Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீப்பற்றிய கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு முன் இந்தியா, கட்டார் துறைமுகங்களுக்குள் உட்பிரவேசிக்க அனுமதி மறுப்பு : அம்பலமாகியது புதுத் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றி எரியும், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்க முன்னதாக இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலுள்ள இரு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகவும் எனினும், குறித்த இரண்டு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க இக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின்,  நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் புது தகவலை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போது, இதனைத் தெரிவித்த அவர்,

இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்ட இரசாயன திரவியம் கசிந்ததால் இந்த தீ ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

4.jpg

இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்த 1,486 கொள்கலன்களில், 25 டொன் நைட்ரிக் அமிலம்  அடங்கிய பல கொள்கலன்களும் காணப்பட்டுள்ளன.

இந்த கொள்கலன்கள் முறையாக களஞ்சியப்படுத்தப்படாமையே இந்த தீ ஏற்படுதற்கான காரணம் என எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின்,  நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் சுட்டிக்காட்டினார்.

கப்பலில் ஆபத்து நிலைமை அடையாளம் காணப்பட்ட போது, முதல் கட்டமாக இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள ஹசீரா துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்காக அனுமதி கோரப்பட்டிருந்தது.

எனினும், ஹசீரா துறைமுகத்தினால் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து, கட்டாரிலுள்ள ஹாமட் துறைமுகத்துக்குள் இந்தக் கப்பல் பிரவேசிக்க முயற்சி கோரிய போதிலும், அக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து அக்கப்பல் தனது அடுத்த பிரயாண இலக்கான இலங்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது என எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின்,  நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் கூறினார்.

எனினும், கொழும்பு துறைமுகத்துக்கு பிரவேசிக்க அனுமதி கோர முன்னதாகவே கப்பலில் தீ ஏற்படுவதற்கான ஆபத்து நிலைமை தோன்றியிருந்ததாக நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா அல்லது கட்டாரில் உள்ள துறைமுகங்கள் ஒன்றில் அனுமதி வழங்கப்பட்டிருக்குமானால் இந்த பாரிய அழிவிலிருந்து தப்பிக்க முடியுமானதாக இருந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி தனது முதல் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

சிங்கப்பூரின் எக்ஸ்ப்ரஸ் கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் தனது மூன்றாவது வர்த்தக பயணித்தின் போது இவ்வாறு தீப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீப்பற்றிய கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு முன் இந்தியா, கட்டார் துறைமுகங்களுக்குள் உட்பிரவேசிக்க அனுமதி மறுப்பு : அம்பலமாகியது புதுத் தகவல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பிழம்பு said:

சிங்கப்பூரின் எக்ஸ்ப்ரஸ் கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் தனது மூன்றாவது வர்த்தக பயணித்தின் போது இவ்வாறு தீப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட.... புதிய கப்பல். தனது... மூன்று பயணத்துடனேயே... வாழ்வை முடித்துக் கொண்டது.  😮

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

அட.... புதிய கப்பல். தனது... மூன்று பயணத்துடனேயே... வாழ்வை முடித்துக் கொண்டது. 

கடல்வழி சரக்கு போக்குவரத்துக்கு முன்னைய காலங்கள் போல் இல்லாமல் கடுமையாக்கப்பட்டுள்ளது அதிகபடியான சுற்று சூழல் மாசு அடைவதில் இருந்து காப்பற்றுவதுக்கு பல கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் அதனால் கூடிய உடனடி அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு பல கொம்பனிகள் ரிஸ்க்கான உலக அளவில் பிரச்சனையான கார்கோ வகையறாக்களை கையாள ஒப்பந்தம் இடுகிறார்கள் காரணம் லாபம் அதிகம் .

கவனியுங்கள் கொழும்பு போட்  வருமுன் பல போர்ட்களை  அணுகி உள்ளது அவர்கள் கேட்பார்கள் என்ன கார்கோ என்று பதில் போக கலைத்து  விட்டுள்ளார்கள் இங்கு தானே பிச்சை எடுக்கினம் இலகுவாக அனுமதி கொடுத்து உள்ளனர் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அட.... புதிய கப்பல். தனது... மூன்று பயணத்துடனேயே... வாழ்வை முடித்துக் கொண்டது.  😮

அதன் தலை விதி இலங்கயிற்தான் எரிந்து கருகவேண்டுமென்று கலைத்து வந்திருக்கிறது. எனக்கென்னவோ அணைப்பாரின்றி எரிந்த நம் சொத்துக்கள், உயிர்கள், மண்ணை நினைவூட்டுகிறது இது. 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் எரிந்த கப்பலிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால் அமில மழை பெய்யும் ஆபத்து

 
09-2-696x419.jpg
 5 Views

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே “எக்ஸ் – பிரஸ் பெர்ல்” கப்பலில் பரவியிருந்த பாரிய தீ இலங்கை, இந்திய கடற்படை, விமானப் படையினர் ஒரு வாரமாக மேற்கொண்ட பகிரதப் போராட்டத்தின் மூலம் நேற்றைய தினம் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், கப்பலிலிருந்து வெளியேறிய பாரிளவிலான புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர இந்த ஆபத்து குறித்து நேற்று கருத்துத் தெரிவித்திருக்கின்றார். தீ பரவிய கப்பலிலிருந்து “நைட்ரோஜின் டியொக்ஸசைட்” (Nitrogen Dioxide) வாயு பெருமளவுக்கு வெளியேறியதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்திருக்கின்றார்.

அமில மழை கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரத்தை அண்மித்த பகுதிகளிலும் பெய்யக்கூடும் என அவர் கூறினார். இதனால், வீடுகளுக்கு வெளியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருட்கள் இருக்குமாயின் அவற்றை மூடி வைக்குமாறும் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்கள் மழையில் நனைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இதேவேளை, “எக்ஸ் – பிரஸ் பெர்ல்” கப்பல் முற்றாக எரிந்து அதிலிருந்த பெருந்தொகையான கொள்கலன்களும் கடலில் மூழ்கியுள்ளன. எஞ்சியுள்ள கப்பலும் கடலில் முழ்கும் அபாயமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கப்பலில் நேற்றுக் காலையும் தீ பரவியதால் கப்பல் கடலில் மூழ்கும் ஆபத்துள்ளது என்பதுடன், அதிலுள்ள எண்ணெய் கடலில் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், பேராசிரியர் டர்னி பிரதீப்குமார குறிப்பிட்டார்.

10.jpgஇதனிடையே, வத்தளையிலிருந்து மாரவில வரையான கடற்கரை பகுதிகளின் நீர் மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தீ பற்றிய “எக்ஸ் – பிரஸ் பெர்ல்” கப்பலில் இருந்து வீழ்ந்த கொள்கலன்களால் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு நீர் மாதிரிகள் சேகரிக்கப்படுவதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரையான அறிக்கைகளின் பிரகாரம், இதுவரை இரசாயன பதார்த்தங்களினால் பாதிப்புகள் ஏற்படவில்லை என நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பாலித்த கித்சிறி குறிப்பிட்டார்.

இதேவேளை, திக்கோவிட்டவில் இருந்து சிலாபம் வரையான கரையோரப் பகுதியில் கடற்படையினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். வௌ்ளவத்தை மற்றும் பாணந்துறை கரையோரப் பகுதிகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஒன்றிணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவின் ஹசீரா துறைமுகத்திலிருந்து பயணித்த “எக்ஸ் – பிரஸ் பெர்ல்” கப்பலில் கடந்த வியாழக்கிழமை தீ பரவ ஆரம்பித்தது. கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த போதே கப்பலில் தீ பரவியது. சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் தீ பரவும் போது, 25 தொன் எத்தனோல், இரசாயனப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் அடங்கிய 1486 கொள்கலன்கள் இருந்தன.

இலங்கை கடற்படையினர், விமானப்படையினர், துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதிலும், சீரற்ற வானிலை மற்றும் கப்பலில் இரசாயனப் பொருட்கள் இருந்தமையால் தீயை கட்டுப்படுத்த முடியாது போனதுடன், கப்பலும் முழுமையாக தீக்கிரையானது.

இலங்கை கடற்படையினர், விமானப்படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும், பின்னர் இந்தியாவின் ஆதரவை இலங்கை கோரியிருந்தது. இதற்கமைய இந்திய விமானப் படை விமானம் ஒன்றும், கடற்படைக் கப்பல்கள் சிலவும் தீ அணைப்புப் பணிக்காக களமிறக்கப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியிலேயே பாரிய தீ நேற்று பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.

 

https://www.ilakku.org/?p=50826

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

இங்கு தானே பிச்சை எடுக்கினம் இலகுவாக அனுமதி கொடுத்து உள்ளனர் .

தப்பு பெருமாள் ...புலிகளையே அழித்த கடற்படை இதையும் இலகுவாக அணைத்துவிடுவார்கள்  என நினைத்திருப்பார்கள்... அது தான்  அனுமதி கொடுத்திருப்பார் கோத்தா அரசு😄

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுகம் அருகே கப்பலில் பரவிய தீ கட்டுக்குள் வந்தது

27 மே 2021
இலங்கை விமானப்படை

பட மூலாதாரம்,AP

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவிய எம்.வீ.எக்ஸ்பிரிஸ் பர்ல் (MV X-PRESS PEARL) கப்பலின் தீ பெருமளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் கடந்த 20ம் தேதி இந்த கப்பலில் தீ பரவியிருந்தது.

இந்த நிலையில், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சிகளில் இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியன ஈடுபட்டிருந்தன. எனினும், இந்த கப்பலில் நேற்று முன்தினம் (25) பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு ஏற்பட்ட வெடிப்பை அடுத்து, கப்பலில் இருந்த பல கொள்கலன்கள் கடலில் வீழ்ந்திருந்தன.

அதனைத் தொடர்ந்து, தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்திருந்த நிலையில், கப்பலில் இருந்த பல கொள்கலன்கள் கடலில் வீழ்ந்திருந்தன.

இலங்கை விமானப்படை

பட மூலாதாரம்,SLAF

186 மீற்றர் நீளமும், 34 மீற்றர் அகலும் கொண்ட இந்த கப்பலின் அனைத்து பகுதிகளிலும் இந்த தீ பரவியிருந்தது.

குறித்த கப்பலில் பெருமளவு இரசாயண பதார்த்தங்கள் இருந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கப்பலில் இருந்த இரசாயன பதார்த்தத்தின் கசிவு காரணமாகவே இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன், இந்தியா கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு கடையினர் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தனர்.

கப்பலில் பரவிய தீ இந்தியாவின் உதவியுடன் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம், தமது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்கரை பகுதிகளில் கப்பலிலிருந்து கசிந்த இரசாயண பதார்த்தங்கள் கரையொதுங்கி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த கப்பலில் நைட்ரஜன் எசிட், அழகுசாதண பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இருந்துள்ளமை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

குறித்த இரசாணய பதார்த்தங்கள் உரிய வகையில் களஞ்சியப்படுத்தப்படாமையே, இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணம் என தெரிய வருகின்றது.

இந்த நிலையில், குறித்த கப்பல் இந்தியாவின் ஹசிரா மற்றும் கட்டாரின் ஹமாட் துறைமுகங்களுக்குள் செல்ல முயற்சித்த போதிலும், அந்த நாட்டுகள் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இந்தபின்னணியிலேயே, குறித்த கப்பல் இலங்கை நோக்கி பயணித்துள்ள சந்தர்ப்பத்தில், இந்த தீ பரவியுள்ளதாக தெரிய வருகின்றது.

இதேவேளை, கடலில் இரசாயன பதார்த்தங்கள் கலந்துள்ளனவா என்பது தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடல் ஆய்வு நிறுவனமான நாரா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

இதன்படி, நாரா நிறுவனம் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா போன்ற சந்தேகத்திற்கிடமாக கடல் பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளிலிருந்தே நாடு முழுவதும் கடலுணவுகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அதனால், அச்சமின்றி கடலுணவுகளை உட்கொள்ளுமாறும் கடற்றொழில் அமைச்சர், மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Facebook பதிவை கடந்து செல்ல, 2

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 2

மேலும், கப்பல் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்திலிருந்து குறித்த கடற் பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கடலில் கலந்திருக்கும் இரசாயண பதார்த்தங்கள் தொடர்பிலும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பிலும் நாரா நிறுவனம் ஆய்வுகளை தொடர்ந்தும் நடத்தி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடல் பகுதிகளில் கலந்துள்ள இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் சமுத்திர சுற்றாடல் ஆய்வு அதிகார சபை, நாரா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளன.

எவ்வாறாயினும், குறித்த கப்பல் முழுவதும் தற்போது தீ பரவியுள்ள நிலையிலேயே, தீ ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

மேலும், குறித்த கப்பலில் தீ பரவியமை குறித்து, கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-57273148

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

 

இலங்கை விமானப்படை

பட மூலாதாரம்,AP

கப்பலின் தீ பெருமளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

இலங்கை விமானப்படை
 

🚢கப்பலின் தீயை.... கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்த, ஶ்ரீலங்கா கடற் படையினருக்கு பாராட்டுக்கள். 🤪

டிஸ்கி: அந்தக் கப்பல்லை... இனி எரியுறத்துக்கு ஒண்டும் இல்லாமல், கரிக் கட்டையாய் போய்... “தீ” 🔥  தன்னுடைய பாட்டில் அணைந்தது என்பதே உண்மை. 😁

3 hours ago, ஏராளன் said:

கொழும்பு துறைமுகம் அருகே கப்பலில் பரவிய தீ கட்டுக்குள் வந்தது

 

தலையங்கத்தில் 'வ' என்ற எழுத்து மிஸ்ஸிங் என்று நினைக்கின்றேன். 

நீர்கொழும்பு கடல் வளமே நாசமாகி விட்டது. கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்ரிக் துணுக்குகள் கடல் நீரில் கரைந்து microplastic particles ஆகி பல ஆண்டுகளுக்கு மீன்வளத்தையும், கடல் தாவரங்களையும் அழிக்கும் அத்தனை சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளன. உல்லாசப் பயணிகளை கவர்ந்த கடற்கரை பயன்படுத்த முடியாதவாறு நாசமடைந்து உள்ளது. இவ்வளவு நடந்த பின்னரும் தாமும் இந்திய கடற்படையும் சேர்ந்து தீயை அணைத்து விட்டதாக மார்தட்டுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கப்பலின் தீயை.... கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்த, ஶ்ரீலங்கா கடற் படையினருக்கு பாராட்டுக்கள்.

படு தோல்வியை வெற்றியாக சித்திரித்து பாராட்டு வாங்குவதில் சிங்களம் வெற்றி கண்டுள்ளது. மனித உரிமை மீறலை மனிதாபிமானம் எனச் சித்திரித்து தப்பிக்கொள்ள நினைத்து பகீரதப் பிரயத்தனம் செய்யுது. அதை நிறுவ தலைகீழாக நிற்குது அது வேற விஷயம். ஆனால் அந்தப் போரால் அழிந்த இனத்திலிருந்து அவனுக்கு பாராட்டு எழுகிறது, கைதட்ட முடிகிறது, ஆதரவு வருகிறது  என்றால் அது அவனுக்கு வெற்றிதானே! 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

படு தோல்வியை வெற்றியாக சித்திரித்து பாராட்டு வாங்குவதில் சிங்களம் வெற்றி கண்டுள்ளது. மனித உரிமை மீறலை மனிதாபிமானம் எனச் சித்திரித்து தப்பிக்கொள்ள நினைத்து பகீரதப் பிரயத்தனம் செய்யுது. அதை நிறுவ தலைகீழாக நிற்குது அது வேற விஷயம். ஆனால் அந்தப் போரால் அழிந்த இனத்திலிருந்து அவனுக்கு பாராட்டு எழுகிறது, கைதட்ட முடிகிறது, ஆதரவு வருகிறது  என்றால் அது அவனுக்கு வெற்றிதானே! 

பொய்யும்... புரட்டும்,  என்றும்... கூட வராது சாத்தான்.
என்றோ... ஒரு நாள், சிங்களம், அம்மணமாக நிற்கும்.
அப்போ... தெரியும், 
தமிழனை அழிக்கவா... இவ்வளவு கடன் பெற்றோம் என்று அழுவான். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, putthan said:

தப்பு பெருமாள் ...புலிகளையே அழித்த கடற்படை இதையும் இலகுவாக அணைத்துவிடுவார்கள்  என நினைத்திருப்பார்கள்... அது தான்  அனுமதி கொடுத்திருப்பார் கோத்தா அரசு😄

புத்தன்.... எவனுக்கு, திமிர் முத்துதோ... அவன்,  "விக்கி, விக்கி"  சாவான்.
அதுதான்... சொறி லங்காவில், நடந்து கொண்டிருக்கின்றது.

கோத்தா....  வென்றதற்கு,  வெடி கொளுத்திய பயலுகளும், எம் இனத்தில் உண்டு.
பொன்சேகா... வெல்ல வேண்டும், முட்டுக் கொடுத்த.. பழுத்த பழங்களும் உண்டு.

ஆழ்ந்த... அர்ப்பணிப்புடன்.. இயங்கிய, விடுதலைப் புலிகளையே...
கேள்வி கேட்கும்.. நிலைக்கு, சண்டாளர்கள் வந்த பின்...

நடப்பது, நல்லதாகவே.. நடக்கட்டும் என்று.... 
பார்வையாளராக, இருப்பது... நல்லது என கருதுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நிட்சயமாக.  கண்டது ஒன்றுமில்லை, பெற்றது கடன். பறிபோனது ஏகபோகம் என்று கொண்டாடிய நம் நாடு, உரிமையை பகிர மறுத்து அவர்களிடம் இருந்து பறித்தெடுத்து இன்னொருவரிடம் பறிகொடுத்து விட்டு இப்படி அண்ணாந்து நிற்கிறோமே என்று அங்கலாய்க்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.