Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்வையாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கவலை வேண்டாம் அண்ணா இது வெறும் ஊடல்தான். 

கோசான்...
காதலன், காதலிக்கு... இடையில் வருவதும்,
கணவன், மனைவிக்கும் இடையில் வருவதும்... தான், ஊடல்.

நான்... தவறாக, சொல்லியிருந்தால்... மன்னிக்கவும். 
"ஐ  மிச்சம்"  இருந்தால், சு.ப. சோமசுந்தரம்  ஐயாவிடம்  கேட்டுப்  பாருங்கள். :)

  • Replies 94
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கள உறவு நிறைய சுய ஆக்கங்கள் யாழில் எழுதுபவர் இப்பொழுது சில பல் மாதங்களாக வரவில்லை.. வேலை தொழில் படிப்பில் பிசியாகி இருக்கலாம்..  அவரது ஆக்கம்களை படிக்க தேடியபோது அவர் பார்வையாளர் என்ற பகுதிக்கு நகர்த்தப்பட்டிருந்தார்.. இப்பொழுது அதுவல்ல மேட்டர்.. அவரது ஆக்கம்கள் ஒன்றையும் யாழில் காணவில்லை.. நாளைக்கு நாமும் வராவிட்டால் பார்வையாளராக மாற்றுகிறீர்கள் அதுகூட பறுவாயில்லை கஸ்ரப்பட்டு நாங்கள் எழுதுவதையும் இல்லாமல் ஆக்குவது இங்கு நேரத்தை செலவழிப்பவர்களை பைத்தியக்காரர்கள் ஆக்கும் செயல்.. எதற்கும் சுமோ நீங்கள் எழுதியது எல்லாம் தேடும்போது வருகிறதா என்று டபுள் செக் பண்ணிபாருங்க..

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

எந்த ஆக்கத்தை காணவில்லை என்று அறியத் தாருங்கள். களம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பதியப்பட்ட அனைத்து பதிவுகளும் களத்திலேயே உள்ளது. எழுந்தமானமாக குற்றச்சாட்டுகளை விடுத்து காணவில்லை என்று நீங்கள் கருதும் ஆக்கத்தினை குறிப்பிடுங்கள்

8 hours ago, குமாரசாமி said:

ஓம் பாருங்கோ! உந்த பச்சை புள்ளியளை வைச்சுத்தான் ஜேர்மனியிலை இரண்டு வீடு வாங்கி வைச்சிருக்கிறன். சிலோனிலை 50 எக்கர் தென்னங்காணி வாங்கி விட்டுருக்கிறன். முரசுமோட்டையிலை 30 ஏக்கர் வயல் வாங்கி விட்டுருக்கிறன். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலை 1 அப்பார்ட்மென்ட் என்ரை பேரிலை வாங்கி வாடகைக்கு விட்டுருக்கிறன். இப்ப கொழும்பிலை பெரிய மாடி வீடொண்டு பாத்துக்கொண்டு திரியிறன். சந்திச்சால் சொல்லுங்கோ என்ன.....😁

உந்த பச்சைப்புள்ளி பல பிரச்சனைய தருமெண்டு சொன்ன ஆக்களிலை நானுமொருவன். தெரியாட்டில் தேடி வாசிக்கவும்.:cool:

 எனக்கு பச்சைபுள்ளியே வேண்டாமெண்டு நான் வேண்டுகோள் வைச்ச திரி...😎

உங்கடை கதைய நந்தன் கிருபன் போன்ற ஆக்களிட்டை சொல்லுங்கோ 😜

நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மோகன் said:

எந்த ஆக்கத்தை காணவில்லை என்று அறியத் தாருங்கள். களம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பதியப்பட்ட அனைத்து பதிவுகளும் களத்திலேயே உள்ளது. எழுந்தமானமாக குற்றச்சாட்டுகளை விடுத்து காணவில்லை என்று நீங்கள் கருதும் ஆக்கத்தினை குறிப்பிடுங்கள்

மன்னிக்கவேண்டும் மோகன் இப்பொழுது உங்கள் பதிலைபார்த்துவிட்டு திரும்ப சென்று தேடிபார்த்தபோது இருக்கிறது.. நன் தான் சேர்ச் பகுதியில் ரொப்பிக்ஸ் ஜ செலெக்ட் பண்ணாமல் தேடி இருக்கிறேன்.. மீண்டும் மன்னிக்கவும்.. ஆனால் ஆக்கம்கள் archived என்று வருகிறது.. பதில் எழுதமுடியவில்லை..

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மன்னிக்கவேண்டும் மோகன் இப்பொழுது உங்கள் பதிலைபார்த்துவிட்டு திரும்ப சென்று தேடிபார்த்தபோது இருக்கிறது.. நன் தான் சேர்ச் பகுதியில் ரொப்பிக்ஸ் ஜ செலெக்ட் பண்ணாமல் தேடி இருக்கிறேன்.. மீண்டும் மன்னிக்கவும்.. ஆனால் ஆக்கம்கள் archived என்று வருகிறது.. பதில் எழுதமுடியவில்லை..

ஒரு பதிவுக்கு இரண்டு வருடங்களுக்குள் எதுவித பதில்களும் வைக்கப்படாவிடின் அவை archived ஆக்கப்பட்டு விடும். களம் வேகமாக இயங்குவதற்கு இந்த செயற்பாடு உள்ளது. அவ்வாறு archived  செய்யப்பட்ட கருத்துக்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால் எமக்கு அறியத் தந்தால் அதை மீண்டும் பதில்கள் எழுத கூடியவாறு மாற்றிக்கொள்ள முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கோசான்...
காதலன், காதலிக்கு... இடையில் வருவதும்,
கணவன், மனைவிக்கும் இடையில் வருவதும்... தான், ஊடல்.

நான்... தவறாக, சொல்லியிருந்தால்... மன்னிக்கவும். 
"ஐ  மிச்சம்"  இருந்தால், சு.ப. சோமசுந்தரம்  ஐயாவிடம்  கேட்டுப்  பாருங்கள். :)

நீங்கள் சொல்வது சரிதான்.  ஐ ஒன்றும் மிச்சமில்லை🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நந்தன் said:

நானும் செண்பகம் அக்காவ தேடுறன் ஆள காணேல்ல, நாலு அங்க குத்துனா எனக்கும் ஓரு குத்து போடுவா 

ஏன் நீங்களா வந்து வண்டியில ஏறுறீங்க😁

 நண்டர்! நான் சம்பந்தப்பட்ட வண்டில்லை வந்து ஏறினது ஆர் ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மோகன் said:

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

அணுவின்றி  எதுவும்  அசையாது  ராசா

உங்களுக்கு இவர்களை  தெரியாமல்  இருக்கமுடியாது  என்றல்லோ இதுவரை நினைத்திருந்தேன்

இதை வாசித்ததும் ராமா நீயுமா என்பது  தான்  ஞாபகம் வருகுது??😭

  • கருத்துக்கள உறவுகள்

மோகண்ணா நீங்கள் சொல்லுங்கள்  ஒரு ஆக்கத்துக்கு பிடித்தால் எழுதும் விடையம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் பச்சை இடுவது சரியா..தப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு புள்ளிகளை யார் யாருக்கு வழங்குகின்றார்கள் என்பதை எல்லோரும் பார்க்கக்கூடிய மாதிரி காண்பிக்கலாம். இப்போது வெளியில் நின்று பார்க்க அவை தென்படவில்லை. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

இப்போது உள்ள கருத்துக்கள பார்வையாளர்கள் நடைமுறை விருப்பு புள்ளிகளுக்கு அப்பாலும் பொருத்தமான செயற்பாடாகவே தோன்றுகின்றது.

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விருப்பு புள்ளிகளை யார் யாருக்கு வழங்குகின்றார்கள் என்பதை எல்லோரும் பார்க்கக்கூடிய மாதிரி காண்பிக்கலாம். இப்போது வெளியில் நின்று பார்க்க அவை தென்படவில்லை. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

இப்போது உள்ள கருத்துக்கள பார்வையாளர்கள் நடைமுறை விருப்பு புள்ளிகளுக்கு அப்பாலும் பொருத்தமான செயற்பாடாகவே தோன்றுகின்றது.

 நியாயம் அண்ணா  ....களத்தினுள் உள்ள நுழைந்து பாருங்கள்  பெயர் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விருப்பு புள்ளிகள் இடுபவர் விபரத்தை காணலாம் என்றால் கருத்துக்களையும் கருத்துக்கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கலாம் என்று கொண்டுவரலாமே? ஏன் பொதுவெளியில் கருத்துக்கள் காண்பிக்கப்படுகின்றன? இதை ஒரு மூடிய களமாக கொண்டுவரலாமே?

கருத்துக்களுக்கு பொறுப்பு கருத்து சொல்பவர்களே ஒழிய யாழ் இணையம் அதற்கு பொறுப்பு எடுக்காது என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையை மீறும் கருத்தை எழுதிய உறுப்பினருக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கும்போது விதிமுறையை மீறும் கருத்துக்கு விருப்பு புள்ளி இடுகின்ற உறுப்பினருக்கும் எச்சரிக்கை புள்ளி வழங்கலாமே? 

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

4 hours ago, விசுகு said:

அணுவின்றி  எதுவும்  அசையாது  ராசா

உங்களுக்கு இவர்களை  தெரியாமல்  இருக்கமுடியாது  என்றல்லோ இதுவரை நினைத்திருந்தேன்

இதை வாசித்ததும் ராமா நீயுமா என்பது  தான்  ஞாபகம் வருகுது??😭

தெரிந்தபடியால் தானே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. இது பற்றி பவ முறை விளக்கம் இங்கு களத்தில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திரியிலும் நிழலி விளக்கம் தந்துள்ளார்.

4 hours ago, யாயினி said:

மோகண்ணா நீங்கள் சொல்லுங்கள்  ஒரு ஆக்கத்துக்கு பிடித்தால் எழுதும் விடையம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் பச்சை இடுவது சரியா..தப்பா?

சரி என்பது தான் எனது கருத்து. இங்கு அதனைத் தவறாகப் பயன்படுத்துதான் பிரச்சனைக்குரிய காரணம். பச்சi குத்துவது போல் முன்னர் பசிவப்பு குத்தும் முறையும் இருந்தது. இப்போது குழவாகச் சேர்ந்து பிடிக்காதவர்களுக்கு (கவனிக்க: பதிவுகளுக்கு அல்ல) சிவப்பு குத்தியது தெரிந்தபடியால் தான் அதனை முற்றாகவே நீக்கிக்கொண்டோம்.

இப்போதும் சிலர் தமக்குப்பிடித்தவர்களுக்கு மட்டும் பச்சைகுத்துவதை நாமறிவோம். 

8 hours ago, குமாரசாமி said:

 நண்டர்! நான் சம்பந்தப்பட்ட வண்டில்லை வந்து ஏறினது ஆர் ? 🤣

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மோகன் said:

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

விடுகிற  மாதிரி  தெரியல...😂

4 minutes ago, விசுகு said:

விடுகிற  மாதிரி  தெரியல...😂

இல்லை உங்களையும் சேர்த்துத்தான். விளக்கம் தந்த பின்னரும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மோகன் said:

இல்லை உங்களையும் சேர்த்துத்தான். விளக்கம் தந்த பின்னரும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அப்பு ராசா

நான் எங்காவது  சொன்னேனா உங்கள்  செயல்  அல்லது தொழில்நுட்ப  வளர்ச்சிக்கேற்ப  மாறுவது  தவறென்று??

அது  எம்மை  போன்றவர்களுக்கு  தொடர்வது  கடினம்  என்பதும்

இதனால் எமது குடும்ப  உறவுகள் குறைவடையலாம்  என்பது  மட்டுமே  எனது  கவலை.
அதை நீங்கள் புரிந்து கொள்ள முயலவே இல்லை என்பது தற்போதைய வருத்தம்???

On 14/9/2021 at 14:26, நிழலி said:

விசுகு,

யாழில் இணைந்துள்ளவர்கள் தொடர்ந்து கருத்து எதுவுமே எழுதாமல் இருந்து கொண்டு வெறுமனே பச்சைப் புள்ளிகளை மட்டும் வழங்கிக் கொண்டு இருப்பதை தவிர்ப்பதற்காகவே இந்த பார்வையாளர் எனும் உறுப்பினர் பிரிவு கொண்டுவரப்பட்டது. முன்னைய காலங்களில் ஒரு சில உறுப்பினர்கள் குழுவாக இவ்வாறு செயல்பட்டதும் அவதானிக்கப்பட்டது. அத்துடன் கருத்துகள் எதுவும் எழுதாத உறுப்பினர்களும், கருத்துகளை தொடர்ந்து எழுதும் உறுப்பினர்களும் ஒரே உறுப்பினர் பிரிவில் இருப்பதும் கருத்துகளம் ஒன்றுக்கு சரியானதாகவும் அமையாது. இக் காரணங்களினால் தான் இப் பிரிவு உருவாக்கப்பட்டு தானியங்கி மூலம் இயக்கப்படுகின்றது.

பார்வையாளர் பிரிவுக்கு தானியங்கி மூலம் நகர்த்தப்படுகின்றவர்கள், மீண்டும் ஆரோக்கியமான கருத்துகளை வைக்கும் போது யாழ் இணைய பொறுப்பாளர்களில் ஒருவரால் மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தப்படுவர்.

இந்த விடயம் பற்றி யாழில் பலமுறை மட்டுறுத்துநர்களால் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு இருக்கு. ஆனால் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நீங்களே எந்த பொறுப்புணர்வும் இன்றி இப்படியான பதில்களை வைத்து ஏனைய உறுப்பினர்களின் மனதிலும் வீண் சந்தேகங்களை எழுப்புவது நிச்சயம் ஆரோக்கியமானதாக அமையாது.

நன்றி

நிழலியின் விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

On 14/9/2021 at 17:15, விசுகு said:

நாளை எம்மால்  எழுதமுடியாதநிலை

அல்லது  சில நாட்கள் முடக்கம்  வரும்போது யாழ் களம்  எம்மை மறைத்துவிடப்போகிறது  தானே???

எனது விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

On 16/9/2021 at 13:45, விசுகு said:

பின்னர் செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் என இந்த  இயந்திர வாழ்க்கையில் விடுபட்டுப்போனவை பல......

அதேபோல் யாழிலும் மாற்றங்கள்  இவ்வாறு  வரும் போது ஒவ்வொன்றாக எம்  குடும்ப உறவுகள்  குறைவடைய நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கிறது?  என்பதனையே குறிப்பிட்டேன்.

(பல  உறவுகள் தங்களின்  தவிப்பை  இங்கே  ஏற்கனவே வெளிப்படுத்தி  இருந்தனர்)

முகநூல்  போன்றவர்கள்  கூட இவ்வாறு  தரம் பிரித்து  தடை போடுவதை  அறியவில்லை.

நிபந்தனைகளை வாசிக்காமல் கையழுத்து போட்டுவிட்டன் என்ற காரணங்களை கடன் பெறும் வங்கிக்கும் கடனட்டை நிறுவனத்திற்கும் சொல்வீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, மோகன் said:

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

எல்லாப்பக்கமும் கேட்ட போட்டா அப்பாவி ஜீவன் எங்க போகும்.😁

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மோகன் said:

நிழலியின் விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

எனது விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

நிபந்தனைகளை வாசிக்காமல் கையழுத்து போட்டுவிட்டன் என்ற காரணங்களை கடன் பெறும் வங்கிக்கும் கடனட்டை நிறுவனத்திற்கும் சொல்வீர்களா? 

யாழ் களம் என் குடும்பம்.

யாழ் களத்தில் மற்றும் மோகன் மீது இருக்கும் பாசத்தால் நம்பிக்கையால் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்து போட்டு விடுவேன். அதற்கு வங்கி கடன் அட்டை உதாரணம் எல்லாம் எதுக்கு ராசா??

இப்ப கூட எனது வருத்தத்தை பற்றி கருத்தோ அக்கறையோ எடுக்கவே இல்லை???

பச்சை மற்றும் விதிகள் கையெழுத்து பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்???

6 minutes ago, விசுகு said:

நான் தலைப்புக்குன் நிற்க முயற்சிக்கின்றேன். இங்கு பார்வையாளர்கள் என்ற விடயம் பற்றித் தான் கதைத்துக் கொண்டு இருக்கின்றோம். (பார்வையளார்கள் என்ற விடயம் வந்ததே பச்சைப் புள்ளிப் பிரச்சனையால் தான்) நீங்கள் தான் தலைப்பை விட்டு வெளியில்  போகின்றீர்கள். நிபந்தனையில் பார்வையாளர்கள் பற்றி தெளிவாகவே உள்ளது. நீங்கள் பல்வேறு பிரச்சனைகளால் அதனை வாசிக்கவில்லை. நான் (விசுகு) வாசிக்காதபடியால் விசுகு மீது தப்பில்லை. யாழ் களத்தின் மீது தான் தப்பு என்று நீங்கள் சொல்வதாகத்தான் தான் என்னால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஏனெனில் விளக்கம் தந்த பின்னரும் நீங்கள் எழுதியது அப்படித்தான் விளங்க வைக்கின்றது.

களம் தொடங்கியபோது வெறும் 10 வரியில் தான் ஒற்றை வரி நிபந்தனைகள் இருந்தன். ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் போது களத்தின் நலன் கருதி காலத்திற்குக் காலம் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. இனியும் வரும்.

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விருப்பு புள்ளிகள் இடுபவர் விபரத்தை காணலாம் என்றால் கருத்துக்களையும் கருத்துக்கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கலாம் என்று கொண்டுவரலாமே? ஏன் பொதுவெளியில் கருத்துக்கள் காண்பிக்கப்படுகின்றன? இதை ஒரு மூடிய களமாக கொண்டுவரலாமே?

கருத்துக்களுக்கு பொறுப்பு கருத்து சொல்பவர்களே ஒழிய யாழ் இணையம் அதற்கு பொறுப்பு எடுக்காது என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையை மீறும் கருத்தை எழுதிய உறுப்பினருக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கும்போது விதிமுறையை மீறும் கருத்துக்கு விருப்பு புள்ளி இடுகின்ற உறுப்பினருக்கும் எச்சரிக்கை புள்ளி வழங்கலாமே? 

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

நல்லது அபபடி ஒரு வழி உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதன்பின் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

நீங்கள் சொன்னது நல்ல விசயம்..ஒன்று  முற்றாகவே பச்சை குத்துவதை நிப்பாட்ட வேண்டும் . அல்லது வெளியில் இருந்து பார்க்கும் போது தெரியக் கூடாது 
இதில மல்லுக் கட்டிக்க கொண்டு நிற்பவர்கள் வேறு பெயர்களில் வந்து தங்களுக்கு அல்லது அவர்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பச்சை குத்துபவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிலாமதி said:

 ஒழுங்கு என்றால் யாவருக்கும்  ஒரே மாதிரித்தான். அவர்கள் குறை நிறையில் கேட்டு நிவர்த்தி செய்தார்கள் தானே .

சரியான கருத்து.

சிலர் இப்படி எதிர்பார்ப்பது சரியல்ல.
All are equal, but some are more equal than others

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/9/2021 at 22:06, மோகன் said:

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

வணக்கம் மோகன் ஐயா!
நான் சொல்ல வந்த விடயம் ஒரு யாழ்கள உறுப்பினர் நீண்ட நாட்கள் வர முடியாவிட்டால் கருத்துக்கள உறவுகள் வரிசையிலிருந்து கருத்துக்கள பார்வையாளர் என்ற தரவிறக்கம் சம்பந்தமாக மட்டுமே.
மற்றும் படி பச்சை புள்ளி விவகாரம் யாழ்கள விதிகள் சம்பந்தப்பட்டது. இதற்குள் நான் என்றுமே மூக்கை நுழைத்ததில்லை. காரணம் அது நிர்வாகம் சம்பந்தப்பட்டது.குமாரசாமி ஆகிய நான் நிர்வாகத்திற்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு யோக்கியனும் இல்லை.

ஆனால் ஒரு கேள்வி?

யாழ் களத்திற்கு வருபவர்கள் எல்லோருக்கும் விருப்பு வாக்கு இடும் வசதி உள்ளதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

இதில மல்லுக் கட்டிக்க கொண்டு நிற்பவர்கள் வேறு பெயர்களில் வந்து தங்களுக்கு அல்லது அவர்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பச்சை குத்துபவர்கள் 

குத்துபவர்களின் பெயர்கள் வெளிப்படையாக தெரிகின்றது தானே?  அவர்களை பற்றி நேரடியாக  நிர்வாகத்திடம்  முறையிடவேண்டியது  உங்கள் கடமை அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.