Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமதி இலங்கை அழகி... கிரீடத்தை, மீண்டும் தன்வசமாக்கினார் புஸ்பிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி  இலங்கை அழகி கிரீடத்தை மீண்டும் தன்வசமாக்கினார் புஸ்பிகா

திருமதி  இலங்கை அழகி... கிரீடத்தை, மீண்டும் தன்வசமாக்கினார் புஸ்பிகா

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை அழகிப் போட்டியில், புஸ்பிகா டி சில்வாவை வெற்றியாளர் என கூறி மீளவும் குறித்த கிரீடத்தை அவரிடமே கையளிக்க ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, 2021 ஆம் ஆண்டுக்கான  திருமதி இலங்கை போட்டி நடத்தப்பட்டது.

இதன்போது குறித்த போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கிய கிரீடத்தை மீள அகற்றி இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு அணிந்து, அவரே, திருமதி இலங்கையின் 2021ஆம் ஆண்டுக்கான அழகியாக தெரிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

குறித்த பெண் விவாகரத்து செய்யப்பட்டவர் என்ற காரணத்தினாலேயே இவ்வாறு  குறித்த பட்டமும் கிரீடமும் மீளப் பெறப்பட்டதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்திருந்தது.

இந்த சம்பவத்தினால் அந்நிகழ்வில் சிறிது பதற்றமான நிலைமை காணப்பட்டிருந்தது.

இதேவேளை புஷ்பிகா டி சில்வா, உச்சந் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை காரணமாக வைத்தியசாலையில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சம்பவத்திற்குப் பின்னர், அவர் மன ரீதியாகவும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் புஷ்பிகா தனது கணவனை விவாகரத்து செய்யவில்லை என்றும், ஜூரி, அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும்  அவரது உதவியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2021/1207731

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதி தருணத்தில்... திருமதி அழகி கிரீடத்தை நழுவ விட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதி.

இலங்கையில் நடத்தப்பட்ட திருமதி அழகி 2021 ஆம் ஆண்டுக்கான போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, சிறிது நேரத்திலேயே  புஷ்பிகா டி சில்வாவிடம் இருந்து கிரீடம் அகற்றப்பட்டு, இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டு, அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இவ்வாறு கிரீடத்தை அகற்றிய வேளையில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி இன்று (திங்கட்கிழமை) காலை, புஷ்பிகா டி சில்வா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது புஷ்பிகாவின் உச்சந் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்திற்குப் பின்னர், அவர் மன ரீதியாகவும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் உதவியாளர் குறிப்பிட்டுள்ளார்.

புஷ்பிகா தனது கணவரிடமிருந்து விவாகரத்து செய்யவில்லை என்றும், ஜூரி, அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த போட்டியில் தனக்கு தீங்கு விளைவிக்கப்பட்டுள்ளதாக புஷ்பிகா டி சில்வா முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

https://athavannews.com/2021/1207676

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமதி இலங்கை அழகியின் கிரீடம் பறிப்பு விவகாரம்: கரோலின் ஜூரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலை

திருமதி இலங்கை அழகியின் கிரீடம் பறிப்பு விவகாரம்: கரோலின் ஜூரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலை

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் வாக்குமூலமொன்றினை பெற்றுக்கொள்வதற்காக திருமதி உலக அழகியான கரோலின் ஜூரிக்கு கறுவாத்தோட்டப் பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர்.

குறித்த அழைப்புக்கு ஏற்ப, கறுவாத்தோட்டப் பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலையாகியுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர்மீது விசாரணை மேற்கொள்வதற்காக கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகுமாறு கரோலின் ஜூரிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற, திருமதி  இலங்கை அழகிப் போட்டியில் புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் ஜூரி, அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதாவது, வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர். அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது. எனவே இரண்டாவது வெற்றியாளர், முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.

அதன்பின்னர் ஜூரி, மேடையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் தலையில் இருந்த கிரீடத்தை அகற்றி, இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்து அவரை நிகழ்வின் வெற்றியாளராக அறிவித்தார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்தானவர் இல்லை என அறிவித்ததுடன் பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1208064

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா இப்படி எல்லாம் பிரச்சனை இருக்கா 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிறி அண்ணா இப்படி எல்லாம் பிரச்சனை இருக்கா 😁

விளங்க நினைப்பவன்.... 

ஆடான ஆடெல்லாம்... தவிட்டுக்கு அழ,

செம்மறி ஆடு... புண்ணாக்கு வேணும் எண்டு அழுததாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

விளங்க நினைப்பவன்.... 

ஆடான ஆடெல்லாம்... தவிட்டுக்கு அழ,

செம்மறி ஆடு... புண்ணாக்கு வேணும் எண்டு அழுததாம். 🤣

இதெல்லாம் சிங்கள மக்களை ஆகாயத்துக்கு எகிறும் விலைவாசிகளில் இருந்து திசை திருப்பும் செய்திகள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

இதெல்லாம் சிங்கள மக்களை ஆகாயத்துக்கு எகிறும் விலைவாசிகளில் இருந்து திசை திருப்பும் செய்திகள் .

இன்னும் கொஞ்ச நாளையாலை ஒரு அமெரிக்க டொலர் மாத்தினால் சிறிலங்கா காசு சூட்கேசிலைதான் கொண்டு வரவேணுமாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

இதெல்லாம் சிங்கள மக்களை ஆகாயத்துக்கு எகிறும் விலைவாசிகளில் இருந்து திசை திருப்பும் செய்திகள் .

9 hours ago, குமாரசாமி said:

இன்னும் கொஞ்ச நாளையாலை ஒரு அமெரிக்க டொலர் மாத்தினால் சிறிலங்கா காசு சூட்கேசிலைதான் கொண்டு வரவேணுமாம். :grin:

நாம் மேலை நாடு வந்ததால் அந்நியன் ... அகதி ... வெளிநாட்டவன் ... கறுப்பர்கள்.
போன்ற புறக்கணிப்புகள் எங்களின் வழமையான பார்வையையும் அறிவையும் 
வாழ்க்கை முறைமையையும் கொஞ்சம் என்றாலும் மாற்றி இருக்கிறது 
அதில் இருந்துகொண்டுதான் எங்கள் இப்போதைய எண்ணம் சிந்தனை இருக்கிறது 

ஆனால் நாட்டில் இந்தியாவில் நடுத்தர வர்க்கம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது 
அவர்கள் எங்களை விட பகட்டுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் 
ஏழைகள் ஏழையாகிக்கொண்டே இருக்கிறார்களே என்று எந்த உணர்வு தீண்டலும் 
அவர்களிடம் இல்லை .. காரணம் அதற்கு மேன்மையாவரைகளை இவர்கள் போட்டிக்கு 
துரத்திக்கொண்டு இருப்பதால் .... அவர்களின் பகட்டு வாழ்க்கை கூட அவர்கள் மனதில் 
ஒரு ஏழை வாழ்க்கை போலவே இருக்கிறது.

எங்களின் பிரச்சனைகளை கொஞ்சம் கொஞ்சமாக சிங்களவரக்ளுக்கு எடுத்துக்கூற வேண்டும் எனும் 
எண்ணத்தில் எனது ட்விட்டர் இன்ஸ்டாகிராமில் நிறைய சிங்களவர்களை இணைத்து வருகிறேன் 
அவர்களில் பலர் அடிக்கடி பிரபல கோட்டல்களில்  தங்குகிறார்கள் சாப்பிடுகிறார்கள் நிறைய படங்கள் போடுவார்கள்  அந்த இடங்களில் விலைகளை நான் பார்க்கும்போது  $100-250 வரை இருக்கிறது 
டாலரில் சம்பளம் வாங்கும் நானே அங்கு செல்ல தயங்குவேன் எப்படி அவர்கள் வாழ்கிறார்கள் என்று புரியவில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

ஒருவர் ஒரு தகாத செயலைச் செய்ய முற்படும் போது, அவர்து மனச்சாட்சி அவரை முதலாவது தடவை கடுமையாக எச்சரிக்குமாம்!
இரண்டாவது தடவை அவர் முயலும் போது மனச்சாட்சி கொஞ்சம் கடுமை குறைந்து எச்சரிக்குமாம்! மூன்றாவது தடவை அதை அவர் செய்ய முயலும் போது....மனச்சாட்சி மெளனமாகி விடும் என்று சொல்கின்றார்கள்!

இப்படியானவர்களுக்கு மனச்சாட்சியே செத்துப் போய்....மிக நீண்ட காலமாகி இருக்கும்...!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

In a historic setback, millions are tumbling out of the global middle class

Nearly 150 million slipped down the economic ladder in 2020, the first pullback in almost three decades

1617828758-0409.jpg

https://www.bloomberg.com/features/2021-emerging-markets-middle-class/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

.மனச்சாட்சி மெளனமாகி விடும் என்று சொல்கின்றார்கள்!

மனச்சாட்சி ஒருபோதும்  மௌனமாகாது. அது சாகும்வரை எச்சரித்துக்கொண்டே இருக்கும். நாம்தான் அதன் குரலை மேலெழ விடாமல் எமது தீய குணங்களால் அதன் குரலை அடக்கி விட்டாலும், அது தீனமாய் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாம் அது செத்துவிட்டது, மௌனித்து விட்டது என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். முதலில் உரத்துக் கேட்க்கும் குரலை சமாளிக்க முடியாமல் தடுமாறுவோம் பின் அதனை சமாதானப்படுத்தி எம்மெண்ணங்களை  மேலெழ வைத்து அதை அடக்க நினைத்து  அது செத்துவிட்டது என்று விளங்கிக்கொள்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா பிணையில் விடுதலை

கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா பிணையில் விடுதலை

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் மொடல் சுலா பத்மேந்திரா ஆகிய இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பாக குறித்த இரு பெண்களும் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக கறுவாத்தோட்டப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மாலை, கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமதி  இலங்கை அழகியின் கிரீடத்தை பறித்த திருமதி உலக அழகி கைது

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் மொடல் சுலா பத்மேந்திரா ஆகிய இருவரும் கறுவாத்தோட்டப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும், வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு கறுவாத்தோட்டப் பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) அழைத்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில், திருமதி  இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா, அவர்கள் இருவர் மீதும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கமை, இருவரிடமும் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற, திருமதி  இலங்கை அழகிப் போட்டியில் புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் ஜூரி, அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதாவது, வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர். அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது. எனவே இரண்டாவது வெற்றியாளர், முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.

அதன்பின்னர் ஜூரி, மேடையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் தலையில் இருந்த கிரீடத்தை அகற்றி, இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்து அவரை நிகழ்வின் வெற்றியாளராக அறிவித்தார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்தானவர் இல்லை என அறிவித்ததுடன் பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1208596

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கரோலின் ஜூரி 2020 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகி அல்ல

கரோலின் ஜூரி தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை திருமதி உலக அழகுராணியை தெரிவு செய்யும் அமைப்பு எற்றுக்கொள்வதாக இன்று தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, 2020 திருமதி உலக அழகுராணி போட்டியில்  இரண்டாம் இடத்தை பிடித்த அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைண்டர் தற்போது 2020 உலக அழகுராணியாக மகுடம் சூட்டப்படவுள்ளார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Caroline-Jurie.jpg

இது குறித்து திருமதி உலக அழகி அமைப்பு ஒரு அறிக்கையில்,

கரோலின் ஜூரியின் தனது பட்டத்தை துறப்பது குறித்த  முடிவை அவர் சுயமாக எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளது.

"திருமதி ஜூரி மற்றும் அவரது குடும்பத்தினக்கு எதிர்கால முயற்சிகளுக்கு சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என திருமதி உலக அழகுராணி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் ஜூரியை திருமதி இலங்கை போட்டியை கடும் அரசியல்மயமாக்கலில் களங்கப்படுத்தியதாகக் கூறி அவதூறாக பேசிய பின்னர் அவர் தனது கிரீடத்தை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகக் தெரிவித்தார்.

2020  ஆம் ஆண்டுக்கான  இலங்கையின் திருமணமான அழகு ராணியை தெரிவு செய்யும்  போட்டியில் வெற்றிப் பெற்று முடிசூடிய போது, புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் எனக்  கூறி கரோலின் ஜூரி அதனை பலவந்தமாக பறித்து போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளருக்கு கிரீடத்தை அணிவித்தார்.

https://www.virakesari.lk/article/104128

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.