Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

மேலும் அவரும் நானும் என்ற புதிய தலைமுறை நிகழ்ச்சியில் இவரின் மனைவி தன்னிடம் நடனம் பயிலவரும் மாணவிகளை இவர் ஏறெடுத்து பார்க்கவும் மட்டார் என்று சொல்லியிருக்கிறார். எல்லாமே போச்சு!

இதிலேதான் அரசியல்வாதிகளுக்கு “தனிப்பட்ட பாலியல் வாழ்க்கை” என்று ஒன்று இல்லை என்றாகிறது.

அரசியலின் அடிப்படை நம்பிக்கை.

ஒரு வகை அரசியல்வாதிகள் “நான் பாலியல் விசயத்தில் அப்படி இப்படித்தான்” என்பதை மறைமுகமாக, அல்லது நேரடியாக  சொல்லி ஆனால் உங்களுக்கு நல்ல அரசியல் வாதியாக இருப்பேன் என ஆதரவு கேட்பார்கள்.

அவர்கள் பாலியல் விடயங்கள் பற்றி மக்கள் அதிகம் அலட்டுவதில்லை.

ஒரு கதை சொல்வார்கள்.

இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ வினதும் ரஸ்ய அழகிகளினதும் வீடியோவை வைத்து அவரை கேஜிபி பிளாக் மெயில் பண்ண முயன்றதாம், “எனக்கும் ஒரு கொப்பி தாருங்கள்” என கேட்ட சுகர்ணோ, “எனது மக்களுக்கும் காட்டுங்கள் நான் எப்படி பட்ட கெட்டிகாரன் என்பதை அவர்களும் அறியட்டும்” என்றாராம்🤣.

அண்ணா முதல் ஸ்டாலின் வரை இந்த வகை.

ஆனால் சிலர் “நான் குனிந்த தலை நிமிரமாடேன், பத்தினன் தெரியுமா”. எனது மனைவியிடம் வருபவரை கூட பார்க்கமாட்டேன் என சொல்லி விட்டு, பின்னர் வழமாக மாட்டும் போது,

அவர்கள் மீதான நம்பிக்கை தகர்கிறது.

நம்பிக்கை, மதிப்பு இரெண்டையும் இழந்தால் அரசியல் வாழ்வு ஓவர்.

On 25/8/2021 at 17:22, goshan_che said:

அண்ணாமலைக்கு இதை முன் கூட்டியே சொன்னதும், அண்ணாமலையை trap பண்ணத்தானாம். அண்ணாமலை வெளியிடவேண்டாம் என மறுத்தால் அவரும் சேர்ந்து மூடி மறைத்தார் என்றாகும்.

இன்றைக்கு மதன் அண்ணாமலையின் ஆடியோவை ரிலீஸ் பண்ணி - அவர் மேல் பல குற்றங்களை அடுக்குகிறார்.

  • Replies 161
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, goshan_che said:

அண்ணா முதல் ஸ்டாலின் வரை இந்த வகை.

 பாலியல்.......ஆகா 😂

சீமான் விடயத்தில் மட்டும் குத்துது குடையுது என பல திரிகளில் சதிராட்டம் ஆடி அந்த திரியை மூட வைத்தீர்களே ஏன்?  கோடம்பாக்க  சாஸ்திரங்கள் தெரிந்தால் சீமான் விடயத்தில் சீறி சினந்திருக்க மாட்டீர்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 பாலியல்.......ஆகா 😂

சீமான் விடயத்தில் மட்டும் குத்துது குடையுது என பல திரிகளில் சதிராட்டம் ஆடி அந்த திரியை மூட வைத்தீர்களே ஏன்?  கோடம்பாக்க  சாஸ்திரங்கள் தெரிந்தால் சீமான் விடயத்தில் சீறி சினந்திருக்க மாட்டீர்கள்.🤣

அது வேற வாய் இது வேற வாய்😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people and text that says 'வடநாட்டுலருந்து தமிழ்நாடு வரை பெண்கள் விஷயத்துல ரொம்ப வீக்காவும், அராஜகம் செஞ்சிட்டு இருக்கீங்க. இதனால மக்கள் உங்க கட்சிய பாத்து காறித்துப்புறாங்க. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க! BJP Leaders People ரப்பர் மரத்துக்கு காயங்கள் ஒன்னும் புதுசு இல்ல.'

May be an image of 2 people and text that says 'நீங்க அண்ணாமலை பக்கமா, இல்ல.. ராகவன் பக்கமா இல்ல.. அப்ப மதன் பக்கமா.. இல்லவே இல்ல யாரு பக்கம் தான் நீங்க அப்ப 1U தமிழன் mt MEMES யாரு பக்கமும் இல்ல, இவனுங்க மூனு பேரும் அசிங்கபடுறத உக்கார்ந்து வேடிக்கை பாக்குற பக்கம்.. அவ்ளோ தான்'

May be an image of 1 person and text that says 'ராகவனுக்கு வீடியோ, அண்ணாமலைக்கு ஆடியோ mt தமிழன் எச்சராஜாக்கு என்ன ரிலிஸ் பண்ண போறாங்கனு தெரியலையே!'

ஒரே... சஸ்பென்ஸா.... இருக்கு 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

 பாலியல்.......ஆகா 😂

சீமான் விடயத்தில் மட்டும் குத்துது குடையுது என பல திரிகளில் சதிராட்டம் ஆடி அந்த திரியை மூட வைத்தீர்களே ஏன்?  கோடம்பாக்க  சாஸ்திரங்கள் தெரிந்தால் சீமான் விடயத்தில் சீறி சினந்திருக்க மாட்டீர்கள்.🤣

7 hours ago, உடையார் said:

அது வேற வாய் இது வேற வாய்😂

நான் திரியை மூடவைக்கவில்லை.

ஆனால் சீமான் பற்றிய பாலியல் சர்சையை கூட அவரின் நம்பகத்தன்மையை பாதிப்பதாகவே எழுதினேன்.

ஏனென்றால் “நாங்கள் தூய அரசியல் செய்ய வந்துள்ளோம்” “இலங்கை ஏதிலி பெண்ணை மணம் முடிப்பேன்”, “கட்டடத்துக்கு வெள்ளை அடிக்கவில்லை, உடைத்து விட்டு புதிய கட்டடம் கட்ட வந்தோம்”, நாம் “பிரபாகரின் பிள்ளைகள்” என்றவர் சீமான்.

ஆகவே அங்கே எழுதியது சீமானின் நம்பகதன்மை பற்றி.

41 minutes ago, goshan_che said:

ஆனால் சீமான் பற்றிய பாலியல் சர்சையை கூட அவரின் நம்பகத்தன்மையை பாதிப்பதாகவே எழுதினேன்.

உங்களது சீமான் பற்றிய முன்னைய கருத்துக்களில் இருந்து நான் தெளிவாக விளங்கியது தமிழகத்தில் உள்ள  பல சாக்கடை அரசியல்வாதிகளில் சீமானும் ஒருவர். சீமானின் லெவலில் உள்ள மற்றைய சாக்கடை அரசியல்வாதிகளை தூற்றி க்கொண்டு அதே சாக்கடை சீமானை தூக்கி கொண்டாடும் மன நோயாளிகளாக ஈழத்தமிழர் இருக்க தேவையில்லை என்பதையே. 

Edited by tulpen
இலக்கணத் திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-08-27-07-58-24-261-com-a

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

நான் திரியை மூடவைக்கவில்லை.

ஆனால் சீமான் பற்றிய பாலியல் சர்சையை கூட அவரின் நம்பகத்தன்மையை பாதிப்பதாகவே எழுதினேன்.

ஏனென்றால் “நாங்கள் தூய அரசியல் செய்ய வந்துள்ளோம்” “இலங்கை ஏதிலி பெண்ணை மணம் முடிப்பேன்”, “கட்டடத்துக்கு வெள்ளை அடிக்கவில்லை, உடைத்து விட்டு புதிய கட்டடம் கட்ட வந்தோம்”, நாம் “பிரபாகரின் பிள்ளைகள்” என்றவர் சீமான்.

ஆகவே அங்கே எழுதியது சீமானின் நம்பகதன்மை பற்றி.

இலங்கையிலும் இந்தியாவிலும் நம்பத்தகுந்த ஒரு அரசியல்வாதியை சொல்ல முடியுமா கோஷான்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாரும் கள்ளர் தான்!" என்பது உண்மை😎. பிறகேன் சீமானைத் தலையில் தூக்கி வைத்திருக்க வேண்டுமென்கிறீர்கள்? (அப்படித் தூக்கி வைக்க மறுத்தவர்களை நாகரீகக் குறைவாக விழித்ததால் அல்லவா திரிகள் பூட்டப் பட்டன?)

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

"எல்லாரும் கள்ளர் தான்!" என்பது உண்மை😎. பிறகேன் சீமானைத் தலையில் தூக்கி வைத்திருக்க வேண்டுமென்கிறீர்கள்? (அப்படித் தூக்கி வைக்க மறுத்தவர்களை நாகரீகக் குறைவாக விழித்ததால் அல்லவா திரிகள் பூட்டப் பட்டன?)

ஒருவரை தலையில் தூக்கி வைத்திருப்பதும் இறக்கிவிடுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். நீங்கள் ஏன்  அதற்குள் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறீர்கள். உங்களை யாரும் தலையில் அவரை தூக்கிவைக்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லையே!!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

ஒருவரை தலையில் தூக்கி வைத்திருப்பதும் இறக்கிவிடுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். நீங்கள் ஏன்  அதற்குள் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறீர்கள். உங்களை யாரும் தலையில் அவரை தூக்கிவைக்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லையே!!

நீங்கள் தலையில் தூக்கி வைக்க மறுத்தவர்கள் எப்படியெல்லாம் துரோகி, சிறி லங்கா சூக்காட்டி போன்ற பட்டங்களால் தூசிக்க பட்டார்கள் என்று வாசிக்கவில்லைப் போல! - வாசித்தால் அது கட்டாயப் படுத்தலை விட சீரியசான மிரட்டல் என்பது விளங்கக் கூடும். பூட்டப் பட்ட திரிகளில் போய் வாசிக்கலாம்!

இன்னொரு மிகக் கேவலமான விடயமும் நடந்தது: தாயகத்தில் போராளிகளாக இருந்து உயிர்மீண்டு வந்த சக கள உறவுகளையே சீமான் என்ற சராசரி தமிழக அரசியல் வாதிக்காக பொய்யர்களாக சித்திரிக்க முயன்றனர்! எல்லாம் றெக்கோர்டில் இருக்கிறது - நீங்கள் பார்க்க வேண்டியது மட்டும் தான் பாக்கி!😎

  • கருத்துக்கள உறவுகள்
9C647654-9E40-40D3-9BEE-ADD55FAD7CFF.webp
 
அண்ணாமலையின் பேச்சைக் கேட்கும் போது அவருடைய சொல்லுக்கும் மனதில் ஓடும் எண்ணங்களுக்கும் ஒரு இசைவின்மையை கவனிக்கலாம் - சற்று முன் என்ன பேசினோம் எனத் தெரியாமல் அடுத்ததாக சம்மந்தமில்லாத மற்றொன்றை சொல்லுகிறார். மதனை தான் மாவட்ட செயலாளராக ஆக்குவதாக சொல்லுகிறார், உடனே 2026இல் நீங்க எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கப் போறீங்க, அதுக்கான வேலைகளை இப்பவே ஆரம்பிங்க, இது ஒரு 5 வருட புரோஜெக்ட் பிரதர் என்கிறார். சற்று நேரம் கழித்து தமிழக ஊடகங்களை “நிர்வாகம்” பண்ணும் பொறுப்பு மதனுக்கு வழங்கப்படும், அவர் தமிழகத்தில் இருந்து மோடிஜியின் பிம்பத்தை உயர்த்தும் நோக்கிலான செய்திகள் தொடர்ந்து பேஸ்புக், டிவிட்டரில் வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், அதற்காக அவர் கீழ் இயங்குவதற்கு நிறைய பேர் கொண்ட ஒரு சமூகவலைதள அணி உருவாக்கப்படும் என்கிறார். மதனுடைய வேலை தமிழக ஊடக முதலாளிகளிடம் பேசி மோடியின் பெருமையை மக்களிடம் கொண்டு செல்ல வைப்பதே. ஒவ்வொரு சேனலிலும் வேலையில் இருந்து துரத்தி விடப்பட்டு எங்குமே போக முடியாமல் வாசலில் நிற்கும் மதன் எல்லா ஊடக முதலாளிகளையும் அமர வைத்து டீல் பேசப் போகிறாரா? எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர், ஒட்டுமொத்த சமூகவலைதள நிர்வாகி, தமிழக ஊடக முகவர் என எங்கு ஆரம்பித்து எங்கு போகிறார் பாருங்க. இதில் முத்தாய்ப்பு அடுத்து வருவது தான்: “உங்க மதன் டயரிஸ் சேனலுக்கான ஸ்டுடியோ செட் அப்பை புனரமைக்க எவ்வளவு செலவாகுங்க பிரதர்?” “ஒரு மூணு லட்சம் இருந்தா காமிரா, கம்பியூட்டர் எல்லாம் வாங்கி செட் பண்ணிரலாம்.” கே.டி ராகவனின் முப்பது வருட அரசியல் வாழ்க்கையை “இன்ஸ்டண்டாக” முடித்து வைக்க அண்ணாமலை பேரம் பேசும் அழகைப் பாருங்க. 
 
இதில் எதாவது நம்பும்படியாக இருக்கிறதா? இதே ஆள் தான் தனக்கு கே.டி ராகவனை விசாரித்து தண்டிக்கும் உரிமை இல்லை, தில்லியிடம் பேசி பொறுமையாக ஆறு மாதங்களில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார். அதற்கும் முன்பு தனக்கு எல்லா முடிவுகளையும் எடுத்து, துணிச்சலுடன் அடித்தாடும் அதிகாரத்தை அமித் ஷா வழங்கி உள்ளதாக சொல்லுகிறார். இதையெல்லாம் கேட்கும் போது தலை கிறுகிறுவென சுற்றிக் கொண்டு வருகிறதா?
இவ்வளவு வாக்குறுதிகள் கொடுத்து விட்டு, எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர், ஊடக முகவர், மூன்று லட்ச மதிப்புள்ள ஒரு சின்ன யுடியூப் சேனலின் ஓனர் ஆக்குகிறேன் என இறக்கிக் கொண்டே வந்து விட்டு, “இந்த வீடியோ வந்தா மதன் பிரான்ட் நாளைக்கு எங்கியோ போயிடும் பாருங்க” என்று விட்டு மாலையில் அவரை கட்சியின் அடிப்படைப் பொறுப்பில் இருந்தே தூக்கி விடுகிறார் அண்ணாமலை. காண்டாகுமா ஆகாதா பிரதர்?
 
 கொஞ்ச நேரம் கழித்து வெண்பாவிடம் அவர் ரொம்ப பணிவாக “இந்த கே.டி ராகவனை எப்படி விசாரிக்கலாமுன்னு சொல்லுங்க?” எனக் கேட்கிறார். உடனே மதனும் வெண்பாவுமாக சேர்ந்து அதிக எண்ணிக்கையில் பெண்கள் இடம்பெறும் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க சொல்லலாம் என்கிறார்கள். இது கூட தெரியாதவரையா அமித் ஷா நம்பி பொறுப்பை ஒப்படைத்தார்? 
 
இன்னும் 16 பேரின் காணொலிகள் தன்வசம் உள்ளன என மதன் ஏதோ “freshஆ சங்கரா மீன் வந்திருக்கு சார்” எனும் கணக்கில் சொல்ல, அதற்கு அண்ணாமலை “இந்த சேர்ல உட்கார்ந்திருக்கிற எனக்கு கட்சியில உள்ள எல்லார் பற்றின தகவல்களும் வந்து தான் இருக்கின்றன” என டப் கொடுக்கிறார். அவ்வளவு தகவல்களை வைத்துக் கொண்டு இவர் என்னதான் பண்ணுகிறார் எனும் கேள்வி எழுகிறது.
 
ஆனால் இதைத் தொடர்ந்து வெண்பாவிடம் “நீங்க ‘பொன்னியின் செல்வனில்’ டயலாக் எழுதுறீங்களா சிஸ்டர்?” என அப்பாவியாகக் கேட்கிறார். தன்னிடம் டீல் பேச வந்திருக்கும் வெண்பாவின் பின்னணியே தெரியவில்லை, ஆனால் ஒட்டுமொத்த தமிழக பாஜக தலைவர்களின் அந்தரங்க விவகாரமும் இவருக்குத் தெரியுமா? “இல்லிங்க நான் பாட்டு மட்டும் தான் எழுதி இருக்கேன்…” “எல்லா சாங்ஸுமேவா சிஸ்டர்?” “இல்லீங்க ஒரு பாட்டு தான்.” அப்போது வெண்பாவின் மைண்ட்வாய்ஸ்: “யோவ், நீ விகடன் கூட படிக்கிறது இல்லியா? கூகிள் பண்ணி பார்க்கலாமுல்ல.”  
 
அடுத்து தான் செமையான ‘ஒன்னு வாங்கினால் ரெண்டு’ சலுகை வருகிறது: வெண்பாவை தான் பாஜக இலக்கிய அணியின் பொறுப்பாளர் ஆக்குகிறேன் என்கிறார். வெண்பா பாஜகவில் உறுப்பினர் தானா என்பது கூட தெரியாமல் அவரை இலக்கிய அணியின் பொறுப்பாளராக்குகிறேன் என ஒருவர் சொல்லுகிறார், வெண்பாவோ தான் ஒரு கட்சிக்கூட்டத்திற்குக் கூட போனதில்லை என்கிறார். இவரை நம்பி இவ்வளவு பெரிய லாரியை எப்படி ஒப்படைத்தார்கள்? (நான் என்ன சொல்றேன்னா “அண்ணாமலை ஜி அதெல்லாம் வேண்டாம், பேசாம வெண்பாவை முதல்வர் ஆக்கிடுங்க ஜி”.)
 
வெண்பா உடனே “எனக்கு பாதுகாப்பு மட்டும் கொடுங்க” என்கிறார் உஷாராக. உடனே நம் சிங்கம் “இந்த வீடியோவுக்குப் பிறகு யாராவது உங்களை அட்டாக் பண்ணினா I will ruthlessly go after them” என்கிறார். ஆனால் அடுத்த நாளே தன் வசமுள்ள காணொலிகளில் தோன்றும் பாஜக மகளிரணிப் பெண்களின் மார்ப் செய்யப்பட்ட முகங்களை ஒரிஜினலுக்கு மாற்றிடும் முயற்சியில் அண்ணாமலை தீவிரமாக இருப்பதாக தெரிய வந்ததாக வெண்பா சொல்லுகிறார். இதுதான் பெண்களை நீங்க பாதுகாக்கும் லட்சணமா?
 
மதன், வெண்பாவிடம் டீலிங் நடந்து கொண்டிருக்கும் போது தன்னைப் பற்றி தமிழிசையிடம் போட்டுக்கொடுத்த பிரசாத் என்பவருடைய கை,கால்களை கடவுள் அதற்கு அடுத்த நாளே உடைத்து விட்டதாகவும், அவரை தான் பூங்கொத்து, மலர்கள் சகிதம் போய்ப் பார்த்ததாகவும் மதனுக்கு ஒரு மறைமுக மிரட்டலை செய்கிறார் அண்ணாமலை. “நீங்க எம்.எல்.ஏ ஆக்குவேங்குறீங்க, கொஞ்ச நேரத்தில் கைகாலை உடைப்பேங்குறீங்க, இதென்ன தெலுங்கு சினிமாவா மிஸ்டர் மலை? தெலுங்கு சினிமா வில்லன்கள் கூட தன் பேச்சு பதிவாகிறது என உஷாராக இருப்பார்களே!” 
 
அண்ணாமலையிடம் அடிப்படையாக ஒரு பிரச்சனை உள்ளது: அவர் தனக்கு என ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டால் அதைத் தவிர வேறெதையும் அவரால் யோசிக்க முடிவதில்லை. மனம் அது வேண்டும், அது வேண்டும் என பரிதவிக்கிறது. அதனால் தான் நம்பும்படியாக, கோர்வையாக பேசக் கூட வரவில்லை. ஒன்று சொல்லி விட்டு அடுத்த நொடியே அதற்கு மாறாக இன்னொன்றை சொல்லுகிறார். தொடர்ந்து பதற்றத்துக்கு மேல் பதற்றம். என் கணிப்பு சரியென்றால் அவருக்கு ஏதோ மனப்பிரச்சனை இருக்கிறது. நீங்கள் இப்போது இருந்து / நின்று கொண்டிருக்கிற இடத்தில் இருந்து ஒரு பொருள் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. அதை எடுக்கணும், எடுக்கணும் என்று மட்டுமே யோசிங்க. எப்படி எடுக்கணும் என்றெல்லாம் யோசிக்காதீங்க. “அது வேணும்” என்பதையே உங்க மனமாக உருமாற்றுங்க. போகிற வழியில் கிடக்கும் நாற்காலி கண்ணுக்குப் படாது. தரையில் எண்ணெய் சிந்தியிருந்தால் கவனிக்க முடியாது. அதாவது situational awareness சுத்தமாகப் போய் விடும். புத்திக்கும் பேச்சுக்கும் தொடர்பு அறுந்து விடும். அப்படியே நடங்க. நிச்சயமா விழுந்து விடுவீர்கள். அண்ணாமலை ஒவ்வொரு விசயத்தையும் இப்படித்தான் டீல் பண்ணுகிறார். அவருடைய ஊடக சந்திப்புகளில் இந்த மனப்போக்கை வெளிப்படையாகவே பார்க்கலாம், அது அவருடைய ஊடக சாமர்த்தியமின்மை, அனுபவமின்மை என நினைத்தேன். இல்லை, உண்மை என்னவென்றால் அவர் மனிதர்களிடம் சும்மா பேசும் போதே நாக்கு உதறுகிறது. எதிர்காலத்தில் எப்படியெல்லாம் மக்கள் காய் நகர்த்துவார்கள், அவர்களிடம் தன்னை எப்படி முனைக்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. பேசிக்கொண்டிருக்கும் போதே மானங்கெட்ட அந்த மைண்ட் வாய்ஸ் வேறு அவர் சொல்லைக் கேட்காமல் தத்தித்தத்தி போய் எங்காவது விழுந்து அடிவாங்குகிறது.
 
தமிழக பாஜகவை நிர்வகிப்பதில் அண்ணாமலை மிக மோசமான தேர்வு. அது மட்டுமல்ல, இவரை சந்தோஷ், நட்டா, ஷா கூட்டணி இப்படியே வளர விட்டால், பாஜகவின் தேசியத் தலைவர்களையும் இப்படி பாலியல் ஹனி டிராப்பிங் முறையில் மிரட்டிப் பணிய வைக்க முயல்வார். மதன் சொல்வதைப் போல “சின்னப்பிள்ளை ஆட்டம்” ஆடுகிறார் அவர். மிஸ்டர் நட்டா, பேசாமல் தமிழிசையையே மீண்டும் தமிழக பாஜகவின் தலைவர் ஆக்குங்க. என்னதான் மக்கள் அவரை பகடி பண்ணினாலும், அவர் மீது எல்லாருக்கும் நல்ல அபிப்ராயம் உண்டு. மக்களை அனுசரித்து செல்பவர். ஒருவேளை இந்த பாஜக ஜல்சா பிம்பத்தை களையவும் அவர் உதவலாம். 
 
இல்லாவிட்டால், அண்ணாமலையை அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர விட்டால், ஆடிருந்த இடத்தில் ஆட்டுப்புழுக்கை கூட எஞ்சாது!
 
http://thiruttusavi.blogspot.com/2021/08/blog-post_26.html

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆடியோ வீடியோ எல்லாம் கண்ணிலையும் , காதிலையும் காட்டுங்கப்பா இந்த கொழந்தைக்கு  

ஓடியோ முக்கியம் முக்கியம் முக்கியம் கைப்பாசை , கால் பாசையெல்லாம் வேணாம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இலங்கையிலும் இந்தியாவிலும் நம்பத்தகுந்த ஒரு அரசியல்வாதியை சொல்ல முடியுமா கோஷான்? 🤣

நம்ப தகுந்தது - என்பது வேறு, நம்பகதன்மை என்பது வேறு.

நாம் அந்நோனியமாக பழகுவோரைத்தான் நம்பதகுந்தவர்கள் என்போம். பொது மனிதர்களை அல்ல.

நம்பக தன்மை என்பது, குறிப்பாக அரசியலில், சொல்லுக்கும் செயலுக்கும்மான இடைவெளி, மற்றது முன்னுக்கு பின் முரணாக மாற்றி, மாற்றி கதைப்பதில் இருக்கிறது. இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாது.

மக்கள் தேர்தலில் சொல்லுவார்கள்.

உதாரணதுக்கு, கருணாநிதி, சாயி பாபாவை சந்தித்தார். வைஸ்ணவ குருக்கள் அவரை சூழ நின்று - சமஸ்கிரதத்தில் மந்திரம் ஓதினார்கள். 

அதே போல் தமிழில் அர்சனை வேண்டும், குழ முழுக்கு வேணும் என்று முழங்கிய சீமான் மகனுக்கு சமஸ்கிரதத்தில் மந்திரம் ஓதி காது குத்தினார்.

மேற்பார்வைக்கு ரெண்டும் ஒன்றுதானே? என்றே தோன்றும்.

ஆனால் இரெண்டுக்கும் கொடுக்க பட்ட விளக்கத்தை பார்த்தால் - ஏன் இரெண்டையும் இரு வேறு விதமாக மக்கள் பார்க்கிறார்கள் என்பது புரியும்.

கருணாநிதி கொடுத்த விளக்கம் - அவர்களிடம் நான் போகவில்லை. கும்பிடவும் இல்லை. அவர்கள் என்னை வந்து சந்தித்த போது ஒரு குறித்த காரணத்துக்கு சந்தித்தேன், மந்திரம் ஓத அனுமதித்தேன்.

சீமான் விளக்கமே கொடுக்காமல் ஓடி ஒளிந்து விட, பாவம் இடுமாபவனம் கார்த்தி வந்து “ஐயரை நல்லா திட்டி விட்டுத்தான் வந்தோம்” என்று ஒரு விளக்கம் கொடுத்து, உள்ளதையும் கெடுத்தார்.

இது ஒரு சிறு உதாரணம்தான். 

உங்களை போலவே, எனக்கும் கருணாநிதி மீது செம கடுப்புத்தான். வைரமுத்து திரியில் எழுதி இருந்தேன்.

ஈழக் கண்ணாடியை போட்டு கொண்டு நாமும், சில இலட்சம் நாம் தமிழர் வாகாளர்களும் பார்ப்பது போல அன்றி, பெரும்பான்மையான தமிழக மக்களின் கருணாநிதி பற்றிய பார்வை, அவர் மீதான நம்பகதன்மை வேறு விதமானது (அவரின் ஊடல், ஊழல் எல்லாத்துடனுமே).

இந்த உண்மை புரியாதவரை. 

நமக்கு தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகள் எப்போதும் ஒரு துன்ப அதிர்சியாகவே அமைய போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நீங்கள் தலையில் தூக்கி வைக்க மறுத்தவர்கள் எப்படியெல்லாம் துரோகி, சிறி லங்கா சூக்காட்டி போன்ற பட்டங்களால் தூசிக்க பட்டார்கள் என்று வாசிக்கவில்லைப் போல! - வாசித்தால் அது கட்டாயப் படுத்தலை விட சீரியசான மிரட்டல் என்பது விளங்கக் கூடும். பூட்டப் பட்ட திரிகளில் போய் வாசிக்கலாம்!

இன்னொரு மிகக் கேவலமான விடயமும் நடந்தது: தாயகத்தில் போராளிகளாக இருந்து உயிர்மீண்டு வந்த சக கள உறவுகளையே சீமான் என்ற சராசரி தமிழக அரசியல் வாதிக்காக பொய்யர்களாக சித்திரிக்க முயன்றனர்! எல்லாம் றெக்கோர்டில் இருக்கிறது - நீங்கள் பார்க்க வேண்டியது மட்டும் தான் பாக்கி!😎

ஆதார‌த்தை காட்ட‌வும்
க‌ற்ப‌னையில் எழுத‌ என‌க்கும் தெரியும்...........பொய் புர‌ளிய‌ கில‌ப்ப‌ ப‌ல‌ நூறு பேர் கூலிக்கு வேலை செய்யின‌ம்...........நாம் அறிந்திராத‌ ப‌ல‌ வ‌த‌ந்திக‌ள் உங்க‌ளுக்கு தெரிவ‌தில் ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌ ஒன்றும் இல்லை

2009ப‌துக்கு முத‌ல் உங்க‌ளில் எழுத்து யாழ் க‌ள‌த்தில் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும்.........உங்க‌ளின் இர‌ட்டை வேட‌த்தை பார்த்து அருவ‌ருக்கிறேன் முற்றிலும் வெறுக்கிறேன் 😕

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

உலகத்தையே விரல் நுனியில் வைத்திருக்கும் பையா, ஆதாரங்கள் யாழில் இருக்கென்று எழுதியிருக்கிறேனே மேலே👆? தேடவும் என் உதவி தேவையா? மூடிய திரிகளின் கருத்துகளை இங்கே காவி வந்து நான் விதி மீற முடியாது, நீங்க தான் போய்ப் பார்க்க வேணும்!

அப்படியே உறுப்பினர்களுக்கு மட்டும் தெரியக்  கூடியவாறு இருக்கிற நடவடிக்கைகள் 2020 திரியையும் பாருங்க! -அங்கே இருக்கு ஏன் பூட்டென்று!🔒

என்னுடைய நிலைப்பாட்டு மாற்றம் data-driven! என்ன data என்று பல தடவை எழுதியாயிற்று! உங்கள் அன்பை யாசித்து இங்கே எழுத வேண்டிய அளவுக்கு முக்கியமென நினைக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நீங்கள் தலையில் தூக்கி வைக்க மறுத்தவர்கள் எப்படியெல்லாம் துரோகி, சிறி லங்கா சூக்காட்டி போன்ற பட்டங்களால் தூசிக்க பட்டார்கள் என்று வாசிக்கவில்லைப் போல! - வாசித்தால் அது கட்டாயப் படுத்தலை விட சீரியசான மிரட்டல் என்பது விளங்கக் கூடும். பூட்டப் பட்ட திரிகளில் போய் வாசிக்கலாம்!

இன்னொரு மிகக் கேவலமான விடயமும் நடந்தது: தாயகத்தில் போராளிகளாக இருந்து உயிர்மீண்டு வந்த சக கள உறவுகளையே சீமான் என்ற சராசரி தமிழக அரசியல் வாதிக்காக பொய்யர்களாக சித்திரிக்க முயன்றனர்! எல்லாம் றெக்கோர்டில் இருக்கிறது - நீங்கள் பார்க்க வேண்டியது மட்டும் தான் பாக்கி!😎

2009க்கு பிற‌க்கு போராளிக‌ளுக்கும் எம் இன‌த்துக்கும் நீங்க‌ள் செய்த‌ ந‌ல்ல‌ விடைய‌ம் ஒன்றை சொல்லுங்க‌ளேன்............வெறும‌ன‌ம் யாழில் வ‌ந்து இல‌வ‌ச அறிவுரை சொல்லுறேன் என்ற‌ பெட‌ரில் வ‌த‌ந்தியை ப‌ர‌ப்ப‌ வேண்டாம்...........

சீமான் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ரா இருந்துட்டு போக‌ட்டும் எம் மாவீர‌ர்க‌ண்ட‌ க‌னவை ந‌ன‌வாக்க‌ இதுவ‌ரை என்ன‌ செய்தீர்க‌ள்

ம‌ற்ற‌ ஒரு சில‌ர் போல் இதுக்கை புலி புலி புலி என்று எழுதி போட்டு வெளியில் போய் ந‌ரி வேலை செய்யும் ஆட்க‌ளில் நீங்க‌ளும் உண்டா..........

யாழில் இருக்கும் கருத்துக்களையே தேடப் பஞ்சியென்றால் உடனே ட்ரக்கை மாற்றும் வேலை போல?😎

 திரியை பையன் இப்படித் திசை மாற்ற, பிறகு திரி பூட்டப் பட - ஜஸ்ரின் திரியைப் பூட்டி விட்டார் என்று ஒரு நாலுபேர் சேர்ந்து ஒப்பாரி வைப்பரென நினைக்கிறேன்.  

எனவே, திசைமாற்றாதீர்கள் பையா. போய் நான் சொன்னவை வசந்தியா இல்லை பூந்தியா என்பதை உறுதி செய்யுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்!🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

உலகத்தையே விரல் நுனியில் வைத்திருக்கும் பையா, ஆதாரங்கள் யாழில் இருக்கென்று எழுதியிருக்கிறேனே மேலே👆? தேடவும் என் உதவி தேவையா? மூடிய திரிகளின் கருத்துகளை இங்கே காவி வந்து நான் விதி மீற முடியாது, நீங்க தான் போய்ப் பார்க்க வேணும்!

அப்படியே உறுப்பினர்களுக்கு மட்டும் தெரியக்  கூடியவாறு இருக்கிற நடவடிக்கைகள் 2020 திரியையும் பாருங்க! -அங்கே இருக்கு ஏன் பூட்டென்று!🔒

என்னுடைய நிலைப்பாட்டு மாற்றம் data-driven! என்ன data என்று பல தடவை எழுதியாயிற்று! உங்கள் அன்பை யாசித்து இங்கே எழுத வேண்டிய அளவுக்கு முக்கியமென நினைக்கவில்லை!

சீமானை சுற்றி உள்ள‌ ப‌ல‌ நூறு பேர் கேனைய‌ல் அவ‌ர்க‌ளை விட‌ அதி புத்துசாலி நீங்க‌ள் ஹா ஹா 

உங்க‌ளுக்கு ப‌தில் அளிப்ப‌தில் வீனா போற‌து என் நேர‌மும் தான்............

ஒரு இல‌ச்சிய‌ வீர‌ன் த‌ன‌து கொள்கை ந‌ன‌வாகும் வ‌ரை பொது வெளியில் த‌ங்க‌ளின் முக‌த்தையே காட்ட‌ மாட்டான்...........ஆனால் நீங்க‌ள்

எங்க‌ளுக்கும் ப‌ல‌ர் மேல் ப‌ல‌த்த‌ ச‌ந்தேக‌ம் உண்டு நீங்க‌ள் அண்ண‌ன் சீமான் மேல் ச‌ந்தேக‌ ப‌டுற‌து போல்..........நாங்க‌ளும் ஆதார‌த்தோடு ப‌ல‌தை எழுதுவோம் , எழுதுவ‌த‌ற்கான‌ இட‌ம் யாழ்க‌ள‌ம் இல்லை............
 
பதில் கீழே!

3 minutes ago, Justin said:

எனவே, திசைமாற்றாதீர்கள் பையா. போய் நான் சொன்னவை வசந்தியா இல்லை பூந்தியா என்பதை உறுதி செய்யுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்!🙏

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

யாழில் இருக்கும் கருத்துக்களையே தேடப் பஞ்சியென்றால் உடனே ட்ரக்கை மாற்றும் வேலை போல?😎

 திரியை பையன் இப்படித் திசை மாற்ற, பிறகு திரி பூட்டப் பட - ஜஸ்ரின் திரியைப் பூட்டி விட்டார் என்று ஒரு நாலுபேர் சேர்ந்து ஒப்பாரி வைப்பரென நினைக்கிறேன்.  

எனவே, திசைமாற்றாதீர்கள் பையா. போய் நான் சொன்னவை வசந்தியா இல்லை பூந்தியா என்பதை உறுதி செய்யுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்!🙏

இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்குன‌ம் , அந்த‌ குப்பைகள் எழுதுவ‌தை உங்க‌ளை மாதிரி நிர‌ம் மாறும் ம‌னித‌ர்க‌ள் நேர‌ம் ஒதுக்கி வாசிப்பின‌ம் , 

சீமான் மேல் ப‌ல‌ நூறு வ‌ழ‌க்குக‌ள் இருக்கு அது எல்லாம்  எத‌ற்காக‌ வ‌ந்த‌து யாரால் வ‌ந்த‌து என்று கொஞ்ச‌ம் தெரிந்து வைத்து விட்டு எழுதுங்கோ

றோவின் ஆள் சீமான் என்றால் சீமான் ஏன் கோட்டுக்கு அடிக்க‌டி போய் வ‌ரனும் 

சீமான் மீது ஒரு கும்ப‌ல் சேறு அடிக்க‌ நினைச்சா அவ‌ங்க‌ள் எப்ப‌டி வேனும் என்றாலும் அடிப்பாங்க‌ள் 😁😀

6 minutes ago, Justin said:

பதில் கீழே!

பாட‌ம் எடுத்த‌து போதும் கில‌ம்புங்க‌ன்ன‌

உந்த‌ விளையாட்டு என்னிட‌ம் எடுப‌டாது

நான் ந‌ச்ச‌ன்ன‌ ஒரு கேள்வி கேட்டேன் அத‌ற்கு ப‌தில் இல்லை , 

தேவை இல்லாம‌ ஏதோ த‌வாறான‌ பாதைக்கு வ‌ழி காட்டுறீங்க‌ள்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்குன‌ம் , அந்த‌ குப்பைகள் எழுதுவ‌தை உங்க‌ளை மாதிரி நிர‌ம் மாறும் ம‌னித‌ர்க‌ள் நேர‌ம் ஒதுக்கி வாசிப்பின‌ம் , 

சீமான் மேல் ப‌ல‌ நூறு வ‌ழ‌க்குக‌ள் இருக்கு அது எல்லாம்  எத‌ற்காக‌ வ‌ந்த‌து யாரால் வ‌ந்த‌து என்று கொஞ்ச‌ம் தெரிந்து வைத்து விட்டு எழுதுங்கோ

றோவின் ஆள் சீமான் என்றால் சீமான் ஏன் கோட்டுக்கு அடிக்க‌டி போய் வ‌ரனும் 

சீமான் மீது ஒரு கும்ப‌ல் சேறு அடிக்க‌ நினைச்சா அவ‌ங்க‌ள் எப்ப‌டி வேனும் என்றாலும் அடிப்பாங்க‌ள் 😁😀

பையா, கோவிக்கக் கூடாது சொன்னால்! நான் நேரம் விரயம் செய்ய விரும்பாத சக உறுப்பினர்களில் நீங்களும் ஒருவர்!-  எதை யாழில் தேடியறியச் சொன்னேன் என்று கூடப் புரிய முடியாத தமிழ் புரிதல் உங்களுடையது!-பரவாயில்லை, புரிகிற போது தேடுங்கள். திரியைப் பூட்டாமல் நகருங்கள்! 🙏

ஐயையோ, பையன் "நச்" சென்று கேட்ட கேள்விக்கு எனக்குப் பதில் வரலியே? யாராவது உதவுங்கப்பூ?🤣

Edited by Justin
மேலே அப்டேற் செய்த பதிவிற்கு பதில் இணைக்கப் பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

பையா, கோவிக்கக் கூடாது சொன்னால்! நான் நேரம் விரயம் செய்ய விரும்பாத சக உறுப்பினர்களில் நீங்களும் ஒருவர்!-  எதை யாழில் தேடியறியச் சொன்னேன் என்று கூடப் புரிய முடியாத தமிழ் புரிதல் உங்களுடையது!-பரவாயில்லை, புரிகிற போது தேடுங்கள். திரியைப் பூட்டாமல் நகருங்கள்! 🙏

உங்க‌ளுட‌ன் ஒட்டி உற‌வாட‌ விரும்பும் உற‌வு நான் இல்லை அதை நினைவில் வைத்து கொள்ளுங்கோ ,

உங்க‌ளின் ட‌வுள் கேம்முக்கு தான் , நீண்ட‌ ப‌திவு எழுத‌ வேண்டி இருந்த‌து  அதாவ‌து வ‌த‌ந்தி அவ‌தூறுக‌ளுக்கு ?

நீங்க‌ள் இதுக்கை எழுதின‌துக்கு அண்ண‌ன் சீமான் காணொளி மூல‌ம் ப‌ல‌ருக்கு விள‌க்க‌ம் அளித்து விட்டார் நேர‌ம் இருந்தா யூடுப்பை த‌ட்டி பார்க்க‌வும்

அவியிற‌ மீனை துடிக்குது என்று சொல்ப‌வ‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருத்த‌ர்

ச‌ரி கில‌ம்புங்கோ , என‌க்கு செய்ய‌ வேலை கொஞ்ச‌ம் இருக்கு 😕

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ரோவின் ஆள் என்று சொல்லும் கூட்ட‌ம் பார்க்க‌ வேண்டிய‌ காணொளி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணொளி இணைப்பிற்கு... நன்றி பையன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.