Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள் எழுச்சி பெற்ற புதிய வைரஸ் வேகம் – லண்டன் உட்படப் பெரும் பகுதி முடக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இப்பவே மருந்துகளை கண்டு பிடிக்க இந்த முக்கு முக்கீனம். இதை பாக்கேக்கை  எங்கடை முன்னோர்கள் வலு கெட்டிக்காரர். அதிலும் இயற்கை வைத்தியம். பக்க விளைவுகள் அறவே இல்லை....

இப்போது இருக்கும் கோவில்களும் வழிபாட்டு தலங்களும் வியாபார நிலையங்கள்  போன்றது. இது உலகறிந்தவிடயம். அதை வைத்து நீங்கள் கருத்து எழுதுவதால் உங்களின் இயலாமை  தெட்டத்தெளிவாக தெரிகின்றது.🤣

விளைவே இல்லையென்றால், பின்னர் பக்க விளைவு, பின்விளைவு, முன்விளைவெல்லாம் எப்படி வரும்? 🤦‍♂️

  • Replies 77
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாரும் முன்னோர்களை கேலி செய்யவில்லை.

முகமது சொன்னதுதான் இறுதி என்று வாதாடாடும் முல்லாக்களை போல, ஆதி காலத்து, ஆயிரம் ஆண்டுகளிக்கு முந்திய விளக்கத்தை வைத்து கொரோனா அம்மன் மருந்து கண்டுபிடிக்க விழைந்த இங்கிலாந்தை ( மருந்து முதலில் கண்டுபிடித்தது.... wait for it.....ஜேர்மனி 🤦‍♂️) தண்டிகிறாவா என்று எழுதியதுக்கே அந்த விளக்கம்.

அப்புறம் போற போக்கில் இன்னும் மருந்து கண்டு பிடிக்க வில்லை என்று விஞ்ஞானத்தின் மீது நக்கல் வேறு.

கொரோனா வைரஸ் ஒரு புத்தம் புதிய உயிரி. அது கண்டு பிடிக்க பட்டு ஒரு வருடத்துக்கு சற்று அதிகமான காலத்தில் ரெண்டு வக்சீன் தயார் இன்னொன்று அடுத்த கிழமை வருகிறது. இது ஒரு இமாலய சாதனை. முன்னெப்போதும் இல்லாத வகையில்.

விஞ்ஞானம் இல்லை என்றால் கூடி இருந்து வேப்பிலைதான் அடித்திருக்க வேண்டும்.

கொரோனா தானாக போகாது. அம்மனும் அதை விட்ரோ பண்ணப் போவதில்லை.

தடுப்பூசி அடித்து படிபடியாக கூட்டு நோயெதிர்ப்பை கூட்டித்தான் கொரோனா வெல்லப்படும்.

இங்கே எழுதுபவர்கள் எல்லாம் அரசாங்கம் கூப்பிட்டவுடன் முதல் ஆளாய் ஓடிப்போய் தடுப்பூசி போடபோவபர்கள்தான்.

சும்மா பொழுது போக்குக்கு இங்கே வந்து அம்மாள், வேப்பிலை, முன்னோர் என்று சாமியாடுவார்கள் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ட கண்ட தொழிற்சாலைகளால் சூழல் மாசுபடுகின்றது.கண்ட கண்ட கண்டு பிடிப்புகளால் தேகாரோக்கியம் கெடுகின்றது. கண்ட கண்ட உணவுகளால் இனம் புரியாத நோய்கள் வருகின்றது.

இன்றைய விஞ்ஞான/மருத்துவ வளர்ச்சியை வைத்து நோய்களை உருவாக்கி மருந்து வியாபாரம் செய்கின்றார்களே தவிர வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய தொழிற்சாலை நாடுகளே தங்கள் தவறுகளை தெரிந்து சூழல் சுற்றாடல் நலன்களை சட்டங்கள் மூலம் சரி செய்ய முற்படுகின்றன. ஆனால் இங்குள்ள ஜாம்பவான்களோ அழிவைத்தரும் விஞ்ஞானம் சொர்க்கமானது என கனவில் மிதக்கின்றார்கள்.😁

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான சொர்க்கம் என யாரும் சொல்லவும் இல்லை. இப்போதைக்கு அறிவுக்கு எட்டிய வழியை விஞ்ஞானம் காட்டுகிறது என்பது மட்டுமே சொல்ல படுகிறது.

சூழல் மாசடைகிறது, ஓசோனில் ஓட்டை விழுகிறது, வளிமண்டலத்தின் காபன் மொனொக்சைட் துகளள்கள் கூடுகிறது, அது சுவாச மற்றும் இதர நோய்களை தருகிறது. துருவ பனிகட்டி உருகுகிறது. காபனீரொக்சைட் கூடுவதை, மீதேன் கூடுவதை எப்படி தடுப்பது....

இவையெல்லாம் எந்த மத புத்தகத்திலும் இல்லை. விஞ்ஞானம் சொன்னதுதான். 

விஞ்ஞானம் இன்றில் சூழல் மாசடைவது என்றால் என்ன என்பதே எமக்கு தெரிந்திராது.

ஆம் தொழில் புரட்சியை, உலக மயமாதலை விஞ்ஞானம்தான் தந்தது. அப்படி இல்லாவிட்டால் நாமெல்லாம் யாழ்பாணத்யில் புகையிலைதான் நட்டபடி இருப்போம்.

ஆகவே,

ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய் ....எல்லாமும் விஞ்ஞானமே.

மதமும், கலாச்சார அனுஸ்டாங்களும் அவரவர் தனியுரிமை அதற்க்காக, பொது இடங்களில் ஒரு pandemic நடுவில் வந்து எமது அரைகுறை விளக்கங்களை முன்வைக்க கூடாது.

இது மிக ஆபத்தான போக்கு.

நான் ஏலவே சொன்னபடி இப்படியாக ஒரு திரிலுக்கு எழுதுபவர்கள் நாளைக்கு முதல் ஆளாய் போய் ஊசி போட்டு தப்பி விடுவார்கள்.

இவர்கள் எழுதியதை உண்மை என நம்பி அப்பாவி சீவன் ஒன்று, வேப்பிலையை கட்டி கொண்டு கும்மியடித்து கொரோனாவில் போய் சேர்ந்துவிடக்கூடாது. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோரோனாவுக்கென  தயாரிக்கப்பட்ட மருந்துகளின் பக்கவிளைவுகளே எக்கச்சக்கம். இதற்குள் கொரோனா ஊசி போட்டு தப்பிவிடுவார்களாம்....😁  கொரோனா மருந்துகளை ஏற்றிக்கொண்டு போன லொறி றைவர் அலர்ஜி வந்து இன்னும் எழும்பவேயில்லையாம்.🙃

அது கிடக்கட்டும்.....😎

சீனாவிலை இப்ப கொரோனா அடங்கீட்டுது. இது உலகம் அறிஞ்ச விசயம்.சனம் நோர்மல் வாழ்க்கைக்கு திரும்பீட்டுது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சொல்லி வேலையில்லையாம். இவ்வளவத்துக்கும் சீனக்காரன் கொரோனா ஊசி போடவுமில்லை. ஊசிக்கு தவம் கிடக்கவும் இல்லை.

அதுதான்......கொரோனா தானாய் போனால் உண்டு. போகும். அதுக்கு பிறகு எங்கடை வெள்ளை கோட்டு போட்ட  பரியாரிமார் பாத்தியா....பாத்தியா எங்கடை மருந்து கண்டியா எண்டுவினம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கோரோனாவுக்கென  தயாரிக்கப்பட்ட மருந்துகளின் பக்கவிளைவுகளே எக்கச்சக்கம்

அது இந்தியாவில் தயாரித்த கோரோனாவில் என்ற போலி மருந்தாக இருக்கும்😁 அல்லது கொரோனா மீதான எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் சுமே ஆன்ரி குடித்த மூலிகை கஷாயமாக இருக்கும்😃

போலியோவுக்கு வக்சீன் போட்டு இளம்பிள்ளை வாதத்தில் இருந்து தப்பி நெஞ்சை நிமிர்த்தி நடந்துகொண்டு கொரோனோ வக்சீனால் பக்கவிளைவு என்று பூச்சாண்டி காட்டினால்தானே கொஞ்ச சனத்தை வக்சீன் எடுக்காமல் சாகடிக்கப்பண்ணலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

சீனாவிலை இப்ப கொரோனா அடங்கீட்டுது. இது உலகம் அறிஞ்ச விசயம்.சனம் நோர்மல் வாழ்க்கைக்கு திரும்பீட்டுது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சொல்லி வேலையில்லையாம். இவ்வளவத்துக்கும் சீனக்காரன் கொரோனா ஊசி போடவுமில்லை. ஊசிக்கு தவம் கிடக்கவும் இல்லை.

சீனாவில்.. வைரஸ் அடங்கினதாகத் தெரியவில்லை. வைரஸ் பரவல் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இதனால்.. தான் அவுஸி சீனர்களுக்கான விசாவை முற்றாக நிறுத்தி வைத்துள்ளதாம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

கோரோனாவுக்கென  தயாரிக்கப்பட்ட மருந்துகளின் பக்கவிளைவுகளே எக்கச்சக்கம். இதற்குள் கொரோனா ஊசி போட்டு தப்பிவிடுவார்களாம்....😁  கொரோனா மருந்துகளை ஏற்றிக்கொண்டு போன லொறி றைவர் அலர்ஜி வந்து இன்னும் எழும்பவேயில்லையாம்.🙃

அது கிடக்கட்டும்.....😎

சீனாவிலை இப்ப கொரோனா அடங்கீட்டுது. இது உலகம் அறிஞ்ச விசயம்.சனம் நோர்மல் வாழ்க்கைக்கு திரும்பீட்டுது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சொல்லி வேலையில்லையாம். இவ்வளவத்துக்கும் சீனக்காரன் கொரோனா ஊசி போடவுமில்லை. ஊசிக்கு தவம் கிடக்கவும் இல்லை.

அதுதான்......கொரோனா தானாய் போனால் உண்டு. போகும். அதுக்கு பிறகு எங்கடை வெள்ளை கோட்டு போட்ட  பரியாரிமார் பாத்தியா....பாத்தியா எங்கடை மருந்து கண்டியா எண்டுவினம்.😂

சீனா மிக கடுமையாக பாதிக்க பட்ட பகுதிகளை தனிமை படுத்தி, ராணுவ நேர்த்தியோடு கையாண்டமையால் பரவலை தடுத்தது. இப்போதும் விமான நிலையங்களில் இன்னும் பல இடங்களில் அவர்கள் மிக கடுமையான நடவடிக்கைதான் எடுக்கிறார்கள். தவிர மக்கள் சொல் கேட்டு நடப்பார்கள். 

ஜப்பானிலும் கொரியாவிலும் கூட இதுதான் நிலைமை.

அதிக சுதந்திரம், கட்டுபாடற்ற மக்கள் உள்ள நாடுகள்தான் பெரும்பாலும் அதிக அடி வாங்குகிறன.

சீனா சைனோவாக்ஸ் என்ற வக்சீனை தயாரிக்கிறது.

மேற்கிற்கு COVID 19 இன் genome வரை படத்தை கொடுத்தவர்கள் கூட சீன விஞ்ஞானிகள்தான்.

ஆகவே கொரோனா தானாக போகும், கடவுள் அருளால் போகும் என்பது சுத்த அம்புலிமாமா கதை.

ஆனால் சிலருக்கு இந்த விடயங்கள் ஜென்மத்துக்கும் விளங்காது, அல்லது விளங்காதது போல் நடிப்பார்கள்,  ஆகவே விஞ்ஞானம் கொரோனாவை வென்றபின், மெதுவாக தலையை வெளியே நீட்டி, தடுப்பூசி போட்ட தழும்பை மறைத்தபடி (😀)பார்த்தாயா அம்மன் கொரோனாவை வாபஸ் வாங்கி கொண்டார் என சொல்லத்தான் போகிறார்கள், உலகம் எப்போதும் போல ஒரு நமிட்டு சிரிப்போடு அவர்களை கடந்து போகும்.

நன்றி

வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல்.. சிங்கப்பூரும் சீனர்களுக்கு உள்நுழைவு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அது இந்தியாவில் தயாரித்த கோரோனாவில் என்ற போலி மருந்தாக இருக்கும்😁 அல்லது கொரோனா மீதான எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் சுமே ஆன்ரி குடித்த மூலிகை கஷாயமாக இருக்கும்😃

போலியோவுக்கு வக்சீன் போட்டு இளம்பிள்ளை வாதத்தில் இருந்து தப்பி நெஞ்சை நிமிர்த்தி நடந்துகொண்டு கொரோனோ வக்சீனால் பக்கவிளைவு என்று பூச்சாண்டி காட்டினால்தானே கொஞ்ச சனத்தை வக்சீன் எடுக்காமல் சாகடிக்கப்பண்ணலாம்!

இது மிக மோசமான உயிரோடு விளையாடும் விளையாட்டு. Antibodies எப்படி உருவாகிறது, நோயெதிர்பு சக்தி எப்படி உருவாகிறது, அலர்ஜியின் அடிப்படை என்ன என தெரியாதவர்கள் தாமும் குழம்பி, மற்றயோரயும் குழப்புதல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, nedukkalapoovan said:

சீனாவில்.. வைரஸ் அடங்கினதாகத் தெரியவில்லை. வைரஸ் பரவல் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இதனால்.. தான் அவுஸி சீனர்களுக்கான விசாவை முற்றாக நிறுத்தி வைத்துள்ளதாம். 

சீனா பழைய நிலமைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாக இங்குள்ள ஊடகங்களில் பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்போது இருக்கும் கோவில்களும் வழிபாட்டு தலங்களும் வியாபார நிலையங்கள்  போன்றது. இது உலகறிந்தவிடயம். அதை வைத்து நீங்கள் கருத்து எழுதுவதால் உங்களின் இயலாமை  தெட்டத்தெளிவாக தெரிகின்றது

உண்மைதான். இப்ப ஆன்மீகமும், ஒழுக்கமும், நன்னெறியும் முகப்புத்தகத்திலும், யூரியூப்பிலும், ருவிற்றரிலும் தாராளமாக இருக்கும்போது கோயில்கள் யாவாரம் செய்துதானே கொஞ்சமாவது பணம் பார்க்கலாம். கொரோனாவுக்கு ஒரு குளிர்த்தி செய்தால் எல்லாம் போய்விடும்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, கிருபன் said:

உண்மைதான். இப்ப ஆன்மீகமும், ஒழுக்கமும், நன்னெறியும் முகப்புத்தகத்திலும், யூரியூப்பிலும், ருவிற்றரிலும் தாராளமாக இருக்கும்போது கோயில்கள் யாவாரம் செய்துதானே கொஞ்சமாவது பணம் பார்க்கலாம். கொரோனாவுக்கு ஒரு குளிர்த்தி செய்தால் எல்லாம் போய்விடும்!!

இதை நீங்களும் உங்களைப்போன்றவர்களும் தான் சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்.
நாங்கள் இயற்கையும் அதன் நடைமுறைகளையும் வைத்துத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

மீண்டுமொருமுறை இப்போதைய  வழிபாட்டு தலங்கள் வியாபார நிலையங்கள் ஆகி விட்டது. அதை வைத்து இங்கே கருத்தெழுதி உங்கள் திறமையை காட்டாதீர்கள்.

😂

14 minutes ago, goshan_che said:

நன்றி

வணக்கம்

என்ன இது? நான் ஏதோ இழுத்து புடிச்ச மாதிரி???????🤣

நல்ல காலம் சூறாவளியையும் சுனாமியையும் நில நடுக்கத்தையும் மனித புழுக்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுவும் ஏலுமெண்டால்.......ஐயையோ என்ர சிவனே....😎

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

என்ன இது? நான் ஏதோ இழுத்து புடிச்ச மாதிரி???????🤣

நல்ல காலம் சூறாவளியையும் சுனாமியையும் நில நடுக்கத்தையும் மனித புழுக்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுவும் ஏலுமெண்டால்.......ஐயையோ என்ர சிவனே....😎

🤣🤣🤣 நீங்கள் இழுத்து பிடிக்கேல்லத்தான். நான் கனக்க எழுதிவிட்ட உணர்வு ஆகவேதான் நன்றி வணக்கம்.

மனிதர் என்ன, நாம் வியக்கும் இந்த இயற்கையும், உலகும், கோள்களும் சூரியனும் கூட இந்த பிரபஞ்சத்தில் ஒரு துளிதானும் இல்லை. 

ஒரு தேன்கூட்டின் ஒற்றை அறையை விட சிறியது எம் பால்வெளி. ஆகவே மனித புழுக்களின் இயலுமை பற்றி எனக்கு ஒரு மிகை மதிப்பீடும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நல்ல காலம் சூறாவளியையும் சுனாமியையும் நில நடுக்கத்தையும் மனித புழுக்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுவும் ஏலுமெண்டால்.......ஐயையோ என்ர சிவனே....😎

சிவமூலிகை வேலை செய்யும்போது இப்படி ஆற்றொழுக்காக வரும்தானே!😆 

  • கருத்துக்கள உறவுகள்

,

32 minutes ago, கிருபன் said:

சிவமூலிகை வேலை செய்யும்போது இப்படி ஆற்றொழுக்காக வரும்தானே!😆 

இங்கு அனேகமானவர்கள் கபசுர குடிநீர் என்று ஒரு வித பவுடரை அவித்து குடிக்கிறார்கள்..இதன் தன்மை சாடையான கைப்பாக இருக்கும் என்று அறிய முடிகிறது.வெளியே நின்று பார்ப்பவர்கள் சண்டைக்கு வராதீங்கோ உங்களின் விடுப்பு பார்க்கும் நேரம் .😆
 
இங்கு இயற்கை வைத்தியம் போதும் என்றும் அம்மன்  சிவன் எல்லாம் காப்பாற்றுவார் என்று மற்றவர்களை மடையராக்கி   புலம்புபவர்கள் தமக்கு  மாரடைப்பு வந்தால் உடனடியாக  அம்புலன்ஸிற்கு போன்பண்ணி நவீன வைத்தியசாலையை நோக்கி  தலை தெறிக்க ஓடுவாரகள். ஏனென்றால் சிவன் காப்பாற்றமாட்டான் என்பது மற்றவர்களை விட  இந்த சிவனே என்று புலம்பும் கும்பலுக்கு தான் மிகத் தெளிவாக தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிழை திருத்தமும் விளக்கமும்

கொரோனா தானாகவே ஒழியாது என நான் எழுதியது முற்றிலும் சரியில்லை.

நான் மேலே இன்னொரு பதிவில் எழுதியது போல, ஒரு வைரசின் முக்கிய நோக்கம் எம்மை கொல்வதல்ல. தன்னை பல்கி பெருகி இனப் பெருக்கம் செய்வது.

கொரோனாவிற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுக்கும் போது, தொற்று ஏற்பட்ட அதிகம் பேரை கொல்வதால், தொடர்ந்து மனிதருக்கு பரவி தன்னை விருத்தி செய்ய கொரோனாவால் முடியாது போகும் போது, தன்னை தற்காத்து கொள்ளும் பொருட்டு தனது கொல்லும் வலுவை குறைத்து ஒரு அபாயம் குறைந்த விகாரியாக வைரசுகள் விகாரமடைவது இயல்பு.

இப்போ லண்டனில் பரவும் வகை இப்படி கொல்லும் வலு குறைந்ததாக இருக்கலாம் (எனது ஊகம் மட்டுமே). 

முதல் அலையின் முடிவிலும் ஒரு இத்தாலிய வைத்தியர் இப்படி ஒரு மாறிலி ஏற்பட்டதாக கூறினார்.

உதாரணதுக்கு சீசனுக்கு சீசன் பரவும் flu காய்ச்சல் வைரஸ் இப்படியானது. இதனாலும் மரணம் நிகழலாம் எனிலும், இப்போ கொவிட் கொல்லும் அளவுக்கு இல்லை.

அதே போல் 1900 இன் ஆரம்பத்தில் வந்த ஸ்பானிய காய்ச்சலும் தடுப்பூசி இன்றியே வழக்கொழிந்து போனது. ஆனால் இப்படி வழக்கொழிய காரணம், அது தொற்றாளர்களை கொன்றொழித்ததே மற்றும் மக்களிடையே கூட்டு நோயெதிர்ப்பு (herd immunity) உருவானதே. அதனால் தொடர்ந்து வாழ வைரசுக்கு வாழிடம் இல்லாமல் போய் அழிந்தது.

ஆகவே கொவிட்டும் இப்படி அழிய கூடும்.

ஆகவே கொவிட் தானாக அழியாது என நான் சொன்னது சரியில்லை.

ஆனால் இப்படி அழிவதற்கு, 1900 போலன்றி மிகவும் சுருங்கி விட்ட இன்றைய உலகு கொடுக்க வேண்டிய மனித உயிர் விலை மிக அதிகமாக இருக்கும்.

ஆகவேதான் தடுப்பூசி, சமூக இடவெளி, மேலும் பராமரிப்பு மருத்துவ ஆராய்சி இவை மட்டுமே தகுந்த வழிகள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

Paanch உங்களுக்காக “கொரோனா அம்மனை” வடிவமைத்திருக்கிறேன்.spacer.png

ஏற்கனவே சிங்கள பெண் வரைந்த மாகாளியின்  படத்தால் இணையமெங்கும்  கொள்ளுபாடு இதுக்குள் நீங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இது அம்மன் இல்லை.. வைரசுக்கு மேல நெருப்பு கொள்ளிமாதிரி நிறைய முளைச்சு இருக்கு.. இது சுடலை மாடன் கோவங்கொண்டு வந்திருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது அம்மன் இல்லை.. வைரசுக்கு மேல நெருப்பு கொள்ளிமாதிரி நிறைய முளைச்சு இருக்கு.. இது சுடலை மாடன் கோவங்கொண்டு வந்திருக்கு..

புலவரே,

மாடன் நம்ம சாமி, கறிய வச்சி, கள்ளையும் வச்சி திங்கு திங்குன்னு குதிச்சு ஆட்டம் போட்டா அடங்கீடும்🤣

இதைதான் இந்த இளம் பராயத்து பிள்ளையள் செய்ய நிக்குதுகள், விசயம் விளங்காத பொலீஸ் illegal lockdown rave எண்டு தடுக்கிறாங்கள் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது மாரடைப்பு புற்றுநோயெல்லாம் ஏதோ தடிமல் காய்ச்சல் போல் சர்வசாதாரணமாக வந்து விட்டது. ஏன் எதனால்?

விஞ்ஞான யுகம் என்ற பெயரில் உடலுக்கு நலன் இல்லாத பயிர் கண்டு பிடிப்புகளும்......நஞ்சு கலந்த காய் கனிகளும்.... நல்ல சுவாத்தியம் இல்லாத பூமியும்....உடல் அசைவில்லா தொழிலும்....இவையெல்லாம் யாரால் வந்தது?
இறைவனாலா? 
மனிதனாலா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது அம்மன் இல்லை.. வைரசுக்கு மேல நெருப்பு கொள்ளிமாதிரி நிறைய முளைச்சு இருக்கு.. இது சுடலை மாடன் கோவங்கொண்டு வந்திருக்கு..

 உலகிற்கு புதிராக இருக்கும் கோபுரங்களையும் பிரமிட்டுக்களையும் உருவாக்கிய மனிதன் நோய் நொடிகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள தெரியாமலா இருந்திருப்பான்?

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் புதிய வகை கண்டுபிடிப்பு - கவலை தரும் 3 விஷயங்கள்

https://www.facebook.com/BBCnewsTamil/videos/422360265579822

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.