் இடத்திற்கு வேறொருவர் பெரும்பாலும் வருவார். இதை மட்டும் தான் செய்வார்கள். 

தமிழர்கள் செய்ய வேண்டியது: இப்பவே ஒரு பொதுவான முகத்தையும் செய்தியையும் அமெரிக்காவுக்கு காட்ட தயார் செய்ய வேண்டும். சுமந்திரன், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், இந்த மூவரும் ஒன்றாகச் சந்திப்பை மேற்கொள்வது மிகச் சிறப்பாக இருக்கும். Presentation என்பது மிக முக்கியம் இராசதந்திரத்தில். கட்சிகளுக்கு சம அந்தஸ்துக் கொடுக்கிறோம் என்று கும்பலாகப் போய் பிஸ்கற் சாப்பிடாமல், இந்த மூவரும் மட்டுமே வெளிநாட்டுப் பிரதுநிதிகளைச் சந்திப்பது நமக்கு நல்லது என்று நினைக்கிறேன்!

நல்ல ஆலோசனை,

தமிழர்களின் ஒருங்கிணைந்த பிரதிநிதிகளாக இவர்கள் மூவரும் அமெரிக்க அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது சாலச் சிறந்தது. தமக்கிடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து தமிழினம் இன்றிருக்கும் இக்கட்டான நிலையினை கருத்திற்கொண்டு இவர்கள் செயற்படவேண்டும். சம்பந்தனை நீங்கள் வேண்டுமென்றே தவிர்த்துக்கொண்டதாக நான் எடுத்துக்கொள்கிறேன், அதுகூட சரியான முடிவுதான். 

நீங்கள் சொல்வது நடக்கவேண்டும். பார்க்கலாம், எதோ ஒரு வழியிலாவது எம்மீதான இந்த ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்படவேண்டும். 

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

சுமந்திரன் போன்றதொரு சுத்துமாத்தை ஈழத்தமிழர்கள் இன்னும் காணவில்லை 
என்று எண்ணுகிறேன் .... அடுத்தவன் அடுப்பு மூட்டி ஏதாவது சரிவந்தாலும் பொங்கி வரும் போது 
தட்டி உடைத்து அதில் இருந்து அரசியல் செய்வது எப்படி என்றுதான் சுமந்திரன் எண்ணுவார். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

சுமந்திரன் போன்றதொரு சுத்துமாத்தை ஈழத்தமிழர்கள் இன்னும் காணவில்லை 
என்று எண்ணுகிறேன் .... அடுத்தவன் அடுப்பு மூட்டி ஏதாவது சரிவந்தாலும் பொங்கி வரும் போது 
தட்டி உடைத்து அதில் இருந்து அரசியல் செய்வது எப்படி என்றுதான் சுமந்திரன் எண்ணுவார். 

தமிழரின் விடிவிற்காகவாவது, அவர் தனது சுத்துமாத்துக்களைக் கைவிடவேண்டும். இன்றிருக்கும் நிலையில் இவர்கள் மக்களைப்பற்றி சிந்திப்பதால் மட்டுமே விடிவினை பெறமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.