Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆக்கஸ் திட்டம்: சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா - ஜோ பைடன், போரிஸ் ஜான்சன், ஸ்காட் மாரிசன் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கஸ் திட்டம்: சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா - ஜோ பைடன், போரிஸ் ஜான்சன், ஸ்காட் மாரிசன் அறிக்கை

3 மணி நேரங்களுக்கு முன்னர்
பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளன.

இந்த கூட்டு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

ஆக்கஸ்(AUKUS) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

இந்த உடன்பாட்டில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் நாட்டால் வடிவமைக்கப்படும் நீர்மூழ்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்திருக்கிறது.

ஆஸ்திரேலிய கடற்படைக்கு 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பிரான்ஸ் சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றது. இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதத் தளவாட ஒப்பந்தமாகும்.

ஆனால் இந்த ஒப்பந்தப்படி நீர்மூழ்கிகளை உருவாக்குவதற்கான தளவாடங்கள் பெரும்பாலும் உள்நாட்டிலே பெற வேண்டும் என்பதால், இந்தத் திட்டம் தாமதமாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியாப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டனர்.

"ஆக்கஸின் கீழ் முதல் முயற்சியாக , அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இந்தக் கூட்டு முயற்சி இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும். நமது நலன்களுக்கும் மதிப்புக்கும் உதவும் வகையில் பயன்படுத்தப்படும்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"ஆஸ்திரேலியாவின் படைத் திறனை ஒரு குறிப்பிட்ட, அடையக் கூடிய கால அளவுக்குள் மேம்படுத்தி அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே இந்தக் கூட்டுத் திட்டத்தின் நோக்கமாகும்" என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இருப்பினும் அணு ஆயுதமற்ற நாடாக நீடித்திருப்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருக்கும் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சைபர் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, "கடலுக்கு அடியில் கூடுதலாகத் திறன்" ஆகியவற்றிலும் இந்தக் கூட்டு முயற்சி கவனம் செலுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மூன்று நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள் என்றும், இந்தக் கூட்டணி முன் எப்போதையும் விட நெருக்கமாக வந்திருப்பதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

"இந்தக் கூட்டு நமது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும்,, மக்களைக் காக்கவும் இன்றியமையாதது" என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் பிரிட்டனின் எச்எம்எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பல் இந்தோ - பசிபிக் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டது.. இதில் அமெரிக்க ராணுவத்தினரும் உபகரணங்களும் இருந்தன.

இந்தோ- பசிபிக் பிராந்தியம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்ட, தீர்க்கப்படாத தகராறுகள் நீடித்திருக்கக் கூடிய, மோதல் ஏற்படும் ஆபத்துகள் நிறைந்திருக்கும் ஒரு பகுதியாகும் என்று பிரிட்ன், அமெரிக்க, ஆஸ்திரேலியக் கூட்டறிக்கை கூறுகிறது.

China's Xi Jinping

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இது சைபர்ஸ்பேஸ் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் முன்னணியில் இருக்கிறது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரகசியம் எதுவுமில்லை - ஜோனாதன் பீல், பாதுகாப்பு செய்தியாளர்

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஒரே நேரத்தில் பங்கேற்று கூட்டுத் திட்டம் குறித்து அறிவித்திருப்பது, இந்த உடன்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. பிரிட்டன் அரசும் இதையே கூறுகிறது.

ஆனால் இந்த உடன்பாடு இரு முக்கிய நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். முதலாவது நட்பு நாடான பிரான்ஸ். நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்த நாடு ஆஸ்திரேலியாவுடன் டீசலில் இயங்கும் நீர்மூழ்கியை கட்டுவது தொடர்பாக உடன்பாடு செய்திருந்தது. இப்போது இந்த உடன்பாடு முறிக்கப்படுகிறது.

இரண்டாவது நாடு சீனா. இந்த உடன்பாடு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பிரிட்டன் அதிகாரிகள் கூறி வந்தாலும், இன்னொரு புறம், இந்தப் பிராந்தியத்தில் செழிப்பு, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதும், சட்டத்தின் அடிப்படையிலான அமைதி நிலையை ஆதரிப்பதும் இந்த உடன்பாட்டின் நோக்கம் என்றும் பிரிட்டன் அரசு கூறுகிறது.

அதனால் இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் ராணுவச் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து பிரிட்டன், அணெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கவலைகளைப் பகிர்ந்து கொள்வது ஒன்றும் ரகசியம் அல்ல.

https://www.bbc.com/tamil/global-58579853

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கஸ்: சீனாவுக்கு அமெரிக்கா நீர்மூழ்கிகள் மூலம் வைக்கும் 'செக்' - கொந்தளிக்கும் இரு நாடுகள்

6 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய, சீனாவுக்கு எதிரான ஒரு கூட்டுத் திட்டத்தை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வகுத்திருக்கின்றன.

இது சீனாவுக்கு எதிரானது அல்ல என்று அந்த நாடுகள் கூறினாலும் பாதுகாப்பு வல்லுநர்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உத்திசார்ந்த நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று கூறுகின்றனர்.

இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்று சீனா விமர்சித்துள்ளது.

இந்தக் கூட்டுத் திட்டத்தின் பெயர் ஆக்கஸ் (AUKUS) ஆஸ்திரேலியா(AUS), பிரிட்டன் (UK) அமெரிக்கா (US) ஆகிய பெயர்களின் சுருக்கம்.

அணுசக்தி நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கி அதன் மூலலாக ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலை நிறுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் புதிய கூட்டு உருவாகியிருக்கும் காலமும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய சில வாரங்களில் மூன்று நாடுகளும் இணைந்து புதிய உடன்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றன.

இந்த உடன்பாட்டில் கூறப்பட்டது என்ன?

உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த உடன்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக நீர்மூழ்க்கிக் கப்பல்கள்தான் முக்கியமானவை. அவை தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் கட்டப்பட உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்க இருக்கின்றன.

"ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் பிரமாண்டமான பாதுகாப்புத் திறன்களைக் கொண்டுள்ளது. எனவே பிராந்தியச் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தம். உலகில் 6 நாடுகள் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளன. அவை அணு ஆயுதங்கள் அற்ற மிகவும் சக்திவாய்ந்த தடுப்பு ஆயுதம்" என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் மைக்கேல் ஷூபிரிட்ஜ்.

சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் வழக்கமான எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை விட கண்டுபிடிக்க இயலாதவை. எதிரிகளின் பரப்புக்கு உள்ளேயே ஊடுருவிச் செல்லக்கூடியவை.

இவற்றில் அணு ஆயுதங்கள் இருக்காது. மாறாக இவை அணுசக்தி எரிபொருள் மூலம் இயங்குகின்றன. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் இருபது ஆண்டுகள் வரைகூட இவை தொடர்ந்து செயல்படும்.

ஆயினும் ஆஸ்திரேலியா அணு ஆயுதங்களைப் பெறப் போவதில்லை என்பதை அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆக்கஸ் உடன்பாட்டின்படி குறைந்தது 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலியாவில் கட்டுமான வசதிகள் குறைவாக இருப்பதால் இந்தத் திட்டம் தாதமாகவே செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது.

சீனாவின் எதிர்வினை என்ன?

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்றும், "குறுகிய மனப்பாங்கு" கொண்டது என்றும் சீனா விமர்சித்துள்ளது.

"பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். ஆயுதப் போட்டியை உருவாக்கும்" என்று சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியான் கூறியுள்ளார்.

"இது காலாவதியான பனிப்போர் மனநிலை" என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த மூன்று நாடுகள் தங்களது சொந்த நலன்களையே கெடுத்துக் கொள்ளப் போகின்றன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சீனாவின அரசு ஊடகமும் இதுபோன்ற ஒரு தலையங்கத்தை வெளியிட்டிருக்கிறது. "ஆஸ்திரேலியா தன்னைத்தானே சீனாவின் எதிரியாக மாற்றிக் கொண்டிருக்கிறது" என்று "குளோபல் டைம்ஸ்" செய்தித்தாள் குறிப்பிட்டிருக்கிறது.

மூன்று நாடுகள் கூட்டின் முக்கியத்துவம் என்ன?

கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக தனது நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்ளப் போகிறது. இதற்கு முன் பிரிட்டனுக்கு மட்டுமே அந்தத் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மிக உடன்பாடு இது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நீர்மூழ்கி

இந்த உடன்பாட்டின் மூலம் அணுசக்தி நீர்மூழ்கியைப் பெறும் ஏழாவது நாடு என்ற பெயர் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்க இருக்கிறது.

கடலுக்கு அடியில் ஆய்வு செய்யும் தொழில்நுட்பம், சைபர் திறன்கள், உளவுத் தகவல்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதும் இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தெற்கு சீனக் கடலில் சீனா பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. பதிலுக்கு அமெரிக்காவும் அந்தப் பிராந்தியத்தில் தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவை ஒட்டி நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவது அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிப்பதில் முக்கியமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் என்ன பிரச்னை?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி சீனா. கடந்த காலத்தில் இரு நாடுகளும் நெருக்கமான உறவைக்கொண்டிருந்தன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உறவில் கசப்பு ஏற்பட்டது. சீனாவில் இருக்கும் வீகர் இஸ்லாமியர்களின் மனித உரிமை குறித்து ஆஸ்திரேலியா விமர்சனம் செய்தது. சீனாவின் சில தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தடை விதித்தது. கொரோனா வைரஸின் மூலம் எது என்று விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இப்படியாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும்பிளவு ஏற்பட்டது.

பசிபிக் தீவுகளில் சீனா செய்துவரும் பரவலான முதலீடுகள் மேற்கத்திய நாடுகளையும் அதிருப்தியடைச் செய்திருக்கின்றன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கும் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றன.

ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கென் கூறியுள்ளார்.

"முதுகில் குத்தி விட்டார்கள்"

கசப்பான உறவைக் கொண்டிருக்கும் சீனா மாத்திரமல்ல, நெருங்கிய நட்பு நாடான பிரான்ஸும் ஆக்கஸ் உடன்பாடு குறித்து கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்காக நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைப்பதற்கு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான உடன்பாட்டை பிரான்ஸ் செய்து கொண்டிருந்தது. இப்போது கையெழுத்தாகி இருக்கும் புதிய உடன்பாட்டால் பிரான்ஸின் உடன்பாடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

"இது முதுகில் குத்தும் செயல்" என்று பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் லே ட்ரியன் கூறியுள்ளார்.

"நாங்கள் நம்பிக்கை கொண்ட உறவை ஆஸ்திரேலியாவுடன் வைத்திருந்தோம். அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது"

https://www.bbc.com/tamil/global-58592765

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் தனது எதிப்பை வெளிக்காட்ட  அமெரிக்க அவுஸ்திரேலிய தூதர்களை திருப்பி அழைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் வெள்ளைத்தோலாக இருந்தாலும் அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்த் திரேலியாவிக்கிடையிலான நெருக்கம் பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற ஜரோப்பிய வெள்ளைத்தோல் நாடுகள் உடன் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும்.. ஏனெனில் மொழியாலும் வரலாற்றாலும் இவர்கள் ஒன்றே.. ஆனால் மற்ற மூன்றாம் உலகநாடுகள் என்று வரும்போது இந்த வெள்ளைத்தோல் நாடுகள் எல்லாம் ஒன்றாகி விடுவார்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னதான் வெள்ளைத்தோலாக இருந்தாலும் அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்த் திரேலியாவிக்கிடையிலான நெருக்கம் பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற ஜரோப்பிய வெள்ளைத்தோல் நாடுகள் உடன் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும்..

எங்கடை செல்லம் கனடாவும் அவையின்ரை கூட்டு எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

எங்கடை செல்லம் கனடாவும் அவையின்ரை கூட்டு எல்லோ?

கனடா ஒரு நாடா..? நான் அமெரிகாவின் ஒரு மாநிலம் எண்டெல்லோ நினைச்சுகொண்டிருக்கிறன்..😁

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் காசு செய்கிற வேலை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

கனடா ஒரு நாடா..? நான் அமெரிகாவின் ஒரு மாநிலம் எண்டெல்லோ நினைச்சுகொண்டிருக்கிறன்..😁

அமெரிக்கா எல்லா இடமும் கடிச்சு முடிஞ்சு கடைசியில கடிக்கப் போறது கனடாவத்தானே... 😆

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

அமெரிக்கா எல்லா இடமும் கடிச்சு முடிஞ்சு கடைசியில கடிக்கப் போறது கனடாவத்தானே... 😆

 

இப்ப மட்டும்  என்னவாம்???🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

அமெரிக்கா எல்லா இடமும் கடிச்சு முடிஞ்சு கடைசியில கடிக்கப் போறது கனடாவத்தானே... 😆

இதாலை கனடா வாழ் சிலோன் டமில்ஸ்சுக்கு பாதிப்பு ஒண்டும் இல்லையே? 😁

Kakkakuyil-Cochin-Haneefa

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2021 at 22:50, ஏராளன் said:

சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா

ஏன் ஜேர்மனி இறங்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதாலை கனடா வாழ் சிலோன் டமில்ஸ்சுக்கு பாதிப்பு ஒண்டும் இல்லையே? 😁

Kakkakuyil-Cochin-Haneefa

பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும்..😆

நாங்க யார்,  யாழ்ப்பாணீஸெல்லோ.....🤪

6 hours ago, விசுகு said:

 

இப்ப மட்டும்  என்னவாம்???🤣

என்னம் கடிக்கேல்ல..😀

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலோ சக்சன்/ செல்டிக் (கெல்டிக்) வழிவந்த எல்லாரும் சேந்து பிரான்சுக்கு ஆப்படிச்சு போட்டாங்கள்🤣.

ஆனால் இதில நியூசிலாந்து வேறு நிலை எடுக்க்குமாப் போல படுகிறது. 

16 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் ஜேர்மனி இறங்கவில்லை?

ஜேர்மனி, கனடா இரெண்டிடமும் அணு நீர்மூழ்கி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் குத்துக்கரணம் அடிச்சாலும் எங்களுக்கு காசு தரும் நாட்டை ஒன்றும் செய்ய முடியாது.

இதுவரை கொரோனா பரவ காரணமாக இருந்த நாட்டுக்கு கண்டன அறிக்கை கூட இவர்களால் முடியவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஆங்கிலோ சக்சன்/ செல்டிக் (கெல்டிக்) வழிவந்த எல்லாரும் சேந்து பிரான்சுக்கு ஆப்படிச்சு போட்டாங்கள்🤣.

ஆனால் இதில நியூசிலாந்து வேறு நிலை எடுக்க்குமாப் போல படுகிறது. 

ஜேர்மனி, கனடா இரெண்டிடமும் அணு நீர்மூழ்கி இல்லை.

ஆங்கிலோ சக்சன் அதாவது ஆங்கிலேயர்கள் ஜேர்மனியில்  ஆங்கிலோ சக்சன் என்ற இடத்தில் இருந்து இங்கிலாந்துக்கு குடியேறியவர்களே. அதனால் அவர்கள் பேசிய மொழி ஆங்கிலமாகியது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

ஆங்கிலோ சக்சன் அதாவது ஆங்கிலேயர்கள் ஜேர்மனியில்  ஆங்கிலோ சக்சன் என்ற இடத்தில் இருந்து இங்கிலாந்துக்கு குடியேறியவர்களே. அதனால் அவர்கள் பேசிய மொழி ஆங்கிலமாகியது. 

இல்லை. சக்சனி என்ற ஜேர்மன் பகுதியில் இருந்து பிரித்தானிய தீவுக்கு வந்தவர்கள், மற்றும் மத்திய ஐரோப்பியாவில் இருந்து வந்த வேறு பல ஜேர்மானிய குழுக்கள், இங்கே இருந்த பூர்வீக குடிகள் - இருவரின் கலப்பாலும் பிரித்தானியாவில் உருவாகிய குழுவே ஆங்கிலோ-சக்சன். 

450ம் ஆண்டில் ஜேர்மானிய குடிகளின் வரவும், உள்ளூர் கலப்பும், ஆங்கிலோ-சக்சன் குழுவின் உருவாக்கமும் ஆரம்பிக்கிறது. இவர்களின் எழுச்சியின் பின்னே ஆங்கிலம், இங்கிலாந்து என்ற கருத்துருவாக்கம் நிகழ்கிறது.

இவர்களின் தோற்றத்துக்கு முன்பே பிரித்தானியாவில் பூர்வீக மக்கள் (கெல்டிக்) இருந்தாலும். ரோம ராஜ்யம் கூட அமைந்திருந்தாலும், பின்நாளில், பிரித்தானியாவில் (இங்கிலாந்தில்) ஸ்கெண்டிநேவிய வைக்கிங், பிரான்சிய நோர்மென் ஆதிக்கங்கள் இருந்தாலும் - ஆங்கில அடையாளத்தின் அடிநாதமாக இருப்பது - இந்த ஆங்கிலோ-சக்சன் அடையாளமே.

ஆனால் அயர்லாந்து, ஸ்கொட்லாந்தில் இப்போதும் (புரொட்டஸ்தாந்து குடியேறிகளின் வாரிசுகள் நீங்கலாக) கெல்டிக் வழிவந்தோரே.

ஆகவேதான் அமெரிக்கா, கனடா, அவுஸ், நியூசியை ஆங்கிலோ சக்சன், கெல்டிக் வழிவந்தோர் என்றேன்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இல்லை. சக்சனி என்ற ஜேர்மன் பகுதியில் இருந்து பிரித்தானிய தீவுக்கு வந்தவர்கள், மற்றும் மத்திய ஐரோப்பியாவில் இருந்து வந்த வேறு பல ஜேர்மானிய குழுக்கள், இங்கே இருந்த பூர்வீக குடிகள் - இருவரின் கலப்பாலும் பிரித்தானியாவில் உருவாகிய குழுவே ஆங்கிலோ-சக்சன். 

450ம் ஆண்டில் ஜேர்மானிய குடிகளின் வரவும், உள்ளூர் கலப்பும், ஆங்கிலோ-சக்சன் குழுவின் உருவாக்கமும் ஆரம்பிக்கிறது. இவர்களின் எழுச்சியின் பின்னே ஆங்கிலம், இங்கிலாந்து என்ற கருத்துருவாக்கம் நிகழ்கிறது.

இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்பவர்களின் பெயர்களை பார்த்தால் ஜேர்மன் பெயர்களாகவே தெரியும்.
Eric Schmidt
Mark Zuckerberg
Steven Spielberg
Hermann Rumsfeld
Donald Rumsfeld

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்பவர்களின் பெயர்களை பார்த்தால் ஜேர்மன் பெயர்களாகவே தெரியும்.
Eric Schmidt
Mark Zuckerberg
Steven Spielberg
Hermann Rumsfeld
Donald Rumsfeld

இவை Dutch பெயர்கள் அல்ல, யூதப் பெயர்கள்.....🤪

(கிளைமோற கொழுவியாச்சு.....anytime வெடிக்கலாம் 🥴)

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்பவர்களின் பெயர்களை பார்த்தால் ஜேர்மன் பெயர்களாகவே தெரியும்.
Eric Schmidt
Mark Zuckerberg
Steven Spielberg
Hermann Rumsfeld
Donald Rumsfeld

இதில் இன்னொரு டிவிஸ்டும் இருக்கிறது.

இந்த ஷிமிட். இங்கிலாந்தில் anglicised ஆகி ஸ்மித் என இருக்கும்.
ஜேர்மன் ஷிமிட், ஆங்கில ஸ்மித் இரெண்டும் புரோட்டோ ஜேர்மானிக்கின் ஸ்மிபாஸ் இல் இருந்து வருகிறதாம். 

ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஜேர்மன் பெயர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் ஐரோப்பியர் போய் இறங்கிய பின், ஜேர்மனியில் இருந்து மத சுதந்திரம் வேண்டி அமெரிக்கா போனவர்களின் வாரிசுகளின் பெயர்கள். இவை இன்னும் அப்படியே ஜேர்மன் உசாரிப்பு, ஸ்பெலிங்கில் இருக்கும். 

ஆகவே நீங்கள் சொன்ன உதாரணங்கள் போல் பெயர்கள் அப்படியே ஜேர்மனில் இருப்பது போலவே இருக்கும். 

3 minutes ago, Kapithan said:

இவை Dutch பெயர்கள் அல்ல, யூதப் பெயர்கள்.....🤪

(கிளைமோற கொழுவியாச்சு.....anytime வெடிக்கலாம் 🥴)

நீங்கள் சொல்லுவது முதல் பெயரை (மார்க்).  

கு. சா அண்ணை சொல்வது குடும்பபெயரை (ஷிமிட்).

கிறிஸ்தவ உலகமெங்கும் முதல்பெயர்கள் பிபிலிய பெயர்களே.

கிறிஸ்தவருக்கு மட்டும அல்ல, யூதருக்கும், முஸ்லீம்களுக்கும் கூட.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

 ஜேர்மனி, கனடா இரெண்டிடமும் அணு நீர்மூழ்கி இல்லை.

பலருக்கு ஜேர்மனி பெரிய வளமான நாடாக தெரியலாம். ஆனால் இவர்களுக்கு பல விடயங்களில் தன்னிச்சையாக செயல்பட அங்கீகாரம் இன்னும் இல்லை. குறிப்பாக அணு சம்பந்தமான விடயங்களில்......

காரணம்..........இவர்களில் பல சந்ததிகள் மாறினாலும் போர்க்குற்றம் பெரிதாக இன்றும் இவர்களை வாட்டி வதைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

https://en.m.wikipedia.org/wiki/Hermann,_Missouri
 

👆🏼அமெரிக்காவில் ஒரு குட்டி ஜேர்மனி. பெயர்கூட ஹேர்மன் ரைன்லாண்ட்.

5 minutes ago, குமாரசாமி said:

பலருக்கு ஜேர்மனி பெரிய வளமான நாடாக தெரியலாம். ஆனால் இவர்களுக்கு பல விடயங்களில் தன்னிச்சையாக செயல்பட அங்கீகாரம் இன்னும் இல்லை. குறிப்பாக அணு சம்பந்தமான விடயங்களில்......

காரணம்..........இவர்களில் பல சந்ததிகள் மாறினாலும் போர்க்குற்றம் பெரிதாக இன்றும் இவர்களை வாட்டி வதைக்கின்றது.

ஓம் இன்னும் ஆமி என்று வைத்திருக்கா ஏலாது? சிவில் பாதுகாப்பு படை என்ற பெயர்தான்? அதிலும் பல கட்டுப்பாடுகள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Kapithan said:

இவை Dutch பெயர்கள் அல்ல, யூதப் பெயர்கள்.....🤪

(கிளைமோற கொழுவியாச்சு.....anytime வெடிக்கலாம் 🥴)

நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் ஜேர்மனி இன்று ஒரு யூத நாடாக இருக்க வேண்டும்.

தங்கள் இனம் மாறாமலிருக்க குடும்ப பெயரை சந்ததி முழுக்க காவித்திரிவார்கள். தமிழிழனத்தில் அதை அழித்தே விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அமெரிக்காவில் ஒரு குட்டி ஜேர்மனி. பெயர்கூட ஹேர்மன் ரைன்லாண்ட்.

ஜேர்மனியில் இருந்து இடம் பெயர்ந்த ஆர்மிஸ் எனும் இனம் இன்னமும் பழைய வாழ்க்கை மின்சாரம் தொலைபேசி மோட்டார் வாகனங்கள் என்று எதுவுமே இல்லாமல் வாழ்கிறார்கள்.

பெனிசிலவேனியாவில் அவர்களின் இடங்களை சுற்றி பார்த்தேன்.

கூடுதலானவர்கள் விவசாயம் மற்றும் மரவேலை செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா, அமெரிக்கா உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவிக்கின்றன – பிரான்ஸ் குற்றச்சாட்டு

அவுஸ்ரேலியா, அமெரிக்கா உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவிக்கின்றன – பிரான்ஸ் குற்றச்சாட்டு

அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறுவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த ஒப்பந்த விடயத்தில் இரட்டை தன்மை, அவமதிப்பு மற்றும் விடயத்தினை மீறி செயற்படுதல் என்பன இடம்பெற்றுள்ளதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவுகஸ் என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பம் அவுஸ்ரேலியாவுக்கு வழங்கப்படும்.

இந்த நடவடிக்கையானது அவுஸ்திரேலியாவுடன் பிரான்ஸ் கைச்சாத்திட்டுள்ள பல பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை ரத்தாக்கியுள்ளது.

பிரித்தானியாவை உள்ளிடக்கிய குறித்த அவுகஸ் ஒப்பந்தமானது சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் முயற்சியாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள தூதுவரை மீள அழைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1240016

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனியில் இருந்து இடம் பெயர்ந்த ஆர்மிஸ் எனும் இனம் இன்னமும் பழைய வாழ்க்கை மின்சாரம் தொலைபேசி மோட்டார் வாகனங்கள் என்று எதுவுமே இல்லாமல் வாழ்கிறார்கள்.

பெனிசிலவேனியாவில் அவர்களின் இடங்களை சுற்றி பார்த்தேன்.

கூடுதலானவர்கள் விவசாயம் மற்றும் மரவேலை செய்கிறார்கள்.

இவர்களை பற்றி ஒரு விபரண படம் பார்துள்ளேன். இப்போதும் குதிரைகளை பயன்படுத்துகிறார்கள். 

நேரில் போய் பார்க்க கிடைத்த நீங்கள் லக்கி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.