Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழக இலட்சினையைமாற்ற முற்படுவதை தடுத்து நிறுத்துக-துணைவேந்தரிடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழக இலட்சினையைமாற்ற முற்படுவதை தடுத்து நிறுத்துக-துணைவேந்தரிடம் கோரிக்கை

uni-of-sidda-696x417.jpg
 26 Views

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்கள், அண்மையில் தயாரித்த ரி-சேர்ட் இல் பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னம் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான ந.பொன்ராசா  மின்னஞ்சல் மூலம் மேற்படி கோரிக்கை கடிதத்தை துணைவேந்தருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

uni-of-sidda-2.jpg

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் பாரம்பரியங்கள் நிறைந்தது. சைவப் பாரம்பரியம் மிக்க சேர்.பொன். இராமநாதன் அவர்களால் தொடங்கப்பட்ட பரமேஸ்வரா கல்லூரியை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் அடையாளமாக இன்றும் பரமேஸ்வரன் (சிவன்) ஆலயம் யாழ்.பல்கலைக்கழகத்தின் வணக்கத் தலமாக இருந்துவருகின்றது.

வரலாற்றுக் காலம் முதல் தமிழர்களின் சின்னமாகப் பேணப்பட்டதும், தமிழையும் சைவத்தையும் அடையாளமாகக் கொண்டதுமான நந்தி யாழ். பல்கலைக்கழகத்தின் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதை மாற்ற முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுவும், தமிழ் சித்தர்களின் வழி வந்த, தமிழர்களின் தொன்மை மருத்துவமான சித்தமருத்துவத்தை கற்கின்ற சித்தமருத்துவத்துறை மாணவர்கள் அதன் தொன்மைகளை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.

மாற்றியமைக்கப்பட்ட சின்னம் பொறிக்கப்பட்ட ரி-சேர்ட்களை சிங்கள மாணவர்கள் அதிகமாக தயாரித்து பல்கலைக்கழக மாணவர்கள் அல்லாதோருக்கு விற்பனை செய்தமையும் தெரியவந்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தை மாற்றியமைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக்கூடாது.

எனவே, குறித்த விவகாரத்தில் துணைவேந்தர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையைக் கண்டறியவேண்டும். தவறிழைத்தவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், மாற்றியமைக்கப்பட்ட சின்னம் பொறிக்கப்பட்ட ரி-சேர்ட்கள் அனைத்தையும் மீளப் பெற்று பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னம் பொறிக்கப்பட்ட ரி-சேர்ட் தயாரிப்பதற்கு மாணவர்களை வழிப்படுத்தவேண்டும். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கோரிக்கை கடிதத்தின் பிரதி சித்தமருத்துவத்துறை பீடாதிபதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/?p=38633

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இது வேறையா🤦🏽‍♀️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்பொழுது யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இது வேறையா🤦🏽‍♀️

நந்தி யாழ்ப்பாணத்தின் சின்னம். அதை அணிவதை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனாலேயே இந்த மாற்றம். சிறிதுகாலத்தில் அவர்கள் சிங்கத்தை பல்கலைக் கழக சின்னத்துள் கொண்டுவரவும் சந்தர்ப்பம் இருக்கிறது. அதனாலேயே எதிர்க்கிறார்கள் தமிழ் மாணவர்கள். 

பல்கலைக் கழகத்தினுள் வேறு பிரச்சினைகள் இருக்கின்றதென்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், மிக எளிதாக எமது கலாசார சின்னங்களை, அவற்றை நாம் பெருமையுடன் அணியும் கெளரவத்தினை எம்மிடமிருந்து அவர்களால் பறிக்கமுடிகிறதென்பதற்கு இந்தச் சின்ன விடயமே உதாரணம். 

நீங்கள் இங்கே படித்திருக்கலாம். அதனால் இச்சின்னத்தினை நீங்கள் பெருமையுடன் அணிந்திருக்கலாம். உங்களைப்போன்றவர்களே இன்று நீதி கேட்கிறார்கள். போனால் போகட்டும் என்று விட்டுவிட முடியுமா என்பது கேள்விக்குறியே. 

ஒரு அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தின்மேல் ஆக்கிரமிப்பாளனினால் செய்யப்படக்கூடிய சில்லறைத்தனமான செருக்காகவே இதனை என்னால் பார்க்கமுடிகிறது. 

உங்களைத் தாக்கும் நோக்கமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் கொஞ்சம் விசாலமாகச் சிந்திக்க வேண்டும். 

இங்கே சின்னம் உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டதாகத் தெரியவில்லை. சாதா T-Shirt அடிப்பதற்கு இந்தக் குதியா.. 😂

அந்த வட்டத்தில் உள்ள நந்திச் சின்னம் அகற்றப்பட்டதுதான் பிரச்சனை என்றால் அந்த வட்டத்தை அகற்றினால் பிரச்சனை தீர்ந்தது.

இலச்சனையைப் பாவித்தால் முழுமையாகப் பாவிக்க வேண்டும் அல்லது அதனை பாவிக்கக் கூடாது என்று கூறினால் பிரச்சனை முடிந்தது. ஆனாலும் இந்த T-Shirt விவகாரத்தை ஒரு பிரச்சனை ஆக்குவதற்கு எந்த முகாந்தரமும் இருப்பதாக தோன்றவில்லை. 

எந்தப் புதிய சிந்தனைக்கும் / முயற்சிக்கும் இடமில்லாமல் கிடுகு வேலிக் கலாச்சாரத்திற்குள்ளேயே அவிந்து அமிழ்ந்து பொறாமைப்பட்டுச்  சாக வேண்டியதுதான். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kapithan said:

உங்களைப்போலவே நானும் யாழ்ப்பாண பல்கலைகழகம் புதிய சிந்தனைகளுடனும், இன்றைய சமூக பொருளாதார மாற்றங்களை உள்வாங்கி தரமுயர வேண்டும் என்ற விருப்பம் உண்டு..

நீங்கள் கூறியபடி இந்த செய்தி எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை இது சம்பந்தமான அறிக்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.. 

இந்த செய்தியை வாசித்த பொழுது தற்போதைய துனைவேந்தருக்கு தேவையில்லாத தலையிடிகளை கொடுத்து காலத்தை வீண் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது..

பிகு: அங்கே படித்தவள் என்ற ரீதியில் இந்த T-shirtல் வரைந்துள்ள படம் எந்தவித பொருளையும் தரவில்லை என்பதால் பிடிக்கவில்லை.. அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதென்ன படித்த"வள்". 

நான் உங்களை ஆண் என்றே இதுவரை எண்ணியிருந்தென் அம்மணி. 😂😂

அங்கே பல்கலைக் கழகங்களில் faculty என்கின்ற ரீதியில் கெளரவப் பிரச்சனை என்கின்ற ஒன்று மாணவர் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. Engineering's  அல்லது Sciences உடன் தொடர்புபட்ட மாணவர்கள் தாங்கள் வடிவமைக்கும் T-shirts ல் தங்கள் பீடங்களின் பெயரைப் பதிவு செய்யும்போது, அழகியலை(உ+ம்) பாடமாகக் கற்கும் மாணவர்கள் தங்களை எவ்வாறு வெளிக்காட்டுவது என்று தாழ்வு மனப்பான்மையில் பிரச்சனைப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.. 😂

arts faculty என்று கூறுவது கெளரவக் குறைச்சலாகப் பார்க்கப்படுவது போல...

யான் என் செயும் பராபரனே... 😜

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

நந்தி யாழ்ப்பாணத்தின் சின்னம். அதை அணிவதை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனாலேயே இந்த மாற்றம். சிறிதுகாலத்தில் அவர்கள் சிங்கத்தை பல்கலைக் கழக சின்னத்துள் கொண்டுவரவும் சந்தர்ப்பம் இருக்கிறது.

நந்தி சைவ சின்னம், யாழ் சின்னம் யாழ். தமிழ் கத்தோலிக்கர், கிறீஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு, நந்தியும் சிங்கமும் அவர்கள் சின்னமில்லாததால், இரண்டுமே பெரும்பான்மையினரின் மத இன ஆதிக்க சின்னங்கள். 
186-1863214_yarl-png.png

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

நந்தி சைவ சின்னம், யாழ் சின்னம் யாழ். தமிழ் கத்தோலிக்கர், கிறீஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு, நந்தியும் சிங்கமும் அவர்கள் சின்னமில்லாததால், இரண்டுமே பெரும்பான்மையினரின் மத இன ஆதிக்க சின்னங்கள். 
186-1863214_yarl-png.png

இதற்குள் நான் கருத்தெழுதியிருக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். எனக்கு இந்தவிடயங்கள் பற்றிய போதிய அறிவில்லை. எதனையும் மேலோட்டமாகப் பார்த்துக் கருத்தெழுதுவதால் இப்படி ஆகிவிட்டது.  மன்னிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கற்பகதரு said:

நந்தி சைவ சின்னம், யாழ் சின்னம் யாழ். தமிழ் கத்தோலிக்கர், கிறீஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு, நந்தியும் சிங்கமும் அவர்கள் சின்னமில்லாததால், இரண்டுமே பெரும்பான்மையினரின் மத இன ஆதிக்க சின்னங்கள். 
186-1863214_yarl-png.png

யாழிலே உள்ள  ஏனைய மதங்களையும்  நீங்கள்  கருத்தில்  எடுத்திருக்கலாம் என்பது ஆதங்கம்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரஞ்சித் said:

இதற்குள் நான் கருத்தெழுதியிருக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். எனக்கு இந்தவிடயங்கள் பற்றிய போதிய அறிவில்லை. எதனையும் மேலோட்டமாகப் பார்த்துக் கருத்தெழுதுவதால் இப்படி ஆகிவிட்டது.  மன்னிக்கவும். 

Hakuna Matata...😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அழகியலை(உ+ம்) பாடமாகக் கற்கும் மாணவர்கள் தங்களை எவ்வாறு வெளிக்காட்டுவது என்று தாழ்வு மனப்பான்மையில் பிரச்சனைப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.. 😂

arts faculty என்று கூறுவது கெளரவக் குறைச்சலாகப் பார்க்கப்படுவது போல...

யாம் என் செயும் பராபரமே... 😜

ஊரில எஞ்சினியர் , டகுத்தர் மாருக்குதானே மதிப்பும் மரியாதையும்  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஊரில எஞ்சினியர் , டகுத்தர் மாருக்குதானே மதிப்பும் மரியாதையும்  

கணக்குப்பிள்ளைக்கு (Charted Accountant)    மதிப்பில் என்ன குறைச்சல்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரஞ்சித் said:

நந்தி யாழ்ப்பாணத்தின் சின்னம். அதை அணிவதை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனாலேயே இந்த மாற்றம். சிறிதுகாலத்தில் அவர்கள் சிங்கத்தை பல்கலைக் கழக சின்னத்துள் கொண்டுவரவும் சந்தர்ப்பம் இருக்கிறது. அதனாலேயே எதிர்க்கிறார்கள் தமிழ் மாணவர்கள். 

பல்கலைக் கழகத்தினுள் வேறு பிரச்சினைகள் இருக்கின்றதென்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், மிக எளிதாக எமது கலாசார சின்னங்களை, அவற்றை நாம் பெருமையுடன் அணியும் கெளரவத்தினை எம்மிடமிருந்து அவர்களால் பறிக்கமுடிகிறதென்பதற்கு இந்தச் சின்ன விடயமே உதாரணம். 

நீங்கள் இங்கே படித்திருக்கலாம். அதனால் இச்சின்னத்தினை நீங்கள் பெருமையுடன் அணிந்திருக்கலாம். உங்களைப்போன்றவர்களே இன்று நீதி கேட்கிறார்கள். போனால் போகட்டும் என்று விட்டுவிட முடியுமா என்பது கேள்விக்குறியே. 

ஒரு அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தின்மேல் ஆக்கிரமிப்பாளனினால் செய்யப்படக்கூடிய சில்லறைத்தனமான செருக்காகவே இதனை என்னால் பார்க்கமுடிகிறது. 

உங்களைத் தாக்கும் நோக்கமில்லை. 

நீங்கள் கூறுவதையும் மறுக்க முடியாது.. உங்களைப்போலவே அனேகம்பேருக்கு இந்த ஆதங்கம் இருக்கிறது. நன்றிகள்

11 hours ago, Kapithan said:

அங்கே பல்கலைக் கழகங்களில் faculty என்கின்ற ரீதியில் கெளரவப் பிரச்சனை என்கின்ற ஒன்று மாணவர் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. Engineering's  அல்லது Sciences உடன் தொடர்புபட்ட மாணவர்கள் தாங்கள் வடிவமைக்கும் T-shirts ல் தங்கள் பீடங்களின் பெயரைப் பதிவு செய்யும்போது, அழகியலை(உ+ம்) பாடமாகக் கற்கும் மாணவர்கள் தங்களை எவ்வாறு வெளிக்காட்டுவது என்று தாழ்வு மனப்பான்மையில் பிரச்சனைப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.. 😂

arts faculty என்று கூறுவது கெளரவக் குறைச்சலாகப் பார்க்கப்படுவது போல...

யான் என் செயும் பராபரனே... 😜

இந்த தாழ்வுமனப்பான்மை எங்கே இருந்து வருகிறது? 
ஆணிவேர்: எங்களது சமூகசிந்தனை. 
எங்களது சமூகத்தினரது மனநிலையில் தொடங்கி பாடசாலைகளில் தொடர்ந்து பல்கலைகழகம் வரை தொடர்கிறது..உள்நாடு வெளிநாடு என வேறுபாடின்றி இது தொடர்கிறது.. இலகுவில் மாற்றக்கூடிய/மாறக்கூடியதாகவும் தெரியவில்லை.

ஆகையால் எந்த பல்கலைகழகத்திற்கு எந்த துறைக்கு தெரிவானால் என்ன அந்தந்த பல்கலைகழகங்களின் நடைமுறைகளை/விதிகளை மதிப்பதும், அவர்கள் பிழைவிடும் சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டவேண்டியது மக்களின் கடமை தானே..!

9 hours ago, கற்பகதரு said:

 யாழ் சின்னம்
186-1863214_yarl-png.png

இந்த செய்திக்கு முதலில் நான் எழுத இருந்தது யாழ் சின்னத்தை வைத்தே.. ஆனாலும் தேவையில்லாத கருத்தாடல்களை தோற்றுவிக்குமோ என நினைத்து அதை பதியவில்லை. ஆனாலும் நீங்கள் யாழ் சின்னத்தை பதிந்தமைக்கு நன்றி. 

12 hours ago, Kapithan said:

எந்தப் புதிய சிந்தனைக்கும் / முயற்சிக்கும் இடமில்லாமல் கிடுகு வேலிக் கலாச்சாரத்திற்குள்ளேயே அவிந்து அமிழ்ந்து பொறாமைப்பட்டுச்  சாக வேண்டியதுதான். ☹️

புதிய சிந்தனைகள் வரவேற்கதக்கது ஆனால், இலக்கும் தெளிவும் இல்லாத புதிய சிந்தனை/புதிய முயற்சி எந்தளவு தூரம் சமூகத்திற்கு உதவும் என தெரியவில்லை.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கற்பகதரு said:

கணக்குப்பிள்ளைக்கு (Charted Accountant)    மதிப்பில் என்ன குறைச்சல்?

அதெல்லாம் ஒரு பக்கம்தான் ஆனால் முன்னிலை எனும் போது நான் சொன்னவர்களே முன்னிலை பெறுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதெல்லாம் ஒரு பக்கம்தான் ஆனால் முன்னிலை எனும் போது நான் சொன்னவர்களே முன்னிலை பெறுகிறார்கள் 

என்னிடம் முதல் இரண்டுக்குள் 2 பொடி இருக்கு என்று நான் ஒரு நாள் பகிடியாக எழுதியதை இன்றைக்கும் சீதனத்தின் மீது கண் உள்ள தேசியத்தூண் தானே நீங்க என இன்றும் முகநூல் வரை ஒருத்தர் சாட்டையுடன் திரிகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

என்னிடம் முதல் இரண்டுக்குள் 2 பொடி இருக்கு என்று நான் ஒரு நாள் பகிடியாக எழுதியதை இன்றைக்கும் சீதனத்தின் மீது கண் உள்ள தேசியத்தூண் தானே நீங்க என இன்றும் முகநூல் வரை ஒருத்தர் சாட்டையுடன் திரிகிறார். 

அது உண்மைதானே, உண்மையில் உங்களுக்கு தமிழ் பற்றிருந்திருந்தால் முதல் பொடியை தமிழ்நாட்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் புலவராகவும், இரண்டாவது பொடியை கீழடி ஆய்வு செய்யத்தக்க தொல்லியல்ஆய்வாளராகவும் வரும்படி ஊக்குவித்திருக்க மாட்டீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

அது உண்மைதானே, உண்மையில் உங்களுக்கு தமிழ் பற்றிருந்திருந்தால் முதல் பொடியை தமிழ்நாட்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் புலவராகவும், இரண்டாவது பொடியை கீழடி ஆய்வு செய்யத்தக்க தொல்லியல்ஆய்வாளராகவும் வரும்படி ஊக்குவித்திருக்க மாட்டீர்களா? 

உண்மை தான்

அப்படி ஒரு ஆதங்கம்  எனக்கும்  இருந்தது

எல்லாத்தையும்  கொடுத்த  தலைவருக்கு கிடைத்த வசையை பார்க்கும்வரை...???

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த சம்பவத்தோடு நோக்கும் போது இதுவும் துணைவேந்தர் என்ற வெங்காயத்தின் ஆசீர்வாதத்தோடு நிகழ்த்தப்படும்.. யாழ் பல்கலைக்கழகத்தை சிங்களமயமாக்குதல் என்ற சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

இன்று நடந்த சம்பவத்தோடு நோக்கும் போது இதுவும் துணைவேந்தர் என்ற வெங்காயத்தின் ஆசீர்வாதத்தோடு நிகழ்த்தப்படும்.. யாழ் பல்கலைக்கழகத்தை சிங்களமயமாக்குதல் என்ற சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது. 

இப்ப எல்லாருக்கும் விளங்கியிருக்கும் எல்லாம் ஒரேநிகழ்ச்சிநிரல் தான் என்று

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2021 at 03:41, விசுகு said:

என்னிடம் முதல் இரண்டுக்குள் 2 பொடி இருக்கு என்று நான் ஒரு நாள் பகிடியாக எழுதியதை இன்றைக்கும் சீதனத்தின் மீது கண் உள்ள தேசியத்தூண் தானே நீங்க என இன்றும் முகநூல் வரை ஒருத்தர் சாட்டையுடன் திரிகிறார். 

அப்ப பாருங்கோவன் சிலோனுக்கு வித்துவிடுங்கள் கோடிக்கணக்கில் மாப்பிள்ளை விற்கப்படுகிறது சந்தையில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப பாருங்கோவன் சிலோனுக்கு வித்துவிடுங்கள் கோடிக்கணக்கில் மாப்பிள்ளை விற்கப்படுகிறது சந்தையில்

விலைப்பட்டியலை இணைத்து விடவும். பலருக்கு பிரயோசனப்படும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

விலைப்பட்டியலை இணைத்து விடவும். பலருக்கு பிரயோசனப்படும். :cool:

முகநூலில் பலபேர் பார்த்து  இருப்பார்கள் தானே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.