Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அத்துமீறிய இந்திய மீனவர்கள் யாழ் மீனவரை தாக்கினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன் படகு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த அப்புலிங்கம் போதன் (வயது-49) என்ற மீனவர் தனியே தன்னுடைய படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்றும் அவ்வேளை படகில் வந்த இந்திய மீனவர்கள் போதன் மீது சரமாரிய தாக்குதல் நடத்தியதுடன், அவருடைய படகு இயந்திரத்தின் இணைப்புக்களைத் துண்டித்து அதனைத் தூக்கிச் செல்ல முயன்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Fishing-Boat2.jpg?resize=768,446&ssl=1

அதன் பின்னர், தனியே வந்ததால் விட்டுச் செல்கிறோம், வேறு நபர்களும் வந்திருந்தால் கொலை செய்து கடலில் வீசியிருப்போம் என்று அவர்கள் மிரட்டிவிட்டுச் சென்றிருப்பதாக பாதிக்கப்பட்ட போதன் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர், வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துமீறிய இந்திய மீனவர்கள் யாழ் மீனவரை தாக்கினர்! – NewUthayan

  • கருத்துக்கள உறவுகள்

இடம் வலம் தெரியாமல் கையை வைச்சிட்டு வசனம் வேற பேசிபோட்டு போயிருக்கிறார்கள், கூட்டமா சுத்தி வளைச்சு கரைக்கு கொண்டு சவுக்கு கட்டையால முதுகில போடபோறாங்கள்,  கரையிலும் சரி கடலிலும் சரி காலம் காலமாக யாருக்கும் அடங்காத மண் அது.

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படை புதினம் பார்க்கிறது. 
டக்ளஸ் என்ன சொல்ல போகிறார்?
பதவி  விலகுவேன் என வெட்கம் இல்லாமல் சொல்வாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, nunavilan said:

கடற்படை புதினம் பார்க்கிறது. 
டக்ளஸ் என்ன சொல்ல போகிறார்?
பதவி  விலகுவேன் என வெட்கம் இல்லாமல் சொல்வாரா?

சிங்களம் சொல்வதை  செவ்வனே செய்வார். வேறு எதை தன்னிச்சையாக செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nunavilan said:

கடற்படை புதினம் பார்க்கிறது. 
டக்ளஸ் என்ன சொல்ல போகிறார்?
பதவி  விலகுவேன் என வெட்கம் இல்லாமல் சொல்வாரா?

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, valavan said:

இடம் வலம் தெரியாமல் கையை வைச்சிட்டு வசனம் வேற பேசிபோட்டு போயிருக்கிறார்கள், கூட்டமா சுத்தி வளைச்சு கரைக்கு கொண்டு சவுக்கு கட்டையால முதுகில போடபோறாங்கள்,  கரையிலும் சரி கடலிலும் சரி காலம் காலமாக யாருக்கும் அடங்காத மண் அது.

தொப்புள்கொடி உறவுகளை இப்படி தாக்கப்போகிறோம் என்று எழுதுகிறீர்களே? இனப்பற்றில்லையா உங்களுக்கு?

10 hours ago, nunavilan said:

கடற்படை புதினம் பார்க்கிறது. 
டக்ளஸ் என்ன சொல்ல போகிறார்?
பதவி  விலகுவேன் என வெட்கம் இல்லாமல் சொல்வாரா?

ம் .... தமிழனுக்கு தன்னைத்தானே தன் சகோதரனிடம் இருந்து பாதுகாக்க வக்கில்லை,  தன்னினத்தை வகைதொகையின்றி அழித்த சிங்கள கடற்படையிடம் பாதுகாப்பு கேட்கிறான். போர்க்குற்றங்களே நடக்கவில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு கேட்டால் தாராளமாக பாதுகாப்பு கிடைக்குமே? இன்னும் ஏன் தயக்கம்?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கற்பகதரு said:

தொப்புள்கொடி உறவுகளை இப்படி தாக்கப்போகிறோம் என்று எழுதுகிறீர்களே? இனப்பற்றில்லையா உங்களுக்கு?

ம் .... தமிழனுக்கு தன்னைத்தானே தன் சகோதரனிடம் இருந்து பாதுகாக்க வக்கில்லை,  தன்னினத்தை வகைதொகையின்றி அழித்த சிங்கள கடற்படையிடம் பாதுகாப்பு கேட்கிறான். போர்க்குற்றங்களே நடக்கவில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு கேட்டால் தாராளமாக பாதுகாப்பு கிடைக்குமே? இன்னும் ஏன் தயக்கம்?

ஐயா கற்பகதரு, 

உங்களுக்கு என்றே பிரத்தியேக மீம்ஸ் கிரியேற் பண்ணலாம் போல கிடக்கே.. 😂😂

அதுசரி ""தமிழர்களுக்குப் பிரச்சனை இருக்கிறதா. ? இருந்தால் அதற்கெதிராக எப்படிப் போராடலாம் ?"" என்று கேட்டிருந்தேன். இன்னும் பதிலைக் காணோம்.. ☹️

ஓடி ஒழியாதீர்கள். பதிலைக் கூறுங்கள்.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kapithan said:

"தமிழர்களுக்குப் பிரச்சனை இருக்கிறதா. ?

இருக்கிறது.

59 minutes ago, Kapithan said:

இருந்தால் அதற்கெதிராக எப்படிப் போராடலாம் ?"

இங்கே மற்றவர்கள் எதிர்பார்ப்பது போல, சிங்கள கடற்படையின் உதவியுடன் போரடலாம். போர்க்குற்றம் ஒன்றும் நடக்கவில்லை என்று எழுதிக்கொடுத்தால் இந்தியாக்காரரை ஓட ஓட விரட்டியடித்து வெற்றி பெறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

அதுசரி ""தமிழர்களுக்குப் பிரச்சனை இருக்கிறதா. ? இருந்தால் அதற்கெதிராக எப்படிப் போராடலாம் ?""

தமிழர்  பிரச்சனைகளை ஏளனம் செய்பவர்கள், உங்களுக்கு வழி சொல்வார்கள் கேட்டு பின்பற்றுங்கள் தம் தாய் மொழியையும் இனத்தையும் விட்டு உங்களுக்கு உதவ.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

ம் .... தமிழனுக்கு தன்னைத்தானே தன் சகோதரனிடம் இருந்து பாதுகாக்க வக்கில்லை,  தன்னினத்தை வகைதொகையின்றி அழித்த சிங்கள கடற்படையிடம் பாதுகாப்பு கேட்கிறான். போர்க்குற்றங்களே நடக்கவில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு கேட்டால் தாராளமாக பாதுகாப்பு கிடைக்குமே? இன்னும் ஏன் தயக்கம்?

உண்மையில் போர் நடந்ததா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கற்பகதரு said:

இருக்கிறது.

இங்கே மற்றவர்கள் எதிர்பார்ப்பது போல, சிங்கள கடற்படையின் உதவியுடன் போரடலாம். போர்க்குற்றம் ஒன்றும் நடக்கவில்லை என்று எழுதிக்கொடுத்தால் இந்தியாக்காரரை ஓட ஓட விரட்டியடித்து வெற்றி பெறலாம்.

எங்கை போர் நடந்தது? எப்ப போர் நடந்தது?

Vadivelu Shocked Gif - Gifs Singamalai - Kulfy

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

இருக்கிறது.

இங்கே மற்றவர்கள் எதிர்பார்ப்பது போல, சிங்கள கடற்படையின் உதவியுடன் போரடலாம். போர்க்குற்றம் ஒன்றும் நடக்கவில்லை என்று எழுதிக்கொடுத்தால் இந்தியாக்காரரை ஓட ஓட விரட்டியடித்து வெற்றி பெறலாம்.

நேர்மையான பதிலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். 

நேர்மையா அது என்ன என்று கேட்காதீர்கள்.. ☹️

2 hours ago, satan said:

தமிழர்  பிரச்சனைகளை ஏளனம் செய்பவர்கள், உங்களுக்கு வழி சொல்வார்கள் கேட்டு பின்பற்றுங்கள் தம் தாய் மொழியையும் இனத்தையும் விட்டு உங்களுக்கு உதவ.

கொஞ்சம் பொறுமையாக இருங்கள் சாத்தான். இவரிடம் உண்மை இருக்கிறதா பார்ப்போம்.. 🤥

இந்தக் கேள்வியை Justin என்பவரிடம் கேட்க அவர் தனது பெயரை மாற்றியதாக ஞாபகம்... 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

நேர்மையான பதிலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். 

நேர்மையா அது என்ன என்று கேட்காதீர்கள்.. ☹️

கொஞ்சம் பொறுமையாக இருங்கள் சாத்தான். இவரிடம் உண்மை இருக்கிறதா பார்ப்போம்.. 🤥

இந்தக் கேள்வியை Justin என்பவரிடம் கேட்க அவர் தனது பெயரை மாற்றியதாக ஞாபகம்... 😀

14 hours ago, Kapithan said:

அதுசரி ""தமிழர்களுக்குப் பிரச்சனை இருக்கிறதா. ? இருந்தால் அதற்கெதிராக எப்படிப் போராடலாம் ?"" என்று கேட்டிருந்தேன். இன்னும் பதிலைக் காணோம்.. ☹️

ஓடி ஒழியாதீர்கள். பதிலைக் கூறுங்கள்.. 😂😂

எந்த நாட்டு தமிழர்கள்? என்று கேட்டிருந்தேன், ஓடி ஒளிந்துவிட்டீர்களே? அதை சொன்னால்தானே பதில் சொல்லலாம்? சீமானும் போராடுகிறார், வை.கோ.வும் போராடுகிறார். எதை பற்றி கேட்கிறீர்கள் என்று தெளிவாகவும் நேர்மையாகவும் சொல்லுங்கள்-பதில் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கற்பகதரு said:

எந்த நாட்டு தமிழர்கள்? என்று கேட்டிருந்தேன், ஓடி ஒளிந்துவிட்டீர்களே? அதை சொன்னால்தானே பதில் சொல்லலாம்? சீமானும் போராடுகிறார், வை.கோ.வும் போராடுகிறார். எதை பற்றி கேட்கிறீர்கள் என்று தெளிவாகவும் நேர்மையாகவும் சொல்லுங்கள்-பதில் கிடைக்கும்.

இனி உங்களுக்குள்ள ஒரேயொரு தெரிவு; பெயரை மாற்றி  வேறு பெயரில் வருவதுதான். 

பழகிய யுக்திதானே .. புதிதில்லையே.. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

இங்கே மற்றவர்கள் எதிர்பார்ப்பது போல, சிங்கள கடற்படையின் உதவியுடன் போரடலாம். போர்க்குற்றம் ஒன்றும் நடக்கவில்லை என்று எழுதிக்கொடுத்தால் இந்தியாக்காரரை ஓட ஓட விரட்டியடித்து வெற்றி பெறலாம்.

9 hours ago, satan said:

தமிழர்  பிரச்சனைகளை ஏளனம் செய்பவர்கள், உங்களுக்கு வழி சொல்வார்கள் கேட்டு பின்பற்றுங்கள் தம் தாய் மொழியையும் இனத்தையும் விட்டு உங்களுக்கு உதவ.

8 hours ago, nunavilan said:

உண்மையில் போர் நடந்ததா??

7 hours ago, குமாரசாமி said:

எங்கை போர் நடந்தது? எப்ப போர் நடந்தது?

Vadivelu Shocked Gif - Gifs Singamalai - Kulfy

8 minutes ago, Kapithan said:

இனி உங்களுக்குள்ள ஒரேயொரு தெரிவு; பெயரை மாற்றி  வேறு பெயரில் வருவதுதான். 

பழகிய யுக்திதானே .. புதிதில்லையே.. ☹️

கற்பகத்தரு... போன்ற,   மன  நிலை உள்ளவர்களிடம்...
வாதிடுவது வீண்.... நண்பர்களே.

எப்படிப் பட்ட... குரூர எண்ணத்துடன், 
யாழ். களத்தில்,   இவர் இன்றும்... நடமாடுவது வேதனைக்குரியது.  

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

கற்பகத்தரு... போன்ற,   மன  நிலை உள்ளவர்களிடம்...
வாதிடுவது வீண்.... நண்பர்களே.

எப்படிப் பட்ட... குரூர எண்ணத்துடன், 
யாழ். களத்தில்,   இவர் இன்றும்... நடமாடுவது வேதனைக்குரியது.  

சிலருக்கு போராளிகளை அதுவும் குறிப்பாக விடுதலைப் புலிகளை அறவே வெறுக்கின்றனர்.

அதற்கு ஒரே ஒரு காரணம் "தம்மவர்களின் பிடியிலிருந்த அரசியல் அதிகாரம் சாமானியர்களின் கைக்கு மாறியதுதான்""

மக்கள் அவர்களின் தியாகங்களை மதிப்பது அவர்களுக்கு மரமஞ்சளாகக்(😂) கசக்கிறது. 

😂😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

சிலருக்கு போராளிகளை அதுவும் குறிப்பாக விடுதலைப் புலிகளை அறவே வெறுக்கின்றனர்.

அதற்கு ஒரே ஒரு காரணம் "தம்மவர்களின் பிடியிலிருந்த அரசியல் அதிகாரம் சாமானியர்களின் கைக்கு மாறியதுதான்""

மக்கள் அவர்களின் தியாகங்களை மதிப்பது அவர்களுக்கு மரமஞ்சளாகக்(😂) கசக்கிறது. 

😂😂

கூலிக்கு... மாரடிக்கும் கூட்டத்துக்கு,
செக்கு என்றாலும், சிவலிங்கம் என்றாலும்...
நக்கி விட்டுப், போக வேண்டியது தான். 

அதற்குப் பின்னால்... உள்ள, சோகங்கள்...
இவர்களுக்கு, தெரிந்து இருந்தாலும்...

அவர்களின், எஜமான் கொடுத்த கட்டளையை...
நிறைவேற்ற, தன் இனத்தையே.. விற்று விடுவார்கள்.
ஏனென்றால்... அது, தான்.... அவர்களுக்கு சோறு போடும். 

சோத்துக்கு... மாரடிக்கும்,  கோஸ்டி போல் உள்ளது. த்தூ.... 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

Justin என்பவரிடம் கேட்க அவர் தனது பெயரை மாற்றியதாக ஞாபகம்...

பலமுறை உங்கள் பதிலில் பெயர் மாறி எழுதுவதை அவதானித்து கேட்க நினைத்தேன்,  தொடர்ந்து நீங்கள் அந்த எழுத்துமுறை பாவிக்கும்போது நீங்கள் தவறாக எழுதவில்லை எதற்கோ தூண்டில் போடுகிறீர்கள் என்று உணர்ந்ததோடு பொறுமையாக இருந்தேன் ஒருநாள் வெளிவரும் என்று. எனது அவதானிப்பின்படி ஜூட் எனும் பெயரில் எழுதுபவரின்  தாய் மொழி தமிழ் இல்லை என்பதே எனது ஊகம். தமிழ்பிரதேசத்தில் வளர்ந்து தமிழைக் கற்றிருக்கலாம்,  நீதி நிஞாயமில்லாமல் எமது இழப்புகளை கேலி செய்வதிலும் சிங்களத்தைக் காப்பாற்றுவதிலுமே அவர் எழுத்துக்கள் கவனம் செலுத்துகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

எந்த நாட்டு தமிழர்கள்? என்று கேட்டிருந்தேன், ஓடி ஒளிந்துவிட்டீர்களே? அதை சொன்னால்தானே பதில் சொல்லலாம்? சீமானும் போராடுகிறார், வை.கோ.வும் போராடுகிறார். எதை பற்றி கேட்கிறீர்கள் என்று தெளிவாகவும் நேர்மையாகவும் சொல்லுங்கள்-பதில் கிடைக்கும்.

6 hours ago, Kapithan said:

இனி உங்களுக்குள்ள ஒரேயொரு தெரிவு; பெயரை மாற்றி  வேறு பெயரில் வருவதுதான். 

பழகிய யுக்திதானே .. புதிதில்லையே.. ☹️

Kapithan என்ற பெயரில் எழுதுவதும் நானே தான். வாசகப் பெருமக்களே, குழம்பி போய் விடாதீர்கள். மேலே உள்ள கருத்து தமிழ் சிறி (சிறி தமிழல்ல) க்கும் satan உக்குமானது.😋 🇮🇳

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

Kapithan என்ற பெயரில் எழுதுவதும் நானே தான். வாசகப் பெருமக்களே, குழம்பி போய் விடாதீர்கள். மேலே உள்ள கருத்து தமிழ் சிறி (சிறி தமிழல்ல) க்கும் satan உக்குமானது.😋 🇮🇳

மண்ணெண்ணை, விளக்கெண்ணை, ஆமணக்கு எண்ணை... :grin:
எல்லாம்... கண்டு பிடிச்சது... நம்ம  சனம், ராசா... 🤣

வந்து வம்பிழுத்தால்.. . ஓட்ட, நறுக்கிடுவோம்,  என் பொன்ராஸு  😂

  • கருத்துக்கள உறவுகள்

அடுப்புக்காலை எடுத்து புகட்டில் வைக்கச் சொல்லுறார் ஜூட். . எங்கள் தலைவன் உயிரோடு இருந்திருந்தால் கண்ட ஓநாயெல்லாம் நுழைய முடியுமோ? அதற்காகவே கூட்டுச் சேர்ந்து அழித்து நம் வளத்தை சுரண்டுகிறார்கள். சிங்களவனே போர்க்குற்றவாளி, தப்ப வழியில்லாமல் தடுமாறுகிறார். அதில் உதவுவாராம். இப்படியான அறிவுரைகள்தான் வரும்.  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

Kapithan என்ற பெயரில் எழுதுவதும் நானே தான். வாசகப் பெருமக்களே, குழம்பி போய் விடாதீர்கள்.

இது எனக்கு முதலே சந்தேகம் இருந்தது நீங்கள் தான் Kapithan என்று 😄

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது என்ன?

https://www.facebook.com/ddevananda/videos/3940688762621720

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2021 at 02:40, விளங்க நினைப்பவன் said:

இது எனக்கு முதலே சந்தேகம் இருந்தது நீங்கள் தான் Kapithan என்று 😄

மூன்று வேடங்களோ... அல்லது மூன்று முகமோ.. 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது என்ன?

https://www.facebook.com/ddevananda/videos/3940688762621720

டக்ளஸ்; இந்தியாவில் எனக்கெதிராக உள்ள வழக்கின் நிலை என்ன சேர்..

ஜெய்சங்கர்; அது நீர்(!) இந்திய மீனவர்கள் மட்டில் நடந்துகொள்வதைப் பொறுத்து தூசு தட்டப்படும்.

டக்ளஸ்; தங்யூ சேர். 

😏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.