Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கலப்பட மதுபானம் விற்பனை- ஒருவர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கலப்பட மதுபானம் விற்பனை- ஒருவர் கைது!

யாழில் கலப்பட மதுபானம் விற்பனை- ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும் எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் கலையகத்துக்கு அண்மையில் இயங்கிவருகின்ற விடுதி ஒன்றிலேயே இவ்வாறு மதுபானக் கலப்படம் நடைபெற்றுவந்துள்ளது.

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் மதுபானத்துடன் கலப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட கலவைகள் மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில், யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர்.பிரதீப் தலைமையில் சென்ற அணியினரே ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

One-arrested-for-selling-adulterated-liquor-in-Jaffna-1.jpg

One-arrested-for-selling-adulterated-liquor-in-Jaffna-2.jpg

https://athavannews.com/2021/1209236

தமிழ் சிறி, எப்படியும் கலந்து தானே அடிக்கபோறாங்க. கலந்தே விற்போம் என்று நினைத்து விட்டார்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

தமிழ் சிறி, எப்படியும் கலந்து தானே அடிக்கபோறாங்க. கலந்தே விற்போம் என்று நினைத்து விட்டார்களோ?

One-arrested-for-selling-adulterated-liquor-in-Jaffna-1.jpg

ருல்ப்பன்  யாழ்ப்பாணத்தில் தயாரித்த மதுபானத்துக்கு....
லேபிளில்.. முதலில் தமிழில்  போடாமல், 
கடைசியில் போட்டது  எனக்கு கவலையாக இருக்கு. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சியை வேறு விதத்தில் பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் நம்மவர்கள் முயற்சியை எலியை சோதிப்பது போன்று தப்பான வழிகளை கண்டு பிடிப்பதே அதிகம்

11 minutes ago, தமிழ் சிறி said:

One-arrested-for-selling-adulterated-liquor-in-Jaffna-1.jpg

ருல்ப்பன்  யாழ்ப்பாணத்தில் தயாரித்த மதுபானத்துக்கு....
லேபிளில்.. முதலில் தமிழில்  போடாமல், 
கடைசியில் போட்டது  எனக்கு கவலையாக இருக்கு. :grin:

இன்னும் இரண்டு பெக் போட அந்த கவலை போயிடும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

One-arrested-for-selling-adulterated-liquor-in-Jaffna-1.jpg

ருல்ப்பன்  யாழ்ப்பாணத்தில் தயாரித்த மதுபானத்துக்கு....
லேபிளில்.. முதலில் தமிழில்  போடாமல், 
கடைசியில் போட்டது  எனக்கு கவலையாக இருக்கு. :grin:

சிரியண்ணை  செய்தியை முதலில் வடிவாக வாசியுங்கள்  யாழ்ப்பாணத்தில்  தாயரிக்கப்படவில்லை. கலக்கப்பட்டது. சாரயம்...போத்தல்.  இவர்களுடையது இல்லை.  கலந்த சாமன்கள் தான் இவர்களது.  சுதந்திரமாகக்  குடிக்கக்கூடியதாயிருந்தது இப்ப அதையும். பறித்துப்போட்டான்கள் 😜😜😜😜

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

சிரியண்ணை  செய்தியை முதலில் வடிவாக வாசியுங்கள்  யாழ்ப்பாணத்தில்  தாயரிக்கப்படவில்லை. கலக்கப்பட்டது. சாரயம்...போத்தல்.  இவர்களுடையது இல்லை.  கலந்த சாமன்கள் தான் இவர்களது.  சுதந்திரமாகக்  குடிக்கக்கூடியதாயிருந்தது இப்ப அதையும். பறித்துப்போட்டான்கள் 😜😜😜😜

வாங்கிக் குடித்தால்த் தானே பிரச்சனை.

நீங்களே செய்து வடித்து குடிக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வாங்கிக் குடித்தால்த் தானே பிரச்சனை.

நீங்களே செய்து வடித்து குடிக்கலாமே?

ஜேர்மனியில். பிரச்சனையில்லை. வேண்டிக்குடிப்பது  நல்லது  நான்  சின்னப்பிள்ளை  உதைப்பற்றி அவ்வளவு தெரியாது. மிச்சத்தை. குமாரசாமியண்ணை வந்து  விளங்கப்படுத்துவார். 😍😍😍

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியில். பிரச்சனையில்லை. வேண்டிக்குடிப்பது  நல்லது  நான்  சின்னப்பிள்ளை  உதைப்பற்றி அவ்வளவு தெரியாது. மிச்சத்தை. குமாரசாமியண்ணை வந்து  விளங்கப்படுத்துவார். 😍😍😍

வெள்ளிக்கிழமை பிற்பகல் சிறியுடன் சேர்ந்தால் சரிவரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

ஜேர்மனியில். பிரச்சனையில்லை. வேண்டிக்குடிப்பது  நல்லது  நான்  சின்னப்பிள்ளை  உதைப்பற்றி அவ்வளவு தெரியாது. மிச்சத்தை. குமாரசாமியண்ணை வந்து  விளங்கப்படுத்துவார். 😍😍😍

ஜேர்மனியிலை நம்பி  நீந்தலாம். ஏலாக்கட்டத்திலை அம்புலன்ஸ் ஆவது வந்து தூக்கிக்கொண்டு போகும்.....😂

ஜேர்மனியிலை சிலோன் சாராயத்துக்கு தடை எண்டு நினைக்கிறன்.... எண்டாலும் எங்கடை ரமில்ஸ் முதலாளிமார் பாத்து பாராமல் விக்கினம்.😁

  • கருத்துக்கள உறவுகள்

அவருடைய இடம் 350.......400...K..M.   வரும்.  செலவுக்காசுக்கு  இங்கே  மூன்று.   மட்டின் பிராண்டி.  வேண்டிக்குடிககலாம்..

1 hour ago, ஈழப்பிரியன் said:

வெள்ளிக்கிழமை பிற்பகல் சிறியுடன் சேர்ந்தால் சரிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

அவருடைய இடம் 350.......400...K..M.   வரும்.  செலவுக்காசுக்கு  இங்கே  மூன்று.   மட்டின் பிராண்டி.  வேண்டிக்குடிககலாம்..

NRW  ஆ 🙏😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அவருடைய இடம் 350.......400...K..M.   வரும்.  செலவுக்காசுக்கு  இங்கே  மூன்று.   மட்டின் பிராண்டி.  வேண்டிக்குடிககலாம்..

பக்கத்து வீடு என்று சொன்ன மாதிரி....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

NRW  ஆ 🙏😁

ஆம் NRW. உங்களுக்கு.  கிட்டத்தான்😎😎👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வாத்தியார் said:

NRW  ஆ 🙏😁

4 minutes ago, Kandiah57 said:

ஆம் NRW. உங்களுக்கு.  கிட்டத்தான்😎😎👍

சரி......சந்திப்பு பிட்சா கடையிலை....😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வெள்ளிக்கிழமை பிற்பகல் சிறியுடன் சேர்ந்தால் சரிவரும்.

3 minutes ago, ஈழப்பிரியன் said:

பக்கத்து வீடு என்று சொன்ன மாதிரி....

ஒரே. நாடு. மாநிலம் வேறு. தமிழ்சிரி.  சுவிஸக்கு  கிட்ட.  நான்.Niederland க்கு கிட்ட😍😍😍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.