Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொனோக்கோ 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monaco, the Second Smallest Country in the World - YouTube

Maybe Too Blonde - A Life In Europe: Moon Over Monaco

யாழ் இனிது, குழல் இனிது என்பார், தம் மக்கள் மழலை சொல் கேளாதோர். என்பது பழ மொழி. 

புது மொழி என்ன என்றால், சிங்கப்பூர் என்பார், துபாய் என்பார், மொனோக்கோ அறியாதோர்.

Is Monaco A Country? - WorldAtlas

உலகில் மிகவும் அதிக விலை கூடிய ஹோட்டல் ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், ஓ அதுவா, டுபாயில் உள்ள 7 நச்சத்திர ஹோட்டல், ஒரு இரவுக்கு $7,500 வசூலிக்கிறார்களாமப்பா என்று சொல்வதை கேட்ப்போம்.

15 wild facts about Monaco, where 32% of residents are millionaires -  Business Insider

ஹோட்டல் டீ பாரிஸ் என்னும் மொனோக்கோ ஹோட்டலின், றோயல் சூட்டின் ஒரு நாள் இரவுக்கு, 35,000 யூரோ வசூலிக்கிறார்கள். 

Hôtel de Paris Monte-Carlo from £108. Monaco Hotels - KAYAK

HOTEL DE PARIS

Hotel de Paris, Monte Carlo, Monaco

இந்த ஹோட்டலின் முன்னே உள்ள கார் பார்க்கில் இடம் கிடைப்பதில்லை. இருக்கும் இடத்தில், காரை பார்க் செய்து, பக்கத்தில் நின்று பந்தாவாக படம் எடுக்க, பெரும் தொகை செலவழிக்கிறார்கள்.... பந்தா  பணக்கார்கள். அதாவது, இங்கே தங்கி இருக்கிறேன் என்று பீலா காட்டி, முகப்புத்தகத்தில், போட வேண்டுமே.

உலகின் பெரும் பணக்கார்களின் சொர்க்கபுரி, மொனோக்கோ. 2 சதுர கிலோ மீட்டருக்கு குறைவான பரப்பளவை கொண்ட மிக சிறிய ஒரு இளவரசரகம் தான் மொனோக்கோ. இது உலகின் இரண்டாவது சிறிய நாடாகும்.

மூன்று பக்கமும் பிரான்ஸ் தேசத்தினையும், ஒரு பக்கம் கடலினாலும் சூழப்பட்டது இந்த நாடு.

Monaco

சில வருடங்களுக்கு முன்னர் வரை, ஓய்வு பெற்ற அல்லது வயதான பணக்காரர்களின் ஓய்வு மையமாக விளங்கிய இந்த சிறிய நாட்டினை, இளம் பணக்காரர்களை கவரும் ஒரு நாடாக  மாத்துவதில் பெரும் வெற்றி  கண்டுள்ளார், இப்போது ஆளும் இளவரசர். யூடூப்பில் முகப்புத்தகத்தில் பணம் குவிப்பவர்கள், இப்போது இங்கே தான் பொழுதினை போக்குகிறார்கள். காசும் வருகிறது. வாழ்வை அனுபவிப்பதும் ஆகிறது.

உலகின் மிக சிறந்த, கார்கள், ஹெலிகொப்டர்கள், உல்லாச கப்பல்கள் எல்லாம் இங்கே உள்ளது.

Succession law revolution in Monaco

இந்த நாட்டில், பெரும் பணக்கார்கள் அடிக்கும் கும்மாளம், வெட்டி செலவுகள், தள்ளிக் கொண்டு வரும் அழகிகள், அழகர்கள்  குறித்து வெளியே செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ளவதே இந்த இளவரசகத்தின் கவர்ச்சி ரகசியம். 

SIAM 2018: Revisiting Monaco's Luxury Car Show

முக்கியமாக, பணக்கார விதவைகள் பண்ணும் அலம்பறைகள் சொல்லி மாளாது. தினமும் ஒரு பாய்...   

ஒரு பப்பராசி கிடையாது. அதாவது ஒருவர் அரச அனுமதி இன்றி படம் பிடிக்க முடியாது. அப்படி படம் பிடித்து, அதனை ஏதாவது பத்திரிகை போட்டு விட்டால், அந்த பத்திரிகை, மொனோக்கோ நாட்டினுள் வரவே முடியாது என்பதால், பப்பராசிகளுக்கு பிரயோசனம் இல்லை. படம் எடுத்து, மாட்டினால், சிறை. நிரந்தர தடை.

அதேவேளை, உல்லாசப்பயணிகள், தம்மை படம் பிடித்துக் கொள்ளலாம். அவர்கள் தாம் அங்கே இருப்பதை தம்பட்டம் அடிக்க வேண்டும் என்பதால் அது பிரச்சனை இல்லை.

Luxury cars in Monaco - such a beautiful place | Worldwide photography,  Monaco, Monte carlo

அதிக விலையில் மது இங்கே விற்பனை ஆகின்றது. ஒரு போத்தல் மது வியாபாரத்தில், ஆக குறைந்தது 5,000 யூரோ வரி மட்டும் இளவரசரின் அரசுக்கு போகின்றது என்றால், விலையினை பார்த்துக் கொள்ளுங்கள். அரசின் முழு வருமானமும், 20% சேவை வரி மூலமே வருகிறது.

இங்கே வருமான வரி இல்லை என்பது, முக்கியமான விடயம். இதுவே பெரும் பணக்காரர்கள் இங்கே தங்கி இருக்க காரணம். முக்கியமாக யூடூப்பில் முகப்புத்தகத்தில் பணம் குவிப்பவர்கள், இங்கே இருந்து தொழில் செய்ய விரும்பும் காரணமும் அதுவே.

நாட்டின் குடிமக்கள் 8,000 பேர்கள். இந்த குடிமக்களின் வம்சமே பிரயாஉரிமையினை  பெறுவதற்கு உரிமை உள்ளவர்கள். நாட்டின் சனத்தொகை 37,000. இவர்களில் பெரும்பாலானோர் உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள். அங்கே தங்க, வதிவிட உரிமை பெறுவதும், அவர்களது பின்னணி குறித்தும், (போதை பொருள் கோஸ்ட்டிகளுக்கு  இடமில்லை), பண இருப்பு குறித்தும் விபரங்கள் அறிந்தே வழங்கப்படும். ஆக குறைந்தது, ஒரு மில்லியன் யூரோ, மொனோகாவில் உள்ள வங்கியில் எப்போதும் இருக்க வேண்டும்.

இரண்டாம் ஆல்பர்ட் இளவரசரே, நாட்டினை நிருவகிக்கின்றார். விளையாட்டில் ஆர்வமிக்க இவர், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற, தென் ஆப்பிரிக்காவின் நீச்சல் வீராங்கனை ஒருவரை, 2011ல்  திருமணம் செய்துள்ளார்.

large.Albert.jpg.fa6eaab6d067e7fd24f32f6ad8dceab5.jpg

2005ல் இளவரசரின் தந்தையார், இளவரசர் ரெய்னர் இறப்புக்கு பின்னர், இவர் பதவிக்கு வந்தார். 7 நூறாண்டுகளாக ஆட்சி செய்யும், கில்மாடி வம்சத்தின் 32வது வாரிசே இவராவார்.

1955 ஆண்டில் நடந்த கேய்ன்ஸ் திரைப்பட விழாவில், கலந்து கொண்ட, ஆஸ்கார் பரிசினை வென்றிருந்த அமேரிக்க நடிகை கிரேஸ்  கெல்லி என்னும் பெண்மணியே இவரது தயாராவார். இந்த விழாவிலேயே, தந்தையும், தாயும் கண்டு காதல் கொண்டனர். 

large_GR.jpg.e3660e6f9fd68e5f2eed92dc2c918df0.jpg

இவரது தாயார் மேலே  நாட்டு மக்கள் பெருமதிப்பு வைத்திருந்தனர். ஒரு கார் பந்தயத்தில், தனது 52வது  வயதில், அந்த பெண் இறந்து போனது சோகம்.

தாயின் மீது பேரன்பு கொண்ட  இளவரசர்  அண்மையில்  செய்த அரசியல் அமைப்பு மாறுதல் மூலம், எதிர்காலத்தில், இளவரசிகளும் ஆள முடியும்.

நாட்டின் குடியுரிமை, வெளிநாட்டில் பிறந்த யாருக்காவது கொடுப்பதனால், அந்த விண்ணப்பம், இளவரசரின் நேரடி பரிசோதனைக்கு போகும். இலகுவான விவகாரம் இல்லை. மேலும், அனுமதிக்கப்படும் விண்ணப்பங்களை இளவரசரின் கையெழுத்து இருக்கும். அதாவது, யார், யார், தனது நாட்டு பிரியைகள் ஆகின்றனர் என்பது இளவரசரின் முடிவு.

அடுத்த வருசம் 2022 முதல், நானும் அங்கேயே செட்டில் பண்ணலாம் எண்டு இருக்கிறன். விரும்பின வேறேயாராவது இருக்கிறீயளே?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, Nathamuni said:

அடுத்த வருசம் 2022 முதல், நானும் அங்கேயே செட்டில் பண்ணலாம் எண்டு இருக்கிறன். விரும்பின வேறேயாராவது இருக்கிறீயளே?

என்ரை பிளான் முழுக்க கைலாசாவை நோக்கித்தான்......:cool:

மீண்டும் சர்சையில் சிக்கிய பிரபல சாமியார் நித்யானந்தா - கசிந்தது வீடியோ -  Today Jaffna News - Jaffna Breaking News 24x7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ரை பிளான் முழுக்க கைலாசாவை நோக்கித்தான்......:cool:

மீண்டும் சர்சையில் சிக்கிய பிரபல சாமியார் நித்யானந்தா - கசிந்தது வீடியோ -  Today Jaffna News - Jaffna Breaking News 24x7

நீங்கள் மெயின் பொயின்டை நெருங்கிட்டியள்....

கைலாச நித்தியர் அங்கை தான் செட்டில்..... அவருக்கு ஸ்பெஷல் சிட்டிசன் கொடுத்தாச்சு. வேற விபரம் வேணுமெண்டால், தனி மடல் பிளீஸ்.... 

மைக் வைச்சிருக்கிற ஆளை... கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, ஆண்டாள் விசயத்தில் திட்டின மாதிரி.... நாலு தூசண  வார்த்தை சொல்ல சொல்லி, கேட்டு, செவி இன்புற்று இருக்க ஆசை. வேற ஆசை கிடையாது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நல்லதொரு ஆக்கம் நன்றி தோழர் ..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சின் நீஸ் பகுதியில் இருந்து 1.5 யூரோ செலவில் பஸ்சில் ஏறி காலையில் போய், சுத்தி பார்த்து, மாலை திரும்பலாம்.

ஜாலியாக சுத்திப்பார்த்து வரலாம். ஆனால், செலவாக இருக்கும் என்று  பிரான்சில் இருந்து, தண்ணி போத்தல், சாண்விச், சாப்பாடு கொண்டு போக்கவேண்டியதில்லை.

நம்ம லெவலுக்கு, மக் டொனால்ட் இருக்கிறது.... ஆனால், அங்கே சாப்பிட்டேன் என்று பீலா விடாமல், ஏதோ, நம்ம வசதிக்கு, ஹோட்டல் டீ பாரிஸில் ஒரு பிளைன் டீயை வாங்கி குடிச்சேன் என்று அடக்கமாக சொல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான பதிவு நாதம்ஸ்...... அட நம்ம வீட்டில் இருந்து கால் நீட்டிற இடத்தில்தான் இருக்கு ஆனால் எனக்குத் தெரியவில்லை.பிரபல விளையாட்டு வீரர்கள் எல்லாம் அங்கு போய் குடியும் குடித்தனமுமாக வாழ்ந்திட்டு வாறது  பற்றி அறிந்திருக்கின்றேன்..... பாப்பம் நீஸ் சுக்கு சென்று சாத்திரியாரையையும் கூட்டிக்கொண்டு போய் கோப்பி குடிச்சுட்டு வரத்தான் இருக்கு......!   😂

மோனாக்கோவின் அழகை விட உங்கள் வர்ணனை அழகாக உள்ளது நாதமுனி. உண்மையில் மிக மிக அழகான சொர்க்கம் அது. நீங்கள் கூறியது போல் அங்கு தங்க முடியாது. எல்லையை அடுத்து பிரான்ஸில் தான் ஹோட்டேல் பார்கக வேண்டும்.  ஆனால் கோடைகாலத்தில் மாலை பொழுதுகளில் மொனாக்கோவின் 🇲🇨   அழகை ரசிப்பது அலாதியான இன்பம். 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை சென்றதில்லை அநேகமானவை பாரீஸ் நகரில் கிடைப்பதாலும் விரலுக்கு ஏற்ப வீக்கம் இருக்கணும் என்ற எனது கோட்பாடும்  அமைதி தேடி மட்டுமே விடுமுறையில் செல்வதும் காரணமாக இருக்கலாம்? 

ஆனால் பார்க்க வேண்டிய இடம். போன ஆவணியில் கூட பக்கத்தில் தான் நின்றிருந்தேன். மக்கள் கேட்டார்கள் எட்டி பார்த்திட்டு வருவோமா என. போனால் 2 கிழமை ஆவது தங்கியிருந்து பார்க்கணும். 

பார்க்கலாம். 

நன்றி பதிவுக்கு நாதா. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Nathamuni said:

நீங்கள் மெயின் பொயின்டை நெருங்கிட்டியள்....

கைலாச நித்தியர் அங்கை தான் செட்டில்..... அவருக்கு ஸ்பெஷல் சிட்டிசன் கொடுத்தாச்சு. வேற விபரம் வேணுமெண்டால், தனி மடல் பிளீஸ்.... 

மைக் வைச்சிருக்கிற ஆளை... கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, ஆண்டாள் விசயத்தில் திட்டின மாதிரி.... நாலு தூசண  வார்த்தை சொல்ல சொல்லி, கேட்டு, செவி இன்புற்று இருக்க ஆசை. வேற ஆசை கிடையாது. 

இடம் நல்ல இடம். பண முதலைகளும், மாஃபியாக்களும் குடியேறி இருக்கும் இடம். கோடி கோடியாக பணம் உள்ளவர்களுக்கு சொர்க்க புரி.

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ்....   நல்ல வர்ணனையுடன் கூடிய அழகிய கட்டுரை. 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

மக் டொனால்ட் இருக்கிறது

குறைந்த வருமானம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்.

அல்லது, மக்கில் வேலை செய்பவர்கள், அண்டிய  பிரான்ஸ் பிரதேசத்தில் வாழ வேண்டும்?  

ஆனால், மொனாகோ ஓர் இறைமையுள்ள அரசு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

திரிக்கு (மொனாகோ) தொடர்பு இல்லாதது ஆயினும், ஜெனீவா உம் இத்தகைய பிரச்சனைக்கு இடம் கொடுத்தது.

அதாவது, ஜெனீவா செல்வந்த இடம், ஆனால், உணவிற்றகாக food bank இல் தங்கி இருப்பவர்கள் தொகை வெளியில் தெரியாதவாறு இருக்கிறார்கள். 

கொரானா அவர்களின் எண்ணிக்கையை காட்டி விட்டது.

ஜெனீவா தாற்றபோது, மாதம் £3500 ஐ சட்ட அடிப்படையிலான வருமானமாக சர்வசன வாக்கெடுப்பு மூலம் பிரகடனப்படுத்தி உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்

"அதிக விலையில் மது இங்கே விற்பனை ஆகின்றது. ஒரு போத்தல் மது வியாபாரத்தில், ஆக குறைந்தது 5,000 யூரோ வரி மட்டும் இளவரசரின் அரசுக்கு போகின்றது என்றால், விலையினை பார்த்துக் கொள்ளுங்கள். அரசின் முழு வருமானமும், 20% சேவை வரி மூலமே வருகிறது."

நல்ல ஆக்கம் 
வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்காமல் 
சொல்லவந்ததை சுருக்கமாகவும் சொல்லவேண்டியதை 
சொதப்பாமலும் சொல்லி இருக்கிறீர்கள்.

மது போத்தல் வரி உண்மையா?
சம்பெயின் போன்ற வற்றுக்கா எல்லாத்துக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை நாதம்.

எமது வகுப்பு தோழர்கள் ஒரு 8 பேர் வருடம் ஒருதரம் 3 நாள் சுற்றுலா போல போவது வழக்கம். 

2020 இல் நீசை தேர்ந்தெடுத்தோம் பணம் சேகரித்து கொண்டிருக்கும் போதே கொரோனா வந்து குதித்துவிட்டது.

உங்கள் கட்டுரையை வாசித்த பின் அடுத்தமுறை டே டிரிப்பாக மொனோகொவையும் சேர்க்கும் எண்ணம் வந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

மது போத்தல் வரி உண்மையா?
சம்பெயின் போன்ற வற்றுக்கா எல்லாத்துக்குமா?

Cost of living in Monaco is 71.13% higher than in United Kingdom (aggregate data for all cities, rent is not taken into account).

Rent in Monaco is, on average, 726.23% higher than in United Kingdom.

Government subsidies the rent for the local people. So if a foreigner pays $8,000 for an apartment, the local will pay $800

2 hours ago, goshan_che said:

உங்கள் கட்டுரையை வாசித்த பின் அடுத்தமுறை டே டிரிப்பாக மொனோகொவையும் சேர்க்கும் எண்ணம் வந்துள்ளது.

வந்தா, நம்ம வீட்டில சாப்பிட்டு தான் போகணும்.... இல்லாட்டி, நிழலி, ஓடியாந்து, திரி பூட்டிற  அளவுக்கு சண்டை நடக்கும்.... சொல்லியாச்சு... 

4 hours ago, Kadancha said:

ஜெனீவா செல்வந்த இடம், ஆனால், உணவிற்றகாக food bank இல் தங்கி இருப்பவர்கள் தொகை வெளியில் தெரியாதவாறு இருக்கிறார்கள். 

ஜெனீவாவிலை வருமான வரி கட்டொணும் எல்லே. எனக்கென்ன விசரே, அங்கை வந்து வரியை கட்ட?

அங்கே வேலை செய்யும் நடுத்தர மக்களுக்கு என்று உணவகங்கள் உண்டு. பிரான்சில் இருந்து காலை அல்லது மாலை வேலைக்கு வந்து போவார்கள்.

இந்த நாட்டுக்கு அண்மைய விமான நிலையம் நீஸ். அங்கிருந்து ஒரு ஹெலியிலை தான், நான் போறது....

7 hours ago, விசுகு said:

போனால் 2 கிழமை ஆவது தங்கியிருந்து பார்க்கணும். 

இரண்டு கிழமையா? கோவணத்தோடையும் திரும்பி வர ஏலுமோ தெரியாது. எதுக்கும், ஹோட்டல் டீ பிரான்சிலை எண்ட  பெயரை சொன்னியல்  எண்டால், இலவசமாக தங்கலாம். இளவரசர் நம்ம சிநேகிதம் தான்.

*****

உண்மையில், ஒவ்வொரு,பகுதியா  பிரிச்சு, நீஸில்  இருந்து தினமும் காலையில் பஸ்சில் போய் பார்த்து வருவது சிறப்பு.

எனக்கு நீஸ் பிடிப்பதில்லை. கல் நிறைந்த கடற்கரை. கேயென்ஸ் பக்கம்... அருமையான கடற்கரை. நல்ல சாப்பாட்டு கடைகள் உண்டு. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Nathamuni said:

வந்தா, நம்ம வீட்டில சாப்பிட்டு தான் போகணும்.... இல்லாட்டி, நிழலி, ஓடியாந்து, திரி பூட்டிற  அளவுக்கு சண்டை நடக்கும்.... சொல்லியாச்சு... 

சாப்பாட்டுக்கு கட்டாயம் வாறன். ஆனா உந்த கணவாய் பிரட்டல், நெத்தலி பொரியல் எண்டு ரெய்னர்ஸ் லேன் குய்சீன் செய்யபடாது.

தெரியும்தானே நான் மேட்டுக்குடி (அத அவரே சொல்றார்😀) ஒய்ஸ்டர் ஒரியண்டல், ஸ்பானிஷ் அரியண்டம் இப்படி ஏதும் செய்து வையுங்கோ.

உவன் இளவரசன் வேற போகாமல் விட்டால் கோவிப்பான். சின்னப் பெடி. பாப்பம் வடிவா பிளான் பண்ணி செய்வம்🤣

பிகு: ரெய்னேர்ஸ் லேன் நண்டு கடை போனதோ தலை?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

ஜெனீவாவிலை வருமான வரி கட்டொணும் எல்லே. எனக்கென்ன விசரே, அங்கை வந்து வரியை கட்ட?

தனிப்பட்ட வரி கட்டுவது / தவிர்ப்பது  என்பது அந்தந்த பிரசவுரிமையை பொறுத்தது. உ.ம். US பிரசை ஆயின், மொனாக்கோ இல் இருந்தாலும், எவ்வளுவு தான் சுளிக்க முடியும் ஆயினும்,  வெளிநாட்டு வருமானத்தில் ஒரு பகுதி US இற்கு கட்டியே ஆக வேண்டும்.   

வரி தவிர்த்தல் அவ்வளவு இலகு இல்ல இப்பொது. மொனாக்கோ உம் பரஸ்பர வரி ஏய்க்கும் தகல்வல்களை [ப ரிமாறும்  protocol ஐ ஏற்றுக்கொண்டுள்ளது என்றே நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kadancha said:

இது நம்மட பொறிஸ் மச்சானுக்கும் நடந்தது.

அமெரிக்கா குடியுரிமை வைத்திருந்தால் உலகில் எங்கே எடுக்கும் லாபத்துக்கும் அமெரிக்காவில் வரி கட்ட வேண்டும்.

இருக்கும் வீட்டை விற்றால் யூகேயில் வரிச்சலுகை உண்டு. இவர் கென்சிங்டன் வீட்டை வித்த போது யூகேயில் வரி கட்ட வேண்டி இருக்கவில்லை, ஆனால் யூ எஸ்  அரை மில்லியன் பவுண்சை வரியாக கேட்டது. கடைசியில் கட்டினவர் எண்டு நினைகிறேன்.

ஆனால் யூகே குடிகள், tax domicile ஐ மாற்றினால் யூகே வரியில் இருந்து கிட்டதட்ட முழுமையாக தப்பிக்கலாம் அல்லவா?

பிரெக்சிற்றை ஆதரித்த டைசன் கொம்பனி ஓனர் மிக அண்மையில் மொனொகோவுக்கு தன் tax domicile ஐ மாற்றினார்.

இப்படியானவர்களை non-doms என்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Philip Green.jpg

Philips Green - BHS former boss - happy resident in Monaco

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

ஆனால், மொனாகோ ஓர் இறைமையுள்ள அரசு அல்ல.

MONACO. Monaco, officially the Principality of Monaco is an independent and sovereign country located on the northern coast of the Mediterranean Sea.

Is Monaco not part of France?

Many people wonder if the Principality of Monaco is part of France or if Monaco is its own country. 

Not officially a part of France, Monaco is the second smallest country in the world; only Vatican City is smaller. As such, Monaco is also the world's smallest monarchy (and principality to be exact). ... However, there are no border formalities crossing to and from France.
 
Make no mistake, the city-state of Monaco is its own country.
 
An estimated one-third of residents are millionaires, and the GDP per capita is $165,420 — the second-highest in the world.
 
Qatar in number 1

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

principality to be exact

இதுவே UN உம் சொல்கிறது.

ஆனால், வேறு அரசுகள் (உ.ம். south sudan) சேர்ந்த போது, அவற்றை அரசு என்று UN சொன்னது.

காரணம், 1861 treaty ஆல்  பிரான்ஸ், Monaco இன் இறைமைக்கு உறுதி அளித்திருக்கிறது.  எனவே, Monaco இன் இறைமை treaty வழியாகவே தவிர, Monaco உறுதிப்படுத்த இல்லை

இந்த வரலாற்றின் சாராம்சம் தெரியுமாயினும், அதன் விபரங்கள்  

https://history.stackexchange.com/questions/6108/why-wasnt-monaco-unified-with-france

அதனால் தான் principality எனப்படுகிறது என்று நினைக்கிறன்.

ஆனால், வத்திக்கான் அரசு என்றே வகைப்படுத்தப்படுகிறது. 

2 hours ago, goshan_che said:

ஆனால் யூகே குடிகள், tax domicile ஐ மாற்றினால் யூகே வரியில் இருந்து கிட்டதட்ட முழுமையாக தப்பிக்கலாம் அல்லவா?

பிரெக்சிற்றை ஆதரித்த டைசன் கொம்பனி ஓனர் மிக அண்மையில் மொனொகோவுக்கு தன் tax domicile ஐ மாற்றினார்.

இப்படியானவர்களை non-doms என்பார்கள்.

tax domicile ஐ மாற்றுவதன் மூலம் 2010 -2015 முன்பு, வரி தவிர்ப்பது ஒப்பீட்டளவில் இலகுவானதாக இருந்தது.
 சிறிது சிறிதாக இறுக்கி வருகிறது UK இன் வரி வாரியம்.

காரணம் இதுவும் ஒன்று.

https://www.bbc.co.uk/news/uk-politics-41879422

ஏனெனில், அவர் UK இல் அரசியல் இணைப்பை வைத்து வரி தவிர்த்து விட்டதாக.  

நடைமுறையில் tax domicile மாறியது என்று UK இன் வரி வாரியம் ஏற்று கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

Philip Green.jpg

Philips Green - BHS former boss - happy resident in Monaco

இவர் 2000 அளவில் (அல்லது முன்பு) tax domicile ஐ  மாற்றிவிட்டார். அந்த நேரத்தில் பல சுளிப்புக்களை சட்ட அடிப்படையில் செய்வது ஒப்பீட்டளவில் இலகு.

இப்போது இறுக்கப்பட்டு உள்ளது.

மற்றும் படி, சாதாரண வேலையாளர்களின் ஓய்வூதிய சேகரிப்பை அபகரித்தவர். 

இவரை என்னவென்று தொழில் அதிபர் என்று சொல்வது?
  
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kadancha said:

இதுவே UN உம் சொல்கிறது.

ஆனால், வேறு அரசுகள் (உ.ம். south sudan) சேர்ந்த போது, அவற்றை அரசு என்று UN சொன்னது.

காரணம், 1861 treaty ஆல்  பிரான்ஸ், Monaco இன் இறைமைக்கு உறுதி அளித்திருக்கிறது.  எனவே, Monaco இன் இறைமை treaty வழியாகவே தவிர, Monaco உறுதிப்படுத்த இல்லை

இந்த வரலாற்றின் சாராம்சம் தெரியுமாயினும், அதன் விபரங்கள்  

https://history.stackexchange.com/questions/6108/why-wasnt-monaco-unified-with-france

அதனால் தான் principality எனப்படுகிறது என்று நினைக்கிறன்.

ஆனால், வத்திக்கான் அரசு என்றே வகைப்படுத்தப்படுகிறது. 

tax domicile ஐ மாற்றுவதன் மூலம் 2010 -2015 முன்பு, வரி தவிர்ப்பது ஒப்பீட்டளவில் இலகுவானதாக இருந்தது.
 சிறிது சிறிதாக இறுக்கி வருகிறது UK இன் வரி வாரியம்.

காரணம் இதுவும் ஒன்று.

https://www.bbc.co.uk/news/uk-politics-41879422

ஏனெனில், அவர் UK இல் அரசியல் இணைப்பை வைத்து வரி தவிர்த்து விட்டதாக.  

நடைமுறையில் tax domicile மாறியது என்று UK இன் வரி வாரியம் ஏற்று கொள்ளவேண்டும்.

அப்படி இறுக்கப்பட்டதாக தெரியவில்லை.

Domicile ஐ உண்மையில் மாற்றியதாக எவிடென்ஸ் கொடுக்க வேண்டும், சும்மா வரிக்காக மட்டும் மாற்றினால் சரிவராது. ஆனால் இதை செய்பவர்கள் பெரும் செல்வந்தர்கள். 

4 பில்லியனை மிச்சம் பிடிக்க மொனொகோவுக்கு மாறுவது அவர்களுக்கு பெரிய விடயமல்ல.

2019 இல் Dyson முதலாளி மாற்றினார்.

https://www.theguardian.com/business/2019/feb/17/brexiter-jim-ratcliffe-uk-richest-man-plans-save-4bn-pounds-tax-monaco-move

https://www.theguardian.com/business/2020/sep/25/sir-jim-ratcliffe-uks-richest-person-moves-to-tax-free-monaco-brexit-ineos-domicile

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

அப்படி இறுக்கப்பட்டதாக தெரியவில்லை.

Domicile ஐ உண்மையில் மாற்றியதாக எவிடென்ஸ் கொடுக்க வேண்டும், சும்மா வரிக்காக மட்டும் மாற்றினால் சரிவராது. ஆனால் இதை செய்பவர்கள் பெரும் செல்வந்தர்கள். 

4 பில்லியனை மிச்சம் பிடிக்க மொனொகோவுக்கு மாறுவது அவர்களுக்கு பெரிய விடயமல்ல.

2019 இல் Dyson முதலாளி மாற்றினார்.

https://www.theguardian.com/business/2019/feb/17/brexiter-jim-ratcliffe-uk-richest-man-plans-save-4bn-pounds-tax-monaco-move

அடுத்து அந்த principality விடயம். ஒரு prince பிரின்சினால் ஆளப்படும் நாடு என்பதை குறிப்பதே அந்த பெயர். Monarch இனால் ஆளப்படுவது monarchy. அரசியல் சட்டத்துக்கு அமைய monarch ஆளுவது constitutional monarchy.  குடியரசுகள் republics.

இதே போல் வத்திகானை Holy See என்பார்கள்.

ஒரு அமிர் ஆளும் நாடு எமிரேட்.

ஒரு சுல்தான் ஆளும் நாடு சுல்தனேற்.

மொனொக்கோ UN General Assembly யின் உறுப்பு நாடு. பிரான்சுக்கு இருக்கும் அதே ஒரு வாக்கு மொனொமோவுக்கும் உண்டு.

இதே போலதான் அண்டோராவும், லைசன்செயினும். அவையும் principalities ஆனால் ஐநா உறுப்புரிமை உள்ள இறைமை உள்ள தனிநாடுகள்.

இவற்றின் விடயங்களில் தலையிடும் உரிமையை ஒரு treaty பிரான்சுக்கு கொடுப்பதால் அவை இறைமையுள்ள தனி நாடுகள் இல்லை என்றாகாது.

அப்படி என்றால் 1987 க்கு பின் இலங்கை இறைமையுள்ள தனிநாடில்லை. 2ம் உலக யுத்த முடிவில் ஜேர்மனி, ஜப்பான் இறைமையுள்ள தனிநாடுகள் இல்லை என்றும் வாதாடலாம்.

Wales உம் ஒரு பிரின்சிபாலிட்டிதான், ஆனால் வேல்ஸ் இறைமை உள்ள பிரின்சிபாலிட்டி அல்ல. ஆகவேதான் அதற்கு ஐநா அங்கதுவம் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியின் கட்டுரையை வாசித்தபின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் சென்று வரவேண்டும் போல் உள்ளது. முதுமையில்தானே சுற்றுலா சாத்தியப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.