Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணை வேண்டும் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் இருந்தே வெளியாகிவிட்டது. அதனால் தான் இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ள காரணத்தினால் சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட  சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

spacer.png

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கங்கள் உருவாகும், வீழும் ஆனால் நீதிமன்ற சுயாதீனம் பலமானதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் நீதிமன்ற சுயாதீனம் உறுதியானதாக இல்லை என்பது சபையில் பேசியவர்களின் கருத்தில் தெரிகின்றது. இது ஆரோக்கியமான ஒன்றல்ல. அதேபோல் மனித உரிமை வழக்குகள் மாகாண மேல் நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். எனினும் இந்த நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் குறித்த முரண்பாடுகள் எமது நாட்டின் மீதான தவறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. குறிப்பாக சிறும்பான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. தசாப்த காலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளது. அரசியல் தலையீடுகள் நீதிமன்றங்கள் மீது பிரயோகிக்கப்படுவதன் காரணமாகவே இந்த நிலைமைகள் உருவாகின்றது என கருதுகிறேன். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்தும் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்பட்டும் வருகின்றது. இது குடியுரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரையில் நீட்டிக்கப்படுகின்றது.

அண்மைக்கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டாலும் கூட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் எழுகின்ற நேரங்களில் எல்லாம் நீதி அமைச்சர் டுவிட்டர் மூலமாக கருத்துக்களை கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அவரால் அதனை மாத்திரமே செய்ய முடியும். முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகள் குறித்த பிரச்சினை எழுந்த நேரமும் அதனையே அவர் செய்தார். பெரும்பான்மையின் நிலைப்பாட்டுக்கு அமைய நியாயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதேபோல் வேறு சில காரணிகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. உதாரணமாக 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பவர்கள் அரச பாதுகாப்பிலேயே உயிரிழக்கின்றனர் என்றால் அது பாரிய பிரச்சினையாகும். அண்மையில் மஹர சிறையிலும் கைதிகள் கொல்லப்பட்டனர். 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெவ சிறையில் 27 பேர் கொல்லப்பட்டனர் . 2012 வவுனியா சிறையில் நிமலரூபன், டில்ருக்ஷன் கொல்லப்பட்டனர். இவர்கள் அடித்து கொல்லப்பட்டனர். கை கால்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதற்கான சாட்சியங்கள் உள்ளது.

இவ்வாறு பட்டியலை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியும். அரசாங்கம் ஜனநாயகத்தை உயரியதாக கருதுவதாக கூறுகின்றது. சிறந்த நீதிமன்ற கட்டமைப்பு உள்ளதாக கூறுகின்றது. அவ்வறு இருந்தும் எவ்வாறு சிறைக்குள் கொல்லப்படும் நபர்கள் குறித்த உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்காது இருக்க முடியும். நீதிமன்ற சுயாதீனமே இல்லாத ஒரு நாட்டிற்கு எதற்கு நீதி அமைச்சர் என்ற கேள்வியே எழுகின்றது. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை என்பது மிக மோசமான நீதி கட்டமைப்பாகும். 

திருகோணமலை ஐந்து மாணவர் கொலை விவகாரத்தில் நீதி எங்கே? கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் விடயத்தில் என்னவானது? சிவநேசன் விடயத்தில் என்னவானது? ரவிராஜ் விடயத்தில் நீதி எங்கே? பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டனர். அவர்கள் குறித்த விசாரணைகள் என்னவானது? லசந்த விக்கிரமதுங்க, கீத் நோயர், பிரகீத் எக்னளிகொட, 34 தமிழ் ஊடகவியலாளர்கள் காணமால் போனமை, கொல்லப்பட்டமை குறித்தெல்லாம் ஏன் நீதி நிலைநாட்டப்படவில்லை. ஒரு சிலரது கொலைகளில் பாதுகாப்பு படையினர் தொடர்புபட்டுள்ளனர். இந்த விடயங்களில் குறைந்த பட்சம் விசாரணைக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஜனநாயக, சட்ட வல்லமை கொண்ட நாடென்றால் ஏன் இவ்வாறு நடக்கின்றது. எனவே நீதிமன்றம் மீது நம்பிக்கை எமக்கு இல்லை என நேரடியாக எம்மால் கூட முடியும். இதற்கான எம்மை நீங்கள் திட்ட முடியாது. இந்த நாட்டில் மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேச குற்றங்கள் பல நடந்துள்ளது. அதனால் தான் சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம். சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கோருகின்றோம். அதனை நீங்கள் வேண்டாம் என கூற முடியாது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் வெளியாகிவிட்டது. நாம் புதிதாக கூறத் தேவையில்லை, நீங்களே அதனை கூறிக்கொண்டுள்ளீர்கள் என்றார். 

சிறுபான்மை மக்களுக்கான நீதியை பெறவே முடியவில்லை: சர்வதேச விசாரணை வேண்டும் - சுமந்திரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் ஐயா நல்லா😀 ஆட்சி அரசில் அங்கம் வகித்து நாடு நாடாய் ஓடுபட்டு திரியேக்கிளை இவ்வளவு கேள்வியும் எங்கு போனது ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சுமத்திரன் ஐயா நல்லா😀 ஆட்சி அரசில் அங்கம் வகித்து நாடு நாடாய் ஓடுபட்டு திரியேக்கிளை இவ்வளவு கேள்வியும் எங்கு போனது ?

அதுதானே? இந்த அரசாங்கத்தை இப்படியெல்லாம் கேள்வி கேட்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கற்பகதரு said:

அதுதானே? இந்த அரசாங்கத்தை இப்படியெல்லாம் கேள்வி கேட்கலாமா?

அவர் பின்கதவால் அரசியலுக்கு வரும்போதே அவர்கேட்க்கும் கேள்விகள் அப்போதும் இருந்தன அவர் சிங்கள எஜமான்களை மகிழ்வித்தபடி தானும் சுகம் கண்டபடி தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளை காசுக்கு விற்ற  சிங்கள அடிமை கடைசியாக தேர்தலில் உண்மையில் அவர் வெல்லவில்லை சுத்துமாத்து செய்து வெண்டவர் இப்ப கஜன் விடுற சவுண்டைபார்த்து தானும் சவுண்டு கொடுக்கிறார் அவ்வளவே .

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் ஜோசப் தேசியப் பட்டியலில் வந்த போது அது முன்கதவாக இருந்தது.

சுமந்திரன் தேசியப் பட்டியலில் வந்து (பிறகு இரண்டு தடவை வாக்களிப்பில் வென்ற பிறகும்!) அது பின்கதவாக மாறி விட்டது!

கடைசியாக சுமந்திரன் வென்ற தேர்தலில் நிறைய முறைகேடுகள் என்கிறார்களே? கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் ஆகியோரின் ஆசனங்களும் சுத்து மாத்துத் தானோ?😇

(சீரியசாக அல்ல, ஒரு சவால் தான்!)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற உலகத்திடம் கத்திய போது.... இவர் உள்நாட்டு விசாரணை போதும் என்றார். தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை தான் இல்லை என்றால் கலப்பு விசாரணையாவது செய்யுங்கள் என்றனர்.. இவர் இல்லை எல்லா விசாரணையும் முடிஞ்சு என்றார்.

இப்ப என்னடான்னா.. இவர் சர்வதேச விசாரணை வேணுமாம். இவரே ஆரம்பிச்சு முடிச்சு வைச்ச உள்ளக விசாரணைக்கு என்னாச்சு என்று ஒரு சிங்களவனும் கேள்வி கேட்கல்லப் பாருங்க.. 

ஏன்னா இவர் ஒரு அரசியல் அரைக்கிறுக்கு என்பது அவனுக்கு தெரிஞ்சு கனநாள் ஆகிட்டு. இப்ப தொலைந்து போன தன் செல்வாக்கை தமிழ் மக்களிடம் எப்படியாவது உயர்த்தனும் என்ற நோக்கில்.. இந்த ஆத்தாம் போக்கிரி வேலை செய்யுறார். அவ்வளவும் தான்.

இதுக்கு இங்க விளக்கம் கொடுக்கிற ஆக்கள் இருக்கினமே.. சொல்லி வேலையில்ல.

இவர் முடிச்சு வைச்ச எந்த விசாரணைக்கு இப்ப சர்வதேச விசாரணை கோருறார்...?!

இதனை இவர் சர்வதேச அரங்கில் எனி எந்த மூஞ்சியோடு போய் முன் வைக்க முடியும்..??!

சிங்களப் பாராளுமன்றிலா சர்வதேச விசாரணை இருக்கு இல்லையே..??!

இது தமிழ் மக்களை ஏமாற்றிற தலையில் மிளகாய் அரைக்கிற கைங்கரியம் மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் தமிழ் மக்களை தீர்வு அது இது என்று வாக்கு பெறலாம் என்று நினைப்பு ஆக்கும். மக்கள் தமது அடிப்படைத் தேவைகள நோக்கி புறப்பட்டு விட்டார்கள் .அந்த இடத்தை தகுதி இல்லாதவர்களின் கைக்கு போவதையாவது தடுக்கப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பிழம்பு said:

இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ள காரணத்தினால் சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட  சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

கேக்க வேண்டிய நேரத்திலை. கேக்கேல்லை. மற்றவனை கேக்கவும் விடேல்லை.எல்லாத்தையும் சளாப்பிப்போட்டு........
இப்ப கஜேந்திரன் கஜேந்திரகுமார் விக்னேஸ்வரன் ஆக்களின்ரை குரல் ஓங்குது எண்டவுடனை தானும் ஒரு மனிசன் எண்டு கொக்கரிக்கிறார்.இப்படியான ஆக்கள் சங்கு ஊதி எல்லாத்தையும் கெடுக்காமல் ஒதுங்கினாலே சந்தோசம்.

53 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற உலகத்திடம் கத்திய போது.... இவர் உள்நாட்டு விசாரணை போதும் என்றார். தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை தான் இல்லை என்றால் கலப்பு விசாரணையாவது செய்யுங்கள் என்றனர்.. இவர் இல்லை எல்லா விசாரணையும் முடிஞ்சு என்றார்.

இப்ப என்னடான்னா.. இவர் சர்வதேச விசாரணை வேணுமாம். இவரே ஆரம்பிச்சு முடிச்சு வைச்ச உள்ளக விசாரணைக்கு என்னாச்சு என்று ஒரு சிங்களவனும் கேள்வி கேட்கல்லப் பாருங்க.. 

ஏன்னா இவர் ஒரு அரசியல் அரைக்கிறுக்கு என்பது அவனுக்கு தெரிஞ்சு கனநாள் ஆகிட்டு. இப்ப தொலைந்து போன தன் செல்வாக்கை தமிழ் மக்களிடம் எப்படியாவது உயர்த்தனும் என்ற நோக்கில்.. இந்த ஆத்தாம் போக்கிரி வேலை செய்யுறார். அவ்வளவும் தான்.

இதுக்கு இங்க விளக்கம் கொடுக்கிற ஆக்கள் இருக்கினமே.. சொல்லி வேலையில்ல.

இவர் முடிச்சு வைச்ச எந்த விசாரணைக்கு இப்ப சர்வதேச விசாரணை கோருறார்...?!

இதனை இவர் சர்வதேச அரங்கில் எனி எந்த மூஞ்சியோடு போய் முன் வைக்க முடியும்..??!

சிங்களப் பாராளுமன்றிலா சர்வதேச விசாரணை இருக்கு இல்லையே..??!

இது தமிழ் மக்களை ஏமாற்றிற தலையில் மிளகாய் அரைக்கிற கைங்கரியம் மட்டுமே. 

சர்வதேச விசாரணை  வேண்டாம் உள்நாட்டு விசாரணையே போதும் என்று சுமந்திரன் கூறிய விடீயோ பதிவை இணைக்குமாறு ஜஸ்ரின் கேட்டும் யாரும் இதுவரை இணைக்கவல்லை உங்களிடம் இருந் தால் இணைத்துவிடுவீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

சர்வதேச விசாரணை  வேண்டாம் உள்நாட்டு விசாரணையே போதும் என்று சுமந்திரன் கூறிய விடீயோ பதிவை இணைக்குமாறு ஜஸ்ரின் கேட்டும் யாரும் இதுவரை இணைக்கவல்லை உங்களிடம் இருந் தால் இணைத்துவிடுவீர்களா? 

சின்னத் திருத்தம்: "இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று சுமந்திரன் ஐ.நாவுக்குச் சொன்னார்" என்ற கூற்றுக்கு வீடியோ ஆதாரம் கேட்டிருந்தேன். 

இது பல வருடங்களாக உலவும் பொய்ச்செய்தி. முதன் முதலில் சும் தேர்தலில் நின்ற போது யாழில் இந்தக் குற்றச் சாட்டை மறுதலித்து சான்றாக சும்மின் வீடியோக்களை கெரி என்ற கனடா உறவு இணைத்திருந்தார். காணாத மாதிரி கம்மென்று கழண்டு போய் விட்டு, திரும்பவும் போன தேர்தலில் அதே பொய்க் குற்றச்சாட்டோடு வந்தார் பெருமாள்! "வீடியோ ஆதாரம் இருக்கா?" என்று நான் கேட்க, தேடப் போய் அப்படியே காலம் போய் விட்டது அவருக்கு. 

இப்ப திரும்பவும் முதல் சதுரத்தில் ஆரம்பித்திருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் போர்க்குற்றங்கள் நடந்தது உண்மை என்று ஏற்றுக்கொண்டவர். ஆனால் அதனை இனக்கொலை என்று கூறமுடியாது என்று வெளிப்படையாகவே சொன்னவர். நானும் இதனை யாழிலேதான் பார்த்தேன். நிச்சயம் தேடிப்பார்த்து இணைக்கிறேன்.

ஆனால், எதுவாகவிருந்தாலும், சர்வதேச விசாரணை என்பது நல்லவிடயம் தானே? அதை கஜன் சொன்னாலென்ன, சுமந்திரன் சொன்னாலென்ன? 

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=37937

இந்த கட்டுரையில் இனக்கொலை எனும் பதத்திற்குள் இலங்கையில் நடந்த அக்கிரமங்கள் வராது என்று தொனிப்பட சுமந்திரன் கூறுகிறார். கேட்டுப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, tulpen said:

சர்வதேச விசாரணை  வேண்டாம் உள்நாட்டு விசாரணையே போதும் என்று சுமந்திரன் கூறிய விடீயோ பதிவை இணைக்குமாறு ஜஸ்ரின் கேட்டும் யாரும் இதுவரை இணைக்கவல்லை உங்களிடம் இருந் தால் இணைத்துவிடுவீர்களா? 

உங்களின் தமிழர்களில் திருடர்கள் கூட என்று சொன்னதுக்கு ஆதாரம் கேட்டு இருந்தன்  அதற்கு வாயை மூடிக்கொண்டு இருந்து இங்கு ஆதாரம் கேட்க்கிறீர்கள் பதில் கிடைக்குமா ?கிடைக்காதா ?

  • கருத்துக்கள உறவுகள்

https://www.colombotelegraph.com/index.php/tamil-politics-genocide-ethnic-cleansing-sumanthiran/

இது இன்னொரு ஆதாரம். சுமந்திரன் சுவிட்ஸர்லாந்துக்குச் சென்றநேரம், இலங்கையில் நடந்தவை இனக்கொலை, அதாவது (Genocide) ஜெனோசைட் எனும் பிரிவிற்குள் வராது என்று கூறிய கருத்து.

இவை 2015 ஆம் ஆண்டு அவரது கருத்துக்கள். சிலநேரம் நல்லாட்சியரசாங்கத்தைக் குளிர்விக்கக் கூறியிருக்கலாம். இன்னொருவகையில் சொல்வதானால், நீங்கள் போர்க்குற்றங்களை ஏற்றுக்கொண்டு ஐ நா பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள், நாங்கள் இனக்கொலையென்பதை விட்டுவிடுகிறோம் என்கிற சமரசமோ என்னமோ, ஆனால் அவர் சொன்னது உண்மை, ஆதாரங்கள் பரவலாக இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

உங்கள் தமிழ்நெற் இணைப்பை பக்கச்சார்பான காரணத்தால் நான் கருத்திலெடுக்கவில்லை.

ஆனால் இந்த கீதபொன்கலனின் கட்டுரை சுமந்திரன் "இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறியதாக" குத்தி முறிந்து நிறுவ வார்த்தை ஜாலம் காட்டிய ஒரு கட்டுரை. அந்தக் காலப்பகுதியில் சுவிஸ் மட்டுமல்ல, கனடாவிலும் சுமந்திரன் கூறியது: இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால், அதை சர்வதேச நீதிமன்றில் நிரூபிக்க வேண்டிய ஆதாரம் இல்லை, எனவே நாம் இனப்படுகொலை என்று உணரலாமே தவிர, நிரூபிக்க இயலாது!"

I went back and listen to the tape again. This is what he said: “what is genocide? Genocide is an international crime that must be proved in a judicial form, not in a representative one… (passing the resolution) does not mean the crime of genocide is proved. The crime of genocide has certain ingredients that must be proved in an established court…even the High Commissioner of Human Rights very specifically said…it has not satisfied the act of genocide…crime of genocide is a legal issue. Not what you feel like….Unless you prove ingredients of those offences very specifically, it is not genocide.

இதே கருத்தை இந்த கீதபொன்கலனின் கட்டுரையில் அவரே சுட்டிக் காட்டியிருக்கிறார்! 

Interestingly, in the same speech in Switzerland and in other meetings with Tamil diaspora groups in other Western countries, Sumanthiran claimed that it was he who said what happened was genocide, “even before the Northern Provincial Council was formed.” Sumanthiran claimed that he said this even in parliament. Now, my question is why he called it a genocide when it did not have the “ingredients” of genocide. Was it not ingenious?

39 minutes ago, பெருமாள் said:

உங்களின் தமிழர்களில் திருடர்கள் கூட என்று சொன்னதுக்கு ஆதாரம் கேட்டு இருந்தன்  அதற்கு வாயை மூடிக்கொண்டு இருந்து இங்கு ஆதாரம் கேட்க்கிறீர்கள் பதில் கிடைக்குமா ?கிடைக்காதா ?

பெருமாள் உங்களால் தமிழ் வசனங்களை வாசித்து  புரிந்து கொள்ள முடியாதா? ரொமானியர்கள் எல்லோரும் கள்வர்கள் என்று தெலிவிக்கப்பட்ட கூற்றுக்கு பதிலளிக்கும் போது  “எல்லா இனங்களிலும் திருடர்கள் உள்ளார்கள.  தமிழர்களிலும் அதிகமாக திருடர்கள் உள்ளார்கள் என்று கூறிய பதிலை வாசித்து கிரகிக்க முனியாமல்  அதை திரித்து ஒற்று வார்ததையில் தமிழர்களில் திருடரகள் அதிகம் என்று நான் கூறியதாக என்னிடபே பொய் கூறிவிட்டு அதற்கு ஆதாரம் கேட்டால் என்ன் செய்ய?

 ஐரோப்பா எங்கும் கடன் அட்டை மூலம் எந்த பயமும் இன்றி   கொடுப்பனவுகளை செய்யும் பல தமிழர்கள் தமிழ்கடைகளில் மட்டும் அதுவும் விசேடமாக  லண்டன் தமிழ் கடைகளில் கொடுக்க அஞ்சுவதேன்? இங்கு ஒரு திரியில் கள உறவு ஒருவர் நேரடியாகவே தமிழ்கடைகளில் மட்டும் நான் கடனட்டை கொடுப்பதில்லை தெரிவித்திருந்தார். தமிழ்கடைகளில் பில் அடிக்கும் போது கண்ணில் எண்ணை விட்டுக்கொண்டு பார்கக வேண்டிய நிலை இங்கு சர்வ சாதாரணம். ஏன் அதை விடுங்கள் நாட்டின் விடுதலைக்கு என்று இயங்கிய இயக்க உறுப்பினர்களே பல மில்லியன் பிராங்க் மக்களின்  பணத்தை திருடிக்கொண்டு ஓடியதற்கு அவர்களால் கடனாளியாகி பாதிகப்பட்ட ஒவ்வொரு தமிழரும் சாட்சி. அனைவரும் வாழும்  சாட்டியாக உள்ளார்கள். இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நான் கேட்டது ஆதாரம் தமிழ்க்கடை அவன் சொன்னான் இவன் சொன்னான் என்ற புளுகு கதை அல்ல .

உங்களை போல் சொந்த தமிழ் இனத்தை தூற்றி கொள்பவரை  யாழில் பார்க்கவில்லை .

10 minutes ago, பெருமாள் said:

நான் கேட்டது ஆதாரம் தமிழ்க்கடை அவன் சொன்னான் இவன் சொன்னான் என்ற புளுகு கதை அல்ல .

உங்களை போல் சொந்த தமிழ் இனத்தை தூற்றி கொள்பவரை  யாழில் பார்க்கவில்லை .

சரி ரொமேனியர்கள் எல்லோரும் கள்வர்கள் என்பதற்கு ஆதாரத்தை வாங்கி கொண்டு வாருங்கள். நானும் ஆதாரம் தருகிறேன். 

இந்த திரி அதற்கானதல்ல. ஆகவே அப்படி சொல்லப்பட்ட திரியிலேயே ஆதாரத்தை தாருங்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

சரி ரொமேனியர்கள் எல்லோரும் கள்வர்கள் என்பதற்கு ஆதாரத்தை வாங்கி கொண்டு வாருங்கள். நானும் ஆதாரம் தருகிறேன். 

அது மாறியல்லவா நிரூபிக்கப் பட்டு விட்டது அந்த சனல் 4 கட்டுரையில்? அதையும் பெருமாளே தந்திருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

சரி ரொமேனியர்கள் எல்லோரும் கள்வர்கள் என்பதற்கு ஆதாரத்தை வாங்கி கொண்டு வாருங்கள். நானும் ஆதாரம் தருகிறேன். 

உங்களை பொறுத்தவரை தமிழர்கள் கள்வர்கள் கொள்ளைக்காரர்கள் அப்படித்தானே ?

Just now, பெருமாள் said:

உங்களை பொறுத்தவரை தமிழர்கள் கள்வர்கள் கொள்ளைக்காரர்கள் அப்படித்தானே ?

நான் கூறிய அந்த தமிழ் வசனத்தை வாசித்து புரிந்து கொள்ளுங்கள். புரியாவிட்டால் பல முறை வாசியுங்கள். எனது தாய் மொழியான தமிழில்  தமிழ் புலமை உள்ளவர்களுக்கு  அதன் கருத்து புரியும் படியாக தெளிவாக எழுதப்பட்ட வசனம் அது. 

4 hours ago, tulpen said:

சர்வதேச விசாரணை  வேண்டாம் உள்நாட்டு விசாரணையே போதும் என்று சுமந்திரன் கூறிய விடீயோ பதிவை இணைக்குமாறு ஜஸ்ரின் கேட்டும் யாரும் இதுவரை இணைக்கவல்லை உங்களிடம் இருந் தால் இணைத்துவிடுவீர்களா? 

இருந்தால்தானே ஐயா இணைப்பதட்கு. இவர்கள் பகிடிக்கு எழுதுவதை நீங்கள் சீரியஸாக எடுக்க வேண்டாம். நான் அதட்குரிய ஒரு இணைப்பை போட்டிருந்தேன். அதட்கு யாருமே பதில் எழுதவில்லை. எனவே இவர்கள் சுமந்திரன் மீதுள்ள தனிப்படட காரணங்களுக்காக எழுதுவது சீரியசாக எடுக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உங்கள் தமிழ்நெற் இணைப்பை பக்கச்சார்பான காரணத்தால் நான் கருத்திலெடுக்கவில்லை.

ஆனால் இந்த கீதபொன்கலனின் கட்டுரை சுமந்திரன் "இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறியதாக" குத்தி முறிந்து நிறுவ வார்த்தை ஜாலம் காட்டிய ஒரு கட்டுரை.

தமிழ்நெட் பக்கச்சார்பு, கீத பொன்கலன் வார்த்தை ஜாலம். அப்போ யார் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள்? 2009 வரை புலிகளுக்கு ஆதரவாக இருந்த நீங்கள் இன்று அவர்களை ஆதரிப்பவர்களை எதிர்க்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று திரி திரியாக கருத்தெழுதுவது ஏனோ? 

  • கருத்துக்கள உறவுகள்

"What Happened In North Was Nothing But Genocide Of Tamils" - Sumanthiran 

 October 22, 2014
  • font size  
 
Parliamentarian of the Tamil National Alliance M.A. Sumanthiran has stated that what happened in the North during the final phase of war was nothing but  genocide of Tamils.

We are not scared to express our stance. It is genocide. We neither deny the fact that what has happened in the Tamils’ homeland is genocide,” Sumanthiran said speaking to reporters in Jaffna yesterday.

However, Sumanthiran has also asserted that the TNA does not want to undermine the ongoing UN investigation into the alleged war crimes in Sri Lanka by talking only about the genocide of Tamils.

நடந்தது இனக்கொலைதான், ஆனால் அதுபற்றிப் பேசி அப்போது நடந்துகொண்டிருந்த ஐ நா விசாரணைகளை குழப்ப விரும்பவில்லையென்று 2014 இல் கூறியிருக்கிறார். நடந்தது இனக்கொலைதான் என்று கூறுவதால் ஐ நா விசாரணை எப்படி பாதிப்படையும் என்று அவர் சொன்னால்த்தான் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

In August 2014, the majority of TNA's provincial councillors in the North and East, in a joint letter addressed to the then UN High Commissioner for Human Rights Ms Navnetham Pillay, demanded international investigations on genocide.

In October 2014, the planted section led by M.A. Sumanthiran responded with a written instruction to the Speaker of the Northern Provincial Council (NPC) stating that NPC demanding genocide investigation or talking of genocide was not only inappropriate but also could affect the ‘credibility’ and independent function of the OISL investigations.

Mr Sumanthiran went on to state that the Panel of Experts appointed by the UN Secretary General did not find credible allegations of the crime of genocide within the temporal scope of their mandate. Further, the ‘legal note’ of instruction to NPC stated that “it would be improper and inappropriate for the Northern Provincial Council or any other political body to make pronouncements in the form of resolutions or otherwise on matters of evidence and law currently being considered by the OISL”.

ஒரு மாகாணசபை இனக்கொலையென்று தீர்மானம் நிறைவேற்ற முடியாது, அப்படி நிறைவேற்றுவது விசாரணைகளைப் பாதிக்கும் என்று கூறும் சுமந்திரன், ஐ நா இனக்கொலை நடக்கவில்லையென்று அல்லது நடந்தவை இனக்கொலையென்கிற வட்டத்திற்குள் வராதென்று கூறுகிறது என்றும் இயம்புகிறார்.

ஆனால், பிரிதொருவிடத்தில் நாம் இனக்கொலை நடந்தது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் இனக்கொலை பற்றி இப்போது பேசுவது விசாரணைகளைப் பாதிக்கும், ஆகவே பேசப்போவதில்லையென்று கூறுகிறார்.

இனக்கொலைபற்றியோ அல்லது போர்க்குற்றங்கள் பற்றியோ விசாரிக்கும்பொழுது, இனக்கொலை பற்றிப் பேசுவதும், அதற்கான ஆதாரங்கள் பற்றிப் பேசுவதும் விசாரணைகளுக்கு ஆதரவாக இருக்கமுடியுமே ஒழிய, பாதகமாவது எப்படி?

அதுபோகட்டும், விசாரணை நடப்பதால் இனக்கொலையென்கிற பதம் வேண்டாம் என்றீர்கள். இப்போது விசாரணைகளும் முடிந்தாயிற்று, இனக்கொலைபற்றியும் பேசுவதில்லை. மொத்தத்தில் கிடைத்தவை எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=37937

அது சுவிட்சர்லாந்து இல்லை, ஜேர்மனியின் பேர்ன் நகரம்

சுமந்திரனின் பேட்டி இங்கே முழுதாக இருக்கிறது.

கேட்பவர்கள் கேட்கலாம்.

இனக்கொலை என்பதை தேவையில்லாமல் பேசியதன் மூலம் வடமாகாணசபையினர் அதனை தோற்கடித்துவிட்டார்கள் என்று கூறுகிறார்.

ஐ நா ஆணையாளர் தன்னிடம் கூறும்போது நடந்தவை எப்படிப்பட்ட கொடூரங்களாக இருந்தாலும், தன்னால் இனக்கொலையென்று ஏற்றுக்கொள்ளமுடியாதென்று கூறினாராம். ஆகவே இதுபற்றி இப்போது பேசத்தேவையில்லை. விசாரணைகள் தொடர்ந்து நடக்கும்போது சிலவேளை விசாரணையாளர்கள் இது இனக்கொலைதான் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கும்பொழுது சிலவேளை இனக்கொலை என்பதை நிரூபிக்கலாம் என்று கூறுகிறார். 

ஆனால் வேதனை என்னவென்றால், சுமந்திரன் செய்த இவ்வாறான விசாரணைகளுக்கான உதவிகள், அணுசரணைகள் எல்லாமே இன்று தோற்கடிக்கப்பட்டு, காட்சிகள் மாற்றப்பட்டு ஈற்றில் எதுவுமில்லாமல் வந்து நிற்கின்றன. 

ஐ நா மனிதவுரிமைக் கவுன்சிலில் இலங்கையை, இந்தியாவை, நல்லாட்சியரசாங்கத்தைக் காப்பாற்ற, அவர்களை தர்மசங்கடத்திலிருந்து காப்பற்ற சுமந்திரன் வேண்டுமென்றே பேசாதுவிட்ட தமிழரின் அவலங்கள் இன்று காற்றோடு காற்றாகப் போய்விட்டன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.