Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடும் வரை ஆட்டம்.... ஆட்டம் முடிந்தால்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்த பாவம் தீருமாடா  .... கௌதம புத்தா?

large.1230711383_C1.jpg.afc1accb30211c88b17a18b7bac338ff.jpglarge.1409028603_C2.jpg.ef24fc05232447123f9080061648e58a.jpg

செய்த பாவம் தீருமாடா  .... கௌதம புத்தா

நவாலி தேவாலய படுகொலைகள்: இந்த அம்மணியின் கணக்கில்....

large.1715130176_C3.jpg.61c719fb523972016891c6835723dd0b.jpg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

செய்த பாவம் தீருமாடா  .... கௌதம புத்தா

நவாலி தேவாலய படுகொலைகள்: இந்த அம்மணியின் கணக்கில்....

செம்மணி படுகொலை

கிருசாந்தி என்ற பள்ளி மாணவி பல ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை.

இதையும் சேருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

செய்த பாவம் தீருமா

இப்படி சொல்லி எங்களையே ஏமாற்றுகிறோம்.. ஏனெனில் அவர் பாவங்கள் செய்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, தனது வாழ்நாளில் எந்தவித கஷ்டங்களையும் (உதரானமாக:-உணவிற்கு வழியில்லாமலோ, இருக்க இடமில்லாமலோ, உறவுகள் இல்லாமலோ, பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையோ, மருத்துவ பராமரிப்பு இன்றியோ) அவரும் அனுபவிக்கவில்லை, அவரது பிள்ளைகளும் அனுபவிக்கபோவதில்லை.. தனது வாழும் காலத்தில் நன்றாகத்தான் வாழ்ந்துவிட்டு போகப்போகிறார்.. 

இவர் மட்டுமல்ல இவரைப்போன்ற பணபலம், அதிகாரபலம் இருப்பவர்கள், அரசியல் சதுரங்கத்தில் மாட்டுப்பட்டு சிக்கினால் தவிர மற்றபடி இவர்கள் செய்த பிழைகளுக்கும் சாதாரன மனிதர்களே தண்டனையும் பெறுகிறார்கள்.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கஷ்டங்கள் பிரச்சனைகள் மனிதர்களின் அவரவர் தரத்திற்கேற்ப வேறுபடும். எனக்கு சோறு தண்ணிக்கு/உறைவிட பிரச்சனை வந்தால் அது எனக்கு பாரிய பிரச்சனை. ஏனெனில் எனது வாழ்க்கை மட்டம் அவ்வளவுதான். அதற்கு மேல் நான் எதையும் சிந்திக்க முடியாது.

ஆனால்

சந்திரிக்கா போன்றவர்கள் உலகின் உயர்மட்டத்தில் இருந்தவர்கள்.அவர்களுக்கு சோறு தண்ணி வதிவிட பிரச்சனைகள் எக்காலமும் வரப்போவதில்லை. பண பற்றாக்குறையும் வரப்போவதில்லை.மாறாக அவர்கள் மனதை  உருக்கும் பிரச்சனைகள் பற்பல கௌரவ பிரச்சனைகள்/மானப்பிரச்சனைகள் அது அவர்களுக்கு பாரிய பிரச்சனை. செய்த குற்றங்கள் எந்தவடிவிலும் தமக்கு வந்து சூழலாம் என்ற மன அழுத்தங்கள்....முப்படைகள் சூழ கம்பீரமாக உலக வலம் வந்த எனக்கு என்ற மனநிலையும் வரக்கூடும்.

large.1715130176_C3.jpg.61c719fb523972016891c6835723dd0b.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கஷ்டங்கள் பிரச்சனைகள் மனிதர்களின் அவரவர் தரத்திற்கேற்ப வேறுபடும். எனக்கு சோறு தண்ணிக்கு/உறைவிட பிரச்சனை வந்தால் அது எனக்கு பாரிய பிரச்சனை. ஏனெனில் எனது வாழ்க்கை மட்டம் அவ்வளவுதான். அதற்கு மேல் நான் எதையும் சிந்திக்க முடியாது.

ஆனால்

சந்திரிக்கா போன்றவர்கள் உலகின் உயர்மட்டத்தில் இருந்தவர்கள்.அவர்களுக்கு சோறு தண்ணி வதிவிட பிரச்சனைகள் எக்காலமும் வரப்போவதில்லை. பண பற்றாக்குறையும் வரப்போவதில்லை.மாறாக அவர்கள் மனதை  உருக்கும் பிரச்சனைகள் பற்பல கௌரவ பிரச்சனைகள்/மானப்பிரச்சனைகள்,செய்த குற்றங்கள் எந்தவடிவிலும் தமக்கு வந்து சூழலாம் என்ற மன அழுத்தங்கள்....முப்படைகள் சூழ கம்பீரமாக உலக வலம் வந்த எனக்கு என்ற மனநிலையும் வரக்கூடும்.

large.1715130176_C3.jpg.61c719fb523972016891c6835723dd0b.jpg

அப்படி வருவது நீங்கள் சொல்வது போல் எல்லாருக்கும் வருவதுதான். குற்ற செய்தவர்கள் மட்டும் அல்ல செய்யாதவருக்கும் கூட.

பெரும் தலைவராக இருக்க தேவையில்லை, ஊரில் ஒரு  விதானையாக இருக்கும் போது பெரும் தோரணையாக வலம் வந்தவர்கள் கூட பின்னாளில் பதவி போனதும் ஒடுங்கி விடுவதை காணலாம்.

ஆனால் உண்மையில் சந்திரிகாவை இப்படி பார்க்க கோவம்தான் வருகிறது. எத்தனை அழிவுகளுக்கு காரண கர்த்தா? மிலோசவிச்சை போல, சதாமை போல பயந்து நடுங்கி ஒழிந்து அழிந்திருக்க வேண்டிய குற்றவாளி. 

பாதுகாப்புக்கு கூட ஒருவர் தேவைப்படாமல், லண்டன் வீதிகளில் மிக சுதந்திரமாக, இன்னுமொரு ஆசிய மூதாட்டி போல உலாவருகிறார்.

இப்படியானவற்றை பார்க்கும் போதுதான் கடவுள், கர்மா, விதி இவற்றில் எல்லாம் அவநம்பிக்கை பிறக்கிறது.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்படி சொல்லி எங்களையே ஏமாற்றுகிறோம்.. ஏனெனில் அவர் பாவங்கள் செய்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, தனது வாழ்நாளில் எந்தவித கஷ்டங்களையும் (உதரானமாக:-உணவிற்கு வழியில்லாமலோ, இருக்க இடமில்லாமலோ, உறவுகள் இல்லாமலோ, பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையோ, மருத்துவ பராமரிப்பு இன்றியோ) அவரும் அனுபவிக்கவில்லை, அவரது பிள்ளைகளும் அனுபவிக்கபோவதில்லை.. தனது வாழும் காலத்தில் நன்றாகத்தான் வாழ்ந்துவிட்டு போகப்போகிறார்.. 

இவர் மட்டுமல்ல இவரைப்போன்ற பணபலம், அதிகாரபலம் இருப்பவர்கள், அரசியல் சதுரங்கத்தில் மாட்டுப்பட்டு சிக்கினால் தவிர மற்றபடி இவர்கள் செய்த பிழைகளுக்கும் சாதாரன மனிதர்களே தண்டனையும் பெறுகிறார்கள்.. 

பதவி வந்தபோது, பணிவு வருகிறதோ, இல்லையோ துணிவு வந்து இருக்க வேண்டும். இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சரித்திரத்தில் 64% வென்று ஜனாதிபதியாகியவர் இவர் மட்டுமே.

தனது நாட்டினை நாசமாக்கிய தந்தையின் தவறை திருத்த வந்த அருமையான சந்தர்ப்பத்தினை, ரத்வத்தை போன்ற, காவாளி மாமனாரை வைத்துக்கொண்டு நாசமாக்கியவர் அவர்.

குமார் பொன்னம்பலத்துக்கு வெடி வைத்தவர் ரத்வத்த மகன் லோகன் ரத்வத்த. இவர் தெரிந்தும், கண்டுகொள்ளவில்லை.

சமாதான பேச்சுக்களில் உளத்தூய்மை இருக்கவில்லை. கதிர்காமர் போன்றோரை வைத்து, தமிழர் போராட்டத்துக்கு பெரும் குழிபறிப்பு வேலைகளை செய்தார்.

பலருக்கு தெரியாத விடயம், இவர் பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்ட அகதி. நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர். கணவர் கொலைக்கு பின்னர் இங்கே ஓடி வந்து தங்கி இருந்தார். ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரதாஸ இவரை போலவே சமகாலத்தில் இங்கே தங்கி இருந்த அகதி அந்தஸ்து பெற்றவர்.

தனியே பிள்ளைகளை லண்டனில் வளர்த்தவர். பாடசாலைக்கு கொண்டு போய், விட்டு, எடுத்து கஷ்டப்பட்டு பார்த்த ஒரு தாயார் தான்.. அவருக்கு லண்டன் தெருக்கள் புதிது அல்ல.

பிரேமதாசா மரணத்தின் பின்னர் அங்கே சென்று அரசியல் செய்தார். ஜனாதிபதி ஆனார்.

அப்படி பட்ட அனுபவங்களை கொண்டவர், பதவி வந்தபோது, சரி செய்ய முனையவில்லை.  அகதிகளாக இங்கே அவலப்பட சக இலங்கையர் துயரை துடைக்க முனையவில்லை. இன்னும் பலரை இங்கே அனுப்பி வைத்தார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, goshan_che said:

அப்படி வருவது நீங்கள் சொல்வது போல் எல்லாருக்கும் வருவதுதான். குற்ற செய்தவர்கள் மட்டும் அல்ல செய்யாதவருக்கும் கூட.

பெரும் தலைவராக இருக்க தேவையில்லை, ஊரில் ஒரு  விதானையாக இருக்கும் போது பெரும் தோரணையாக வலம் வந்தவர்கள் கூட பின்னாளில் பதவி போனதும் ஒடுங்கி விடுவதை காணலாம்.

ஆனால் உண்மையில் சந்திரிகாவை இப்படி பார்க்க கோவம்தான் வருகிறது. எத்தனை அழிவுகளுக்கு காரண கர்த்தா? மிலோசவிச்சை போல, சதாமை போல பயந்து நடுங்கி ஒழிந்து அழிந்திருக்க வேண்டிய குற்றவாளி. 

பாதுகாப்புக்கு கூட ஒருவர் தேவைப்படாமல், லண்டன் வீதிகளில் மிக சுதந்திரமாக, இன்னுமொரு ஆசிய மூதாட்டி போல உலாவருகிறார்.

இப்படியானவற்றை பார்க்கும் போதுதான் கடவுள், கர்மா, விதி இவற்றில் எல்லாம் அவநம்பிக்கை பிறக்கிறது.

இதற்கு காரணம் சாதாரண மக்கள் அல்ல.

அங்கு இருக்கும் அரசியல்வாதிகளின் தவறுகள் மட்டுமே. 

இதற்காக கடவுளையும் கர்மாவையும் அழைத்து திட்டும் பழக்கம் நகைப்புக்குரியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, goshan_che said:

மிலோசவிச்சை போல, சதாமை போல பயந்து நடுங்கி ஒழிந்து அழிந்திருக்க வேண்டிய குற்றவாளி. 

சதாம்  ஹுசையின் நினைத்திருந்தால் தனது சொத்து சுகங்களுடன் புலம் பெயர்ந்து வேறொரு நாட்டில் வாழ்ந்திருக்கலாம். ஈரானிய மன்னர் ஷா போல். ஆனால் சதாம் அப்படி செய்யவில்லை. தனது ஆண் பிள்ளைகளுடன் ஈராக் மண்ணிலேயே மடிந்தார். வீரன்.

மிலோசவிச்? மிலோசவிச்சும் எங்கும் தப்பியோடவில்லை. தனது மக்களுக்காக சர்வதேச நீதிமன்றம் சென்று கொலை செய்யப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இதற்கு காரணம் சாதாரண மக்கள் அல்ல.

அங்கு இருக்கும் அரசியல்வாதிகளின் தவறுகள் மட்டுமே. 

இதற்காக கடவுளையும் கர்மாவையும் அழைத்து திட்டும் பழக்கம் நகைப்புக்குரியது.

காரணம் சாதாரண மக்கள் என நான் சொல்லவில்லை. கடவுளை திட்டவும் இல்லை.

ஆனால் சந்திரிக்கா செய்தவற்றிக்கு இந்த சுதந்திரமான ஓய்வுதிய வாழ்க்கைதான் தண்டனை என்பதை ஏற்கமுடியாமல் உள்ளது அவ்வளவுதான்.

2 minutes ago, குமாரசாமி said:

சதாம்  ஹுசையின் நினைத்திருந்தால் தனது சொத்து சுகங்களுடன் புலம் பெயர்ந்து வேறொரு நாட்டில் வாழ்ந்திருக்கலாம். ஈரானிய மன்னர் ஷா போல். ஆனால் சதாம் அப்படி செய்யவில்லை. தனது ஆண் பிள்ளைகளுடன் ஈராக் மண்ணிலேயே மடிந்தார். வீரன்.

மிலோசவிச்? மிலோசவிச்சும் எங்கும் தப்பியோடவில்லை. தனது மக்களுக்காக சர்வதேச நீதிமன்றம் சென்று கொலை செய்யப்பட்டார்.

ஒரு குர்தியனுக்கு சதாம் மிகபெரும் இனப்படுகொலையாளன். 

ஒரு போஸ்னியனுக்கு மிலோசவிச் மிகபெரும் இனப்படுகொலையாளன்.

ஒரு ஈழத்தமிழனுக்கு சந்திரிகாவும் அப்படியே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

காரணம் சாதாரண மக்கள் என நான் சொல்லவில்லை. கடவுளை திட்டவும் இல்லை.

ஆனால் சந்திரிக்கா செய்தவற்றிக்கு இந்த சுதந்திரமான ஓய்வுதிய வாழ்க்கைதான் தண்டனை என்பதை ஏற்கமுடியாமல் உள்ளது அவ்வளவுதான்.

அதைத்தான் நான் முதலிலையே சொல்லி விட்டேன். இவர்களைப்போன்ற போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாக திரிய யார் காரணம்? 
எம் மக்கள் வாக்கு செலுத்தி பாராளுமன்றம் அனுப்பிய எமது அரசியல்வாதிகள் எங்கே?
கிடங்கு ரோட்டுக்கு தார் பூசவா பாராளுமன்றம் அனுப்பினார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, goshan_che said:

ஒரு குர்தியனுக்கு சதாம் மிகபெரும் இனப்படுகொலையாளன். 

குர்திஸ் மக்களுக்கும் இயக்கத்திற்கும் சதாம் ஹுசையின் செய்த உதவிகளைப்போல் யாரும் செய்யவே இல்லை. அங்கும் எழுகின்றது சதாமுக்கும் அமெரிக்காவுக்குமான பிரச்சனை. குர்திஷ் இயக்கம் விட்ட தவறுகள் சதாமை கோபமூட்ட வைக்கின்றது....

அந்த நேரத்தில் அமெரிக்கா குர்திஷ் மக்களுக்கு நேரடியாக உதவி செய்தமை உலகிற்கு தெரிந்திருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, goshan_che said:

ஒரு போஸ்னியனுக்கு மிலோசவிச் மிகபெரும் இனப்படுகொலையாளன்.

மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இந்த போரில் சவூதி அரேபியா தனது கூலிப்படை இராணுவத்தையும் அதே போல் துருக்கி தனது இராணுவத்தையும் இறக்கி பொஸ்னியாவில் வாழ்ந்த செர்பிய மக்களை நெல் அரிவது போல் அரிந்தெடுத்தார்கள். இது பொது வெளியில் வந்ததா? அப்போது ரஷ்ய ஆட்சியில் இருந்த கேடுகெட்ட வொட்கா புகழ் பொறிஸ் ஜெல்சினால் வந்த வினைகள் அனைத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

அதைத்தான் நான் முதலிலையே சொல்லி விட்டேன். இவர்களைப்போன்ற போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாக திரிய யார் காரணம்? 
எம் மக்கள் வாக்கு செலுத்தி பாராளுமன்றம் அனுப்பிய எமது அரசியல்வாதிகள் எங்கே?
கிடங்கு ரோட்டுக்கு தார் பூசவா பாராளுமன்றம் அனுப்பினார்கள்?

அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, யாராலும் இவரை யுத்த குற்றவாளி என நிறுவ முடியவில்லை. இனியும் முடியாது.

ஏதோ தமிழ் அரசியல்வாதிகள் சொல்லாதபடியால் இவர்களை உலகம் யுத்த குற்றவாளிகள் என கருதவில்லை என எழுதுவது எம்மை நாமே ஏமாற்றும் போக்கு.

சதாம், மிலோசவிச் போல சந்திரிகா அமெரிக்காவை எதிர்கவில்லை. ஆகவே இந்த சுதந்திரம். எதிர்திருந்தால் அவரின் நிலையிம் இதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

சதாம், மிலோசவிச் போல சந்திரிகா அமெரிக்காவை எதிர்கவில்லை. ஆகவே இந்த சுதந்திரம். எதிர்திருந்தால் அவரின் நிலையிம் இதுதான்.

ஆகவே அமெரிக்கா....

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

குர்திஸ் மக்களுக்கும் இயக்கத்திற்கும் சதாம் ஹுசையின் செய்த உதவிகளைப்போல் யாரும் செய்யவே இல்லை. அங்கும் எழுகின்றது சதாமுக்கும் அமெரிக்காவுக்குமான பிரச்சனை. குர்திஷ் இயக்கம் விட்ட தவறுகள் சதாமை கோபமூட்ட வைக்கின்றது....

அந்த நேரத்தில் அமெரிக்கா குர்திஷ் மக்களுக்கு நேரடியாக உதவி செய்தமை உலகிற்கு தெரிந்திருக்கும்

4 minutes ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இந்த போரில் சவூதி அரேபியா தனது கூலிப்படை இராணுவத்தையும் அதே போல் துருக்கி தனது இராணுவத்தையும் இறக்கி பொஸ்னியாவில் வாழ்ந்த செர்பிய மக்களை நெல் அரிவது போல் அரிந்தெடுத்தார்கள். இது பொது வெளியில் வந்ததா? அப்போது ரஷ்ய ஆட்சியில் இருந்த கேடுகெட்ட வொட்கா புகழ் பொறிஸ் ஜெல்சினால் வந்த வினைகள் அனைத்தும்.

ஒரு காலத்தில் சதாம் அவர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் பிந்திய காலங்களில் அவர்கள் மீது கடுகு வாயு உட்பட பல இராசாயன ஆயுதங்களை பாவித்தார்.

அதே போல் சேர்பியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் உண்மையே, 

ஆனால் இவர்கள் இருவருமே என்ன காரணத்துக்காகவேனும் இரு இனங்கள் மீது வன்முறையை ஏவிட்ட குற்றவாளிகள்தான்.

அதே போல் இன்னொருவர்தான் சந்திரிகா.

ஒரே வித்தியாசம் இவர் அமெரிக்காவை எதிர்க்கவில்லை.

அதனால் முன்னைய இருவரை போலல்லாது இவர் அந்திம காலம் செளகரியமானதாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

ஒரு காலத்தில் சதாம் அவர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் பிந்திய காலங்களில் அவர்கள் மீது கடுகு வாயு உட்பட பல இராசாயன ஆயுதங்களை பாவித்தார்.

சதாம் ஹுசையின் ஒரு உண்மையான வெஸ்ரேன் விசுவாசி. அவரை முஸ்லீம் என்றே சொல்ல முடியாது. எல்லாவற்றையும் விட அவர் ஒரு அமெரிக்க அபிமானி.

குர்திஷ் மக்கள் மீது இரசாயன வாயு அடித்தது ஈராக் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சதாம் ஹுசையின் ஒரு உண்மையான வெஸ்ரேன் விசுவாசி. அவரை முஸ்லீம் என்றே சொல்ல முடியாது. எல்லாவற்றையும் விட அவர் ஒரு அமெரிக்க அபிமானி.

குர்திஷ் மக்கள் மீது இரசாயன வாயு அடித்தது ஈராக் அல்ல.

நீங்கள் சொல்வது ஈரான்-ஈராக் யுத்த காலத்தில். அதன் பின் சதாமுக்கு மேற்கின் மீது கடுப்பு வந்து விட்டது.

பின்லேடன் கூட ஒரு காலத்தில் மேற்கின் கையாள்தானே. அப்படித்தான் சதாமும் எதிராக மாறினார். அதன் பின்னர்தான் அவருக்கு குருதிஸ் மக்கள், ஷியாக்கள் மீதும் அவநம்பிக்கை, வெறுப்பு வந்தது. அதன் பின் அவர்களை மோசமாக தாக்கினார்.

ஆனால் அவர் ஒரு போதும் மத அடிப்படைவாதி அல்ல என்பது உண்மைதான். 

குர்தீஸ் மக்கள் மீது சதாம் நடத்திய ஹலாப்ஜா படுகொலை.

https://www.refworld.org/docid/47fdfb1d0.html

ஆனால் 👆🏼 நடந்தது 1988 இல். 

இதில் இரசாயன வாயு பயன்படுத்தபடது.  பின்நாளில் இதை குர்தியருக்கு எதிரான சதாமின் நடவைக்கை என ஈராக்கே ஒத்தும் கொண்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வது ஈரான்-ஈராக் யுத்த காலத்தில். அதன் பின் சதாமுக்கு மேற்கின் மீது கடுப்பு வந்து விட்டது.

பின்லேடன் கூட ஒரு காலத்தில் மேற்கின் கையாள்தானே. அப்படித்தான் சதாமும் எதிராக மாறினார். அதன் பின்னர்தான் அவருக்கு குருதிஸ் மக்கள், ஷியாக்கள் மீதும் அவநம்பிக்கை, வெறுப்பு வந்தது. அதன் பின் அவர்களை மோசமாக தாக்கினார்.

ஆனால் அவர் ஒரு போதும் மத அடிப்படைவாதி அல்ல என்பது உண்மைதான். 

எனவே அமெரிக்கா நினைத்தால் எங்கும் எப்போதும் சுகம் சுபமே. 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

எனவே அமெரிக்கா நினைத்தால் எங்கும் எப்போதும் சுகம் சுபமே. 🙏🏽

வல்லான் வகுத்ததே சர்வதேச சட்டம், ஒழுங்கு, நடைமுறை, எல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாறாக அவர்கள் மனதை  உருக்கும் பிரச்சனைகள் பற்பல கௌரவ பிரச்சனைகள்/மானப்பிரச்சனைகள் அது அவர்களுக்கு பாரிய பிரச்சனை. செய்த குற்றங்கள் எந்தவடிவிலும் தமக்கு வந்து சூழலாம் என்ற மன அழுத்தங்கள்....முப்படைகள் சூழ கம்பீரமாக உலக வலம் வந்த எனக்கு என்ற மனநிலையும் வரக்கூடும்.

இந்த கெளரவ பிரச்சனைகள்/மானப்பிரச்சனைகள் கூட சாதாரண மக்களையே அதிகம் பாதிப்பதால்தான் என்பதால்தான் குடும்ப வன்முறைகள் தொடங்கி ஆணவக்கொலைகள் வரை நடக்கிறது.. 

இந்த அரசியல்வாதிகளுக்கு மானம்/கெளரவம் என்பது இருந்தால் இப்படி இருக்கமாட்டார்கள், உதாரனம்:- எங்கள் தமிழ் அரசியல்வாதிகள், அவர்களுக்கு வால்பிடிக்கும் மனிதர்கள்..

சரி அப்படித்தான் இந்த அரசியல்வாதிகளுக்கு மானம்/கெளரவப்பிரச்சனை இருந்தாலும் அதை தீர்ப்பதற்கான அதிகாரமும் அவரகளிடம் உள்ளது. அதை சந்திரிகா தொடங்கி எல்லா அரசியல்வாதிகளும் பயன்படுத்துகிறார்கள்..

இரண்டாவது, மன உளைச்சல்/மன அழுத்தங்கள் - இந்த சந்திரிக்காவை பாதிக்கலாம், இவரைப்போன்ற அரசியல்வாதிகளை பாதிக்கலாம் ஏனெனில் அவரது தொழில் அரசியல் அதில் எப்பொழுதும் நிலையற்றதன்மை இருப்பதால், ஆனாலும் அதைக்கூட அவர்களால் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள்.. அத்துடன், இந்த அழுத்தங்களால், சாதாரன மனிதர்கள் படும்பாடு அளவிற்கதிகமானது, தற்கொலைவரை செல்கிறது.. 

என்னைப்பொறுத்தவரை, very simple, சந்திரிக்காவும், இவரைப்போன்று பாவங்களை செய்தவர்களுக்கும் தண்டனை வரும் பொழுது, இவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பார்கள்.. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான நீதியும் கிடைத்திருக்காது…

இன்று இவர் போன்ற அரசியல்வாதிகள் தொடங்கி Jeffrey Epstein, John McAfee போன்ற அரசியல்பலம் பணபலம் படைத்தவர்கள் எல்லாம் தண்டனைகள் கிடைக்கும் வரை நன்றாகவே, நினைத்ததை சாதித்து, அனுபவித்து கடைசியில் பகடைகாய்களாகி உயிரை இழந்தார்கள்..

இவர்களைப்போன்றவர்களில், நாளைக்கு இன்னமும் யார்யாரெல்லாம் வருவார்களோ தெரியாது, ஆனால் அதுவரை அவர்கள் தாம் நினைத்ததை சாதித்து, அனுபவித்து சுதந்திரமாகவே இருப்பார்கள்..

அதனால், இந்த பாவம்/புண்ணியம் கூட சாதாரன மனிதர்களுக்கு மாத்திரமே.. இதனால்தான், இவைகளை நம்புவதும் கேள்விக்குறியாக உள்ளது.. அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

செய்த பாவம் தீருமா
இப்படி சொல்லி எங்களையே ஏமாற்றுகிறோம்.. ஏனெனில் அவர் பாவங்கள் செய்தாலென்ன இல்லாவிட்டாலென்ன,தனது வாழும் காலத்தில் நன்றாகத்தான் வாழ்ந்துவிட்டு போகப்போகிறார்..

இந்த கெளரவ பிரச்சனைகள்/மானப்பிரச்சனைகள் கூட சாதாரண மக்களையே அதிகம் பாதிப்பதால்தான் என்பதால்தான் குடும்ப வன்முறைகள் தொடங்கி ஆணவக்கொலைகள் வரை நடக்கிறது.. 

💯 உண்மைகள்

  • கருத்துக்கள உறவுகள்

large.1715130176_C3.jpg.61c719fb523972016891c6835723dd0b.jpg

இவர் மட்டுமல்ல இனி வரபோகும் இலங்கை ஜனாதிபதிகள் பிரதமர் ராணுவதளபதி என்று எவருமே கதாநாயகன் கதாநாயகி விளையாட்டு காட்ட முடியாது  பதவி போனபின் இப்படித்தான் சந்தைக்கு நடந்து போற ஆக்கள்மாதிரி சாதாரணமாக திரியவேண்டும்.

காலம் முழுவதும் புலி பூச்சாண்டி காண்பித்து சிங்கள மக்களின் ரத்தத்தை சூடாக்கி அவர்களை ரட்சிக்க வந்த வான தேவன் தேவதைபோல் வாழ்ந்தவர்கள் புலி போராட்டம் முற்றுபெற்றபின் இனி சிங்களவர்களின் ஹீரோ ஆகவேண்டுமென்றால் வறுமையை ஒழிப்பு வேலைவாய்ப்பின்மை, பொருளாதார அபிவிருத்தியின் மந்தம், வெளிநாட்டு கடன்சுமை  விலைவாசி ஏற்றம் இவைகளை அறவே ஒழிக்கவேண்டும். அது ஒருபோதும் சாத்தியமில்லை,

பண்டாரநாயக்காவிலிருந்து மஹிந்தவரை தமிழர்கள்,புலிகள் நாட்டை பிரிக்கபோகிறார்கள்  என்று பேசி பேசியே சிங்களவர்கள் நரம்புகளை சூடாக்கி அதனை மட்டும் அவர்கள் அரசியல் முதலீடாக்கி அரியாசனம் ஏறியவர்கள், இப்போ மொத்தநாடுமே அவர்கள் கையிலிருக்கே இனிமேல் சிங்களவர்களை ஏமாற்ற தமிழ்/புலிகள் விவகாரம் உதவாது. எடுபடாது

நாளை மஹிந்த கோத்தபாய மைத்திரி எல்லோருக்கும் இதே நிலைதான்.

காலம் காலமாக தமிழர்களை ஏமாற்றி தெருவில் விட்ட சிங்கள தலைவர்களை சிங்கள மக்கள் இப்போது தெருவில் விடுகிறார்கள். காலம் ஒரு வட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய கணவர் நடிகர் விஜய குமரணதுங்க நல்லதொரு மனிதர். தமிழர்களின் ஆதரவை பெற்றவர்.
அனியாயமாக கொல்லப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்… நல்ல மனிதர். புலிகளிடமும், இணக்கமாக இருந்தார்.

அப்படி இருக்க, யார்? ஏன்…  கொன்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

ஆம்… நல்ல மனிதர். புலிகளிடமும், இணக்கமாக இருந்தார்.

அப்படி இருக்க, யார்? ஏன்…  கொன்றார்கள்?

பண்டார நாயக்கவைவே 

சிறீமா தான்  கொன்றார்  என்று  சொல்வார்கள்

இது  எம்மாத்திரம்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.