Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கான் இராணுவமே... போராட தயாராக இல்லாத போது, அமெரிக்கா ஏன் போராட வேண்டும்? ஜோ பைடன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத போது அமெரிக்கா ஏன் போராட வேண்டும்? ஜோ பைடன்!

ஆப்கான் இராணுவமே... போராட தயாராக இல்லாத போது, அமெரிக்கா ஏன் போராட வேண்டும்? ஜோ பைடன்!

ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றியது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தலிபான்கள் இவ்வளவு வேகமாக முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டது விவகாரத்தில் உறுதியாக இருக்கின்றேன்.

பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க இராணுவம் அங்கு சென்றது. அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறி விட்டதால் இராணுவம் அங்கிருந்து வெளியேறியது.

ஐந்தாவது ஜனாதிபதி ஒரு ஒரு போர் தொடரக்கூடாது. தேசத்தைக் கட்டமைப்பது, ஜனநாயகத்தை மேம்படுத்துவது என்பதெல்லாம் தங்களது போரின் நோக்கமல்ல.

அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுப்பது மட்டும்தான் தங்களது நோக்கம். எதிர்பார்த்ததைவிட நிகழ்வுகள் மிக வேகமாக நடந்துவிட்டன. அமெரிக்கப் படைகளை தலிபான்கள் தாக்கினால், கடுமையான பதிலடி இருக்கும்.

தலிபான்களை ஒடுக்க ஆப்கான் இராணுவத்திற்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது. தலிபான்களுக்கு எதிராக போராடமலே ஆப்கானிஸ்தான் ராணுவம் முழுமையாக சரணடைந்துள்ளது.

ஆப்கான் தலைவர்களின் ஒற்றுமையின்மையே தலிபான்களின் வெற்றிக்கு காரணம். ஆப்கானிஸ்தான் தற்போதையை நிலவரத்தை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என கூறினார்.

https://athavannews.com/2021/1234755

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆப்கானிஸ்தான் தற்போதையை நிலவரத்தை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என கூறினார்.

நாங்களும் ஆப்கானிஸ்தான் தற்போதையை நிலைமையை உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருக்கிறோம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் எமது உயிர் , பணம், வளம் கொடுத்ததும், எமது பல முக்கிய பொருளாதார,  சர்வதேச நலன்கலாய் விட்டு  கொடுத்தும்   ஓர் எதிர்பார்ப்புடன் போராடினோம், ஆப்கானின் பெரும்பான்மை தனிமனித  சுதந்திரத்துக்காக போராட்டத்தை தனது கையில் எடுக்கும் என்று (சொறி லங்காவை போல, ஓர் இனத்தின் வளர்ச்சியை, விருத்தியை முடக்கி, இனத்தின் வீதத்தை அந்த மண்ணில் குறைப்பது அல்ல.)     

அவர்களுக்கே அக்கறை இல்லாத பொழுது, எமது பாதுகாப்பை உறுதி செய்து விட்டு, வெளியேறுவதே பொதுவான நன்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நாங்களும் ஆப்கானிஸ்தான் தற்போதையை நிலைமையை உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருக்கிறோம் 😂

இந்தியாவின்… இராசதந்திரத்தை, அமெரிக்கா கடைப் பிடிக்குது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ தேரை இழுத்து தெருவில விட்டாச்சுது......!   😎

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, suvy said:

எப்படியோ தேரை இழுத்து தெருவில விட்டாச்சுது......!   😎

ஆறு மாதம் செல்லும் தேர் ஆடி ஆடி இருப்பிடம் வருவதற்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

ஆறு மாதம் செல்லும் தேர் ஆடி ஆடி இருப்பிடம் வருவதற்கு

இது…. ஆறு மாத பிரச்சினை இல்லை புத்தன்.

மிக… நீண்ட காலம் இழுபடும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
ஆப்கானிஸ்தானில் என்னோடு இந்த போர் முடியட்டும்; நமது படையினர் வாழ்நாள் முழுக்க போர் செய்ய முடியாது- ஜோ பைடன்
 
ஆப்கானிஸ்தானில் வாழ்நாள் முழுக்க அமெரிக்க படைகள் போர் செய்து கொண்டு இருக்க முடியாது, என்னோடு இந்த போர் முடிவிற்கு வரட்டும், இனியும் ஆப்கானிஸ்தானில் நாம் போராட வேண்டியது கிடையாது, நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
 
ஆப்கானிஸ்தானில் நடக்கும் விஷயங்களை பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறேன். நாங்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைக்க வேண்டும் என்று அங்கு செல்லவில்லை. அது எங்கள் பணியல்ல. ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமான சில குறிக்கோளுடன் சென்றோம். அல் கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமாவை பிடிக்கவும் இந்த போர் தொடுப்பு நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க எதுவும் தகுந்த நேரம் கிடையாது.
எப்போது படைகளை வாபஸ் வாங்கினாலும் இதே நிலைதான். 5 வருடங்களுக்கு முன் வாபஸ் வாங்கினாலும் இப்படித்தான் நடந்து இருக்கும் 15 வருடங்களுக்கு பின் வாபஸ் வாங்கினாலும் இப்படித்தான் நடந்து இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் நினைத்ததை விட வேகமாக மாற்றம் நடந்துவிட்டது. ஆப்கான் படைகள் தோல்வி அடைந்துவிட்டது.
ஆப்கான் தலைவர்கள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆப்கான் அரசும், படையும் தாலிபானை எதிர்க்காத போது நாம் ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும். ஆப்கான் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது. அப்படி ஒரு போரில் மரணிக்க வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது.
ஆப்கானிஸ்தானை ஒற்றுமைப்படுத்த எத்தனை ஆண்டுகள், எவ்வளவு படைகள் முயன்றாலும் முடியாது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை மட்டுமே எங்களின் குறிக்கோள். ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் விஷயங்களை கவனித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கர்களை வெளியேற்றி வருகிறோம். அமெரிக்கர்களை காப்பது மட்டுமே என் நோக்கம். அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டால் அமெரிக்க படை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.
நான் அதிபராக பதவி ஏற்கும் முன்பே முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தாலிபான்களுடன் உடன்படிக்கையை மேற்கொண்டு 15 ஆயிரம் படைகள் வரை வாபசும் பெறப்பட்டுவிட்டது. அந்த ஒப்பந்தத்தை நான் தொடர்ந்து மேற்கொண்டேன். நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன். நாங்கள் எடுத்தது ரிஸ்க்தான். ஆனால் ஆப்கான் படைகள் நினைத்ததைவிட வேகமாக வீழ்ந்துவிட்டது.
20 வருடமாக போர் நடக்கிறது, இந்த போரை எதிர்கொள்ளும் 4வது ஜனாதிபதி நான். இதே போரை நான் இன்னொரு ஜனாதிபதிக்கு கடத்தி செல்ல மாட்டேன். நான்தான் இப்போது ஜனாதிபதி. என்னோடு இந்த போர் முடியட்டும், முந்தைய ஜனாதிபதிகள் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன்.
எனக்கு இது வருத்தம் தருகிறது. ஒசாமா பின் லேடனை கொன்றதோடு அமெரிக்காவின் பணி முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானை மாற்றுவது நம் வேலை இல்லை. ஆப்கானிஸ்தானில் வாழ்நாள் முழுக்க போர் செய்ய முடியாது. இது நம்முடைய வேலை இல்லை. இது நம்முடைய தேசிய பாதுகாப்பு பிரச்சனையும் இல்லை. இதில் எப்போதும் கவனம் செலுத்த முடியாது. அமெரிக்க வீரர்கள் குடும்பத்தை விட்டுவிட்டு ஆப்கானிஸ்தானில் உயிரை கொடுத்து போராட முடியாது. நான் நம் நாட்டு வீரர்களிடம் அதை கேட்க மாட்டேன். என்னை நீங்கள் விமர்சனம் செய்யலாம். ஆனால் இதுதான் நாட்டிற்கும், நம் பாதுகாலர்களுக்கும் நல்லது.
ஆப்கான் படைகள் அந்த நாட்டை காக்காத போது, நாம் ஏன் ஆப்கானிஸ்தானில் போர் புரிய வேண்டும்? இதற்காக பல டிரில்லியன் நாம் செலவு செய்து இருக்கிறோம், அவர்களுக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறோம், அவர்கள் கேட்டது எல்லாம் கொடுத்தோம். ஆனால் அவர்களே தாலிபான்களிடம் சரண் அடைந்த போது நாம் ஏன் அவர்களுக்காக போராட வேண்டும்? என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

இது…. ஆறு மாத பிரச்சினை இல்லை புத்தன்.

மிக… நீண்ட காலம் இழுபடும் என நினைக்கின்றேன்.

உண்மைதான் கடாபி,சதாம் ,பின்லாடான் எல்லொரையும் 20 வருடத்திற்கு மேல் அனுபவிக்க விட்டுத்தானே போட்டவங்கள் ....இனி வரும் ஆப்கான் தலைவரையும் விட்டு வைப்பாங்கள் பிறகு ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18/8/2021 at 05:50, தமிழ் சிறி said:

ஆப்கான் இராணுவமே... போராட தயாராக இல்லாத போது, அமெரிக்கா ஏன் போராட வேண்டும்? ஜோ பைடன்!

 அமெரிக்கா ஆப்கானிஸ்தான் ஆமியளை தயார் செய்தபோது....😎

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

 அமெரிக்கா ஆப்கானிஸ்தான் ஆமியளை தயார் செய்தபோது....😎

தலிபானை சண்டை பிடிக்காமல் டான்ஸ் ஆடி வெல்லும் உத்தி🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கான் முன்னாள் ஆட்சியாளர்கள் அமெரிக்காவிடம் கள்ள கணக்கு காட்டியே பல பில்லியன் டொலர்களை ஏப்பம் விட்டதாக சொல்கிறார்கள், மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் ராணுவத்துக்கு சம்பளம் வேண்டுமெண்டு காட்டி 90 ஆயிரம் பேருக்கே அதை வழங்கியதாகவும், கட்டுமானம் என்று பல நூறுகோடி டொலர்களை   வாங்கி அதே பாணியில் அமுக்கியதாகவும் ஊடகங்களில் இருக்கின்றன.

இந்தியா ஊழல் விசயங்களில் டாக்டர் பட்டம் பெற்ற நாடு என்பதால் ஆப்கானில் காசை கையில கொடுக்காமல் தானே சில சிலவற்றை கட்டிகொடுத்ததாக சொல்கிறார்கள்.

எவ்வளவு ஆயுதம் படைவீரர்கள் இருந்தாலும் போர்க்குணம் அவர்களிடம் இல்லையென்றால் அனுமான் பட்டாசை கொளுத்தி போட்டாலும் ஓடி தள்ளுவாங்கள்,

இதற்கு நல்ல உதாரணம் தாயகத்தில் இந்தியா ஆயுதங்களை அள்ளி கொடுத்தும் ஆட்பலத்தை அதிகரித்தும்  உருவாக்கிய தமிழ் தேசிய ராணுவம். புலிகள் வருகிறார்கள் என்றதும் பெட்டி உடைக்காத ஆயுதங்களைகூட அப்படியே விட்டுவிட்டு ஓடியதும் சரணடைந்ததும் வரலாறு.

On 18/8/2021 at 04:06, தமிழ் சிறி said:

இந்தியாவின்… இராசதந்திரத்தை, அமெரிக்கா கடைப் பிடிக்குது. 🤣

அமெரிக்கா உன்னிப்பாக அவதானிக்குது என்றால்  அடிக்க போறாங்கள் எண்டு அர்த்தம்.

இந்தியா நிலமையை உன்னிப்பாக அவதானிக்குது என்றால் ஓடபோறாங்கள் எண்டு அர்த்தம், சீன எல்லையில் அதுதானே நடக்குது,

ஆணி பூட்டின கட்டையோட சீனாக்காரன் வாறாங்கள் எண்டால் ஒரே ஓட்டம்தானாம்.

1 hour ago, குமாரசாமி said:

 அமெரிக்கா ஆப்கானிஸ்தான் ஆமியளை தயார் செய்தபோது....😎

ஓ... இந்த ட்ரெயினிங்க பாத்துட்டுதான் ட்ரம்ப் இது ஒண்டும் வேலைக்கு ஆவுறதில்ல, நீங்கள் ஊருக்கு கிளம்பி வாங்கப்பா எண்டு அமெரிக்க ராணுவத்தை வாபஸ் வாங்கும் முடிவை எடுத்திருப்பார்.

கொமாண்டோ ட்ரெயினிங் எடுங்கடா எண்டு சொன்னால் கோவிந்தா போட்டிருக்கிறாங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

ஆப்கான் முன்னாள் ஆட்சியாளர்கள் அமெரிக்காவிடம் கள்ள கணக்கு காட்டியே பல பில்லியன் டொலர்களை ஏப்பம் விட்டதாக சொல்கிறார்கள், மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் ராணுவத்துக்கு சம்பளம் வேண்டுமெண்டு காட்டி 90 ஆயிரம் பேருக்கே அதை வழங்கியதாகவும், கட்டுமானம் என்று பல நூறுகோடி டொலர்களை   வாங்கி அதே பாணியில் அமுக்கியதாகவும் ஊடகங்களில் இருக்கின்றன.

இந்தியா ஊழல் விசயங்களில் டாக்டர் பட்டம் பெற்ற நாடு என்பதால் ஆப்கானில் காசை கையில கொடுக்காமல் தானே சில சிலவற்றை கட்டிகொடுத்ததாக சொல்கிறார்கள்.

எவ்வளவு ஆயுதம் படைவீரர்கள் இருந்தாலும் போர்க்குணம் அவர்களிடம் இல்லையென்றால் அனுமான் பட்டாசை கொளுத்தி போட்டாலும் ஓடி தள்ளுவாங்கள்,

இதற்கு நல்ல உதாரணம் தாயகத்தில் இந்தியா ஆயுதங்களை அள்ளி கொடுத்தும் ஆட்பலத்தை அதிகரித்தும்  உருவாக்கிய தமிழ் தேசிய ராணுவம். புலிகள் வருகிறார்கள் என்றதும் பெட்டி உடைக்காத ஆயுதங்களைகூட அப்படியே விட்டுவிட்டு ஓடியதும் சரணடைந்ததும் 

இந்தியா…. மாலைதீவை பிடிக்க, ஒட்டுக்குழுக்களை அனுப்பியதை கேள்விப் பட்டீர்களா? 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, valavan said:

எவ்வளவு ஆயுதம் படைவீரர்கள் இருந்தாலும் போர்க்குணம் அவர்களிடம் இல்லையென்றால் அனுமான் பட்டாசை கொளுத்தி போட்டாலும் ஓடி தள்ளுவாங்கள்,

இதற்கு நல்ல உதாரணம் தாயகத்தில் இந்தியா ஆயுதங்களை அள்ளி கொடுத்தும் ஆட்பலத்தை அதிகரித்தும்  உருவாக்கிய தமிழ் தேசிய ராணுவம். புலிகள் வருகிறார்கள் என்றதும் பெட்டி உடைக்காத ஆயுதங்களைகூட அப்படியே விட்டுவிட்டு ஓடியதும் சரணடைந்ததும் வரலாறு.

கும்பலோடை கும்பலாய் இருந்து ஊமைக்குத்து  விட்டால் எப்பிடியிருக்கும் எண்டு தெரியாத ஆக்கள் தடித்த எழுத்திலை இருக்கிறதை வாசிக்கவும்..:cool:

வாய்வுத் தொல்லை ஏற்பட முக்கிய காரணங்களும் தீர்வுகளும்...!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தியா…. மாலைதீவை பிடிக்க, ஒட்டுக்குழுக்களை அனுப்பியதை கேள்விப் பட்டீர்களா? 🤣

அதென்ன சிறி சர்வ சாதாரணமா கேள்விபட்டீர்களா எண்டு கேட்டுவிட்டீர்கள்,

உலக ராணுவ வல்லுனர்களே இன்றுவரை  தாங்கள் அனுப்பிய குழுவை தாங்களே எப்படி கலைச்சு பிடிக்கிறது  எனும்  இந்திய ராணுவத்தின் அதியுச்ச மதி நுட்பம் வாய்ந்த தாக்குதலை நினைச்சு நினைச்சு இன்றுவரை அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

main-qimg-aa409e39334a3df2f0176c936d525f9e

என்ன புளொட் தல குனிஞ்சு கொண்டு வாறியள்? 

துவக்கு பிடியால Sit down  பண்ணுற பகுதிய சிதைச்சிட்டாங்களாக்கும்? சரிவிடுங்க ,சதி புரட்சியில் சிதையாத பகுதி எண்டு எது இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

வளவன்…. 🪑Sit down🪑 பகுதி என்றால், “ஆசன வாயில்” பக்கமா? 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

வளவன்…. 🪑Sit down🪑 பகுதி என்றால், “ஆசன வாயில்” பக்கமா? 😂 🤣

இத வேறு விரிச்சு கேட் கணூமா சிறி அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய இராணுவம் -  ஆஸ்பத்திரி மலசலகூடம் கழுவி கொண்டு நின்ற ஆளை, பக்கெட்ட போட்டுட்டு வண்டில வலுகட்டாயமா ஏத்தி….

டியூசன் போற அண்ணைமார, சைகிளால தள்ளி விழுத்தி, வானில இழுத்து ஏத்தி…

இப்படி அதில் சேர்க்கப்பட்ட ஒருவர் கூட விரும்பி போகாத ஆக்கள்….

மற்ற பக்கத்தால் வந்தது புலிகள் …

அவையள் சரணடையாமல் விட்டால்தான் அதிசயம்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் எதிர் தரப்புக்கு போராட வலுவான காரணகள் உள்ளன. அவர்கள் வாழ்கை முறையையே சிதைக்க போகிறார்கள் தலிபான். ஆனாலும் ஓர்மம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஆனாலும் ஓர்மம் இல்லை.

வெளிப்பார்வைக்கு அவ்வாறு தெரியவில்லை. செய்திகளும் அவ்வாறு இல்லை.

பொதுவாக எந்த படை வீரர்களும் அவரக்ளின் நெத்தியில்  எதிரி துவக்கின் குழலை வைத்து, விசையை அழுத்தி , சரணடைய செய்யச் சொன்னால் ஒழிய, ஒன்றில் சண்டையை பிடித்து கொண்டு (token resistance) விலத்துவார்கள், அல்லது தப்ப எத்தனிப்பார்கள்.

ஹிந்தியா அமைத்த, தமிழ் தேசிய ராணுவம் கூட, ஓர் கட்டம் வரை சண்டை பிடித்தது. 

அனால், ஆஃப்கான் இராணுவம், நன்கு பயிற்றப்பட்ட ராணுவம். சண்டையில் கூட பயிற்றப்பட்ட, தேர்ச்சி பெட்ரா  ராணுவம்.

ஆப்கானில், சரணடைவு முழுமையான ஒழுங்குடனேயே (ordered) நடைபெற்று இருப்பதாகவே செய்திகளும், தோற்றமும் இருக்கிறது.

ஆஃப்கான் ராணுவ படை வீரர்கள் சரணடையும் முடிவு எடுத்து இருந்தால் அன்கொன்றும், இனக்கொன்றும் என்று ஒழுங்கு இல்லாததாக, பலத்த, சிறிய சண்டைகளின் வழியாக சின்னாபின்னப்பட்டு நடந்து இருக்கும். தலைவனும் , இவ்வளவு வேகமாக முன்னேறுவது கடினமாக இருந்து இருக்கும்.

நடைபெற்றது, ஆஃப்கான் படைகளின் அதி உயர் மற்றும் முடிவு எடுக்கும் தலைமைப்பீடம், தம்மிடம் உள்ள அனைத்தையும் அப்படியே தலபனிடம் தட்டில் வைத்து கொடுப்பது என்று முடிவெடுத்து கொடுத்ததாக அல்லவாகவல்லவா  தெரிகிறது.

அதாவது, படைகளின் அதி உயர் மற்றும் முடிவு எடுக்கும் தலைமைப்பீடம், ஆப்கான் அரசுக்கும், மக்களுக்கும் துரோகம்  இழைத்து விட்டனர்.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

நீங்கள் சொல்வது போல் உயர் பீடம் சரணடையும் முடிவை எடுத்தது என்பது உண்மைதான்.

ஆனால் அதற்கான பிரதான காரணம் போர்களத்தில் நிற்கும் வீரர்கள் மீது உயர் பீடத்துக்கு நம்பிக்கை இல்லாமை என நான் நினைகிறேன்.

300,000 ஆயிரம் பேருக்கு அமெரிக்காவிடம் சம்பள கணக்கு காட்டியுள்ளார்கள் ஆனால் இருந்தது 30,000-50,000 தானாம்.

அதுவும் சம்பளத்துக்கு சேர்ந்த விளிம்பு நிலை ஆட்கள். இவர்களுக்கு நவீன ஆப்கானிஸ்தானினால் பெரிய நன்மை இல்லை, சம்பளத்தை தவிர. தலிபான் வந்தாலும் பெரிய நட்டம் இல்லை. ஏனென்றால் இவர்கள் வீடுகளில் இப்போதே தலிபான் வாழ்கை முறைதான். கூடவே இயற்கையான மார்க பற்று, அமெரிக்க எதிர்ப்பு (காபிர்) - அவர்களை ஓர்மாக சண்டை செய்ய தூண்டவில்லை.

நவீன ஆப்கானினால் நன்மை அடையும், தலிபானினால் ஆபத்தை அடைய கூடிய படித்தவர்கள், பெண்கள், இவர்கள் யாரும் ஆமியில் சேரவில்லை. அவர்கள் எல்லாம் தத்தமது வேலை, வாழ்க்கை முன்னேற்றத்தை, பொருளாதார அபிவிருத்தியை, கல்வியை நாடி போக, அவர்களுக்கு அவசியமான நவீன ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு, அமெரிக்க + விளிம்பு நிலை ஆப்கானிகள் கையில் வீழ்ந்தது.

அமெரிக்கா விலக, விளிம்பு நிலை ஆப்கானிகள் வேறு எவரதோ சண்டையை நாம் ஏன் பிடிபான் என சரணடைந்து விட்டார்கள். 

தவிரவும் எல்லாவற்றையும் விட tribal links ஆப்கானில் மிக முக்கிய இடம் வகிக்கும். தலிபுகள் எல்லாரும் பஹ்தோ. ஆமியில் பலரும் கூட்டு ஆனால் அதிகம் பஹ்தோக்கள். இனப்பாசத்திலும், மதப்பாசத்திலும் பலர் போரடமால் விட்டிருப்பார்கள்.

20 வருடத்தில் பெண்களை ஒரு தாக்கும் படையாக மாற்றி இருக்கலாம்.

படித்தவர்கள், முற்போகானவர்களை துணை இராணுவ மயப்படுத்தி (இஸ்ரேல் போல), புதிய ஆப்கானிஸ்தானினனும் உங்கள நீடித்த வாழ்வை நீங்களே பாதுகாக்க வேண்டும் என சொல்லி இருக்கலாம்.

சாலே போன்றோரை வைத்து ஒரு வலுவான இராணுவத்தை கட்டி அமைத்திருக்கலாம். (இபோதும் அதிரடி படை கமாண்டோக்கள் இவருடன் பஞ்ச்சீரில் இருப்பதை காணலாம்). 

ஆமெரிக்கா விலகுவதை தெரிந்து கொண்டு, உடனடியா சீனா, ரஸ்யாவோடு அல்லது பாகிஸ்தானோடு கூட ஒப்பந்தங்களை போட்டிருக்கலாம். 

எந்தவித முன்னேற்பாடும் இல்லாத சோம்பேறி தலைமை, ஓர்மம் இல்லாத இராணுவம்.

முடிவு - சத்தமின்றி, அதிக இரத்தம் இன்றி தலிபான் வெற்றி.

பிகு:

ஐ எஸ் சின் ஆசிய தலைவரை காபூலில் சிறையில் வைத்து தாலிபுகள் போட்டுள்ளனர்.

இது நிச்சயம் அமெரிக்காவுக்கு உவப்பான செய்தி. அதேபோல் தாலிபான் 2.0 அமெரிக்காவை தாக்காது என்பதற்க்கான சமிக்ஞையாயும் இருக்கலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இருபது ஆண்டுகளில் விமானப்படை, உளவுத்துறை, தளவாடங்கள், திட்டமிடல் மற்றும் பிற முக்கிய செயலாக்கங்களுக்கான அமெரிக்க ஆதரவை நம்பியிருந்த ஆப்கானிய இராணுவம் அதை கைவிடுவதற்கான அமெரிக்க முடிவால் கொடிய மனச்சோர்வை ஏற்படுத்தியது . இதனால் ஆப்கான் இராணுவம் எதிர்த்து சண்டை இடுவதை கைவிட்டது என அமெரிக்க இராணுவத்திற்கான பேச வல்லவர் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் சுலபமாக வீழ்ந்ததற்கு காரணம் என்ன?

பிற்குறிப்பு: இந்தியாவின் தலைமை இன்னும் 10 நாட் கள் மட்டுமே..🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a Twitter screenshot of 2 people and text that says 'Polime NEWS Polimer news 2 hours ago Like Page காபூலில் உள்ள தூதரகங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் தாலிபன்கள் யாருகிட்டருந்து பாதுகாப்பு அளிக்கப்படும்? தாலிபான் எங்ககிட்டருந்து தான்...'

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

கடந்த இருபது ஆண்டுகளில் விமானப்படை, உளவுத்துறை, தளவாடங்கள், திட்டமிடல் மற்றும் பிற முக்கிய செயலாக்கங்களுக்கான அமெரிக்க ஆதரவை நம்பியிருந்த ஆப்கானிய இராணுவம் அதை கைவிடுவதற்கான அமெரிக்க முடிவால் கொடிய மனச்சோர்வை ஏற்படுத்தியது . இதனால் ஆப்கான் இராணுவம் எதிர்த்து சண்டை இடுவதை கைவிட்டது என அமெரிக்க இராணுவத்திற்கான பேச வல்லவர் கூறியுள்ளார்.

இதில் அமெரிக்கா ஏமாற்று பட்டு விட்டது, ஆப்கான் படைத்துறை அதி உயர் பொறுப்பாளர்களால் என்றே எண்ண  தோன்றுகிறது. 

படைகளை அமைக்கும் போது, ஓர் பக்கத்தால் அரசியல் சிந்தாந்த cohesion என்று, இன்னோர் பக்கத்தால் சகோதர பிணைப்பு (brother hood),  இன்னோர் பக்கத்தால் இரத்தப் பிணைப்பு (blood hood) என்று பல பிணைப்புகள் கொண்டு உருவாக்கப்படும்.

கோசன் சொல்லும், tribal பிணைப்புகள் போன்ற உள்ளிருக்கும் பிணைப்புகளில்  நம்பிக்கையை தொடர்ச்சியான, யதார்த்தமான போதனைகள், அனுபவங்கள் (தலபானுக்கு எதிராக ஏற்றப்படுத்துவது பாரிய முயதர்சி ஆயினும், தலபனின் பிற்போக்கு மத சிந்தனைகள், மற்றும் மக்களை அடக்கி ஒடுக்கியது எல்லாமே இந்த உள்ளே பிணைப்புகளை தளர்த்துவதற்கு ஏதுவாக இருந்தது)  போன்றவற்றை தளர்த்தி, அறுத்தே, புதிய படைகள்  அமைக்கப்பட்டு இருக்கும்.

இப்படி படைகளை அமைப்பதில்  அமெரிக்கா, பிரித்தானிய நன்கு தேர்ந்தது. அதை நிச்சயம் செய்து இருக்கும். 

அனால், அதை கட்டி காப்பாற்றுவது, உள்ளிருக்கும் தலைமைப் பீடம்.   

  • கருத்துக்கள உறவுகள்

அனால், தலபான் நினைத்தது மாதிரி ஆட்டம் போட முடியாது. கொலை, சித்திரவதை, மற்றும் உரிமைகளை தடுப்பதில் செய்யலாம்.

US, ஆப்கான் மத்திய வங்கியை முடக்கி விட்டே வெளியேறியது.

மக்களுக்கு உணவு வழங்குவது  கூட, தலபானுக்கு பிரச்சனையாக உருவெடுக்கப்போகிறது.

இதை வைத்து, தாலிபானை உள்ளூர் நிர்வாகம் , மற்றும் உரிமைகளில் வலிக்கு கொண்டுவரலாம் என்பது ஓர் கணிப்பாக இருக்கும்.

கீழ் இருக்கும் இணைப்பு படி, தாலிபானிடம் உள்ளது வெறும் 18 மில்லியன் USD.

https://www.business-standard.com/article/international/us-freezes-nearly-9-5-billion-afghanistan-central-bank-assets-report-121081900034_1.html#:~:text=The US has frozen nearly,an administration official confirmed Tuesday.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.