Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரோஹிங்கியா கிராமங்களில் அமைதி நிலவுகிறது: ஆங் சான் சூகி || Suu Kyi says  most Rohingya villages calm

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மியன்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் அதிகாரத் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உட்பட 90க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

இந்தநிலையிலேயே அங்கு இராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனால் ஆங் சான் சூகி, இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்தோடு, ஆங் சான் சூகி உள்ளிட்ட மேலும் சில தலைவர்களும் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் தற்போது, அந்நாட்டில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மியன்மாரில்-இராணுவ-புரட்/

  • கருத்துக்கள உறவுகள்


அம்மாச்சியை தூக்கி உள்ளே போட்டால்தான் நன்று.
இனி சர்வதேசமும் திரும்பி பார்க்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்: ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் கைது

ஆங் சான் சூச்சி

பட மூலாதாரம், GETTY IMAGES

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

நாட்டின் முக்கிய தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மியான்மரில் ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சியின் மூலம் அந்த நாட்டின் ராணுவம் அறிவித்துள்ளது.

பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மர் 2011இல் ஜனநாயக சீர்திருத்தங்கள் தொடங்கும் வரை ராணுவத்தால் ஆளப்பட்டது.

இந்த நிலையில், தளபதி மின் ஆங் ஹ்லேங்கிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தலைநகரான நேபியேட்டோ மற்றும் முக்கிய நகரமான யாங்கூனின் தெருக்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆங் சாங் சூச்சி கைது

 

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்

பட மூலாதாரம், GETTY IMAGES

முன்னதாக, மியான்மர் நாட்டின் என்.எல்.டி. கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டதாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்துக்கும் ராணுவத்துக்கும் இடையிலான பதற்றத்தினால் இந்த கைது நடத்திருக்கிறது. இப்பதற்றமான சூழல் ஆட்சிக் கவிழ்க்கப்படலாம் என்கிற அச்சத்துக்கு வலுசேர்த்திருந்தது. 

கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில், நேஷனல் லீக் ஃபார் டெமாகிரசி (என்.எல்.டி) கட்சி ஆட்சியை அமைப்பதற்குத் போதுமாக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அந்த நாட்டு ராணுவமோ தேர்தலில் மோசடி நடந்ததாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. 

கடந்த 2011-ம் ஆண்டு வரை பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மர், ராணுவத்தின் பிடியில் இருந்தது. இதனால், சூச்சி பல ஆண்டுகளை வீட்டுக் காவலில் கழித்தார். 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மர் நாடாளுமன்றத்தின் கீழவை, இன்று (பிப்ரவரி 1, திங்கட்கிழமை) கூட இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டு ராணுவம் தலையிட்டு அக்கூட்டத்தை ஒத்திவைக்க அழைப்புவிடுத்திருக்கிறது. 

மியான்மரின் தலைநகரான நேபியேட்டோ மற்றும் யாங்கூனின் சாலைகளில் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் என பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் ஜானதன் ஹீட் கூறுகிறார்.

ஆங் சாங் சூச்சி, மியான்மரின் அதிபர் வின் மைன்ட் என பல தலைவர்கள் இன்று காலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் என்.எல்.டி கட்சியின் செய்தித் தொடர்பாளரான மயோ நியுன்ட் கூறினார். 

"மியான்மர் மக்கள் எந்த வித மோசமான வழியிலும் எதிர்வினையாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் சட்டத்தின் வழியில் நடக்க வேண்டும். நானும் கைது செய்யப்படலாம்" என்றார் மயோ. 

ஆங் சாங் சூச்சி

பட மூலாதாரம், GETTY IMAGES

தொலைபேசி மற்றும் அலைபேசி அழைப்பு சேவை மட்டுமின்றி இணைய சேவையும் துண்டிக்கப்பட்டிருப்பதாக பிபிசியின் பர்மீசிய சேவை கூறுகிறது.

மியான்மர் நாட்டின் பல்வேறு பிராந்தியத்தின் முதலைச்சர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர்களின் குடும்பத்தினர்கள் கூறுகிறார்கள். 

மியான்மரின் ஆயுதப் படையினர், அரசியலமைப்புச் சட்டத்தைக் கடைபிடிப்போம் என கடந்த சனிக்கிழமை உறுதியளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் என்ன பிரச்சனை? 

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்: ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் கைது

பட மூலாதாரம், GETTY IMAGES

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடந்த தேர்தலில் என்.எல்.டி கட்சி மொத்தம் உள்ள இடங்களில் 83 சதவீதம் வெற்றிபெற்றது. இதை பலரும் சூச்சியின் மக்கள் அரசாங்கத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பாகப் பார்த்தார்கள்.

2011-ம் ஆண்டு வரையிலான ராணுவ ஆட்சிக்குப் பிறகு நடத்தப்பட்ட இரண்டாவது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மர் நாட்டின் ராணுவம் இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த நாட்டின் அதிபர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புகாரளித்திருக்கிறது ராணுவம். தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. 

தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் இந்த விவகாரம் தொடர்பாக " நடவடிக்கை எடுக்கப்போவதாக" மியான்மர் ராணுவம் சமீபத்தில் அச்சுறுத்தி இருந்தது. எனவே ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கலாம் என்கிற அச்சம் அப்போதே உண்டானது.

'Coup' என்றால் என்ன?

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்

பட மூலாதாரம், GETTY IMAGES

Coup என்பது ஒரு பிரெஞ்சு மொழிச் சொல். 'தாக்கு' என்பது தான் இதன் நேரடி பொருள்.

சட்டத்துக்குப் புறம்பாக வன்முறை மூலமோ அல்லது அச்சுறுத்தல்கள் மூலமோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கவிழ்ப்பதைத் தான் இவ்வாறு அழைக்கிறார்கள் என்கிறார்கள். 

இப்படி அரசைக் கவிழ்க்கும் செயல்பாட்டில் ஒரு நாட்டின் ராணுவமே ஈடுபட்டால் அதை 'Military Coup' என்கிறார்கள்.

சர்வதேச அளவில் எழும் கண்டனம் 

மியான்மரின் ராணுவ தளபதி மின் ஆங் ஹ்லேங்

பட மூலாதாரம், REUTERS

 
படக்குறிப்பு, மியான்மரின் ராணுவ தளபதி மின் ஆங் ஹ்லேங்

அமெரிக்கா மியான்மரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 

"மியான்மரின் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். மியான்மர் மக்களின் ஜனநாயகம், சுதந்திரம், அமைதி, மேம்பாடு தொடர்பான விருப்பங்களுடன் அமெரிக்கா நிற்கிறது. அந்த நாட்டின் ராணுவம் தங்கள் நடவடிக்கைகளை உடனடியாக பின் வாங்க வேண்டும்" என அமெரிக்காவின் உள்துறைச் செயலர் ஆன்டனி பிலிங்கென் கூறியுள்ளார்.

"மியான்மர் நாட்டின் சட்டத்தை அந்த நாட்டு ராணுவம் மதிக்க வேண்டும். தங்களுக்கிடையிலான பிரச்சனைகளை சட்டத்தின் படி மியான்மர் ராணுவம் தீர்த்துக் கொள்ள வேண்டும். காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்" என ஆஸ்திரேலியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் மரிசே பெய்ன் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-55883024

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மீது மேற்குலகு வைத்திருந்த நம்பிக்கை, ரொஹின்ஹா விவகாரத்துடன், தவிடுபொடி ஆகியதால், இவருடன் மினக்கெடாமல், பலம் மிக்க ராணுவ ஆட்சிக்கே ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

இனி இவர் மீள்வது கடினம்.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இவர் மீது மேற்குலகு வைத்திருந்த நம்பிக்கை, ரொஹின்ஹா விவகாரத்துடன், தவிடுபொடி ஆகியதால், இவருடன் மினக்கெடாமல், பலம் மிக்க ராணுவ ஆட்சிக்கே ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

News-

UK, Prime Minister Boris Johnson
I condemn the coup and unlawful imprisonment of civilians, including Aung San Suu Kyi, in Myanmar.

The Australian government has condemned the actions of Myanmar’s military.

From tiny Luxembourg to European powers France and Germany, leaders and foreign ministers reacted swiftly in statements and on Twitter to criticise the coup, expressing grave concern but avoiding any details of a possible response.
“We call for the immediate release of all those detained and to reestablish the democratic process,” Spanish Prime Minister Pedro Sanchez said.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

News-

UK, Prime Minister Boris Johnson
I condemn the coup and unlawful imprisonment of civilians, including Aung San Suu Kyi, in Myanmar.

The Australian government has condemned the actions of Myanmar’s military.

From tiny Luxembourg to European powers France and Germany, leaders and foreign ministers reacted swiftly in statements and on Twitter to criticise the coup, expressing grave concern but avoiding any details of a possible response.
“We call for the immediate release of all those detained and to reestablish the democratic process,” Spanish Prime Minister Pedro Sanchez said.

 

அது சும்மா சாட்டுக்கு.

12 hours ago, Maruthankerny said:


அம்மாச்சியை தூக்கி உள்ளே போட்டால்தான் நன்று.
இனி சர்வதேசமும் திரும்பி பார்க்காது. 

இலங்கையிலையும் இப்பிடி ஒண்டுநடக்கும் போலை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

News-

UK, Prime Minister Boris Johnson
I condemn the coup and unlawful imprisonment of civilians, including Aung San Suu Kyi, in Myanmar.

The Australian government has condemned the actions of Myanmar’s military.

From tiny Luxembourg to European powers France and Germany, leaders and foreign ministers reacted swiftly in statements and on Twitter to criticise the coup, expressing grave concern but avoiding any details of a possible response.
“We call for the immediate release of all those detained and to reestablish the democratic process,” Spanish Prime Minister Pedro Sanchez said.

 

 

25 minutes ago, வாதவூரான் said:

அது சும்மா சாட்டுக்கு.

'விளங்கியதே', விளங்க நினைப்பவரே ??

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

 

'விளங்கியதே', விளங்க நினைப்பவரே ??

இதற்கு பின்னணியில் இருப்பது சீனா 
ஆகவே இவர்கள் அது தெரியாதுபோல காட்டிக்கொண்டு 
ஜனநாயகம் ஜனநாயகம் கொஞ்சம் கூடுதலாகவே சத்தம் செய்வார்கள்.

சீனா பக்காவாக காலத்தை கணித்து உரிய நேரத்தில் காய் நகர்த்தி இருக்கிறது 
அமெரிக்க புதிய அரசுக்கு வர்த்த உடன்படிக்கை லாபமாக அமைந்தால் போதும் 
ப்ரிட்டனை பிரித்த ஐரோப்பாவுக்கும் அதே நிலைதான் 

பிரிட்டனுக்கு அதோடு இப்போ கொங்கொங் தலையிடியும் சேர்ந்து வந்திருக்கிறது.
 buy some popcorn and enjoy the show

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இதற்கு பின்னணியில் இருப்பது சீனா 
ஆகவே இவர்கள் அது தெரியாதுபோல காட்டிக்கொண்டு 
ஜனநாயகம் ஜனநாயகம் கொஞ்சம் கூடுதலாகவே சத்தம் செய்வார்கள்.

சீனா பக்காவாக காலத்தை கணித்து உரிய நேரத்தில் காய் நகர்த்தி இருக்கிறது 
அமெரிக்க புதிய அரசுக்கு வர்த்த உடன்படிக்கை லாபமாக அமைந்தால் போதும் 
ப்ரிட்டனை பிரித்த ஐரோப்பாவுக்கும் அதே நிலைதான் 

பிரிட்டனுக்கு அதோடு இப்போ கொங்கொங் தலையிடியும் சேர்ந்து வந்திருக்கிறது.
 buy some popcorn and enjoy the show

மூன்று இலட்ச்சம் பேர் இனி வரும் மாதங்களில் வந்து இறங்குவினம் என்கிறார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மியன்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்: சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என உலகநாடுகள் கோரிக்கை

மியன்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.

நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இராணுவம், ஓராண்டுக்கு இது நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

இதனிடையே மியன்மரில் ரஇhணுவப்புரட்சி குறித்து அமெரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

மியன்மர் இராணுவம், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என இந்த நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்த நிலையில், தளபதி மின் ஆங் ஹ்லேங்கிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக மியன்மர் இராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தலைநகரான நேபியேட்டோ மற்றும் முக்கிய நகரமான யாங்கூனின் தெருக்களில் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மியன்மர் நாடாளுமன்றத்தின் கீழவை, இன்று கூட இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டு இராணுவம் தலையிட்டு அக்கூட்டத்தை ஒத்திவைக்க அழைப்புவிடுத்திருக்கிறது.

http://athavannews.com/மியன்மரில்-ஓராண்டுக்கு-ந/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரில் இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை!

 

    by : Anojkiyan

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/rtx8tgm4-720x450.jpg

மியன்மாரில் இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

மியன்மார் நாட்டில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.

நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இராணுவம், ஓராண்டுக்கு இது நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

இதனிடையே இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

மியன்மாரில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல். நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நேரடித் தாக்குதல் இது.

ஜனநாயக அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் மத்தியில் பொருளாதார அபராதங்களை உயர்த்துவதற்கான 2016ஆம் ஆண்டு முடிவை உடனடியாக மதிப்பாய்வு செய்யப்படும்.

இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மியன்மாரில் மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடலாம்’ என கூறினார்.

மியன்மாரில் இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை! | Athavan News

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, Nathamuni said:

இவர் மீது மேற்குலகு வைத்திருந்த நம்பிக்கை, ரொஹின்ஹா விவகாரத்துடன், தவிடுபொடி ஆகியதால், இவருடன் மினக்கெடாமல், பலம் மிக்க ராணுவ ஆட்சிக்கே ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

இனி இவர் மீள்வது கடினம்.   

குடுத்த நோபல் பரிசு என்ன மாதிரி?:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குடுத்த நோபல் பரிசு என்ன மாதிரி?:grin:

மான ரோசம் இருந்தால், திருப்பி கொடுக்கட்டும்...

இந்தியாவை சுத்தி, சீனாக்காரன் போடுறான் கண்ணி வெடிகளை....

அருமை, அருமை.... 

அவர் ஒருத்தர், யோகா எண்டு திரியிறார்.

இன்னோருத்தர், youtube காரரோடே காளான் பிரியாணி சமைத்து, சப்பாணி போடு, இருந்து, வாழை இழையிலை வளிச்சடிக்கிறார்.

சுப்ரமணியஸ்வாமிக்கு குடுக்க வேண்டியதை குடுத்து மகிந்தா மோடிக்கு கொடுத்தார் பாருங்க, சிங்கள தொதல்.... அருமை.

அவன், சீனாக்காரன்.... தீவுப்பக்கம், கரண்ட் கொடுக்கிறன் எண்டு பூந்திடான்... அங்கை நிண்டுகொண்டு, ராமேசுவரத்துக்கு கரண்ட் தேவைப்படுமா எண்டு கேட்கப்போறன்.

கொஞ்ச நாளில, தமிழக மீனவர்கள், சிங்களவன் கடலிலே கொல்லுறான் எண்டதை விட்டுப்போட்டு, சீனாக்காரன் சுடுறான், கொல்லுறான் எண்டு கத்தப்போகுதுகள். அதை நினைச்சா தான் கொஞ்சம் கவலையா கிடக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

கனடா கொடுத்த குடியுரிமை?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

கனடா கொடுத்த குடியுரிமை?

கொடுத்துவிட்டு பறிப்பது கவுரவ குடியுரிமையா
நோபல் பரிசு, ஐரோப்பா பாராளுமன்றத்தால் கொடுக்கபட்ட sakharov பரிசும்  நிரந்திரமானவை.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

கொடுத்துவிட்டு பறிப்பது கவுரவ குடியுரிமையா

இல்லை.  அங்கு வசித்த சிறுபான்மை மக்களை கொன்றவருக்கு, கெளரவம் ஒரு கேடா??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

கனடா கொடுத்த குடியுரிமை?

இரு வருடங்கள் முன்பே பறித்து விட்டார்கள். 

https://www.nytimes.com/2018/10/03/world/asia/aung-san-suu-kyi-canada-citizenship.html 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/2/2021 at 13:58, Nathamuni said:

இவர் மீது மேற்குலகு வைத்திருந்த நம்பிக்கை, ரொஹின்ஹா விவகாரத்துடன், தவிடுபொடி ஆகியதால், இவருடன் மினக்கெடாமல், பலம் மிக்க ராணுவ ஆட்சிக்கே ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

இனி இவர் மீள்வது கடினம்.   

பௌத்தமும் இனப்படுகொலை செய்யும் என்பதற்கு ஈழத்தமிழரும், ரொஹிங்கிய முஸ்லிம்களும் சாட்சிகள்!. பௌத்தத்தை நேசிப்பவர்கள் புரிந்து கொள்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2021 at 17:23, Nathamuni said:

விளங்கியதே', விளங்க நினைப்பவரே ??

அவர்களின் விளங்கும் தன்மை அதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

Governments around the world have condemned the military coup, with Australia, the UK, the US, Canada and Singapore just some countries that have expressed concerns.
US President Joe Biden has warned of a return of sanctions for Myanmar if the military didn’t retreat.
“The United States will stand up for democracy wherever it is under attack,” Mr Biden said, demanding the military “immediately relinquish the power they have seized”.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

பௌத்தமும் இனப்படுகொலை செய்யும் என்பதற்கு ஈழத்தமிழரும், ரொஹிங்கிய முஸ்லிம்களும் சாட்சிகள்!. பௌத்தத்தை நேசிப்பவர்கள் புரிந்து கொள்வார்களா?

Buddhist_sects.png

இந்த தேரவாட புத்தம் கொஞ்சம் மண்டை  கழண்ட பிக்குகளை கொண்டது 
கம்போடியாவில் லட்ஷக்கணக்கான சொந்த மக்களையே கொன்றார்கள் 
மியன்மார் இலங்கையில் சிறுபான்மை இனத்தை கொன்று குவித்தார்கள் 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Maruthankerny said:

கம்போடியாவில் லட்ஷக்கணக்கான சொந்த மக்களையே கொன்றார்கள் 
மியன்மார் இலங்கையில் சிறுபான்மை இனத்தை கொன்று குவித்தார்கள் 

மத கொடியவர்கள்.😡

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மார் இராணுவசதிப்புரட்சி- மியன்மாரை கண்டிக்கும் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை தடுத்தது சீனா

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதை கண்டிக்கும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை நிறைவேற்றுவதை சீனா பயன்படுத்தி தடுத்துள்ளது.

un-security-council.jpg
பாதுகாப்பு சபை செவ்வாய்கிழமை மியன்மார் குறித்து ஆராய்ந்தபோதிலும் சீனாவின் ஆதரவு இல்லாததன் காரணமாக மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கையை கண்டிக்கும் தீர்மானம் சாத்தியமற்றதாக மாறியுள்ளது.
சீனாவிற்கு பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்கள் உள்ளமை  குறிப்பிடத்தக்கது.
மியன்மார் இராணுவத்திற்கு எதிராக தடைகளை விதிப்பது அல்லது சர்வதேச அழுத்தங்களை கொடுப்பது நிலைமையை மேலும் சிக்கலானதாக மாற்றும் என கடந்த சில நாட்களாக சீனா தெரிவித்துவருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளி;ல் இருந்து சீனா நீண்டகாலமாக மியன்மாரை பாதுகாத்து வருகின்றது.

myanmmar-mill-300x300.jpg

மியன்மாரின் நெருங்கிய சகாக்களில் ஒன்றான சீனா அந்த நாடு தனக்கு பொருளாதார ரீதியில் முக்கியத்தும் வாய்ந்தது என கருதுகின்றது.
ரோகிங்யா இனத்தவர்களிற்கு எதிரான படுகொலைகளின் போதும் ஐநாவின் கடும் விமர்சனங்களில் இருந்து  சீனா மியன்மாரை காப்பாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Thinakkural.lk

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய எதுவேண்டுமானாலும் செய்வோம்: ஐ.நா.

மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மியன்மாரில் அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் நிறுவப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தில் இருக்கும் முக்கிய நாடுகள் மூலம் மியன்மார் மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்.

மியன்மார் மக்களின் மனதையும், தேர்தல் முடிவுகளையும் மறுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டை இப்படி நடத்தக் கூடாது. இப்படி முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்பதை மியன்மார் இராணுவத்துக்கு புரிய வைக்க முடியும் என நம்புகிறேன்’ என கூறினார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் விட்டோ பலம் கொண்ட ஓரு நிரந்தர உறுப்பினரான சீனா, மியன்மார் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பைக் கண்டிக்க மறுப்பதால், ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க முடியாதுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக மியன்மாரை, சீனா சர்வதேச விசாரணையிலிருந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது. ரொஹிஞ்சா முஸ்லிம்கள் பிரச்னையின் போது கூட, சீனா ரஷ்யாவோடு இணைந்து மியன்மாரை சர்வதேச விமர்சனங்களிலிருந்து பாதுகாத்தது

http://athavannews.com/மியன்மாரில்-இராணுவ-ஆட்சி/

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.