Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஹலோ ஆர் யூ ரமிழ்?"

Featured Replies

" ஹலோ, ஆர் யூ ரமிழ்?"

பின்னால இருந்து வந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தன். அதே தமிழ் ஆண்டி பொட்டு வைச்சு, நம்ம ஊரில் தலை பின்னுவது போல பின்னிக்கட்டி, கையில 2 உடுப்போட நிண்டா. " நே" எண்டு அவா இங்கிலீசில கேட்ட கேள்விக்கு டச்சில "இல்லை" எண்டு பொருத்தமில்லாம பதிலை சொல்லிட்டு சட்டெண்டு முன்னுக்கு திரும்பிட்டன். பொய் சொல்லேக்கையும் பொருத்தமா சொல்லணும் எண்டுவாங்க. அது பேசி வைச்ச பொய் அதைதான் பொருத்தமா சொல்லணும். இது திடீரெண்டு நினைச்சு வைக்காம சொன்ன பொய். சரி பொய் பொய் தானே இதில பிறகென்ன நியாயப்படுத்த வேண்டி இருக்கு எண்டு நெச்சன். திரும்பியே பாக்காமல் எனது நேரம் வர காசை குடுத்து உடுப்பையும் எடுத்துக்கொண்டு நண்பிகளோட அந்த ஆண்டி பக்கமே பாக்காம ஓடி வந்தன். என்னவோ மனசுக்க நெருடலா இருந்திச்சு. யேசுவை இராயப்பர் மூன்று முறை மறுதலித்தது ஞாபகம் வந்திச்சு. நண்பிகள் வழியில வரேக்க ஒரே நக்கல் அடிச்சாங்க. அவர்கள் தங்கள் வழியில் போக பஸ்ஸில ஏறி கறுத்து போகாம இருக்க சூரியனுக்கு எதிர் பக்கமா உள்ள சீட்டில யன்னல் ஓரமா போய் இருந்தன்.

நான் என்ன வேணுமெண்டா பொய் சொன்னன்? அந்த ஆண்டியோட அவவோட ஹஸ்பண்டும் வந்திருந்தார். அவரை எங்கயோ பிறந்த நாளில அப்பாவோட கதைக்க கண்ட ஞாபகம். இப்போ கொலிஜில பாடம் இல்லாத நேரம் சூரினாம் பிரெண்டுகளோட கடைக்கு வந்திருக்கன். இவர் கண்டு அப்பாக்கு சொன்னால் சரி, கிழிஞ்சுது. இல்லை எண்டால் " அங்க அவரோட மகள் வெளிநாட்டு பெட்டையளோட ஊர் சுத்துது" எண்டு இவர் டெலிபோனில சொல்ல. அங்கால மற்றாளுக்கு அது " பெடியங்களோட" எண்டு கேட்க..பிறகு கதை கறுப்பு கறுப்பா வாந்தி எடுத்த விசயம் காகம் காகமா வந்தி எடுத்தது எண்டு திரிபடைஞ்சது போல ஆயிடும். அந்த பயத்தில தானே கடைக்குள்ள போகேக்கையே அவையை கண்டுட்டு நெத்தியில இருந்த குட்டி பொட்டையும் எடுத்து புறங்கையில் ஒட்டிப்போட்டு அவை கண்ணில படாமல் நிண்டன். இருந்தும் கண்டுட்டாவே. சரி இல்லை எண்டு சொன்னாலும் முகம் காட்டி இருக்குமோ?? சீ..சூரினாம் ப்ரெண்டுகள்..அவையும் தமிழ் ஆக்கள் போல தானே கலர். அதனால என்னையும் அவை எண்டு நெச்சிருப்பா என்ன..?

இப்படி பல யோசனைகளோட வீடு போய் சேர்ந்தன். போனதும் முதல் வேலை அம்மாக்கு விசயத்தை சொன்னது தான். ஆனால் அம்மா

" நீ போனது பிழை தானே? சொல்லாம எப்பிடி போவா நீ?" எண்டு கேட்டா.

" அம்மா எனக்கு எத்தினை வயசு சொல்லுங்கோ. என்னை விட வயசு குறைஞ்சதுகள் எல்லாம் எவ்வளவு செய்யுதுகள். பெடியங்களோட அது இதெண்டு சுத்துதுகள். சும்மா உதில பிரெண்டுகளோட போனது பிழையே?" எண்டு நான் வாதாடினன்.

" நீ போனது பிழை இல்லை. சொல்லாம போனது தான் பிழையடி!"

"அப்பாட்ட இப்ப சொல்ல. அப்பா உடனே ஓம் எண்டுவரோ. அதோட நான் பிளான் பண்ணி போகலம்மா. பிரீ பாடம் அதுவும் 3 பாடம். எவ்ளோ நேரம் கொலிஜ்க்கயே இருக்கிறது. அதுதான் போனான். சரி இனி இப்பிடி போகல. இண்டைக்குத்தான் கடைசி!"

எண்டு வாதாட்டத்தை பெரிசாக்காமல் முடிச்சுட்டு சரி அம்மாட்ட சொல்லிட்டன் தானே எண்ட ஆறுதலோட இருந்தன்.

கொஞ்ச நாளால கொலிஜ் போகாமல் ட்றெயினிங் போகணும் எண்டிச்சினம். கொஞ்சம் தூரம் எண்டாலும் பைக்கில போறதால சந்தோசமா இருந்திச்சு. காலேல அந்த குளிர் காத்து முகத்தில் பட ஏதோ நம்மூரு ஞாபகம் வரும். அப்பிடியே நாட்கள் பிசியா போக தொடங்கிச்சு. கொலிஜ் பக்கமே போறேல்ல. எல்லாம் பார்மசியோட தான். பார்மசி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு. கூட வேலை செய்யிறவையும் நல்ல மாதிரி எண்டதால சந்தோசமா போய்க்கொண்டு இருந்திச்சு. இங்க பார்மசில டச்சில தான் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுறது சிலவேளை வெளிநாட்டுக்காரர் வந்து பாதி டச்சை கடிச்சு துப்பினா இங்கிலிசில கதைக்குறது. என்னோட ஆசை நம்ம தமிழில் பேசி ஹெல்ப் பண்ணணும் எண்டு. குறைஞ்சது ஒராளுக்காவது தமிழில ஹெல்ப் பண்ணணும். இதை என்னோட வேலை செய்யிறவைக்கும் சொல்லி வைச்சிருந்தேன். அவையும் உன்னோட ஆசை நிறைவேறும் கவலைப்படாத எண்டு சொல்லுவினம்.

ஒரு நாள் ஏதோ வேலையா கணணியோட மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தன். இந்த கணணி இப்பிடித்தான் எப்பவும். சரியே இல்லை. எதையும் விரைவா செய்யாது. ஆனா சனம் எல்லாத்துக்கும் அறக்க பறக்க எண்டு நிக்குங்கள். அதனால எனக்கு டென்சனும் ஆயிடும். ஆக்களின் அவசரத்துக்கு நான் வேலை செய்ய போய் மருந்தை மாத்தி குடுத்தா சரி..ஜெயில் தான்! அண்டைக்கும் அப்பிடித்தான்..டென்சனா இருக்க என்னோட வேலை செய்யிறவா வந்து சிரிச்சுக்கொண்டு நிண்டா பக்கத்தில. எனக்கு எரிச்சலா வந்திச்சு. நான் கஷ்டப்படுறன் இவாக்கென்ன இளிப்பு எண்டு.

ஆனா அவா சிரிச்சபடியே நிண்டு கொண்டு " உங்கட ஆசை நிறைவேற போகுது" எண்டு வேற சொன்னா. நான் " இருங்கோ வாறன்" எண்டு அந்த வேலையை முடிச்சிட்டு வர. " உங்கட நாட்டு ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு ஆஸ்துமா. அதுக்கு பாவிக்கிற ஸ்பிறேயை எப்பிடி பாவிக்குற எண்டு டச்சில சொல்ல விளங்கல. நீங்களே வந்து உங்கட மொழியில விளங்கப்படுத்துங்கோ" எண்டா. நமக்கு சொல்லணுமா. சந்தோசத்தில அவர் தனியா இருந்த ரூமுக்குள்ள துள்ளாத குறையா போன நான் அப்பிடியே நிண்டுட்டன். அங்க கையில ஸ்பிறேயோட நிண்டவர் அதே ஆண்டி!!!

" யேசுவே..........இப்பிடி பழி வாங்கிட்டீரே!!" எண்டு நினைச்சுக்கொண்டு நிக்க.

" உம்மட ஆசை நிறைவேற போகுது" எண்டு எனக்கு சொல்லிட்டு அந்த ஆண்டியை பார்த்து " இவா உங்கட நாடு. தங்கட மொழியில விளக்கம் கொடுக்க வேணுமெண்டு ரொம்ப நாள் ஆசை இவாக்கு" எண்டு சொல்ல எனக்கு சளார் எண்டு அடிச்சது போல இருந்திச்சு.

ஆக்கள் குறைவெண்டதால நான் எப்பிடி விளங்கப்படுத்த போறன், எங்கட மொழி எப்பிடி இருக்கும் எண்டு கேட்க முதலாளி உட்பட எல்லாரும் அமைதியா நிண்டிச்சினம். நானும் சரியெண்டு அதிர்ச்சியை மறைச்சுக்கொண்டு

" வணக்கம் ஆண்டி" எண்டு மெதுவா சிரிச்சன்.

ஆண்டியும் " வணக்கம் " எண்டா சிரிக்காமல்..

நான் வேறு கதைக்காமல் எப்படி பாவிப்பதென்று தமிழில விளங்கப்படுத்தினன்.

எப்போதும் போல விளங்கப்படுத்திய பிறகு " ஏதும் கேள்வி/ சந்தேகம் இருக்கா?" எண்டு தயக்கமா கேட்டன். ஆண்டி உடனே " அண்டைக்கு ஏன் பொய் சொன்னீர்? " எண்டு கேட்டா. ஆஸ்துமாவுக்கு பாவிக்கும் மருந்துக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை தான். ஆனாலும் ஆண்டியோட ஆவல் எனக்கு விளங்கிச்சு. ஆனால் என்னோட நிலமை அவாக்கு புரியுமா என்ன?

" இல்லை நான் வேணுமெண்டு சொல்லவில்லை. உங்கட அங்கிள் (அவாவின் ஹஸ்பண்டை தான் அப்படி சொன்னேன்) அப்பாவிடம் சொல்லி விடுவாரோ எண்டு தான் சொன்னேன்" எண்டு பாதி உண்மையை சொனனன்.

சொல்லி விட்டு எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி அதுக்குரிய பெட்டிக்குள் வைத்து, மீதி மருந்துகளை பார்மசி பைக்குள் போட்டு எடுத்து " இந்தாங்கோ ஆண்டி" எண்டு நீட்டினன். நான் என்ன செய்றன் எண்டு அப்பிடியே பார்த்துக்கொண்டு நிண்ட ஆண்டி நீட்டிய பையை வாங்கி விட்டு " சரி நான் யாருக்கும் சொல்லவில்லை அவரும் சொல்ல மாட்டார். நானும் உம்மட வயசை கடந்து தான் வந்தனான். நீர் பயப்பிடாதையும். இனி இதுதான் எண்ட பார்மசி. அடிக்கடி சந்திப்பன். உம்மட ஆசையும் அடிக்கடி நிறைவேறும். விளங்கப்படுத்தினதுக்கு நன்றி. அதுசரி என்னை எதுக்கு ஆண்டி எண்டுறீர்..அப்பிடி கிழவியாவா இருக்கன்? அக்கா எண்டு சொல்லும் என்ன.. சரி வாறன்" எண்டு எனக்கும் மற்றவையை பாத்து " எனக்கு விளங்கிட்டுது. பாய்" எண்டு சொல்லிட்டு போனா.

நான் என்ன செய்றது, என்ன நடந்தது எண்டு தெரியாம அவா போறதையே பார்த்துக்கொண்டு நிண்டன். கண்ணில கொஞ்சமா தண்ணி வேற. அது குற்ற உணர்வாலயும் என்னோட ஆசை நிறைவேறும் போது அதை சந்தோசமா செய்ய முடியலையே என்ற கவலையாலும் வந்த கண்ணீர். பின்னால கை தட்டுற சத்தம் கேட்டு திரும்பினன். விசயம் தெரியாமல் எல்லாரும் சிரிச்சுக்கொண்டு கை தட்டிச்சினம். நானும் இவ்ளோ நாளும் மனசுக்க உறுத்தின அந்த சின்ன விசயம் இண்டைக்கு இல்லாம போயிடுச்சு எண்ட சந்தோசத்தில திரும்பவும் அந்த கணணியோட மல்லு கட்ட தொடங்கினன். :lol::D:)

Edited by பிரியசகி

சகி, சொந்தக்கதை நன்னா இருக்கு...

உங்களுக்கு இப்படியும் ஒரு ஆசை இருந்திருச்சா?

உங்கட பார்மசி அட்ரச சொன்னா ஒவ்வொரு நாளுமே தமிழ் ஆட்கள் அங்க வாற மாதிரி ஒழுங்கு செய்து தரலாம். கடைசியில தமிழரிண்ட தொல்லைய தாங்க ஏலாம நீங்களே பார்மசிய விட்டு ஓட்டம் பிடிப்பீங்கள். :P

தங்கச்சி சகி,

உங்கடை அனுபவப் பதிவு நல்லா இருக்கு.

எனக்கும் ஒரு சந்தேகம் இருக்கு. எங்கடை ஆக்கள் யாராவது பஸ்ஸிலையொ றெயினிலையோ கண்டதும் எடுத்த எடுப்பிலையே ஆர் யு ரமில் எண்டு கேக்கினமே. எப்படிக் கண்டு பிடிக்கினம். ????????????????????????????????

ஆ... அது ரொம்ம சுலபம்.. நாங்கள் திருதிருவென்று முழிக்கிற முழுசளப் பார்த்து கண்டுபிடிக்கலாம்...

ஆனாலும், நான் பல தடவைகள் வேற்று நாட்டு ஆட்கள தமிழ என்று நினைச்சு கதைக்க வெளிக்கிட்டு, கடைசியில சொறி சொல்லுற நிலம வந்தது...

ஆரம்பத்தில் ""ஆர் யூ எ டமிழ்?" எண்டு கேக்க, அவங்கள் "வட்? கமெல்?" என்று என்ன திருப்பிக் கேட்ட பிறகு இப்ப கேக்கிற ஸ்டைல மாத்திப்போட்டன். இப்ப கேட்பது "ஆர் யூ புரம் சிறீ லங்கா?" எண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் ""ஆர் யூ எ டமிழ்?" எண்டு கேக்க, அவங்கள் "வட்? கமெல்?" என்று என்ன திருப்பிக் கேட்ட பிறகு இப்ப கேக்கிற ஸ்டைல மாத்திப்போட்டன். இப்ப கேட்பது "ஆர் யூ புரம் சிறீ லங்கா?" எண்டு...

ஏன் தமிழர்கள் சிறிலங்காவில் மட்டுமா வாழ்கின்றனர்?

"ஆர் யூ fபுரம் சிறிலங்கா?" என்ற கேள்விக்குச் சிங்களவனும் " ஓவு" என்று சொல்லுவானே..

சரி, இனி எப்படி கேப்பது என்று சொல்லித் தாங்கோ...

நான் நினைக்கிறன்.. இனி இப்பிடி செய்து பார்க்கலாம். யாரும் டமிழ்ஸ் என்று எனக்கு டவுட் ஆக இருந்தால் ஏதாவது சினிமாப் பாடலை வாயில் முணுமுணுத்துக் கொண்டு முகத்தில் அவர்களிற்கு வரும் ரியாக்சனை அவதானிக்க வேண்டும்..

ஆனா என்ன பாட்டு பாடுவது.. ?

சகி அப்ப இதான் நடக்குதா :-)) நல்லா எழுதியிருக்கிறீங்கள்...பார்ம

" நான் என்ன செய்றது, என்ன நடந்தது எண்டு தெரியாம அவா போறதையே பார்த்துக்கொண்டு நிண்டன். கண்ணில கொஞ்சமா தண்ணி வேற. அது குற்ற உணர்வாலயும் என்னோட ஆசை நிறைவேறும் போது அதை சந்தோசமா செய்ய முடியலையே என்ற கவலையாலும் வந்த கண்ணீர். பின்னால கை தட்டுற சத்தம் கேட்டு திரும்பினன். விசயம் தெரியாமல் எல்லாரும் சிரிச்சுக்கொண்டு கை தட்டிச்சினம். நானும் இவ்ளோ நாளும் மனசுக்க உறுத்தின அந்த சின்ன விசயம் இண்டைக்கு இல்லாம போயிடுச்சு எண்ட சந்தோசத்தில திரும்பவும் அந்த கணணியோட மல்லு கட்ட தொடங்கினன். :):lol::D

கதை உண்மை எண்டால் நீங்கள் பாவம் சகி.... :)

அதூ சரி உங்களுக்கு பெண் யாரையாவது அவா எண்று கூறும் பழக்கம் இருக்கா என்ன...??? சிலகாலத்துக்கு முன்னம் வரைக்கும் எனக்கு இருந்தது, நண்பர்கள் நக்கல் தாங்காமல் விட்டு விடேன்...!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கண்டு அப்பாக்கு சொன்னால் சரி, கிழிஞ்சுது. இல்லை எண்டால் " அங்க அவரோட மகள் வெளிநாட்டு பெட்டையளோட ஊர் சுத்துது" எண்டு இவர் டெலிபோனில சொல்ல. அங்கால மற்றாளுக்கு அது " பெடியங்களோட" எண்டு கேட்க..பிறகு கதை கறுப்பு கறுப்பா வாந்தி எடுத்த விசயம் காகம் காகமா வந்தி எடுத்தது எண்டு திரிபடைஞ்சது போல ஆயிடும்.

உண்மையில் நன்றாக இருக்கின்றது சகி

அதுவும் இந்த உவமை மிகவும் பிடித்திருக்கின்றது. ஆமலும் கதைகளுக்கு இடையில் செருகப்பட்டுள்ள, உங்களின் சிந்தனையோட்டம் யதார்த்தத்தோடு அமைவதாக இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்து நாட்டிலையும் எங்கடசனம் ஆங்கில மோகத்தில அழையுதுகளோ?.

தொடரூந்தில் என்னை ஒரு வட இந்தியர் கண்டு கிந்தியில் எதோ ஒன்று கேட்டார். நான் ஆங்கிலத்தில் எனக்கு கிந்தி தெரியாது என்றேன். இந்தியராக இருந்து கொண்டு கிந்தி தெரியாதோ என்று ஆங்கிலத்தில் கேக்க, நான் சொன்னேன் நான் இந்தியர் அல்ல. எனக்கு தமிழ் தான் தெரியும் என்றேன். அதற்கு அவர் கிந்தி பெரிய மொழி கட்டாயம் தெரிய வேண்டும் என்றார். உடனே நான் கிந்தி இந்தியாவில் மட்டுமே பேசப்படுகிறது. தமிழ் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியாவில் பேசப்படுகிறது. நீங்கள் கட்டாயம் தமிழ் படிக்க வேணுமென்றேன். அதற்கு பிறகு நான் செல்ல வேண்டிய இடம் வர தொடரூந்தில் இருந்து இறங்கி சென்று விட்டேன். கிந்திக்காரர்கள் கிந்திக்காரருடன் இந்தியர்களுடன் கிந்தியில் கதைக்கவே விரும்புகிறார்கள். சீனர்கள் சீனருடன் சீனா மொழியில் தான் கதைக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் எங்குசென்றாலும் தமிழர்களுடன் ஆங்கிலத்தில் கதைக்கவே விரும்புகிறார்கள். அடிமைப்புத்தி இன்னும் தமிழர்களுக்கு போகவில்லை.

Edited by கந்தப்பு

நம்மவர்கள் தமிழ் தெரிந்தாலும் தமிழில் பேசுவதை தரக்குறைவாக எண்ணுகின்றனர்.

எனக்குத் தெரிந்த ஒருவர் தமிழர்களுடன் பேசும்போது அரைகுறை தமிழையும் வேற்று மொழியையும் கலந்து பேசுவார். வாயில் சரியான தமிழ்ச் சொற்கள் வராது தடுமாறுவது போலவும், வேற்று மொழிச் சொற்களுக்கு இணையான சொற்களைத் தமிழில் தேடமுடியாமல் தவிப்பது போலவும் இருக்கும்.

ஆனால் வேற்று நாட்டவர் இருக்கும்போது, தமிழ் நண்பர்களுடன் சுத்தத் தமிழில் உரையாடுவார்.

சகி, உங்கள் கதையை மிகைப்படுத்தப்படாமல் அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

நல்லா இருக்கு கதை என் நண்பர் ஒருவரிடம் ஒரு அன்ரி கும்பம் வைக்கும் பாத்திரத்தை இப்படி கேட்டாவாம் where is the kumba[கும்பா]

where is the kumba[கும்பா]

ஹிஹி! :)

அங்க கையில ஸ்பிறேயோட நிண்டவர் அதே ஆண்டி!!!" யேசுவே..........இப்பிடி பழி வாங்கிட்டீரே!!" எண்டு நினைச்சுக்கொண்டு நிக்க." உம்மட ஆசை நிறைவேற போகுது" எண்டு எனக்கு சொல்லிட்டு அந்த ஆண்டியை பார்த்து " இவா உங்கட நாடு. தங்கட மொழியில விளக்கம் கொடுக்க வேணுமெண்டு ரொம்ப நாள் ஆசை இவாக்கு" எண்டு சொல்ல எனக்கு சளார் எண்டு அடிச்சது போல இருந்திச்சு.ஆக்கள் குறைவெண்டதால நான் எப்பிடி விளங்கப்படுத்த போறன், எங்கட மொழி எப்பிடி இருக்கும் எண்டு கேட்க முதலாளி உட்பட எல்லாரும் அமைதியா நிண்டிச்சினம். நானும் சரியெண்டு அதிர்ச்சியை மறைச்சுக்கொண்டு

ஆஹா சகி இப்படி மாட்டுப்பட்டு போனாவே....................... :P ஹிஹி வாசிக்க சிரிப்பாவும் இருந்தது. அந்தமாதிரி எழுதியிருக்குறீங்கள்................ !

இனும சகியிடம் ஆரும் வந்து 'ஹலோ ஆர் யூ ரமிழ்? எண்டு கேட்டால் " நே" சொல்லுவீங்களா ? ;)

கதை உண்மை எண்டால் நீங்கள் பாவம் சகி.... :) அதூ சரி உங்களுக்கு பெண் யாரையாவது அவா எண்று கூறும் பழக்கம் இருக்கா என்ன...??? சிலகாலத்துக்கு முன்னம் வரைக்கும் எனக்கு இருந்தது, நண்பர்கள் நக்கல் தாங்காமல் விட்டு விடேன்...!

அவா எண்டு நானும் சொல்லுறனான் சகியைப் போல்! ஏன் சகோதரம் அதில் ஏதும் தவறு இருக்கா ? ஏன் உங்கட நண்பர்கள் நக்கல் அடிச்சவர்கள் ? :D

Edited by அனிதா

சகி அக்கா கதை சூப்பர்...................அண்டியிட்டை மாட்டு பட்டி போனீங்களோ.........இப்படி தான் நானும் எப்ப யூனி கட் பண்ணி போட்டு கோவிலுக்கு போகிறேனோ பிரன்சோடா அன்றைக்கு என்று பார்த்து கழுத்தறுக்க அண்டிமார் வந்திடுவீனம்................உவை கேட்கிற கேள்விக்கு விடை சொல்ல போனா சீ என்று போயிடும்...............

எனி உங்களை மாதிரி நே சொல்லிடுவேன் அப்ப அவைக்கு விளங்காது தானே............. :P

அப்ப வரட்டா........ B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகி சூப்பரா இருக்கு. :)

சகி மாட்டிக்கிட்டீங்களா? பாவம் சகி.

சகி நல்ல ஆண்டிதானே அவங்க. இல்லையேல் உங்கப்பாகிட்ட மாட்டிவிட்டிருப்பா. அதுசரி அவங்க இப்ப உங்க பார்மசில கஸ்ரமர் ஆகிட்டாங்களா?

என்ன காரணமென்றாலும் நோ சொன்னதால்தான் கதை சொல்லுற மாதிரி வந்தது..

ஓம் சொல்லியிருந்தால் என்ன மாதிரி வந்திருக்குமோ..

பிரியசகி.. நல்லவிளங்கறமாதிரி சொன்னீங்க..நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் தவறுகள் செய்வார்கள்.ஆனால் மறந்துவிடுவார்கள்.அதே களவை யாரும் கையும் மெய்யுமாக பிடித்துவிட்டார்கள் என்றால் எப்பவுமே மறக்க இயலாது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு கதை.

எனக்கும் கதை எழுத ஆசையாத்தான் இருக்கு.

  • தொடங்கியவர்

எல்லோருக்கும் நன்றி..நன்றி..நன்றி!

நான் நினைத்தேன்..இல்லை பயந்தேன்..சிலவேளை தமிழ் இல்லை என்று சொன்னதுக்காக.

எதிர்மாறாக விமர்சனங்கள் வருமோ என்று..ஆனாலும் பிழை என்னில என்றதால அதை ஏற்றுக்கொள்ளும் மனம் எனக்கு இருக்கு..சரி பார்க்கலாம் என்றே எழுதினேன். B)

நல்லா இருக்கு கதை என் நண்பர் ஒருவரிடம் ஒரு அன்ரி கும்பம் வைக்கும் பாத்திரத்தை இப்படி கேட்டாவாம் where is the kumba

ம்..ஊரிலும் இருக்கிறார்கள் இப்படி.

ஒருவர் எப்பவும்.. அந்த குறோவை (crow) ஒருக்கால் துரத்துங்கோ எண்டுவா..

பிறகு.கடையில போய் டூ, திரீ வெத்திலை தாங்கோ எண்டுவா :lol: எல்லாம் நேரம்.

அதுசரி அவங்க இப்ப உங்க பார்மசில கஸ்ரமர் ஆகிட்டாங்களா?

ஓம்..அருகில் உள்ள பார்மசியில் தான் கூட எல்லாரும் பதிந்து இருப்பினம். அங்க தான் எல்லா மருந்தும் எடுப்பினம்.அப்படி இந்த ஆண்டியும் நான் முந்தி டிறெயிங் போன ..இப்போ வேலை செய்யும் பார்மசியில் பதிஞ்சிருக்கா. இனி அடிக்கடி காணலாம் ஆளை :)

அவா எண்டு நானும் சொல்லுறனான் சகியைப் போல்! ஏன் சகோதரம் அதில் ஏதும் தவறு இருக்கா ? ஏன் உங்கட நண்பர்கள் நக்கல் அடிச்சவர்கள் ?

அதுதானே ஏன்? அவா என்றால் வேறு அர்த்தம் இருக்கா?

அவா = ஆசை என்றும் படித்தேன். வேறென்ன இருக்கு நக்கல் அடிக்க?

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! கதை சும்மா நச்சுன்னு இருந்திச்சு. :):lol:

அவா எண்டு நானும் சொல்லுறனான் சகியைப் போல்! ஏன் சகோதரம் அதில் ஏதும் தவறு இருக்கா ? ஏன் உங்கட நண்பர்கள் நக்கல் அடிச்சவர்கள் ? :D

அதுதானே ஏன்? அவா என்றால் வேறு அர்த்தம் இருக்கா?

அவா = ஆசை என்றும் படித்தேன். வேறென்ன இருக்கு நக்கல் அடிக்க?

அவா எண்டால் "ஆசை" எண்று சகியே சொல்லியாச்சா...! :P

யாரவது பொம்பிளை பிள்ளையளை பாத்து நான்... அவா எண்டு சொன்னால் ( அதாவது ஆசை)) நக்கல் அடிக்காமல் என்ன அடிப்பாங்கள் எண்டு நினைக்கிறீங்கள்... :angry: :angry: அதுவும் ஒராளை சொன்னால் பாறவாய் இல்லை.... பலபேரை அவர் என்பத்துக்கு பதிலா அவா எண்டு சொல்லுறனான் எண்டு வச்சு கொள்ளுங்கோ... எப்பிடி என் நிலமை இருக்கும் கற்பனை செய்து பாருங்கோ...! :):lol::D

  • தொடங்கியவர்

அவா எண்டால் "ஆசை" எண்று சகியே சொல்லியாச்சா...! :P

யாரவது பொம்பிளை பிள்ளையளை பாத்து நான்... அவா எண்டு சொன்னால் ( அதாவது ஆசை))

:D:D அட இதை நான் யோசிக்கலையே :lol:

:D:D அட இதை நான் யோசிக்கலையே :lol:

யாராவது ஈழத்தமிழரை பாத்து நீங்கள் மரியாதையாக எண்று "அவ, இவ " என்று சொல்வது பிழை இல்லை... ! ஆனால் பிற நாட்டு தமிழர்களை பார்த்து (குறிப்பாக தமிழ் நாட்டு காறரை) சொல்லு விடாதீங்கோ...! அவர்கள் பெண்களை ஏவும்/ விமர்சிக்கும் அவள், இவள் என்பதைவிட மிக கீழ்த்தரமான வார்த்தையாகத்தான் ( அவ, இவ) என்பவற்றை உபயோகிக்கிறார்கள் எண்று இந்தியாவில் இருந்த காலத்தில் உணர்ந்து கொண்டேன்...!

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.