Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்!

Featured Replies

நன்றி பாரதியின் பாடலை இணைத்தமைக்கு

நகைச்சுவையாக ஒரு கேள்வி

இந்தப்பாடல் கண்ணம்மாவிற்காக பாடியதா ? கஞ்சாவிற்காக பாடியதா ,? பாரதியாரைத்தான் கேட்கவேண்டும்.

:unsure: கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து கஞ்சா அடித்துவிட்டு பாடிய பாடல் இது என்று சொன்னாலும் சொல்வார்கள் :(

Edited by vettri-vel

  • Replies 126
  • Views 36.2k
  • Created
  • Last Reply

கண்ணம்மா என்பது கற்பனைப்பாத்திரம்.... அது எப்படி கஞ்சா பயன்படுத்தும்???

மகாகவி பாரதி ஒரு புரட்சியாளர் அவர் போதைக்கு தம் வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே அடிமையானார் ...

பாரதி கஞ்சா பாவித்திருக்கலாம். ஆனால் கஞ்சாவிற்கு அடிமையாக இருந்தார் என்பது தவறு. பாவிப்பது என்பது வேறு. அடிமையாக இருத்தல் என்பது வேறு.

There is a huge difference between the words consumption and addiction

Edited by vettri-vel

கண்ணம்மா என்பது கற்பனைப்பாத்திரம்.... அது எப்படி கஞ்சா பயன்படுத்தும்???

ம்ம்ம்! இது உங்களுக்கு புரிகிறது. ஆனால் இங்கே சில பேர் "எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்" என்ற பாடலில் வரும் கற்பனை பாத்திரம் பாரதிக்கு கஞ்சா வாங்கி கொடுத்ததாக கதை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்

ஒருவரின் கருத்துக்களில் இருந்து எமக்கு வியப்பு+ட்டுவனவற்றை நாம் இரசிப்பதற்கும், அவற்றுள்

சிலவற்றை எமது வாழ்வினை வழிநடத்தும் கூற்றுக்களாகப் பார்ப்பதற்கும் அக்கூற்றுக்களைக்

கூறுபவர் சமூக அந்தஸ்த்தும் சமூகத்தால் பரிந்துரை செய்யப்படுகின்ற பழக்கவழக்கங்களையும்

கொண்டிருத்தல் அவசியம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

மேலும் சில சமூக tabooகள் ஏகமனதாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில்

அமைந்துமில்லை.

பாரதியார் கஞ்சா அடித்திருந்தாலும் கூட அந்தச் செய்தி, பாரதியயாரின் எழுத்துக்கள் தொடர்பான

எனது எண்ணத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை

எனக்குப் பிடித்த ஒரு கவிஞர் பற்றிய ஒரு உதிரித் தகவல் மட்டுமே அது.

பாரதியார் கஞ்சா அடித்திருந்தாலும் கூட அந்தச் செய்தி, பாரதியாரின் எழுத்துக்கள் தொடர்பான

எனது எண்ணத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை

எனக்குப் பிடித்த ஒரு கவிஞர் பற்றிய ஒரு உதிரித் தகவல் மட்டுமே அது.

அறிவுடையோர் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்க முடியும். வாழ்த்துக்கள்

மாப்பி பாரதியார் என்றா மீசை வைத்து..............தலைப்பாகை கட்டி இருப்பார் அவரை தானே சொல்லுறீங்க.......................

:P

அட அட என்னவொரு பிரச்சினை பாரதியார் கஞ்சா அடித்தா தான் என்ன அடிகாட்டி தான் என்ன நமக்கு........................ஒலிம்பிக்கில தான் போதைபொருள் பாவித்தா மடலை எடுத்து போடுவீனம் எனி பாரதியார் போதை பொருள் பாவித்தார் என்று அவருக்கு என்ன செய்ய பொஅறீங்க............அவரும் ஒரு சாதாரண மனிதர் அவருக்கும் ஆசை இருக்கு தானே.............அதிலும் அவர் கவி வேற எழுதுறவர் கற்பனைக்காக அடித்திருபார்................

ஆனாலும் நான் பாரதியார் படம் பார்தேன் அதில் ஒரு காட்சியில்.................மனைவி,பிள்ள

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி கஞ்சா அடித்தது உண்மை என்றுதான் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதி திரைப்படத்திலும் "இந்தப் புதிய பழக்கமும் என்னுடைய தலையை சுற்றச் செய்கிறது" என்று பாரதி சொல்வதாக காட்சி அமைத்து, பாரதி கஞ்சா அடித்தது பற்றி காட்டி இருப்பார்கள்.

பாரதியை அன்றைய சமூகம் மிகவும் துன்புறுத்தியது.

பாரதி யானை தாக்கி இறக்கவில்லை. தன்னுடைய படைப்புக்கள் புத்தக வடிவில் வரவேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்து தன்னை மாய்த்துக் கொண்டார். பட்டினியால் இறந்தார் என்று சொல்பவர்களும் உண்டு.

சொல்பவர்கள் சொல்லட்டும்.. நீங்கள் சொல்லுற வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு வாறீங்களா...??!பாரதியார் கஞ்சா அடிச்சார் என்ற வரலாற்றுக் குறிப்பை..!

பாரதியார் கவிதைகள ஆபாசமாக மொழிபெயர்ப்பவர்களும் உள்ளனர். அட இப்படி எல்லாம் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறாங்களே என்று வியந்ததுண்டு. இவை எல்லாம் பல்கலைக்கழகங்களில பாடசாலைகளில் கன்ரீனில் சாப்பிட்டு சாப்பிட்டு பொழுதுபோக நடக்கிற விடயம்.

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இவையெல்லாம் புதிசா.. சோ.. வானொலிலையே இதுதான்..! அங்கு வரலாற்று சான்றுகளும் கிடையாது எதுவும் கிடையாது..! எல்லாம் ஆளாள் செய்யும் ஆராய்ச்சி. அவனவன் தனக்குள்ள வசதிக்கு ஏற்ப மொழிபெயர்கிறான்.

இப்ப பெரியார் ஜேர்மன் போய் கொக்கைன் அடிச்சார்.. ரஷ்சியா போய் மாபியாவோட சேர்ந்து அபின் அடிச்சார் என்றால்.. ஏற்கத்தானே வேணும். வரலாறு அப்படித்தானே சொல்லுது..! :(:unsure::(

Edited by nedukkalapoovan

இதில் எதற்கு தேவையில்லாமல் பெரியார்?????????

பாரதியார் கஞ்சா பாவிக்கவில்லை என்கிறீர்களா....... அவர் கஞ்சா பாவித்தது வரலாற்றுப்பதிவு அவர் மனைவி பிள்ளைகளே கூட மறுக்கவில்லை....

பாரதியார் கஞ்சா பாவித்தது அவரது சொந்த விசயம் ..... அதற்காக வரை யாரும் தூற்றவில்லை தூற்றவும் உரிமை இல்லை .....

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எதற்கு தேவையில்லாமல் பெரியார்?????????

பாரதியார் கஞ்சா பாவிக்கவில்லை என்கிறீர்களா....... அவர் கஞ்சா பாவித்தது வரலாற்றுப்பதிவு அவர் மனைவி பிள்ளைகளே கூட மறுக்கவில்லை....

பாரதியார் கஞ்சா பாவித்தது அவரது சொந்த விசயம் ..... அதற்காக வரை யாரும் தூற்றவில்லை தூற்றவும் உரிமை இல்லை .....

ஆனால் தயவு செய்து பெரியாரை வம்புக்கு இழுக்க வேண்டாம்

நாங்க ஒரு நூலில் வாசிச்சம் பெரியார் ரஷ்சியா போய் மாபியா கூட சேர்ந்து அபின் அடிச்சார் என்று.. அதுதான் பகிர்ந்துக்கிட்டம்..!

இப்ப நீங்க பகிரில்லையா...பாரதியாரிண்ட எத்தனையோ கவிதைகளில் ரசிக்காமல் பல விடயங்கள் இருக்க.. பாரதியார் கஞ்சா அடிச்சார்.. நாங்களும் அடிச்சா என்ன என்றாப் போல.. கலந்துரையாடேக்க... வேறும் சில உண்மைகள.. சா.. சுய ஆராய்ச்சிகளை.. சொல்லுறது.. வரவேற்கப்படத்தானே வேணும்..!

அதுசரி.. பாரதியார் குடும்பம் எங்க சொல்லி இருக்கு பாரதியார் கஞ்சா அடிச்சிட்டு இருந்தார் என்று..!

சரி இப்ப பாரதியார் கஞ்சா அடிச்சார் என்றதை ஆராய்ஞ்சி.. புலம்பெயர் சமூகத்துக்கு என்ன சொல்ல விரும்புறீங்கன்னு.. சொன்னீங்கன்னா.. உபயோகமா இருக்கும். றோட்டில கஞ்சா இழுக்கிற கூட்டத்துக்கு உதவியா இருக்கும்..! :(:unsure::(

பெரியார் உண்மையில் அடித்திருந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் ....

அதற்கு ஏன் தயங்க வேண்டும் .... அய்யா.....

ராணுவக்கட்டுப்பாடு உளவுத்துறை ஆதிக்கம் நிறைந்த ரஷ்யாவில் ஒரு வெளி நாட்டு விருந்தினர் ....

உளவுத்துறைக்கு தெரியாமல் மாபியாவோடு போக முடியுமா??

எப்பொருள் யார்யார் வாய்.............................................

யாராவது என் கண்வன் கஞ்சா பாவிப்பார் என் தந்தை கஞ்சா பாவிப்பார் என்று சொல்லித்திரிவார்களா???

பாரதி கஞ்சா பாவித்தது பற்றி ஒரு சிறு தகவல் தான் .......

ஏன் ஒருவர் பற்றி எதிர்மறை தகவல்கள் தெரிந்திருக்க கூடாதா?? புலம் பெயர் தமிழர்க்கு

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் உண்மையில் அடித்திருந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் ....

அதற்கு ஏன் தயங்க வேண்டும் .... அய்யா.....

ராணுவக்கட்டுப்பாடு உளவுத்துறை ஆதிக்கம் நிறைந்த ரஷ்யாவில் ஒரு வெளி நாட்டு விருந்தினர் ....

உளவுத்துறைக்கு தெரியாமல் மாபியாவோடு போக முடியுமா??

எப்பொருள் யார்யார் வாய்.............................................

யாராவது என் கண்வன் கஞ்சா பாவிப்பார் என் தந்தை கஞ்சா பாவிப்பார் என்று சொல்லித்திரிவார்களா???

பாரதி கஞ்சா பாவித்தது பற்றி ஒரு சிறு தகவல் தான் .......

ஏன் ஒருவர் பற்றி எதிர்மறை தகவல்கள் தெரிந்திருக்க கூடாதா?? புலம் பெயர் தமிழர்க்கு

அரசியல்வாதிகளுக்கு மாபியாவோட எல்லாம் நல்ல தொடர்புகள் இருக்கு.. சரி பெரியார் அபின் அடிச்சதை தெரிஞ்சு என்ன செய்யப் போறம்..

அது போலத்தான் பாரதியார் பற்றிய எதிர்மறைகளை அறிஞ்சு என்னத்தை ஆரோக்கியமாச் செய்யப் போறீங்கள்.

அன்ரன் அண்ணா இறந்த போது கூட அவர் குடிபோதையால் தான் உடலமின்றி இறந்தார் என்று கதைச்ச கூட்டம் தானே.. பாரதியார்.. என்ன.. கண்ணதாசன் என்ன..!

தாங்களும் தங்கட வாரிசகளும் செய்யுறதை நியாயப்படுத்த எதிர்மறைளைத் தேட வேண்டியது கட்டாயம் தான்.. புலம்பெயர்ந்த புளுகர்களுக்கு..! :unsure::(

Edited by nedukkalapoovan

அப்பனே கவிஞன் கஞ்சா அடித்தால் கவிதை வரும்.

கண்டவனும் அடித்தால் புகை மட்டும் தான் வரும்.

இக்கருத்தோடு எனக்கும் உடன்பாடே.

கஞ்சா வேண்டுமாயின் அகப்பையாக இருக்கலாம் ஆனால் பானையில் இருந்தால் மட்டுமே

அகப்பையில் வரும்.

இன்னுமொரு கருத்து என்னவெனில், ஒரு கருத்தை நாம் சந்திக்கும் போது, எமது அறிவு,

பக்குவம் அனுபவம் முதலியவற்றின் பிரகாரம் நாம் தான் அதனை ஒவ்வொரு வகையில்

உள்வாங்குகின்றோம். கருத்தைச் சொன்னவர் அனைவரிற்கும் பொதுவாகத் தனது உணர்வைத்

தான் பகிர்ந்தார். ஆனால் நுகர்பவர் தான் தனது பக்குவத்திற்கேற்ப அதனைச் சுவைக்கிறார்.

எனவே ஒரு கருத்தின் வெற்றி அல்லது தாக்கம் என்பது கருத்தாளருடையது மட்டுமல்ல அக்கருத்தை

நுகர்பவரிற்கும் கணிசமான பங்கு உள்ளது.

எனவே பாரதி கஞ்சாவில் சொல்லியிருப்பார் என பாரதியை புறக்கணிப்பதை விடுத்து

எங்களது அறிவிற்கு ஏற்ப பாரதியாரின் கருத்துக்கள் எங்களில் எத்தகைய துளிர்ப்புக்களை,

தூண்டல்களை நிலைப்பாடுகளை உருவாக்குகின்றன என உணரும் போது பாரதியின்

பிரத்தியேகம் எங்களிற்குத் தேவையற்ற ஒன்றாகி விடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாடு சுதந்திரம் வேண்டி நெருப்பாய் கனிந்து நின்றபோது ஆக்கணலை அணையாமல் தன் கவியால் காத்துநின்ற கவிஞன் அவர்.

இப்போது அந்நிலையில்தான் ஈழத்தவராகிய நாம் இருக்கிறோம். சுதந்திரத்தின் பெறுமதியும் எமக்குத் தெரிகிறது. அதற்காக அளப்பரிய விலையும் செலுத்திக்கொண்டிருக்கிறோம். இன்னொரு தேசத்துக் கவிஞனை நாம் மதிக்கும் போதுதான் எமது தேசத்துக் கவிஞர்களும் மதிக்கப்படுவார்கள்.

பாரதியாரும்சரி புதுவை இரத்தினதுரையும்சரி தனிமனிதன் அல்லது ஒரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானவர் என்ற நிலைக்கும் அப்பால் தேசியஅளவில் தேசத்துச் சொத்தாக விரிந்து பரந்து நிப்பவர்கள்.

நதிமூலம் பார்த்தால் தாகம் தீராது.

ரிஷிமூலம் பார்த்தால் ஆசி பலிக்காது. என்பார்கள்.

பாரதியார் காலமாகி அரைநூற்றாண்டும் கடந்த நிலையில் இது அவசியமா?

எதிர் பார்த்ததைப் போல் பெரியார் இந்தத் தலைப்பிற்குள்ளும் வந்துவிட்டார்.

தலைப் போடு சம்பந்தமற்ற விடயங்கள் எழுதப்பட்டு தலைப்பின் நோக்கம் வேறு திசையில் திசை திருப்பப்படுவதை மட்டுறுதினர்கள் மட்டுறுத்த வேண்டும்.

. நதிமூலம் பார்த்தால் தாகம் தீராது. ரிஷிமூலம் பார்த்தால் ஆசி பலிக்காது. என்பார்கள்.
நதி மூலம் பார்த்தால் தண்ணீர் குடிக்க மனம் வராதேயன்றி .... மீறி குடித்தால் தாகமெல்லாம் தீரும் ..... அது போல தான் ரிஷிகளும்...... மூலம் பார்த்தால் ஆசி பெற போக மாட்டோம்

பாரதி கஞ்சா பாவித்தார் என்று பிரச்சனையை இங்கு கிளப்பியது நான் அல்ல.

கேட்கப்பட்ட கேள்விக்கு உண்மையான பதிலைத் தந்தேன்

பெரியாரின் பெயரை இதற்குள் இழுப்பதன் அவசியமும் விளங்கவில்லை.

பெரியார் மீது பற்றுள்ளவர்கள் இயல்பாகவே பாரதி மீது பற்று வைத்திருப்பார்கள்.

ஆயிரம் கடவுள்களை வணங்குவதையும், சாதிய அமைப்பையும், பார்ப்பனர்களையும், முடநம்பிக்கைகளையும் சாடியவன் எங்கள் பாரதி.

நாம் பாரதியிடம் இருந்து அதைத்தான் பெற்றுக் கொண்டோம்.

பெரியார் அபின் அடித்ததாக நான் அறிந்ததில்லை. பெரியாரின் எதிரிகள் அவரைப் பற்றி ஆயிரம் விடயங்கள் எழுதிவிட்டார்கள். அதில் இந்த அபின் விடயம் இல்லை. (நெடுக்காலபோவான் வழமை போன்று வேண்டுமென்றே தவறான தகவலை தருகிறார்)

அப்படி அவர் அபின் அடித்திருந்தாலும், அவரைப் பற்றிய என்னுடைய மதிப்பு சிறிதும் குறையப் போவதில்லை.

பாரதி கஞ்சா பாவித்த தகவலை நான் 5 வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறேன். அதற்காக அவர் மீது வைத்திருந்த மதிப்பையும் நான் குறைக்கவில்லை.

பாரதி தற்கொலை செய்து கொண்டாரா? -டாக்டர். இ.ஜே.சுந்தர்.

இந்த நூற்றாண்டின் தமிழின் ஒரே மகா கவியான பாரதி39 வயது முடிவடைவதற்குள் மரணம் அடைந்துவிட்டார்!

இவ்வளவு இளம் வயதில் இவருக்கு ஏன் மரணம் நிகழந்தது..?

பாரதி, மதம் பிடித்த யானையால் தாக்குண்டு அடிபட்டு இறந்தார் என்று பலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். யானை, துதிக்கையால் விசிறி எறிந்து, பின்னர் அவர் நலிவுற்று மாண்டார் என்றும் குறிப்பிடுகின்றனர். பாரதி மரணத்தோடு யானையைத் தொடர்பு படுத்திப் பார்ப்பது ஆர்வம் தரும் கர்பனையேயன்றி, இதில் துளியும் உண்மை இல்லை!

யானை அவரை தாக்கியது ஜூன் 1919. அவர் மரணமடைந்தது 11-செப்டம்பர் 1921.

யானையால் தாக்குண்ட நிகழ்ச்சிக்கு பின் பாரதி ஏறக்குறைய ஏழுமாதங்கள் தம் துணையாசிரியர் பதவியை 'சுதேசமித்திரன்' அலுவலகத்தில் சிறப்பாக ஆற்றியிருக்கிறார். பல சொற்பொழிவுகள் நிகழ்த்தி இருக்கிறார்.

அவர் மரணம் ஏறத்தாழ ஒரு மெதுவான தற்கொலையாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது. அவரின் கடைசி கால வாழ்வை உன்னிப்பாக கவனித்ததில் இந்த எண்ணம் அழையா விருந்தாளியாக வருகிறது.

கடைசி மூன்று ஆண்டுகள் அவர் கடும் மன உளைச்சலுக்கும், ஏமாற்ரங்களுக்கும் உள்ளாகி இருக்கிறார்.

1918 நவம்பர் 20ம் தேதி பாரதி பிரஞ்சு புதுவையை விட்டு, பிரிட்டீஷ் இந்திய எல்லைக்குள் காலடி எடுத்து வைத்து, கடலூருக்கு வரும் தருவாயில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் 'குற்றவாளி'யாக அடைக்கப்படுகிறார். அப்போது, சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார், அன்னிபெசண்ட் அம்மையார், மணி அய்யர், சர்.சி.பி. ராமசாமி அய்யர் ஆகியோர் மிக முயன்றே அவரை சிறை மீட்க முடிந்தது.

இச்சூழலின் சிறையிலிருந்த பாரதி சென்னை மாகாண முதல்வருக்கு ஓரு கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏற்பட்டது. அதுவரை ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் தம் பேச்சாலும், எழுத்தாலும் கடுமையாக எதிர்த்த பாரதி, அக்கடிதத்தில், "...மேதகு தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கூறுகிரேன். நான் எல்லா அரசியல் ஈடுபாடுகளையும் துறந்து விட்டேன். நான் எப்போதும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன். ஆகையால், மேன்மைமிகு தாங்கள், என்னை உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட வேண்டுகிறேன்." என்று தம் மனசாட்சிக்கு எதிராக எழுதிக்கொடுக்க வேண்டியதாயிற்று.

தம்மைக் காப்பாற்ற முன்வந்தோரின் வேண்டுகோளின்படி இப்படி எழுதித்தர வேண்டிய தர்மசங்கட நிலை, பாரதியின் உள்ளத்தில் உளைச்சலை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.

விடுதலையான பாரதி, தம் படைப்புக்களை நூலாக வெளியிடும் பணியே இனி செய்ய வேண்டிய முக்கிய எதிர்க்காலத்திட்டம் என்று தீர்மானித்தார். இவ்வெளியீட்டு முயற்சிக்கு முதலில் உதவி கேட்க, தம் இளமைக்கால நண்பரான எட்டையபுரம் மன்னரைச் சந்திக்க 1919மே மாதம் தன் பிறந்த ஊரான எட்டையபுரம் சென்றார். தம் நோக்கை விளக்கும் பொருட்டு, சீட்டுக்கவிகளும் பணிந்தெழுதினார். ஆனால் அவரைப் பார்க்கவோ, உதவவோ மன்னர் முன் வராது புறக்கணித்தார்.

அடுத்து பாரதி, தன் மீது அன்பு காட்டிய நாட்டுக்கோட்டை செட்டிமார் சிலரின் ஆதரவை நாடினார். 15.11.1919ல் வை.க.சண்முகம் செட்டியாருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார்.

ஆனால் விருந்தோம்பல் செய்து அவர் சொற்பொழிவுகளையும், பாடல்களையும் புகழ்ந்துரைத்த அவரும், மற்றும் பலரும், ஏனோ வெளியீட்டு முயற்சிக்குப் பொருள் உதவி செய்ய முன்வரவில்லை.

தொடர்ந்து விரட்டிய வறுமையும், பொய்யாகப்போன எதிர்பார்ப்புகளும் கொடுத்த மனச்சோர்விலிருந்து தப்ப, அவர் பயன்படுத்திய கஞ்சாவும், அபினும் பாரதியின் உடலை நாளுக்கு நாள் பாதித்தன. அவர் எலும்பிச்சையளவு அபினை உருட்டிச் சாப்பிடுவதைக் கண்ட வ.உ.சியே ஒருமுறை வருந்தியிருக்கிறார்.

1921,செப்டம்பர் தொடக்கத்தில் போதைப்பொருட்களின் விளைவால் வயிற்றுக் கடுப்பு நோய் அவரை வாட்டி வதைத்தது. நோய் எதிர்ப்பு சக்தி, நலிவுற்ற அவர் உடலில் குறைந்தது.

உரிய நேரத்தில் சாப்பிட மறுத்தார். மருந்தை உட்கொள்ள மறுதலித்தார். குடும்பத்தார், நண்பர்கள் வற்புறுத்தியும் செவிமடுக்காமல் பிடிவாதமாக இருந்தார்.

தொடர்ந்து ஏமாற்றங்களையும் இயலாமையையும் தாங்கி இந்தப் பூதவுடலில் வாழ்வதைவிட, மரணமில்லாப் புகழ் உடம்பை பெறுவதென அவர் முடிவு செய்திருக்கக் கூடும். தாம் மறைந்தாலன்றி தம் வெளியீடுகள் வெளிச்சத்திற்கு வராது என்ற உண்மையை உணர்ந்திருக்கக் கூடும். தம் நோயுற்ற உடலை அதன் போக்கில் சாக விட்டார்.

செப்டம்பர் 11ம் தேதி வ.வே.சு அய்யர் கைது செய்யப்பட்டார். பாரதியின் பிடிவாத போக்கை கேள்வியுற்று, காவல்துறையின் அனுமதியுடன், கைதான சூழலிலும் பாரதியைச் சந்தித்து, உணவு உண்ணுமாறும், ஒழுங்காக மருந்து உட்கொள்ளுமாறும் அறிவுரைகளை கூறிச் சென்றார். ஆனால் பயனில்லை.

பாரதி மகள் சகுந்தலா அன்றிறவு கொடுத்த கஞ்சியைக்கூட குடிக்க பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

பாரதியின் நெருங்கிய நண்பரான நெல்லையப்பர், திருவல்லைக்கேணி மாடவீதியில் இருந்த ஜானகிராம் என்ற ஹோமியோபதி டாக்டரை அழைத்து வந்து காட்டினார். பாரதியை பரிசோதித்த டாக்டர் மருந்துகொடுக்க விரும்பினார். "எனக்கு எந்த மருந்தும் வேண்டாம்" என்று கண்டிப்புடன் கூறி, டாக்டரை திருப்பி அனுப்பினார் பாரதி.

11-ம் தேதி பின்னிரவின் இரண்டு மணியளவில்(12-ம் தேதி அதிகாலை) பாரதியின் உடலைவிட்டு உயிர் பிரிந்தது. அவர் அமரரானார்.

நன்றி:- மலேசியன் இதயம்; இதயம் பேசுகிறது 19.2.99.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி தமிழ் சமூகத்தின் பெரியார். அவரைக் கஞ்சா வழக்குக்க தள்ளி விவாதிக்க முடியும் என்றால்.. வரலாற்றுச் சான்றுகள் இருக்கென்று சொல்லிச் சொல்லியே அரைவாசி விடயங்கள் அபண்டமாக இங்கு விதைக்கப்படுகின்றன. அதை முதலில மட்டுறுத்துங்க..!

பாரதி கஞ்சா அடிச்சதாகச் சொன்னது போல.. பெரியார் அபின் அடிச்சதும் நாம் கேட்விப்படிருப்பதை சொன்னம். அதுபோல கண்ணதாசன் தண்ணியடிச்சதையும் சொல்லுவம். புதுவை கள்ளடிச்சதையும் சொல்லுவம்..! இவை யாழ் களத்தில என்ன சமூக அறிவை பெருக்க உதவுது.. அதை விளக்கினா கொஞ்சம் விளக்கமா இருக்கும்..! கஞ்சா அடிக்கிறது இப்ப அவசியமா நமக்கு..! :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேசன்.

மாலனின் வலைப்பூவிலிருந்து

மகாகவி பாரதிக்கு யானையால் முடிவு ஏற்பட்டதாக ஒரு கருத்து பலகாலமாக நிலவி வருகிறது.ஆனால் அது உண்மை அல்ல. யானைச் சம்பவம் நடந்த்து 1921 ஜூனில். அதன் பின் செப்டம்பர் வரை அவர் உயிரோடு இருந்தார். ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சுதேசமித்ரனில் வேலைக்கும் போனார். வெளியூர் பயணங்கள் செய்தார். (இதைக் குறித்து துளசியின் பதிவில் இட்ட பின்னூட்டத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்)

உண்மையில் மகாகவியின் முடிவு எப்படி ஏற்பட்டது?

"1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு (டயரியா) ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை. விரைவில் அது வயிற்றுக் கடுப்பாக (டிசன்ட்ரி) மாறியது. முதல் தேதியிலிருந்து லீவில் இருந்த பாரதி எப்போது வேலைக்க்குத் திரும்புவார் என்றறிய ஒரு சக ஊழியர் வந்து விசாரித்தார்.சரியாக செப்டம்பர் மாதம் 12ம் தேதி, திங்களன்று வேலைக்குத் திரும்பிவிடுவ்தாக பாரதி சொல்லியனுப்பினார். அன்றுதான் அவரது பூத உடல் எரிகாடு சென்றது.

பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காகக் செப்டம்பர் 11ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ்.வே.சு ஐயர், நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரை பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். " பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?" என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.

பாரதிக்கு சிகிச்சை அளித்தவர் டி.ஜானகிராம் என்ற ஹோமியோபதி வைத்தியர்.அவர் ஆந்திரக் கேசரி என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசத்தின் சகோதரர். அவர் பாரதியை அணுகி, "உங்களுக்கு என்ன செய்கிறது?" என்று கேட்டதும் சீறினார்? "யார் உங்களை இங்கே அழைத்தது? எனக்கு உடம்பு சரியில்லை என்று யார் சொன்னது? எனக்கொன்றும் இல்லை" என்று கோபப்பட்டார்.

பாரதியின் கடைசி சில மணி நேரங்கள் பற்றி அவரது மகள் சகுந்தலா சொல்கிறார்:

" அப்பாவிற்கு மருந்து நீ கொடுத்தால் ஒரு வேளை கோபிக்காமல் சாப்பிடுவார் என்று என் தாயார் மருந்து எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார். மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்து என்று நினைத்து பக்கத்தில் கிளாசில் வைத்திருந்த பார்லித் தண்ணீரை எடுத்து அவரிடம் கொடுத்தேன். மருந்து வேண்டாம் என்றார். உடனே அவர் மனதில் என்ன தோன்றியதோ, என் கையில் உள்ள கிளாசை வாங்கி ஒரு வாய் குடித்தார்." நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா கஞ்சி" என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிவிட்டார்.எனக்கு அவரை மறுபடி இமசை பண்ண மனமில்லை. அப்படியே வெளியில் கூடத்தில் வந்து படுத்திருந்தேன். தூங்கி விட்டேன் போலும்"

பாரதியின் உடல்நிலையை முன்னிட்டு அவரது நண்பர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி, பரலி.சு.நெல்லையப்பர், லட்சுமண ஐயர் மூவரும் இரவை பாரதி வீட்டில் கழிப்பதென்று முடிவு செய்தார்கள். நீலகண்ட பிரம்மச்சாரி சொல்கிறார்:

"அன்றிரவு பாரதி, தமது நண்பர்களிடம், " அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீசுக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லாகான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னராக இருந்தார்.1914-15 மகாயுத்தத்தில் ஜெர்மானியருக்கு சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றி பெற்ற பிரிட்டீஷ் அவர் மீது கருவிக் கொண்டிருந்தார்கள். முன்னிரவில் பெரும்பாலும் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால சொன்ன இந்த வார்த்தைகளே அவரது கடைசி வார்த்தைகளாகும்" என்கிறார் நீலகண்ட பிரம்மச்சாரி.

பாரதி அமரரான நேரம், சரியாக இரவு ஒரு 1:30 மணி.

பாரதியின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்ததும் நண்பர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள். வக்கீல் துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், என்.திருமலாசாரியார், குவளைக் கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 100 பவுண்டிற்கும் (45 கிலோ) குறைவாக இருந்த பாரதியின் உடலை குவளைக் கிருஷணமாச்சாரி, பரலி.சு.நெல்லையப்பர், ஆர்யா, ஹரிஹரசர்மா ஆகியோர் காலை எட்டு மணிக்கு திருவல்லிக்கேணியில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பாரதிக்கு மகன் இல்லாததால் இறுதிச் சடங்குகளை யார் செய்வது என்ற பிரசினை எழுந்தது. நீலகண்ட பிரம்மசாரி அவருக்குக் கொள்ளியிடலாம் என்று சொன்னார்கள். உடனே அவர், " என்ன நானா? இந்தச் சடங்குகளில் எல்லாம் துளிக் கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன்.அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேன் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள்?" என்று மறுத்து விட்டார்.

முடிவில் பாரதியின் தூரத்து உறவின்ரான ஹரிஹர சர்மாதான் அவருக்குக் கொள்ளி வைத்தார்.

(நன்றி: ரா.அ.பத்மநாபனின் சித்ரபாரதி)

*

பாரதியின் மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது.பத்து நாட்களாக வயிற்றுக் கடுப்பு இருந்தும் ஏன் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை? அவருக்கு புதுவையில் இருந்த போது கஞ்சா பழக்கம் ஏற்பட்டது என்று தெரிகிறது. அது திடீரென்று நிறுத்தப்பட்டு withdrawal sympatoms ஏற்பட்டிருக்குமோ? அல்லது அந்தப் பழக்கம் அவரது உடல் நலத்தைப் பாதித்திருக்குமோ? " அவர்து தேகம் மெலிந்து போய் பழைய பாரதியின் சாயல் போல் இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் புதுச்சேரியிலிருந்து திரும்பி வந்தார்" என்கிறது மித்ரன் தலையங்கம்.

(செப்டம்பர் 12ம் தேதி சுதேசமித்ரன் செய்தியும் வெளியிட்டு, ஓர் துணைத் தலையங்கமும் எழுதியது. 'அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி மதியம் இரண்டு மணியோடு வேலையை நிறுத்தப்படுவதால் ஏகபட்ட சமாசாரங்கள் இன்று மித்ரனில் பிரசுரமாகமாட்டா' என்ற ஓர் குறிப்பும் தலையங்கத்தில் காணப்படுகிறது.)

அவர் ஏன் மருந்து உட்கொள்ள மறுத்தார்? ஏதேனும் ஓர் காரணத்தால் மனச் சோர்வு, விரக்தி ஏற்பட்டிருந்திருக்குமோ? 'நிலச் சுமையென' வாழ்கிறோமோ என்று எண்ணியிருந்திருப்பாரோ? குடும்பத்தினர் மீது கோபமோ? பணியிடத்தில் வருத்தம் இருந்த்தாகத் தெரியவில்லை. அவர்கள் எப்போது இவர் வேலைக்குத் திரும்புவார் என கேட்டனுப்புவதும், இவர் கட்டுரை ஒன்று எழுத வேண்டியிருக்கிறது என்று நண்பர்களிடம் சொல்லுவதும் இதைக் காட்டுகிறது. பாரதியின் கடைசிகால எழுத்துக்கள் ஆட்சியைப் பற்றிய விமர்சனமாக இல்லாமல், சமூக விமர்சனமாகவும், ஆன்மீக விசாரமுமாக இருக்கிறது. கடலூர் சிறையிலிருந்து வெளிவரும் போது எழுதிக் கொடுத்த் உறுதிமொழி அவர் கையைக் கட்டிப் போட்டிருக்கலாம். அத்னால் மனமொடிந்து போயிருந்திருக்கலாம். ஓர் எழுத்தாளனுக்கு எழுதுவதைத் தடை செய்வதைப் போல ஓர் தண்டனை இல்லை.

1921ம் ஆண்டு அவர் கருங்கல்பாளையத்தில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுதான் கடைசிச் சொற்பொழிவு. அதன் தலைப்பு: மனிதனுக்கு மரணமில்லை.

யாமறிந்த மனிதரிலே பாரதியைப் போல யாங்கணுமே கண்டதில்லை. இது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

http://blog.360.yahoo.com/blog-ZNQAcr48eqe...WFtKeU4Rh?p=142

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து விரட்டிய வறுமையும், பொய்யாகப்போன எதிர்பார்ப்புகளும் கொடுத்த மனச்சோர்விலிருந்து தப்ப, அவர் பயன்படுத்திய கஞ்சாவும், அபினும் பாரதியின் உடலை நாளுக்கு நாள் பாதித்தன. அவர் எலும்பிச்சையளவு அபினை உருட்டிச் சாப்பிடுவதைக் கண்ட வ.உ.சியே ஒருமுறை வருந்தியிருக்கிறார்.

பாரதியார் வறுமையில் வாடியவர்.. அவருக்கு எப்படி கஞ்சாவும் அபினும்.. இலவசமாக எலுமிச்சையளவில உருட்டி.. உண்ண..கிடைச்சது.

அப்ப தமிழ்நாடு கஞ்சா அபின் காடா இருந்தது என்றதை இப்படி எழுதிற எழுத்தாளர்கள் ஒத்துக் கொள்ளினமா..??! அப்படி ஒரு வரலாற்று உண்மையை சொன்னா.. அப்ப பெரிய பெரிய தலைகள் எல்லாம் கஞ்சா அபினும் தமிழ்நாட்டுக்கு வந்து சாப்பிட்டிருப்பினம் போல..! :):D

Edited by nedukkalapoovan

அனைத்து மேற்குலக நாடுகளிலும் போதைப் பழக்கம் இருக்கிறது. அந்த நாடுகள் ஒன்றும் அபின் கஞ்சாக் காடுகளாக இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி கஞ்சா அடிச்சாதாலயா சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் எண்டு பாடினார்?

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து மேற்குலக நாடுகளிலும் போதைப் பழக்கம் இருக்கிறது. அந்த நாடுகள் ஒன்றும் அபின் கஞ்சாக் காடுகளாக இல்லையே

மேற்கில பணம் காடா இருக்கு.. கஞ்சாவும் அபினும் இருக்கு..! சாப்பிட உணவுக்கே வழியில்லாம இருந்த பாரதிக்கு.. கஞ்சாவும் அபினும்.. கிடைக்கனும் என்றா.. தமிழ்நாட்டில கஞ்சாவும் அபினும் இலவசமாக் கிடைச்சிருக்கனும்..! அப்ப அது கஞ்சாக் காடாத்தானே இருந்திருக்கனும்..! ஆப்கானிஸ்தான் போல..!

தலைப்பைப் பாருங்கள்.. " மகாகவி சுப்பரமணிய பாரதியார் கஞ்சாவுக்கு அடிமை?" இப்படின்னூ யாழ் களத்தில போட அனுமதி இருக்கு..!

கள்ளு விக்கிறது என்பதற்காக யாழ்ப்பாணத்து மக்கள் கள்ளுக்கு அடிமை? இப்படின்னு ஒரு தலைப்பைப் போடுவமா..??! அப்படிப் போட்டாக் கூட தப்பில்ல. காரணம்.. பனக் கூடல் யாழ்ப்பாணத்தில கள்ளு.. அதிகம்..!

மலிவு..!

அப்படிப் பார்க்கேக்க..வறுமையில் வாடிய பாரதிக்கு.. கஞ்சா அபின் இலவசமா கிடைச்சதென்றால்.. தமிழ்நாடு கஞ்சாக் காடா இருந்திருக்கிறது..!

தமிழ்நாடே ஒரு "குடு"நாடு அப்படின்னும்...???! தலைப்பில போடுங்க..!

இந்தத் தலைப்பு பாரதியை மட்டம் தட்டும் தனமாக உள்ள ஒரு தலைப்பு என்பதாலும்... கஞ்சாவுக்கு அடிமையாக்கி பாரதி கவிபாடல்ல.. உளறியுள்ளான் என்று சொல்வது போலவும்.. பாரதிக்கு எதிரான விசமத்தனமான அநாவசிய கலந்துரையாடல்கள் யாழில் அனுமதிக்கப்படுகிறது..!

இதிலேயே..பாரதியார் காலத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த "பெரியார் அபின் அடிமை?" என்று ஒரு ஆராய்ச்சி தலைப்பை இங்க போட்டா உடனே வலைஞன் சார் ஏட்டிக்குப் போட்டி.. பெரியார் ஒரு சமூகத்தலைவர்.. அவரை அவமதிக்கிறது என்று கிளம்பிடுவார்..ஆனா.. பாரதி கஞ்சா அடிச்சானோ இல்லையோ என்பது யாழுக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் முக்கியமில்ல..! அவன் என்ன சொன்னான் சமூகத்துக்கு என்பதுதான் முக்கியம்.

**************

ஏதாச்சும் சொல்லுறதுன்னா உருப்படியாச் செய்யுங்க..! குதர்க்கத்தனமான தலைப்புக்களைத் திறந்திட்டு.. ஐயோ.. சண்டை. சச்சரவு. என்று புறணிபாடாதேங்க..! :)

************** - நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • தொடங்கியவர்

எக்ஸ்கியூஸ் மீ!

இங்க என்ன நடக்கிது?

பாரதியாரில தொடங்கின பிரச்சனை இப்ப பெரியார் பக்கம் திரும்பி இருக்கிற மாதிரி இருக்கு? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.