Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தாம் கடிதம் கொடுத்ததால் 400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் குடியுரிமை வழங்குகின்றன என்கிற அதிர்ச்சி தகவலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளின் மையமாக இருப்பவர் சீமான். பெரியாரின் மேடைகளில் அரசியல் பயணத்தை தொடங்கிய சீமான், பாஜகவின் குரலாக தமிழகத்தில் பெரியார் சிலைகள் எதற்கு என கேள்வி எழுப்பி அதிர வைத்தார். அதன்பின்னர் பாஜகவின் கே.டி.ராகவன், பாலியல் விவகாரத்தில் சிக்கினார். இது தொடர்பான வீடியோவும் வெளியானது. ஆனால் சீமானோ, யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என ஆதரவு கொடுத்தார். அப்போதும் சீமான் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.

ராஜீவ் படுகொலை பேச்சு இதனையடுத்து எப்போதும் போல திராவிட அரசியல் கட்சிகள் குறிப்பாக திமுகவுக்கு எதிராக மட்டும் தமது தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார். அத்துடன் அடிக்கடி ராஜீவ்காந்தி படுகொலையை தமிழர்கள்தான் செய்தனர் என பேசியும் வருகிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே, ராஜீவ்காந்தி படுகொலை தங்கள் மீது போடப்பட்ட அபாண்டமான பழி என கூறிய பின்னரும் கூட சீமானும் அவரது கட்சி நிர்வாகிகளும் ஏன் இப்படி பேச வேண்டும் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் சீமான் இப்படிப் பேசுவதால் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்கள் விடுதலையாகக் கூடாது என பாஜகவைப் போல நினைக்கிறாரா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
 

சீமானுக்கு கடும் எதிர்ப்பு இதனால் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை, ஈரோடு என போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். 100 நாள் வேலைதிட்டத்தை கடுமையாக சீமான் விமர்சித்திருந்தார். அதை பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை வரவேற்றிருந்தார். இப்படி அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் சீமான் இப்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார். சீமானின் இந்த பேச்சுதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
 

பெரியாரிஸ்டுகள் வேலை சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பேசியதாவது: சீமானையும் மணியரசனையும் திட்டுவதுதான் திராவிடம் என்பது தெரியாமல் போய்விட்டது. இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பெரியாரிஸ்டுகளின் வேலையே எங்களை திட்டுவது என்பதாக போய்விட்டது. தேசிய இனங்களின் ஒருங்கிணைப்பை செய்திருக்க வேண்டியது யார்? இன்று கல்வி, மருத்துவ உரிமை என அனைத்தும் போய்விட்டது. எல்லா பொதுச்சொத்துகளும் தனியார் மயமாக்கிவிட்டன.
 

அகதிகளாகப் போகிறீர்கள்.. இங்கிருக்கிற முதல்வர்கள் அனைவரும் சந்தித்து தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நிலையை கொண்டு வந்திருக்க முடியாதா? அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். நம்மை மொழியில் இருந்து வெளியேற்றி நம்மை வரலாற்றில் இருந்து வெளியேற்றி பன்னெடுங்காலமாக இருந்த வழிபாட்டில் இருந்து வெளியேற்றி உழைப்பில் இருந்து வெளியேற்றி- அதுதான் 100 நாள் வேலை திட்டம், அந்த உழைப்புக்கு வேறுநபர்களை திணித்துவிடுவார்கள். ஈழத்தில் அடித்துவிரட்டப்பட்ட போது ஏதிலிகளாக, அகதிகளாக அந்த தமிழர்கள் வருவதற்கு ஒரு தாய்நிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் இந்த நிலத்தில் நாம் அடித்துவிரட்டப்பட்டால் எங்கு செல்வோம் என்கிற எச்சரிக்கை உணர்வு வேண்டும். நாளை நிச்சயம் இது நடக்கும்



https://tamil.oneindia.com/l

 

  • Replies 204
  • Views 12k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தன் வாயால் கெடுகிறார், அவர் கூறியது உண்மையாக இருந்தாலும் தேவையற்ற விடயம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்துக்கு 40 என்று பார்த்தால் 10 வருடங்களில் 400.

அங்கீகாரம் பெற்ற, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கட்சியின் பொறுப்பாளர் எனும் அளவில் அகதி கோரிக்கைக்கு காட்டப்படும் சில கடதாசிகளை எழுதி, சீமான் கையெழுத்து இடலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் நீங்கலாக.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ்லாந்து நாடுகளைவிட கனடா, அவுஸ்ரேலியா அரசுகள் சீமான் மீது இன்னும் உயர்ந்த மரியாதை வைத்திருக்கிறது. அந்த நாடுகளுக்கும் அவர் கடிதம் கொடுத்து அனுப்பி குடியுரிமை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களில் சீமான் பொய் பேசுகிறார் என்று சமூக வலை தளங்கள் எங்கிலும் காலம் காலமாக அவரை கழுவி ஊத்தி கொண்டிருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு பலமான   வாக்குமூலத்தை அவரது வாய்மூலமாக ஆதாரமாக கொடுத்திருக்கிறார்.

இந்த கருத்து, சீமான் எது சொன்னாலும் அவரை விட்டுக்கொடுக்காத  புலம்பெயர் நாடுகளில் உள்ள சீமான் ஆதரவாளர்களுக்கே  எதை சொல்லி சீமானின் இந்த பேச்சை சமாளிக்குறது என்ற தர்ம சங்கட நிலமையை ஏற்படுத்தாதா?.

முன்பும் ஒரு தடவை சிரியாவுக்கு ஒரு தமிழன் விமானத்தை கொண்டுபோய் அங்குள்ள அகதிகளை மீட்டு கனடா கொண்டு வந்தான் என்று யூடியூப்பில் வந்த ஒரு ஒரு நகைச்சுவை கதையை உண்மையென்று நம்பி கூட்டங்களில் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

ஒருமுறை கனடா போயிருந்தபோது ஓரிரு தமிழர்கள் கொடுத்த புகாரினால் பல மணிநேரமாக பின்னால் கைகளை மடக்கி விலங்கிடப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் உடனடியாக இந்தியா திருப்பி அனுப்பபட்டார்.

ஆக புலம் வந்தால் ஒரு சில தேசியவிரோத தமிழர்கள் புகார் கொடுத்தாலே அந்தநாட்டு அரசுகளினால் திருப்பி அனுப்பபடும் நிலையில் இருக்கும் சீமான்...

நான்  கடிதம் கொடுத்தால் , புலம் பெயர் நாடுகளுக்கு போகும் தமிழர்களுக்கு அந்த நாட்டு அரசுகள்  குடியுரிமை வழங்கும் . அந்த அளவிற்கு  நான் சக்தி வாய்ந்தவன் என்று சொன்னால் மிக பெரும் நகை முரணாக இருக்காதா?

ஊடகங்கள் ஒப்வொரு வீட்டினுள்ளும் ஸ்மார்ட்போன் வடிவில் ஒவ்வொரு மனிதனின் காற்சட்டை பைக்குள்ளூம் வந்துவிட்ட இந்த காலத்தில் உணர்ச்சிவச பேச்சுக்களில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும், அந்த காலங்கள் போல காலங்கள் ஓடிவிட்டால் மறந்து போய்விடும் யுகமல்ல இது , எத்தனை வருசம் ஓடினாலும் கூகுளில் தேடி தேடி ஆதாரம் போட்டு எள்ளி நகையாடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானும், அவருடைய தம்பிகளும் இணை பிரபஞ்சத்தில்( Parallel Universe) வாழ்கின்றார்கள், அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.😜

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

 

 

வீடியோ அதிக பிரசங்கித்தனமாக உள்ளது.

குடிவரவுத்துறை உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கடிதம் பெற்று கொடுத்தாலும் பலருக்கு ஸ்பொன்சர் செய்தால் வீசா கொடுக்கின்றார்கள் இல்லை. 

Edited by நியாயத்தை கதைப்போம்
மேற்கோள் திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை விசேஷமாகத் தான் இருக்கும் போல கிடக்கு!

"உண்மையாக இருந்தாலும் கூட..."என்று நம்புபவர்கள் இருக்கும் வரை சீமான் போன்றோருக்கு  எல்லாரும் பெருஞ்செவியர்களே! 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள் தெரியாவிட்டால் மூக்கை நுழைக்க கூடாது ☝️.

சீமான் அரசியல் தஞ்ச அங்கீகரிப்பையே “குடியுரிமை” என குறிப்பிட்டுள்ளார்.

மேலே “நியாயத்தை கதைப்போம் “ மேலோட்டமாக விடயத்தை / நடந்ததை கூறியுள்ளார். இது கூட விளங்காமல் அரை குறை விளக்கங்களுடன்….

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 தஞ்சம் கூட எப்படி கொடுப்பார்கள்? தஞ்சம் ஒரு நாட்டில் persecution உள்ளோருக்கே கிடைக்கும். நாதக  கட்சி நடத்துவது இந்தியாவில், நாதக இந்தியாவில் தேர்தலில் நிற்கும் அளவுக்கு சுதந்திரம் உள்ள கட்சி. நாதக உறுப்பினர் என்பதால் இந்திய தமிழர் யாருக்கும் வேறு நாடுகள் தஞ்சம் கொடாது.

அப்போ யாருக்கு சீமான் கடிதம் கொடுக்கிறார்?

இலங்கை தமிழருக்கு? இலங்கையில் ஒருவருக்கு உயிராபத்து என இந்தியாவில் இருந்து ஒருவர் கொடுக்கும் கடிதத்தை யார்  நம்புவார்கள்?

ஒரு சிலர் இவரின் கடிதத்தை கேட்டு பெற்றிருக்கலாம், ஆனால் அதுக்கு இந்த நாடுகளில் ஒரு மதிப்பும் இருந்திராது என்பதே உண்மை. ஆனால் 400 பேருக்கு நான் கடிதம் கொடுத்து “குடியுரிமை” கொடுத்தார்கள் என்பது சீமானின் வெடிப் புழுகே.

பிற்சேர்க்கை

மீரா, முதலில் உங்களை கோட் செய்தேன் ஆனால் - நீங்கள் எழுதியது எனக்கல்ல என இப்போ படுகிறது. ஆகவே கருத்தை எடி செய்துள்ளேன். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் மீரா,

இங்கே விசயம் தெரியாமல் யாரும் எழுதவில்லை.

1. சீமான் “குடியிரிமை” என்றார். தஞ்சம் என்று சொல்லவில்லை. ஆகவே நீங்கள்தான் ஆதாரமில்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்த படி சீமான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்கிறீர்கள்.

2. தஞ்சம் கூட எப்படி கொடுப்பார்கள்? தஞ்சம் ஒரு நாட்டில் persecution உள்ளோருக்கே கிடைக்கும். நாதக  கட்சி நடத்துவது இந்தியாவில், நாதக இந்தியாவில் தேர்தலில் நிற்கும் அளவுக்கு சுதந்திரம் உள்ள கட்சி. நாதக உறுப்பினர் என்பதால் இந்திய தமிழர் யாருக்கும் வேறு நாடுகள் தஞ்சம் கொடாது.

அப்போ யாருக்கு சீமான் கடிதம் கொடுக்கிறார்?

இலங்கை தமிழருக்கு? இலங்கையில் ஒருவருக்கு உயிராபத்து என இந்தியாவில் இருந்து ஒருவர் கொடுக்கும் கடிதத்தை யார்  நம்புவார்கள்?

ஒரு சிலர் இவரின் கடிதத்தை கேட்டு பெற்றிருக்கலாம், ஆனால் அதுக்கு இந்த நாடுகளில் ஒரு மதிப்பும் இருந்திராது என்பதே உண்மை. ஆனால் 400 பேருக்கு நான் கடிதம் கொடுத்து “குடியுரிமை” கொடுத்தார்கள் என்பது சீமானின் வெடிப் புழுகே.

 

கோசான்

சில விடயங்கள் பொது வெளியில் அலசப்பட முடியாமல் உள்ளது. ஆனால் அவரின் கடிதமும் ஐரோப்பாவில் வேலை செய்துள்ளது சிலருக்கு அரசியல் தஞ்ச கோரிக்கையில்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

சில விடயங்கள் தெரியாவிட்டால் மூக்கை நுழைக்க கூடாது ☝️.

சீமான் அரசியல் தஞ்ச அங்கீகரிப்பையே “குடியுரிமை” என குறிப்பிட்டுள்ளார்.

மேலே “நியாயத்தை கதைப்போம் “ மேலோட்டமாக விடயத்தை / நடந்ததை கூறியுள்ளார். இது கூட விளங்காமல் அரை குறை விளக்கங்களுடன்….

 

 

உள்ளூர் அரசியல்/மக்கள் பிரதிநிதிகள் உடனடி நாடுகடத்தல் போன்ற விடயங்களில் தலையிட்டு கோர்ட்டுக்கு அனுப்ப வைக்கும் செயல்முறை எல்லா நாடுகளிலும் இருக்கின்றன! 

ஆனால் "பிரஜாவுரிமைக்கும்" "தஞ்சக் கோரிக்கைக்கும்" வேறு பாடு தெரியாத ஒரு வெளிநாட்டு அரசியல் வாதியின் கடிதம் குடிவரவு முடிவில் மாற்றங்களை ஏற்படுத்துவது "இணை பிரபஞ்சத்தில்" கட்டாயம் நடக்கும்! 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கோசான்

சில விடயங்கள் பொது வெளியில் அலசப்பட முடியாமல் உள்ளது. ஆனால் அவரின் கடிதமும் ஐரோப்பாவில் வேலை செய்துள்ளது சிலருக்கு அரசியல் தஞ்ச கோரிக்கையில்.

இது புரியாமலில்லை மீரா. ஒரு வழக்கில் பல ஆதாரங்கள் கொடுக்கப்படும். அப்படி இவர் கொடுத்த கடிதமும் ஒரு ஆதாரம். 

இவர் கடிதம் கொடுத்த சில வழக்குகள் வென்றிருக்கும். சிலது தோற்றிருக்கும்.

இலங்கையில் இருக்கும் எம்பிக்களும்தான் கடிதம் கொடுப்பார்கள்.

அவ்வளவுதான்.  

ஆனால் நான் கடிதம் கொடுத்தேன் இந்த நாடுகள் அந்தஸ்து கொடுத்தன, என ஏதோ தன்வார்த்தைக்கு அப்படி மதிப்பு இருப்பது போல கூறுவது விபரம் தெரியாத தமிழ்நாட்டு அடி தட்டு மக்களை ஏமாற்றும் வேலை.

உங்களுக்கும் எனக்குமே தஞ்ச அந்தஸ்துக்கும், குடியுரிமைக்கும் வித்தியாசம் தெரிகிறது- கடிதம் கொடுத்த சீமானுக்கு தெரியாதா?

தெரியும். ஆனால் தமிழ்நாட்டு பாமர மக்களுக்கு தெரியாது என்பதால் அடிச்சு விடுகிறார்.

புலம் பெயர் தமிழன் சீமானின் மற்ற புரட்டுகளை நம்பினாலும் - இது ஒவ்வொருவருக்கும் தெரிந்த விசயம் - ஆகவே இந்த பொய்யை இலகுவாக இனம் கண்டு கொண்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இது புரியாமலில்லை மீரா. ஒரு வழக்கில் பல ஆதாரங்கள் கொடுக்கப்படும். அப்படி இவர் கொடுத்த கடிதமும் ஒரு ஆதாரம். 

இவர் கடிதம் கொடுத்த சில வழக்குகள் வென்றிருக்கும். சிலது தோற்றிருக்கும்.

இலங்கையில் இருக்கும் எம்பிக்களும்தான் கடிதம் கொடுப்பார்கள்.

அவ்வளவுதான்.  

ஆனால் நான் கடிதம் கொடுத்தேன் இந்த நாடுகள் அந்தஸ்து கொடுத்தன, என ஏதோ தன்வார்த்தைக்கு அப்படி மதிப்பு இருப்பது போல கூறுவது விபரம் தெரியாத தமிழ்நாட்டு அடி தட்டு மக்களை ஏமாற்றும் வேலை.

உங்களுக்கும் எனக்குமே தஞ்ச அந்தஸ்துக்கும், குடியுரிமைக்கும் வித்தியாசம் தெரிகிறது- கடிதம் கொடுத்த சீமானுக்கு தெரியாதா?

தெரியும். ஆனால் தமிழ்நாட்டு பாமர மக்களுக்கு தெரியாது என்பதால் அடிச்சு விடுகிறார்.

புலம் பெயர் தமிழன் சீமானின் மற்ற புரட்டுகளை நம்பினாலும் - இது ஒவ்வொருவருக்கும் தெரிந்த விசயம் - ஆகவே இந்த பொய்யை இலகுவாக இனம் கண்டு கொண்டார்கள்.

 

கோசான் ஏறகனவே மேலே கூறியுள்ளேன் 

“சீமான் தன் வாயால் கெடுகிறார்”  

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

கோசான் ஏறகனவே மேலே கூறியுள்ளேன் 

“சீமான் தன் வாயால் கெடுகிறார்”  

இது சரிதான்.

ஆனால் இது அதற்கும் மேல்.

இது பிரெக்சிற்காரர்களை போல், டிரம்பை போல் தெரிந்து கொண்டே பொய் சொல்லி அதில் அரசியல் ஆதாயம் அடையும் போக்கு.

நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரியாரை பற்றி, சில தமிழ்நாட்டு சாதிகளை பற்றி ஒரு தொகுதி புலம்பெயர் மக்களிடம் இப்படியான பொய்யைத்தான் பரப்பி வைத்துள்ளார்கள்.

அதே போல் ஒரு பொய்தான் இதுவும். ஆனால் இந்த பொய்யை புலம்பெயர் தமிழர் இலகுவில் இனம் காண கூடியதாய் உள்ளது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆக்கள் அசைலம் அடிக்க வாங்காத கடிதங்களா.. டக்கிளஸ் தேவானந்தா தொடங்கி.. சொறீலங்கா பொலிஸ் வரை வாங்கின ஆக்கள் தானே.

சீமான் சொன்னதில் என்ன தப்பு இருக்கோ யாம் அறியோம். 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nedukkalapoovan said:

எங்கட ஆக்கள் அசைலம் அடிக்க வாங்காத கடிதங்களா.. டக்கிளஸ் தேவானந்தா தொடங்கி.. சொறீலங்கா பொலிஸ் வரை வாங்கின ஆக்கள் தானே.

சீமான் சொன்னதில் என்ன தப்பு இருக்கோ யாம் அறியோம். 

ஒரேயொரு தப்புத் தான்: 'நான் கையெழுத்து வைத்தால் குடியுரிமை கொடுக்கிறார்கள்" என்று சீமான் சொல்வது புழுகு!

சில குடிவரவுத் தேவைகளுக்கு நாடுகள் கேட்கும்  பொலிஸ் ரிப்போர்ட்டும் சீமானின் கடிதமும் ஒன்றல்லவே? டக்கியின் கடிதத்திற்கும் சீமானின் கடிதத்திற்கும் ஒரே பெறுமதி தான்.  
 

  • கருத்துக்கள உறவுகள்

டக்கியர் காசை வாங்கிட்டு தான் சார்ந்தவைக்கு புலிகளால் ஆபத்துன்னு கடிதம் கொடுத்திருப்பார்.

சீமான் தன் கட்சி சார்ந்தோருக்கு அரசியல் எதிரிகளிடம் இருந்து அச்சுறுத்தல் என்று கொடுத்திருப்பார்.. ஏலவே சீமான் ஆதரவாளர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.. தி மு க கூலிகளால்.

சீமான் சொன்னதன் அர்த்தம்.. தனது கடிதமும் ஆதாரமாகி.. அகதி அந்தஸ்து மற்றும் வேறு வகையிலான.. நிரந்தரக் குடியுரிமை பெற பாவிக்கப்பட்டிருப்பதை தான். 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

டக்கியர் காசை வாங்கிட்டு தான் சார்ந்தவைக்கு புலிகளால் ஆபத்துன்னு கடிதம் கொடுத்திருப்பார்.

சீமான் தன் கட்சி சார்ந்தோருக்கு அரசியல் எதிரிகளிடம் இருந்து அச்சுறுத்தல் என்று கொடுத்திருப்பார்.. ஏலவே சீமான் ஆதரவாளர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.. தி மு க கூலிகளால்.

சீமான் சொன்னதன் அர்த்தம்.. தனது கடிதமும் ஆதாரமாகி.. அகதி அந்தஸ்து மற்றும் வேறு வகையிலான.. நிரந்தரக் குடியுரிமை பெற பாவிக்கப்பட்டிருப்பதை தான். 

நெடுக்கர், mansplaining தேவையில்லை. தமிழில் சீமான் சொன்னதை விளங்கிக் கொள்ளக் கூடியவர்கள் தான் இங்கே இருக்கிறார்கள். 

மேற்கு நாடுகளில் "புலிகளால் ஆபத்து" என்று அசைலம் கேட்பவர் சொன்னால் ஆதாரம் காட்ட வேண்டிய தேவை குறைவு. ஏனெனில் அவர்கள்  பல மேற்கு நாடுகளில் தடை செய்யப் பட்ட இயக்கம். அரசினால் ஆபத்தென்றால் "கைது செய்த பதிவிருக்கிறதா?" எனச் சில நாடுகளில் கேட்டிருக்கக் கூடும்! எனவே, பல தேசிய வீரர்களே புலிகளால் ஆபத்து எனச் சொல்லி அசைலம் எடுத்தனர் - இது இரகசியமல்ல! இப்படி இருக்கையில் டக்கி கொடுக்கும் கடிதம் ஏன் அவசியம்? டக்கிக்கு மேற்கு நாடுகளில் அவ்வளவு மரியாதை என்கிறீர்களா? 😂

யார் சொன்னாலும் ஒரு புழுகை, பொய்யை பூசிப் பூசி மினுங்க வைக்க வேண்டிய அவசியமேதுமில்லை!

Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

எங்கட ஆக்கள் அசைலம் அடிக்க வாங்காத கடிதங்களா.. டக்கிளஸ் தேவானந்தா தொடங்கி.. சொறீலங்கா பொலிஸ் வரை வாங்கின ஆக்கள் தானே.

சீமான் சொன்னதில் என்ன தப்பு இருக்கோ யாம் அறியோம். 

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் வைக்கோ கடிதம் கொடுத்து, தமிழகத்தில் ஈழ அகதி முகாமில் இருந்து வந்து அகதி அந்தஸ்து கிடைத்த ஒருவரை எனக்கு தெரியும். 

பிரபாகரன் அண்ணர், மனோகரன், கப்பலில் வேலை செய்து, தமிழகத்துக்கு, தாய், தந்தை பார்க்க போய் வந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவரை கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்த திட்டம் போட்டது, மத்திய அரசு.

நாம் தமிழரின் பொது செயலாளர், அய்யா தடா சந்திரசேகர், டெல்லிக்கு அழைத்து போய், UNHRC மூலம் டென்மார்க் தூதரகத்தினை அணுகி, தேவையான கடிதங்களை, பத்திரங்களை கொடுத்து, அகதி அந்தஸ்து வாங்கி கொடுத்து, அனுப்பி வைத்தனர்.

அது எப்படி நடந்தது? 🤔

***

அகதிகளாக, வந்திருந்தால் தெரியும், அவர்கள் அவலம். கிடைக்கும் எந்த கடிதத்தினையும் வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

கிடைத்த பின்னர், அதனால் தான் கிடைத்தது என்று, நன்றியுடன் சொல்லி இருப்பார்கள். கொடுத்தவர்கள் மகிழ்வுடன், வேறு யாருக்கும் அதே உதவி செய்வார்கள் என்று.

அட, நாம வந்து சேர்ந்து விட்டோம்.... அகதி அந்தஸ்து கிடைத்து, பிள்ளைகளையும் வளர்த்து விட்டோம். யாரு எக்கேடு கேட்டால் என்ன என்று நினைப்பது, துடிக்கும் அகதிகளுக்கு கிடைக்கும், சிறு, கொழு கொம்பை இல்லாமல் செய்யும் ஈனச் செயல்.

உதவி செய்யாவிடில், உபத்திரவம் செய்யாமல், கடந்து போவது நல்லது. 

நான். விசா எடுத்து, மேல் படிப்பு படிக்க வந்தனான் எல்லோ, பல்கலைக்கழக படிப்பு முடித்து, migrate பண்ணின ஆள் எல்லோ என்று அடித்து விடுபவர்களானால்.... பெரும் தன்மையுடன் நகர்ந்து செல்லலாமே...

திரியை ஆரம்பித்தவரோ, தென்பகுதியில் பிறந்த... மத்திய கிழக்கில்....வேலை பார்க்கும், அகதி அவலம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவர்.

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

 

அது எப்படி நடந்தது? 🤔

பதிலை நீங்களே எழுதி விட்டு எப்படி என்கிறீர்களே?

வை.கோ இந்திய பா.உ! அவர் ஒரு கடிதம் கொடுக்கும் நிலையில் இருந்திருக்கலாம்! அதனால் தான் அசைலம் கிடைத்தது என்பதை வை.கோவே மைக் போட்டுச் சொல்ல மாட்டார் - ஏனெனில் அவருக்கே தன் கடிதம் பல ஆவணங்களில் ஒன்றெனத் தெரியும்!

சரி, தடா சந்திரசேகர் கொடுத்த ஆவணங்களில் சீமானின் கடிதமும் இருந்ததா? அகதிகள் உயர்ஸ்தானிகரிடம் கூட்டிச் செல்வது வேறு எவரும் செய்யக் கூடியதல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni இங்கு சீமான் எதனை அடிப்படையாக வைத்து கூறினார் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் சீமானை எதிர்த்து எழுத வேண்டும் என்று எழுதுகிறார்கள். எழுதிவிட்டு போகட்டும். 

ஆனால் சீமான் முதலில் தேவையற்ற விடயங்களை மேடைகளில் பேட்டிகளில் பேசுவதை நிறுத்த வேண்டும்.

90 களில் இலங்கையில் கூட, வெளிநாட்டிற்கு யாரும் சென்றால் முதலில் கேட்பது “ காட் கிடைச்சிட்டுதா” “சிற்றிசன் கிடைச்சிட்டுதா” என்று தான். 2000 ற்கு பின்னர் தான் வீசா என்று கேட்க ஆரம்பித்தார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாகிராமப்புற மக்களுக்கு அகதிஅந்தஸ்த்து எண்டா என்னெண்டு தெரியா.. குடி உரிமைஎண்டா கொஞ்சம் விளங்கும்.. அவங்களுக்கு ஏற்றமாதிரி பேசி இருக்கிறார்..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

ஆனால் சீமான் முதலில் தேவையற்ற விடயங்களை மேடைகளில் பேட்டிகளில் பேசுவதை நிறுத்த வேண்டும்

அங்கே நடப்பது நூதனமான ஒரு அடக்குமுறை. வருகின்ற இளம் சந்ததியினருக்கு தமிழ்நாட்டையும் தாண்டி ஒரு அரசியல் இருக்கின்றது, ஒரு நிலம் சார்ந்து தங்களது வாழ்வாதாரத்தை தொடரலாம் என்பதே சூசகமாக கூறவேண்டும்.  நம்பிக்கை அளிக்க வேண்டும்.

சிலவற்றை அவரின் தெளிவு நிமித்தம் சிலவற்றை குறிப்பிடுகின்றார் போல். ஏற்பதும், விடுவதும் அவரவர் முடிவு.

இலங்கையில் ஈழத்தில் கிட்டத்தட்ட இதே மாதிரியான சூழ்நிலை அப்போது இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

@Nathamuni இங்கு சீமான் எதனை அடிப்படையாக வைத்து கூறினார் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் சீமானை எதிர்த்து எழுத வேண்டும் என்று எழுதுகிறார்கள். எழுதிவிட்டு போகட்டும். 

ஆனால் சீமான் முதலில் தேவையற்ற விடயங்களை மேடைகளில் பேட்டிகளில் பேசுவதை நிறுத்த வேண்டும்.

90 களில் இலங்கையில் கூட, வெளிநாட்டிற்கு யாரும் சென்றால் முதலில் கேட்பது “ காட் கிடைச்சிட்டுதா” “சிற்றிசன் கிடைச்சிட்டுதா” என்று தான். 2000 ற்கு பின்னர் தான் வீசா என்று கேட்க ஆரம்பித்தார்கள்.

நல்லது மீரா... இது எமக்கானது அல்ல. அங்குள்ள லோக்கல் ஆட்களுக்கானது.... அப்படித்தான் நாம் பார்க்கவேண்டும்.

இங்கே இருந்து கொண்டு, எமக்கானது என்று பார்த்தால், புரிதல் சிக்கல் உண்டாகுமல்லவா...

மனிதர் கொடுத்திருக்கலாம். வாங்கியவர்கள், அதனால் பலனடைந்ததாக சொல்லியும் இருக்கலாம். அவர் நம்பியும் இருக்கலாம். அதனால் அதனை சொல்லியும் இருக்கலாம்.

இங்கே முழு உரையும் இணைத்திருக்கிறேன். taken out of context ஆகவும் இருக்கலாம்.... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.