Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் உயிரை மாய்த்து கொண்ட கணவன் – மனைவி: சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி பின்னணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உயிரை மாய்த்து கொண்ட கணவன் – மனைவி: சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி பின்னணி!

குழந்தை பிறந்து 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாத குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரை மாய்த்த சோக சம்பவம் யாழ்.கஸ்த்துாரியார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.  

சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது-34), அவரது துணைவி ரஜிதா (வயது-33) ஆகிய இருவருமே உயிரை மாய்த்தனர். குடும்பத்தலைவர் நேற்று மாலை நகை வேலைக்கு பயன்படுத்தும் இரசாயனத்தை உட்கொண்டுள்ளார்.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனை அறிந்த துணைவி அதே இராசயத்தை உட்கொண்டுள்ளார்.

அதனால் அவரது உயிரும் பிரிந்தது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்து வந்துள்ளார்.

இதேவேளை குறித்த தம்பதிக்கு நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாத நிலையில்,  அண்மையில் குழந்தை பிறந்தாகவும், பிறந்த குழந்தை 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாத தந்தை நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் அதே நஞ்சை அருந்தி குழந்தையின் தாயும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

 

https://www.meenagam.com/யாழில்-உயிரை-மாய்த்து-கொ/

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை எத்தனை அழகை அள்ளித் தெளிக்கிறதோ, அத்தனைக்கு மேலாகத் தாங்கமுடியாத அட்டூழியங்களையும் செய்யத் தவறுவதில்லை. நிகழ்வு நெஞ்சைப் பதறவைக்கிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள்!!  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Paanch said:

இயற்கை எத்தனை அழகை அள்ளித் தெளிக்கிறதோ, அத்தனைக்கு மேலாகத் தாங்கமுடியாத அட்டூழியங்களையும் செய்யத் தவறுவதில்லை. நிகழ்வு நெஞ்சைப் பதறவைக்கிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள்!!  

அனுதாபப்பட முடியவில்லை. 

இது தீர்வு அல்ல. அவரது முடிவால், வேறு வழியின்றி மனைவியும் அதே முடிவை எடுத்தார். தவறு

  • கருத்துக்கள உறவுகள்

34ம் 33ம் வயதுகொண்ட தம்பதிகள், இன்னும் எவ்வளவோ காலம் இருக்கு.... கொஞ்சம் யோசித்து இருக்கலாம்........!  

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களுக்கு என்ன பிரச்சனையோ யாருக்குத்தெரியும்?
ஆனால் தற்கொலை முடிவல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில்.. ஒரு சின்ன விபத்துக்கு உட்பட்டாலே.. உடற்பரிசோதனையும்.. உள ஆற்றுப்படுத்தலும் வழங்குவது கட்டாயம்.

ஆனால் எம் நாடுகளில்.. உள்ள வைத்தியர்கள் பலர் மேற்குலக கல்வியைக் கற்றுத் தேறினாலும்.. மக்களுக்கு கற்ற கல்வியை பாவிப்பதில் திறனற்றவர்களாகவே உள்ளார்கள். பணம் சம்பாதிப்பதே அங்கு வைத்தியர்களின் இலக்கு. இன்னும் சிலருக்கு புகழடைதல் இலக்கு.

வைத்தியம் என்பது சேவை. அது பணம் புகழுக்கு அப்பால் மக்களின்.. நோயாளியின் நலனை முன்னுறுத்தி செய்யப்பட வேண்டும். ஆனால்.. ஊரில் உள்ள வைத்தியர்கள் வயதானவர்கள்.. குழந்தைகள்.. கர்ப்பிணிப்பெண்கள்.. நாட்பட்ட நோயாளிகள் என்று உயர் நோய் அச்சுறுத்தல்.. உளவியல் தாக்க வாய்ப்புள்ள நோயாளிகளையே சரியாக.. தொடர்ச்சியாக கண்காணிக்க வக்கில்லாமல்.. அறிவில்லாமல்.. இப்படியான அநியாய மரணங்கள் தொடர்கின்றன.

குறித்த குழந்தை.. பிறப்பின் பின் குழந்தை.. பெற்றோர் தொடர் கண்காணிப்புக்குள் உட்பட்டிருந்தால்.. இந்த நிலையை தவிர்த்திருக்கலாம். குறைந்தது ஒரு மாதக் கட்டாய கண்காணிப்பு அவசியம். 

சரி அதை தான் தவறவிட்டார்கள் என்றால்.. குழந்தை இறந்த பின்னாவது மன ஆற்றுப்படுத்தல் அவசியம் என்பதை ஒரு சாதாரண Risk assessment மூலம் கண்டறிந்திடலாம். அதைக் கூடச் செய்ய அடிப்படை வைத்திய அறிவற்ற கொலரை இழுத்துவிடும்.. மூடர்களால் தான்.. இந்த அநியாயங்கள் எமது சமூகத்தில் இன்னும் நிலவுகிறது.

இது முற்றிலும் தவிர்க்கப்படக் கூடிய அநியாய மரணம் ஆகும். இதில் வைத்தியத்துறையின் மற்றும்.. குடும்ப நலன் சுகாதாரப் பிரிவின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தான் முக்கிய பங்களித்துள்ளன. 

வடக்குக் கிழக்கில்.. மகப்பேறு.. மகபேற்றுக்கு முன் பின்.. வைத்திய ஆலோசனைகள்.. பரிசோதனைகள்.. நடப்பு நடைமுறைக்கு வெளியில்.. மக்களின் தேவையை முக்கியப்படுத்தி மறுசீரமைக்கப்பட வேண்டியதையே இந்த அநியாய மரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

கிஞ்சித்தும் சலனம் இல்லாமல் ஓடிப் பிடித்து முதிர் காதலராக விளையாட வேண்டிய வயதில், ஏன் இந்த முடிவு?

குழந்தைகளுக்கு அப்பாற்றப்பட்டு, அவர்களுக்கு என்று இருக்கும் வாழ்க்கை. எமது கலாசாரம் அதை மறுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

குறித்த தம்பதிக்கு நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாத நிலையில்,  அண்மையில் குழந்தை பிறந்தாகவும், பிறந்த குழந்தை 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாத தந்தை நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் அதே நஞ்சை அருந்தி குழந்தையின் தாயும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

செய்தியாக பார்க்கும்போது சாதாரணமாக கடந்து போயிடலாம்...

ஒரு தம்பதிக்கு திருமணமாகி நீண்டகாலம் குழந்தை இல்லை என்றால்

அவர்கள் அடையும் விரக்தி என்ன...

ஒரு நல்லது கெட்டதுக்கு போய் வர முடியுமா?போனாலும் முன் வரிசையில் நிற்க முடியுமா? நிற்கதான் சில பழசுகள் விடுவார்களா?

உயிரணுக்களின் குறைபாடுகளால் குழந்தை பிறப்பு தள்ளிபோகும் விஷயத்தை... 

ஏற்கனவே குழந்தை பெற்றவர்கள் 

குட்டி போடுவது என்னமோ தமது அதி உயர் தகுதியாக கருதி இந்த சமுதாயம், குழந்தை இல்லா தம்பதிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏளனம் செய்து அவமானபடுத்துவது எத்தனை எத்தனை ரகம்...

பெண்களை  மலடி என்று சொல்லும்...

ஆண்களை ஒம்பது, பொட்டை..  என்று  அசிங்கமாக தினமும் கொல்லும்..

ஏற்கனவே மனசளவில் நாம் வாழும் சமூகத்தால் படுகொலை செய்யப்பட்ட அவர்கள் ...

இழந்த சொர்க்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் ஒருவர் பின்னால் ஒருவராக இறந்து போப்னார்கள் என்று சொல்லலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து  இப்படி ஒரு செய்தி வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.
சரியான முடிவல்ல.
படித்தவர்கள் பலர் வாழ்ந்தும் நம் புமியில் இப்படியான நிகழ்வுகள்
வருவது கவலைக்கிடமானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

செய்தியாக பார்க்கும்போது சாதாரணமாக கடந்து போயிடலாம்...

ஒரு தம்பதிக்கு திருமணமாகி நீண்டகாலம் குழந்தை இல்லை என்றால்

அவர்கள் அடையும் விரக்தி என்ன...

ஒரு நல்லது கெட்டதுக்கு போய் வர முடியுமா?போனாலும் முன் வரிசையில் நிற்க முடியுமா? நிற்கதான் சில பழசுகள் விடுவார்களா?

உயிரணுக்களின் குறைபாடுகளால் குழந்தை பிறப்பு தள்ளிபோகும் விஷயத்தை... 

ஏற்கனவே குழந்தை பெற்றவர்கள் 

குட்டி போடுவது என்னமோ தமது அதி உயர் தகுதியாக கருதி இந்த சமுதாயம், குழந்தை இல்லா தம்பதிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏளனம் செய்து அவமானபடுத்துவது எத்தனை எத்தனை ரகம்...

பெண்களை  மலடி என்று சொல்லும்...

ஆண்களை ஒம்பது, பொட்டை..  என்று  அசிங்கமாக தினமும் கொல்லும்..

ஏற்கனவே மனசளவில் நாம் வாழும் சமூகத்தால் படுகொலை செய்யப்பட்ட அவர்கள் ...

இழந்த சொர்க்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் ஒருவர் பின்னால் ஒருவராக இறந்து போப்னார்கள் என்று சொல்லலாம்.

 

 

இச்சம்பவத்திற்கு சமூகத்தின் பங்கு 10% என்றால்.. வைத்தியத்துறையின் பங்கும்.. குடும்ப நலன் காப்பு சேவையின் பங்கு.. மிகுதி 90% ஆகும். நாம் எப்போதுமே ஊசி போற இடத்தை தான் கவனிப்பது. அதனால்.. தான் இந்த நிகழ்வுகள்.. மீள மீள நிகழ்கின்றன. திருத்துவார் யாருமில்லை.. ஏனெனில்.. பாடங்கள் பயிலப்படுவதில்லை.. மாறாக.. சமூகத்தை நோக்கி.. பொதுவாக உமிழ்ந்துவிட்டு கடந்து சென்று விடுவதால்... காரணிகள் அப்படியே பாதுகாக்கப்படுவது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2021 at 07:30, nedukkalapoovan said:

பாடங்கள் பயிலப்படுவதில்லை.. மாறாக.. சமூகத்தை நோக்கி.. பொதுவாக உமிழ்ந்துவிட்டு கடந்து சென்று விடுவதால்... காரணிகள் அப்படியே பாதுகாக்கப்படுவது தான்.

பாடங்கள் பயிலப்படுவதில்லை என்பது சரியானதாக இருந்தாலும் கூட சமூகத்தின் மீதான பயமே அதிகமாக உள்ளது. இதனால்தான் பாதிக்கப்படுபவர்களின் குரலும் அடக்கப்படுகிறது.. 

Postnatal depression சரி அல்லது வேறு எந்தவிதமான உடல்உள பாதிப்புகள் சரி, அதற்கான உதவிகளை நாடுபவர்களையும் சமூகம் பலவிதமான சங்கடங்களையே கொடுக்கிறது, அதுமட்டுமல்ல அப்படி உதவிகளை நாடுவதே குடும்பத்திற்கு அவமானம் என்ற போக்கே புலம்பெயர் தேசத்திலும் சரி ஊரிலும் சரி நிலவுகிறது. எங்கள் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும், அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் அவசியம்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.