Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திலயும் ஏதோ பரிசுதாறனெண்டு குழப்பப் பார்க்குது. என்னெண்டு பாருங்கோ

  • Replies 217
  • Views 23.4k
  • Created
  • Last Reply

இப்படியும் முட்டாள்கள் இருக்கிறார்களா? :blink::unsure:

இப்படியும் முட்டாள்கள் இருக்கிறார்களா? :blink::unsure:

இப்படி எல்லாம் சொல்ல கூடாது அதை எல்லாம் ஒரு செய்தியா போட்டு வாசிகிறதுக்கு நாங்க இருக்கும் போது அவை இதுவும் செய்வீனம் இதுக்கு மேலையு சேய்வீனம்

:P :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

‘சிவாஜி’ மீது பாயும் இஸ்லாம் அமைப்புகள்...

‘‘கறுப்புப் பணம் என்றால் முஸ்லிம்கள் தானா?’’

மொட்டை போட்டு, வேல் குத்தி, காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து, மண்சோறு சாப்பிட்டு... ஏதோ குலசாமி கோயில் கொடைமாதிரி ‘சிவாஜி’ பட தியேட்டர்களை மாற்றியிருக்கிறார்கள் ரஜினியின் ரசிகக்கோடிகள்.

ஆனால், அவர்கள் கொண்டாட்டத்துக்கு வேட்டு வைப்பதைப்போல், ‘சிவாஜி படம் இஸ்லாமியர்களைக் கடுமையாகக் காயப்படுத்துகிறது’ என்று அனல் சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.

படத்தில் இடைவேளைக்குப் பிறகு ஆக்ரோஷமாக முகம் காட்டும் ரஜினி, பெரிய மனிதர்கள் வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை அபகரிக்கிறார். பிறகு, அவர் மட்டும் அமெரிக்காவுக்குப் பறந்துவிடுகிறார். அபகரிக்கப் பட்ட கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற திட்டமிடும் ரஜினியின் தளபதிகள், பணத்தை பீட்ஸா கொண்டுபோகும் பாக்ஸ்களில் வைத்து சில புரோக்கர்களிடம் கொடுக்கின்றனர். அப்போது அந்த புரோக்கர்களிடம்,

‘இந்தப் பணத்தை அமெரிக்காவுக்கு அனுப்பி, வெள்ளையா மாத்தணும். ஒரு நல்ல காரியத்துக்காக இதை நீங்க பண்ணிக் கொடுக்கணும்’ என்று சொல்கிறார், ரஜினியின் மாமாவாக வரும் விவேக்.

அந்த புரோக்கர்கள், அமெரிக்காவில் இருக்கும் ரஜினிக்கும் அங்கிருக்கும் தங்கள் ஆளுக்கும் சில ரகசிய எண்கள் மூலம் லிங்க் ஏற்படுத்தி, இந்திய கறுப்புப் பணத்தை அமெரிக்க டாலர்களாக மாற்றி விடுகிறார்கள். பிறகு, அந்தப் பணம் சின்னச் சின்ன தொகைகளாகப் பிரிக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு, தமிழ்நாட்டில் இருக்கும் சிவாஜி ஃபவுண்டேஷன் அக்கவுன்ட்டுக்கு நன்கொடையாக அதாவது, ‘வெள்ளை’யாக வந்து சேர்கிறது. இது படத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள். இதில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித்தரும் புரோக்கர்களாக இஸ்லாமியர்களைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இதுதான் இப்போது இஸ்லாமியர்களின் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பின ரான பாளையங்கோட்டையைச் சேர்ந்த முகமது ரஃபீக்,

‘‘சினிமாவை முற்றிலுமாகப் புறக்கணிக்கச் சொல்வதுதான் எங்கள் கொள்கை. ஆனாலும் பவர்ஃபுல் மீடியாவாக இருக்கிற சினிமா, பல கருத்துக்களை மக்கள் மனதில் எளிதாகப் பதித்துவிடுகிறது. அதுவும், ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கின்றனர். ரஜினியின் வார்த்தைகளை வேதமாகக் கருதுகிற ரசிகப் பட்டாளங்கள் அவருக்கு உண்டு. அப்படிப்பட்டவரின் படத்தில் இஸ்லாமியர்களைப்பற்றி இப்படி அவதூறான காட்சி அமைத்திருக்கத் தேவையில்லை.

‘சிவாஜி’ படத்தில் வேறெந்தக் காட்சியிலும் இஸ்லாமியர் களையோ, கிறிஸ்தவர்களையோ, இந்துக்களையோ குறிப்பாக சுட்டிக்காட்டும் காட்சி அமைப்புகள் எதுவும் இல்லை. கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும், சட்டத்துக்குப் புறம்பான தொழில் செய்பவர்களாக இஸ்லாமியர்களை ஏன் காட்ட வேண்டும்..?

ஒரு இந்துகூட கள்ள நோட்டு அச்சடிக்கலாம். கறுப்பை வெள்ளையாக்கலாமே.

தமிழ் சினிமாவில் தீவிரவாதி என்ற பாத்திரம் வந்தாலே, அந்தக் கேரக்டரை இஸ்லாமியராகவோ, இஸ்லாமியரைப்போல உடை யணிந்தவராகவோ காட்டும் போக்கு வளர்ந்துவிட்டது. மீடியாக்களும் தங்கள் பங்குக்கு, ‘முஸ்லிம் தீவிரவாதி கள்’ என்று, தனி நபர் தீவிரவாதத்தை மதத்தின் பெயர் சொல்லிப் புண்படுத்தி வருகின்றன. எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் இஸ்லாமியர்கள் குண்டு வைத்திருக்கலாம். அதற்காக முஸ்லிம் சமுதாயமே குண்டு வைக்கும் சமுதாயம்போல சித்திரிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏன், இந்துக்கள் யாருமே குண்டு வைத்ததில்லையா? தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதில்லையா? அதற்காக ஒட்டுமொத்த இந்துக்களையும் தீவிரவாத சிந்தனையுடையவர்களாகச் சொல்ல முடியுமா?

கறுப்புப் பணம் என்றதும் மட்டும் இஸ்லாமியர்களை ‘சிவாஜி’ படத்தில் காட்டுகிறார்கள். அப்படி காட்டும்போது, பார்ப்பவர்கள் மனதில் என்ன தோன்றும்? ‘ஓ... கறுப்புப் பணத்தை வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லும் காரியத்தில் ஈடுபடுகிறவர்கள் முஸ்லிம்கள்தானா?’ என்றுதானே எண்ணத் தோன்றும். இதைத்தான் நாங்கள் தவறு என்கிறோம். சரி, இத்தனைதூரம் சமூக சிந்தனையோடு கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டியதன் அவசியம் பற்றி படம் முழுவதும் வாய்கிழிய வசனம் பேசும் ரஜினியிடம் ஒரு ரூபாய்கூட கறுப்புப் பணம் இல்லையா..? ‘சிவாஜி’ படத்தில் எத்தனை கோடிகளை சம்பளமாக வாங்கினார் என்பதை முதலில் வெளிப்படையாக ரஜினி அறிவிப்பாரா? அப்படியே சொன்னால்கூட, அதை வாங்கும்போது முழுதும் வெள்ளையாகத்தான் வாங்குவாரா? சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, இரண்டரை கோடி ரூபாய் கணக்கில் காட்டாத பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அதற்கு இன்று வரையில் ரஜினி தரப்பிலிருந்து பதில் இல்லையே... அப்படி இருக்கும்போது ‘சிவாஜி’ படத்தில் மட்டும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் சமூகக்காவலனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சமூக சிந்தனையோடு நாட்டில் நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்று சொல்லி உண்ணாவிரத போராட்டமெல்லாம் நடத்தும் ரஜினி, படத்தில் மட்டும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் சமூகக்காவலனாக இல்லாமல், நிஜத்திலுமே அப்படியரு மனிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தால், எங்களைப் போன்ற மிகப் பெரிய பட்டாளம் அவருக்குத் துணையாக வருவோம் என்பதையும் அவருக்கு உறுதிமொழியாகத் தருகிறேன்...’’ என்று பட படத்த முகமது ரஃபீக், ‘‘இந்த ‘சிவாஜி’யில் சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை அமைத்ததில் ரஜினியின் பங்கைவிட, இயக்குநர் ஷங்கர் மற்றும் வசனகர்த்தா சுஜாதாவின் பங்கே அதிக மாக இருந்திருக்கிறது என்பதுதான் எங்கள் கருத்து. தனது முதல் படத்திலிருந்து தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கருத்து சொல்லி வரும் ஷங்கர்தான், இப்போது சுஜாதாவுடன் கைகோத்துக்கொண்டு இஸ்லாமியர்களைக் கொச்சைப் படுத்தியுள்ளார்.

ஷங்கர் தனது முந்தைய படமான ‘அந்நிய’னில், மற்ற சாதியினர் தவறு செய்தால் கருடபுராணத்தின்படி கும்பிபோஜன தண்டனை கொடுத்தார். ஆனால், ஒரு குறிப்பிட்ட சாதியினர் தவறு செய்யும்போது மட்டும் பெரிய மனதோடு மன்னித்தார். இந்த உயர்சாதி ஆதரவு மனோபாவம்தான், இப்போது முஸ்லிம்விரோத மனோ பாவமாக உருவெடுத்துள்ளது. சிவாஜி படத்தைக் கண்டித்து எங்கள் எதிர்ப்பைக் காட்டியே தீர்வோம்’’ என்றவரிடம்,

‘‘சிவாஜி படத்தின் இசையமைப்பாள ரான ஏ.ஆர்.ரஹ்மான்கூட ஒரு இஸ்லா மியர்தானே...’’ என்று ஒரு கேள்வி போட்டோம்.

‘‘மார்க்கத்தின் மீது அவருக்கு முழு பற்றிருப்பதாக சொல்ல முடியாது. அவர் இசையமைப்பதை ஒரு தொழிலாக வைத் திருக்கும்போது, இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்பார் என்று எதிர்பார்க்க முடியாது’’ என்றார் முகமது ரஃபீக் கொதிப்புடன்.

இதெல்லாம் போக, சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவின் மகள்களாக அங்கவை, சங்கவை என்ற இரண்டு பாத்திரங்களைக் கரிக்கட்டையாகப் படைத்து, கறுப்பு நிற மனிதர்களையும் ஏகத்துக்கும் கிண்டல் செய்திருக்கிறார்கள். ‘என்கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்கு. வாங்க, வந்து பழகுங்க...’ என்று பாப்பையா, ரஜினியை அழைப்பதாக வரும் காட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப் புகளிடம் சர்ச்சையை உண்டுபண்ணி இருக்கின்றன.

பரபரப்பாகப் பேசப்படும் படங்கள் இப்படிப்பட்ட சர்ச்சைகளில் அடிபடுவது வாடிக்கைதான். பா.ம.க. புகைச்சல்...

‘சிவாஜி’ படத்தில் தமிழ்நாட்டின் பின்தங்கிய பகுதியாக தர்மபுரி மாவட்டம் காட்டப்படுகிறது. தர்மபுரி, பா.ம.க. வலுவாக உள்ள பகுதி என்பதால், அந்தக் குறிப்பிட்டக் காட்சி தங்களை குறிவைத்து எடுக்கப்பட்டிருப்பதாகப் புகார் கிளப்புகிறார்கள் அந்தக் கட்சியினர்.

‘‘ரஜினி நடித்த ‘பாபா’ படப் பிரச்னைக்குப் பிறகு நாங்கள் பாட்டுக்கும் எங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தேவையில்லாமல் இப்போது எங்களை சீண்டியிருக்கிறார் ரஜினி. இந்த சிவாஜி சீண்டல் குறித்து, எங்கள் மருத்துவர் ஐயாவிடம் சொல்லியிருக்கிறோம். அவரது உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்..’’ என்று சிடுசிடுக்கிறார்கள் தர்மபுரி பா.ம.க&வினர்.

& கே.ராஜாதிருவேங்கடம்

‘சிவாஜி’ கறுப்புப் பண சர்சை!

‘சிவாஜி’ திரைப்படத்தில் கதாநாயகனான ரஜினி, நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை வைத்து ரஜினிக்கு எதிராக வம்பு கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள், ‘இந்தியன் மக்கள் மன்றம்’ அமைப்பினர்.

‘சிவாஜி படத்தில் கறுப்புப் பணம் பற்றி பேசும் ரஜினியே... முதலில் உன்னிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவா!’ என்று துண்டுப் பிரசுரங்கள் அடித்து ‘சிவாஜி’ படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்களுக்குச் சென்று விநியோகித்து வருகிறார்கள். கூடவே, போஸ்டரும் அடித்து ஒட்டிவிட, ரஜினி ரசிகர்கள் இந்தியன் மக்கள் மன்றத்தினர் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்களாம்.

சில நாட்களுக்கு முன்னால் அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கவில்லை என்பதற்காக அரசியல்வாதிகளை விமர் சித்து போஸ்டர் அடித்து ஒட்டி தூத்துக்குடியில் கலாட்டா செய்த இந்த அமைப்பினரின் ‘சிவாஜி’ அதிரடியால், போலீஸாரும் அவர்கள் மீது ஏகக் காட்டத்தில் இருக்கிறார்களாம்.

‘‘சீரியஸாக எடுக்க வேண்டாம்..’’

இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் தரப்பில் நம்மிடம் பேசினார்கள் அவர்களது உதவியாளர்கள்.

‘‘இந்த ‘சிவாஜி’ படத்தைப் பொறுத்தவரையில் கறுப்புப் பணம் என்னும் சமூக அரக்கனை ஒழிக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தை மையமாக வைத்து தான் படம் எடுத்திருக்கிறோம். அந்த நல்ல நோக்கத்தின் ஒரு பகுதியாகத்தான் இஸ்லாமி யர்கள் அதற்கு உதவுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் நல்ல விஷயத்துக்குக் கைகொடுப்பவர்களாகத்தான் இஸ்லாமியர் களை நாங்கள் காட்டியிருக்கிறோமே தவிர, அவர்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கம் எதுவும் எங்களுக்கு இல்லை. மற்றபடி கறுப்புப் பணத்தைப் பற்றி கதை அமைத்திருப்பதை வைத்து தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் பலரும் கேள்வி கேட்டு, சர்ச்சைகளை எழுப்பினால் அதற் கெல்லாம் நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும்?

படம் என்பது ஒரு மெஸேஜோடு கூடிய பொழுதுபோக்குத்தானே தவிர, அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு வம்பு பேசக்கூடாது...’’ என்றார்கள்.

நன்றி விகடன்

வெற்றிகரமா புறக்கணித்து ஆன்லைனில பாக்க விரும்பும் நேயர்களே....

உங்களுக்காக...டைகர் வானொலி வழங்கும் காட்சியை பார்த்து மகிழுங்க

http://www.yarl.com/forum3/index.php?showt...0&start=500

Edited by Kuddithambi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காடுவெட்டியின் சுயநலம் இன்னும் சில தினங்களில்

அது என்ன ஒன்லைனில புறகணிப்பு பார்க்காமலே விடுறது தானே இல்லை என்னை மாதிரி நேரா பார்த்டுவிட்டு வந்து துணிவா சொல்ல வேண்டும்

:angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

லூசுக்கூட்டங்களின் செய்கைகள்

sivaji4hs7.jpg

sivaji5jv8.jpg

sivaji6my0.jpg

sivaji7ff0.jpg

Edited by கந்தப்பு

வெல்கம் லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ் இப்ப நான் சிவாஜி பற்றிய விமர்சனத்துடன் உங்கள் முன்...........

பல எதிர்பார்புகளில் மத்தியில் தொடங்கிய சிவாஜி திரைபட பணிகள்.................அவர்களை கண்டு கொள்ளாத நிலையிலும் நாங்கள் புறகணித்து அந்த படதிற்கு மிகவும் நல்ல பெயர் எடுத்து கொடுதிருகிறோம் :icon_idea: .............அதற்காக லேடிஸ் அன்ட் ஜேன்டிமண்சுக்கு ரஜனி சார்பாக நன்றிகளை நானே தெறிவித்து கொள்கிறே .....................சும்மா சொல்ல கூடாது மனிசன் இந்த வயசிலும் நல்ல தான் டூயட் பாடுகிறார் நல்லா தான் சண்டை பிடிகிறார் அதற்காக ஒரு சபாஷ் போடலாம்..............ரகுமான் இசை என்னத்த்தை தான் நனிசன் போட்டு அடிகிறதோ தெறியாது தியேடரில காது வெடித்தாலும் அந்த அடியிலும் ஒரு சுகம் உள்ளது...................

நெஸ்ட் போயின்ட் ஸ்ரெயா சும்மா சொல்லகூடாது அப்பாவும்,மகளும் நடிகிற மாதிரியே தெறியவில்லை அவ்வளதிற்கு நல்லா நடிகிறா அவாவுக்கும் நாங்கள் ஒரு ஓ போடலாம்.......................இதை எல்லாம் தாண்டி சங்கர் அவ்ரை சொல்ல தேவையில்லை எல்லாருக்கும் தெறிந்திருக்கும்..............தெறியா

?? ஆட்களுக்கும் நாங்கள் சிவாஜியை புறகணித்து அவரையும் பிரபல்யபடுத்தி விட்டோம்.....................அது வேற கதை.................மொத்தத்தில கதை என்ன என்று விளாங்கட்டியும் சலிபில்லாம 3மணித்தியாலங்களும் போகுது அதற்காக எல்லாரும் பாராட்டுகளை நான் தெரிவிகிறேன்................விருபினா நீங்களும் தெறிவித்து கொள்ளுங்கோ..............

இவ்வளவு ரசிப்பா பார்த்து கொண்டிருகும் போது உடனே எனக்கு யாழ் ஞாபகம் வந்துட்டுது....................சா எல்லாரும் புறகணிக்கும் போது நான் எப்படி பார்பது என்று............................நண்பரிட்ட இதை சொல்ல,அங்கே பாரு இவை தான் புறகணிக்க முனுக்கு நின்ற ஆட்கள் இவையளின்ட மகள்மார்,மகன் மார் பாஎகும் போது நாங்கள் ஏன் பார்க்க கூடாது என்று................பிறகு எனக்கு ஒரே சந்தோசம் நான் மிகவும் எஞ்ஜோய் பண்ணி படத்தை ரசித்தேன்.....................................இதை விடுங்கோ.................

மொத்தத்தில சிவாஜிக்கு 65 புள்ளிகள் நான் கொடுகிறேன் ஆனால் புறகணித்து அந்தப் உள்ளைகளி சில பேர் 80க்கு உயர்தியது வேற கதை அது நம்மளுக்கு என்ன.............என்றூ விடுவோம் என்று நினைத்தா முடிய இல்லை சோ சொல்ல வந்ததை சொல்லி போட்டு போறேன்...........

1)இவ்வளவு நாளும் படத்தை நன்றாக பார்த்துவிட்டு இந்த படத்தை எல்லாரும் புறகணிக்கிறோம் என்று நடிக்க வேண்டாம் உங்களுக்காக வாழுங்கோ பிறருக்கா வாழவேண்டாம்...................

2)படத்திற்கு ஒருக்கா போக மாட்டேன் என்று சொன்னா அது காணும் தானே அது என்ன போக மாட்டேன் போக மாட்டேன் என்று எத்தனை தரம் தான் சொல்லுறது...................இதை நான் நினைகிறேன் சுயவிளமபரம் என்று............

3)அண்ணண்மார்களே,அப்புமார்களே சிவாஜி புறகணிகிற நேரம் சிஅவாஜிக்கு ஏற்ற மாதிர் நாங்கள் ஒரு படத்தை எடுத்து எங்கள் பெருமையை காப்போம் என்று நினைத்தீர்களா...........

4)அல்லது சிவாஜிக்கு போட்டியாக எம்ம்வரின் படத்தை ரீலிஸ் பண்ணி இருந்தா அதுவும் ஏற்ககூடிய காரணம்.......

5)அது என்ன தியேட்டரில பார்க்க மாடீங்கள் வீட்டை பார்பீங்கள் யாரையப்பா ஏமாற்றுகிறீங்கள்.........................

6)சினிமா கலைஞர்கள் வந்தால் படயெடுக்கும் நீங்கள் சிவாஜியை புறகணித்து என்ன செய்ய போறீங்கள்.........................நான் கேட்கிறேன் சிட்னியில் ஒரு கலை நிகழ்ச்சியிலும் எம்மவர்கள் பாடல்கள் ஒலிபதை யாரும் கேட்டிருக்கிறீங்களா.......................

??ந்த அமைப்பு இந்த அமைப்பில இருகிறவர்கள் பெயருக்காக இருக்காமல் இப்படியான விசயங்களை நடக்க ஏற்பாடுகளை செய்யலாமே அது உங்களுக்கு முடியாது...........................

7)அடுத்தது இந்த தலைப்பை போட்டு நேரத்தை வீணாக்கிய நேரம் என்னையும் சேர்த்து தான் சொல்லுறேன் அவுஸ்ரெலியாவில் பிடிபட்ட 3பேர்களை பற்றி நாங்கள் மறந்து போய் உள்ளோம் அதை பற்றி உலகுக்கு அறிய தந்திருக்கலாம்........................எனி சொல்லுவார்கள் அரட்டை அடிகிற உறுபடாத கருத்து எழுதுற நான் இதை சொலுறேன் என்று................அதையும் மனபூர்வமாக ஏற்க தயார்..............

8)அடுத்தது முக்கிய சில பேர் இதை வாசிப்பார்கள் என்று எனக்கு தெறியும் அவர்களுக்கு நான் சொல்லி கொள்வதென்றா மற்றவனை திருத்த முன்னம் தங்கள் தங்கள் வீடுகளை திருத்த பாருங்கோ ஒருத்தர் புறகணிபாராம் வீட்டில இருகிற மற்றவை எல்லாரும் போவீனமாம் நல்ல ஜோக்.....................................

விமர்சனம் என்று தொடங்கி கொஞ்சம் உணர்ச்சிவசபட்டு உண்மை எல்லாத்தையும் சொல்லி போட்டேன் .................யாரிட்ட இருந்து தொல்லை பேசி வருதோ தெறியவில்லை ஆனால் சொல்ல வந்ததை சொல்லியாச்சு..............................மீண்

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லூசுக்கூட்டங்களின் செய்கைகள்

sivaji4hs7.jpg

sivaji5jv8.jpg

sivaji6my0.jpg

sivaji7ff0.jpg

கூல்ல்ல்ல்ல்ல்ல... கந்தப்பு

2)படத்திற்கு ஒருக்கா போக மாட்டேன் என்று சொன்னா அது காணும் தானே அது என்ன போக மாட்டேன் போக மாட்டேன் என்று எத்தனை தரம் தான் சொல்லுறது...................இதை நான் நினைகிறேன் சுயவிளமபரம் என்று............

:lol: என்ன இருந்தாலும் நீங்கள் கந்தப்புவை இப்படிக் குத்திக்காட்டக்கூடாது.:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கரு

சிவாஜி படம் உலகத் தமிழினத்தின் ஒரு முன்னேற்றப் பாய்ச்சல்போலத் தென்பட்டதால் நானும் அந்தப் படத்தை இரண்டு தடவை பார்த்துவிட்டேன். அதனால் உண்மையில் நானும் என்னைத் தலைவனெனச் சொல்ல வெட்கப்படுகிறேன்

ஈழத்திருமகன்- பதில்

இப்படியும் முட்டாள்கள் இருக்கிறார்களா?

கரு - பதில்

சிவாஜி படத்தை இரண்டு தடவை பார்ப்பதிலிருந்து அந்தப் படத்தை அடியோடு புறக்கணித்தால் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு அது வலுச்சேர்க்கும் என்று எண்ணுபவர்கள் வரை முட்டாள்கள் நிறையப் பேர் நம்முள் இருக்கிறார்கள். முக்கியமான விடயம் யாருடைய முட்டாள்த்தனம் டிகிரியில் கூடியது என்பதுதான். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நமது புத்திஜீவிகளின் கணிப்பீட்டுக்கும் மேதாவிலாசத்திற்கும் தலைவணங்குகிறேன்.

:lol: என்ன இருந்தாலும் நீங்கள் கந்தப்புவை இப்படிக் குத்திக்காட்டக்கூடாது.:lol:

வசபண்ணா என்னோட என்ன கோபம்

:D :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://rajinifans.blogspot.com/2007/06/blog-post_19.html

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகளைத் தொடரந்து இலங்கையிலும் சிவாஜி மாபெரும் வெற்றி அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறன. மேலும்

டென்மார்க், நார்வே ,சுவிஸ்,இத்தாலி,ஹாலந்து,பிரான

ஜயோ மேலே பார்த்த படங்களை பார்த்தபோது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது இது என்ன கொடுமை தமிழனுக்கு விடிவே இல்லையா?

வாழ்க தமிழகம் நலமுடன் .வளர்க தமிழ்

சென்ற ஞாயிறு நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற விசேடம் ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கு குடும்ப நண்பர் ஒருவர் பிள்ளைகளுடன் வந்திருந்தார். இவர்கள் குடும்பத்தில் வருமானம் குறைவாக இருந்தாலும் தனது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் நண்பர் உறுதியுடனிருந்தார்.

இவரின் 16 வயது மகனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். பரிஸுக்கு அண்மையில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சியைப் பார்த்த அனுபவத்தைப் பற்றி என்னிடம் விபரித்துக்கொண்டிருந்தான். நான் அதைப் பார்த்திராதபடியால் சிறுவன் கூறிய சுவாரிசமான தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இறுதியில் என்னிடம் "நான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் டிக்கட் வாங்கினேன். இன்னும் ஒரு யூரோ அதிகமாக இருந்தால் சிவாஜி பார்த்திருக்கலாம்" என்றான் சிரித்துக் கொண்டே.

"ஒரு யூரோவை அப்பாவிடம் கேட்டால் தரமாட்டாரா ?" என்றேன்.

அதற்கு அவன் கூறிய பதில் என்னைச் சிந்திக்க வைத்தது.

"ஒரு யூரோ பெரிய விடயம் அல்ல. ஆனால், சிவாஜியா கண்காட்சியா என்ற கேள்வியில் கண்காட்சியையே தெரிவு செய்தேன். அதனால் பல பயனுள்ள தகவல்களைத் தெரிந்த்து கொள்ள முடிந்தது. சிவாஜி பார்க்கவில்லை என்பது பற்றி எனக்கு சிறிதும் கவலையில்லை." என்றான்.

இந்தச் சிறுவன் ஏதோ ஒரு காரணத்திற்காக சிவாஜியைப் புறக்கணித்து விட்டான். எனது மனதிற்குள்ளேயே அவனுக்கு நன்றியைத் தெரிவித்தேன்.

கெட்டிக்காரச் சிறுவன்

சிவாஜி பார்ப்பதே இல்லை, சீடியிலென்ன இணையத்திலென்ன ஏன் இலவசமாக தந்தாலும் பார்ப்பதில்லை என்ற என் சபதத்தில் இடி விழுந்தாற் போல் ஒரு சம்பவம்!

வழமைக்கு மாறாக வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் போது குடும்பத்தினர் அனைவரும் எனக்காக காத்திருக்கின்றனர், "கெதியன வாங்கோ, டீ போட்டிருக்கு, குடிச்சிட்டு லேட்டாக்காம வெளிக்கிட்டு வாங்கோ, நாங்கள் எல்லாம் ரெடி" என்றாள் மனைவி. வழமையாக கெஞ்சிக் கேட்டாலும் கிடைக்காத டீயே எனக்காக காத்திருக்கிறது! என்ன விசயம் என்று பார்த்ததில் மனைவியின் அலுவலகத்தில் ஒரு சலுகை அறிவித்துள்ளனராம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே தடவையில் சிவாஜி பார்த்து டிக்கட்டை அலுவலகத்தில் சமர்ப்பித்தால் டிக்கட்டின் பெறுமதியான பணம் மீளளிக்கப்படுமாம்!

ஏன் என்று கேட்டால், அந்த நிறுவனத்திற்கு வியாபாரத்தில் லாபமாம், அதற்காக இந்த அறிவிப்பை ரஜனி ரசிகரான மேலாளர் அறிவித்திருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை, இனி சனி ஞாயிறு என்றால் கூட்டம் அதிகம் என்பதால் அந்த வாய்ப்பு அறிவிக்கப்பட்ட அன்றே மொத்தக் குடும்பமும் புறப்பட ஆயத்தம்!

பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னார்கள்?

நான் வரமாட்டேன் என்று சொன்னால் என்னையும் விட்டுவிட்டுப் போக தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பது அவர்களின் ஆயத்த நிலையிலிருந்து நன்கு தெரிந்தது. அவர்கள் எல்லோரும் போக நான் மட்டும் வீட்டில் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருப்பதை நினைக்க வெறுப்பாகவும் இருந்தது. ஏற்கனவே இந்தப் புறக்கணிப்பு பற்றி சாடைமாடையாக கதைத்தபோது யாருமே கண்டு கொள்வில்லை. எனவே இப்போது இதைப்பற்றி சொல்லி ஆகப்போவது எதுவுமில்லை. எனது குடும்பத்தையே என்னால் தடுக்க முடியவில்லை என்றால் பிறகு மற்றவர்களிடம் சொன்னதெல்லாம் என்னாவது?

ஒரே குழப்பத்துடன் டீயை குடித்து முடித்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தேன். முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு சொன்னேன் "நான் வரேல்ல நீங்கள் போறதென்டா போங்கோ.......ஒருக்கா நான் இதுக்கு போகமாட்டான் எண்டு சொன்னா சொன்னதுதான்....நீங்கள் போய் வடிவா பாத்திட்டு வாங்கோ!" என்று சொல்லி விட்டு, துவாயை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு வெளியில் நடக்கும் சம்பாசனையை ஒட்டுக் கேட்டேன்.

சிறிது நேரம் நிசப்தம் ........ தங்கைதான் முதலில் வாய்மலர்ந்து...... "அவர் வராட்டி பறவாயில்லை, நாங்க போவம்" என்றாள். அதற்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை .... இதுவரை கலகலப்பாக இருந்த இடத்தில் மயான அமைதி. நடந்ததை அறியாத என் இளைய மகள் சிணுங்க ஆரம்பித்தாள். அப்போது தான் அவளுக்கு பால் கரைக்கவில்லை என்று ஞாபம் வந்த மனைவி ஒரு பெருமூச்சுடன் சமையலறைக்குச் சென்றாள். அவள் என்னை விட்டு விட்டு போகமாட்டாள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் மற்றக் கோஸ்டியை பற்றி சொல்ல முடியாது.

அவர்களுக்கும் ஆப்பு வைத்தது போல ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "வீட்டதானே நிக்கிறியள்! ஒருக்கா அங்காலை பக்கம் வருவம் எண்டு பாத்தம்" என்று வெளியில இருந்து வந்து நின்ற பெரியம்மா குடும்பத்தினர். அப்புறம் என்ன மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வெளிக்கிடும் அவசரத்தில் தாறுமாறாக கிடந்த பொருட்களை எல்லாம் கூடத்தில் ஒழுங்கு படுத்த ஆரம்பித்தார் அம்மா. அப்போதே மணி ஏழாகிவிட்டது இனி போகமுடியாது என்ற நிம்மதிப் பெருமுச்சுடன் குளிக்க ஆரம்பித்தேன்!

ஆரம்பித்த போது சிவாஜியை மட்டும் புறக்கணிப்பது என்றிருந்த என் முடிவு இப்போது தென்னிந்திய தமிழ் சினிமாக்களையே பார்ப்பதில்லை! என்பது வரை வியாபித்து நிற்கிறது. ஏற்கனவே பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டி இரவு நேர தொலைக்காட்சி தொடர்களுக்கு என்வீட்டில் தடை விதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

(யாவும் கற்பனை இல்லை, பாதி உண்மை)

Edited by சாணக்கியன்

சிவாஜியை எப்போ வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் கண்காட்சி அது நடைபெறும்போது மட்டுமே பார்க்கலாம். இதை அந்தச் சிறுவன் உணர்ந்துதான் கண்காட்சியை தெரிவு செய்திருக்கின்றார். ஆனால் சிவாஜி திரைப்படத்தை இனி பார்க்க மாட்டேன் என்று சொல்லவில்லையே. உண்மையில் எனக்கேற்பட்ட ஆச்சரியம் என்னவென்றால் இங்கு தியேட்டரில் அலைமோதிய கூட்டத்தில் முக்கால்வாசி இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள். அவர்கள் திரையில் ரஜனி தோன்றும் போதெல்லாம் விசிலடித்து ஆர்ப்பரித்தது இன்னுமொரு ஆச்சரியம். ஏதோ புதிதாக வந்த சிலந்திமனிதன் படத்தை பார்த்தது போல் சந்தோசம் அவர்களுக்கு. :):rolleyes:

Edited by Vasampu

TM_15-06-07_E1_08-0320CNI.jpg

சேலத்தில் தியேட்டர்களை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள், ஆடு வெட்டி ரத்தத்தை தெளித்து கட்-அவுட்டுக்கு திருஷ்டி கழிப்பு செய்தனர்.

சிவாஜி பார்ப்பதே இல்லை, சீடியிலென்ன இணையத்திலென்ன ஏன் இலவசமாக தந்தாலும் பார்ப்பதில்லை என்ற என் சபதத்தில் இடி விழுந்தாற் போல் ஒரு சம்பவம்!

வழமைக்கு மாறாக வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் போது குடும்பத்தினர் அனைவரும் எனக்காக காத்திருக்கின்றனர், "கெதியன வாங்கோ, டீ போட்டிருக்கு, குடிச்சிட்டு லேட்டாக்காம வெளிக்கிட்டு வாங்கோ, நாங்கள் எல்லாம் ரெடி" என்றாள் மனைவி. வழமையாக கெஞ்சிக் கேட்டாலும் கிடைக்காத டீயே எனக்காக காத்திருக்கிறது! என்ன விசயம் என்று பார்த்ததில் மனைவியின் அலுவலகத்தில் ஒரு சலுகை அறிவித்துள்ளனராம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே தடவையில் சிவாஜி பார்த்து டிக்கட்டை அலுவலகத்தில் சமர்ப்பித்தால் டிக்கட்டின் பெறுமதியான பணம் மீளளிக்கப்படுமாம்!

ஏன் என்று கேட்டால், அந்த நிறுவனத்திற்கு வியாபாரத்தில் லாபமாம், அதற்காக இந்த அறிவிப்பை ரஜனி ரசிகரான மேலாளர் அறிவித்திருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை, இனி சனி ஞாயிறு என்றால் கூட்டம் அதிகம் என்பதால் அந்த வாய்ப்பு அறிவிக்கப்பட்ட அன்றே மொத்தக் குடும்பமும் புறப்பட ஆயத்தம்!

பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னார்கள்?

நான் வரமாட்டேன் என்று சொன்னால் என்னையும் விட்டுவிட்டுப் போக தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பது அவர்களின் ஆயத்த நிலையிலிருந்து நன்கு தெரிந்தது. அவர்கள் எல்லோரும் போக நான் மட்டும் வீட்டில் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருப்பதை நினைக்க வெறுப்பாகவும் இருந்தது. ஏற்கனவே இந்தப் புறக்கணிப்பு பற்றி சாடைமாடையாக கதைத்தபோது யாருமே கண்டு கொள்வில்லை. எனவே இப்போது இதைப்பற்றி சொல்லி ஆகப்போவது எதுவுமில்லை. எனது குடும்பத்தையே என்னால் தடுக்க முடியவில்லை என்றால் பிறகு மற்றவர்களிடம் சொன்னதெல்லாம் என்னாவது?

ஒரே குழப்பத்துடன் டீயை குடித்து முடித்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தேன். முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு சொன்னேன் "நான் வரேல்ல நீங்கள் போறதென்டா போங்கோ.......ஒருக்கா நான் இதுக்கு போகமாட்டான் எண்டு சொன்னா சொன்னதுதான்....நீங்கள் போய் வடிவா பாத்திட்டு வாங்கோ!" என்று சொல்லி விட்டு, துவாயை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு வெளியில் நடக்கும் சம்பாசனையை ஒட்டுக் கேட்டேன்.

சிறிது நேரம் நிசப்தம் ........ தங்கைதான் முதலில் வாய்மலர்ந்து...... "அவர் வராட்டி பறவாயில்லை, நாங்க போவம்" என்றாள். அதற்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை .... இதுவரை கலகலப்பாக இருந்த இடத்தில் மயான அமைதி. நடந்ததை அறியாத என் இளைய மகள் சிணுங்க ஆரம்பித்தாள். அப்போது தான் அவளுக்கு பால் கரைக்கவில்லை என்று ஞாபம் வந்த மனைவி ஒரு பெருமூச்சுடன் சமையலறைக்குச் சென்றாள். அவள் என்னை விட்டு விட்டு போகமாட்டாள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் மற்றக் கோஸ்டியை பற்றி சொல்ல முடியாது.

அவர்களுக்கும் ஆப்பு வைத்தது போல ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "வீட்டதானே நிக்கிறியள்! ஒருக்கா அங்காலை பக்கம் வருவம் எண்டு பாத்தம்" என்று வெளியில இருந்து வந்து நின்ற பெரியம்மா குடும்பத்தினர். அப்புறம் என்ன மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வெளிக்கிடும் அவசரத்தில் தாறுமாறாக கிடந்த பொருட்களை எல்லாம் கூடத்தில் ஒழுங்கு படுத்த ஆரம்பித்தார் அம்மா. அப்போதே மணி ஏழாகிவிட்டது இனி போகமுடியாது என்ற நிம்மதிப் பெருமுச்சுடன் குளிக்க ஆரம்பித்தேன்!

ஆரம்பித்த போது சிவாஜியை மட்டும் புறக்கணிப்பது என்றிருந்த என் முடிவு இப்போது தென்னிந்திய தமிழ் சினிமாக்களையே பார்ப்பதில்லை! என்பது வரை வியாபித்து நிற்கிறது. ஏற்கனவே பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டி இரவு நேர தொலைக்காட்சி தொடர்களுக்கு என்வீட்டில் தடை விதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

(யாவும் கற்பனை இல்லை, பாதி உண்மை)

:):rolleyes:சரி சரி படம் எப்படி?? பிடித்திருந்ததா?? நானும் சம்சாரி தானுங்க வீட்டுக்கு வீடு வாசல்படி இதுகூட புரியாதா என்ன?? :rolleyes::)

உண்மையில் எனக்கேற்பட்ட ஆச்சரியம் என்னவென்றால் இங்கு தியேட்டரில் அலைமோதிய கூட்டத்தில் முக்கால்வாசி இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள். அவர்கள் திரையில் ரஜனி தோன்றும் போதெல்லாம் விசிலடித்து ஆர்ப்பரித்தது இன்னுமொரு ஆச்சரியம். ஏதோ புதிதாக வந்த சிலந்திமனிதன் படத்தை பார்த்தது போல் சந்தோசம் அவர்களுக்கு. :):rolleyes:

ஆமாம் இங்கேயும் இதே நிலை தான் நடந்தது...........இவர்களுக்கு ரஜனியை அற்றி சொல்லி கொடுத்தது யார்??அவர்களின் பெற்றோர்கள் தானே............தாங்கள் புறகணித்து கொண்டு பிள்ளைகளை பார்க்க விட்டவையோ??நம்மால முடியாது பாருங்கோ வாயளவில் கதைக்க மட்டும் தான் எம்மால் முடியும்............சிவாஜியை புறகணிபோம் ஆனால் ஸ்ரெயா கட்டின சேலை வாங்க வேண்டும் என்று ஓடுவோம் இப்படி இருக்கும் போது.................வேற என்னத்த சொல்ல

B)

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் இன்னைக்கு நான் டிவிடி பாத்திட்டன்பா..Supero Super..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெல்கம் லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ் இப்ப நான் சிவாஜி பற்றிய விமர்சனத்துடன் உங்கள் முன்...........

சபாஷ் ஜமுனா, மிகத் துணிச்சலாக உண்மையை உறைக்கும் படி உரத்துச்சொன்னதுக்கு ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்!

இந்த விடயத்தில் நான் உங்கள் பக்கம்!. இப்போதும் அல்ல எப்போதுமே தென்னிந்திய நடிகர்களுக்கு அரசியல் சாயம் பூசுவதை நான் விரும்புவதில்லை!.

உங்கள் கருத்து! வெகு சிறப்பு! :)

:):rolleyes:சரி சரி படம் எப்படி?? பிடித்திருந்ததா?? நானும் சம்சாரி தானுங்க வீட்டுக்கு வீடு வாசல்படி இதுகூட புரியாதா என்ன?? :rolleyes::)

"யாவும் கற்பனை இல்லை, பாதி உண்மை" என்று கூறி நான்தான் உங்களை குழப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்!

ஆரம்பித்த போது சிவாஜியை மட்டும் புறக்கணிப்பது என்றிருந்த என் முடிவு இப்போது தென்னிந்திய தமிழ் சினிமாக்களையே பார்ப்பதில்லை! என்பது வரை வியாபித்து நிற்கிறது. ஏற்கனவே பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டி இரவு நேர தொலைக்காட்சி தொடர்களுக்கு என்வீட்டில் தடை விதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே

மேற்குறித்த கூற்று 100% உண்மை. கொஞ்சம் சுவை சேர்ப்பதற்காக சில சம்பவங்களை மாற்றி அமைத்தேன் அவ்வளவே!

அண்மையில் Will Smith நடித்த "The Pursuit of Happyness" என்ற படம் பார்த்தேன், மிகவும் நல்ல படம். இது ஒரு உண்மைக்கதை! முதன் முதலாக Will Smith சோகமாக நடித்த படம் இதில் ஒரு சாதாரண விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு சம்சாரியை பற்றியது. The Pursuit of Happyness தவறாமல் இதனை பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்களேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.