Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான்: "திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? உங்கள் செயலை பெரியாரே விரும்ப மாட்டார்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்: "திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? உங்கள் செயலை பெரியாரே விரும்ப மாட்டார்"

23 நிமிடங்களுக்கு முன்னர்
சீமான் திராவிடம்
 
படக்குறிப்பு,

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் - நாம் தமிழர் கட்சி

திராவிடம் என்றால் தனக்கு ஏன் எரிகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சங்க இலக்கியங்களை சந்திப்பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் கூட்டு வெளியிடாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளை பகிர்ந்தனர்.

இந்த நிலையில், வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் திராவிடம் தொடர்பான அவரது எதிர் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு விரிவாக பதில் அளித்தார் சீமான். அதன் விவரம்:

தமிழக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக போட்டியிடுவோம். அது தொடர்பாக தொடர்ந்து நிர்வாகிகளுடன் விவாதித்தோம். கடந்த முறை எங்களுக்கு மக்கள் 12 சதவீத வாக்குகளை வழங்கினார்கள். இம்முறை அதை விட அதிகமான வாக்குகள் வரும் என நம்புகிறோம்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்களை விற்க தடை விதித்திருக்கிறது தமிழக அரசு அதை வரவேற்கிறோம். அதுபோல, டாஸ்மாக் மதுபான கடைகளையும் இந்த அரசு மூடுமா? தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது திமுக. ஆனால், ஏதோ இப்போதுதான் அந்த கட்சி தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆட்சிக்கு வருவது போல, தமிழ் படித்தவர்களுக்கு ஆட்சியில் முன்னுரிமை என்ற அறிவிப்பை வெளியிடுகிறது.

இதை கேட்கும்போது "ஆஹா" என இருக்கலாம். ஆனால், இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?

எங்களுடைய அண்ணன் தமிழீழ வைப்பகம் என்ற பெயரில் வங்கி நடத்தினார். அதை போலவே நாங்களும் தமிழர் வைப்பகம் என்ற சேமிப்பகத்தை நடத்தி, மிகக் குறைந்த வட்டிக்கு தொழில் முனைவோருக்கும் வேளாண் குடிமகளுக்கும் கடன் கொடுத்து உதவுவதாக கூறியிருக்கிறோம்.

ஆனால், 18 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த ஒரு கட்சி, மாநிலத்தில் கால் நூற்றாண்டாக ஆட்சியில் இருந்த கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏதோ புதிதாக ஆட்சிக்கு வந்து ஒரு திட்டத்தை அறிவிப்பது போல, தமிழ்நாடு ஸ்டேட் வங்கி ஆரம்பிப்போம் என்று ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

மறைந்த கருணாநிதியின் நினைவிடத்துக்கு ரூ. 39 கோடி நிதி செலவிட்டு சமாதி கட்டுவோம் என அரசு அறிவிக்கிறது. அது யாருடைய பணம்? ஆனால், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவோம், ஆறு கோடி ரூபாயில் தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களை பராமரிப்போம் என்கிறீர்கள்.

கள்ளுக்கடைகள், கேரளாவில் உள்ளன, ஆந்திராவில் உள்ளன, புதுச்சேரியில் கூட உள்ளன. ஆனால், ஏன் தமிழ்நாட்டில் அப்படி திறப்பதில்லை? அப்படி செய்தால் டாஸ்மாக் வியாபாரம் முடங்கி விடும். அது நடந்தால் மதுபான ஆலைகள் படுத்து விடும். அதுதான் இவர்களுக்குப் பிரச்னை.

நாங்கள் ஏன் திராவிடத்தை எதிர்க்கிறோம்?

பெரியார்

பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN

பெரியாருக்கு ரூ. 100 கோடிக்கும் மேலாக சிலை வைப்போம் என்று கூறுகிறார்கள். பெரியாரிடம் எதை கேட்டாலும் அதற்கு அவர் பணம் வாங்கும் வழக்கத்தை கொண்டவர். திருமணத்துக்கு அவர் வருவதானாலும் காசு வாங்குவார். மேடையில் அவர் பேசும்போது ஒரு முறை யாரோ ஒருவர் செருப்பை எடுத்து வீசுகிறார். அதை எடுத்து வைத்துக் கொண்டு, மற்றொரு செருப்பை என்ன செய்யப்போகிறார், அதையும் எடுத்து வீசு என்று கூறி அதையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்.

மற்றொரு முறை தன் மீது வீசப்பட்ட செருப்புகளை எல்லாம் அடுக்கி வைத்து ஜோடி அரையணா விலை என்று கூறி அவற்றை விற்று அந்த செருப்புகளை காசாக்கி பணம் சேமித்தார். அப்படி எல்லாம் பணம் சேர்த்து பல பள்ளிகள், கல்லூரிகளை ஆரம்பிக்க உதவிச் சென்றார்.

இங்கே பேருந்து கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்? அவர்கள் வறுமையில் இருக்கிறார்கள் என அர்த்தம். குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவிக்கிறீர்கள். காரணம் என்ன? அவருக்கு கைச்செலவுக்கு காசில்லை. அங்கும் வறுமை. அரசி இலவசம் என்கிறீர்கள். காரணம், அதை விலை கொடுத்து வாங்கவும் வசதியில்லை.

இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்கு சீர்திருத்தவாதி, முற்போக்குவாதி, அதற்கான தலைவர் என்று பேசப்பட்ட ஐயா பெரியாருக்கு ரூ. 100 கோடியில் சிலை வைப்பதாக பேசுவது எப்படி இருக்கிறது?

குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு ரூ. 3,000 கோடியில் மோதி சிலை வைத்ததற்கும், நீங்கள் ரூ. 100 கோடியில் பெரியாருக்கு சிலை வைப்பதாக அறிவிப்பதால் உங்களிருவருக்கும் என்ன பெரிய மாறுபாடு இருக்கிறது? தமிழ்நாட்டில் பெரியாருக்கு போதும் என்ற அளவுக்கு சிலைகள் உள்ளன. இப்படி செய்வதற்குப் பெயர்தான் பணக்கொழுப்பு, அதிகாரத் திமிரு. பெரியார் இருந்தால் கூட இப்படி செய்வதை விரும்பியிருக்க மாட்டார். இந்தக் கொடுமைகளை எல்லாம் எடுத்துரைத்தால், சிலர் திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார்கள் என்று கொதிக்கிறார்கள்.

திராவிடம் என்றால் ஏன் எங்களுக்கு எரியாது? 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆளக்கொடுத்து கணக்கிலடங்கா ஊழலை செய்து, என் நிலத்தின் வளத்தைக் கெடுத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, காடு, மலை, ஏரி, குளம் எல்லாவற்றையும் அழித்து நாசமாக்க பார்க்கும்போது ஒரு தூய தமிழ் மகனுக்கு நெஞ்சும் வயிறும் எரியாமல் என்ன செய்யும்?

திராவிடம் என்றால் எங்களுக்கும் சிறிது சொறியத்தான் செய்கிறது. ஆனால், தமிழ், தமிழர், தமிழம் என்றால் உங்களுக்குத்தான் எரிகிறது என்றார் சீமான்.

https://www.bbc.com/tamil/india-58465076

  • Replies 52
  • Views 3.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெரியார் சிலையை அரசு கட்டவில்லையாமே?

Crowd funding மூலம் ஒரு தனியார் அமைப்பு செய்கிறதாமே?

உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

 

நீங்கள்  உயர்ந்த  மனிதரைய்யா

சிலர்  இதை  பிறப்பு சம்பந்தப்படுத்தி  பார்ப்பர்

சிரிப்பர்???😂

13 minutes ago, ஏராளன் said:

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

நல்ல நகைச்சுவை. இந்த நூற்றாண்டின் நல்ல ஜோக் இது. சிரிக்க வைத்த‍த்தற்கு நன்றி ஏராளன். 2009 ம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் இருந்திருந்தால் எப்படி எல்லாம் மக்கள் பணத்தை தூய தமிழன் கொள்ளை அடித்தான் என்று தெரிந்திருக்கும்.  😂

1 hour ago, Justin said:

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

தனக்கு என்ன துன்பம் நடந்தாலும் தனது தவறுகளை மறைத்து அடுத்தவன் மீது பழி போட்டு திட்டி தீர்ப்பவன் தான் தூய தமிழன் என்பதே உண்மையான ஜதார்த்தம். 

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டார்  பணப்பெட்டிக்கு  காவல்  நின்றவர்???

ஆனால்  பலதரம் கேட்டும்  காட்டிக்கொடுக்கமாட்டார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

நல்ல நகைச்சுவை. இந்த நூற்றாண்டின் நல்ல ஜோக் இது. சிரிக்க வைத்த‍த்தற்கு நன்றி ஏராளன். 2009 ம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் இருந்திருந்தால் எப்படி எல்லாம் மக்கள் பணத்தை தூய தமிழன் கொள்ளை அடித்தான் என்று தெரிந்திருக்கும்.  😂

தனக்கு என்ன துன்பம் நடந்தாலும் தனது தவறுகளை மறைத்து அடுத்தவன் மீது பழி போட்டு திட்டி தீர்ப்பவன் தான் தூய தமிழன் என்பதே உண்மையான ஜதார்த்தம். 

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

இது  ஒருவகை  வியாதி

எவரும்  அமைதியாக  இருந்தால் சொறியச்சொல்லும்

அதுவும்  புலி சார்ந்தவர்களாக 

பார்த்து பார்த்து  சொறியணும்

ஆனால்  எங்களுக்கும் அவர்களுக்கும்  எந்த  சொந்த  பந்தமும்  இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஏராளன் said:

நான் ஆய்வாளர் இல்லை, இருந்தாலும் மனதில் பட்டதை எழுதுகிறேன். தூய தமிழ் மகன் என்றால் ஊழல் லஞ்சத்தில் ஈடுபடாதவன்.

அப்ப ஒபாமா தூய தமிழரா? (நானும் ஆய்வாளர் இல்லை! பகிடி தான்:grin:)

24 minutes ago, ஏராளன் said:

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

நீங்கள் தூய தமிழ் மகனை பற்றி கூறியதால் தூய தமிழ் மகனைப் பற்றி  பொது படையாகவே தெரிவித்தேன் ஏராளன். நான் சீமானை பற்றி கூறவில்லை. எல்லா இனத்திலும் நல்லவர்களும் உள்ளார்கள்.  ஊழல் செய்யும் திருடர்களும் உள்ளார்கள். தமிழரில் அப்படி லஞ்சம் ஊழல் செய்வோர் இல்லை என்று நீங்கள் ஜோக் அடித்த‍தால் உங்களுக்கு பதில் எழுதினேன்.

சுவிற்சர்லாந்து பொது துறை ஊழல்கள் குறைந்த நாடு. அப்படியானல் சுவிஸ் மக்கள் தூய தமிழரா?😂

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

சீமான் 2009 இல் கொள்ளை அடித்தாரா?!

தமிழனின் பின்னடைவிற்கு கூட இருந்தே குழிபறிப்போரும் காரணம்.

கூட இருந்து குழிபறித்தோரைத் தான் ருல்பென் அடிக்கடி சுட்டிக் காட்டுறார்! மக்களை ஏமாற்றிக் காசடித்து விட்டு இன்று முன்னாள் போராளிகளையும் குடும்பங்களையும் கைவிட்டு விட்டவர்கள் அவர்கள்!

ஆனால், இதை சுட்டிக் காட்டும் ருல்பெனுக்கு கிடைக்கும் வசவுகளைப் பார்த்தீர்களா? நான் கருதுவது இந்தப் போக்குத் தான் எங்களுக்கு அடுத்த நூறாண்டுகளுக்கு முன்னோக்கி நகர விடாத தடை! 

32 minutes ago, விசுகு said:

இது  ஒருவகை  வியாதி

எவரும்  அமைதியாக  இருந்தால் சொறியச்சொல்லும்

அதுவும்  புலி சார்ந்தவர்களாக 

பார்த்து பார்த்து  சொறியணும்

ஆனால்  எங்களுக்கும் அவர்களுக்கும்  எந்த  சொந்த  பந்தமும்  இல்லை

அரசியல் விமர்சனம். நடந்த, நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் உள்ளது விசுகு.  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கலாம் எவரும் உலகில் புனிதர்கள் இல்லை.  தவறு செய்தவர்கள் உங்கள் அன்பிற்கு உரியவர்கள் என்பதால் நீங்கள் கடுப்பாகிறீர்களோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அரசியல் விமர்சனம். நடந்த, நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் உள்ளது விசுகு.  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கலாம் எவரும் உலகில் புனிதர்கள் இல்லை.  தவறு செய்தவர்கள் உங்கள் அன்பிற்கு உரியவர்கள் என்பதால் நீங்கள் கடுப்பாகிறீர்களோ தெரியவில்லை. 

அரசியல் விமர்சனம் என்பது புலிகள் சார்ந்தது தானா உங்களுக்கு??

எல்லா திரிகளிலும் இதையே எழுதி எழுதி புலம்புவது எந்த வகையான விமர்சனம்??

வருவதே எப்பொழுதாவது

வந்தால் இவற்றை மணந்து பிடித்து விசத்தை கக்குவது தான் விமர்சனமோ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கலாம் எவரும் உலகில் புனிதர்கள் இல்லை

எப்போதாவது நடுநிலமையாக நின்று கருத்து தெரிவித்து இருக்கின்றீர்களா?

அதென்ன உங்களுக்கு புலிகள் மட்டும் தவறு செய்தவர்களாக தெரிகின்றாகள்? யாழ்களத்தில் எத்தனையோ திரிகளில் வேறு  இயக்கங்கள் பற்றி கடுமையான கருத்தாடல்கள் நடந்தனவே? சிங்கள இனவாதம் பற்றி காரசரமான கருத்தாடல் எல்லாம் நடந்தனவே? அங்கு எல்லாம் வர மாட்டீர்கள். அப்படியே அந்த திரிகளுக்குள் தாங்கள் சமூகமளித்தாலும் புலி சொல் கட்டாயம் இருந்தே தீரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Justin said:

அப்ப ஒபாமா தூய தமிழரா? (நானும் ஆய்வாளர் இல்லை! பகிடி தான்:grin:)

ஒபாமாவின் முழுவிபரமும் உங்கள் கூட்டாளி டொனால்ட் ரம்பை கேட்டால் சொல்லுவார்  நானும் பகிடிக்கு 😜

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

ஒபாமாவின் முழுவிபரமும் உங்கள் கூட்டாளி டொனால்ட் ரம்பை கேட்டால் சொல்லுவார்  நானும் பகிடிக்கு 😜

ஒபாமா பற்றி ட்ரம்ப் சொல்வது உண்மையாக இருக்கும்! 
பிரபாகரன் பற்றி மகிந்த குழு சொல்வது உண்மையாக இருக்கும்!

(கோபிக்காதேங்கோ, குமாரசாமி தியரியை அப்ளை பண்ணிப் பார்த்தேன்! , அவ்வளவே!) 

48 minutes ago, விசுகு said:

அரசியல் விமர்சனம் என்பது புலிகள் சார்ந்தது தானா உங்களுக்கு??

எல்லா திரிகளிலும் இதையே எழுதி எழுதி புலம்புவது எந்த வகையான விமர்சனம்??

வருவதே எப்பொழுதாவது

வந்தால் இவற்றை மணந்து பிடித்து விசத்தை கக்குவது தான் விமர்சனமோ???

இதில் விசம் எங்கே இருக்கிறது விசுகர்? அவர் சொன்ன விடயம் சுவிசில் நடந்ததா இல்லையா? ஒரு கருப்பொருள் பற்றிப் பேச்சு வரும் போது நடந்த சம்பவத்தைச் சொல்வது ஏன் இவ்வளவு பிரச்சினையாக இருக்கிறது உங்களுக்கு?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, Justin said:

பிரபாகரன் பற்றி மகிந்த குழு சொல்வது உண்மையாக இருக்கும்!

இது வரைக்கும் தமிழினத்தலைவர் எமது பிரபாகரனைப்பற்றி எந்த சிங்கள தலைவர்களும் இழிவாக பேசியது இல்லை. மாற்றாக அவர் எமக்கு எதிரியாக இருந்தாலும்  சட்டம் ஒழுங்கில் நேர்மையானவர்,பண்பானவர் என்றுதான் இன்று வரைக்கும் எமது தலைவருக்கு புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எமது ஈனத்தமிழர்கள் மட்டும் இன்றும் நாறல் வாயால்.......😎

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு இனத்தை சேர்ந்த நேர்மையான மனிதனும் ஊழல் லஞ்சம் செய்யமாட்டான் தமிழ்நாட்டு அரசியல்வாதி இனவாத கவர்ச்சிக்காக துய தமிழன்  என்ற சொல்லை பாவிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

 

"தூய தமிழ் மகன்"  என்பது....
தன்  இனத்தையும், சனத்தையும் ... என்றும், நேசிப்பவன்.

எப்ப பார்த்தாலும்... தன்  இனத்துக்கு எதிராகவும்,
புலி வாந்தி... எடுப்பவர்களும், இந்தப்  பட்டியலில் அறவே.. இல்லை. 

பிற் குறிப்பு:  உ + ம்...  சுமந்திரன்,  அவரின்..அல்லக்கைகள்...
தூய தமிழ் இனத்தில், சேர்க்கப் படவில்லை. 😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி.. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.. மோடியை நானும்தான் நக்கலடித்தேன் சிலைக்கு.. 

  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழ் மகன் என்பது....

தன் இனத்தை... நேசிக்காது... பிற இனத்தை,
தூக்கிப் பிடிப்பவனை... 

மற்ற.. நாட்டவர்களாக... இருந்தால், 
சுவரோடு... மோதி, அடித்துக்  கொன்று  இருப்பார்கள்.

தமிழினம்... மென்மையான இனம், என்ற படியால்...
போரில் தோற்று... உங்கள், நக்கல், நையாண்டிகளை...  
பார்த்துக் கொண்டு,  இருக்கின்றது.      

  • கருத்துக்கள உறவுகள்

 போராட்டம் நடந்த காலத்தில் தாயகத்தில் உள்ள பெரும்பான்மை தமிழர்கள் உயிரை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்,

புலம் பெயர் பெரும்பான்மை தமிழர்கள் பொருளை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்.

போராட்டம் முற்று பெற்ற பின்னரும் தாயகத்திலும் சரி புலம் பெயர் தேசத்திலும் சரி புலிகளை வசைபாடிய தாயக கனவுடன் வாழ்ந்த தமிழர்களே கிடையாது.

போராட்டத்துக்கு நிதி சேகரித்தவர்கள் அது முற்று பெற்ற பின்னர் அதை கையாடல் செய்தது முற்று முழுதான உண்மைதான், அதை தவறு என்று சொல்பவர்கள் அதிகம்தான், ஆனால் அவர்களை தண்டிக்க ஏது வழி? வாழும் நாடுகளின் சூழலும் சட்டமும் இடம் கொடுக்குமா?

காசு கொடுத்தவர்களே அதுபற்றி கதைத்து புண்ணியமில்லை என்று ஒதுங்கிகொண்டார்கள், தூர நின்று ஒருகாலம் வேடிக்கை பார்த்தவர்களே அதை துருவி துருவி சந்தடி சாக்கில் எம் போராட்ட அமைப்பையும் தலைமையையும் போராளிகளையும் சீண்டி போகிறார்கள்.

எண்ணெய் பூசிகொண்டு மண்ணில் புரண்டதுபோல் மண்மீட்புகாலத்தில் வாழ்ந்தவர்களே நியாயத்தை கேட்கிறோம் என்ற பேரில் தமது தனிப்பட்ட விமர்சனங்களை போராட்ட அமைப்பு தலைமைமீது கொட்டி தீர்க்கிறார்கள், ஒருகாலம்   உயிரையும் பொருளையும் உணர்வையும் தமிழரின் எதிர்கால வாழ்வுக்காய் கொடுத்து ஏங்கியவர்கள் கொடுத்தவர்கள் அதை சகித்து கொள்ள மாட்டார்கள்.

ஒபாமா தூய தமிழரா சுவிஸ்காரர்கள் தூய தமிழரா என்று கேட்பதெல்லாம் விதண்டாவாத நகைசுவையின் உச்சம்.

சீமான் என்ற தமிழர் தமிழர்கள் பற்றிய விசயத்தில் பேசியதால் தூய தமிழன் என்ற வார்த்தை அங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுவே அமெரிக்கர்கள் ஒபாமாபற்றி பேசினால், சுவிஸ் மக்கள் சுவிஸ் அரசியல்பற்றி பேசினால் அங்கே தூய அமெரிக்கர்கள் தூய  சுவிஸ்காரர்கள் என்ற சொல்லாடல் கையாளப்படும்.

தூய தமிழர் என்ற சொல் எதுக்கு அங்கே வரபோகிறது?

பொருத்தமற்ற சொற் கையாடல்கள்  வெறும் சீண்டல் கருத்தாடலில் நீங்கள்  ஈடுபடுகிறீர்கள் என்பதை காட்டி கொடுத்துவிடும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்ல கேள்வி.. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.. மோடியை நானும்தான் நக்கலடித்தேன் சிலைக்கு.. 

புலவரே,

நான் அறிந்த வரையில் (பிழை எனில் திருத்தி கொள்கிறேன்).

1. இந்த சிலையை தமிழ் நாடு அரசு, மக்கள் வரிபணத்தில் வைக்கவில்லை. 

2. இது ஒரு தனியார் முன்னெடுப்பு. 3 வருடம் முதலே மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. எடப்பாடி அரசு வழங்கவில்லை. இப்போ ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார்.

ஆகவே மோடி வைத்த சிலையோடு இதை ஒப்பிடுவது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை.

அடுத்து, சிலைக்குள் நூலகம், இன்னும் பல வசதிகள், மேலே ஏறி போகும் லிப்ட் எல்லாம் இருக்குமாம். நல்லதுதானே, தனியார் காசில் கட்டட்டுமே?

இல்லை நீங்கள் சிலை வைப்பதையே எதிர்கிறீர்களா? அப்போ பொன் சிவகுமாரன் சிலையையும் எதிர்கிறீர்களா? ஒப்பீடு நமக்கு கசக்கலாம் ஆனால் அவர்களுக்கு பெரியார் அப்படி ஒருவர்தானே?

இல்லை பெரியார் அப்படி இல்லை என்கிறீர்களா? ஆனால் பெரியாரை தூற்றி அரசியல் செய்வோருக்கு ஒரு சீட்டும் கிடைக்காமல் போகும் நிலைதானே அங்கே உள்ளது. ஆகவே சில ஈழத்தமிழருக்கும், 30 லட்சம் தமிழக தமிழர்களை விட, இரு திராவிட கட்சிகளின் கூட்டணிக்கு வாக்களித்த லட்சோப, லட்சம் மக்கள் இதை ஆதரிக்க கூடும் அல்லவா? அப்படி இல்லை என்றால் அவர்கள் இந்த கட்சிகளை அடுத்த தேர்தலில் தோற்கடித்து, சிலையை எதிர்தவர்களை முதல்வர் ஆக்கட்டுமே?

 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2021 at 15:23, ஏராளன் said:

அப்படி எல்லாம் பணம் சேர்த்து பல பள்ளிகள், கல்லூரிகளை ஆரம்பிக்க உதவிச் சென்றார்.

சீமான் சொல்லும் இந்த பள்ளிகள், கல்லூரிகள் எங்கே இருக்கிறன? தமிழ் நாட்டில்தானே? 

அதனால் நன்மை அடைந்தவர்கள்? தமிழ்நாட்டினர்தானே?

ஆகவே அந்த தமிழ்நாட்டினரில் ஒரு அமைப்பினர் தனியார் நிதி மூலம் சிலை வைக்கிறார்கள்.  மத்திய, மாநில அரசுகள் அனுமதி கொடுத்துள்ளன.

அவ்வளவுதான் மேட்டர்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.