Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு - கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

கபிதன்! கப்சிப்பாக இருக்கவேணும். எங்கள் குமாரசாமியண்ணை எங்களையும் சேர்த்து Chinese Restaurant  திறக்க எப்பவோ ஐடியா போட்டிட்டார்.🤨 

அப்ப என்னையும் சேர்க்கிறது.. ?

எனக்கு 49% உங்கள் இருவருக்கும் 51% சரியே. நான் எப்பவும் சம பங்கு கேட்கேன். 

எப்படி வசதி..?

(உண்மையில் இன்று காலை, யாழ்ப்பாணத்தில் Chinese Restaurant தொடங்குவது தொடர்பாக என்னுடைய தம்பி முறையானவர் கதைத்திருந்தார். (Idea மட்டும்தான்.. 😂) அவருடன் கதைத்துவிட்டு யாழுக்கு வந்தால் இங்கேயும் பூரண கும்பம் வைத்தது போல ...😂)

  • Replies 127
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பெருமாள் said:

மூன்று மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க சீன நிறுவனம் ஒன்றுக்கு யாழ்.குடா நாட்டில் உள்ள மூன்று தீவுகளை வழங்க கடந்த ஜனவரி 18 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியமை தொடர்பில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

நெடுந்தீவு, நாயினாதீவு மற்றும் அனல்தீவு ஆகியவற்றில் மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க சீன நிறுவனத்திற்கு இடமளித்தமை குறித்தே இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தொலைவில் இருக்கும் தீவுகளை சீனாவுக்கு வழங்குவது தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்தியா கூறியுள்ளது.

எனினும் உரிய விலை மனு கோரலின் அடிப்படையிலேயே சீன நிறுவனம் இந்த திட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் முதலீடுகளை செய்யும் சீன நிறுவனங்கள் அனைத்து அந்நாட்டின் அரச நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/politics/01/268233?ref=home-imp-parsely

ஈழத்தமிழினம் இந்தியாவை அதிகம் நேசித்ததின் விளைவுகள் தான் சிங்களத்தின் இனக்கலவரங்கள் தொடக்கம் முள்ளிவாய்க்கால் முடிவு வரைக்கும் நீறாக்கி முடித்தது.

எமது தொண்டை குழிக்குள் நஞ்சு வைத்த கிந்தியா கதற வேண்டும். அதை பார்த்து ஈழத்தமிழினம் பொங்கல் வைக்க வேண்டும்.

ஈழத்தமிழர்கள் வீட்டுக்கு வீடு காந்தி,நேரு ஆகியோரின் படங்களை கூட தொங்கவிட்டார்களே.ஒரு சிங்கள வீட்டில் இப்படி காணமுடியுமா???? அந்த நன்றி  கூட இல்லாமல் எம்மை அழித்தொழித்தீர்களே. அந்த இயற்கை கூட மன்னிக்காது.மன்னிக்கக்கூடாது.

தமிழ்நாட்டு மக்களே நலமோடு/அவதானமாக இருங்கள். கிந்தியர்களின் அடுத்த இலக்கு நீங்கள் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அண்ணெய்  அடுத்த ஐநா விசாரணைக்கு முன்பு பேருக்குதன்னும்  புலி திரும்பி வந்து குண்டு வைக்கணும் அதுதான் கோத்தாவுக்கும் டெல்லிக்கும்  இருக்கும் இப்போதைய குறி இல்லாத முஸ்லீம் அமைப்பை கொண்டுவந்து குண்டுவைத்த கோத்தாவுக்கு இந்த வேலை இலகுவானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, பெருமாள் said:

அண்ணெய்  அடுத்த ஐநா விசாரணைக்கு முன்பு பேருக்குதன்னும்  புலி திரும்பி வந்து குண்டு வைக்கணும் அதுதான் கோத்தாவுக்கும் டெல்லிக்கும்  இருக்கும் இப்போதைய குறி இல்லாத முஸ்லீம் அமைப்பை கொண்டுவந்து குண்டுவைத்த கோத்தாவுக்கு இந்த வேலை இலகுவானது.

இதற்கு நமது அரசியல்வாதிகளும் பலி ஆகின்றார்கள்

அல்லது துணை போகின்றார்கள்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

இது பகிடி அல்ல.

சீனர்களின் ஓர் பகுதி அல்லது பிரதேச மக்கள் தான் நாயை உணவாக எடுப்பது. 

பாம்பு சீனர்களால் அல்ல, வியட்நாயரே முக்கியதுவம் கொடுப்பது.

சீனர்களின் சனத்தொகை பெரிது என்பதால், வெளியாருக்கு அருவருப்பான உணவு வகைகளை சீனர்கள் எல்லோரும் விரும்புவதாக எடுத்து கொள்வது.

ஈழத்தமிழர்களுக்கு பொதுவாக மற்ற மக்கள் பற்றிய அறிவு குறைவு. இலங்கை்கு வெளியில் போகாத சிங்களவரில் சிலருக்கு  உள்ள மற்ற மக்கள் பற்றிய அறிவு, கனடியராகவும் ஐரோப்பியராகவும் உள்ள பல ஈழத்தமிழரது அறிவிலும் பார்க்க விசாலமானது. ஈழத்தமிழர் இராஜதந்திர உலகில் தோற்றுப்போனதற்கு இதுவும் ஒரு காரணம். இன்றும் கூட,  சீனா பற்றிய எமது தலைவர்களின் அறிவு கூட சூனியத்துக்கே நெருக்கமானது.

Edited by கற்பகதரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இதற்கு நமது அரசியல்வாதிகளும் பலி போகின்றார்கள்.

ஆம் இது இரண்டாவது தடவை உசுப்பேத்தல் நடக்குது அதற்கு இன்று நடந்த சம்பவங்களே சாட்சி .கிந்தியர்களின் நாட்டு நலனுக்கு எம்மை பலிகடா ஆக்குகிறார்கள் உணர்ச்சி அரசியல் மூலம் .

Just now, கற்பகதரு said:

ஈழத்தமிழர்களுக்கு பொதுவாக மற்ற மக்கள் பற்றிய அறிவு குறைவு. இலங்கை்கு வெளியில் போகாத சிங்களவரில் சிலருக்கு  உள்ள மற்ற மக்கள் பற்றிய. அறிவு, கனடியராகவும் ஐரோப்பியராகவும் உள்ள பல ஈழத்தமிழரது அறிவிலும் பார்க்க விசாலமானது. ஈழத்தமிழர் இராஜதந்திர உலகில் தோற்றுப்போனதற்கு இதுவும் ஒரு காரணம். இன்றும் கூட,  சீனா பற்றிய எமது தலைவர்களின் அறிவு கூட சூனியத்துக்கே நெருக்கமனது.

ஆதாரம் அல்லது எடுத்துக்காட்டு ஏதாவது தங்களிடம் உள்ளதா ?

சிங்களவருக்கு அறிவு இருந்தால் இந்தளவு கடனில் அந்த தேசம் தத்தளிக்காது .சொறிலங்கனுக்கு  கொடி  பிடிக்கணும் என்றால் இப்படி கண்ணைமூடிக்கொண்டு புகழக்கூடாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

அப்ப என்னையும் சேர்க்கிறது.. ?

எனக்கு 49% உங்கள் இருவருக்கும் 51% சரியே. நான் எப்பவும் சம பங்கு கேட்கேன். 

எப்படி வசதி..?

(உண்மையில் இன்று காலை, யாழ்ப்பாணத்தில் Chinese Restaurant தொடங்குவது தொடர்பாக என்னுடைய தம்பி முறையானவர் கதைத்திருந்தார். (Idea மட்டும்தான்.. 😂) அவருடன் கதைத்துவிட்டு யாழுக்கு வந்தால் இங்கேயும் பூரண கும்பம் வைத்தது போல ...😂)

உல்லாச பயணத்துறைக்கும் மீன் வளர்ப்பு சம்பந்தமாகவும் அத்திவாரம் போடப்படுகின்றது.

fuzk.png

நீங்கள் என்னடாவெண்டால் ......😁

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

சிங்களவருக்கு அறிவு இருந்தால் இந்தளவு கடனில் அந்த தேசம் தத்தளிக்காது .

சிறிலங்காவிலும் பார்க்க பல்லாயிரம் கோடிகள் அமெரிக்கா சீனாவிடம் கடன் பட்டிருக்கிறதே? ஓ.... அமெரிக்கருக்கும் அறிவில்லை என்கிறீர்களா? உண்மையாகத்தான் இருக்கும். ஈழத்தமிழர்கள் சாதித்தது போல இவர்கள் எவரும் எந்த வெற்றியும் கண்டதில்லை என்பது உண்மைதான். அது சரி ... எப்போது கனவுலகில் இருந்து மீள்வதாக உத்தேசம்? 😃

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

நாயாய், பேயாய் ஈழத்தமிழன் இவ்வளவு காலமாய் புலம்பியது போல இந்தியாவும் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஒன்று ஐ. நாவில் சிங்களவனை மாட்டி விடுவது. அப்படிச்செய்தால் சிங்களவன் இவரையும் காட்டிக்கொடுப்பான். மற்றயது, அமெரிக்காவுடன் சேர்ந்து மூன்றாம் உலகப்போரை தொடங்குவது. இந்தியா இப்போ ஆப்பிழுத்த குரங்கு. எதை அடைய நினைத்து தமிழரை வைத்து சொக்கட்டான் ஆடியதோ, அதையே வலிந்து இழந்து முழிக்குது. எந்த வழியால் போனாலும் இந்தியாவுக்குதான்  ஆப்பு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

சிறிலங்காவிலும் பார்க்க பல்லாயிரம் கோடிகள் அமெரிக்கா சீனாவிடம் கடன் பட்டிருக்கிறதே? ஓ.... அமெரிக்கருக்கும் அறிவில்லை என்கிறீர்களா? உண்மையாகத்தான் இருக்கும். ஈழத்தமிழர்கள் சாதித்தது போல இவர்கள் எவரும் எந்த வெற்றியும் கண்டதில்லை என்பது உண்மைதான். அது சரி ... எப்போது கனவுலகில் இருந்து மீள்வதாக உத்தேசம்? 😃

உண்மைதான் யார் இல்லை என்றது வாங்கிய கடனை அடைக்க  தில் இருப்பவர்கள் அவர்கள் .

சொறிலங்கா அப்படியா வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட  முடியாமல் அம்பந்தோட்டையை  தாரை வார்த்தபின்னும் விசுவாசம் உங்கள் கண்ணை மறைக்கிறது .

கனவுலகில் நான் அல்ல நீங்கள்  தான் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

சிறிலங்காவிலும் பார்க்க பல்லாயிரம் கோடிகள் அமெரிக்கா சீனாவிடம் கடன் பட்டிருக்கிறதே? ஓ.... அமெரிக்கருக்கும் அறிவில்லை என்கிறீர்களா? உண்மையாகத்தான் இருக்கும். ஈழத்தமிழர்கள் சாதித்தது போல இவர்கள் எவரும் எந்த வெற்றியும் கண்டதில்லை என்பது உண்மைதான். அது சரி ... எப்போது கனவுலகில் இருந்து மீள்வதாக உத்தேசம்? 😃

உங்கள் அறிவு பல சந்தர்ப்பங்களில்...என்னைப் பிரமிக்க வைத்திருக்கின்றது, கற்பகதரு...!

இப்போதும் அப்படித்தான்...!

நாடுகள் கடன் பெறுவதும்...கடன் கொடுப்பதும் மிகவும் சாதாரணமாக நடக்கும் ஒரு விடயம் தான்..!

வங்கிகளில் கடன் பெறுவது வேறு..! அடகு வைத்துக் கடன் பெறுவது என்பது வேறு...!

சிறிலங்கா செய்வது அடகு வைத்துக் கடன் பெறுவது..!

இப்போது அடகு வைக்க ஒன்றுமில்லாத நிலையில்....இறைமையை அடகு வைக்கின்றது..!

அமெரிக்காவுக்குக் கடனைத் திரும்பச் செலுத்தும் வல்லமை உண்டு...!

சிங்களத்துக்கு வங்காள விரிகுடாவை விடவும் பெரிய வாய் மட்டும் தான் இப்போது உள்ளது...! 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

சொறிலங்கா அப்படியா வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட  முடியாமல் அம்பந்தோட்டையை  தாரை வார்த்தபின்னும் விசுவாசம் உங்கள் கண்ணை மறைக்கிறது .

கனவுலகில் நான் அல்ல நீங்கள்  தான் .

இலங்கையர்க்கு பெறுமதியில்லாத அம்பாந்தோட்டையை பல கோடிகளுக்கு விற்று அந்த காசில் ஆயுதம் வாங்கி  வெல்ல முடியாத புலிகளையும் வென்று இந்தியாவையும் குப்பைக்கூடைக்குள் போட்டிருக்கிறார்களே?

3 minutes ago, புங்கையூரன் said:

...!சிங்களத்துக்கு வங்காள விரிகுடாவை விடவும் பெரிய வாய் மட்டும் தான் இப்போது உள்ளது...! 

வாயிருந்தால் வங்காளம் போகலாம்.😄  இந்த வாயை மட்டும் வைத்து எத்தனை நாடுகளையும் எத்தனை கோடிகளையும் சுத்தோ சுத்தென்று சுத்துகிறார்கள் பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

இலங்கையர்க்கு பெறுமதியில்லாத அம்பாந்தோட்டையை பல கோடிகளுக்கு விற்று அந்த காசில் ஆயுதம் வாங்கி  வெல்ல முடியாத புலிகளையும் வென்று இந்தியாவையும் குப்பைக்கூடைக்குள் போட்டிருக்கிறார்களே?

வாயிருந்தால் வங்காளம் போகலாம்.😄  இந்த வாயை மட்டும் வைத்து எத்தனை நாடுகளையும் எத்தனை கோடிகளையும் சுத்தோ சுத்தென்று சுத்துகிறார்கள் பாருங்கள்!

மீண்டும் புல்லரிக்கின்றது, கற்பகதரு...!  நன்றி...!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புங்கையூரன் said:

மீண்டும் புல்லரிக்கின்றது, கற்பகதரு...!  நன்றி...!

உங்கள் புல்லரிப்பை அடகு வைத்து எவ்வளவு கடன் எடுக்கலாம்? 😁

கடனை திருப்பி செலுத்தியபின் புல்லரிப்பு மீண்டும் உங்களுக்கு மீள தரப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

இலங்கையர்க்கு பெறுமதியில்லாத அம்பாந்தோட்டையை பல கோடிகளுக்கு விற்று அந்த காசில் ஆயுதம் வாங்கி  வெல்ல முடியாத புலிகளையும் வென்று இந்தியாவையும் குப்பைக்கூடைக்குள் போட்டிருக்கிறார்களே?

புலியை அடக்க எல்லா நாடுகளில்  பிச்சை எடுத்தது  2009 க்கு முதல்  வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் சைனா 2017 அடாத்தாக 15 ஆயிரம் ஏக்கர் நிலத்துடன் துறைமுகத்தையும் பறித்துக்கொண்டதே உண்மை அதன் பின் பலதடவை ராஜபக்சே ஒப்பந்த விதிகளை மாற்ற முயற்சித்து முடியாமல் போனது இவ்வளவும் 8 வருடங்களின் பின் நடந்த கதை .

  அப்படியா நாங்களும் பணம் தருகிறேம் சீனாக்காரனை விட அதிக பணமாம்  சிங்களவனின் பக்கம் 15ஆயிரம் ஏக்கர் வாங்கி தரமுடியுமா என்று கேட்டு சொல்லுங்க என்கிறார்கள் வேறை நாடுகள் டீல்  ஓகேயா இலங்கையருக்கு பெறுமதி இல்லாத இடம் என்றாலும் பரவாயில்லையாம் .😀

18 minutes ago, கற்பகதரு said:

வாயிருந்தால் வங்காளம் போகலாம்.😄  இந்த வாயை மட்டும் வைத்து எத்தனை நாடுகளையும் எத்தனை கோடிகளையும் சுத்தோ சுத்தென்று சுத்துகிறார்கள் பாருங்கள்!

ஒருத்தன் நெடுகிலும் களவெடுக்க  முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

உங்கள் புல்லரிப்பை அடகு வைத்து எவ்வளவு கடன் எடுக்கலாம்? 😁

கடனை திருப்பி செலுத்தியபின் புல்லரிப்பு மீண்டும் உங்களுக்கு மீள தரப்படும்.

ம்ம்...சின்ன வயதில் படித்த ஒரு கதை தான் நினைவுக்கு வருகின்றது..!

ஒரு ஆசிரியர் மாட்டைப் பற்றி எழுதும் படி மாணவனுக்குக் கூறுகின்றார்..!

மாணவனுக்கோ மாட்டைப் பற்றி அதிகம் எழுத வரவில்லை!..!

உடனே அவனது மூளை வேலை செய்கின்றது..!

மாட்டைக் கொண்டு போய் மரத்தில் கட்டுகின்றான்..!

பின்பு மரத்தைப் பற்றிக் கட்டுரையில் விளாசி தள்ளுகிறான்!😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

மாட்டைக் கொண்டு போய் மரத்தில் கட்டுகின்றான்..!

பின்பு மரத்தைப் பற்றிக் கட்டுரையில் விளாசி தள்ளுகிறான்!😁

நன்றாக மாடும் மரமும் பற்றி விளாசித தள்ளியிருக்கிறீர்கள். மாணவனாக இருக்கும் போதே இதை நீங்கள் கற்றுக் கொண்டதால் மிகவும் இலாவகமாக செய்திருக்கிறீர்கள்.  😁

சீனாவின் தந்திரங்களில் ஒன்று அரசாங்கமே இப்படியான சர்வதேச வேலைத்திட்ட்ங்களில் போட்டியிட்டு மிக குறைந்த விலையில் திட்ட்ங்களை பொறுப்பெடுப்பது. இவர்கள் வெவேறு பெயர்களில் இயங்கினாலும் எல்லாம் சீன அரசின் கைகளிலேயே இருக்கிறது. எனவே இதன் வேலைப்பாடுகள் எல்லாம் தராதரமற்றவையாகவே இருக்கும். இங்கும் அப்படிதான் இருக்கப்போகின்றது.

இப்போது யாழ் மாவட்த்தில் கடல் நீரை நன்னீராக்கி (RO வாட்டர்) விநியோகிக்கும் திட்ட்துக்கு அனுமதி  கிடைத்திருக்கிறது. அந்த திட்ட்துக்கு ஆலோசகரை இருக்கும் ஒரு அதிகாரியிடம் பேசியபோது சிலவற்றை கூறினார்.

சர்வதேச விலைகொரலை விளம்பரம் செய்யும்போது சீன மிகவும் குறைந்த விலையில் எடுப்பதாகவும் அதனால் இம்முறை மிகவும் கடுமையான விதிமுறைகளை பின்பற்றி விலை கோரல் கோரப்பட்ட்தாகவும் கூறினார். இதனால்தான் அந்த திடடம் பிரெஞ்சு நிறுவனம் ஒன்றிட்கு வழங்கப்பட்டுள்ளது. இல்லாவிட்ட்தால் இந்த திடடமும் அவர்களுக்குத்தான் கிடைத்திருக்கும்.

அதைத்தான் முன்னரும் எழுதி இருந்தேன் , சீன என்பது நேர்மையற்ற முறையில் முன்னேறிய ஒரு நாடு என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்களுக்கு பொதுவாக மற்ற மக்கள் பற்றிய அறிவு குறைவு. இலங்கை்கு வெளியில் போகாத சிங்களவரில் சிலருக்கு  உள்ள மற்ற மக்கள் பற்றிய அறிவு, கனடியராகவும் ஐரோப்பியராகவும் உள்ள பல ஈழத்தமிழரது அறிவிலும் பார்க்க விசாலமானது. ஈழத்தமிழர் இராஜதந்திர உலகில் தோற்றுப்போனதற்கு இதுவும் ஒரு காரணம். இன்றும் கூட,  சீனா பற்றிய எமது தலைவர்களின் அறிவு கூட சூனியத்துக்கே நெருக்கமானது.

8 hours ago, பெருமாள் said:

ஆதாரம் அல்லது எடுத்துக்காட்டு ஏதாவது தங்களிடம் உள்ளதா ?

சிங்களவருக்கு அறிவு இருந்தால் இந்தளவு கடனில் அந்த தேசம் தத்தளிக்காது .சொறிலங்கனுக்கு  கொடி  பிடிக்கணும் என்றால் இப்படி கண்ணைமூடிக்கொண்டு புகழக்கூடாது .

பெருமாள், நான் இங்கு யாருக்கு அறிவு கூட அல்லது குறைய என்பதை வாதிட வரவில்லை.

ஆனால், கற்பகதரு சொன்னது ஓர் பகுதி அளவேனும் உண்மை இருக்கவேண்டும் என்பதே எனது அனுபவம்.

இதன் காரணம் (நன் நினைக்கிறன்), எமது சமூகத்தின் best minds நீண்டகாலம்  ஓர் குறிப்பிட்ட துறைகளை (அரச நிர்வாகம், மருத்துவம், சட்டம்,  பொறியியல்) போன்றவை  குறி வைத்ததால் என்று நினைக்கிறன். Accountancy யிலும் வர்த்தக (commerce) பக்கம் போகாமல், ஓர் குறிப்பிட்ட வட்டதிட்ற்குள் நின்றதும், நிற்பதும். 

சொறி லங்காவும் எமது வளர்ந்து வந்த, வரும் மாணவர்கள், மற்ற துறையினுள் போகாமல் தவிர்த்தற்கு ஒரு காரணம் என்பதையும் சொல்ல வேண்டும்.    

உ.ம். 1962 ஹிந்தியா- சீன சண்டையில், 14 வயதான சிலோனே சீனாவை பிடித்த சில நிலப்பரப்புகளை கிந்தியாவுக்கு விட்டுக் கொடுக்கும் முடிவுக்கு இட்டு சென்றது.

8 hours ago, கற்பகதரு said:

இலங்கையர்க்கு பெறுமதியில்லாத அம்பாந்தோட்டையை பல கோடிகளுக்கு விற்று அந்த காசில் ஆயுதம் வாங்கி  வெல்ல முடியாத புலிகளையும் வென்று இந்தியாவையும் குப்பைக்கூடைக்குள் போட்டிருக்கிறார்களே?

இது முற்றான facts இல்லை என்பதே நான் அறிந்தது . அதற்கு முதல், ஜப்பான், நோர்வ இடம் புலிகள்-சொறி லங்கா சமாதான பேரம் சரி வந்தால்   2.5 பில்லியன் dollars ஐ பகுதி இலகு கொடை ஆகவும், மிகுதி இலகு கடனாகவும் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து இருந்தது

ஆனால், ஜப்பான் இரகசியாமாக அதற்கு முதலே இலகு கடனாக கொடுத்து விட்டது, அகாசி ஏன் அதனை தரம் வந்து சென்றார் என்பதற்கு இந்த 2.5   பில்லியன் dollars கடன் பேரமே காரணம். அகாசியின் மருமகனிற்கு அந்த கடனில் ஓர் வெட்டு  இருந்தது consultation fee ஆகவும், நிபந்தனைகளை வெகுவாக குறைபதற்கும்.  

சீன, சொறி சிங்களத்திடம்  ஜப்பான் பணம் இருப்பது தெரிந்து, ஆயுதம் விற்றது. அனால், அம்பாந்தோட்டை கடன் சொறி சிங்களத்தின் பெயரில் சீன கட்டுமான நிறுவனங்களுக்கு (CCCC அதன் உதிரி கிளைகளும் ) கொடுத்தது. அதி பக்கசாக்களுக்கு வெட்டு இருந்தது வேறு விடயம்.   

இதன் முழுமுதல் காரணம் கிந்தியாவே. யுத்தம் முடியும் தறுவாயில் (2008 - 2009) balance of payments பிரச்சனைக்கு முண்டு கொடுத்தது கிந்தியா.

IMF 2.93 பில்லியன் டாலர்ஸ் கடனிட்ற்கு (2009) பல அரசியல் நிபந்தனைகளை US மறைமுகமாக விதித்தது. IMF இல் கடன் கடினம் என்றால், கிந்தியா அதை கொடுக்கும் என்று கிந்தியா சொல்ல, சொறி சிங்களம் இலகுவாக கடன் நிபந்தனைகளை முறியடித்து விட்டது.    
         
இதுவும் ஒரு கரணம், ஜப்பான் உம்,கிந்தியவும் எல்லாம் போச்சே என்று தலையில் கைவைப்பதற்கு.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kadancha said:

1962 ஹிந்தியா- சீன சண்டையில், 14 வயதான சிலோனே சீனாவை பிடித்த சில நிலப்பரப்புகளை கிந்தியாவுக்கு விட்டுக் கொடுக்கும் முடிவுக்கு இட்டு சென்றது.

புதிய விடயம் அறியதந்ததுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

சொறிலங்கா அப்படியா வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட  முடியாமல் அம்பந்தோட்டையை  தாரை வார்த்தபின்னும் விசுவாசம் உங்கள் கண்ணை மறைக்கிறது .

நீங்கள் சொறி சிங்களத்தை புரிந்து கொள்ளவில்லை. சிங்களத்தின் வரலாற்றை கூர்ந்து பார்த்தல் இது புலப்படும். 

யார் அமைந்தோட்டையை சீனாவுக்கு கொடுத்தது? 

மேற்கும்,  கிந்தியவும் தமக்கு ஆதரவாக இருக்கும், அப்படி இல்லாவிட்டால், சீனாவுக்கு தடுப்பாக இருக்கும் என்று எண்ணிய நல்லாட்சி, ரணிலும், மாதிரியும்.    

கொடுத்ததின் நோக்கங்கள் பல. மனித உரிமை பிரச்னை (மேற்கும் தனது பிடியாக இதைவைத்து இருக்கிறது), பொருளாதரம், கடன், பாதுகாப்பு சபையில் சீன வீட்டோ.

முக்கியமாக, கிந்தியவும், மேற்கும் சிங்களத்துக்கு ஏற்பு  அல்லாத ஒன்றை சாதிக்க வேண்டுமாயின், மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டும். இதில் தமிழர் பிரச்னையும் அடக்கம். 

மற்றது, கிந்தியா அதட்ட முடியாது.    இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

இப்பொது கிழக்கு கொள்கலன் துறை தாண்டி நெடுந்தீவில் வந்து நிற்கிறது.

சிங்களத்தின் உள் விருப்பம் இப்போதைய நிலையில் சீன இலங்கை தீவில் நிலை கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kadancha said:

சிங்களத்தின் உள் விருப்பம் இப்போதைய நிலையில் சீன இலங்கை தீவில் நிலை கொள்ள வேண்டும்

அப்படியான ஒரு நிலையில் தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் தேச அமைப்புகள், தமிழ் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டும்.. பேசாமல் நடப்பதை பார்த்துக்கொண்டு இருப்பது நன்மை தருமா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படியான ஒரு நிலையில் தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் தேச அமைப்புகள், தமிழ் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டும்.. பேசாமல் நடப்பதை பார்த்துக்கொண்டு இருப்பது நன்மை தருமா?

இதை மறுவளமாக பார்த்தல், சிங்களம் மேற்கு அல்லது கிந்தியாவை கொண்டுவந்தால் எப்படி அதை எதிர்கொள்வோம்? 

சிங்களம் மேற்கு அல்லது கிந்தியாவை கொண்டுவந்தால் பெரும்பாலான தமிழர்களின் பிரதிபலிபு எப்படி இருக்குமோ, அவ்வாறே சீனாவுக்கும் இருக்க வேண்டும் என்பதே சரியான  நிலைப்பாடாக இருக்கும் என்று நினைக்கிறன்.
.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

இதை மறுவளமாக பார்த்தல், சிங்களம் மேற்கு அல்லது கிந்தியாவை கொண்டுவந்தால் எப்படி அதை எதிர்கொள்வோம்? 

சிங்களம் மேற்கு அல்லது கிந்தியாவை கொண்டுவந்தால் பெரும்பாலான தமிழர்களின் பிரதிபலிபு எப்படி இருக்குமோ, அவ்வாறே சீனாவுக்கும் இருக்க வேண்டும் என்பதே சரியான  நிலைப்பாடாக இருக்கும் என்று நினைக்கிறன்.
.

மீண்டும் இந்தி ஒரு  ஒப்பந்தத்துக்கு தவிக்கும்

ஆனால்  இந்தமுறை அவர்களது கடிவாளம்  சிங்களத்துக்காக  இருக்:கும்

இதை தமிழர்  தரப்பு  எவ்வாறு  எதிர்கொள்ளப்போகிறது??

எவற்றை கேள்வியாக  வைக்கப:;போகிறது??

என்பதே  பிரதானம்.

தமிழர்  தரப்புக்கு தலைவர்  அனைத்த  நன்மை  தீமை

துரோகம் முதுகில் குத்துதல்

பெறக்கூடியவை

பெறமுடியாதவை

அனைத்தையும் காட்டி சென்றுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Robinson cruso said:

1) சீனாவின் தந்திரங்களில் ஒன்று அரசாங்கமே இப்படியான சர்வதேச வேலைத்திட்ட்ங்களில் போட்டியிட்டு மிக குறைந்த விலையில் திட்ட்ங்களை பொறுப்பெடுப்பது. இவர்கள் வெவேறு பெயர்களில் இயங்கினாலும் எல்லாம் சீன அரசின் கைகளிலேயே இருக்கிறது.

2) எனவே இதன் வேலைப்பாடுகள் எல்லாம் தராதரமற்றவையாகவே இருக்கும். இங்கும் அப்படிதான் இருக்கப்போகின்றது.

இப்போது யாழ் மாவட்த்தில் கடல் நீரை நன்னீராக்கி (RO வாட்டர்) விநியோகிக்கும் திட்ட்துக்கு அனுமதி  கிடைத்திருக்கிறது. அந்த திட்ட்துக்கு ஆலோசகரை இருக்கும் ஒரு அதிகாரியிடம் பேசியபோது சிலவற்றை கூறினார்.

சர்வதேச விலைகொரலை விளம்பரம் செய்யும்போது சீன மிகவும் குறைந்த விலையில் எடுப்பதாகவும் அதனால் இம்முறை மிகவும் கடுமையான விதிமுறைகளை பின்பற்றி விலை கோரல் கோரப்பட்ட்தாகவும் கூறினார். இதனால்தான் அந்த திடடம் பிரெஞ்சு நிறுவனம் ஒன்றிட்கு வழங்கப்பட்டுள்ளது. இல்லாவிட்ட்தால் இந்த திடடமும் அவர்களுக்குத்தான் கிடைத்திருக்கும்.

3) அதைத்தான் முன்னரும் எழுதி இருந்தேன் , சீன என்பது நேர்மையற்ற முறையில் முன்னேறிய ஒரு நாடு என்று. 

1) அது சீனாவின் வியாபாரத் தந்திரம். கேள்வி மனுக் கோரலில் குறைந்த offer க்கே திட்டத்தைக் கொடுப்பார்கள். 

2) தரம் குறைவாக இருக்கும் என்பது உங்கள் அனுமானம். அதற்குத் தரவுகள் ஏதும் இல்லை. 

3) உங்களுக்கு சீனாவை தனிப்பட்ட ரீதியில் பிடிக்காது என்பதற்காக அவர்களின் வளர்ச்சியை மிகவும் இகழ்வுடன் நோக்குகிறீர்கள். 

உங்களுக்கான எனது சிபாரிசு; சீனாவின் வரலாறு அதன் வளர்ச்சி தொடர்பான புத்தகங்கள் கட்டுரைகளைத் தேடி வாசியுங்கள். அப்போது நீங்கள் சீனா தொடர்பில் நியாயமான அல்லது மதிப்பு மிக்க கருத்தைக் கொண்டிருக்கக் கூடும். 

👍

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.