Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள் எழுச்சி பெற்ற புதிய வைரஸ் வேகம் – லண்டன் உட்படப் பெரும் பகுதி முடக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா – பிரித்தானியா இடையிலான விமான சேவை இரத்து | Athavan News

இந்தியா – பிரித்தானியா இடையிலான விமான சேவை இரத்து

பிரித்தானியாவுடனான விமானப் போக்குவரத்து சேவைக்கு இந்தியா தற்காலிக தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸின் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த இடைக்கால தடை அமுலில் இருக்கும் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு வரை பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களின் மூலம் நாட்டை வந்தடைபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இந்தியா-பிரித்தானியா-இட/

  • Replies 77
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஆகவே கொவிட் தானாக அழியாது என நான் சொன்னது சரியில்லை.

ஆனால், இந்த புவி வெப்பமடைதல் என்பது பல உறங்கு நிலையில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் களை மறுதலிக்கவைக்கிறது என்பதும், அதை மனித இனத்துக்கு மற்றும் வேறு உயிரினங்களும் தொற்றுகிறது என்பது உண்மைதான்.

covid-19 இதன் ஆரம்ப அறிகுறியா என்றும் சிந்திக்க வேண்டி உள்ளது.

https://www.nature.com/news/giant-virus-resurrected-from-30-000-year-old-ice-1.14801
     
http://www.bbc.com/earth/story/20170504-there-are-diseases-hidden-in-ice-and-they-are-waking-up

https://www.bbc.co.uk/news/science-environment-26387276

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த விகாரி மற்ற நாடுகளிலும் ஏற்கனவே பரவி விட்டதாகவே நிலைமை இருக்கவேண்டி உள்ளது.

UK இல்  செப்டம்பர் 20, 21  இல் Kent, London இல் பெறப்பட்ட samples இல்,  அக்டோபர் இல் செய்யப்பட்ட genomic sequencing மூலமாக இந்த விகாரி அறியப்பட்டு உள்ளது.  

https://www.ft.com/content/a8cf7f88-7bfc-46c5-bb25-a914266f0377

'Other countries may have the variant as well, says epidemiologist William Hanage of the Harvard T.H. Chan School of Public Health; the United Kingdom may have just picked it up first because it has the most sophisticated SARS-CoV-2 genomic monitoring in the world. Many countries have little or no sequencing'.
https://www.sciencemag.org/news/2020/12/mutant-coronavirus-united-kingdom-sets-alarms-its-importance-remains-unclear

youtube  இணைப்பு virology பற்றிய சிறிது ஆழமான அலசலும், விகாரியின்  தாக்கத்தின் எதிர்வு கூறலும். 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தடுப்பூசி பற்றி தவறான கற்பிதங்களுடன் இனச் சிறுபான்மையினரே இருப்பதால் பிபிசி அவரவர் மொழியில் வெளியிட்டுள்ள விளக்கம்.

https://www.bbc.co.uk/news/uk-55279549 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

ஆனால், இந்த புவி வெப்பமடைதல் என்பது பல உறங்கு நிலையில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் களை மறுதலிக்கவைக்கிறது என்பதும், அதை மனித இனத்துக்கு மற்றும் வேறு உயிரினங்களும் தொற்றுகிறது என்பது உண்மைதான்.

covid-19 இதன் ஆரம்ப அறிகுறியா என்றும் சிந்திக்க வேண்டி உள்ளது.

https://www.nature.com/news/giant-virus-resurrected-from-30-000-year-old-ice-1.14801
     
http://www.bbc.com/earth/story/20170504-there-are-diseases-hidden-in-ice-and-they-are-waking-up

https://www.bbc.co.uk/news/science-environment-26387276

இருக்கலாம். புவி வெப்பமடைதல் ஒரு டிப்பிங் போயிட்ண்டை தாண்டி விட்டால், நடப்பது கைமீறி போய்விடும்.

தனியே விலங்கு எண்ணிக்கை கட்டுப்பாடு நோக்கில் மட்டும் பார்த்தால்... உலக மனித எண்ணிக்கை அதன் இயற்கை சமநிலைக்கு மிக அதிகமாகவே இருப்பதாக படுகிறது.

எமது அழிக்கும் திறன் புவியையோ அதில் உயிர் வாழ்தலையோ அழிக்கும் அளவுக்கு பெரிதல்ல. 

மாபெரும் அழிவை புவி சந்தித்தாலும் எங்கோ ஒரு மூலையில் ஒரு ஒற்றை செல் அமிபா தப்பி பிழைக்கும், அது மீண்டும் கூர்ப்பு சங்கிலியை தொடங்கும்.

ஆனால் நாம் மனித இனத்த்தின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் திசையில்தான் போகிறோம்.

இதையும் உலக சுழற்சியின் ஒரு அங்கமாகதான் நான் பார்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கப்பா .. பூனை விலையில் இருந்து யானை விலைக்கு போகும் முன் . .

Screenshot-2020-12-22-14-53-28-296-org-m

முக்கிய ஐட்டம்களை கள தோழர்கள் ஸ்ராக் செய்துவிட்டினமா.? 👍

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விடுங்கப்பா .. பூனை விலையில் இருந்து யானை விலைக்கு போகும் முன் . .

Screenshot-2020-12-22-14-53-28-296-org-m

முக்கிய ஐட்டம்களை கள தோழர்கள் ஸ்ராக் செய்துவிட்டினமா.? 👍

தோழர்,

நாங்கள் வருடக்கணக்கில் கரண்ட் இல்லாமல், மண்ணெண்ணை விளக்கில், சீனிக்கு பதில் பனங்கட்டியோடு தேனீர் குடித்தபடி, சோப், ஷம்பு, பேட்டரி, எழுதும் நோட் புத்தகம், பேனை கூட தடைசெய்யபட்ட பொருளாதார தடைக்குள்ளாலும் தப்பி பிழைத்தவர்கள். 

இலங்கையின் புலிகள் கட்டுபாட்டு பகுதியில் 1987 க்குபின் வாழ்ந்த எவருக்கும் இந்த லாக்டவுன் எல்லாம் ...ஜுஜூபி..😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விடுங்கப்பா .. பூனை விலையில் இருந்து யானை விலைக்கு போகும் முன் . .

Screenshot-2020-12-22-14-53-28-296-org-m

முக்கிய ஐட்டம்களை கள தோழர்கள் ஸ்ராக் செய்துவிட்டினமா.? 👍

மன்னிக்கவும் தோழர்,

நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நான் வழமை போல் எதையோ சம்பந்தமில்லாமல் எழுதியுள்ளேன்🤦‍♂️.

இங்கே ஆன்லைன் டிலிவரிகள் முன்பே நல்ல முறையில் இருக்கும் கொவிட்டுக்கு பின் மேலும் மேம்பட்டுள்ளது. தவிர சூப்பர் மார்கெட்டுகள் திறந்தே உள்ளன. கிறிஸ்மாச்காலம், பிரான்சில் இருந்து வண்டி வருவது நிறுத்தம் என்பதால் சில பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்படலாம் ஆனால் இன்னும் இல்லை.

கரிசனைக்கு நன்றி தோழர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

லண்டனில் தடுப்பூசி பற்றி தவறான கற்பிதங்களுடன் இனச் சிறுபான்மையினரே இருப்பதால் பிபிசி அவரவர் மொழியில் வெளியிட்டுள்ள விளக்கம்.

https://www.bbc.co.uk/news/uk-55279549 

கோசான் ,
நீங்கள் இப்பவும் வெம்பிளிக்கை தான்நிற்கிறியள் போலை. தடுப்பூசிக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டமேநடந்தது. துரதிஷ்டவசமாக அதில் கலந்துகொண்டவர்கள் 99% வெள்ளையர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வாதவூரான் said:

கோசான் ,
நீங்கள் இப்பவும் வெம்பிளிக்கை தான்நிற்கிறியள் போலை. தடுப்பூசிக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டமேநடந்தது. துரதிஷ்டவசமாக அதில் கலந்துகொண்டவர்கள் 99% வெள்ளையர்கள் தான்.

இல்ல இப்ப கொஞ்சம் முன்னேறி ஹரோ வரைக்கும் வந்து விட்டேன்🤣.

ஓம் ஆர்பாட்டம் நடந்தது தெரியும். அது தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை. லொக்டவுனுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

நீங்கள் யூகே முழுதும் அறிந்தவர் வித்தியாசம் விளங்கும் என நினைக்கிறேன்?

ஆனால் anti vaxers என்ற மறை கழண்ட கூட்டம் வெள்ளைகளில் அதிகம்தான்.

ஆனாலும் இனச் சிறுபான்மையினரிடம் இந்த தவறான கற்பிதம் அதிகமாக உள்ளதாக Research suggests that ethnic minorities in the UK are more reluctant to take the new coronavirus vaccine. 

யார் கண்டது பிபிசி மேற்கோள் காட்டிய ரிசேர்ச் பேர்வழிகளும் என்னை போல் வெம்பிளிக்குள் குதிரை ஓட்டும் ஆட்களோ தெரியாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கோசான்,
ஓம் லொக்ட்வுனுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தான். ஆனால் இந்த அன்டி வக்சேர்ஸ் என்ற கூட்டத்தில் வெள்ளையர்கள் தான் கூட. எண்ணிக்கையில் பார்த்தால் சிறுபான்மையினரை விட மிக அதிகம். மற்றது சிறுபான்மையினருக்கு தடுப்பூசி போட பயமே ஒழியநீங்கள்நினைப்பது போல மூடநம்பிக்கை இல்லை. அதை விட பெரும்பாலான சிறு பான்மையினர் கோவிட் பரிசோதனைக்கு தான் பின்னடிப்பினம் ஏனென்றால் பெரும்பாலானோர் முழு வேலையும் பதிந்து வரி செலுத்துபவர்கள் அல்ல. பரிசோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தினால் வேலைக்கு போக இயலாது ஒருமாதம் சமாளிக்கவே கடினம் என்பதால் தான் அந்த பின்னடிப்பு. போகிற போக்கிலை என்னையும்நக்கல் அடிச்சிருக்கிறியள் பரவாயில்லைநான் கண்டுகொள்ளேலை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

வணக்கம் வாதவூரன்,

நக்கலை கண்டு கொள்ளாமைக்கு நன்றி. உங்கள் வெம்பிளிக்குள் நிக்கும் நக்கலையும் நானும் அப்படியே பகிடியாகவே எடுத்து கொண்டேன்.

நான் எங்கேயும் சிறுபான்மை மூட நம்பிக்கையால் வக்சீனை மறுப்பதாக கூறவில்லை.

பிபிசி எழுதியதை நேரடியாக மொழி பெயர்த்து சிறுபான்மை மத்தியில் தவறான கற்பிதம் அதிகம் என்றே எழுதினேன்.

தவறான கற்பிதம் ஒப்பீட்டளவில் வெள்ளையரிடமா அல்லது சிறுபான்மையிடமா அதிகம் என்பது இங்கே எங்கும் அலசப்படவில்லை.

நானும் வெள்ளையரை விட சிறுபான்மையிடம் இந்த தவறான புரிதல் அதிகம் என்று எழுதவில்லை. சிறுபான்மையிடம் அதிகம் என்றே எழுதினேன்.

நீங்கள் இந்த தவறான புரிதலுக்கு சுட்டி காட்டிய காரணங்கள் மிக வலுவானவை. 

பிகு: நேற்றும் இன்னொரு திரியில் யாழ் வெளியேறற்த்தை நான் சொல்லாமலே, அதைதான் சொல்வதாக நினைத்து பதில் போட்டீர்கள். I think you are reading too much in between the lines.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நீங்கள் இங்கே மூடநம்பிக்கை பற்றி விவதித்துக்கொண்டு இருக்கும் போது தடுப்பூசி பற்றி தவறான கற்பிதம் சிறு பான்மையினரிடம் இருக்கு என்று சொன்னால் எப்பிடி எடுப்பது.நீங்களே பிறகு அது தவறான புரிதல் என்று மாற்றி விட்டீர்கள். மற்ற திரியிலும் நீங்கள் 25 வருடம் என்று குறிப்பிட்டு சொன்ன படியால் தான் யாழ் வெளியேற்றத்தைப் பற்றி குறிப்பிட்டேன் (அதுவும்நீங்கள் சொன்னதாகநான் குறிப்பிட்டதாகநினைவில்லை,25 வருடத்துக்கு முதல் வேறெதுவும் முஸ்லிம்கள் சம்பந்தமாகநடந்ததாகநினைவில்லை). எனவே i don't think that i am reading in between lines

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

லண்டனில் தடுப்பூசி பற்றி தவறான கற்பிதங்களுடன் இனச் சிறுபான்மையினரே இருப்பதால் பிபிசி அவரவர் மொழியில் வெளியிட்டுள்ள விளக்கம்.

https://www.bbc.co.uk/news/uk-55279549 

இது தான் எங்களிடையே இருக்கும் பிரச்சினையே. போலி விஞ்ஞானப் பதிவுகளை உடனே அகற்றிவிடும் யாழ் களத்திலேயே இப்படி ஆட்கள் இருக்கிறார்கள் என்றால் குறைந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட முகநூல் எல்லாம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

ஒரு உதாரணம் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது:

"சாம்பிராணிப் புகை மூளைபுற்று  நோய், கர்ப்பைபை புற்று நோயைக் குணமாக்கும்" என்ற போலி விஞ்ஞானக் கருத்துகளைக் கொண்ட ஒரு கட்டுரையை ஒரு வெளியிணைப்பில் இருந்து ஒரு உறவு இணைக்க அதை 200 இற்கு மேற்பட்டோர் பார்த்துப் பரவசப் பட்டிருக்கிறார்கள்!

இங்கிலாந்தின் விகாரி வைரசைப் பற்றிய கட்டுரையை நான் எழுத அதை மோகன் முதலில் pin செய்து பிறகு feature செய்தும் இதுவரை 150 தாண்டவில்லை பார்வை!

இது தான் அறிவியக்கம் சார்ந்து இன்றைய பல தமிழர்களின் நிலை!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாதவூரான் said:

கோசான்,
நீங்கள் இங்கே மூடநம்பிக்கை பற்றி விவதித்துக்கொண்டு இருக்கும் போது தடுப்பூசி பற்றி தவறான கற்பிதம் சிறு பான்மையினரிடம் இருக்கு என்று சொன்னால் எப்பிடி எடுப்பது.நீங்களே பிறகு அது தவறான புரிதல் என்று மாற்றி விட்டீர்கள். மற்ற திரியிலும் நீங்கள் 25 வருடம் என்று குறிப்பிட்டு சொன்ன படியால் தான் யாழ் வெளியேற்றத்தைப் பற்றி குறிப்பிட்டேன் (அதுவும்நீங்கள் சொன்னதாகநான் குறிப்பிட்டதாகநினைவில்லை,25 வருடத்துக்கு முதல் வேறெதுவும் முஸ்லிம்கள் சம்பந்தமாகநடந்ததாகநினைவில்லை). எனவே i don't think that i am reading in between lines

நல்லது வாதவூரான்.

அடுத்த முறை இதை விட தெளிவாக எழுத முயல்கிறேன்.

2 minutes ago, Justin said:

இது தான் எங்களிடையே இருக்கும் பிரச்சினையே. போலி விஞ்ஞானப் பதிவுகளை உடனே அகற்றிவிடும் யாழ் களத்திலேயே இப்படி ஆட்கள் இருக்கிறார்கள் என்றால் குறைந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட முகநூல் எல்லாம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

ஒரு உதாரணம் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது:

"சாம்பிராணிப் புகை மூளைபுற்று  நோய், கர்ப்பைபை புற்று நோயைக் குணமாக்கும்" என்ற போலி விஞ்ஞானக் கருத்துகளைக் கொண்ட ஒரு கட்டுரையை ஒரு வெளியிணைப்பில் இருந்து ஒரு உறவு இணைக்க அதை 200 இற்கு மேற்பட்டோர் பார்த்துப் பரவசப் பட்டிருக்கிறார்கள்!

இங்கிலாந்தின் விகாரி வைரசைப் பற்றிய கட்டுரையை நான் எழுத அதை மோகன் முதலில் pin செய்து பிறகு feature செய்தும் இதுவரை 150 தாண்டவில்லை பார்வை!

இது தான் அறிவியக்கம் சார்ந்து இன்றைய பல தமிழர்களின் நிலை!

உண்மை பயணத்தை ஆரம்பிக்க முதலே புரட்டு உலகை ஒரு ரவுண்டு முடித்து விடுமாம்.

எனக்கு பாகிஸ்தானின் north western frontier பகுதி மக்களிடம் வேலை செய்த அனுபவம் இருக்கிறது. போலியோ வக்சீனை எதோ உயிரியல் ஆயுதம் போல எதிர்பார்கள். சில படித்தவர்களும்.

அப்போதெல்லாம் எமது மக்கள் இப்படி இல்லை என மனதின் ஓரத்தில் ஒரு சின்ன இறுமாப்பு பூக்கும். 

அந்த இறுமாப்பு கொரோனாவுக்கு பின் சுக்கலாக உடைந்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்காரர் அனைவரும் நலமா..இப்போ இப்படி கேட்ட வண்ணம் தான் நாட்களை கடந்த வேணடி இருக்கிறது...புதிய பழைய வைரஸ் எல்லாம் என்ன சொல்கிறது.....😆

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, யாயினி said:

லண்டன்காரர் அனைவரும் நலமா..இப்போ இப்படி கேட்ட வண்ணம் தான் நாட்களை கடந்த வேணடி இருக்கிறது...புதிய பழைய வைரஸ் எல்லாம் என்ன சொல்கிறது.....😆

😀

இங்கால எல்லாம் நல்லம் ஓவர்.

அங்கால நிலமை எப்படி ஓவர்.

நாங்கள் அனுப்பிய புதிய வைரஸ் பத்திரமாக வந்து சேர்ந்ததா ஓவர்.

🤣

1 hour ago, Justin said:

இங்கிலாந்தின் விகாரி வைரசைப் பற்றிய கட்டுரையை நான் எழுத அதை மோகன் முதலில் pin செய்து பிறகு feature செய்தும் இதுவரை 150 தாண்டவில்லை பார்வை!

இது தான் அறிவியக்கம் சார்ந்து இன்றைய பல தமிழர்களின் நிலை!

அதை யாழ் முகனூலிலும் என் சொந்த முகனூலிலும் பகிர்ந்தும்....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

அதை யாழ் முகனூலிலும் என் சொந்த முகனூலிலும் பகிர்ந்தும்....

நன்றி நிழலி, 
உயிர்/ ஆரோக்கியம் காக்கக் கூடிய தகவல்களைப் பகிர யாழ் நல்ல மேடை அமைத்துத் தருகிறது. அண்மையில் ஒரு கனேடிய வானொலி நேர்காணலில் யாழ் இணையத்தை இது குறித்துப் பெயர் குறிப்பிட்டிருந்தேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

😀

இங்கால எல்லாம் நல்லம் ஓவர்.

அங்கால நிலமை எப்படி ஓவர்.

நாங்கள் அனுப்பிய புதிய வைரஸ் பத்திரமாக வந்து சேர்ந்ததா ஓவர்.

🤣

ஆமாம் வெறும் ரெம்பிறேஜ்ஜர் சோதனையோடு உள் வந்தவர்களால் வந்த வினை என்று பேசிக் கொள்கிறார்கள்.நாமள் வெளிய போறது என்றால் 5 செக்குறிற்றிகார்டுட்க்கு பதில் சொல்ல வேணும் அதனாலயே வெளிய போவதில்லை..😆

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

நன்றி நிழலி, 
உயிர்/ ஆரோக்கியம் காக்கக் கூடிய தகவல்களைப் பகிர யாழ் நல்ல மேடை அமைத்துத் தருகிறது. அண்மையில் ஒரு கனேடிய வானொலி நேர்காணலில் யாழ் இணையத்தை இது குறித்துப் பெயர் குறிப்பிட்டிருந்தேன்! 

உண்மையில் யாழ் ஒரு சமூக பொறுப்புள்ள முன்னோடி தளம்தான்.

பேஸ்புக், டுவிட்டர்காரருக்கு சமூக பொறுப்புள்ள  ஊடகத்தை எப்படி நடத்துவது என்று பாடம் எடுக்கலாம்.

இத்தனைக்கும் தன்னார்வத்தால் மட்டுறுத்தபடும் களம். 👏🏾

4 minutes ago, யாயினி said:

ஆமாம் வெறும் ரெம்பிறேஜ்ஜர் சோதனையோடு உள் வந்தவர்களால் வந்த வினை என்று பேசிக் கொள்கிறார்கள்.நாமள் வெளிய போறது என்றால் 5 செக்குறிற்றிகார்டுட்க்கு பதில் சொல்ல வேணும் அதனாலயே வெளிய போவதில்லை..😆

5 செக்கூரிட்டியா? அப்ப ரதி அக்கா இல்லை, நீங்கள்தான் கமலா ஹாரிஸ் போல கிடக்கு🤣.

பாதுகாப்பாய் இருங்கள்🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2020 at 11:57, goshan_che said:

பிரான்சில் இருந்து வண்டி வருவது நிறுத்தம் என்பதால் சில பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்படலாம்

பிரான்ஸ் தனது எல்லையை மூடியதால் பிரிட்டன் பிரான்ஸ் எல்லையில் ரக்குகள் Truck குவிந்துபோய் உள்ளன தொலைகாட்சியில் காட்டினார்கள் சாரதிகள்  மிகவும் துன்பபடுகிறார்கள்.

நீங்கள் இருவரும் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களோ ஒருவரை ஒருவர் தோழர் என்கிறீர்கள் 😄

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பிரான்ஸ் தனது எல்லையை மூடியதால் பிரிட்டன் பிரான்ஸ் எல்லையில் ரக்குகள் Truck குவிந்துபோய் உள்ளன தொலைகாட்சியில் காட்டினார்கள் சாரதிகள்  மிகவும் துன்பபடுகிறார்கள்.

நீங்கள் இருவரும் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களோ ஒருவரை ஒருவர் தோழர் என்கிறீர்கள் 😄

ஓம். பாவங்கள் கிறிஸ்மசுக்கும் வீட்டுக்கு போக முடியாமல் தவிக்கிறார்கள்.

நான் மேட்டுக்குடி சம்பெயின் சோசலிஸ்ட்🤣

தோழர் புரட்சி பெயரிலேயே அனல் கக்குவாதல் உண்மையான கம்யூனிஸ்டாக இருக்க கூடும்.

அவரும் தோழர் என்றால் நானும் தோழர் என்கிறேன்.

யாரும் நாங்கள் இருவரும் லெபனான் போய் வந்த ஆக்கள் என்று நினைக்கட்டுமே🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22/12/2020 at 16:26, goshan_che said:

உண்மையில் யாழ் ஒரு சமூக பொறுப்புள்ள முன்னோடி தளம்தான்.

பேஸ்புக், டுவிட்டர்காரருக்கு சமூக பொறுப்புள்ள  ஊடகத்தை எப்படி நடத்துவது என்று பாடம் எடுக்கலாம்.

இத்தனைக்கும் தன்னார்வத்தால் மட்டுறுத்தபடும் களம். 👏🏾

ஒரு கதை சொல்லட்டா......😎

நான் அவதானித்த வரையில் நீங்கள் உங்களுக்குள் ஒரு கொள்கையை வகுத்து இருந்தாலும் பிற மாற்றுக்கருத்து கொள்கையுடையவர்களையும் மதித்து நடக்கும் மனிதராக தெரிகின்றீர்கள். அதனால் தான் எவ்வளவு குரோதங்கள் வந்தாலும் அடுத்த நிமிடம் ஏதோ ஒரு புள்ளியில் மீண்டும் இணைகின்றோம்..

கதைக்கு வருகின்றேன்....:cool:

மேலே இருவர் தாம் இணைத்த இணைப்புகள் மற்றவர்களால் உள்வாங்கப்படவில்லையென ஆதங்கப்பட்டிருந்தார்கள். உண்மைதான். ஏன் என்று அவர்கள் யோசித்தார்களாயின் பொறி உடனே தட்டியிருக்கும்.

இனித்தான் கதை....😁

உதாரணத்திற்கு ஒரு வகுப்பில் இரு ஆசிரியர்களை அவதானிப்போம்.
கணக்கு வாத்தியார் கந்தையா🧑🏽‍🏫
விஞ்ஞான வாத்தியார் பொன்னையா🧑🏽‍🔬

வகுப்பு மாணவர்களுக்கு கந்தையாவை நன்றாக பிடிக்கும்.பொன்னையாவை கண்ணிலையும் காட்டக்கூடாது.
கந்தையா வாத்தி வகுப்புக்கு வந்தவுடனை டேய் பொடியள் எப்பிடியடாப்பா இருக்கிறியள்? இண்டைக்கு  ஸ்கூல் வசுவிலை என்ன புதினம்? ஆரோடை உரஞ்சுப்பட்டனியள்?லவ் லெட்டர் எல்லாம் குடுத்துட்டியளோ? டேய் கடைசி வரிசையள் என்ன இண்டைக்கு  பின்னேரம் என்ன பிளான்? வாறகிழமை கமலகாசன்ரை படம் வருதாம் . எப்பிடியும் நீங்கள் இல்லாமல் படம் ஓடாது.தியேட்டரிலையாவது முன் வரிசையிலை இருங்கோடாப்பா எண்டு கலாய்ச்சு  கணக்கு பாடத்தை ஆரம்பிப்பார்.இடைக்கிடை மாணவிகளை எடியே என்னடி அங்காலை பாக்கிறாய் எண்ட நக்கல் அதட்டலுடன் கணக்கு பாடத்தை நடத்தி முடிப்பார். கணக்கு பாடம் மண்டையிலை ஏறாததுகளும் விரும்பி சிரத்தையுடன் படிக்குங்கள்.

விஞ்ஞான வாத்தி பொன்னையா எண்டால்  பொடியளுக்கு ஹிட்லரை பார்த்தமாதிரி....மாணவர்களிடம் ஒரு சினேகபூர்வம் இல்லை. மாணவர்களிடம் மனம் விட்டு உரையாடமாட்டார்.முகத்தில் சிரிப்பும் இல்லை புன்னகையும் இல்லை.மாணவர்களுக்கு விளாங்காவிட்டால்  மண்டைக்குள் களிமண்,கொப்பர் என்ன வேலை செய்கிறார்,நீ எந்த ஊர், என்ற சம்பந்தமில்லாத கேள்விகள். பாடத்தில் பிழை விட்டால் செம்மறி,மோடு என மொளிக்கு மொளி அடிமட்டத்தால் அடி...வாத்தி பொன்னையாவை அந்த மாணவர்கள் எங்கும் சந்தோச முகத்துடன் காணவேயில்லை. கோவில் திருவிழாக்களில்  கூட...

 ஒருவருக்கு ஆயிரம் விடயங்கள் தெரிந்தாலும் அவர் முதலில் தன்னை மக்களுடன் எப்படி முகம் கொடுக்க வேண்டும் என பழக வேண்டும்.அதை விடுத்து  நான் அரசன் என்றோ நான் எல்லாம் அறிந்தவன் என்ற தொனியில் அறிவுரை சொன்னால் யாருமே திருப்பிப்பார்க்க மாட்டார்கள். பொன்னும் அமிர்தமும் கொடுத்தால் கூட கிட்ட வரவும் மாட்டார்கள் மதிக்கவும் மாட்டார்கள்..

நீங்கள் நாலு பேரை மதித்தால் தான் அவர்களும் வருவார்கள் பார்ப்பார்கள்.கேட்பார்கள் மதிப்பார்கள் ஏதாவது சொல்வார்கள். இல்லையேல் நீங்களும் செத்த பிணத்திற்கு சமம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நன்றி 🙏🏾

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.