Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

நன்றி முல்லை நிலவன்

இதுக்கு பதில் வராது. காரணம் அது, பதிந்தவரின் சொந்த ஆக்கம் இல்லை.

சொந்தமாக, பதிய கூடிய திறமை இருப்பினும், ஏனோ, வெட்டி, ஒட்டும் வேலைகள் செய்வதும், தான் வாசித்தவை அபத்தமோ, இல்லையோ, அடுத்தவர்களும் வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம்.

தயவு செய்து, உங்கள் கருத்துக்களை சொந்தமாக, எழுதி பதியுங்கள். நாமும் ஆரோக்கியமாக விவாதிக்கலாம்.

Thanks

  • Replies 145
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2021 at 16:02, tulpen said:

சீமானின் போலித்தனத்தை தர்க்ககரீதியில் சுட்டிக்காட்டும் சிறப்பான பதிவு. இணைப்புக்கு நன்றி கிருபன். 

இதே போலவே அண்மைய செந்தில் வேலின் தமிழ் கேள்வி நேர காணலும் அமைந்திருந்தது.  சீமான் மீது எந்த வசை மாரியும்  பொழியாமல் ஆதாரங்களுடன் சீமானின் இரட்டை வேடங்களை சுட்டிக் காட்டுகிறார். விரிவான மிக சிறந்த அரசியல் நேர் காணல். இதற்கு சீமான் தரப்பில் இருந்து தகுந்த பதிலை வழங்க முடியாது.  வழமை போல் செந்தில்வேல் ஒரு வந்தேறி என்றோ துரோகி திட்ட மட்டுமே முடியும். 

 பா.ஜ. க போல சீமானின் இனவெறி தேசியவாதமும் அழிக்கப்படவேண்டிய ஒன்றே.

 அண்ண‌ன் சாட்டை துரைமுருக‌ன் செந்தில் வேலின் திராவிட‌ முட்டுகொடுப்பை ப‌ற்றி ந‌ல்ல‌ விள‌க்க‌மாய் சொல்லி இருக்கிறார் இதையும் கொஞ்ச‌ம் பாருங்கோ  ?
 
  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2021 at 20:15, Nathamuni said:

எதை எதையோ பேசி இன்னும் சொதப்ப வேண்டாமே. நகர்வோம். 🤦‍♂️

2 hours ago, நிழலி said:

நீங்கள் எழுதும் மொழியும் பாங்கும் நன்றாகவும் ஆரோக்கியமான உரையாடலுக்குரியதாகவும் உள்ளது.

யாழுக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!

🙏

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, MullaiNilavan said:

🙏

புதிதாக வந்துளீர்கள். எனது கருத்து உங்களுக்கானது அல்ல.

இணைத்திருங்கள். நல்ல கருத்துக்களை இணைத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

புதிதாக வந்துளீர்கள். எனது கருத்து உங்களுக்கானது அல்ல.

இணைத்திருங்கள். நல்ல கருத்துக்களை இணைத்திருங்கள்.

நிறுத்தல் குறியையும் முற்று புள்ளியையும் கவனியுங்கள் பழைய ஆள்தான் 😀

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

நிறுத்தல் குறியையும் முற்று புள்ளியையும் கவனியுங்கள் பழைய ஆள்தான் 😀

அட, இது வேறயா...😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தியல் விவாதங்கள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள். தனிமனித தாக்குதல்கள் என்றால் ஓடி வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maruthankerny said:

கருத்தியல் விவாதங்கள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள். தனிமனித தாக்குதல்கள் என்றால் ஓடி வருகிறார்கள்.

எப்பொழுதும் தெருச்சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

சீமான் எல்லோரும் விவசாயம் செய்யவேண்டும் என்று சொல்கிறாரா?
விவசாயிகளும் விவசாயமும் பாதுக்காக்க பட வேண்டும் என்று சொல்கிறாரா?  

பொருளாதார திட்டத்தில் விவசாயம் தவிர்ந்த திட்டங்கள் சொல்லியிருக்கின்றாரா? கார் தயாரிக்கும் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை இப்படி பாரிய திட்டங்கள் எதுவுமில்லை. அத்தோடு திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது. அவற்றை நிறைவேற்ற பட்ஜெற் தேவையல்லவா. பணம் எப்படி வரும் என்று சொல்லாத திட்டங்கள் பேப்பரில்தான் இருக்கும். பலாப்பழம் விற்ற காசும், பால் விற்ற காசும் பத்தாது.

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார். அது என்ன அன்பான சர்வாதிகாரம்?

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பயல்கள் திராவிட வேலுக்கு பதில் சொல்ல தொடங்கிவிட்டினம், திராவிட வேல் எறிந்த குப்பைகளை பார்த்து , நெக்குருகி போன சார்வாள்கள் எல்லாம் இனி ஓட வேண்டியது தான். 

அன்பான சர்வாதிகாரம் என்பது சிங்கப்பூரில் லீ குவான் யூ செய்தது லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கும்

https://www.facebook.com/100002407389959/posts/4012899868800220/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார்.

அப்போ டென்மார்க் ஆட்சி, லண்டன் ஆட்சி  ஜனநாயக ஆட்சிகள் எல்லாம்  தரமாட்டார் 😂  தமிழக மக்கள் கெட்டிகாரர்கள் அவரை தேர்ந்து எடுக்க போவதில்லை. ஊழலற்ற ஆட்சி டென்மார்க் ஆட்சி  சர்வாதிகார ஆட்சி அது இது என்று அள்ளி அள்ளி  இறைக்க வேண்டியது தானே.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

நிறுத்தல் குறியையும் முற்று புள்ளியையும் கவனியுங்கள் பழைய ஆள்தான் 😀

பெருமாள் கண்டுபிடித்துவிட்டார். பெருமாள் சிறி, அண்ணாவுடன் அட்மிசன் எடுத்தவர் இவர் . இது யாழ்கள பொறுப்பாளர் நிழலிக்கு தெரியவில்லை 🤦‍♂️ புதியவரே வருக என்று வரவேற்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

பொருளாதார திட்டத்தில் விவசாயம் தவிர்ந்த திட்டங்கள் சொல்லியிருக்கின்றாரா? கார் தயாரிக்கும் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை இப்படி பாரிய திட்டங்கள் எதுவுமில்லை. அத்தோடு திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது. அவற்றை நிறைவேற்ற பட்ஜெற் தேவையல்லவா. பணம் எப்படி வரும் என்று சொல்லாத திட்டங்கள் பேப்பரில்தான் இருக்கும். பலாப்பழம் விற்ற காசும், பால் விற்ற காசும் பத்தாது.

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார். அது என்ன அன்பான சர்வாதிகாரம்?

சீமான் இப்போது ஆரம்ப படிகளில் தான் நிற்கின்றார்.  அவர் அரசவைக்கு வந்த பின்னர் உங்கள் கருத்துக்களை தாராளமாக வைக்கலாம்,வெளுக்கலாம். கார் உற்பத்தியின் பின் உள்ள விக்கனங்களை பல மேடைகளில் சொல்லி விளங்கப்படுத்தியுள்ளார்.

ஜேர்மன் செய்திகளின் தரவின் படி இஸ்ரேல் தோடம்பழ ஏற்றுமதியை நிற்பாட்டி விட்டது அல்லது குறைத்துக்கொண்டது. காரணம் அதிகளவு தண்ணீர் தேவைதான் முக்கிய காரணம்.

ஜேர்மனியில் டெல்சா கார்  உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக பெரிய போராட்டங்கள் நடந்தன. அதற்கு முக்கிய காரணம் தண்ணீர்தான். உங்களுக்கு பல மொழிகள் தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். ஒரு கார் உற்பத்திக்கும் ஒரு இயந்திர உற்பத்துக்கும்  எத்தனைல  இலட்சம் லீட்டர் நீர் தேவையென வலைத்தளங்களில் தேடிப்பாருங்கள். அந்த நீரை விவசாயத்திற்கு/குடி நீருக்கு பயன் படுத்தினால்??????

முதலில்  ஒரு மனிதனுக்கு மூன்று வேளையும் உணவு உண்ண விவசாயம் வேண்டும். சகல உயிரினங்களுக்கும் குடிக்க நீர் வேண்டும்.அதில் தன்னிறைவு அடைந்த பின்  காரில் பறப்பதை பற்றி கதைக்கலாம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

நம்ம பயல்கள் திராவிட வேலுக்கு பதில் சொல்ல தொடங்கிவிட்டினம், திராவிட வேல் எறிந்த குப்பைகளை பார்த்து , நெக்குருகி போன சார்வாள்கள் எல்லாம் இனி ஓட வேண்டியது தான். 

அன்பான சர்வாதிகாரம் என்பது சிங்கப்பூரில் லீ குவான் யூ செய்தது லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கும்

https://www.facebook.com/100002407389959/posts/4012899868800220/

அது சிங்கப்பூரில் செய்யலாம்..  அடிமை மாநிலம். தமிழ்நாட்டில் மிக. மிக கஸ்டம். முதலில் தமிழ் நாடு தனிநாடு ஆகவேண்டும் அல்லது. கூடுதல்  அதிகாரம் தேவை.  முக்கியாமாக. மத்தியரசு  நினைத்தவுடன். கலைக்கும் சட்டம். அகற்றப்படவேண்டும். ஆட்சிக்காலம் முடியும்வரை. தெரிவுசெய்யப்பட்ட அரசு பதவியில்இருக்கவேண்டும்😎😎😎

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

பொருளாதார திட்டத்தில் விவசாயம் தவிர்ந்த திட்டங்கள் சொல்லியிருக்கின்றாரா? கார் தயாரிக்கும் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை இப்படி பாரிய திட்டங்கள் எதுவுமில்லை. அத்தோடு திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது. அவற்றை நிறைவேற்ற பட்ஜெற் தேவையல்லவா. பணம் எப்படி வரும் என்று சொல்லாத திட்டங்கள் பேப்பரில்தான் இருக்கும். பலாப்பழம் விற்ற காசும், பால் விற்ற காசும் பத்தாது.

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார். அது என்ன அன்பான சர்வாதிகாரம்?

ஐயா,

தமிழ்நாடு ஒப்பீட்டளவில் அதிக கிராமங்களையும், சிற்றூர்களையும், சொற்ப நகரங்களையும் கொன்ற ஒரு மாநிலம்.

கிராமங்களையும், சிற்றூர்களையும்- ஏழைகள் 82-86%

நகரங்கள்-பணக்காரர்கள் 14-18%.

தமிழ்நாட்டின் மொத்த சனத்தொகை- 8.50 கோடி.

சீமானின் அன்பான சர்வா சர்வாதிகார அரசு அமைப்பு என்பது, சிங்கப்பூரை ஒத்த தமிழ்நாட்டுக்கு பிரத்தியேகமான நிர்வாக சீர்திருத்த சட்டங்கள். அவர்களுடைய ஆட்சி கால சீர்திருத்தம் எவ்வாறு இருக்கும் என்ற ஒரு மாதிரியை நான் விளங்கிய வரையில் உங்களுக்கு இதில் குறிப்பிட விரும்புகிறேன்.

1. கிராமங்கள், சிற்றூர்களில் வறுமை ஒழிப்பை ஊக்குவிக்க தூண்டுதல்.

2. தேசிய அளவிலும், உள்ளூர் மட்டத்தில் ஏழைகள் சார்ந்த திட்டமிடல் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை ஊக்குவித்தலும், மத்திய ஆட்சியாளர்களுடன் தேவைகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்.

3. அடிப்படைத் தேவைகள் இன் நிவர்த்தி செய்யப்படுகின்றது என்பதை கண்காணித்தல் மற்றும் வாழ்வாதாரங்கள் மேம்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை, உற்பத்தி நடவடிக்கைகள் மக்கள் ஈடுபடுவதற்கான ஒரு காரணியாகவும், சேவைகளை ஒழுங்குபடுத்தி மேம்படுத்தி சென்றடைய வைத்தல்.

4. நன்மைகளும் பெறுபவர்களும், சலுகைகளும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் பேதமின்றி பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள்; குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதோர் கண்டறிதல்.

5. கிராமப்புற சமூகங்களில் காணப்படுகின்ற நூலகத்தைப் மூலதனத்தை பெருக்கக் கூடிய கட்டமைப்புகளை உருவாக்குதல்.

6. கண்டறியப்பட்ட சமூக கட்டமைப்புகளுக்கு ,சமமான பாதுகாப்பான சட்ட கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்தல்; நிலங்களை பாதுகாத்தலும் பெண்கள் மற்றும் சிறு அளவிலான விவசாயிகளை மற்றும் பழங்குடியினரை அதிகாரத்தை நோக்கிய ஒரு பயணத்தை உருவாக்கிக் கொடுத்தல்.

7. பெண்கள் பழங்குடி மக்கள் மற்றும் சிவ பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் ஆகியோருக்கு நிலம், நீர், நிதி ஆதாரங்கள் மற்றும் தேவையான தொழில்நுட்பங்களும் சமமான அளவில் கிடைக்க ஒரு அணுகு முறையை உருவாக்கிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல்.

8. கிராமப்புறங்களில் காணப்படுகின்ற பாரம்பரிய அறிவியலுடன், நிலையான நவீன தொழில்நுட்பங்களை சேர்ப்பது ஒத்திசைந்து ஆதரித்து ஊக்குவித்தல்.

9. உற்பத்திகளின் விலை, வானிலை, சந்தைப் போக்கு, கடன் அடிப்படையில் ஆதாரங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல்.

10. இயற்கை பேரழிவுகளை சந்திப்பதற்கு பழக்கப்படுத்தி, அதுவே நிவர்த்தி செய்வதற்கான உடனடி வேலைத் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்.

11. மாநில அரசு சார்ந்து காலநிலை மாற்றத்தின் தரவுகளை துல்லியமாக பெற்றுக்கொள்ள கட்டமைப்புகளை உருவாக்கி விடுதல்.

12. கிராமப்புற தலைமைகளே உருவாக்கி, நிர்வாகத் திறனை ஊக்குவித்தல்.

13. பாதுகாப்பான நீர், புதிய வடிகால் அமைப்புகள் சீர் செய்தல்.

14.நிலையான எரிபொருள் வசதிகளை, மின்மயமாக்கல் வசதிகளை செய்து கொடுத்தல், தகவல் தொடர்பு வலையமைப்புகளை உருவாக்கிக் கொடுத்தது கொடுத்தல்.

15. நகர, கிராமங்களுக்கு இடையேயான சுகாதார கட்டமைப்புகளை விஸ்தரித்து சமமான முறையில் நிர்வகித்தல்.

16.கிராமப்புற முதலீடுகளை ஊக்குவித்தல்.

17.கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் போன்றவற்றில் நகர் ,கிராம ஒரே அளவில் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அல்லது கட்டாயப்படுத்தியது.

இன்னம் சில கூறுகள் இதில் உள்ளடக்கலாம், ஆனால் நேர பளு காரணமாக நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அப்போ டென்மார்க் ஆட்சி, லண்டன் ஆட்சி  ஜனநாயக ஆட்சிகள் எல்லாம்  தரமாட்டார் 😂  தமிழக மக்கள் கெட்டிகாரர்கள் அவரை தேர்ந்து எடுக்க போவதில்லை. ஊழலற்ற ஆட்சி டென்மார்க் ஆட்சி  சர்வாதிகார ஆட்சி அது இது என்று அள்ளி அள்ளி  இறைக்க வேண்டியது தானே.

உண்மை தமிழக மக்கள் அவரை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

காரணங்கள்,

1. இப்போ இருக்கின்ற தலைமுறைகள்; கூட வாழுகின்ற அல்லது அயல் மாநிலங்களில் வாழுகின்ற இனக்குழுக்களின் எந்தவிதமான பெரிய அடக்குமுறைகளையும், உயிர்ச் சேதங்களையும் உணர்ந்தவர்களாக இல்லை. ஒரு இளம் பராயத்தினர் அதை உணரத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் எங்களுக்கு அது நன்றாகவே புரியும் நாங்கள் காயப்பட்டு அடிபட்டு அழிந்துபோன தமிழ் குடிகள் இலங்கையில்.

2. தமிழகத்தில் உள்ளவர்கள் அயல் இனங்களில் உருவாகின்ற ஆக்கிரமிப்புகளை உணர தெரியாமல் இருக்கின்றார்கள். அத்தோடு அதனைச் சார்ந்து எழுதுபவர்களை அல்லது கொடுப்பவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்து விடுவார்கள்.

3. கிட்டத்தட்ட ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பாக தான் அவர்களுக்கு வரலாறு குறிப்பாக தமிழக வரலாறு பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டது அதுவும் தமிழக வரலாறு அடங்கவில்லை.

4. தமிழக வரலாறு, ஆட்சி முறைகள் வெளிய உள்ளவர்களினால் பிரசுரிக்கப்பட்டது. அது எல்லோரையும் சென்றடையவும் இல்லை.

5. ஆங்கில மோகமும், தமிழ் மொழிமூல கற்களும் அவசியமற்ற போனதால் அவர்களுடைய கல்வி மேம்படும் வேலைகளும் வேலைகளும் வேலைவாய்ப்புகளும் ஒரு சமூக இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

6. தமிழகத்தில் சுதந்திரத்துக்கு பின்னான ஆட்சியில் வந்தவர்கள் கிட்டத்தட்ட காமராஜர் கல்விக்கு, தமிழுக்கு முன்னுரிமை கொடுத்தார்.

7.அதன் பின்னால் வந்த கருணாநிதியின் ஆரம்பகால கல்வி தெலுங்கிலேயே இருந்தது அவரின் ஆரம்ப காலம் முற்றுமுழுதாக தெலுங்கு சார்ந்த ஒரு கட்டமைப்புக்குள் வளர்ந்த கிட்டத்தட்ட 20 வயதுகளில் அவர் தமிழ் சார்ந்தது சிந்திக்கத் தொடங்கினர்.

8. எம்ஜிஆர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை என்று ஆய்வுகள் கூறுகின்றது அதனால் அவர் கேள்வி கல்வி அறிவு வீதத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறையை கொண்டிருக்கவில்லை.

9. ஜெயலலிதா தமிழ் தெரிந்த வாசிக்கத் தெரியாது ஒரு கன்னடத்து முதலமைச்சர்.

இவர்களுடைய அந்தப் பொன்னான ஆட்சிக்காலத்தில் இவ்வாறு தமிழம் தழைத்தோங்கி இருக்கும். ஆனால் பொருளாதாரத்துக்கான ஒரு கல்வி முறையை உருவாக்கிக் கொடுத்து விட்டார்கள். அது சுவையற்ற ஒரு உணவு பதார்த்தம் ஆக இருப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமன்றி சினிமா சார்ந்த ஒரு அரசியல் போக்கை உருவாக்கி கேளிக்கைகளும், பெண் மோகத்தையும் கிடைக்கச் செய்தனர்.

குறிப்பாக பார்த்தீர்கள் ஆனால் அவர்களின் சினிமாக்கள் காதலை மையப்படுத்தி, பெண்களை மையப்படுத்தி இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. சமீப காலத்தில் சில மாறுதல்களை அவர்களுடைய திரைப்படங்கள் காட்டுகிறது.

இப்படிப்பட்ட ஒரு தமிழ் சமூகத்தில் ஒரு அரசியல் விழிப்புணர்வு, ஒரு எழுச்சி விஞ்ஞானத்தின் தேவை எப்படி உருவாக்குவீர்கள். ஆகவே அவர்கள் சீமானை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

இவர்கள் எங்கள் நாட்டிலும் தமிழர்களை அழித்தொழிக்க துணை போனவர் ஆகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

அருமையான கருத்து... முல்லை நிலவன். 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

அது சிங்கப்பூரில் செய்யலாம்..  அடிமை மாநிலம். தமிழ்நாட்டில் மிக. மிக கஸ்டம். முதலில் தமிழ் நாடு தனிநாடு ஆகவேண்டும் அல்லது. கூடுதல்  அதிகாரம் தேவை.  முக்கியாமாக. மத்தியரசு  நினைத்தவுடன். கலைக்கும் சட்டம். அகற்றப்படவேண்டும். ஆட்சிக்காலம் முடியும்வரை. தெரிவுசெய்யப்பட்ட அரசு பதவியில்இருக்கவேண்டும்

ஒருவேளை ஜெகன் மோகன் ரெட்டி சிங்கப்பூரிலிருந்து கொண்டு  சீமான் சொல்வதையெல்லாம் கொப்பியடிக்கிறாரோ 😁😁😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MullaiNilavan said:

ஐயா,

தமிழ்நாடு ஒப்பீட்டளவில் அதிக கிராமங்களையும், சிற்றூர்களையும், சொற்ப நகரங்களையும் கொன்ற ஒரு மாநிலம்.

கிராமங்களையும், சிற்றூர்களையும்- ஏழைகள் 82-86%

நகரங்கள்-பணக்காரர்கள் 14-18%.

தமிழ்நாட்டின் மொத்த சனத்தொகை- 8.50 கோடி.

சீமானின் அன்பான சர்வா சர்வாதிகார அரசு அமைப்பு என்பது, சிங்கப்பூரை ஒத்த தமிழ்நாட்டுக்கு பிரத்தியேகமான நிர்வாக சீர்திருத்த சட்டங்கள். அவர்களுடைய ஆட்சி கால சீர்திருத்தம் எவ்வாறு இருக்கும் என்ற ஒரு மாதிரியை நான் விளங்கிய வரையில் உங்களுக்கு இதில் குறிப்பிட விரும்புகிறேன்.

1. கிராமங்கள், சிற்றூர்களில் வறுமை ஒழிப்பை ஊக்குவிக்க தூண்டுதல்.

2. தேசிய அளவிலும், உள்ளூர் மட்டத்தில் ஏழைகள் சார்ந்த திட்டமிடல் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை ஊக்குவித்தலும், மத்திய ஆட்சியாளர்களுடன் தேவைகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்.

3. அடிப்படைத் தேவைகள் இன் நிவர்த்தி செய்யப்படுகின்றது என்பதை கண்காணித்தல் மற்றும் வாழ்வாதாரங்கள் மேம்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை, உற்பத்தி நடவடிக்கைகள் மக்கள் ஈடுபடுவதற்கான ஒரு காரணியாகவும், சேவைகளை ஒழுங்குபடுத்தி மேம்படுத்தி சென்றடைய வைத்தல்.

4. நன்மைகளும் பெறுபவர்களும், சலுகைகளும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் பேதமின்றி பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள்; குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதோர் கண்டறிதல்.

5. கிராமப்புற சமூகங்களில் காணப்படுகின்ற நூலகத்தைப் மூலதனத்தை பெருக்கக் கூடிய கட்டமைப்புகளை உருவாக்குதல்.

6. கண்டறியப்பட்ட சமூக கட்டமைப்புகளுக்கு ,சமமான பாதுகாப்பான சட்ட கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்தல்; நிலங்களை பாதுகாத்தலும் பெண்கள் மற்றும் சிறு அளவிலான விவசாயிகளை மற்றும் பழங்குடியினரை அதிகாரத்தை நோக்கிய ஒரு பயணத்தை உருவாக்கிக் கொடுத்தல்.

7. பெண்கள் பழங்குடி மக்கள் மற்றும் சிவ பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் ஆகியோருக்கு நிலம், நீர், நிதி ஆதாரங்கள் மற்றும் தேவையான தொழில்நுட்பங்களும் சமமான அளவில் கிடைக்க ஒரு அணுகு முறையை உருவாக்கிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல்.

8. கிராமப்புறங்களில் காணப்படுகின்ற பாரம்பரிய அறிவியலுடன், நிலையான நவீன தொழில்நுட்பங்களை சேர்ப்பது ஒத்திசைந்து ஆதரித்து ஊக்குவித்தல்.

9. உற்பத்திகளின் விலை, வானிலை, சந்தைப் போக்கு, கடன் அடிப்படையில் ஆதாரங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல்.

10. இயற்கை பேரழிவுகளை சந்திப்பதற்கு பழக்கப்படுத்தி, அதுவே நிவர்த்தி செய்வதற்கான உடனடி வேலைத் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்.

11. மாநில அரசு சார்ந்து காலநிலை மாற்றத்தின் தரவுகளை துல்லியமாக பெற்றுக்கொள்ள கட்டமைப்புகளை உருவாக்கி விடுதல்.

12. கிராமப்புற தலைமைகளே உருவாக்கி, நிர்வாகத் திறனை ஊக்குவித்தல்.

13. பாதுகாப்பான நீர், புதிய வடிகால் அமைப்புகள் சீர் செய்தல்.

14.நிலையான எரிபொருள் வசதிகளை, மின்மயமாக்கல் வசதிகளை செய்து கொடுத்தல், தகவல் தொடர்பு வலையமைப்புகளை உருவாக்கிக் கொடுத்தது கொடுத்தல்.

15. நகர, கிராமங்களுக்கு இடையேயான சுகாதார கட்டமைப்புகளை விஸ்தரித்து சமமான முறையில் நிர்வகித்தல்.

16.கிராமப்புற முதலீடுகளை ஊக்குவித்தல்.

17.கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் போன்றவற்றில் நகர் ,கிராம ஒரே அளவில் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அல்லது கட்டாயப்படுத்தியது.

இன்னம் சில கூறுகள் இதில் உள்ளடக்கலாம், ஆனால் நேர பளு காரணமாக நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

கிராமங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றப்படவேண்டும். கிராம மக்கள் தொழில்வாய்ப்புக்களுக்காக நகரங்களை நோக்கி படையெடுப்பதை குறைக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் பொருளாதாரத் திட்டங்களில் radical மாற்றங்களைச் செய்யமுடியாத நிலை இருக்கின்றது. அது சீமானுக்கும் தெரியும், ஆனால் வெளியே சொல்லமாட்டார்.

Make in India என்ற பெயரில் மோடி சொல்லும் “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும், சீமானின் “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. ஆனால் இவர்கள் சொல்லாமல் மறைப்பது என்னவென்றால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புக்களிடம் இருந்து வாங்கிய கடன்களால் அவர்களின் நிபந்தனைகளை மீறி ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான். மத்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாடு மாநில அரசும் கடன் வாங்கி வருகின்றது. அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை தாராளமயப்படுத்த வேண்டும், சந்தையை நூறு சதவீத அந்நிய முதலீடுக்கு திறந்து விட வேண்டும். மேற்கு நாடுகளின் மீது சாய்ந்து கொண்டிருக்கும் இந்தியாவும், மேற்கு நாடுகளின் சந்தைகளில் கால்பதிக்க முனையும் தமிழக முதலாளிகளும், மேற்கு நாடுகளின் சுயலாபக் கொள்கைகளை மீறி எதுவும் செய்யமுடியாது.

மேற்கு நாடுகளின் சந்தைப் பொருட்களை வாங்கினால்தான், மேற்குநாடுகளின் சந்தைகளில் ஓரளவாவது காலூன்றலாம்.. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றை மீறி உள்ளூரில் கடன் கொடுப்பதும், மானியங்கள் கொடுப்பதும் சரிவராது. சுருக்கமாகச் சொன்னால், தற்போதைய திறந்த தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தையும், நுகர்வோர் கலாச்சாரத்தையும் தக்கவைக்கும் பொருளாதாரத் திட்டங்களில் இருந்து அதிகம் விலகிச் செல்லமுடியாத தளைகள் உள்ளன. எனவே நாம் தமிழரின் “தற்சார்பு” பொருளாதாரமும் எழ முதலே தடுக்கிவிழும் அல்லது விழுத்தப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

எம்ஜிஆர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை என்று ஆய்வுகள் கூறுகின்றது அதனால் அவர் கேள்வி கல்வி அறிவு வீதத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறையை கொண்டிருக்கவில்லை.

படித்தவர்கள்  எல்லாம் சிறந்த நிர்வாகிகலில்லை சிறந்த நிர்வாகிகள் எல்லாம். படித்தவர்களைமல்ல. எம்ஜிஆர் அடிமட்டத்திலிருந்து வந்தவர் சிறந்த அனுபவசாலி ..சிறந்த நிரவாகியும் கூட..பல முறை. முதலமைச்சாராயிருந்து இருக்கிறார்.இந்திரா அமமையார் சட்டமன்றத்தைக்கலைததபோதும். மீண்டும் தமிழகமக்கள். அவரையே தெரிவு செய்தார்கள். இன்றும் கூட  அவர் உயிருடனிருந்து  தேர்தலில் நிற்பாராயின்..தமிழகமக்கள் மிகப்பெரும்பான்மையுடன் அவரை. முதலமைச்சராக. தெரிவுசெய்வார்கள்.இந்தப் படககாதவனைப் படித்தவர்களும் வாக்குப்போட்டு தெரவுசெய்துள்ளார்கள். சீமான் எனனும் படித்தவனுக்கு படிககதவனும் வாக்குபபோடப்போவதிலலை. படிப்பில்லை என்ற ஒரே காரணத்துக்காக எம்ஜிஆரை மட்டாமாக எழுதுவது எற்புடையதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

தமிழகத்தில் உள்ளவர்கள் அயல் இனங்களில் உருவாகின்ற ஆக்கிரமிப்புகளை உணர தெரியாமல் இருக்கின்றார்கள். அத்தோடு அதனைச் சார்ந்து எழுதுபவர்களை அல்லது கொடுப்பவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்து விடுவார்கள்.

தமிழகம் இந்தியாவின் ஒர் பகுதி...இந்தியாவின் ஒர் பகுதியில் ..எந்த இந்தியானும் வந்து  குடியிருக்கமுடியும்..அந்தப்பகுதியிலிருப்பவனே  கேள்வி கேட்கமுடியாது  ..நீங்கள். எப்படி கேட்க முடியும்?🤓🤓

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

இப்படிப்பட்ட ஒரு தமிழ் சமூகத்தில் ஒரு அரசியல் விழிப்புணர்வு, ஒரு எழுச்சி விஞ்ஞானத்தின் தேவை எப்படி உருவாக்குவீர்கள். ஆகவே அவர்கள் சீமானை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

என்ன சொல்லவருகிறிர்கள்? மக்கள் தகுதியற்றாவர்கள்..சீமான் தகுதியான வேட்பாளர்..அப்படியா? பிறகு  எப்படி  காமராஐர்...அண்ணத்தரை....எம்ஜிஆர்...தெர்வு செய்தார்கள்?இன்றும் தமிழகமக்கள். இந்த முதலமைச்சர்மாரை  புகழ்கிறார்கள்.தகுதியான வேட்பாளர் போட்டியிடவிடில். மக்கள்  எப்படி. நல்ல முதலமைச்சரைத்தெரிவு  செய்ய முடியும்..?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

வெரி சிம்பிள்! போட்டியிடுவோரில் தகுதியானவரை தேர்ந்தெடுக்கவேண்டும்!!

தகுதியானவர் போட்டியிடவில்லை என்று யாரை சொல்லவருகிறீர்கள்? நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியையா ??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

படித்தவர்கள்  எல்லாம் சிறந்த நிர்வாகிகலில்லை சிறந்த நிர்வாகிகள் எல்லாம். படித்தவர்களைமல்ல. எம்ஜிஆர் அடிமட்டத்திலிருந்து வந்தவர் சிறந்த அனுபவசாலி ..சிறந்த நிரவாகியும் கூட..பல முறை. முதலமைச்சாராயிருந்து இருக்கிறார்.இந்திரா அமமையார் சட்டமன்றத்தைக்கலைததபோதும். மீண்டும் தமிழகமக்கள். அவரையே தெரிவு செய்தார்கள். இன்றும் கூட  அவர் உயிருடனிருந்து  தேர்தலில் நிற்பாராயின்..தமிழகமக்கள் மிகப்பெரும்பான்மையுடன் அவரை. முதலமைச்சராக. தெரிவுசெய்வார்கள்.இந்தப் படககாதவனைப் படித்தவர்களும் வாக்குப்போட்டு தெரவுசெய்துள்ளார்கள். சீமான் எனனும் படித்தவனுக்கு படிககதவனும் வாக்குபபோடப்போவதிலலை. படிப்பில்லை என்ற ஒரே காரணத்துக்காக எம்ஜிஆரை மட்டாமாக எழுதுவது எற்புடையதில்லை.

வணக்கம் ஐயா,

நிர்வாகம் என்பது ஒரு வரையறைகளை கொண்டது. அது பல படிமுறைகள் கொண்ட ஒரு வலுவான, செயல்முறை அடுக்குகளை கொண்டு, தொடர்ந்து இயங்கும்.

எனது கருத்து எம்ஜிஆர் சிறந்த நிர்வாகி அல்ல என்பதை சுட்டிக்காட்டுவது அல்ல.

அரசு நிர்வாகம் என்பது சாதாரண நிர்வாக முறைகளை விட ஒரு வலுவான எதிர்கால சிந்தனையுடன் திட்டங்களை உருவாக்கி, அதனை அடைவதற்கான தந்திரோபாயங்கள் சிக்கல்களை ஆராய்ந்து முதன்மையான வெற்றியை நிலைப்படுத்தி, அதனைத் தொடர்ந்து செய்வதற்கான ஒரு விதிமுறைகளை அல்லது  ஒரு கட்டமைப்புகளை உருவாக்கி விடும். 

இங்கே சிக்கல் எம்ஜிஆரின் தூர நோக்கு, கல்வி முறை மாற்றம் ஒன்றை புகுத்த முடியவில்லை என்பதே. இதில்தான் தலைமைத்துவத்தின் ஆளுமையும், சிறந்த பார்வையும் வெளிப்படும்.

உதாரணமாக ஒரு குடும்பத்தில், தாய் அல்லது தகப்பனார் தங்களது பிள்ளைகள் மீதான அக்கறை எதை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.  நான் உங்கள சிந்தனைக்காக அதை விட்டு விடுகிறேன். நீங்களே  உங்களைச் சுற்றி நடந்த குடும்பங்களின் வளர்ச்சி அல்லது தாழ்வு யாரை மையப்படுத்தி இருந்தது என்பதை ஒரு முறை சிந்தியுங்கள். அதில் சில விடைகள் உங்களுக்கு புரியும். அதுவே ஒரு மக்கள் கூட்டத்திற்கு ஒத்து போகும்.

சமூக கட்டமைப்பு அதுவும் குறிப்பாக தமிழர்களுடைய சமூக கட்டமைப்பு, மிக மிக வலிமையான  உணர்வுகளின் உணர்வுகளின் அடிப்படையில் அமையப்பெற்றது. குடும்பம், உறவு, உறவுகளின் பினைப்பு, பரம்பரை ,ஊர்,  கிராமம் நகரம் அதுவே பின்பு நாடாகி இறுக்கமான ஒரு கட்டமைப்பை உருவாக்கி உள்ளார்கள். ஒரு குடும்பத்தில் எடுக்கின்ற முடிவுகள் எவ்வாறு  ஒரு பரம்பரை ஆளுகின்றது என்பதை நீங்கள் கண்கூடாக உணர்வீர்கள்.

இது தான் கிட்ட தட்ட 2000 ஆண்டுகள் முன்பு ஒரு இறுக்கமான ஒரு சமூக கட்டமைப்பை வைத்திருந்தார்கள் அது பின்னாளில் மெதுவாக கலையத் தொடங்கி இவ்வளவு சீர்கேடுகளுக்கு ஆளாகி உள்ளோம்.

இங்கே குறைபாடு எம்ஜிஆர் வெளிப்படுத்தியநிர்வாகப் சம்பந்தப்பட்டதல்ல, எனது தனிப்பட்ட கருத்து எம்ஜிஆர் என்ன தேவை என்பதை தூர நோக்கோடு, கடந்து வந்த அதாவது வரலாறை புரிந்துகொள்ளாமல் விட்டதே. அது  சார்ந்து தனது திட்டங்களை விடவில்லை என்பதே. தனது குடிவாழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை அவர் உணரவில்லை, உணர்த்த இல்லை.

நீங்கள் குறிப்பிட்டது போல தமிழக மக்கள் அவர் இருந்திருந்தால் மீண்டும் மீண்டும் அவருக்கு வாக்கு செலுத்தி அவரை முதல்வராக்கி இருப்பார்கள். இதனையே அவரது நுணுக்கமான அவருக்குத் தெரியாத "கட்டுப்படுத்தல்" என்கின்ற ஒரு சொல்லாடலில் ஒருபொருள் முறையில் வருகிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

வெரி சிம்பிள்! போட்டியிடுவோரில் தகுதியானவரை தேர்ந்தெடுக்கவேண்டும்!!

தகுதியானவர் போட்டியிடவில்லை என்று யாரை சொல்லவருகிறீர்கள்? நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியையா ??

உங்களுக்கு அது மிகவும் இலகுவாகயிருக்கிறது.  ஆனாலும். நீங்கள். சென்னமாதிரித்தான் செய்யவேண்டும் ...அப்படித்தெரிவுசெய்யும் முதலமைச்சர்  எப்படி நல்ல முதலமைச்சராக முடியும்?. உங்கள் நட்சத்திர நடிகர். ரஜினி வாக்குப்போடவே. தகுதியற்றவர்...உந்த வயதில் ஜேர்மனியில். அரசியலிருந்து ஓய்வு பெறுகிறார்கள்.😍😍😎😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.