Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட வேண்டாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

விசுகு,  குற்றங்கள் குறைய வேண்டுமானால் மனிதரை மனிதர் இன, மத, வேறுபாடு இன்றி மரியாதை செய்வதுடன் பேராசை கொள்ளாமல் வாழ்ந்தால் போதும். அதன் மூலம் பெருமளவு குற்றங்கள் குறைக்கப்படும்.  இறைவன் எனக்கு செல்வங்களை தரவேண்டும் என் பேராசை தான் பலரை வணங்க வைக்கிறது

குற்றங்கள் குறைவதற்கும் வணங்குவதற்கும் ஒரு தொடர்பும் இல்லைலை அண்மைக்காலத்தில் மனிதர்களை கொலைசெய்தவர்கள் கூட ஆகாயத்ததை பார்தது வணங்கிவிட்டே செய்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆகவே வணங்குதல் குற்றங்களை குறைக்காது

1. வணங்குதல் குற்றங்களை குறைக்காது - சுற்றி வளைக்காமல் நேரடியாக விஞ்ஞான பூர்ப ஆதாரங்களுடன் பதிலை எதிர் பார்க்கிறேன்.

2. இறைவன் எனக்கு செல்வங்களை தரவேண்டும் என் பேராசை தான் பலரை வணங்க வைக்கிறது - சுற்றி வளைக்காமல் நேரடியாக விஞ்ஞான பூர்ப ஆதாரங்களுடன் பதிலை எதிர் பார்க்கிறேன்.

On 16/11/2020 at 23:49, tulpen said:

இதை தான் சொல்வது  எட்டாப்பழம் புளிக்கும் என்று.

3. எட்டாப்பழம் புளிக்கும்  - சுற்றி வளைக்காமல் நேரடியாக விஞ்ஞான பூர்ப ஆதாரங்களுடன் பதிலை எதிர் பார்க்கிறேன்.

நீங்கள் பதியும் கருத்துக்களை இனிமேல் மருத்துவ விஞ்ஞான பூர்பவமாக பதியுங்கள் அதன்பின் உங்களிற்கு மருத்துவ விஞ்ஞான ரீதியாக பதில் தருகின்றோம்

பி.கு: உங்கள் உடல் நலத்திற்கு விரைவாக சிந்தித்து நல்ல முடிவெடுங்கள். நீண்ட காலம் சிந்தி தீர்கள் என்றால் முடிவெடுக்காமல் மன அழுத்தம் வந்து பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்துவிடும், உங்கள் நன்மைக்கே😎

  • Replies 65
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

சகோ

இங்கே நல்ல சமூதாயத்துக்கு தேவையான  கருத்துக்கள்  வரும்போது எப்பொழுதும் வரவேற்க

உற்சாகப்படுத்த  தவறாதவன் யான்

அதேநேரம் சாதாரண மக்களின்  நம்பிக்கைகள்  மற்றும்  பற்றுக்களை  கேலி  செய்யும்போதும்  அதை கண்டும்  காணாமல்  செல்வதில்லை

இதுக்கும்  மதச்சாயம்  பூசமாட்டீர்கள்  என்ற  நம்பிக்கையில்??

அப்படியெல்லாம் ஒரு மதத்தை குறி வைத்து நான் பேசப் போவதில்லை. கவலை வேண்டாம்.

எந்த மதநம்பிக்கையும் அதிகமாக இருக்கும் நாடுகளில் வாழ்க்கைத் தரம் குறைவு என்பதே அவதானிப்பு. 

 மத நம்பிக்கை உயிராபத்தை உருவாக்கியதற்கு ஒரு உதாரணம்: அமெரிக்காவில் தீவிர கிறிஸ்தவ நம்பிக்கை கொண்ட மக்கள் இருக்கிறார்கள். போன மாதம் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் 35% வீதமானோர் கோவிட் கடவுளின் தண்டனை என்று சொல்லியிருக்கிறார்களாம். அதனால், தடுப்பு முறைகளைப் பின்பற்றுவதை விட கடவுளை நம்பி ஜெபிப்பது மட்டுமே தீர்வு என்று அவர்கள் நம்பியதால் காப்பாற்றப் பட்டிருக்கக் கூடிய இலட்சக் கணக்கான அமெரிக்கர்கள் இறந்து விட்டனர்.  

சமூக நன்மைகள், பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு என்று வரும் போது, மதங்களினால் எதிர்மறை விளைவுகளே  ஏற்பட்டிருக்கின்றன. அறிவியலால் இந்த முனைகளில் முன்னேற்றங்களே ஏற்பட்டிருக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அண்ட சராசரத்தில் மனிதனால் கண்டு பிடிக்க முடியாத பலவிடயங்கள் இன்னுமிருக்கு. ஏன் நம் பூமியில் ஆழ் கடலுக்குள் இருக்கு அதிசயங்களை கூட இன்னும் கண்டு பிடிக்கவில்லை மெத்த படிச்ச விஞ்ஞானிகளால். சும்மா கடவுளில்லை எம்மைவிட வேறு சக்தியில்லை என்று கூவுவதைவிட்டுவிட்டு உருப்படியாக பூமியில் கண்டுபிடிக்க முடியாத பல அதிசயங்களிருக்கு, அதை உருப்படியா கண்டு பிடியுங்கள், 

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல சமூதாயம் உருவாக நிறைய வாசிப்பு, படிப்பு, கேள்விக்கு உட்படுத்தும் நிலை தேவை.
கடவுள் கண்ணை குத்திவிடுவார் ஆகாயத்தை பார்த்து உன்னை படைத்தவனை கும்பிடு அல்லது சாமி குற்றம் என்று பயமுறுத்துவதெல்லாம் நல்ல சமுதாயம் உருவாக உதவாது.

நீங்கள் இன்னும் 100 ஆண்டுகள் பின்னோக்கி நின்று சிந்திக்கின்றீர்கள், இந்த காலத்தில் நின்று சிந்தியுங்கள், இதையெல்லாம் கடந்து வந்து பல காலமாகிவிட்டது. புதுசா ஏதாவது சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இந்த அண்ட சராசரத்தில் மனிதனால் கண்டு பிடிக்க முடியாத பலவிடயங்கள் இன்னுமிருக்கு. ஏன் நம் பூமியில் ஆழ் கடலுக்குள் இருக்கு அதிசயங்களை கூட இன்னும் கண்டு பிடிக்கவில்லை மெத்த படிச்ச விஞ்ஞானிகளால். சும்மா கடவுளில்லை எம்மைவிட வேறு சக்தியில்லை என்று கூவுவதைவிட்டுவிட்டு உருப்படியாக பூமியில் கண்டுபிடிக்க முடியாத பல அதிசயங்களிருக்கு, அதை உருப்படியா கண்டு பிடியுங்கள், 

நீங்கள் இன்னும் 100 ஆண்டுகள் பின்னோக்கி நின்று சிந்திக்கின்றீர்கள், இந்த காலத்தில் நின்று சிந்தியுங்கள், இதையெல்லாம் கடந்து வந்து பல காலமாகிவிட்டது. புதுசா ஏதாவது சொல்லுங்கள்

கடவுளை நம்புபவனை விட

கடவுள்  இல்லை  என்பவனே கடவுளை அடிக்கடி  நினைக்கிறான் பயப்படுகிறான்  என்பதற்கு பல தரப்பட்ட

அனுபவங்கள்  உண்டு.  ஏனெனில்  நானே இவ்வாறு  எழுதிக்கொண்டிருந்தவன்  தான்.

அவர்கள்  100 ஆண்டுகளில்லை 1 லட்சம் ஆண்டுகளும் பின்னோக்கி போவார்கள் இது தமது கருத்தை மற்றவர்  உடன்பட  வைக்க மட்டுமே.

மற்றும்படி  அவர்களது  வாழ்க்கைமுறைகளிலும் குடும்ப  நிகழ்வுகளிலும்  1 லட்சம்  பழையமையானவற்றைக்கூட புறக்கணிக்கமாட்டார்கள்.  அதுக்கும்  ஒரு புறக்காரணி  வைத்திருப்பார்கள்.

உண்மையில் இங்கு  இவர்களுடன்  எழுதுவதே நேர விரயம்  தான்.

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் கண்டது..

ரேடியோவை கண்டுபிடித்த #மார்கோனி சிறுவயதாய் இருந்தபோது ஒறுநாள் தன்னுடைய தகப்பனார் ஜெபித்து கொண்டிருப்பதை பார்த்து  சிரித்துகொண்டுஇருந்தார்.

தகப்பனார் மகனை பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார். 

அதற்கு மார்கோனி, அப்பா... நீங்கள் *பரமண்டலங்களில் இருக்கும் எங்கள்பிதாவே* என்று ஜெபித்தீர்கள் 

அந்த பரமண்டலம் எங்கேஇருக்கிறது? என்று கேட்டார். அதற்கு தந்தை மேலே கை காண்பித்தார். 

மேலே பரமண்டலத்தில் இருக்கிற பிதாவுக்குஇங்கு இருந்து நீங்க செய்கிற ஜெபம் எப்படிகேட்கும்? பக்கத்திலிருக்கிற எனக்கே கேட்கமாட்டேங்கிறது என்று  பரியாசமாய் கேட்டார். 

அதற்கு தந்தை என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மறுபடியும் முழங்கால் போட்டு ஆண்டவரே நீரே என் மகனுக்கு புரியவையும் என்று ஜெபித்துவிட்டு போய்விட்டார்.

மார்க்கோனி ரேடியோ கண்டுபிடித்தபின் தன்னுடைய சொந்த ஊரிலே நடந்த பாராட்டு
விழாவில்...

என்னுடைய சிறுவயதிலே என் தந்தையிடம் நான் கேட்ட ஒரு கேள்விக்கு ஆண்டவர் என் வழியாகவே எனக்கு பதில் சொல்லிவிட்டார்.

 எப்படியெனில் நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவை ஒரு குறிப்பிட்ட  இடத்தில் வைத்து வைத்து கேட்கும்போது  முன்னூற்றுஇருபது கி.மீ தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்த நேரத்தில் ஒளிபரப்பபடுகிறதோ அதே நேரத்தில் இங்கேயும் கேட்கமுடியும். 

சாதாரன ஆறறிவுள்ள மனிதனாகிய நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவே இப்படிகேட்கும்போது என்னை படைத்த ஆண்டவர் நிச்சயமாக என் தகப்பன் செய்த *ஜெபத்தை  கேட்பார்* என்று சொன்னார். 

நிச்சயமாக உங்கள் ஜெபத்திற்கு பதில் உண்டு  

என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

சங்கீதம் 66:20

https://www.facebook.com/100009441231479/posts/2895583987432947/?d=n

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, விசுகு said:

மற்றும்படி  அவர்களது  வாழ்க்கைமுறைகளிலும் குடும்ப  நிகழ்வுகளிலும்  1 லட்சம்  பழையமையானவற்றைக்கூட புறக்கணிக்கமாட்டார்கள்.  அதுக்கும்  ஒரு புறக்காரணி  வைத்திருப்பார்கள்.

ஐயரும் வேண்டாம் அபிசேகமும் வேண்டாம் ஆராதனையும் வேண்டாம் எல்லாம் மூட நம்பிக்கை எண்டு சொன்னாக்களின்ரை கன கலியாண வீடுகளுக்கு போயிருக்கிறன் விசுகர்.
அவையளின்ரை கொண்டாங்களிலை தான் குடுமியுடன் குந்தியிருந்து மந்திரங்கள் ஓத சந்தணமும் ஜவ்வாதும் மணக்க ஜாம் ஜாம் எண்டு கலியாணவீடு நடக்கும். கேட்டால்  ஒரு சிரிப்பொண்டு சிரிப்பினம் பாருங்கோ சொல்லி வேலையில்லை.

இனி வரும் காலங்களில் வாதாட வருபவர்கள் தங்கள் சொந்த முகவரியை வாழ்க்கையை தெரிவித்து விட்டு வரட்டும். 😁

 வீட்டில் நடராசர் சிலை வைத்திருப்பார்கள். கேட்டால் வடிவுக்கு என்பார்கள்.😜

16 hours ago, உடையார் said:

1. வணங்குதல் குற்றங்களை குறைக்காது - சுற்றி வளைக்காமல் நேரடியாக விஞ்ஞான பூர்ப ஆதாரங்களுடன் பதிலை எதிர் பார்க்கிறேன்.

2. இறைவன் எனக்கு செல்வங்களை தரவேண்டும் என் பேராசை தான் பலரை வணங்க வைக்கிறது - சுற்றி வளைக்காமல் நேரடியாக விஞ்ஞான பூர்ப ஆதாரங்களுடன் பதிலை எதிர் பார்க்கிறேன்.

3. எட்டாப்பழம் புளிக்கும்  - சுற்றி வளைக்காமல் நேரடியாக விஞ்ஞான பூர்ப ஆதாரங்களுடன் பதிலை எதிர் பார்க்கிறேன்.

நீங்கள் பதியும் கருத்துக்களை இனிமேல் மருத்துவ விஞ்ஞான பூர்பவமாக பதியுங்கள் அதன்பின் உங்களிற்கு மருத்துவ விஞ்ஞான ரீதியாக பதில் தருகின்றோம்

பி.கு: உங்கள் உடல் நலத்திற்கு விரைவாக சிந்தித்து நல்ல முடிவெடுங்கள். நீண்ட காலம் சிந்தி தீர்கள் என்றால் முடிவெடுக்காமல் மன அழுத்தம் வந்து பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்துவிடும், உங்கள் நன்மைக்கே😎

உடையார், எந்த ஒரு விடயத்திலும் அவசர முடிவுகள் தவறாக போகவே சாத்தியம் அதிகம்,  நிதானமாக பல்வேறு பக்க பார்வைகள் மூலம்  சிந்தித்து எடுக்கும் முடிவுகளே பெருமாலும் சிறப்பானதாக இருக்கும். ஆகவே தான் உங்களது கூற்றான  விரைவாக சிந்தியுங்கள் உடல் நலத்திற்கு நல்லது. அது மன அமைதியை தரும் என்ற வசனத்திற்கு அது எப்படி என்று விளக்கமாக தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன்.  நான் எழுதியதற்கு ஏதோ பதிலடி தரவேண்டும் என்ற அவசரக்கோலத்தில் வெள்ளிடை மலையாக தெளிவாக தெரியும் விடயங்களுக்கெல்லாம் என்னிடம் விளக்கம் கேட்டுள்ளீர்கள். 

நீங்கள் கேட்ட முதலாவது விடயத்திற்கு ஏற்கனவே ஜஸ்ரின் தெளிவாக பதிலளித்திருந்தும் அதை நிதானமாக வாசிக்க பொறுமை இ்ன்றி அவசர கோலத்தில் என்னிடம் கேள்வி கேட்டுள்ளீர்கள் இருந்தாலும் கூறுகிறேன். கோத்தபாயவும் மகிந்தவும்  கடவுளை  வணங்கி விட்டு தான் இத்தனை போர்க்குற்றங்களையும் செய்தார்கள். இனக்கொலை செய்தார்கள். அவர்களுக்கு அதிக உதவிகளை செய்த இந்தியர்களும் மிகுந்த கடவுள் நம்பிக்கையாளர்கள். கடவுள் நம்பிக்கையுடன் அதிக நேரம் கடவுளை வணங்க செலவிடும் ஆசிய நாடுகளில் அதிக குற்றங்கள் நடைபெறுகிறது. அதே நேரம் மிக அதிகமான Atheist மக்களை கொண்ட ஸ்கன்னிநேவிய நாடுகளில் சமூக குற்றங்கள் மிக மிக குறைவாக இருப்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

இறைவன் செல்வங்களை அளிப்பான் என்றும் தமது தமது தனது குடும்பத்தின் வாழ்வை வழப்படுத்துவான் என்ற  நம்பிக்கையிலும், கடவுளை வணங்கினால் தனது நோய் தீரும் என்ற நம்பிக்கையிலும்  தான் உலகில் பலரும் கடவுளை வணங்குகிறார்கள் என்பது பொதுவாகவே தெரிந்த சாதாரண விடயம். பல இந்து புராணங்ககளில் கூட அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லோயா போன்றவர்களும் அதையே செய்கின்றனர். எங்கோ  வெகு தூரத்தில் இருக்கும் Satun  என்ற  planet க்கு எண்ணை எரித்து வணங்கினால் தனது கஷ்ரம் தீரும் என்ற குருட்டு மூட நம்பிக்கையில் அதை செய்வதும் அதற்கு தான்.

எட்டாப்பழம் புளிக்கும்  நான் எழுதிய வசனம் உள்ள பதிலில் அது பற்றி மிகத்தெளிவாகவும் விளக்கமாகவும் அதன் அர்த்த‍த்தை  கூறியுள்ளேன். அந்த பதில் முழுவதையும்  மீண்டும் வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.  அப்போதும் புரியாவிட்டால் ஒரு தமிழ் ஆசிரியரின் உதவியை நாடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

*"எளிய முறையில்                          சரணாகதி விளக்கம்"* 🦚

மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை !

மாட்டுக்கு உயிர்,
அறிவு இரண்டும்
உண்டு !

ஆனால் வண்டிக்காரன்
உயிரில்லாத வண்டியை
அறிவுள்ள மாட்டில் பூட்டி
எந்த இடம் செல்ல வேண்டும் என்பதை
தீர்மானித்து
வண்டியை
செலுத்துவான்.

எவ்வளவு தூரம் !
எவ்வளவு நேரம் !
எவ்வளவு பாரம் !

அனைத்தையும்
தீர்மானிப்பவன் வண்டிக்காரன்
மட்டுமே !

அறிவிருந்தும்
சுமப்பது தானாக இருந்தாலும்
மாட்டால்
ஒன்றும் செய்ய இயலாது !

அதுபோல
உடம்பு என்ற
ஜட வண்டியை
ஆத்மா உயிர்
என்ற மாட்டில் பூட்டி
இறைவன் என்ற
வண்டிக்காரன்
ஓட்டுகிறான் !

அவனே தீர்மானிப்பவன்.
அவன் இயக்குவான்
மனிதன் இயங்குகிறான்.

எவ்வளவு காலம் !
எவ்வளவு நேரம் !
எவ்வளவு பாரம் !

தீர்மாணிப்பது
இறைவனே !

இதுதான்
நமக்காக
இறைவன் போட்டிருக்கும் DESIGN !

இதுதான்
இறைவன் நமக்கு
தந்திருக்கும் ASSIGNMENT !

இதை
உணர்ந்தவனுக்கு
துயரம் இல்லை !

இதை
உணராதவனுக்கு
அமைதி இல்லை !

🔥 *ஓம் நமசிவாய* 🔥
 
நாமக்கல் கவிஞர் உரை: படிப்பதன் பயன் அறிவு பெறுதல். அப்படியானால் நம் அறிவுக்கெல்லாம் எட்டாத ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதைப் போற்றாவிட்டால் படிப்பினால் என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

எழுதியதற்கு ஏதோ பதிலடி தரவேண்டும் என்ற அவசரக்கோலத்தில் வெள்ளிடை மலையாக தெளிவாக தெரியும் விடயங்களுக்கெல்லாம் என்னிடம் விளக்கம் கேட்டுள்ளீர்கள். 

அதே தான் அவசரமாக ஏதாவது பதிலடி கொடுக்க வேண்டும், மற்றும் படி அவரது நோக்கம் 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி பயணிக்க வைப்பது. சாய்பாபவை கும்பிடுகிறவர்கள் நல்ல நிலையில் குடும்பத்தை நடத்துகின்றனர் மன சந்தோஷமாக இருக்கின்றனர் என்று ஒரு மனிதன் சாய்பாபவை கடவுளாக்கி விளம்பரம் செய்தவர். சாய்பாபவை கும்பிட்டு நல்ல நிலையில் இருப்பவர்கள் சாய்பாபவை கும்பிடாமல் விட்டால் அதைவிட நல்ல நிலையில் இருப்பார்கள் என்பதே உண்மை. சாய்பாபவை பிரார்த்தனை செய்யும் நேரத்தை பயனுள்ள வழிகளில் பயன்படுத்தலாம் காசும் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

உடையார், எந்த ஒரு விடயத்திலும் அவசர முடிவுகள் தவறாக போகவே சாத்தியம் அதிகம்,  நிதானமாக பல்வேறு பக்க பார்வைகள் மூலம்  சிந்தித்து எடுக்கும் முடிவுகளே பெருமாலும் சிறப்பானதாக இருக்கும். ஆகவே தான் உங்களது கூற்றான  விரைவாக சிந்தியுங்கள் உடல் நலத்திற்கு நல்லது. அது மன அமைதியை தரும் என்ற வசனத்திற்கு அது எப்படி என்று விளக்கமாக தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன்.  நான் எழுதியதற்கு ஏதோ பதிலடி தரவேண்டும் என்ற அவசரக்கோலத்தில் வெள்ளிடை மலையாக தெளிவாக தெரியும் விடயங்களுக்கெல்லாம் என்னிடம் விளக்கம் கேட்டுள்ளீர்கள். 

நீங்கள் கேட்ட முதலாவது விடயத்திற்கு ஏற்கனவே ஜஸ்ரின் தெளிவாக பதிலளித்திருந்தும் அதை நிதானமாக வாசிக்க பொறுமை இ்ன்றி அவசர கோலத்தில் என்னிடம் கேள்வி கேட்டுள்ளீர்கள் இருந்தாலும் கூறுகிறேன். கோத்தபாயவும் மகிந்தவும்  கடவுளை  வணங்கி விட்டு தான் இத்தனை போர்க்குற்றங்களையும் செய்தார்கள். இனக்கொலை செய்தார்கள். அவர்களுக்கு அதிக உதவிகளை செய்த இந்தியர்களும் மிகுந்த கடவுள் நம்பிக்கையாளர்கள். கடவுள் நம்பிக்கையுடன் அதிக நேரம் கடவுளை வணங்க செலவிடும் ஆசிய நாடுகளில் அதிக குற்றங்கள் நடைபெறுகிறது. அதே நேரம் மிக அதிகமான Atheist மக்களை கொண்ட ஸ்கன்னிநேவிய நாடுகளில் சமூக குற்றங்கள் மிக மிக குறைவாக இருப்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

இறைவன் செல்வங்களை அளிப்பான் என்றும் தமது தமது தனது குடும்பத்தின் வாழ்வை வழப்படுத்துவான் என்ற  நம்பிக்கையிலும், கடவுளை வணங்கினால் தனது நோய் தீரும் என்ற நம்பிக்கையிலும்  தான் உலகில் பலரும் கடவுளை வணங்குகிறார்கள் என்பது பொதுவாகவே தெரிந்த சாதாரண விடயம். பல இந்து புராணங்ககளில் கூட அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லோயா போன்றவர்களும் அதையே செய்கின்றனர். எங்கோ  வெகு தூரத்தில் இருக்கும் Satun  என்ற  planet க்கு எண்ணை எரித்து வணங்கினால் தனது கஷ்ரம் தீரும் என்ற குருட்டு மூட நம்பிக்கையில் அதை செய்வதும் அதற்கு தான்.

எட்டாப்பழம் புளிக்கும்  நான் எழுதிய வசனம் உள்ள பதிலில் அது பற்றி மிகத்தெளிவாகவும் விளக்கமாகவும் அதன் அர்த்த‍த்தை  கூறியுள்ளேன். அந்த பதில் முழுவதையும்  மீண்டும் வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.  அப்போதும் புரியாவிட்டால் ஒரு தமிழ் ஆசிரியரின் உதவியை நாடுங்கள். 

அறிவுள்ளவன் விரைவாக சிந்தித்து நல்ல முடிவுகளை எடுப்பதால் வெற்றியடைகின்றான், உங்களுக்கு இந்த கருத்தை சிந்திக்க காலமெடுக்கும் அதனால் நீங்கள் நல்ல நேரமெடுங்கள் இதை விளங்கி கொள்ள. அத்துடன் நேரமிருந்தால் இந்த Thinking, Fast and Slow  புத்தகத்தை வாங்கி வாசித்து பாருங்கள்

ஜஸ்ரின் கருத்தெழுதினால் அவரின் கருத்து  சரியென்று நீங்கள் தொடரலாம், எனக்கு அவரின் கருத்தில் எந்த அர்த்தமுமில்லை, விஞ்ஞான பூர்பவமாக நிருபிக்காமல் சும்மா மனதில் ஏழுவதையெல்லாம் நல்ல கருதென்று உங்களைப்போன்றவர்கள் தூக்கிவைத்து கொண்டாடலாம்.

 பலர் வணங்குவது பிரார்த்தனை செய்வது உலக மன அமைதிக்கு. எங்கே விஞ்ஞான பூர்பவமாக நிருபியுங்கள் அப்படியில்லையென்று.

எட்டாப்பழம் புளிக்கும் - என் தமிழ் ஆசிரியரிடம் கேட்டேன், தம்பி யாராவது இந்த வார்த்தையை பயன் படுத்தினால் செருப்பாலை அடிடா என்று சொன்னார், ஏன் சொன்னாரென்று விளங்கவில்லே, கேட்டேன் அவர் சொன்னார், இது பிற்போக்கு வாதிகள் ஒருவரின் முன்னேற்றத்தை தடுக்க பயன்படுத்திய வார்த்தையென்று, முயற்ச்சி செய்தால் எதையும் அடையலாம் வாழ்வில்.

இப்படி எட்டாபழம் புளிக்குமென்று முயற்ச்சியை கைவிடக்கூடாது என்று சொன்னார்.

நீங்கள் எப்படி உங்களுக்கு எட்டாபழம் இனி புளிக்குமா இனிக்குமா?

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அதே தான் அவசரமாக ஏதாவது பதிலடி கொடுக்க வேண்டும், மற்றும் படி அவரது நோக்கம் 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி பயணிக்க வைப்பது. சாய்பாபவை கும்பிடுகிறவர்கள் நல்ல நிலையில் குடும்பத்தை நடத்துகின்றனர் மன சந்தோஷமாக இருக்கின்றனர் என்று ஒரு மனிதன் சாய்பாபவை கடவுளாக்கி விளம்பரம் செய்தவர். சாய்பாபவை கும்பிட்டு நல்ல நிலையில் இருப்பவர்கள் சாய்பாபவை கும்பிடாமல் விட்டால் அதைவிட நல்ல நிலையில் இருப்பார்கள் என்பதே உண்மை. சாய்பாபவை பிரார்த்தனை செய்யும் நேரத்தை பயனுள்ள வழிகளில் பயன்படுத்தலாம் காசும் மிச்சம்.

விளங்கநினைப்பவரே இப்படி துல்பனுக்கு பின்னால் திரிந்து ஆமா ஆமா என்று தாளம் போடுவதைவிட்டுவிட்டு நல்ல கருத்தாக பதியலாமே. 100 ஆண்டுகள் யார் பின்னோக்கி சிந்திப்பது நீங்களா நானா, திரும்பி உங்கள் பதிவுகளை பாருங்கள். 

அப்படி நல்ல நிலைக்கு வந்தவர்கள் செய்யும் நல்ல உதவிகளை கண்திறந்து பாருங்கள், கெட்டதையே தொடர்ந்து பார்ப்பதைவிட நல்ல பக்கங்களையும் பாருங்கள்

11 hours ago, குமாரசாமி said:

ஐயரும் வேண்டாம் அபிசேகமும் வேண்டாம் ஆராதனையும் வேண்டாம் எல்லாம் மூட நம்பிக்கை எண்டு சொன்னாக்களின்ரை கன கலியாண வீடுகளுக்கு போயிருக்கிறன் விசுகர்.
அவையளின்ரை கொண்டாங்களிலை தான் குடுமியுடன் குந்தியிருந்து மந்திரங்கள் ஓத சந்தணமும் ஜவ்வாதும் மணக்க ஜாம் ஜாம் எண்டு கலியாணவீடு நடக்கும். கேட்டால்  ஒரு சிரிப்பொண்டு சிரிப்பினம் பாருங்கோ சொல்லி வேலையில்லை.

இனி வரும் காலங்களில் வாதாட வருபவர்கள் தங்கள் சொந்த முகவரியை வாழ்க்கையை தெரிவித்து விட்டு வரட்டும். 😁

 வீட்டில் நடராசர் சிலை வைத்திருப்பார்கள். கேட்டால் வடிவுக்கு என்பார்கள்.😜

அது மனைவியின் விருப்பம், நான் அப்படியில்லை என்று சொன்ன பலரிக்கின்றார்கள் 😎

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

அது மனைவியின் விருப்பம், நான் அப்படியில்லை என்று சொன்ன பலரிக்கின்றார்கள் 😎

அப்போ யாழ்  மாதிரி 24 மணிநேரமும்  சண்டைக்களமாகத்தான்  இருக்குமா வீடு??

Edited by விசுகு

20 hours ago, உடையார் said:

அறிவுள்ளவன் விரைவாக சிந்தித்து நல்ல முடிவுகளை எடுப்பதால் வெற்றியடைகின்றான், உங்களுக்கு இந்த கருத்தை சிந்திக்க காலமெடுக்கும் அதனால் நீங்கள் நல்ல நேரமெடுங்கள் இதை விளங்கி கொள்ள. அத்துடன் நேரமிருந்தால் இந்த Thinking, Fast and Slow  புத்தகத்தை வாங்கி வாசித்து பாருங்கள்

ஜஸ்ரின் கருத்தெழுதினால் அவரின் கருத்து  சரியென்று நீங்கள் தொடரலாம், எனக்கு அவரின் கருத்தில் எந்த அர்த்தமுமில்லை, விஞ்ஞான பூர்பவமாக நிருபிக்காமல் சும்மா மனதில் ஏழுவதையெல்லாம் நல்ல கருதென்று உங்களைப்போன்றவர்கள் தூக்கிவைத்து கொண்டாடலாம்.

 பலர் வணங்குவது பிரார்த்தனை செய்வது உலக மன அமைதிக்கு. எங்கே விஞ்ஞான பூர்பவமாக நிருபியுங்கள் அப்படியில்லையென்று.

எட்டாப்பழம் புளிக்கும் - என் தமிழ் ஆசிரியரிடம் கேட்டேன், தம்பி யாராவது இந்த வார்த்தையை பயன் படுத்தினால் செருப்பாலை அடிடா என்று சொன்னார், ஏன் சொன்னாரென்று விளங்கவில்லே, கேட்டேன் அவர் சொன்னார், இது பிற்போக்கு வாதிகள் ஒருவரின் முன்னேற்றத்தை தடுக்க பயன்படுத்திய வார்த்தையென்று, முயற்ச்சி செய்தால் எதையும் அடையலாம் வாழ்வில்.

இப்படி எட்டாபழம் புளிக்குமென்று முயற்ச்சியை கைவிடக்கூடாது என்று சொன்னார்.

நீங்கள் எப்படி உங்களுக்கு எட்டாபழம் இனி புளிக்குமா இனிக்குமா?

எனது முதலாவது கருத்துகளின்   வசனங்கள் மிகத் தெளிவாக இருந்தும் வசனங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாமலோ  அல்லது வேண்டு மென்றே  வசனங்களை தனிதனியாக பிய்த்து  பிரித்து அந்த வசனங்களுக்கு சம்பந்தம் அற்ற வீண் வியாக்கியானம் கொடுத்து தேவையற்ற விவாதத்தை வளர்ததுக்கொண்டுருக்கின்றீர்கள்.

எட்டாப்பழம் புளிக்கும் என்ற  தமிழ்ப்பழமொழியின் சரியான அர்ததத்தையே தெரியாத,  அந்த பழமொழியை சொன்னவனை செருப்பால் அடி, என்று கூறும் தன்மை கொண்ட  ஒரு கிறுக்கு வாத்தியிடம் கல்வி கற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் கூட கொடுத்துள்ளீர்கள்  அதனால் தமிழ் வசனங்களை வாசித்து கிரகிக்கும்  ஆற்றல் வராது என்பதை புரிந்து கொள்கிறேன். அதனால் இதற்கு மேல் எத்தனை விளக்கமாக எழுதினாலும் அதை வாசித்து புரியாமல் இப்படித்தான்  தொடர்ந்து  சம்பந்தம் இல்லாமல் எழுதிக்கொண்டிருப்பீர்கள். ஆகவே வேலை மினக்கட்டு  உங்களுடன் நேரத்தை செலவிட  நான் வேலை வெட்டியல்லாதவன் அல்ல. 

Edited by tulpen

கிறுக்கு வாத்தி - ஆமாம் அவர் தமிழ் பைத்தியம், எப்படி தெரியும் உங்களுக்கு😂

தேவையற்ற விவாதமென்று உங்களுக்கு எப்படி தெரியும். இது எங்களுக்கு தேவையான விவாதம். விஞ்ஞான பூர்ப ஆதாரங்கள் யார் கேட்டது முதலில், இப்ப ஓடி ஒழிவது யார்?

சும்மா வார்த்தைகளை காற்றில் கம்பு சுத்துவது மாதிரி விடுவது, பிறகு எனக்கு வேலை வெட்டியில்லையா என்று புலம்புவது, நன்றாக இருக்கு உங்கள் புலம்பல்.

எங்களுக்கு எட்டாப்பழம் புளிக்குமென்ற அர்த்தம் தெரியவில்லையென்றால் நீங்கள் உங்கள் அறிவுக்கு எட்டியதை விளங்கப்படுத்துவதுதானே.

பிரித்து மேய்வதில் என்ன தப்பு, இது கருத்துகளம் நீங்கள் எப்படி பதிகின்றீர்களோ அதை பிரித்து மேய உரிமையுண்டு மற்றவர்களுக்கும்.

ஜயா சாமி வேலை வெட்டியை விட்டுவிட்டு வந்து இந்த பதிவில் சாமி கும்பிடுவது பிற்போக்குதனமென்று விவாதியுங்கள் என்று கூப்பிட்டோமா?

16 hours ago, விசுகு said:

அப்போ யாழ்  மாதிரி 24 மணிநேரமும்  சண்டைக்களமாகத்தான்  இருக்குமா வீடு??

இல்லை, வீரமெல்லாம் தட்டச்சில் மட்டும்தான், பெட்டிபாம்பு, அங்கே காட்டமுடியாத வீரங்களை இங்கு காட்டுவது, வேஷமிடுபவர்கள்தான் அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, உடையார் said:

எங்களுக்கு எட்டாப்பழம் புளிக்குமென்ற அர்த்தம் தெரியவில்லையென்றால் நீங்கள் உங்கள் அறிவுக்கு எட்டியதை விளங்கப்படுத்துவதுதானே.

உடையார், 

நல்ல தகவல்களை தரும் உங்களுடன் இந்த “எட்டாப்பழம் புளிக்கும்” பற்றி எனது கருத்தை பகிர்ந்து கொள்கிறேன். இந்த பழமொழி பல அர்த்தங்களை தருகிறது.

1. எட்டுவதற்கு சாத்தியமில்லாத விருப்பங்களை “புளிக்கும்” என்று தவிர்ப்பவர்கள் பெரும் சாதனைகளை சாத்தியமாக்கும் முயற்சிகளை செய்யமாட்டார்கள்.

2. சாத்தியமே இல்லாத விருப்பங்களுடன் நேரத்தையும் முயற்சியையும் வீணாக்காமல், அது “புளிக்கும்” என்று கைவிட்டுவிட்டு சாத்தியமானவற்றில் இறங்கி பல வெற்றிகளை காணமுடியும்.

3. முயற்சி செய்து பெற்று அனுபவிக்க வேண்டிய சுவையான பழங்களை எட்டி எடுக்காமல் விட்டுவிட்டால், காலம் சென்றபின் அவை பழுதடைந்து புளிக்க ஆரம்பித்துவிடும். பிறகு முயற்சி செய்தும் பயனில்லை.

4. கிடைப்பதற்கு சாத்தியமில்லாத விடங்களில் விருப்பம் கொண்டு ஏமாற்றம் அடையும் போது பெரும் கவலை உண்டாகும். அதை தவிர்க்க அது “புளிக்கும்” என்று நினைத்தால் கவலை போய்விடும்.

Edited by கற்பகதரு

On 19/11/2020 at 12:01, Justin said:

மத நம்பிக்கை உயிராபத்தை உருவாக்கியதற்கு ஒரு உதாரணம்: அமெரிக்காவில் தீவிர கிறிஸ்தவ நம்பிக்கை கொண்ட மக்கள் இருக்கிறார்கள். போன மாதம் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் 35% வீதமானோர் கோவிட் கடவுளின் தண்டனை என்று சொல்லியிருக்கிறார்களாம். அதனால், தடுப்பு முறைகளைப் பின்பற்றுவதை விட கடவுளை நம்பி ஜெபிப்பது மட்டுமே தீர்வு என்று அவர்கள் நம்பியதால் காப்பாற்றப் பட்டிருக்கக் கூடிய இலட்சக் கணக்கான அமெரிக்கர்கள் இறந்து விட்டனர்.  

சமூக நன்மைகள், பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு என்று வரும் போது, மதங்களினால் எதிர்மறை விளைவுகளே  ஏற்பட்டிருக்கின்றன. அறிவியலால் இந்த முனைகளில் முன்னேற்றங்களே ஏற்பட்டிருக்கின்றன. 

ஆக, உலக வல்லரசு என்று சொல்லப்படும் அமெரிக்கா கொறோனா தொற்றுள்ளவர்கள் மற்றும் அதனால் இறந்தவர்கள் பட்டியலிலிலும் உலகில் முன்னிலையில் இருப்பதற்கு மதம் தான் காரணம் என்று சொல்லுறீங்கள். நாம இதை நம்பணும். அப்படித் தானே?

மத நம்பிக்கையிலும், மக்கள் தொகையிலும் அதிகமான இந்தியா போன்ற நாடுகளை விட அறிவியல், விஞ்ஞானம் இவற்றில் முன்னிலை வகிக்கும் அமெரிக்காவில் கொறோனாவின் பாதிப்பு மிக அதிகம். 

சரியான தலைமைத்துவம் இன்மை, சட்ட ஒழுங்குகளை மதிக்காத மக்கள் (தலைவர்களும் தான்) போன்றவை தான் அமெரிக்காவில் கொறோனா இந்தளவுக்கு வளர்ந்ததற்குக் காரணம். அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்து என்ன பயன் அங்கு? 

உலகின் எல்லாச் சீர்கேடுகளுக்குமான பழியை மதங்கள் மீது போடுவது அபத்தம். மற்றைய முக்கியமான காரணிகளை மூடி மறைப்பதற்காக மதங்கள் மீது குற்றஞ்சாட்டுதல் வழமையானதாகிவிட்டது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.