Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இருந்த பிள்ளையாரை காணவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

S4.jpg

 

ஏ -9 , 32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரங்களுக்கு கீழ்  புதிதாக பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

 

 

S1.jpg

 

 

 

 

 

குறித்த பிள்ளையார் சிலையானது இதே வீதியில் தற்போது பொலிஸ் காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு அருகில் முன்னர் இருந்த பிள்ளையாருக்காக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையானது தங்களது அனுமதியின்றி, தங்கள்  எல்லை பரப்புக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றப் போவதாகவும் கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் கடந்த வாரம் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் பூநகரி பொலிஸ் நிலையத்தில் அறிவித்திருந்தனர்.

 

 

S2.jpg

 

இந்த நிலையில் தற்போது குறித்த பிள்ளையார் சிலை காணாமல் போயுள்ளது. இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றியிருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையாருக்கு பதிலாக புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தால் அதனை சட்டத்தை காட்டி அதிகாரிகள் அகற்றுவார்களா எனவும் கேள்வி எழுப்பும் பொது மக்கள்  மத ரீதியாக பாரபட்சங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கபடல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

 

 

S3.jpg

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இருந்த பிள்ளையாரை காணவில்லை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பிள்ளையார். இந்த மனிதரிடம் அகப்பட்டு அகதியாக அலையவேண்டிய நிலை வந்துவிட்டது.

☹️

சமயச் சின்னங்களை எந்தவித பொறுப்புமின்றி எல்லா இடங்களிலும் வைக்கும் அற்பர்களைப் பிடித்து உள்ளே போட்டால் இந்த உலகத்தில் இருக்கும் அரைவாசிப் பிரச்சனைகள் தீர்ந்தது.

 

😡

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் கிராமத்தில், கடந்த முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியில் கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

butha-2.jpg?fit=596%2C415

சனீசுவரனாலேயே பிடிக்க முடியாத பிள்ளையாரை, புத்தர் பிடித்ததுமல்லாமல் அழித்தும் விட்டாரே🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை

எனக்கென்னவோ இன்னமும் பிள்ளையார் அங்கே இருப்பதாகத்தான் தெரிகிறது

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

பாவம் பிள்ளையார். இந்த மனிதரிடம் அகப்பட்டு அகதியாக அலையவேண்டிய நிலை வந்துவிட்டது.

☹️

சமயச் சின்னங்களை எந்தவித பொறுப்புமின்றி எல்லா இடங்களிலும் வைக்கும் அற்பர்களைப் பிடித்து உள்ளே போட்டால் இந்த உலகத்தில் இருக்கும் அரைவாசிப் பிரச்சனைகள் தீர்ந்தது.

 

😡

நான் கடவுளை நம்புவன்.ஆனால் வயலுக்கு ஒரு கோவில் வரப்புக்கு ஒரு கோவில் என்டு எங்கடை ஆட்க்களின் அலப்பறைகளும் கொஞசம் ஓவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் கடவுளை நம்புவன்.ஆனால் வயலுக்கு ஒரு கோவில் வரப்புக்கு ஒரு கோவில் என்டு எங்கடை ஆட்க்களின் அலப்பறைகளும் கொஞசம் ஓவர்.

மரத்துக்கு மரம் புத்தர் சிலைகள் முளைக்கும் போது இந்த ஆதங்கத்தை காணவில்லையே சகோதரம்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

மரத்துக்கு மரம் புத்தர் சிலைகள் முளைக்கும் போது இந்த ஆதங்கத்தை காணவில்லையே சகோதரம்? 😁

அதுவும் பிழை தான் சந்தேகம் இல்லை.ஆனால் வெர்கள் என்னிடம் நன்கொடை கேட்க்கவில்லை.😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

அதுவும் பிழை தான் சந்தேகம் இல்லை.ஆனால் வெர்கள் என்னிடம் நன்கொடை கேட்க்கவில்லை.😁

அவர்களுக்கு அரசு இருக்கின்றது.நாடு இருக்கின்றது. அவர்கள் சார்பானவர்கள்/மக்கள் தமது இனம் மதம் நிலம் சம்பந்தமாக மிகுந்த கரிசனையாக உள்ளனர்.எனவே உதவியும் தண்டல்களும் அவர்களுக்கு தேவையில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

இந்த நிலையில் தற்போது குறித்த பிள்ளையார் சிலை காணாமல் போயுள்ளது.

எனக்கென்னவோ இந்த நந்தசேன கோத்தா வின் வெள்ளை வான் மீதுதான் டவுட் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

எனக்கென்னவோ இந்த நந்தசேன கோத்தா வின் வெள்ளை வான் மீதுதான் டவுட் .

பாவம் அந்த மனுஷன்! தட்டிப்பறிக்கும்  தன் தொழிலை சுதந்திரமாக செய்யவும்முடியாமல், போட்ட 
 வேஷத்தைக் கழட்டவும் முடியாமல், கைகால் உழைவெடுத்து  தவிக்குது. நீங்கள் வேறை நகைச்சுவை பண்ணிக்கொண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நான் கடவுளை நம்புவன்.ஆனால் வயலுக்கு ஒரு கோவில் வரப்புக்கு ஒரு கோவில் என்டு எங்கடை ஆட்க்களின் அலப்பறைகளும் கொஞசம் ஓவர்.

சைவக்காறர் மட்டுமில்ல வேதக்காறரும்தான். எங்க ஏரியா உள்ள வராதே என்கின்ற ரீதியில், 

குண்டுக்கயும் செல்லடிக்கயும் காப்பாற்ற வக்கில்லாத கடவுளை எங்க வச்சுத்தான் என்ன...

🥴

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, Kapithan said:

சைவக்காறர் மட்டுமில்ல வேதக்காறரும்தான். எங்க ஏரியா உள்ள வராதே என்கின்ற ரீதியில், 

குண்டுக்கயும் செல்லடிக்கயும் காப்பாற்ற வக்கில்லாத கடவுளை எங்க வச்சுத்தான் என்ன...

🥴

 இந்த பூமி பந்திலே  கடவுளே வேண்டாம்..... கடவுளே இல்லை....கடவுள் வழிபாடுகளே இல்லை என விழித்து சொன்ன ஒரு நாட்டை உதாரணமாக இங்கே காட்டும் படி கேட்டுக்கொண்டு சபையில் அமர்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு நம்மேல் மட்டுமல்ல, நம்ம அயலார்மேலேயும் பொறுப்பு உண்டு. அதை தட்டிக்கழித்து மற்றவரின் எழுச்சியை பொறுக்கமுடியவில்லை, இயலாமையை ஏற்கமுடியவில்லை, அறியாமையை சகிக்க இயலவில்லை, அடுத்தவருக்கு நஷ்டத்தை, களங்கத்தை, கலக்கத்தை உண்டாக்குகிறோம். நல்ல பெயரை நாசமாக்குகிறோம், இப்படி பல. இதுகளை விட்டு ஏறிய, அயலவனை அணைக்க மனமில்லை. இதனால் ஏற்பட பழியை  சாமிமேல போட்டு தண்டனை குடுக்க முயற்சிக்கிறோம். அவரேயன்றி நம்மால் இந்தப்பிரச்சினையை தீர்க்க முடியாது. நாமே நம்மை எதிரிக்கு காட்டிக்கொடுத்து, உதவிகொண்டு கடவுளை குற்றம் சாட்டுகிறோம். ஏனென்றால் அவர் நம்மைச் சுட்டிக்காட்மாட்டார் என்கிற துணிவு. 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

 இந்த பூமி பந்திலே  கடவுளே வேண்டாம்..... கடவுளே இல்லை....கடவுள் வழிபாடுகளே இல்லை என விழித்து சொன்ன ஒரு நாட்டை உதாரணமாக இங்கே காட்டும் படி கேட்டுக்கொண்டு சபையில் அமர்கின்றேன்.

😂😂

கு சா வுக்கு ரோசம் கொப்பளித்துக்கொண்டு வந்துவிட்டதோ. 😂

கடவுள் என்பவர் எங்களுக்கு வழிகாட்டி மட்டுமே. காட்டப்பட்ட  வழியே(Moral) நாம்தான் நடக்க வேண்டும். 👍

 

ஆதலால் கூறப்படுவதென்னவெனில், 

சந்திக்குச் சந்தி சமயச் சின்னங்களை, அது சித்தார்த்தனாயிருந்தாலென்ன சேவற் கொடியோனாகவிருந்தல்தால்தான் என்ன, யேசுவாயிருந்தாலென்ன,  எங்கே, எதனை யார் வைத்தாலும், மனிதனால் விதைக்கப்பட்ட நன்மை தீமை சகலவற்றிற்குமான விளைவுகளை அறுவடை செய்ய வேண்டியது மனிதர்தான். 

எனவே 

பெருந் தெருக்கள் திணைக்களத்திற்கு/RDA வுக்குச் சொந்தமான இடத்தில் சமயச் சின்னங்களை அத்துமீறி வைத்துவிட்டு அதனை அதிகாரமுடையோர் நீக்கிவிட்டவுடன் குய்யோ முய்யோ என்று குழறுவதால் பலனில்லை காண்பீர் பெரியோரே. 

வட கிழக்கெங்கும் மூலைக்கு மூலை மழைக் காளான்கள் போல எந்தவித பொறுப்புமின்றி முழைத்திருக்கும் சகல சமயச் சின்னங்களையும் துடைத்தெறிய வேண்டுமென தொடர்புடைய அதிகாரத் தரப்பினரை இத்தால் வேண்டிக் கொள்கிறேன். அத்துடன் பெரும் ஒலி மாசடைதலுக்கு காரணமாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விழைவிக்கும் ஒலிபெருக்கிகளையும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஓயாமல் துன்பந்தரும் ஒலிபெருக்கிகளை கட்டுப்பட்ஒத்தும்படி சிபாரிசு செய்கிறேன்.

🥁🥁🥁🥁🥁🥁

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

அதுவும் பிழை தான் சந்தேகம் இல்லை.ஆனால் வெர்கள் என்னிடம் நன்கொடை கேட்க்கவில்லை.😁

இது பச்சைப்பொய். தையிட்டியில் ராணுவத்தால் கட்டப்படும் விகாரைக்கு அங்கே உள்ளவர்களிடம் ராணுவம் சீமெந்து தொடக்கம் கல்லு வரைக்கும் ராணுவம் ஒருவித பலாத்காரமாகநன்கொடை கேட்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சாவகச்சேரியில் பிள்ளையார் கோவில் ஒன்றுக்கு அருகில் திடீரென கூடிய பௌத்தர்களால் பதற்றம்..!

IENEOEMWIW_1080.jpg

யாழ்.சாவகச்சேரி - நுணாவில் மணங்குணா பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வாகனங்களில் வந்த பௌத்தர்கள் கூடியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. 

அவ்விடத்தில் உள்ள மருத மரத்தின் கீழ் சிறிய பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்கள் ஒன்றுகூடியதால் சந்தேகமடைந்த அயலவர்கள் 

அவர்களை ஏன் அவ்விடத்தில் நிற்கிறீர்கள் என விசாரித்துள்ளனர். இதன்போது தாம் சமைத்து உண்பதற்காகவே அவ்விடத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் உள்ளிட்டோருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து அவர்கள் அவ்விடத்துக்குச் சென்றனர். 

இருந்த போதும் குறிப்பிட்ட வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாகவே அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றுள்ளனர். எனினும் அவர்களின் வருகை 

அவ்விடத்தில் புத்தர்சிலை வைக்க முயன்றார்களா என்ற சந்தேகத்தை அப்பகுதி மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த பிள்ளையார் சிலை அமைந்துள்ள மருதமரத்தின் எதிர்த்திசையில் வீதியின் மறுபுறம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இளைப்பாறும் மடம்

சுமைதாங்கி ஆவுரஞ்சிகல் கேணி கிணறு என்பன அமையப்பெற்றுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்களுக்கு குறித்த இடத்தின் முக்கியத்துவம் தொடர்பில் 

தெளிவுபடுத்திய முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோர் தொடர்ச்சியாக விழிப்புடன் அப்பகுதிகளை கண்காணிக்குமாறு இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார்.

https://jaffnazone.com/news/23407?fbclid=IwAR1A117ECww2e6l0OXlBquyBkgXMmEpq1kbTTdjT7kla_uy3KjoylXyCVN4 

டிஸ்கி 

இது பிள்ளையாருக்கு போதாத காலம்.. சூதானமா இருங்கப்பா..😢.😢

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் பிள்ளையார் இன்னும் பெரிதாக அதே இடத்தில் தோன்றிவிட்டார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

மறுபடியும் பிள்ளையார் இன்னும் பெரிதாக அதே இடத்தில் தோன்றிவிட்டார்.

 

சாதா காக்கைகளுக்கிடையே வேறுபாடுகள் எதுவுமில்லை.

எண்ணிக்கையில் மிகச் சொற்பமாகவுள்ள அண்டங்காக்கைகளால்தான் பிரச்சனையே. 

😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.