Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா தீர்மானம் சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் - கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குயவனின் கையில் களிமண் அழகிய பாத்திரமாக உருப்பெறுகிறது. குயவன் கைபடாதவரை அது வெறும் களிமண்ணே. அது உடைந்து விட்டாலும்வெறும் மண்ணே . எத்தனையோ பெரிய போராட்டங்கள், புரட்சிகள் துரோகத்தினாலேயே அழிந்த வரலாறுகள் உண்டு. தலைவருக்கோ, வழிகாட்டிக்கோ மிகவும் நம்பிகைக்குரியவர்களை அவர்களின் பெலவீனங்களை துல்லியமாக கணக்கிட்டு அதை வைத்து குறிப்பிட்டவரை வளைத்து அவர்கள் எடுக்கும் முயற்சிகளை தடுத்து அந்த இயக்கத்தை சிதறடித்து லாபம் பெறும் எதிரி நம்மோடே செயற்படுவான். இதற்கு ஜேசுநாதரும் விதி விலக்கல்ல. துரோகம் என்பது எவ்வளவு வலி மிகுந்தது என்பதை உணர்ந்த ஜேசுவே, தன்னை பணத்துக்காக  காட்டிக்கொடுக்கப்போகிறவனை பார்த்து  "காட்டிக்கொடுக்கிறவனுக்கு கேடு, அம்மனிதன் பிறவாதிருந்தால்அவனுக்கு நலமாய் இறந்திருக்கும்" என்றார்.  வி. முரளிதரனின் பெலயீனம் பதவி, பணம், புகழ், மது, மாது, கேளிக்கை. அதைக் கொடுத்து கவர்ந்து கொண்டார்கள் எதிரிகள்  என்பதற்கு முரளிதரன் இயக்கத்தை காட்டிக்கொடுத்து வெளியேறியவுடன் நடந்து கொண்ட விதம்; இயக்கத்தில் எப்படி நடித்து கொண்டிருந்தார் என்பதற்கு சான்று. இது நிஞாயம் என்று வாதிடுவோரும் அந்த துரோகியின் மனநிலையில் உள்ளோரே.  

  • Replies 142
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கற்பகதரு said:

4. சொல்வதை கேள்வி கேட்காமல் செய்பவர்கள் மட்டுமே தமிழ் மக்கள்- மற்றவரெல்லாம் துரோகிகள்.

நாலாவாதாக வந்தது முதலாவதாக வந்திருக்க வேண்டும்.

1 hour ago, கற்பகதரு said:

உண்மைதான்.

1. மாத்தையா,

2. பிள்ளையான்,

3. கே. பி.

4. தயா மாஸ்ரர்

5. கருணா

இப்படி நிறைய உருவாக்கி இருந்தார். அதனால்தான் இப்ப ஆளை காணவில்லை.

தமிழீழத்தின் இராஜதந்திரங்கள்:

1. எல்லா நாடுகளும் எதிரிகள்.

2. எவர் அரசியலில் ஈடுபட்டாலும் அவரெல்லாம் எதிரி.

3. எவர் உரிமைகள் பற்றி பேசினாலும் அவரெல்லாம் துரோகி.

4. சொல்வதை கேள்வி கேட்காமல் செய்பவர்கள் மட்டுமே தமிழ் மக்கள்- மற்றவரெல்லாம் துரோகிகள்.

மிகவும் கவலையான, எமது நம்பிக்கைகளை எல்லாவற்றையும் வேரோடு சிதைத்த,  ஆனால் உண்மையான கருத்து.  புதிய தலைமுறையினரிடமும் இப்படியான வங்குரோத்து ராஜத‍ந்திரத்தை தொற்று நோய் போல் பரப்பி விட்டு தான் போய் சேரவேண்டும் என்று  சிலர் ஒற்றைக்காலில் நிற்பது இன்னும் சோகம். ஆனால் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற இளைஞர்களின் அரசியல் கேள்வி பதில் நிகழ்ச்சியை பார்க்கும் போது மனதில் நம்பிக்கை பிறக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வன்னியில் இருந்தவர்களுக்கு கதைகள் தெரிந்திருந்தும் சமாதான காலத்தில் கேணல் கருணா அம்மானாக உலக வலம் வரக்கூடியதாக இருந்தது. அந்தக் கதைகளை விசுகு ஐயாவுக்கு கசியவிட்டிருந்தால், விமான நிலையத்தில் வரவேற்கவும் போயிருந்திருக்கமாட்டார்.  கருணா அம்மானுடன்  விருந்து சாப்பிட்டும் இருக்கமாட்டார். அந்த விருந்துச் சாப்பாட்டை நினைத்து நினைத்து இப்போதும் ஓங்காளிக்கும் நிலையும் வந்திருக்காது!!🙃

விசுகர் என்ன?  விடுதலைப்புலிகள் உறுப்பினராக வெளிநாடு போனபோது  இருந்த கம்பீரம், அவருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு பின் அரசியல் பிரமுகரின் மரியாதையோடு போனபோது இருந்த மரியாதையையும்  உலகமே பார்த்து வியந்தது. உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கேல்லையோ?

6 hours ago, கிருபன் said:

கருணா அம்மான் தலைவரை இப்போதும் தேசியத் தலைவர் என்றுதானே சொல்லுகின்றார்.

வி. முரளிதரன் இப்போ அரசியல்வாதி, கருணா அம்மான் அல்ல. இப்போ அவர் அப்படித்தான் சொல்வார். தலைவருக்கு துரோகம் செய்துவிட்டுஅதை மறைக்க எப்படி தலைவரைப்பற்றி பேட்டி கொடுத்தார் என்பதை தாங்கள் அறியவில்லைப்போலும்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 வி. முரளிதரனின் பெலயீனம் பதவி, பணம், புகழ், மது, மாது, கேளிக்கை. அதைக் கொடுத்து கவர்ந்து கொண்டார்கள் எதிரிகள்  என்பதற்கு முரளிதரன் இயக்கத்தை காட்டிக்கொடுத்து வெளியேறியவுடன் நடந்து கொண்ட விதம்; இயக்கத்தில் எப்படி நடித்து கொண்டிருந்தார் என்பதற்கு சான்று. 

ம்..... என்னிடம் கேட்டிருந்தாலே இப்படியானவரை எப்படி முளையிலேயே கண்டுபிடிப்பது என்று இயக்கத்தின் புலனாய்வுத்துறைக்கு சொல்லிக்கொடுத்திருப்பேன் - இதைக்கூட முளையிலே கண்டுபிடிக்க முடியாத பலவீனம் இறுதி அழிவுவரை கொண்டு சென்றிருக்கிறது. பொட்டர்தான் இயக்கத்தின் single point of failure.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொல்லுறேன், இப்போ புலிகள் இல்லை யாரையும் கட்டுப்படுத்துவதற்கு திறமை வாய்ந்த பலர் வாய்ச்சவடால் விட்டுகொண்டிராமல் ஆட்டத்தை தொடங்கலாமே? வெறுங்கை ஒருநாளும் முளமிடாது. அரசும் வெறும் வாய் வார்த்தைதான். தீர்வு என்பது அதனிடம் அன்றும், இல்லை இன்றும் இல்லை, என்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

1 - மிகவும் கவலையான, எமது நம்பிக்கைகளை எல்லாவற்றையும் வேரோடு சிதைத்த,  ஆனால் உண்மையான கருத்து. 

2 - புதிய தலைமுறையினரிடமும் இப்படியான வங்குரோத்து ராஜத‍ந்திரத்தை தொற்று நோய் போல் பரப்பி விட்டு தான் போய் சேரவேண்டும் என்று  சிலர் ஒற்றைக்காலில் நிற்பது இன்னும் சோகம். 

1 - இந்த கருத்தை நீங்கள் வரவேற்கவில்லை என்றால் அது உலக அதிசயம்

2 - கெதியாக போய்ச் சேர வேண்டும் என்று நீங்கள் விரும்புவது தெரிகிறது. ஆனால் இவற்றை உந்தி தள்ளூவது சிங்களம் மட்டுமே அது இருக்கும் வரை நாம் அதை செய்ய வேண்டியது இல்லை

அது உங்கள் கண்ணுக்கு தெரியாத எழுதப்படாத ரகசியம் என்பதை யாழ் களம் அறியும்

  • கருத்துக்கள உறவுகள்

நம்மளிடம் இருக்கும் பிரச்சினை தீர்க்கவே ஆயுள் முடிஞ்சு போகும் போல இருக்கு ( கள உறவுகள்) முடியவே முடியாது பிரச்சினைகள் மட்டுமே 

கருணா  அம்மான் என்ற அந்த பெயருக்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாதவரை ஏன் அந்த பெயரில் அழைப்பான் . இயக்கத்தில் இருந்து வெளியேற்றபட்ட அன்று முதல் . 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2021 at 10:24, tulpen said:

விடுதலைப் புலிகளின் தோல்வியில் பெரும் பங்கு வகித்தது அவர்களின் இராணுவ ரீதியான தவறுகள் அல்ல.  சரியான உலக அரசியல் பார்வை இல்லாத அவர்களின் அரசியல் தவறுகளே.  

இது மிகவும் தவறான கருத்து...உலக அரசியல் பார்வையுடன் ஒத்துப்போகும் ஒர் அமைப்பு தான் இனத்தின் விடுதலைக்குப்போராட முடியாது..அப்படி போராடியமைப்பைச் சுட்டுக்காட்டவும்..பல தமிழர்கள் இயககத்தில் சேர்த்து பயிற்ச்சி  பெற்றபின் கொஞ்சக்காலம் போராடி இயக்கத்தின் நன்மதிப்பைப்பெற்று இயக்கததின் சகல விடயஙகளையுமறிநத பின் தனிப்பட்ட கருத்து முரண்பாடுகாளால் ..இயக்கத்தைவிட்டு..விலகி. எதிரியுடன் சேர்ந்து ..இயக்கத்திலிருத்து  போராடியாதைவிட..பல மடங்கு வீரியத்துடன்  காட்டிக்கொடுத்துள்ளார்கள்..சிறந்த உதாரணம்  வி. முரளிதரன். இதவே. தோல்விக்கு  காரணமாகும்..

 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2021 at 22:18, கிருபன் said:

கருணா அம்மான் ஒரு தனி மனிதர் என்று சொல்லியதும், கருணா அம்மான் இல்லாத புலிகள் முடிந்ததும் கண்முன்னால் நிகழ்ந்ததுதானே. 

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

வி.முரலிதரனின்  போராட்ட வலுவை இழந்ததால் புலிகள்  தோற்க்கவில்லை ..அவனுடைய  பல மடங்கு வீரியத்துடனா. காட்டிக்கொடுப்பினாலேயே. தோற்றார்கள்.   இலங்கையரசும் சொல்லியிருக்கிறது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kandiah57 said:

வி.முரலிதரனின்  போராட்ட வலுவை இழந்ததால் புலிகள்  தோற்க்கவில்லை ..அவனுடைய  பல மடங்கு வீரியத்துடனா. காட்டிக்கொடுப்பினாலேயே. தோற்றார்கள்.   இலங்கையரசும் சொல்லியிருக்கிறது..

கருணா அம்மானின் காட்டிக்கொடுப்பாலா சர்வதேச கடற்பரப்பில் ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டன?

கருணா அம்மான் புலிகளின் போர்த்தந்திரங்களை சொல்லியிருப்பார். புலிகளின் தந்திரங்களைப் பாவித்தே புலிகளை அழித்தார்கள் என்பது உண்மைதான். ஆள ஊடுருவும் இராணுவத்தை சிறு சிறு குழுக்களாக அனுப்பி புலிகளின் நடமாட்டங்களை அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும், காடுகளுக்குள்ளும் கட்டுப்படுத்தியதும் முக்கிய காரணம். மிச்சத்தை மீரா வந்து சொல்வார்..

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 13:44, கிருபன் said:

கருணா அம்மான் தலைவரை இப்போதும் தேசியத் தலைவர் என்றுதானே சொல்லுகின்றார்.

இயக்கம் அழிக்கப்பட்டதால் கருணா அம்மானை பெற்றெடுத்த தாயையே விமர்சிக்கும் அளவு தரம் தாழ்ந்திருப்பது  இயலாமையைத்தான் காட்டுகின்றது.

கேபி
மாத்தையா
அத்தியடி குத்தி
ஆகியோர் எல்லாம் நல்ல வேளை வடக்கில் பிறந்து விட்டனர்

இல்லாட்டி இவர்
அவர்களின் அம்மாவையும் கேவலப்படுத்தி
எழுதியிருப்பார்

இப்படி ஒரு கடும் பிரதேச வியாதியை
அந்தக் கருத்தை
யாழ் இன்னும் அனுமதிப்பது
தமிழ் தேசியத்துக்கு செய்யும்
தீங்கு

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பிரபாதாசன் said:

கருணா  அம்மான் என்ற அந்த பெயருக்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாதவரை ஏன் அந்த பெயரில் அழைப்பான் . இயக்கத்தில் இருந்து வெளியேற்றபட்ட அன்று முதல் . 

 வி. முரளிதரன் ஒரு பியூஸ் போன பல்ப், அது இனிமேல் ஒளிராது என்பதை நம்ப மறுப்பவர்கள் அப்படி  அழைத்து மகிழ்கிறார்கள்.  

 தனது உயிரைக் காப்பாற்ற சிங்கள ஆட்சியாளர்களுடன் சேர்ந்தார்.

போராட்டம் என்பது ஆபத்தானது என்று தெரிந்தே போராடப்போனவர், தலைவரின் அன்பிற்கு, நம்பிக்கைக்கு உரியவராக கூடவே இருந்தவர், களம் பல கண்டவருக்கு திடீரென உயிரை காப்பாற்ற வேண்டிய தேவை  எங்கிருந்து, ஏன் வந்தது? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வைரவன் said:

கேபி
மாத்தையா
அத்தியடி குத்தி
ஆகியோர் எல்லாம் நல்ல வேளை வடக்கில் பிறந்து விட்டனர்

இல்லாட்டி இவர்
அவர்களின் அம்மாவையும் கேவலப்படுத்தி
எழுதியிருப்பார்

இப்படி ஒரு கடும் பிரதேச வியாதியை
அந்தக் கருத்தை
யாழ் இன்னும் அனுமதிப்பது
தமிழ் தேசியத்துக்கு செய்யும்
தீங்கு

 

எனது கருத்திலிருக்கும் பிரதேசவாதத்தை காட்டுங்கள் பார்க்கலாம். ஒரு இனத்துரோகியைப்பற்றி விமர்சிப்பதையும், அவனை அந்தத் தாய் பெற்றிருக்கத் தேவையில்லை என்பதும் எப்படிப் பிரதேசவாதமாகும்? புரியவில்லை. ஒருவேளை அவனது துரோகத்தை பிரதேசவாதத்திற்குள் அமிழ்த்தி நீங்கள் மறைக்கப்பார்க்கிறீர்களோ என்னவோ?!

7 hours ago, வைரவன் said:

கேபி
மாத்தையா
அத்தியடி குத்தி
ஆகியோர் எல்லாம் நல்ல வேளை வடக்கில் பிறந்து விட்டனர்

இல்லாட்டி இவர்
அவர்களின் அம்மாவையும் கேவலப்படுத்தி
எழுதியிருப்பார்

இப்படி ஒரு கடும் பிரதேச வியாதியை
அந்தக் கருத்தை
யாழ் இன்னும் அனுமதிப்பது
தமிழ் தேசியத்துக்கு செய்யும்
தீங்கு

 

எது, நான் அவனது துரோகம்பற்றிப்  பேசுவது பிரதேசவாதம், அவன் எனது இனத்தைக் காட்டிக்கொடுத்து அழித்ததுவிட்டு, இன்றுமட்டும் யாழ்ப்பாணத்தான், மேட்டுக்குடி என்று பேசுவது தேசியவாதமா? 

அவன் கிழக்கைச் சேர்ந்தவன் என்பதால் நான் விமர்சிக்கக் கூடாது, அப்படி விமர்சித்தால் அது பிரதேசவாதம் , இது நல்லாயிருக்கே?!

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

ஒருவேளை அவனது துரோகத்தை பிரதேசவாதத்திற்குள் அமிழ்த்தி நீங்கள் மறைக்கப்பார்க்கிறீர்களோ என்னவோ

இது ஓர் தான் தப்பும் தந்திரம். சிங்கள அரசு தனது தவறுகளை மறைப்பதற்கு இனவாதம், மதவாதத்தை தூண்டி தன்னை மறைத்து தப்பித்துக்கொள்ளும். அண்மையில் கூட பாராளுமன்றில் தினேஷ் குணவர்தனவின் கணக்கை சமப்படுத்த சஜித் முயற்சித்த வேளை பதில் கூற முடியாத நிலையில் தனது இத்துப்போன தந்திரத்தை கையாண்டு, நீங்கள் யார் பக்கம்? இலங்கை பக்கமா? எமக்கு எதிராக வாக்களித்த நாடுகள் பக்கமா? என்னும் கேள்வியை சம்பந்தமில்லாமல் கேட்டு பழியை  மறுபக்கம் திருப்ப முயற்சித்த தினேஷ் குணவர்தனவின்  நகைச்சுவையை பார்த்து சிரித்தேன். கூட இருப்பவர்களுக்கும் அந்த இயல்பு இல்லாவிட்டால் தான் ஆச்சரியம். இந்த கூச்சல்களுக்கு பயந்து நாம் சொல்ல வேண்டியதை சொல்லாமற் போக வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியே கருணா தனிழினத்திற்கெதிராகத்தான் இன்றும் செயற்பட்டு வருகிறான் என்பதைக் காட்டுகிறது. ஐ நா தீர்மானத்திற்கெதிராக தனது எஜமான் திறமையாக வேலை செய்கிறார் என்று சந்தோசப்படுகிறான். தானும் ராணுவமும் சேர்ந்து ஆடிய நரவேட்டை பற்றி எவரும் பேசக்கூடாதென்று நினைக்கிறான்.

ஆக, இன்று கருணா மீதானவிமர்சனத்தை பிரதேசவாதம் என்று கூவுபவர்கள் ஒன்றில் அவனை ஆதரிப்பவர்கள் அல்லது தமிழினத்தின் நலன்களுக்கு எதிரானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 அளவுக்கு மிஞ்சி, காரணமேயில்லாமல் சிங்கள அரசுக்கு சாமரம் வீசுவதிலும், வெள்ளையடிப்பதிலும், முந்திக்கொண்டு அறிக்கை விடுவதிலும் இருந்து: இப்போது தான் வி. முரளிதரனுக்கு உயிராபத்து உள்ளது என்பதை உணர்கிறார் போல்  தெரிகிறது.  எப்படியிருந்தாலும், தனக்கு கயிறு வரும்போது சிங்களம் இவரையே முதற் பலிகொடுக்கும். இவர்தான் விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தில் தமக்கு முழு ஒத்தாசையும் வழங்கி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியவர் என்று பட்டங்களும், பதவிகளும் சிங்களத்திடமிருந்து  பெறும் புளகாங்கிதத்தில் அதை மறுக்கவில்லை, தானே ஒரு இரவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தை கொன்றேன் என்று இவர் பிரஸ்தாபிக்கையில் சிங்களமும் அதை மறுக்கவில்லை. சந்தர்ப்பம் வரும் போது இவர் ஓர் ஆப்பிழுத்த குரங்கின் நிலை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.