Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீரற்ற ரத்த அழுத்தம்: ரஜினிகாந்த் அப்பல்லோவில் அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற ரத்த அழுத்தம்: ரஜினிகாந்த் அப்பல்லோவில் அனுமதி!

spacer.png

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த அண்ணாத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரமாக ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் படப்பிடிப்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ரஜினிக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தது. எனினும் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திகொண்டார். அவர் சென்னை வந்து தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் திடீரென ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்த் இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக ஐதராபாத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்தார். அங்கு ஒருசிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ரஜினிகாந்துக்கு 22ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகு ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், அவரை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்” என்று கூறப்பட்டது.

மேலும், “ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதுவுமில்லை. ரத்த அழுத்தத்தில் கடுமையான ஏற்ற இறக்கம் இருந்ததன் காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்த அழுத்தப் பிரச்சினை தீரும் வரை மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு, அதன்பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். சீரற்ற ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர அவருக்கு வேறெந்த பிரச்சினையும் இல்லை” எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ரஜினிகாந்த் நலம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
 
https://minnambalam.com/politics/2020/12/25/27/actor-rajinikanth-is-admitted-in-Hyderabad-Apollo-hospital

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாச்சும் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருப்பார்..இரத்த அழுத்தம் போலும்...சும்மாா..😁

.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

அட செய்தி இணைக்கப்பட்டு உள்ளது 

இனி ரஜனித்தாத்தா அவ்வளவுதான் அப்பலோ கொஞ்சநாளைக்கு வைத்து பணம் கறந்துவிட்டு  சங்கு ஊதுவான் .

  • கருத்துக்கள உறவுகள்

நலம் பெற வாழ்துகள்.

நான் திண்ணையில் சொன்னது போல் அடிக்கடி தலை சுத்திரிச்சின்னு தலை சொல்லும் போதே கவனித்து இருக்க வேண்டும். ரத்த அழுத்ததிற்கு இதுவும் ஒரு அறிகுறி.

விரைவில் ரஜனி இட்லி சாப்பிட்ட அப்டேட் வரக்கூடும்.

ரஜனி ரசிகர்கள் கூட பெரும்பாலானோர் இப்போ இந்த உபாதைகள் தாக்கும் வயசுக்கு வந்து விட்டார்கள். தலிவரை நினைத்து கலங்காமல் அவர்களும் நேரத்துக்கு மருத்து மாத்திரைகளை எடுக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

ரஜனி ரசிகர்கள் கூட பெரும்பாலானோர் இப்போ இந்த உபாதைகள் தாக்கும் வயசுக்கு வந்து விட்டார்கள். தலிவரை நினைத்து கலங்காமல் அவர்களும் நேரத்துக்கு மருத்து மாத்திரைகளை எடுக்க வேண்டும்.

அவர்கள் எப்பவோ எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.😁

Bild

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் நலம் பெறவெண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அட செய்தி இணைக்கப்பட்டு உள்ளது 

இனி ரஜனித்தாத்தா அவ்வளவுதான் அப்பலோ கொஞ்சநாளைக்கு வைத்து பணம் கறந்துவிட்டு  சங்கு ஊதுவான் .

நாலு இட்லிக்கு நாற்பது லட்சம் ரூபாய் கறக்க முயற்சிப்பார்கள். ஆனால் ரசனிகாந்த் அதைக் கட்ட வேண்டுமே.. 😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம வயதில் நானும் ஒரு தீவிர ரஜனி ரசிகர் 
தலைமுடி எல்லாம் தலைவரைப்போலவே வெட்டுவேன் 
வீட்டை தாண்டி ஒரு 100-200 மீட்டர் தூரத்தில் சயிக்களை 
நிற்பாட்டி சேடடை எடுத்து கீழே முடிந்துவிட்டுதான் போவேன் 
அதுபோல திரும்பி வரும்போதும் நிற்பாட்டி முடிச்சு அவிழ்த்துவிடுவேன். 

ஒருநாள் அம்மா கோவிலுக்கு வரும் நோக்கம் இருக்கவில்லை 
ஆதலால் வரமாட்டார் என்று எண்ணி என்னுடைய கிராஸும் வரும் என்பதால் 
சேடடை எடுத்து முடிந்து விட்டு ஸ்டையில்லாக சென்றேன் 
பின்பு அம்மன் தரிசன வழிபாட்டு ஆரவாரத்தில் அம்மா வந்திருந்தார் 
நான் முடிச்சை மறந்துவிட்டேன் ....... பூசை முடிந்ததும் அம்மா வந்து வீட்டுக்கு 
வரும்படி சொல்லிவிட்டு சென்றார் ... அப்போதே எனக்கு கொஞ்சம் புரிந்தது 
வீடு போனதும் நல்ல பூசை .....இந்த பாழ்ப்படுவானால் எப்படி எத்தனை பேர் 
வீடுகளில் வேண்டி கட்டினீர்களோ தெரியவில்லை.

(இயக்கத்துக்கு போட்டுவந்த பிறகும் வேண்டிய அடி  என்பதால் எளிதாக மறக்க முடியவில்லை) 

தலைவர் அரசியலைவிட்டு விட்டு 
காஜலிசம் பழகினாலே இறைவனை கண்டு 
தனது முதுமை காலத்தை அமைதியாக வாழலாம் 
நலம்பெற வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நலம் பெற வாழ்துகள்.

நான் திண்ணையில் சொன்னது போல் அடிக்கடி தலை சுத்திரிச்சின்னு தலை சொல்லும் போதே கவனித்து இருக்க வேண்டும். ரத்த அழுத்ததிற்கு இதுவும் ஒரு அறிகுறி.

விரைவில் ரஜனி இட்லி சாப்பிட்ட அப்டேட் வரக்கூடும்.

ரஜனி ரசிகர்கள் கூட பெரும்பாலானோர் இப்போ இந்த உபாதைகள் தாக்கும் வயசுக்கு வந்து விட்டார்கள். தலிவரை நினைத்து கலங்காமல் அவர்களும் நேரத்துக்கு மருத்து மாத்திரைகளை எடுக்க வேண்டும். 

கண்டிப்பாக அப்பாவி ரசிகர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.அவர்களும் நலமாக வாழ வேண்டும்.பாவங்கள் அறியாமையினால் போஸ்ரருக்கு பால் ஊத்துங்கள் தங்களை தாங்களே தண்டிப்பார்கள் இவை அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Maruthankerny said:

பதின்ம வயதில் நானும் ஒரு தீவிர ரஜனி ரசிகர் 
தலைமுடி எல்லாம் தலைவரைப்போலவே வெட்டுவேன் 
வீட்டை தாண்டி ஒரு 100-200 மீட்டர் தூரத்தில் சயிக்களை 
நிற்பாட்டி சேடடை எடுத்து கீழே முடிந்துவிட்டுதான் போவேன் 
அதுபோல திரும்பி வரும்போதும் நிற்பாட்டி முடிச்சு அவிழ்த்துவிடுவேன். 

ஒருநாள் அம்மா கோவிலுக்கு வரும் நோக்கம் இருக்கவில்லை 
ஆதலால் வரமாட்டார் என்று எண்ணி என்னுடைய கிராஸும் வரும் என்பதால் 
சேடடை எடுத்து முடிந்து விட்டு ஸ்டையில்லாக சென்றேன் 
பின்பு அம்மன் தரிசன வழிபாட்டு ஆரவாரத்தில் அம்மா வந்திருந்தார் 
நான் முடிச்சை மறந்துவிட்டேன் ....... பூசை முடிந்ததும் அம்மா வந்து வீட்டுக்கு 
வரும்படி சொல்லிவிட்டு சென்றார் ... அப்போதே எனக்கு கொஞ்சம் புரிந்தது 
வீடு போனதும் நல்ல பூசை .....இந்த பாழ்ப்படுவானால் எப்படி எத்தனை பேர் 
வீடுகளில் வேண்டி கட்டினீர்களோ தெரியவில்லை.

(இயக்கத்துக்கு போட்டுவந்த பிறகும் வேண்டிய அடி  என்பதால் எளிதாக மறக்க முடியவில்லை) 

தலைவர் அரசியலைவிட்டு விட்டு 
காஜலிசம் பழகினாலே இறைவனை கண்டு 
தனது முதுமை காலத்தை அமைதியாக வாழலாம் 
நலம்பெற வாழ்த்துக்கள் 

🤣 ரஜனியில் தொடங்கி காஜலில் முடிவதுதான் வாழ்க்கை🤣

எனக்கு தெரிந்த ஒருவர், சலூன் அண்ணாவிடம் வேண்டி, நல்லா இருந்த தலைமுடியை சொட்டை விழுமாப்போல் இரெண்டு பக்கம் shave எடுத்தவர் 😀.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 ரஜனியில் தொடங்கி காஜலில் முடிவதுதான் வாழ்க்கை🤣

எனக்கு தெரிந்த ஒருவர், சலூன் அண்ணாவிடம் வேண்டி, நல்லா இருந்த தலைமுடியை சொட்டை விழுமாப்போல் இரெண்டு பக்கம் shave எடுத்தவர் 😀.

தலைவைரைபோல....
 மார்பில் தூங்கி மோட்ஷம் அடையவேண்டும்
 என்ற எண்ணம் அப்பவே வந்தது 
மார்பு + மோட்ஷம் = காஜலிசமாகி போனது 

See the source image

  • கருத்துக்கள உறவுகள்

நலம்பெற வேண்டுகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

தலைவைரைபோல....
 மார்பில் தூங்கி மோட்ஷம் அடையவேண்டும்
 என்ற எண்ணம் அப்பவே வந்தது 
மார்பு + மோட்ஷம் = காஜலிசமாகி போனது 

See the source image

மார்பில் வேண்டும் என்றால் தூங்கலாம். மோட்சம் - அப்போலாவின் கையில்தான் இருக்கு🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

வயசு போன நேரத்துல உன்னிய மாட்டிவிட பாத்தான் பிஜேபி.. நீ நேரா போய் ஆஸ்பிட்டல்ல படுத்திகிட்டு பிஜேபிக்கு வச்சுருக்கா டிவிட்டு..

  • கருத்துக்கள உறவுகள்

கண்றாவியள் எந்த இடத்தில எந்தப் படத்தை கெnhண்டு போய் ஒட்டுறது என்ற விவஸ்தையே இல'லயா......😆

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த் உடல்நிலை: ஹைதராபாத் மருத்துவமனையில் இன்று மீண்டும் பரிசோதனை

25 டிசம்பர் 2020, 08:19 GMT
புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்
நடிகர் ரஜினி காந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நடிகர் ரஜினி காந்த் - கோப்புப் படம்.

படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த், ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட சீரற்ற நிலை காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவத்துள்ளனர்.

அவரது உடல் நிலை தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு மருத்துவர்கள் கூறுகையில், "ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. இன்றிரவு மருத்துவமனையில் அவர் தங்கியிருப்பார். நாளை (சனிக்கிழமை) அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அவருக்கு பரிசோதனைகள் செய்யப்படும். தற்போதைக்கு அவர் ஓய்வெடுத்து வருகிறார்" என்று தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறித்து கேள்விப்பட்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ரஜினிகாந்த் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் அவரைப் பார்க்க யாரும் வர வேண்டாம் என்று அவரது குடும்பத்தினரும், மருத்துவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக, ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவலையறிந்து ஹைதராபாதில் உள்ள அவரது ரசிகர்கள் மருத்துவமனை வெளியே திரண்டு வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவலை அந்த மருத்துவமனை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. அவரது உடல்நிலை தொடர்பாக அந்த மருத்துவமனை பிற்பகலில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தற்போது ரஜினிக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏதும் இல்லையென்றாலும் அவருடைய ரத்த அழுத்தத்தில் ஏற்றத் தாழ்வு காணப்படுவதாகவும் அது தொடர்பாக மேலும் பரிசோதனைகளை செய்ய வேண்டியிருப்பதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை விடுத்த செய்திக் குறிப்பு

பட மூலாதாரம்,APOLLO HOSPITALS

படக்குறிப்பு,

ரஜினி உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை விடுத்த செய்திக் குறிப்பு.

ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வைத் தவிர, ரஜினிக்கு வேறு பிரச்னைகள் இல்லை என்று அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ஆந்திர நடிகர் பவன் கல்யாணும் ரஜினியின் உடல் நிலை தொடர்பாக அங்குள்ள மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களை விசாரித்ததாக தெரிவித்துள்ளார். ரஜினி விரைவில் உடல் நலன் பெற பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அண்ணாத்த படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அண்ணாத்தே என்ற படத்தில் நடித்துவருகிறார். கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்த பிறகு, அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் மீண்டும் துவங்கியது. இதற்காக தனி விமானத்தில் அவர் ஹைதராபாத் சென்று, படப்பிடிப்பில் பங்கேற்றார்.

இந்த நிலையில், அந்தப் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பர் 22ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

தற்போது 70 வயதை நிறைவுசெய்திருக்கும் ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் கட்சி ஜனவரி மாதம் எந்த தேதியில் தொடங்கப்படும் என்று டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்போவதாக கூறியிருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது? - அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை

superstar Rajinikanth health

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை 10:30 மணிக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று இருந்ததைவிட அவரது ரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலும், அது வழக்கத்திற்கு அதிகமான அளவில் இருப்பதால் அவருடைய இரவு அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் எதுவும் அபாயகரமான எதையும் வெளிக் காட்டவில்லை என்றும் அந்த செய்தி குறிப்பில் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

ரஜினிகாந்துக்கு இன்று அப்பல்லோ மருத்துவமனை மேலும் அதிக உடல்நல பரிசோதனைகளை செய்ய உள்ளது. அவற்றின் முடிவுகள் இன்று மாலை வெளியாகும்.

ரஜினிகாந்த் தொடர்ந்து நெருக்கமாக கண்காணிக்கப்படுவார், அவரைப் பார்க்க வருகை தருபவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலதிக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்தம் எந்த அளவு கட்டுப்பாட்டுக்கு வருகிறது என்பதைப் பொருத்து ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்றைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம் 

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்துவருகிறார். கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்த பிறகு, அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் மீண்டும் துவங்கியது. இதற்காக தனி விமானத்தில் அவர் ஹைதராபாத் சென்று, படப்பிடிப்பில் பங்கேற்றார்.

டிசம்பர் 31ம் தேதி கட்சி எப்போது தொடங்கப்படும் என அறிவிக்கப்போவதாக கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 

டிசம்பர் 31ம் தேதி கட்சி எப்போது தொடங்கப்படும் என அறிவிக்கப்போவதாக கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில், அந்தப் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பர் 22ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

தற்போது 70 வயதை நிறைவுசெய்திருக்கும் ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் கட்சி ஜனவரி மாதம் எந்த தேதியில் தொடங்கப்படும் என்று டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்போவதாக கூறியிருந்தார்.
 
https://www.bbc.com/tamil/india-55451243

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவு சென்னை திரும்பும் ரஜினிகாந்த்

spacer.png

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த், இன்று மாலை சென்னை திரும்புவதாக தகவல் வந்துள்ளது.

சென்னையில் டிசம்பர் 12 அன்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த், அடுத்த நாள் சென்னை விமான நிலையத்தில் இருந்து 25 பேர் பயணிக்கக் கூடிய ஸ்பைஸ் விமானத்தில், படக் குழுவினர் 24 பேருடன் ஐதராபாத் சென்றார். கட்சி ஆரம்பிக்கவுள்ளதால் தீவிரமாக படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

படப்பிடிப்பு குழுவினருக்கு வழக்கமாக எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் காலை ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக மூன்று நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி, 7.30 மணிக்கு ஐதராபாத்தில் இன்டிகோ விமானத்தில் புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். சென்னை போயஸ் கார்டன் வீட்டில் அவர் தனிமைப் படுத்திக்கொள்ள இருப்பதாக சொல்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டன என்றும் அவற்றில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன், இன்று மதியம் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர் டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://minnambalam.com/politics/2020/12/27/44/rajinikanth-return-chennai-and-quarantine

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துபாய் மெயின்ரோட்டுல இருந்து வந்து இருக்கேன் சூப்பர் ஸ்டார் வெளியவாங்க ......

Bild

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

துபாய் மெயின்ரோட்டுல இருந்து வந்து இருக்கேன் சூப்பர் ஸ்டார் வெளியவாங்க ......

Bild

முந்தி மகளிர் அணியில் இப்படி ஒரு குரூப்பை ஜெயா ரெடிமேடா குறுகிய நேரத்தில் சென்னையின் எந்த பகுதிக்கும் போகும் படி தயார் நிலையில் வைத்து இருப்பார்.

ஒரு சமயம் சுப்ரமண்ய சாமி ஜெயாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துவிட்டு வெளியேவர, கோர்ட் வாசலில் காத்திருந்த அணியினர்………

மிகுதி வயது வந்தவர்களுக்கு மட்டும்……🤣

3 minutes ago, goshan_che said:

முந்தி மகளிர் அணியில் இப்படி ஒரு குரூப்பை ஜெயா ரெடிமேடா குறுகிய நேரத்தில் சென்னையின் எந்த பகுதிக்கும் போகும் படி தயார் நிலையில் வைத்து இருப்பார்.

ஒரு சமயம் சுப்ரமண்ய சாமி ஜெயாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துவிட்டு வெளியேவர, கோர்ட் வாசலில் காத்திருந்த அணியினர்………

மிகுதி வயது வந்தவர்களுக்கு மட்டும்……🤣

அந்த மிகுதி எப்ப வரும். 😆

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.