Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க கூட்டணியில் இந்தமுறை எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றன... எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., பிரேமலதா, அன்புமணி ஆகியோர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்கிற விவரங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

பதினைந்தாவது தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் வரும் மே மாதத்தோடு நிறைவடையவிருக்கிறது. ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத முதல் வாரத்திலோ தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. பிரதான கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகத்தையும் தொடங்கிவிட்டன. ஆனால், தேர்தல் காலத்தில் மிக நெருக்கடியான காலக்கட்டம் என்பது தொகுதிப் பங்கீடுதான். ஓர் இடம், இரண்டு இடங்களுக்காகக் கடைசி நேரத்தில் எதிர்க் கூட்டணிக்குத் தாவும் காட்சிகள் பலமுறை அரங்கேறியிருக்கின்றன. மாலையில் ஒரு கட்சியோடு கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி, காலை விடிந்ததும் கையில் பூங்கோத்தோடு, எதிரணித் தலைவரைச் சந்திக்கும் காட்சிகளைக் காண தமிழக மக்கள் தயாராக இருக்கவேண்டும்.

தி.மு.க கூட்டணிக் கட்சிகள்
 
தி.மு.க கூட்டணிக் கட்சிகள்

தற்போதைய நிலவரப்படி, தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க.,கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இடங்கள் ஒதுக்கீடு நடக்கும்போது, இதில் பல மாற்றங்கள் நிகழவும் வாய்ப்பிருக்கிறது.

தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதை இந்நேரம் நிச்சயமாக முடிவு செய்திருக்கும். ஆனால், இன்னும் சில நாள்களில், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள். இந்தநிலையில், அ.தி.மு.க கூட்டணியில் இந்த முறை எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து, அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள்
 
அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள்

``எங்கள் கட்சியின் சார்பில் இந்த முறை 170-172 இடங்களில் நிச்சயமாகப் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை, பா.ஜ.க-வுக்கு 20 இடங்கள், பா.ம.க-வுக்கு 22, தே.மு.தி.க-வுக்கு 10, த.மா.கா-வுக்கு 5, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு இடங்கள், தவிர பேராசியர் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியும் எங்கள் கூட்டணிக்கு வரவிருக்கிறது. அவர்கள் வரும்பட்சத்தில் அவர்களுக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய மூவரும் தொடர்ச்சியாக சசிகலாவை முன்னிறுத்திப் பேசிவருகின்றனர். அதனால், அவர்களுக்கு இந்த முறை நிச்சயம் சீட் கிடையாது.

பா.ஜ.க முதலில் 40 இடங்கள் கேட்டு பிறகு முப்பது இடங்களுக்கு வந்து நின்றார்கள். ஆனால், `அதிக இடங்களை வாங்கி தேவையில்லாமல் தி.மு.க ஜெயிப்பதற்கு வழிவகுத்துவிடாதீர்கள். பா.ஜ.க வேட்பாளரைவிட, அ.தி.மு.க நிற்கும்போது தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்'' என முதல்வர் சொன்னதும் பா.ஜ.க-வினர் ஓரளவுக்கு இசைந்துவந்திருக்கின்றனர். அதிலும் நாங்கள் கேட்கும் தொகுதிகளைத்தான் ஒதுக்க வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தனர். ஆனால், 10 தொகுதிகள் அவர்கள் கேட்கும் இடங்களும், மீதமுள்ள 10 தொகுதிகள் நாங்கள் சொல்லும் இடங்களிலும் நிற்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது, 72 தொகுதிகளில் 30,000-க்கும் அதிகமான வாக்குகளை வாங்கியிருக்கின்றனர். 22 தொகுதிகளில் 40,000-க்கும் அதிகமாகவும் 10 தொகுதிகளில் 50,000-க்கும் அதிகமாகவும் வாங்கியிருக்கின்றனர். 80 தொகுதிகளில் 15-20 ஆயிரம் வாக்குகளையும் 50 தொகுதிகளில் 5-10 ஆயிரம் வாக்குகளையும் வாங்கியிருக்கின்றனர். ஆகமொத்தம், 100 தொகுதிகளில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக பா.ம.க-வின் வாக்குகளே இருக்கின்றன. அவர்கள், எங்கள் கூட்டணியில் இருப்பது எங்களுக்குக் கூடுதல் பலம்தான்.

ஆனால், தே.மு.தி.க எங்கள் கூட்டணியில் நீடிப்பதை துணை முதல்வர் விரும்பவில்லை. பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில், தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்கவைக்கும் அவர்கள் நம்முடன் எதற்கு என ஏகக் கடுப்பில் இருக்கிறார். ஆனால், முதல்வர்தான் பரவாயில்லை இருந்துவிட்டுப் போகட்டும் எனச் சொல்லியிருக்கிறார். அதேவேளையில், நாம் தமிழர் கட்சியுடனும் பேசிவருகிறோம். அவர்களுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை வாக்குகள் இருக்கின்றன. இழுபறியாக இருக்கும் இடங்களில் அந்த வாக்குகள் எங்கள் வெற்றிக்குக் கைகொடுக்கும் என நினைக்கிறோம். தே.மு.தி.க-வைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குவங்கி இருக்கிறது. அதனால், நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு 10 இடங்களை ஒதுக்கிவிட்டு, தே.மு.தி.க வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி
 
நாம் தமிழர் கட்சி

அதேபோல, தமிமுன் அன்சாரி, தி.மு.க கூட்டணியின் பக்கம் போவதால், மனிதநேய மக்கள் கட்சி எங்கள் கூட்டணிக்கு வரும் நிலையில் இருக்கிறது. அதுபோக, தி.மு.க கூட்டணியில் ஐந்து இஸ்லாமியக் கட்சிகள் இருப்பதால், எங்களுடன் வருவதையே ஜவாஹிருல்லாவும் விரும்புகிறார். பா.ஜ.க எங்கள் கூட்டணியில் இருந்தாலும், எங்கள் தலைமையில்தான் கூட்டணி இருப்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் வருவது எங்கள் கூட்டணிக்குக் கூடுதல் பலம்'' என்கிறார்கள்.

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?| Is ADMK alliance finalized seat sharing (vikatan.com)

  • Replies 93
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நா த க எந்தக்காலத்திலும் கூட்டு போடுவதாயில்லை என்று சொன்ன பின்பும், இந்த திமுக, பின்னணி விகடன், சும்மா அள்ளி விடுதே.

4 minutes ago, Nathamuni said:

நா த க எந்தக்காலத்திலும் கூட்டு போடுவதாயில்லை என்று சொன்ன பின்பும், இந்த திமுக, பின்னணி விகடன், சும்மா அள்ளி விடுதே.

கண்டிப்பாக ஒரு காலத்தில் அது நடக்கும். நீங்கள் அப்படி நடக்காது எனும் நம்பிக்கையிலும், நான் அப்படி நடக்கும் எனும் நம்பிக்கையிலும் இருப்போம்.

எனக்கு இருக்கும் ஒரே ஐயம் ஏன் அவர்கள் இன்னும் கூட்டணி சேரவில்லை என்பது தான்

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2021 at 19:17, நிழலி said:

கண்டிப்பாக ஒரு காலத்தில் அது நடக்கும். நீங்கள் அப்படி நடக்காது எனும் நம்பிக்கையிலும், நான் அப்படி நடக்கும் எனும் நம்பிக்கையிலும் இருப்போம்.

நிழலி,

உங்கள் நம்பிக்கைக்கையினை பாராட்டும் அதே வேளை.... என்ன நடக்கிறது என்பதையும் கவனிப்போமா?

பிஜேபி யுடன் கூட்டு வைத்து, காங்கிரஸ் ஆட்ச்சியினை பாண்டிசேரியில் கவுத்து விட்டது, ஸ்டாலினின் திமுக. காரணம், 2ஜி ஊழல் கேஸ். இந்த மாதம் வர இருந்த வழக்கினை, தள்ளுவதா, இல்லை எடுத்து, சில பேரை உள்ள போடுவதா என்ற கேள்வியிலேயே மடக்கி விட்டார்கள்.

இவ்வளவு நாளும் கூடவே வந்த, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் அவுட். ராமதாசு, கமல் இன்.

இப்ப சொல்லுங்க, பிஜேபியின் A டீம் யாரு? நீங்கள் நாதக மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, நம்பிக்கை வைக்கும் நிலையில் திமுகவோ, ஸ்டாலினோ இல்லை. 

இலங்கையில் பல பில்லியன் முதலீடு செய்ய முயன்று, மத்தியில் சிக்கிக்கொண்ட ஜெகதரட்ஷகனே இந்த, பிஜேபி - திமுக லிங்குக்கு முக்கிய புள்ளி. இவரே, திமுகவின் பாண்டிச்சேரி முதல்வர் வேட்ப்பாளர். 

இந்த கூத்துக்கள் எல்லாம், தெரிந்தும் பப்பி ராகுல், வெங்காயம், தயிறு என்று, யூடியூபில் சமையல் பண்ணுறாரு. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஒரு வெத்து வேட்டு, அவருடைய வேடம் கலைந்து கன நாள் ஆகிவிட்டது. அவருடைய பருப்பு ஒன்றும் தமிழ் நாட்டில் வேகாது. இம்முறையும் NOTA  க்கு குறைவான வாக்குகளையே பெறுவார்.

Edited by zuma

1 hour ago, Nathamuni said:

நிழலி,

இவ்வளவு நாளும் கூடவே வந்த, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் அவுட். ராமதாசு, கமல் இன்.

இப்ப சொல்லுங்க, பிஜேபியின் A டீம் யாரு? நீங்கள் நாதக மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, நம்பிக்கை வைக்கும் நிலையில் திமுகவோ, ஸ்டாலினோ இல்லை. 

பதிலுக்கு நன்றி நாதம்.

காங்கிரசையும், விடுதலைச் சிறுத்தைகளையும் தி.மு.க தன் கூட்டணியில் இருந்து கழட்டி விட்டுட்டுதா? நான் வாசிக்கும் தமிழகம் பற்றிய செய்திகளில் இது தொடர்பாக எதையும் காணவில்லை. அத்துடன் திமுக கூட்டணியில் கமல் கட்சி இணைகின்றது என்றும் அறியவில்லை.  நான் ஈழத்துச் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழகம் தொடர்பாக கொடுப்பதில்லை என்பதால் தவற விட்டு இருப்பேன்.இவை தொடர்பான செய்திகள் (ஒரு கட்சியின், கட்சி சார்பானவர்களின் காணொளிகள் அல்ல) இருந்தால் பகிருங்கள்.

41 minutes ago, zuma said:

சீமான் ஒரு வெத்து வேட்டு, அவருடைய வேடம் கலைந்து கன நாள் ஆகிவிட்டது. 

சுமா, இப்படி வெறுமனே தட்டையாக எழுதுவதால் ஆரோக்கியமான உரையாடலை தோற்றுவிக்க முடியாது என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

சுமா, இப்படி வெறுமனே தட்டையாக எழுதுவதால் ஆரோக்கியமான உரையாடலை தோற்றுவிக்க முடியாது என நம்புகின்றேன்.

நிழலி,
மன்னிக்கவேண்டும் எதும்  அசோகரியம் ஏற்பட்டால். எனது எதிர்வினை ஆனது,  Nathamuni இணைத்த மூன்றாம் தர பிரச்சார காணொளிக்கே.

எது எப்படியோ இந்த தேர்தல்  தமிழக மக்களுக்கானது. சொந்த அரசியலையே சரியாக செய்ய தெரியாமல் தோற்றுப் போன ஈழத்தமிழர்களான எம்மை விட தமிழக மக்கள் புத்திசாலிகள். ஆகவே, அவர்கள் சிறந்த வகையில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வர். நிச்சயமாக இனவெறியை அவர்கள் ஆதரிக்கப்போவதில்லை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

நாள் தோறும்  ரோஜா செடியில் முள்ளு இருப்பதை மட்டுமே பேசாமல், 
ஒரு முள்ளுச்செடியில் ரோஜா பூப்பதையும்  பார்த்து பரவசமடையுங்கள்.
நீங்கள் ஒரு ஈழத்தமிழாராய் இருப்பதன் பெருமைக்கான காரணங்களை பட்டியல் இடுங்கள்.
ஒரு தவறை கண்டு மனம் வேதும்பினால், அதனை சரி செய்யும் வழிகளை கண்டறியுங்கள். இல்லையேல்; இப்போதைக்கு இதனை சரி செய்ய முடியாது என்பதை உணர்ந்து; அனாவசியமாய் வாய் கிழிய பேசுவதை தவிர்த்து; உங்களால் செய்ய முடிந்த சரியான காரியங்களை சரியாக செய்யுங்கள். 
எல்லோரும் உங்கள் வழியில் தான் வரவேணும் என்னும் என்ற கற்பனை உலகத்தை விட்டு நகருங்கள்.
நல்ல விடயங்களில் மனதை திரட்டுங்கள்,   நம் சந்தோசம், ஒற்றுமை பற்றி யோசியுங்கள். 
இந்த தேறிவுகள் எல்லாம் உங்களுடையவை அன்றி வேறு யாருடையதும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

நிழலி,
மன்னிக்கவேண்டும் எதும்  அசோகரியம் ஏற்பட்டால். எனது எதிர்வினை ஆனது,  Nathamuni இணைத்த மூன்றாம் தர பிரச்சார காணொளிக்கே.

எனது கணிப்பு சரியாக இருந்தால், யாழில் உங்களது முன்னைய அவதாரம், வயிரவன்... சரிதானே?

வயிரவன் இங்கே பதிய வருவதே சீமான் வாந்தி எடுக்க மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

பதிலுக்கு நன்றி நாதம்.

காங்கிரசையும், விடுதலைச் சிறுத்தைகளையும் தி.மு.க தன் கூட்டணியில் இருந்து கழட்டி விட்டுட்டுதா? நான் வாசிக்கும் தமிழகம் பற்றிய செய்திகளில் இது தொடர்பாக எதையும் காணவில்லை. அத்துடன் திமுக கூட்டணியில் கமல் கட்சி இணைகின்றது என்றும் அறியவில்லை.  நான் ஈழத்துச் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழகம் தொடர்பாக கொடுப்பதில்லை என்பதால் தவற விட்டு இருப்பேன்.இவை தொடர்பான செய்திகள் (ஒரு கட்சியின், கட்சி சார்பானவர்களின் காணொளிகள் அல்ல) இருந்தால் பகிருங்கள்.

நாதக யினை ஒரு பக்கமாக வைத்து விட்டு, தமிழக அரசியலை பார்ப்போமா?

வலுவில்லாத, பிரயோசனம் இல்லாத கட்சிகளை கழட்டி விடப்போகிறது திமுக. விடுதலை சிறுத்தைகள் அனுப்பப்படுவார்கள், பதிலாக, பாமக உள்ளே வரும். கமலுக்கு இருக்கும் வாக்கு சதவீதம் கூட, திருமாவளவனுக்கு இல்லை என்று கணித்துள்ளனர். ஆகவே கமல் உள்ளே வருவார். அது தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

இதில் வைக்கோ நிலைமை தெரியவில்லை. அவரும் தூக்கி எறியப்படுவாரோ அல்லது, ஒரு சீட்டு மட்டுமே என்று சொல்லி, தானாக வெளியே போக வைப்பார்களா என்பது அடுத்த இரு வாரங்களில் தெரிய வரும்.

தமிழகத்தில் காங்கிரஸ் சுமையென்று திமுக கருதுகிறது. காங்கிரசினை கழட்டி விடுவதன் முதல் படி, பாண்டிசேரியில் போடப்பட்டுள்ளது. திமுக MLA ராஜினாமா செய்ய, காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது.

ராஜினாமா செய்த நமசிவாயம் போன தேர்தலில், உண்மையான காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர். வென்றவுடன், காங்கிரஸ் ஆந்திராவில் என்ன கூத்து செய்ததோ, அதையே இங்கேயும் செய்து, மத்தியில் அமைச்சராக இருந்த நாசாவை (நாராயணசாமி) முதல்வர் ஆக்கி விட்டனர்.

கடுப்பான நமசிவாயம், திமுகவுக்கு மாறினாலும், திமுக கொள்கைக்கு அமைய, காங்கிரசுக்கு ஆதரவளித்து, மந்திரியானார்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கையில், ராஜினாமா செய்து, அரசு கவுண்டு போக காரணமாக இருந்துள்ளார். முக்கியமாக, தனது ராஜினாமா, ஸ்டாலினுக்கு தெரிந்தே நடந்தது என்கிறார்.

வரும் தேர்தலில், பெரும் பசைப்பாட்டி, ஜெகதரடசகன் தான் திமுக முதல்வர் வேட்ப்பாளர். 

இவர் இலங்கையில் பெரும் முதலீடு செய்ய போன இடத்தில், அவரது, மனைவியினது, மகளது பெயர்கள், Board of investment பத்திரங்களில் இருந்து கசிந்து, டெல்லிக்கு போய், இவரை மடக்கி பிடித்து, வழக்கு சிக்கல்களால் பிஜேபி சொல்வதை கேட்க்கும், பிஜேபி - திமுக லிங்க் ஆக வேலை செய்கிறார். 

ஆக, பிஜேபிக்கு சார்பாக, ஒரு கூத்தினை நடாத்தி முடித்து விட்டனர்.

2+1 = 4

நீங்கள் கேட்படி.... சவுக்கு சங்கர், ஊடகவியலாளர். சீமான் எதிர்ப்பாளர். திமுகவை ஆதரிப்பவர்.... ஆனாலும் உதயநிதியை வெறுக்கிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

சீமான் ஒரு வெத்து வேட்டு, அவருடைய வேடம் கலைந்து கன நாள் ஆகிவிட்டது. அவருடைய பருப்பு ஒன்றும் தமிழ் நாட்டில் வேகாது. இம்முறையும் NOTA  க்கு குறைவான வாக்குகளையே பெறுவார்.

உங்கள் நம்பிக்கை வீண்போகாதிருக்க (வெத்து வேட்டு, வேகாத பருப்பு , குறைந்த வாக்குகள் பெற்றுத் தோல்வி) எனது வாழ்த்துக்கள்.. 

😂😂

4 hours ago, tulpen said:

எது எப்படியோ இந்த தேர்தல்  தமிழக மக்களுக்கானது. சொந்த அரசியலையே சரியாக செய்ய தெரியாமல் தோற்றுப் போன ஈழத்தமிழர்களான எம்மை விட தமிழக மக்கள் புத்திசாலிகள். ஆகவே, அவர்கள் சிறந்த வகையில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வர். நிச்சயமாக இனவெறியை அவர்கள் ஆதரிக்கப்போவதில்லை. 

ஆகவே தமிழ்நாட்டார் தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காது, அதிமுக , திமுக, மதிமுக, கதிமுக, கிதிமுக, திக, அஅதிமுக, திதிக, ககதிக, வெகதிக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ்நாட்டைக் காப்பாற்றவும்.

😀

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

ஆகவே தமிழ்நாட்டார் தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காது, அதிமுக , திமுக, மதிமுக, கதிமுக, கிதிமுக, திக, அஅதிமுக, திதிக, ககதிக, வெகதிக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ்நாட்டைக் காப்பாற்றவும்.

😀

அவர் சொல்ல வருவதன் மறுபக்கம்..... உங்கள் போராட்டம் தோற்றுவிட்டதால்,இனிமேல் விடுதலை என்ற விசர் கதையினை விட்டுப்போட்டு, இனவெறியை காட்டாது, டக்லஸ், அங்கயன், கருணா, பிள்ளையான் போல, சிங்களவர் ஆட்சியின் கீழ் சிங்களவர்களுடன் பாசமாக சேர்ந்து வாழுங்கோ, மாக்கள்....

Edited by Nathamuni

11 minutes ago, Kapithan said:

ஆகவே தமிழ்நாட்டார் தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காது, அதிமுக , திமுக, மதிமுக, கதிமுக, கிதிமுக, திக, அஅதிமுக, திதிக, ககதிக, வெகதிக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ்நாட்டைக் காப்பாற்றவும்.

😀

அது தமிழ் நாட்டு மக்களின் குடியுரிமை. அவர்களது நாட்டு அரசியல். யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுடையது. பக்கத்து  வீட்டுக்காரனுடையது அல்ல. அவர்கள் யாருக்கு வாக்களித்தாலும் ஈழதமிழருக்கு ஒன்று தான்.  புலிகளின் பாராட்டத்தக்க அம்சங்ககளில்  ஒன்று அங்கிருந்த எல்லா கட்சி பிரமுகர்களினதும் உதவிகளையும் தேவைப்படும் போது   பெற்ற அவர்கள் அவர்களது உள்ளூர் அரசியலில் எப்போதுமே  தலையிடவேயில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

இதைத்தானே மாஞ்சு, மாஞ்சு சொன்னோம்.... இவ்வளவு தூரம் சுத்தி, கடைசில நீங்களும் அந்த நிலைக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:
3 minutes ago, tulpen said:

யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுடையது.

தமிழக மக்கள் புத்திசாலிகள். ஆகவே, அவர்கள் சிறந்த வகையில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வர். நிச்சயமாக இனவெறியை அவர்கள் ஆதரிக்கப்போவதில்லை.

இந்த  2 கருத்தும் உங்களிடம் இருந்து தான் துல்பென் வந்தது . 
1 இல் அவர்கள் அரசியல் அவர்கள் உரிமை என்று கூறிக்கொண்டே

2ஆவது கருத்தில் அவர்கள் எப்படி செயல்பட வேண்டும், அல்லது செயல் படுவார்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்.

41 minutes ago, Sasi_varnam said:

இந்த  2 கருத்தும் உங்களிடம் இருந்து தான் துல்பென் வந்தது . 
1 இல் அவர்கள் அரசியல் அவர்கள் உரிமை என்று கூறிக்கொண்டே

2ஆவது கருத்தில் அவர்கள் எப்படி செயல்பட வேண்டும், அல்லது செயல் படுவார்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்.

அது சரி. இந்த கருத்தில் உங்கள் பிரச்சனை என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

அது சரி. இந்த கருத்தில் உங்கள் பிரச்சனை என்ன? 

முரணான கருத்தாய் இருக்கிறதே.  அவர்கள் உரிமை ...நீங்கள் தீர்மானிக்கிறீர்களா?

1 minute ago, Sasi_varnam said:

முரணான கருத்தாய் இருக்கிறதே.  அவர்கள் உரிமை ...நீங்கள் தீர்மானிக்கிறீர்களா?

இல்லை நான் தீர்மானிக்கவில்லை. அந்த உரிமை எனக்கில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவர் நாம் தமிழர் கட்சியை எதிர்க்கின்றார்களோ அவர்கள் ஊழல்கட்சிகளுக்கு சார்பானவர்கள். ஊழல்களாலும்,லஞ்சம்களினாலும்  திளைப்பவர்களை  இன்னும் இனியும் ஆதரித்தால்  எமது நாடும் அதே சாக்கடையில் விழும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

1) அது தமிழ் நாட்டு மக்களின் குடியுரிமை. அவர்களது நாட்டு அரசியல். யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுடையது.

2) பக்கத்து  வீட்டுக்காரனுடையது அல்ல. 

3) அவர்கள் யாருக்கு வாக்களித்தாலும் ஈழதமிழருக்கு ஒன்று தான்.  

4) புலிகளின் பாராட்டத்தக்க அம்சங்ககளில்  ஒன்று அங்கிருந்த எல்லா கட்சி பிரமுகர்களினதும் உதவிகளையும் தேவைப்படும் போது   பெற்ற அவர்கள் அவர்களது உள்ளூர் அரசியலில் எப்போதுமே  தலையிடவேயில்லை. 

1) 100%

2)1️⃣0️⃣0️⃣ அதைத்தான் நாம் தமிழர் கட்சி சொல்கிறது, தமிழரின்/தமிழ்நாட்டின் தலைவிதியை தமிழன்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே ஆட்சி அதிகாரத்தில் தமிழன் இருந்தால் மட்டுமே அது சாத்தியமென்று.

3) ⁉️ Maybe 5️⃣0️⃣/5️⃣0️⃣

4) 1️⃣0️⃣0️⃣

5 minutes ago, Kapithan said:

1) 100%

2)1️⃣0️⃣0️⃣ அதைத்தான் நாம் தமிழர் கட்சி சொல்கிறது, தமிழரின்/தமிழ்நாட்டின் தலைவிதியை தமிழன்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே ஆட்சி அதிகாரத்தில் தமிழன் இருந்தால் மட்டுமே அது சாத்தியமென்று.

3) ⁉️ Maybe 5️⃣0️⃣/5️⃣0️⃣

4) 1️⃣0️⃣0️⃣

அடுத்த நாடான தமிழகத்தில் பல கட்சிகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒன்றை கூறலாம். தவறில்லை. அதில் தமக்கு பிடித்த கட்சியை தமிழ் நாட்டில் வாக்குரிமை உள்ள மக்கள் தீர்மானிப்பார்கள். துல்பலனும் கபிதனும் ஜாலியா இப்படி பொழுதை போக்கிற்று போய் படுப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

சொந்த அரசியலையே சரியாக செய்ய தெரியாமல் தோற்றுப் போன ஈழத்தமிழர்களான எம்மை விட தமிழக மக்கள் புத்திசாலிகள்.

💯

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்களை தான் தங்களது அரசியலுக்காக உசுப்பேத்த முடிகிறது தமிழக மக்கள் தங்கள் நலனில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

எம் மதமும் சம்மதம் என்று சும்மா சொல்வது போல் தமிழகத்தில் எந்த கட்சியும் சம்மதம் என்று சொன்னால் வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் திருப்த்தி அடையமாட்டார்கள் நாம் தமிழர் மட்டும் என்று சொல்ல வேண்டும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அடுத்த நாடான தமிழகத்தில் பல கட்சிகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒன்றை கூறலாம். தவறில்லை. அதில் தமக்கு பிடித்த கட்சியை தமிழ் நாட்டில் வாக்குரிமை உள்ள மக்கள் தீர்மானிப்பார்கள். துல்பலனும் கபிதனும் ஜாலியா இப்படி பொழுதை போக்கிற்று போய் படுப்போம். 

தமிழருக்கு நன்மை நடந்தால் மகிழ்ச்சியே. அது ஈழத் தமிழனாயிருந்தாலென்ன தமிழ்நாட்டாராக இருந்தால் என்ன அல்லது உலகட் தமிழராயிருந்தால் என்ன.. 

எல்லாம் சுபமே.. 🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.