Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தீவிரமாகும் கடன் நெருக்கடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நாளுக்கு அப்புறமா, மனதுக்கு கொஞ்சம் குளிர்ச்சியா இருக்குது...

ஊருக்கு காசு அனுப்புற மக்கள், வங்கி ஊடாக அனுப்பினால் அரசுக்கு உதவியா இருக்கும். உண்டியல் காசு அரசுக்கு போகாது.

அங்குள்ள காசுக்காரர், வெளிநாடுகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு காசு அனுப்ப, உண்டியல் காரர்களை நாடுகிறார்கள்.

வெகுவிரைவில் பெற்றோல் வாங்க முடியாமல், வாகனம் இல்லா விதிகளை காணமுடியும் என்கிறார்கள்.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாமல் போகப் போகிறது.

முக்கியமாக, ராணுவத்தினர் பலர் வேலை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பப்படக்கூடும். இது பெரும் பிரச்சனைகளை ராஜபக்சேக்களுக்கு தரப்போகிறது.

சீனாவும், வகை தொகை இல்லாமல் கடன் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. 

வினை விதைத்தால், வினை அறுக்கத்தான் வேண்டும். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முக்கியமாக, ராணுவத்தினர் பலர் வேலை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பப்படக்கூடும். இது பெரும் பிரச்சனைகளை ராஜபக்சேக்களுக்கு தரப்போகிறது

அப்போ..  இன்னும் ஐந்து வருடத்தில் இராணுவத்தில், விமானப்படையில், இன்னும் உள்ள சகல இலங்கை இராணுவப்படையில் அதிகாரிகளாகும் கனவோடு இணைந்த நம்ம தமிழ் இளைஞர், யுவதிகளும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்களோ? எங்கே அரசை தூக்கி நிமிர்த்திய தனித்தம்பி? கைதட்டிய உஷார் தம்பியவையை அன்போடு அழைக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ரொம்ப நாளுக்கு அப்புறமா, மனதுக்கு கொஞ்சம் குளிர்ச்சியா இருக்குது...

ஊருக்கு காசு அனுப்புற மக்கள், வங்கி ஊடாக அனுப்பினால் அரசுக்கு உதவியா இருக்கும். உண்டியல் காசு அரசுக்கு போகாது.

அங்குள்ள காசுக்காரர், வெளிநாடுகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு காசு அனுப்ப, உண்டியல் காரர்களை நாடுகிறார்கள்.

வெகுவிரைவில் பெற்றோல் வாங்க முடியாமல், வாகனம் இல்லா விதிகளை காணமுடியும் என்கிறார்கள்.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாமல் போகப் போகிறது.

முக்கியமாக, ராணுவத்தினர் பலர் வேலை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பப்படக்கூடும். இது பெரும் பிரச்சனைகளை ராஜபக்சேக்களுக்கு தரப்போகிறது.

சீனாவும், வகை தொகை இல்லாமல் கடன் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. 

வினை விதைத்தால், வினை அறுக்கத்தான் வேண்டும். 

சிங்களத்துக்குச் சில கள்ளக் காதலர்களும் உண்டு...!

அவர்கள் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை அடகு வைத்து, கடன் வாங்கி மண்ணின் சொந்த மக்களை அழித்து, வெடி கொளுத்தி, பாற்சோறு தின்னும் பொழுது ஆனந்தமாய்த்தான் இருந்தது. பின்னாலுள்ள ஆபத்தை உணராமல் சிங்கள மக்களும் கொண்டாடினார்கள். இப்போ தமிழருக்கு நடந்த கொடுமை இவர்கள் மேற் பாயபோகுது அல்லது மக்கள் இவர்களை துலைக்கப்போகிறார்கள். ராஜபக்ஸ குடும்பத்தினர் விசர் பிடித்து அலையப்போகினம். இப்போ  நாங்கள் வெடி கொளுத்துவமோ... வேண்டாமோ? எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்தால் நல்லது. இலங்கையில் ஓய்வெடுக்க இருப்பவர்கள் உங்கள் முடிவை மீள்பரிசோதனை செய்து கொள்ளுங்கள்! 

மீள்பரிசீலனை. 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இலங்கையில் ஓய்வு எடுக்கும் விசயத்தில் உறுதியாய்தான் பாருங்கோ உள்ளோம். தவிர, எங்கள் உறவுகள் அங்கு நிரந்தரமாக வாழ்கின்றார்கள். எல்லோராலும் நாட்டைவிட்டு ஓடிவிட்டு தூர நின்று பிறந்து வளர்ந்த நாட்டை தூற்ற முடியாது. நாடு என்று வரும்போது அதன் நல்லது, கெட்டது அனைத்து மக்களையும் பாதிக்கும். எனவே, பொறுப்பு உணர்வுடன் கருத்து பரிமாறுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது என்று எமக்கு எதை விட்டுவைத்தார்கள்? எங்கே பொறுப்புடன் நடந்தார்கள்? சொந்த நாட்டிலேயே அகதிகளாய் கையேந்தவல்லே வைத்தார்கள். சிங்களவரே நாட்டை விட்டு ஓட நினைக்கிறார்கள். எம்மை அழிக்க நாட்டை பங்கு போட்டு நாடு  பாழடைஞ்சு போச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரர் என்டு அழைப்பதை நிறுத்தி இக்கனம் முதல் "உதவி கேட்போர் " என்று கண்ணியமாக அழைக்க வேண்டும் .. 👍

IMG-20210716-082157.jpg

இது நான் தலைவரான உடன் எடுத்த முதல் முடிவு..👌
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

சிங்களத்துக்குச் சில கள்ளக் காதலர்களும் உண்டு...!

அவர்கள் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்!

கள்ளக்காதலர்கள் கவர்ச்சியையும் எதிர் பார்ப்பார்களே??

நலிந்தவளிடம் எவன் வருவான்??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

சிங்களத்துக்குச் சில கள்ளக் காதலர்களும் உண்டு...!

அவர்கள் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்!

இப்ப அப்படியில்லை ,கருணாநிதி மாதிரி மூன்று ,நாலை பகிரங்கமாக வைத்திருக்கிறான்....
காலில் ஒன்று ,தலையில் ஒன்று ,மடியில் ஒன்று.....மூன்று பேருக்கும் தாலியை கட்டின படியால் கெத்தா நிற்கிறான் ....

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, putthan said:

இப்ப அப்படியில்லை ,கருணாநிதி மாதிரி மூன்று ,நாலை பகிரங்கமாக வைத்திருக்கிறான்....
காலில் ஒன்று ,தலையில் ஒன்று ,மடியில் ஒன்று.....மூன்று பேருக்கும் தாலியை கட்டின படியால் கெத்தா நிற்கிறான் ....

நான் இதை எழுதும்போது இந்தியாவையும், ஜப்பானையும் தான் நினைத்து எழுதினேன்! இப்ப கனக்க வெளியால வருகுது!

எண்டைக்குச் சிங்களம் பங்களாதேசிட்டைக் கையை நீட்டிச்சுதோ அண்டைக்கே நினைச்சன் இப்படி ஒரு நிலை வருமெண்டு…!

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, புங்கையூரன் said:

நான் இதை எழுதும்போது இந்தியாவையும், ஜப்பானையும் தான் நினைத்து எழுதினேன்! இப்ப கனக்க வெளியால வருகுது!

எண்டைக்குச் சிங்களம் பங்களாதேசிட்டைக் கையை நீட்டிச்சுதோ அண்டைக்கே நினைச்சன் இப்படி ஒரு நிலை வருமெண்டு…!

மேற்கு ஏகாதிபத்தியம் போய் இப்ப கிழக்கு ஏகாதிபத்தியம் வந்திட்டுதாம்....முன்பு நீங்கள் அமேரிக்கனிட்ட கடன் வாங்கலாம் என்றால் ஏன் சீனாக்காரனிட்ட இப்ப  வாங்க கூடாது ..என்று என்ட இடதுசாரி நண்பன் சண்டைக்கு வாரான்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே, பெற்றோல் வாங்க முடியாமல், வண்டிகள் இல்லாத தெரு என்று சொன்னது, மக்கள் வாங்கமுடியாமல் என்று அல்ல.

வெளிச்சந்தையில் அரசு வாங்க முடியாது, $ காசு இல்லை.. கடனுக்கும் கொடுக்க மாட்டார்கள்....

6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நாங்கள் இலங்கையில் ஓய்வு எடுக்கும் விசயத்தில் உறுதியாய்தான் பாருங்கோ உள்ளோம். தவிர, எங்கள் உறவுகள் அங்கு நிரந்தரமாக வாழ்கின்றார்கள். எல்லோராலும் நாட்டைவிட்டு ஓடிவிட்டு தூர நின்று பிறந்து வளர்ந்த நாட்டை தூற்ற முடியாது. நாடு என்று வரும்போது அதன் நல்லது, கெட்டது அனைத்து மக்களையும் பாதிக்கும். எனவே, பொறுப்பு உணர்வுடன் கருத்து பரிமாறுவோம். 

நியாயமா பேசினால், 30 வருசமா, முக்கியமாக முள்ளி வாய்க்காலில், சுத்தி வளைச்சு, பெற்றோல், மருந்து, சாப்பாடு இல்லாமல் எங்களை என்ன கொடுமைப்படுத்தினார்கள்.

மேலால கிபிர், பக்கவாட்டில் ஷெல், கடலில் இருந்து நேவி போர்ட் அடி.... அதை சமாளித்த எம்மக்கள், இதனையும் சமாளிப்பர்...

ஆனால் , இந்த கொடுமையை எங்களுக்கு தந்த சிங்களம் சிக்கி, சின்னாபின்னமாக போகிறது....

நான் அழும்போது நீ வரவில்லை... எனக்கு துன்பத்தை தந்தவனுக்கே ஆட்சியையும் பரிசாக கொடுத்து, மகிழ்ந்தாய்....

இன்று உனக்காக நான் கவலைப்பட நியாயம் எதுவும் இல்லை.

ஆனால்  ஒரு உறுதி தருகிறேன் என் சிங்கள நண்பா... பால் சோறு கிண்டி, பக்கத்து, இஸ்லாமியருக்கும் கொடுத்து, மகிழப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கச்சா எண்ணெயோட கப்பல் ஒன்று வந்திருக்காம். டொலரில கட்டினா இறக்குவானாம், இல்லாட்டி கிளம்பிடுமாம் கப்பல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடம் முதல் கூட நான் இலங்கையன், இலங்கை என் தாய் நாடு அதன் மீது எனக்கு பேரபிமானம் உண்டு, இலவச கல்விக்கு என்றும் நன்றி உடையவன், பால்ராஜ் கூட இலங்கை பாஸ்போர்ட் எடுத்துதான் சிங்கபூர் போனார் ஆகவே நாம் இலங்கையர்தான், சிங்கள மக்கள் இனவாதிகள் இல்லை, தலைவர்கள்தான் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என்று திருவாய் மலர்ந்த @Nathamuni கூட சிங்களவன் படட்டும், முள்ளிவாய்க்காலுக்கு பிரதி பலன் என்று எழுதும் அளவுக்கு இலங்கை நிலமை மோசாமாகி விட்டது🤣.

சும்மாவா சொன்னார்கள்,

கடன் அன்பை முறிக்கும் 🤣

இலங்கை மீதான பேரபிமானத்தையும் முறிக்கும்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கை மீது பேரபிமானம் இருந்தது. தலயின் அறிவுரைகள் என்னை மாத்திப் போட்டுது...😜

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே.... இருட்டினில் செய்தி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் தயங்காதே... ஒரு தல இருக்கிறார் கலங்காதே.... எண்டது தான்... தான் நான் இப்ப பாடுறது.... 

அதாலை தல... அறிவுரைகளை வாரி வழங்குங்கள்.... தயவுடன் எடுத்துக்கொள்ளப்படும்.... 😇

ஆனால் தல.... நீங்கள் பேங்க் அக்கௌன்ட், சோர்ட் கோர்ட் கேட்டனியல் எல்லோ... தனி மடலில் அனுப்பி இருக்குது.

எங்களுக்கில்லை கடன் அன்பை முறிக்காது... நாங்கள் ஒண்டுகை ஒண்டு...  😁

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நாங்கள் இலங்கையில் ஓய்வு எடுக்கும் விசயத்தில் உறுதியாய்தான் பாருங்கோ உள்ளோம். தவிர, எங்கள் உறவுகள் அங்கு நிரந்தரமாக வாழ்கின்றார்கள். எல்லோராலும் நாட்டைவிட்டு ஓடிவிட்டு தூர நின்று பிறந்து வளர்ந்த நாட்டை தூற்ற முடியாது. நாடு என்று வரும்போது அதன் நல்லது, கெட்டது அனைத்து மக்களையும் பாதிக்கும். எனவே, பொறுப்பு உணர்வுடன் கருத்து பரிமாறுவோம். 

நீங்களும் ஒன்றை  புரிந்து கொள்ளணும்?

நீங்கள்  எழுதுபவை அனைத்தையும் யாழ் களமும் அதன் உறவுகள் அனைவரும் அறிவர்

இங்கே  இலங்கையின் நிலவரம் சார்ந்து வைக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் உங்கள் கருத்து  உட்பட

இலங்கை  மீண்டு வரணும்

இனியாவது பாடங்களை  சரி  தூக்கி பார்த்து

இலங்கை  பிரசைகள் அனைவரையும் ஒன்றிணைக்கணும்

சமமாக  நடாத்தப்படணும்

அவரவருக்கான உரிமைகள் உறதிப்படுத்தப்படணும் என்ற அவாவிலும் எதிர்பார்ப்பிலுமே...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர்  எப்படியாவது இலங்கையை தங்கள் காலடிக்குள் விழ வைக்க பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ..அதில் அற்ப சந்தோசமடைகிறார்கள் 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இங்கே சிலர்  எப்படியாவது இலங்கையை தங்கள் காலடிக்குள் விழ வைக்க பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ..அதில் அற்ப சந்தோசமடைகிறார்கள் 
 
ஓமோம், கையில இரண்டொரு ஒரு பில்லியன் டொலரை வைத்துக்கொண்டு, தவிச்ச முயல் அடிக்க பார்த்துக்கொண்டிருக்கிறோம். 🤑

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஓமோம், கையில இரண்டொரு ஒரு பில்லியன் டொலரை வைத்துக்கொண்டு, தவிச்ச முயல் அடிக்க பார்த்துக்கொண்டிருக்கிறோம். 🤑

ம்ம்

எனக்கும் இதை வாசித்தபோது அப்படி தான் தோன்றியது?😀

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2021 at 04:45, நியாயத்தை கதைப்போம் said:

நீங்கள் சொன்ன முதலாவது காரணம் எனக்கு வராது ஆகவே நானும் இலங்கையை திட்டிவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

இங்கே சிலர்  எப்படியாவது இலங்கையை தங்கள் காலடிக்குள் விழ வைக்க பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ..அதில் அற்ப சந்தோசமடைகிறார்கள் 
 
இலங்கை தமிழனின்ட காலடிக்குள் வராது என்பது தெரிந்த விடயம் ஆனால் பிறநாடுகள் இலங்கையை தங்கள் காலடிக்குள் வீழ்த்தும் ,வீழ்த்தியுள்ளதும் என்று தமிழர் பலருக்கு தெரியும்.....

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

ஓமோம், கையில இரண்டொரு ஒரு பில்லியன் டொலரை வைத்துக்கொண்டு, தவிச்ச முயல் அடிக்க பார்த்துக்கொண்டிருக்கிறோம். 🤑

குடுத்திட்டாலும் :LOL:
 
9 hours ago, putthan said:

இலங்கை தமிழனின்ட காலடிக்குள் வராது என்பது தெரிந்த விடயம் ஆனால் பிறநாடுகள் இலங்கையை தங்கள் காலடிக்குள் வீழ்த்தும் ,வீழ்த்தியுள்ளதும் என்று தமிழர் பலருக்கு தெரியும்.....

தங்கட நாட்டை எப்படி காப்பாற்றுவது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ...இங்கிருக்கும் சிலர் "இலவு காத்த கிளி" மாதிரி காத்திருக்க வேண்டியது தான் 😆

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

குடுத்திட்டாலும் :LOL:
 
தங்கட நாட்டை எப்படி காப்பாற்றுவது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ...இங்கிருக்கும் சிலர் "இலவு காத்த கிளி" மாதிரி காத்திருக்க வேண்டியது தான் 😆

பங்களாதேஷிடம் கடன் வாங்கி தானே??

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

பங்களாதேஷிடம் கடன் வாங்கி தானே??

யாருட்டை கடன் வேண்டினாலும் நாட்டை தங்கட கைக்குள் தானே வைத்திருக்கினம்  

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

யாருட்டை கடன் வேண்டினாலும் நாட்டை தங்கட கைக்குள் தானே வைத்திருக்கினம்  

நான் வாங்கிய வீடு 200வீதம் வங்கி கடன் என்றால் வீடு என்னுடையதா சகோதரி?

பத்து வருடங்களுக்கு முன்னர் 120 ரூபாய் போன யூரோ இப்ப 250 போகுது என்றால் நாடு எங்க நிற்குது??

Edited by விசுகு
சில வரிகள் சேர்க்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.