Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இனமா? மொழியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@tulpen உங்களின் இந்த விவாதம் சில விரிவான நோக்குகளை திறந்தாலும், உங்களிடம் உங்கள் கருத்து தொடர்பான ஒரு கேள்வி இருக்கிறது.

ஒரு மொழி மருவி இன்னொரு மொழி அடையாளம் உருவாகி ஒரு  இனம் உருவானதை சேர மன்னனின் உதாரணத்தை குறிப்பிட்டிருக்கிறீர்கள். 

இப்படி நடந்திருக்கிறதே தவிர இன்னொரு இனத்தின் அடையாளமாகிய மொழியை பேசுவதால் அந்த இனமாகிவிட முடியுமா. 

குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் புதிய மொழியை உருவாக்கவில்லை மாறாக இன்னொரு இனத்தின் மொழியை பேசுகிறார்கள். அதனால் அந்த இனமாகிவிடமுடியாது.

 ஜேர்மன் மொழி பேசுபவர்கள்  எல்லோரும் ஜேர்மனியர்கள் அல்லர்.  வாலி குறிப்பட்டது போல மரபுவழி தாயகமும் ஒரு இன அடையாளமாக தேவைப்படுகிறது. அதனால் தான் தமிழினத்தை தக்கவைக்க மரபுவழி தாயகம் வேண்டி போராடினார்கள். 

என்னைப்பொறுத்தவரை எத்தனை தலைமுறை சென்றாலும் எவனொருவன் தன்னை தமிழனாக அடையாளப்படுத்துகிறானோ, தன்னை தமிழனாக முன்னிலைப்படுத்துகிறானோ, தன்னை தமிழன் என்று சொல்வதில் பெருமிதப்படுகிறானோ அவனே தமிழன். 

இது புலம்பெயர் தமிழனுக்கும் பொருந்தும். 

  • Replies 65
  • Views 6.8k
  • Created
  • Last Reply

@முதல்வன் நான் கூறுவது குறுகிய காலத்தை பற்றியதல்ல. நீண்ட கால நோக்கில் தமிழை மறந்த சந்ததியினர் தமிழர் என்ற அடையாளத்தை இழப்பர். வாழும் நாட்டின் அடையாளத்தையே கொண்டிருப்பர். 

தொடர்சியாக தமது சந்திதிக்கு தமிழ் மொழியைக்  கடத்தி அவர்கள் தமிழ் பேசினால்தமிழர் என்ற அடையாளத்தை தக்கவைப்பர். 

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். ஒரு இனம் மொழி, கலாச்சாரம், மரபுவழி தாயகம் போன்றவற்றால் அடையாளப்படுத்தப்பட்டு அழியாமல் இருக்கிறது. 

பல்வேறு சந்த்ததிக்குப்பின்னரும் தம்மை தமிழராக அடையாளப்படுத்த விரும்பாவிட்டால் அவர்கள் தமிழராக மாட்டார்கள். 

இதுதான் தலைகீழாக தமிழ்நாட்டில் நடக்கிறது. தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழ்நாட்டில் நன்றாக தமிழ்பேசி தமிழிலேயே வாழ்க்கை நடத்தினாலும் தம்மை தமிழராக அடையாளப்படுத்த விரும்பாதவர்கள் தமிழராக மாட்டார்கள். 

@முதல்வன் தம்மை தமிழராக அடையாளப்படுத்த விரும்பாத எவரும் தமிழராக மாட்டார்கள். அது எல்லா மொழிக்கும் பொருந்தும். அடையாளப்படுத்த விரும்புபவர்கள் தமிழர்களே. 

இதில்  ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். தமிழ் சினிமாவும் சினிமா பாடல்களும் இல்லை என்றால் இப்போதுள்ள இரண்டாம் தலைமுறையினரில் பெருமளவானோர் தமிழை விட்டு அந்நியப்பட்டிருப்பார்கள்.  நன்றி தமிழ் சினிமா பாடல்கள். 😂 நன்றி ரஹமான். 

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான விசயமா இருக்கு.... கோசனை இன்னும் காணம்....

பிற்காயினோட மினக்கெடுறார் போல.... 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

@முதல்வன் நான் கூறுவது குறுகிய காலத்தை பற்றியதல்ல. நீண்ட கால நோக்கில் தமிழை மறந்த சந்ததியினர் தமிழர் என்ற அடையாளத்தை இழப்பர். வாழும் நாட்டின் அடையாளத்தையே கொண்டிருப்பர். 

தொடர்சியாக தமது சந்திதிக்கு தமிழ் மொழியைக்  கடத்தி அவர்கள் தமிழ் பேசினால்தமிழர் என்ற அடையாளத்தை தக்கவைப்பர். 

மொரீசியஸ் நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் தெரியாதாமே.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

@முதல்வன் தம்மை தமிழராக அடையாளப்படுத்த விரும்பாத எவரும் தமிழராக மாட்டார்கள். அது எல்லா மொழிக்கும் பொருந்தும். அடையாளப்படுத்த விரும்புபவர்கள் தமிழர்களே. 

நீங்கள் அடையாளப்படுத்த விரும்பாவிடினும்...... நீஙகள் யார் என்று புரிந்து கொள்ளப்படுவீர்கள்....👌

1 minute ago, ஏராளன் said:

மொரீசியஸ் நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் தெரியாதாமே.

அப்ப தமிழர் என்று எப்படி சொல்வீர்கள்......

அவர்கள் தமிழர்கள் என்பதை, அவர்கள் மறந்தாலும், அவர்கள் வாழும் சூழல் மறக்காது....

அவர்கள் தமிழ் கற்க வசதி இருக்கவில்லை என்பதே காரணம்....

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

நீங்கள் அடையாளப்படுத்த விரும்பாவிடினும்...... நீஙகள் யார் என்று புரிந்து கொள்ளப்படுவீர்கள்....👌

அப்ப தமிழர் என்று எப்படி சொல்வீர்கள்......

அவர்கள் தமிழர்கள் என்பதை, அவர்கள் மறந்தாலும், அவர்கள் வாழும் சூழல் மறக்காது....

அவர்கள் தமிழ் கற்க வசதி இருக்கவில்லை என்பதே காரணம்....

வேறு ஏதோ ஒன்று அவர்களை தமிழர்களாக அடையாளப்படுத்துகிறது என நினைக்கிறேன். பெயர், வழிபாட்டு முறைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

மொரீசியஸ் நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் தெரியாதாமே.

நான் பல்லகலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் கூட இருந்தவர் பிரித்தானியாவின் மொரிசியஸ் நாட்டு தூதுவரின் மகன் - ஒன்று,இரண்டு எண்ணத்தெரியும். அவர்களின் தாய்மொழி பிரெஞ்சு. அவர்களின் தமிழ் அடையாளம் சைவசமயம். ஆனால் அவர்களின் நாணயங்களில் தமிழும் இடம் பிடித்துள்ளது - அடையாளத்துக்காக. அவரிலும் பார்க்க எங்களோடு கூட இருந்த மலேசிய சீனன் நன்றாக தமிழ் பேசுவார் - மலேசியாவில் ஒரு பண்ணைக்கு சொந்தக்காரர். தமிழர்களை அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பதால் தான் தமிழ் கற்றிருப்பதாக சொன்னார்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

வேறு ஏதோ ஒன்று அவர்களை தமிழர்களாக அடையாளப்படுத்துகிறது என நினைக்கிறேன். பெயர், வழிபாட்டு முறைகள்.

நீஙகள் எந்த நாட்டுக்கு போனாலும்..... கேட்டே அறிந்து கொள்வார்கள்.... எமக்கு தெரியாமல் இருந்தாலும்... விலாவாரியா சொல்வார்கள்...

உதாரணமாக.......... ஊரில்.... கிழடுகள்.... தம்பி எவ்விடம்..... என்று ஆரம்பித்து...... நம்ம பூர்வீகத்தை அப்படியே ஒப்பிப்பார்கள்.

அதே போலவே..... நீஙகள் இலங்கையர் என்றால்..... தமிழரா, சிங்களவரா என்பார்கள்..... உங்களுக்கு தெரியவில்லை என்றால்.... விடமாட்டார்கள்..... வடக்கோ.... தெற்கோ, மத்தியோ என்று கேட்டு..... ஒரு முடிவுக்கு வந்து எமக்கும் அதை சொல்வார்கள்.

நாம் தமிழராய் இருந்து, அவர்கள் நம்மை சிங்களவர் என்றால்..... கதை கந்தல்.... ஆகவே... நமக்குள் தேடலை நடத்தி, விடையை கண்டு்ம் இருப்போம்.

அந்நியர் என்றால் விலகிப் போகலாம்..... நன்கு வியாபார ரீதியில் தெரிந்தவர், வேலை யிடம் என்றால் கோபிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நான் பல்லகலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் கூட இருந்தவர் பிரித்தானியாவின் மொரிசியஸ் நாட்டு தூதுவரின் மகன் - ஒன்று,இரண்டு எண்ணத்தெரியும். அவர்களின் தாய்மொழி பிரெஞ்சு. அவர்களின் தமிழ் அடையாளம் சைவசமயம். ஆனால் அவர்களின் நாணயங்களில் தமிழும் இடம் பிடித்துள்ளது - அடையாளத்துக்காக. அவரிலும் பார்க்க எங்களோடு கூட இருந்த மலேசிய சீனன் நன்றாக தமிழ் பேசுவார் - மலேசியாவில் ஒரு பண்ணைக்கு சொந்தக்காரர். தமிழர்களை அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பதால் தான் தமிழ் கற்றிருப்பதாக சொன்னார்.

தமிழர்கள்.... அடிமையாக வைத்திருகிறோம் என்று ஒரு கிறுக்கன் சொன்ன போது.... யூட்டருக்கு கோபம் வரவில்லையா?

நீங்கள் சொல்லும்....ஆண்டான்... அடிமைக்கதை.... முடிந்து பல காலம் ஆகிறதே.

உலகில் எந்த நாட்டிலும் அடிமைத்தனம் இல்லாதவாறு, ஜநா விதிமுறைகள் உள்ளதை அறியவில்லையா?

காலம் மாறி..... விலங்குகளை கூண்டில் வைத்திருப்பதே தவறு என்று சொல்லும் காலத்தில் அல்லவா, வாழ்கிறோம்.

தமிழர்கள் அடிமைகளாக அல்ல, குறைவாக இருந்தாலும், உழைப்புக்கு, ஊதியம் பெறும் கூலிகளாகவே சென்றார்கள்.

முக்கியமாக, தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்ற அவலத்தில் இருந்து விலகி ஓடவே..... கூலிகளாக சென்றார்கள்.

அவர்களுக்கே... கல்வி மறுக்கப்பட்டிருந்ததால்..... சென்ற நாடுகளில், அவர்கள் சந்ததிக்கு கடத்த முடியாத அவலம்...

ஆனாலும் தமது, மத, கலாச்சாரங்களை விடவில்லை.

என்றாவது ஒரு நாள், தமிழர்கள், தமிழ் கற்கலாம். அதற்கான தொழில் நுட்பம் வந்துள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்லும்....ஆண்டான்... அடிமைக்கதை.... முடிந்து பல காலம் ஆகிறதே.

உலகில் எந்த நாட்டிலும் அடிமைத்தனம் இல்லாதவாறு, ஜநா விதிமுறைகள் உள்ளதை அறியவில்லையா?

காலம் மாறி..... விலங்குகளை கூண்டில் வைத்திருப்பதே தவறு என்று சொல்லும் காலத்தில் அல்லவா, வாழ்கிறோம்.

பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை - கேள்விப்பட்டதில்லையா?

ஜநா விதிமுறைகள்’ ??? என்ன நாதம், பகிடிக்கு தானே ஐ.நா. பற்றி இவ்வளவு உயர்வான மதிப்போடு எழுதினீர்கள், இல்லையா? 😃

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை - கேள்விப்பட்டதில்லையா?

ஜநா விதிமுறைகள்’ ??? என்ன நாதம், பகிடிக்கு தானே ஐ.நா. பற்றி இவ்வளவு உயர்வான மதிப்போடு எழுதினீர்கள், இல்லையா? 😃

December 2, international anti-slavery day (day of the abolition of slavery)

https://www.un.org/en/observances/slavery-abolition-day

யூட்டர், நிறைய தேடவேணும், வாசிக்க வேண்டும்.

நவீன அடிமைத்தனம், ஒரு மனிதனின் இயலாமை, இன்னும் ஒரு மனிதனின் சுயநலன் காரணமாக மறைமுகமாக நடந்தாலும்.... அரசுகள்அதை சட்டபூர்வமாக அனுமதிக்க முடியாது. பிடிபட்டால் தண்டணை....

உங்கள் சீன நண்பர், வேலைக்கு வைத்திருந்த ஆட்களை, அடிமைகளாக நிணைத்து சொல்லி இருக்கிறார். நீஙகள் கோபமுறாமல் வந்து விட்டீர்கள்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

மதம் மாறினால் அவர்கள் முன்னாள் தமிழர்கள் என்றீர்கள். அது எனக்குப் புரியவில்லை. அப்படியானால் தந்தை செல்வா முன்னாள் தமிழரா?  அன்ரன்  பாலசிங்கம் முன்னாள் தமிழரா? அப்படியல்லவே! 

ஆனால் மொழி மாறினால் அவர்களின் வழித்தோன்றல்கள் இனம் மாறுவர்

தந்தை செல்வா அன்ரன் பாலசிங்கம் போன்ற கிறிஸ்தவர்கள் ஒருபோதும் தங்களை தமிழர்கள் இல்லையென்று சொல்லிக்கொண்டதில்லை, இன்னும் சொல்லபோனால் தமிழர்களின் அரசியல் ஆயுத போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு அளப்பரியது.

நான் இங்கே அர்த்தப்படுத்தியது தமிழை பேசிக்கொண்டு தமிழில் படித்துக்கொண்டு தமிழில் அன்றாட தமது காரியங்களை ஆற்றிக்கொண்டு தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் தங்களை யாராவது தமிழர்கள் என்று அழைத்தால் அதி உஷ்ணமாகி கோபடும் இஸ்லாமியர்கள் பற்றியே.

மொழிமாறினால் இனம் ஒருபோதும் மாறாது, நீங்கள் என்னதான் வேற்றுமொழிக்கு மாறினாலும் அந்த இனத்தின் பூர்வீக மக்கள் உங்களை தமது இனமாக ஒருபோதும் பார்க்கமாட்டார்கள்.

உதாரணத்திற்கு ஜேர்மனியில் பல தலைமுறைகளாக வாழ்ந்தும் , ஜெர்மனிய மொழியை அட்சர சுத்தமாக பேசிகொண்டும் வாழும் துருக்கியர்களை ஜெர்மனின் பூர்வக மக்கள் ஒருபோதும் ஜெர்மனியர்கள் என்று  மனப்பூர்வமாக அழைக்கமாட்டார்கள், அவர்கள் பார்வையில் எப்போதும் அவர்கள் துருக்கியர்களே.

அதேபோல் பல வெள்ளையர்கள் நாடுகளில் சீன மொழி தெரியாமல் வாழும் நாட்டின் மொழியை மட்டுமே பேசிக்கொள்ளும்  ஒரு சில சீனர்களை நான் கண்டிருக்கிறேன், அதற்காக அவர்களை ஒருபோதும் அந்தநாட்டு பூர்வீக  மக்கள் தமது இனம் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள் & ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, valavan said:

நான் இங்கே அர்த்தப்படுத்தியது தமிழை பேசிக்கொண்டு தமிழில் படித்துக்கொண்டு தமிழில் அன்றாட தமது காரியங்களை ஆற்றிக்கொண்டு தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் தங்களை யாராவது தமிழர்கள் என்று அழைத்தால் அதி உஷ்ணமாகி கோபடும் இஸ்லாமியர்கள் பற்றியே.

என்ன வல்லவன், நானொருத்தன் இங்கே இருப்பதை கண்டும் காணாத மாதிரி இசுலாமியர்களை குறைகூறுகிறீர்களே?      நித்தியானந்தம் அடைந்திருந்த நான் நாதமுனி சாட்சியாக 😃  எப்போதோ பேர்கராகி, பிறகு பௌத்தராகி சிங்களவனாகி இருக்கிறேன், நீங்கள் கண்டுகொள்ளவில்லையே? 🥲 என்னைப்போல எத்தனைபேர் 🤧

35 minutes ago, valavan said:

தந்தை செல்வா அன்ரன் பாலசிங்கம் போன்ற கிறிஸ்தவர்கள் ஒருபோதும் தங்களை தமிழர்கள் இல்லையென்று சொல்லிக்கொண்டதில்லை, இன்னும் சொல்லபோனால் தமிழர்களின் அரசியல் ஆயுத போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு அளப்பரியது.

நான் இங்கே அர்த்தப்படுத்தியது தமிழை பேசிக்கொண்டு தமிழில் படித்துக்கொண்டு தமிழில் அன்றாட தமது காரியங்களை ஆற்றிக்கொண்டு தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் தங்களை யாராவது தமிழர்கள் என்று அழைத்தால் அதி உஷ்ணமாகி கோபடும் இஸ்லாமியர்கள் பற்றியே.

மொழிமாறினால் இனம் ஒருபோதும் மாறாது, நீங்கள் என்னதான் வேற்றுமொழிக்கு மாறினாலும் அந்த இனத்தின் பூர்வீக மக்கள் உங்களை தமது இனமாக ஒருபோதும் பார்க்கமாட்டார்கள்.

உதாரணத்திற்கு ஜேர்மனியில் பல தலைமுறைகளாக வாழ்ந்தும் , ஜெர்மனிய மொழியை அட்சர சுத்தமாக பேசிகொண்டும் வாழும் துருக்கியர்களை ஜெர்மனின் பூர்வக மக்கள் ஒருபோதும் ஜெர்மனியர்கள் என்று  மனப்பூர்வமாக அழைக்கமாட்டார்கள், அவர்கள் பார்வையில் எப்போதும் அவர்கள் துருக்கியர்களே.

அதேபோல் பல வெள்ளையர்கள் நாடுகளில் சீன மொழி தெரியாமல் வாழும் நாட்டின் மொழியை மட்டுமே பேசிக்கொள்ளும்  ஒரு சில சீனர்களை நான் கண்டிருக்கிறேன், அதற்காக அவர்களை ஒருபோதும் அந்தநாட்டு பூர்வீக  மக்கள் தமது இனம் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள் & ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

வல்லவன், 

நான் இங்கு குறிப்பிட விடயம் மொழி இழக்கப்படும் போது அவர்களின் நிகழ்கால அடையாளம் மறையும் என்பதை மட்டுமே. அதற்கான உதாரணமாகவே சேர நாட்டை கூறினேன்.

எமது சந்ததி மொழியை கற்காமல் விட்டால் மூன்று அல்லது நான்கு தலைமுறை போக இலங்கை அல்லது ஆசிய பூவீகத்தை கொண்ட ஐரோப்பிய  நாட்டு மக்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்களே தவிர தமிழர் என்று அல்ல. சிறந்த உதாரணம் சூரிநாம். அங்கு வாழும் மக்களில் ஒரு பிரிவினர் இந்தியாவையும் ஆபிரிக்காவையும் பூர்வீகமாக கொண்ட சூரிநாம் பிரஜைகள் என்று தான் பதிவுகள் கூறுகின்றனவே தவிர அவர்கள் பேசிய மொழியோ இனமோ அடையாளப்படுத்தப்படவில்லை. 

எமது விருப்பம் வேறு ஜதார்ததம் வேறு.  மிக அண்மையில் அமைவிடத்தை கொண்ட துருக்கி என்ற நாட்டுடன் தொடர்ச்சியாக தொடர்பினை பேணும  மக்கள் துருக்கியராக அடையாளப்படுத்தப்படுவது இயல்பானதே. அந்தாலியா பகுதியுல் உள்ள பல உல்லாச ஹொட்டேல்கள் ஜேர்மனிய துருக்கியருக்கு  சொந்தமானவை. அங்குள்ள ஹொட்டேல்களில் வேலை செய்பவர களில் பலர் ஜேர்மனிய பிரஜைகள். நிலத்தொடர்பு அவர்களை இணைத்துள்ளது. 

நீர்கொழும்பு பகுதியில் மொழியை இழந்த நம்மவர் சிங்களவர்களாகி உள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் ஒரு இனம்  ஆனால் தமிழ் ஒரு மொழியாகும்.  

1...தமிழினம். 

2...தமிழ்   இது ஒரு தமிழ்  ஆசிரியர் சொன்ன கருத்து 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, tulpen said:

நீர்கொழும்பு பகுதியில் மொழியை இழந்த நம்மவர் சிங்களவர்களாகி உள்ளனர். 

சிங்களவர் ஆகி உள்ளனர்.... சிங்களவர் இல்லை.....

கண்டிச்சிங்களமே, கரையோர சிங்களத்தை ஏற்பதில்லையே...... பர்ணாடோ, டீ சில்வா..... சிங்களவர் இல்லை.

பெளத்தர் மட்டுமே சிங்களம்....

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

ஆங்கிலம் பேசும் ரம்ப் ஆங்கிலேயரா?

2. ஜேர்மானிய பெற்றோருக்கு பிறந்ததால் ரம்ப் ஜேர்மானியரா?

நடைமுறை ஊதாரணங்களை காட்டியுள்ளீர்கள்.
ஆங்கிலம் பேசும் ரம்ப் தன்னை யேர்மனியராக சொல்லவும் மாட்டார்.யேர்மனியர்கள் ஆராய்ச்சி செய்து அவர் எங்கள் ஆள் என்று சொல்லவும் மாட்டார்கள். அவர் அமெரிக்கர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர் அமெரிக்கர் தான்.

உண்மையான கருத்து 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நடைமுறை ஊதாரணங்களை காட்டியுள்ளீர்கள்.
ஆங்கிலம் பேசும் ரம்ப் தன்னை யேர்மனியராக சொல்லவும் மாட்டார்.யேர்மனியர்கள் ஆராய்ச்சி செய்து அவர் எங்கள் ஆள் என்று சொல்லவும் மாட்டார்கள். அவர் அமெரிக்கர் தான்.

ரம்ப் அவர்கள் தன்னில் ஓடுவது ஜேர்மன் ரத்தம் என பலமுறை கூறியுள்ளார்....ஆகையினால்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

எமது விருப்பம் வேறு ஜதார்ததம் வேறு.  மிக அண்மையில் அமைவிடத்தை கொண்ட துருக்கி என்ற நாட்டுடன் தொடர்ச்சியாக தொடர்பினை பேணும  மக்கள் துருக்கியராக அடையாளப்படுத்தப்படுவது இயல்பானதே. அந்தாலியா பகுதியுல் உள்ள பல உல்லாச ஹொட்டேல்கள் ஜேர்மனிய துருக்கியருக்கு  சொந்தமானவை. அங்குள்ள ஹொட்டேல்களில் வேலை செய்பவர களில் பலர் ஜேர்மனிய பிரஜைகள். நிலத்தொடர்பு அவர்களை இணைத்துள்ளது. 

ஜேர்மனியில் மூன்றாவது சந்ததியாக வாழும் துருக்கிய இளம் சமுதாயத்தினர் என்றுமே தாம் ஜேர்மன் இனத்தவர்கள் என்று கூறுவதில்லை.அரசியல் ரீதியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தாலும் தம் இனத்தை மறுக்க / மறக்க மாட்டார்கள்..

இங்கிலாந்து அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் மாற்று இனத்தவர் அரசியலில் முதன்மை வகித்தாலும் தமது இன மொழி தெரியா விட்டாலும்  அவர்களது பூர்வீகம் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஒரு காலத்தில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சராக  இராசரத்தினம் பதவி வகித்தார். இவர் சிங்கப்பூர் நாட்டவராக இருந்தாலும் தமிழினத்தவராகவே அனைவராலும் பார்க்கப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ரம்ப் அவர்கள் தன்னில் ஓடுவது ஜேர்மன் ரத்தம் என பலமுறை கூறியுள்ளார்....ஆகையினால்.....

எங்கே பலமுறை சொன்னார் ? சாமியாரின் கனவிலா? 💤🧐 😴

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, கற்பகதரு said:

எங்கே பலமுறை சொன்னார் ? சாமியாரின் கனவிலா? 💤🧐 😴

ஒரு சில கதையள்  சர்வதேச ரீதியிலை வராது.வரவும் கூடாது இருந்தாலும் நான் பொய் சொல்லுறவன் இல்லை. அவையள் எல்லாத்தையும் வெளிப்படையாய் சொல்லாயினம் ஏனெண்டால் இதுகள் அரசியல் சமாச்சாரம்.

ஆனால் என்னட்டை ஜேர்மன் மொழியிலை ஆதாரம் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சிம்பிளான விசயத்தை ரொம்ப போட்டு குழப்புறீங்களே மக்காள்.

எனது புரிதல் கீழே 

1. நாடுகளின் எல்லைகள், பேரினம் (race), இனம் (ethnicity), தேசிய அடையாளம் (nationality) இவை எல்லாமே social constructs எனப்படும் சமூக கற்பிதங்கள்.

சமூக கற்பிதம் என்றால் an idea that has been created and accepted by the people in a society. ஒரு சமூகத்த்தில் உள்ளோரால் ஏற்று கொள்ளபட்ட நடைமுறையில் உள்ள ஒரு கருத்தியல் என்கிறது மரியம் வெப்ஸ்டர்.

அதாவது ஒரு சமூக கற்பிதம் விஞ்ஞான ரீதியில் அமைய வேண்டியதில்லை. அது ஒரு சமூகத்தின் பார்வை மட்டுமே. மனிதனால் உருவாக்கபட்டது.

யூகேயின் class system உம் இந்தியாவின் caste system உம் சமூக கற்பிதத்துக்கு இலகுவில் புரிந்து கொள்ள கூடிய உதாரணங்கள்.

இதை போன்ற ஆனால் இலகுவில் விளங்க முடியாத ஒரு சமூக கற்பிதமே race உம் ethnicity யும் (கீழே கட்டுரைகளை காண்க).

விஞ்ஞான ரீதியாக பார்த்தால் நாம் எல்லோரும் Homo sapiens sapiens எனும் species (இதையும் தமிழில் இனம் என்கிறார்கள் குழப்பத்துக்கு பிறந்தவர்கள்🤦‍♂️) மட்டுமே. அதற்கு கீழே நம்மை தெளிவாக பிரிக்கும் உயிரியல் தரவுகள் இல்லை.

https://api.nationalgeographic.com/distribution/public/amp/culture/article/race-ethnicity

https://www.livescience.com/amp/difference-between-race-ethnicity.html

2. இரெண்டாவது குழப்பம். தமிழில் race, ethnicity, species மூன்றையும் இனம் என்கிறோம். மேலதிகமாக இந்தியாவில் சாதியையும் இனம் என்கிறார்கள். குழப்பத்தை தவிர்க்க, பேரினம் (race), இனம் (ethnicity), என்ற பதங்களை பாவிப்போம்.

3. சரி உலகின் பேரினங்கள் எவை? இது காலத்துக்கு காலம் மாறுபடுகிறது. இடத்துக்கு இடமும் (ஏனென்றால் இது ஒரு சமூக கற்பிதம்). ஒரு காலத்தில் European race, Asian race,  African race, Chinese race என்றும், இடையே Arab race என்றும், அண்மை காலத்தில் கோக்கசோயிட், மொங்கலோயிட், நீக்ரோயிட், அஸ்டிரலோயிட் என்றும் பிரிக்கிறார்கள்.

ஆனாலும் இது தெளிவான பிரிப்பல்ல. ஏனேன்றால் மனித வரலாறு ஒரு எல்லை பிரிப்பில் வளரவில்லை, அதில் எல்லா சோயிடும் கலந்துள்ளது. குறித்த அளவில் நியந்தாதால் கலப்பும் கூட. ஆனால் பேரினம் என்பது விஞ்ஞான பகுப்பு அல்லவே? ஆகவே காரியமில்லை.

இதில் பிரச்ச்னை என்னவென்றால் - இந்தியர்கள் கோக்கசோயிட், மொகலோயிட், நீக்கிரோயிட், அஸ்டிரலோயிட் எல்லாவற்ரின் கலவை என்கிறார்கள் பலர்.

சரி பேரினம் என்பதே ஒரு கற்பிதம்தானே? நாம் எம்மை தென்னாசிய பேரினம் (திராவிட என்ற தகாத வார்த்தையை தவிர்த்து 🤣) என அழைப்போம். இல்லை ஆசிய பேரினம், அல்லது ஆசியோ-அஸ்டிரலோயிட் என அழைத்தாலும் ஓகே.

சரி பேரினம் ஓகே. அப்போ எமது இனம் என்ன?

தமிழ்.

ஆனால் இதுவும் ஒரு கற்பிதம்தான். ஒரு தமிழனையும், சிங்களவனையும் கொலை செய்து விட்டு பிரேதங்களை கொடுத்து, விஞ்ஞான ரீதியாக யார் என்ன இனம் என காட்ட முடியாது.

ஆனால் பேரினம் (race) என்பது போல் உருவ தோற்றம், தோல் நிறத்தை போல மிகவும் பரந்த அடையாளங்களை அல்லாமல் இன அடையாளம் என்பது பெரும்பாலும் மொழியை சுற்றி, அந்த மொழிக்குரிய பண்பாட்டை சுற்றி உருவாகிறது. 

ஆனால் எப்போதும் ஒரு மொழியை பேசுவோர் எல்லாரும் ஒரு இனத்தை சேர வேண்டியதில்லை. 

அதேபோல் ஒரு இனம் என்பது கட்டாயம் மொழி அடிப்படையில்தான் அமையும் என்ற நியதியும் இல்லை. 

ஏன்? ஏனென்றால் - இனம் என்பதே ஒரு சமூகத்தின் பார்வை, கற்பிதம் -  ஆகவே ஒரு இனத்தை இணைக்கும் ஒற்றை புள்ளியாக மொழியோ, கலாச்சார ஒற்றுமையோ, மதமோ, வேறு எதுவுமோ இருக்கலாம். எல்லாம் அந்த சமூகத்யின் பார்வையில்தான் தங்கியுள்ளது.

ஆகவே மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். இனம் என்பது ஒரு சமூக கற்பிதம். 

தமிழர் என்ற இனத்தில் யார் யார் சேர்வார்கள் என்பதை - விஞ்ஞானமோ, கடவுளோ தீர்மானிப்பதில்லை. அந்த சமூகமே தீர்மானிக்கிறது.

இங்கே மரபு வழி தாயகத்தை போட்டு குழப்ப தேவையில்லை. ஒரு இனமாக நாம் இருக்க மரபு வழிதாயகம் தேவை இல்லை.

ஒரு இனம், தேசிய இனமாக (nation) ஏனையவர்களால் அங்கீகரிக்க படவே மரபு வழி தாயகம் தேவை. 

ஆகவே நாம் இப்போதைக்கு நமது race ஆக, தெற்காசியர் அல்லது சகல சோயிட் கூட்டு என்பதையும் இனமாக தமிழையும் கொள்கிறோம்.

3. சரி அப்போ யார் தமிழர் ? இது காலத்துக்கு காலம் மாறுபடும். ஏனென்றால் இந்த கேள்வியே ஒரு சமூக கற்பிதம் பற்றியது.

துல்பென் சொன்னது போல் ஒரு காலத்தில் மலையாளிகள் தமிழர். அவர்கள் தனி இனமானது ஒரு நாளில் நடக்கவில்லை. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்கள் தமிழர் என்ற நிலையில் இருந்து தமிழர் அல்லாதோர் என மாறியுள்ளதாக, எமது சமுகமும், அவர்களது சமூகமும் கருதி, மலையாள இனம் என்ற ஒரு புதிய சமூக கற்பிதத்தை உருவாக்கி, ஏற்று கொண்டுள்ளன. இந்த புதிய கற்பிதம் உருவாக பிராமணிய சதி, சமச்கிருத ஆளுமை, மேற்கு தொடர்ச்சி மலை என்பன உதவின. 

அதே போல் இலங்கை முஸ்லீம்களும். தம்மை சோனகர் என்ற இனமாக கற்பித்து கொண்டுள்ளார்கள். அதை அந்த நாட்டு சட்டமும் ஏற்பதால். அவர்கள் தனி இனமாகிறார்கள். நாம் என்னதான் குத்திமுறிந்தாலும் சோனகர் இனம் என்பது அவர்கள் உணரும், அந்த நாட்டு சட்டம் ஏற்று கொள்ளும் ஒரு சமூக கற்பிதம்.

ஆகவே இலங்கை தமிழர் என்ற இன அடையாளத்துக்கும், சோனகர் என்ற இன அடையாளத்துக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. ஒரு மொழியை பேசும், இரு வேறு இனங்கள். 

தமிழ்நாட்டு முஸ்லீம்க்கள் மத்தியில் இன்னும் தாம் ஒரு தனி இனம் என்ற கற்பிதம் எழவில்லை.

அதை எழவைக்கவே ஜெய்னுலாப்தீன் பலகாலமாக முயல்கிறார்.

ஆகவே இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாட்டு சமூகத்த்தின் கற்பிதத்தின் படி, அங்கு வாழும் முஸ்லிம்களும் இனத்தால் தமிழர்களே.

ஆனால் இது காலப்போக்கில் மாறலாம்.

தமிழ்நாட்டில் அரங்கேறும் பலமுனை சதிகளின் பயனாக, எதிர்காலத்தில் சோனகர்கள் போல், மலையாளிகள் போல் அவர்களும் தம்மை ஒரு வேற்றினமாக கற்பிதம் செய்ய முனையலாம். 

முடிவாக,

இனம் என்பதற்கு ஒரு விஞ்ஞான வரைவிலக்கணமும் இல்லை, மானிடவியல் வரைவிலக்கணமும் இல்லை. அது ஒரு சமூக கற்பிதம்.

அதன் எல்லைகள் அந்த சமூகம், அதனை சூழ உள்ள சமூகத்யின் புரிதலின் அடிப்படையில் காலத்துக்கு காலமும், இடத்துக்கு இடமும் வேறுபடும்.

இதை புரிந்து கொண்டால் தமிழ், சோனகர், ஜேர்மன், அமெரிக்கன், டிரம்ப், ஒபாமா எல்லாரும் என்ன இனம், ஏன் அவ்வாறு கருதபடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.