Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2021 at 15:37, Nathamuni said:

சாதியம் ஈழத்தில், புலிகள் காலத்தில் அடக்கப்படவும் இல்லை. ஒடுக்கப்படவும் இல்லை.

நானிருந்த ஊரிலும், மற்றும் அயல் கிராமங்களிலும்  நிலைமை அப்படி இருக்கவில்லை நாதம்.
விடுதலை புலிகள் மிகக் கவனமாக இந்த சிக்கல்களை கலைந்தார்கள். (சாதியம் சார்ந்த சச்சரவுகளை நிதானமாக கையாண்டு "சாதியம் பார்த்து அயலவனை ஒடுக்குவது தவறு " என்ற ஒரு புரிதலை கொண்டு வந்திருந்தார்கள்) 

  • Replies 132
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

நானிருந்த ஊரிலும், மற்றும் அயல் கிராமங்களிலும்  நிலைமை அப்படி இருக்கவில்லை நாதம்.
விடுதலை புலிகள் மிகக் கவனமாக இந்த சிக்கல்களை கலைந்தார்கள். (சாதியம் சார்ந்த சச்சரவுகளை நிதானமாக கையாண்டு "சாதியம் பார்த்து அயலவனை ஒடுக்குவது தவறு " என்ற ஒரு புரிதலை கொண்டு வந்திருந்தார்கள்) 

வர்ணத்தார்,

நன்றி, இந்த வகையான கருத்தாடலை தானே எதிர்பார்கிறேன்.

ஆனால், நான் சொல்வதை, விளங்கிக் கொள்ளாமல், பெரிய வித்துவான்கள் போல தனிமனித தாக்குதலில் அல்லவா முனைப்பு காட்டுகிறார்கள்.

நந்தன் அண்ணன் கருத்தையும் கவனித்தேன்.... அவருக்காகவும் மிகவும் கவலைப்பட்டேன்.

புலிகள் முயன்றார்கள், கருத்தியலை விதைத்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனாலும் சாதியத்தை அடக்கவோ, ஒடுக்கவோ முடியவில்லையே என்னும் ஆதங்கத்தை வெளிப்படுத்த.... அவர்கள் தமக்கு புரிந்த வகையில் கருத்துருவாக்கம் செய்கிறார்கள்.

எனது ஊரில், 1995 பின்னர் ஈபிடிபி காலத்தில், அவர்களது உறப்பினர்கள், அவர்களுக்கு எதிரான சாதிய அடக்குமுறைக்கு எதிராக புலிகள் காலத்தில் போராடிய முன்னாள் புலி அனுதாபி ஒருவரை அடித்தே கொலை செய்தார்கள்.

காரணம் புலி அனுதாபி என்பதற்காக அல்ல.... என்று புரிந்தது.

அன்றே இந்த சாதியம் குறித்த மிகுந்த மனக்கவலை உண்டானது.

கொலை செய்த கூட்டத்தின் தலைவர் இப்போது இருக்கும் நாடும் அறிவேன். அவரது குடும்பம் பின்னர் இறந்தவர் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதும் நடந்தது.

அதாவது, யாருக்காக புலிகள் முயன்றார்களோ, அதன் ரிவேசிங் நடந்ததாக உணர்ந்தேன்.

இது ஒன்றல்ல, பல ஊரெல்லாம் நடந்தது. இராணுவத்தின் உளவுத்துறை செய்த வேலை என்று கதை விடடாலும், ஈபிடிபி வேலை என்றே மக்கள் சொல்லிக்கொண்டனர்.

இதுவே எனது விரக்தி. இதை சொல்ல தயங்கினேன் என்பதுவும் உண்மை.

எனது பார்வை தவறாகவும் இருக்கலாம். சாதியம் மிகவும் சென்சிற்றிவ் விடயம் என்பதையும் அறிவேன்.

புரிந்தும், இங்கே, புரியாதது போல கதை விடும் ஜஸ்டின் அய்யாவிற்கு சொல்வதுக்கு எதுவும் இல்லை.

***
இன்னும் ஒருவர்.... குறுக்கு, நெடுக்கா குட்டிக்கரணம் அடிக்கிறார்.... அவரது பதிவுகளை பார்ப்பதே இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

large.A900F710-0063-4436-9168-608407B98A76.jpeg.886cff1bb7612834c3c9267f95d2c905.jpeg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, Nathamuni said:

***
இன்னும் ஒருவர்.... குறுக்கு, நெடுக்கா குட்டிக்கரணம் அடிக்கிறார்.... அவரது பதிவுகளை பார்ப்பதே இல்லை.

ஆராய் இருக்கும்? 😷

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்

🤣🤣🤣எனது பதிவுகளை பார்க்காமல் எனது பதிவுகளில் சொன்னவற்றுக்கு பதில் எழுதும் ஞான திருஸ்டியை கண்டு நான் வியக்கிறேன்🤣.

இதை கூட வாசிப்பவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற முன்யோசனை இல்லை🤦‍♂️🤣.

28 minutes ago, குமாரசாமி said:

ஆராய் இருக்கும்? 😷

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

இப்ப கோசானின் இந்த பதிவுக்கு பதில் எழுத கை துறுதுறுக்கும். ஆனால் எழுத முடியாது 🤣

#முட்டுச்சந்து

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

ஆராய் இருக்கும்? 😷

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

பதிவுகள் இரத்தினச் சுருக்கமாக இருக்கவேண்டும்.

நம்பர் அடித்து, பத்தி, பத்தியாக, படைத்து வைத்தால், பார்த்தவுடன்..... கொட்டாவி வரும்.....

அதனால் பார்ப்பதில்லை. 😴

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

பதிவுகள் இரத்தினச் சுருக்கமாக இருக்கவேண்டும்.

நம்பர் அடித்து, பத்தி, பத்தியாக, படைத்து வைத்தால், பார்த்தவுடன்..... கொட்டாவி வரும்.....

அதனால் பார்ப்பதில்லை. 😴

 எப்போதும் கிசு கிசுக்களை, துணுக்குகளை படிப்பதால் - சேர்ந்தால் போல் ஒரு பக்கத்தை படித்தால் - மூளை களைத்து விடுமாம். கொட்டாவி என்பது மூளை களைத்து விட்டது, ஒக்சிசன் அதிகம் தேவைபடுவதின் அறிகுறியாம்.

முதலில் ஒரு பத்து வரியை சேர்ந்தால் போல் படியுங்கள். பிறகு படி படியாக ஒரு பந்தியளவில் வாசித்து, கிரகிக்கலாம்.

பிறகு பந்தியை ஒரு பக்கமாக கூட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி யூ ரியூப் வீடியோ வடிவில் தான் நாதத்திற்குப் பதில்! ஒரு கிற் வாங்கத் தான் இருக்கு!  😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இனி யூ ரியூப் வீடியோ வடிவில் தான் நாதத்திற்குப் பதில்! ஒரு கிற் வாங்கத் தான் இருக்கு!  😂

உங்கட பதிலே வேணாம் அய்யா.....

நரிகளும், நாய்களும்.... உங்களிடம் ஒரு முறை வந்தால், தலை தெறிக்க ஓட்டம் பிடிக்குமே....

🤣

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்பது கருவாட்டுச் சாம்பார் | மணியரசன் | தமிழரா ? திராவிடரா ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்கட பதிலே வேணாம் அய்யா.....

நரிகளும், நாய்களும்.... உங்களிடம் ஒரு முறை வந்தால், தலை தெறிக்க ஓட்டம் பிடிக்குமே....

🤣

"உன்னைப் புறக்கணிக்கிறேன்" என்று பலர் சொல்லும் போது சொல்லும் அதே disclaimer ஐ உங்களுக்கும் தாறன்😎: "பொது வெளியில் எழுதும் கருத்துகள் எல்லாவற்றிற்கும் ஜஸ்ரின் விரும்பினால் பதில் தரும் உரிமையுண்டு! எட்ட நின்று ஜஸ்ரின் பற்றி வேறு யாருடனும் நொட்டல் செய்தாலும் ஜஸ்ரின் நேரே பதில் சொல்லும் உரிமையுண்டு". குட் லக்!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

குத்துகரணம் அடிப்பவர் தமிழாவது பரவாயில்லை.... மினக்கட்டு வாசித்தால் புரியும்....

உங்களது தமிழ்..... திருக்குறள் போல, யாரையாவது பொழிப்புரை எழுத வைத்தே புரிய வேண்டும்....

தமிழில வித்துவான்..... போல கிடக்குது.... ஆனால்.... நம்மள மாதிரி படிப்பறிவில்லா ஆக்களுக்கு விளங்கிற மாதிரி எழுதப் பாருங்கோ....

இன்னும் ஒரு விசயம்..... அடுத்தவர் பதிவுகளை மதித்தால்.... நீஙகளும் விரும்பப்படுவீர்கள்....

நான் எழுதுவது தான் பதிவு....அடுத்தவன் பதிவு குப்பை என்ற ரீதியில் நக்கல் செய்தால் விரும்பப்பட மாட்டீர்கள்.

நல் வாழ்துக்கள்..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Nathamuni said:

இன்னும் ஒரு விசயம்..... அடுத்தவர் பதிவுகளை மதித்தால்.... நீஙகளும் விரும்பப்படுவீர்கள்....

நான் எழுதுவது தான் பதிவு....அடுத்தவன் பதிவு குப்பை என்ற ரீதியில் நக்கல் செய்தால் விரும்பப்பட மாட்டீர்கள்.

நல் வாழ்துக்கள்..

உண்மையான கருத்து.

யாராக இருந்தாலும் மரியாதை குடுத்து மரியாதை வாங்கு என்ற பக்குவம் அறவே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உண்மையான கருத்து.

யாராக இருந்தாலும் மரியாதை குடுத்து மரியாதை வாங்கு என்ற பக்குவம் அறவே இல்லை. 

மிக சிறப்பாக, தனக்கு தெரிந்த விடயங்களை எழுதுவார்.

ஆனால், அடுத்தவர்கள் எழுதுவதை, ஒரு, நக்கல், நய்யாண்டியுடன் சீண்டுவதால், ஒரு நட்புரிமை பாராட்டி பேச முடியாத ஒருவராக தன்னை வைத்துக்கொண்டுள்ளார்.

https://youtu.be/JpZjTDDtLZw

திராவிடம் பற்றிய தெளிவான விளக்கம் இந்தக் காணொளி யில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, narathar said:

https://youtu.be/JpZjTDDtLZw

திராவிடம் பற்றிய தெளிவான விளக்கம் இந்தக் காணொளி யில் உள்ளது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நன்றி.

மிகவும் விளக்கமான ஒரு இணைப்பு. நன்றி கோசான்….!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புங்கையூரன் said:

மிகவும் விளக்கமான ஒரு இணைப்பு. நன்றி கோசான்….!

புங்கை…. அந்த இணைப்பை, இணைத்தது நாரதர்.  கோசான் அல்ல. 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, narathar said:

https://youtu.be/JpZjTDDtLZw

திராவிடம் பற்றிய தெளிவான விளக்கம் இந்தக் காணொளி யில் உள்ளது.

நன்றி…! நாரதர்..!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புங்கையூரன் said:

மிகவும் விளக்கமான ஒரு இணைப்பு. நன்றி கோசான்….!

எல்லா புகழும் நாரதருக்கே.

நன்றி அண்ணா. 

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாடிய எல்லோருக்கும் நன்றி...

ஒரு சிறு குறிப்புடன் இத்திரியில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறேன்.

யாரும், தனிப்பட்ட ரீதியில் எடுக்காமல், என் மீது சேற்றை வாரி அடிக்காமல் உங்கள் சிந்தனைக்கு மட்டுமே இதனை சொல்ல விரும்புகிறேன்.

சாதியம் குறித்து சிறுவட்டத்தினை விட்டு பெரிய வட்டத்தினுள் நின்று பார்த்தால், பல விடயங்கள் புரியுக்கூடும்.

தமிழகத்தில் திராவிடத்தை, இலங்கையில் சிங்களத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.

தமிழ்தேசிய வாதிகள், தமிழர்களை சாதியாக பிரித்து வெட்டியாடுவதன் மூலம் பிறர், தமிழரை, தமிழகத்தை ஆள்வதாக சொல்கிறார்கள்.

அப்படியே இலங்கை வாருங்கள்.

சிங்களம், தமிழர் சாதியம் குறித்து சொல்வதை, பிரித்தாள செய்யும் நுண்ணிய சூழ்ச்சிகளை கவனியுங்கள். இவ் வகையில் சரத் வீரசேகர போன்றோர் கருத்துக்கள் முக்கியமானவை.

பிரபாகரன், சாதிய சமூக நிலைக்கு நேர் எதி்ர் நிலையில் இருப்பவர் ஈபிடிபி தலைவர் தேவானந்தா.

புலிகள் சாதியத்துக்கு எதிராக செய்த வேலைக்கு நேர் எதிராக தேவானந்தாவை வைத்து, இராணுவ உளவுத்துறை என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.

தேவானந்தாவின் இயக்கத்தினர், எந்த சமூக மட்டத்தில் இருந்து சேர்கப்பட்டு, என்ன செய்து முடித்துள்ளனர் என்றும் மீண்டும் சாதிய வேறுபாடுகள் குறித்த பேச்சுகள் வந்தமைக்கு காரணம் என்ன என்று யோசித்தால், தேவானந்தா ஊடாக சிங்களம் என்ன சாதித்துள்ளது என்று புரியக்கூடும்.

பல விடயங்களில் தெளிவுண்டாகும்.

புலிகள் சாதியத்துக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பது 1995 க்கு முந்திய வரலாறு மட்டுமே. தேவானந்தா, சிங்களம் இன்றைய கதை.

வெறுமனே திராவிடத்துக்கு ஆதரவு தருவதும், அதே போலவே இயங்கும் சிங்கள சூட்சும சூழ்ச்சிகளை புரியாமல் இருப்பதும் ஒன்று தான் என்பது எனது பார்வை.

ஆனால் இஸ்லாமிய தமிழரை, தமிழர்கள் இல்லை என்று பிரித்தாளும் சூழ்ச்சியை கச்சிதமாக செய்து முடித்ததும் சிங்களம் தான் என்பதால், எனது பார்வை சரியாகவே படுகிறது.

அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை சிங்களம் அரசியலில் கொண்டு வந்த விதத்தையும், நோக்கத்தையும் கவனியுங்கள்.

இது தவறாகவும் கூட இருக்கலாம்.

நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

முற்றிலும் தவறான பார்வை.

உங்களுக்கு தமிழக அரசியலும், சாதிய கட்டமைப்பும் துண்டற புரியவில்லை.

அதை போலவே இலங்கையின் வட கிழக்கின் சாதிய கட்டமைப்பும், புலிகளின் அணுகுமுறை மட்டும் அல்ல, டக்லசின் அணுகுமுறையும் கூட புரியவும் இல்லை, இவற்றின் பாற்பட்ட அனுபவமும் இல்லை என்பதை உங்கள் பதிவு கட்டியம் கட்டி கூறுகிறது. 

இதை உங்களுக்கு விளக்க வேண்டிய தேவையோ அவசியமோ எனக்கு இல்லை. அதை கேட்க வேண்டிய தேவை உங்களுக்கும் இருக்காது. ஆகவே இதை இத்தோடு விட்டு விடுகிறேன்.

ஆனால் நீங்கள் இந்த திரியில் சொன்னது “புலிகள் சாதியத்தை அடக்கவோ ஒடுக்கவோ இல்லை, 83-2009 சாதியம் வீழ்ச்சி பாதையில் போனது போர்சூழலால், அதை புலிகள் செய்தார்கள் என்பது காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல”. 

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கடைசியாக நீங்கள் எழுதிய சடையல் பதிவுக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாதது. 

அதற்கான போதியளவு எதிர்வினை மேலே ஆற்றப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2021 at 16:44, குமாரசாமி said:

உண்மையான கருத்து.

யாராக இருந்தாலும் மரியாதை குடுத்து மரியாதை வாங்கு என்ற பக்குவம் அறவே இல்லை. 

👆மேலே உள்ளவருக்கு இந்த "பக்குவம்" அட்வைசைக் கொடுக்க தகுதியிருக்கிறதா என்பதே மில்லியன் டொலர் கேள்வி! அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை!:grin:

On 13/9/2021 at 16:54, Nathamuni said:

மிக சிறப்பாக, தனக்கு தெரிந்த விடயங்களை எழுதுவார்.

ஆனால், அடுத்தவர்கள் எழுதுவதை, ஒரு, நக்கல், நய்யாண்டியுடன் சீண்டுவதால், ஒரு நட்புரிமை பாராட்டி பேச முடியாத ஒருவராக தன்னை வைத்துக்கொண்டுள்ளார்.

இன்னொரு காரணம்: திரும்பத் திரும்ப ஒரு தரவை சிம்பிளாகச் சொன்னாலும் விளங்காமல் தொல்லை கொடுத்தாலும் எள்ளல், நக்கல் வந்து விடும்! இப்ப பாருங்கள்: மரியாதையை நான் எதிர்பார்ப்பதில்லை என்று எத்தனை தடவை எழுதி விட்டேன்? விளங்கியதா உங்களுக்கு? அப்படித் தான் நடக்கிறது பல இடங்களில்!😎

அடையாளம் பற்றிய ஒரு ஆழமான  பார்வை. அடையாளம் மாறுபடுவதும் அது ஒரு தொடர் ச்சியையும் உடையது. மாறுவதும் மாறிக் கொள்வதும் மானிட வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கிறது. தமிழ் அடையாள அரசியலை இந்தப் புரிதலுடனேயே அணுக வேண்டும். 

4 hours ago, narathar said:

அடையாளம் பற்றிய ஒரு ஆழமான  பார்வை. அடையாளம் மாறுபடுவதும் அது ஒரு தொடர் ச்சியையும் உடையது. மாறுவதும் மாறிக் கொள்வதும் மானிட வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கிறது. தமிழ் அடையாள அரசியலை இந்தப் புரிதலுடனேயே அணுக வேண்டும். 

சிறந்த விளக்கம். இணைப்புக்கு நன்றி நாரதர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.