Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்! தமிழர்கள்  நம்பிக்கை துரோகத்தால் மட்டுமே வீழ்ந்ததாக வரலாறுகள் பறை சாற்றுகின்றன. வீரமின்மையால் அல்ல. எனவே தவறுகளை திருத்தி/அகற்றி எழுவர். எழுவோம்.

Bild

இந்த படத்திற்கு எழுத்துக்கள் தேவையில்லை என நினைக்கின்றேன்.

நாங்க‌ள் க‌டைசி வ‌ரை தேசிய‌ த‌லைவ‌ர் கூட‌வே நிண்டோம் தாத்தா ஒற்றுமையா த‌மிழீழ‌ம் பெரிது என்று  ? த‌மிழ‌க‌ நில‌வ‌ர‌ம் அப்ப‌டி இல்லை யார் முனுக்கு நிக்கிற‌து என்னை விட‌ க‌ட்சியில் பிற‌க்கு இணைந்த‌ நீ முன்னால் போக‌லாமா என்று ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கு த‌மிழ் நாட்டில் ?

இதை எல்லாம் ச‌ரி செய்து 11வ‌ருட‌மாய் க‌ட்சியை வ‌ழி த‌ட‌த்துகிறார் என்றால் பாருங்கோவேன் எவ‌ள‌வு வ‌லிக‌ளை தாங்கி கொண்டு அண்ண‌ன் சீமான் க‌ட்சியை ந‌ட‌த்துகிறார் என்று ?

இந்த‌ப் ப‌ட‌த்தை பார்க்க‌ என‌க்கு ஈழ‌த்து க‌ருணா தான் நினைவுக்கு வ‌ருகிறார் ?

2003ம் ஆண்டு க‌ட‌சியில் க‌ருணா சுவிஸ் வ‌ந்த‌ போது த‌லைவ‌ரை புக‌ழ் பாடி விட்டு 2004ம் ஆண்டு  ஆர‌ம்ப‌ ப‌குதியில் துரோக‌த்தின் உச்சிக்கு போன‌வ‌ன் ?

க‌ட்சியை விட்டு நீக்கினா பிற‌க்கு ராஜிவ் காந்தி சொன்னார் தான் ஒரு போதும் திமுக்கா கூட‌ சேர‌ மாட்டேன் என்று சொல்லி போட்டு ? 
சொல்லி கொஞ்ச‌ நாளில் திமுக்காவுட‌ன் போய் கை கோர்த்து அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ வார்த்தைக‌ளை அள்ளி கொட்டினார் 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணித்த‌ போது திமுக்கா எம் இன‌த்தை அழித்த‌ க‌ட்சி அது இது என்று வாய் கிழிய‌ பேசின‌வ‌ர் தான் இந்த‌ ராஜிவ் காந்தி ?

  • Replies 179
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இவ‌ர் க‌ணிப்பிட்டு சொல்லுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர் ட‌ங்கு 🙏

இதே ரவீந்திரன் துரைசாமி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னம் கோடுத்த பேட்டியை கீழே இணைக்கிறேன். இதில் நாம் தமிழரை இவர் கணக்கில் கொள்ளவே இல்லை.

இதுபோலவே, நம்மவர்களும் (சிலர்) வேலிக்கு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதும், கேலி செய்வதுமாக உள்ளனர். விடுதலை அரசியலில் காலத்தை சரியாக கணிக்கத் தெரிய வேண்டும்! குதிரை லாயத்தை விட்டு ஓடிவிட்ட பின்னால் கதவைப் பூட்டுவதில் பயனில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கட்டுக்காசு (அதான்யா டெபாசிட்டு) எடுக்காத கட்சியைப் பற்றி கைவலிக்க டைப் பண்ணுவதே சுத்த வேஸ்டு!

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க வாக்குகளை பிரிக்க Big Boss பா.ஜ.க கொடுத்த Assignment ஐ தன் நடிப்பால் நன்றாகவே செய்து கொண்டு வரும் Silent சங்கியே கமலஹாசன் என்ற கூற்று பற்றி சொல்லுங்கள்.😛

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

இதெல்லாம் உங்களுக்கு என்ன பிரச்சனை? இதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அதனை  இங்கே சொல்லுங்கள்? அதன் பின் சரி பிழைகளை அலசி ஆராய்வோம்.

நாம் தமிழர் கட்சியே லாயக்கற்றது.வெல்லாது என்று சொல்லி விட்டு சுப்பர்ரை கொல்லைக்குள் ஏன் சுற்றி சுற்றி நிற்கின்றீர்கள்? 😎

  • கருத்துக்கள உறவுகள்

டிறக்கில் ஏறி நின்று  போராட்ட காரர்களை  மிருகங்களை சுட்டது போல் சுட்டது தமிழ்நாட்டிலா அல்லது லெபனானிலா? 
வர வர நினைவாற்றல் சிலருக்கு மங்கி கொண்டு போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

BJP யை இந்தியாவில் மட்டும் எதிர்ப்பீர்கள். இலங்கையில் என்றால் கள்ள மெளனமோ.. 😂 ஏன் அப்படி.. ? 

இலங்கையில் BJP யை எதிர்க்கவில்லையென்றால் ஆதரிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்(நடுவூ நிலைமை காக்கின்றீர்களோ.. 😂)

இல்லை தமிழ்நாட்டில் மட்டும் BJP யை எதிர்ப்பதற்காக நாதக வை எதிர்ப்பீர்கள் என்றால் இது முரண்ணகையாகவல்லோ இருக்கிறது.. ☹️

அப்படியில்லாவிட்டால் ...

நாதக வினர் பிரபாகரனையும் புலிகளையும் முன்னிறுத்துவதுதான் இந்தச் சேறடித்தலுக்கான மூலகாரணமோ...

😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

😏

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

அவர் சரியாகத்தானே சொல்லியிருக்கின்றார்.

மூக்கையும் முன்னறையையும் பின்னறையையும் பூட்டமுடியாதல்லவா!😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ

மனிதருக்கு துவாரங்கள் 9.

9 க்குப் பதிலாய் 6... 🤥

தலைகீழாய் வந்துவிட்டதோ...😂

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2021 at 23:24, பராபரன் said:

மேடையில் தலைவர் பட நீக்கம்....

அரசியல் பரிணாம வளர்ச்சிக்காக இன்னும் பல உண்டு....

மேடையில், தலைவர் படம் இல்லாததால், நியூஸ் 7, தந்தி டிவி, உட்பட, பல முன்னணி youtube சானல்கள், நேரலை செய்தன. ஒரு வேண்டுகோள் ஆக இருந்ததாம்.

உங்களுக்கு, ஆறு கடக்கவும் வேணும், அரைக்காசுக்கு குதிரையும் வேணும் எண்டால், எப்படி, பராபரா?

அதாவது, ராஜிவ் கொலையில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் தலைவரையும் கொண்டோட வேணும்.... தேர்தல் பிரச்சார மேடையிலை, தலைவர் படம்  இருக்கவும் வேணுமெண்டால்...  ??

20 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்டுக்காசு எடுக்காத ஒரு கட்சிக்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்து தம்பிகள் எவ்வளவு சீரியசாக உள்ளார்கள் பார்த்தீர்களா சீமானுக்கே இது வியப்பாக இருக்கும்.

கட்டுக்காசு எடுக்காத தம்பிகள் எண்டு தான், அண்ணாத்துரையையும்  1960களில் சொன்னார்கள். 1967ல் அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது. 

இங்கே குளறுறவையள், இன்னோரு 10, 20 வருசத்திலை முழுசிக்கொண்டு இருப்பினம்.

இலங்கையிலும், இப்படித்தான்..... ஐதேக எண்டு ஒண்டு இருந்தது. தமிழர்கள், ஆக்கிரமித்து விட்டார்கள், சிங்களம் மட்டும் என்றார் ஒருத்தர்,வந்தார், வென்றார்.

அதுசரி, எலிப்புழுக்கைகள் காயிறோம்.... எள்ளும் ஏன் உதுகிலை காயுது? 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 14:54, zuma said:

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.

Btw, எந்த இந்திய குடிமகனுக்கும்  எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.

Quote

தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார்

அரசு அமைத்தால், சமஸ்கிருதம் இல்லாது ஒழிக்கப்படும் என்கிறார். தஞ்சை பெரியகோவிலில், குடமுழக்கில் தமிழுடன், சமஸ்கிருதமும் ஒலித்ததே. அங்கேயும் நின்றாரே. அது எப்படி?

Quote

பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார்  அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் .

நான் கூடத்தான், மகிந்தா நினைத்தால், அரசியல் தீர்வு தரமுடியும் என்கிறேன். அதுக்காக, அவர் என் தலைவர், தெய்வம் என்று காலை பிடிக்க வேண்டுமா என்ன?

Quote

திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால்  ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார்.

சிறையில் இருந்த போது நிகழந்த, தமிழ் தேசியவாதியான, அவரது கணவர் நடராஜன் இறப்புக்காக, ஒரு ஆறுதல் சந்திப்பு. அதில் என்ன தவறு கண்டீர்கள்?

Quote

திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார்.

நம்ம மருதர் கூடத்தான், அடைஞ்சா, காயல் இல்லையேல், போதல் என்கிறார். அதுக்காக.... அய்யோ... இப்ப பார் வேற பெண்ணை கலியாணம் செய்துட்டார் எண்டுவியலோ? அது ஒரு உணர்ச்சிவேகத்திலை சொன்னனது. உடனே பொம்பிளையோட, ரெடியா நிண்ட ஒரு தகப்பன் மாதிரி, தவிக்கக் கூடாது, கண்டியளே ...

**

நாம் தமிழர், வரை விளக்கினத்தினை பிறகு பார்ப்போம்.... உங்கை, சிங்கள வரைவிலக்கணப்படி, நீங்களும், நானும், கள்ள தோணிக் காரர். சிங்கள நாட்டுக்குலை வந்து, நாடு கேட்டு... அரிக்கண்டம் தந்து கொண்டிருக்கிறியாளம்.

உங்களையும், என்னையும், பிளேன் ஏத்தி, அனுப்பி, காடாத்தியாச்சாம். மிச்ச பேருக்கு அலுவல் பார்க்க வேணுமாம்...

அதுக்கு என்னசெய்யலாம் எண்டுறியள்?   

ஆகவே.... சரித்திரம் புரியாமல், பாயிண்டுகள் பிடிக்கிற உங்களுக்கு, இப்படியே, பம்பரம் மாதிரி சுத்த வேண்டியதுதான்.
 
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

மேடையில், தலைவர் படம் இல்லாததால், நியூஸ் 7, தந்தி டிவி, உட்பட, பல முன்னணி youtube சானல்கள், நேரலை செய்தன. ஒரு வேண்டுகோள் ஆக இருந்ததாம்.

உங்களுக்கு, ஆறு கடக்கவும் வேணும், அரைக்காசுக்கு குதிரையும் வேணும் எண்டால், எப்படி, பராபரா?

அதாவது, ராஜிவ் கொலையில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் தலைவரையும் கொண்டோட வேணும்.... தேர்தல் பிரச்சார மேடையிலை, தலைவர் படம்  இருக்கவும் வேணுமெண்டால்...  ??

கட்டுக்காசு எடுக்காத தம்பிகள் எண்டு தான், அண்ணாத்துரையையும்  1960களில் சொன்னார்கள். 1967ல் அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது. 

இங்கே குளறுறவையள், இன்னோரு 10, 20 வருசத்திலை முழுசிக்கொண்டு இருப்பினம்.

இலங்கையிலும், இப்படித்தான்..... ஐதேக எண்டு ஒண்டு இருந்தது. தமிழர்கள், ஆக்கிரமித்து விட்டார்கள், சிங்களம் மட்டும் என்றார் ஒருத்தர்,வந்தார், வென்றார்.

அதுசரி, எலிப்புழுக்கைகள் காயிறோம்.... எள்ளும் ஏன் உதுகிலை காயுது? 😜

ஏன் காயுது எண்டா......ல்

எலிப் புழுக்கைகளுக்கு மத்தியில் கிடந்து உழண்டால்தானே எள்ளு என்று தெரியும். இல்லாவிட்டால் 10த்தோடு 11 தானே..(நா த க எதிர்ப்பாளர்களின் மைன்ட் வோய்ஸ்... )

😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நா த க BJP யின் கையாள் என்று கூறும் உங்களைப் போன்றோர், யாழ்ப்பாணத்தில் Lanka BJP தொடங்கியபோது ஆறு துவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன.. ? 

நீங்கள் சீமான் ஆதரவாளர் என்றபடியால் நாங்கள் செய்யாதவற்றையும் கற்பனை செய்வீர்களோ?இலங்கை bjp  விரைவில் தொடங்கப்படும் என்று சச்சிதானந்தன் அறிவித்த செய்திக்கு இங்கே சீமானின் தம்பிகள் bjp க்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர் Tulpen  தனிக்காட்டு ராஜா பெருமாள் போன்றோர் எதிர்த்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

காங்கிரஸ் எண்டால் ஒகேயா செல்லம்? 😎

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாகச் சொன்ன சீமான் பின்வாங்கியது ஏன்?

spacer.png

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

நாம்தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்து போட்டியிடுவதுவாக முன்னர் அறிவித்திருந்ததால் அவர் திருவொற்றியூரில் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில் ஏன் சீமான் போட்டியிடவில்லை என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நாம் தமிழர் சீமான் போட்டியிடும் தொகுதி எது என்பதை ஆராய ஒரு குழுவை சீமான் அமைத்த நிலையில் அவர் சென்னை நகருக்குள் போட்டியிடுவதே சிறந்தது என ஆலோசனை சொன்ன அந்தக் குழு. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டால் டெப்பாசிட் பெருவதில் சிரமங்கள் இருக்கும் ஏனென்றால் திமுக தலைவர் ஸ்டாலின் வென்ற நாள் முதல் இன்று வரை வாரம் ஒரு முறை தொகுதிக்கு விசிட் அடிப்பதோடு அங்குள்ள மக்கள் ஒவ்வொருவருவரோடும் தொடர்பில் இருக்கிறார். ஏராளமான பணிகள் தொடர்பாடல் காரணமாக அந்த தொகுதியில் அதிமுக போட்டியிட்டாலும் வெல்ல முடியாது. நாம் டெப்பாசிட்டே பெற முடியாது. என்று அந்த குழு அறிக்கை அளிக்க சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று ஆலோசனைக் கூற அதை சீமான் ஏற்றியிருக்கிறார்.

2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.அந்த தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் சீமான்.2016ஆம் ஆண்டு, தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 1.1% வாக்குகளைப் பெற்ற சீமான். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஏழு தொகுதிகளில் மூன்றாம் இடங்களைப் பெற்றது. அதிலொன்று திருவொற்றியூர் இது வட சென்னை மக்களவைத் தொகுதியில் வருகிறது. இந்த வட சென்னை மக்களவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றதால் திருவொற்றியூர் தொகுதியை தெரிவு செய்தார் சீமான்.

பெருமளவு கடலோர மக்களும், நாடார்களும் , பிற சாதியினரும் வாழும் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் வெற்றி பெற சாத்தியமில்லை என்ற போதும் ஓரளவு வாக்குகளைப் பெறும் சாத்தியங்கள் உண்டு. ஆனால், கொளத்தூரில் போட்டியிடுவதாகச் சொல்லி விட்டு பின்வாங்கியதை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.

https://inioru.com/ஸ்டாலினை-எதிர்த்து-போட்ட/

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமான் ஆதரவாளர் என்றபடியால் நாங்கள் செய்யாதவற்றையும் கற்பனை செய்வீர்களோ?இலங்கை bjp  விரைவில் தொடங்கப்படும் என்று சச்சிதானந்தன் அறிவித்த செய்திக்கு இங்கே சீமானின் தம்பிகள் bjp க்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர் Tulpen  தனிக்காட்டு ராஜா பெருமாள் போன்றோர் எதிர்த்தனர்.

சும்மா கதை விடப்படாது. நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சீமானின் ஆதரவாளர் என்று கூறவில்லை. நாகத வினர் மட்டுமல்ல எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களின்  நன்மையான பக்கங்களுக்கு ஆதரவளிப்பேன். 

எல்லாம் ஏறிவிட்டதா என்று ஆசிரியர் கேட்டதற்கு முகட்டுக்குள் (வளை) இருந்த எலியைப் பார்த்துவிட்டு வால் மட்டும் ஏறவில்லை என்று கூறிய மாணவன் போல உள்லது உங்கள் பதில்... 🤥

தமிழ்நாட்டில் (பாசிச) நாதக வினரை எதிர்க்கும் உங்களைப் போன்றோர் ஏன் இலங்கையில் BJP ஆரம்பிக்கப்பட்டபோது துவாரங்களை மூடினீர்கள்.  ...🥴

பதில் இருக்கிறதா அல்லது இப்போதும் முகட்டைப் பார்த்தபடிதானா... 😏

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

சும்மா கதை விடப்படாது.

நீங்கள் தான் இங்கே சீமானுக்காக சும்மா கதை விட்டது தெளிவாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் தான் இங்கே சீமானுக்காக சும்மா கதை விட்டது தெளிவாக தெரிகிறது.

கேள்விக்குப் பதில் இல்லை.... ம்ம்ம் ம்ம் புரிகிறது.

சேறடிப்பதற்குள்ள ஆர்வமும் அதனால் வரும் ஆனந்தமும் நேர்மையாகப் பதில் சொல்வதில் கிடைக்காதுதானே.. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, zuma said:
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 
சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

ஒருவரைப் பற்றி விமர்சிக்க முன்னர், அவரைப் பற்றி விலாவாரியாக அறிந்திருப்பது அறம் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 
அண்ணை தேடு தேடு என்று தேடி எடுத்து அதுவும் எங்கேயோ அடிக்க பல்லு கொட்டினது போலாச்சு.🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

சீமானின்பேட்டிகளை தேடித் தேடி பார்ப்பீர்களோ.. 🤣

அதுதானே வேலை....

உங்கை ஒருத்தர், இப்படித்தான் சீமானை இவரிலும் பார்க்க மோசமா திட்டிக்கொண்டு இருந்தார்.

உந்த கொரோனாவோடை, பொழுது போகேல்லை எண்டு கேட்டு, கேட்டு, இப்ப, பெரும் ஆதரவா கதைக்கிறார்.. என்னடாப்பா, உந்தாளுக்கு நடந்தது எண்டு, அவரிண்ட பழைய கதையலை கேட்ட ஆக்கள், முழுசி, இவருக்கு, கோரோனோ இல்லை, வேற ஏதோ எண்டெல்லோ நிக்கினம்.  

எனக்கெண்டா, இவரை பத்தி, கொஞ்சம் கவலைதான்.

ஊரிலை சொல்லுவினம்.... operataion sucess.... ஆனால், ஆள் தப்பாது எண்டு.... அப்படி தான்.... நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறியள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, zuma said:

ஒருவரைப் பற்றி விமர்சிக்க முன்னர், அவரைப் பற்றி விலாவாரியாக அறிந்திருப்பது அறம் ஆகும்.

நாம் தமிழர் என்றாலே ஓரம் கட்டிய பல தமிழகத்து ஊடகங்கள் இன்று அவர்களின் செய்திகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் புகழ ஆரம்பித்து விட்டன. எனவே இதுவும் ஒரு வித முன்னேற்றம் தான்.

உண்மைகள் சாவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.