Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களாகிய நாம் எந்த மதத்தவர்களோடும் சண்டை பிடிக்கப் போவதில்லை – கலாநிதி ஆறு திருமுருகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களாகிய நாம் எந்த மதத்தவர்களோடும் சண்டை பிடிக்கப் போவதில்லை – கலாநிதி ஆறு திருமுருகன்

இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மிகவும் ஒற்றுமையாக செயற்பட்டவர்கள். நாங்கள் படிக்கின்ற காலத்தில் கிறிஸ்தவ நண்பர்களோடு சேர்ந்து, பழகி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.நான் துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட போது என்னை முதன்முதலில் நேரடியாக வந்து வாழ்த்தியவர் தற்போது யாழ். மாவட்ட ஆயராக உள்ள ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களே. அவ்வாறு நாங்கள் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம் என துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது ஒரு பிரச்சனை காணப்படுகின்றது. கிறிஸ்தவ மதத்தில் பல சபைகளை உருவாக்கி தமது மதத்துக்கு மதம் மாற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வறிய நிலையிலுள்ள மக்களுக்கு பணத்தைக் கொடுத்து மதமாற்றம் செய்வதை முன்னெடுக்கிறார்கள் அது ஏற்கக் கூடிய ஒரு விடயமல்ல. நாங்கள் இந்துக்கள் எப்போதாவது எமது மதத்திற்கு மதம் மாற வேண்டும் என்று நாங்கள் எங்காவது கேட்டிருக்கின்றோமா? நாங்கள் கேட்க மாட்டோம் .

அதே போலவே ஒட்டுமொத்த தமிழர்களின் திருநாளை ஏனைய மதத்தவர்களை புறந்தள்ளி விட்டு ஒரு மதத்தவர்கள் மாத்திரம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? ஏனைய மதத்தவர்களோடு கலந்துரையாடாது ஒரு மதத்தவர்கள் மாத்திரம் எடுத்த முடிவினை ஏனையவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

80 வீதமாக உள்ள ஏனைய மதத்தவர்களை புறந்தள்ளிவிட்டு ஒரு மதத்தவர்கள் மாத்திரம் தமிழர்களின் திருநாளினை தீர்மானிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.இந்துக்கள் கிறிஸ்தவ மக்களுக்கோ, கிறிஸ்தவ துறவிகளுக்கோ எதிரானவர்கள் அல்ல. நாங்கள் ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றோம். இந்துக்களாகிய நாம் எந்த மதத்தவர்களோடும் சண்டை பிடிக்கப் போவதில்லை. ஆனால் எமக்கு ஒரு தாக்கம் ஏற்படும் போது அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் சேவை நயப்பு விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)
 
http://www.samakalam.com/இந்துக்களாகிய-நாம்-எந்த/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆனால் தற்போது ஒரு பிரச்சனை காணப்படுகின்றது. கிறிஸ்தவ மதத்தில் பல சபைகளை உருவாக்கி தமது மதத்துக்கு மதம் மாற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வறிய நிலையிலுள்ள மக்களுக்கு பணத்தைக் கொடுத்து மதமாற்றம் செய்வதை முன்னெடுக்கிறார்கள் அது ஏற்கக் கூடிய ஒரு விடயமல்ல.

ஏன் இந்து அமைப்புக்களால் இந்துக்களின் வறுமையை போக்க உதவ  முடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஏன் இந்து அமைப்புக்களால் இந்துக்களின் வறுமையை போக்க உதவ  முடியவில்லை?

இதைச் சொன்னா என்னைப் பைத்தியக்காறன் எண்டு சொல்லுறாங்கள்...😂

இவர் தமிழ்  மக்களின் திருநாள் என்று எதனைக் கூறுகிறார் ? 

யார் தமிழர்களின் திருநாளை மாற்றியது..?

😔

  • கருத்துக்கள உறவுகள்

1. பணம், சலுகைகளை கொடுத்து மதம் மாற்றுவது கீழ்தரமான செயல்.

2. அதை விட கீழ்தரமானது, யாழ்பாணத்தின்(இலங்கையின்?) இரெண்டாவது பெரிய பணக்கார கோவிலின் கருவூலத்திறைப்பை கையில் வைத்து கொண்டு, சொந்த மத மக்களை, பணத்திற்க்காக மதம் மாறும் அவல நிலையில் வைத்திருப்பது.

3 hours ago, கிருபன் said:

வறிய நிலையிலுள்ள மக்களுக்கு பணத்தைக் கொடுத்து மதமாற்றம் செய்வதை முன்னெடுக்கிறார்கள் அது ஏற்கக் கூடிய ஒரு விடயமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஏன் இந்து அமைப்புக்களால் இந்துக்களின் வறுமையை போக்க உதவ  முடியவில்லை?

வறுமையை, பசியை போக்கி விட்டால்,

படிப்பை கேட்பார்கள்.

பின் உரிமையை கேட்பார்கள்.

பின் தர்மகர்த்தா சபையில் இடம் கேட்பார்கள்.

பிறகு வீட்டு படி ஏறி சம்பந்தம் பேச வருவார்கள்.

விட முடியுமோ? ….அதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

வறுமையை, பசியை போக்கி விட்டால்,

படிப்பை கேட்பார்கள்.

பின் உரிமையை கேட்பார்கள்.

பின் தர்மகர்த்தா சபையில் இடம் கேட்பார்கள்.

பிறகு வீட்டு படி ஏறி சம்பந்தம் பேச வருவார்கள்.

விட முடியுமோ? ….அதுதான்.

இதை பப்ளிக்கில் சொல்லலாமோ? யாழ்கள ஆசாரவாதிகள் வரிந்துகட்டிக்கொண்டு வரப்போயினம்😉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வறுமையை, பசியை போக்கி விட்டால்,

படிப்பை கேட்பார்கள்.

பின் உரிமையை கேட்பார்கள்.

பின் தர்மகர்த்தா சபையில் இடம் கேட்பார்கள்.

பிறகு வீட்டு படி ஏறி சம்பந்தம் பேச வருவார்கள்.

விட முடியுமோ? ….அதுதான்.

ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளர் சொன்னார் இவங்கள் படிச்சு முன்னேறினால் யார் கூலி வேலைக்கு வருவினம் என்று? இவர் எல்லாம் கல்விப் பணிப்பாளராக இருந்து என்ன செய்யப்போறார்?!

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஏராளன் said:

ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளர் சொன்னார் இவங்கள் படிச்சு முன்னேறினால் யார் கூலி வேலைக்கு வருவினம் என்று? இவர் எல்லாம் கல்விப் பணிப்பாளராக இருந்து என்ன செய்யப்போறார்?!

🤦‍♂️ கல்வி பணிப்பாளர்தானே. அறிவுப் பண்பாளர் இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

🤦‍♂️ கல்வி பணிப்பாளர்தானே. அறிவுப் பண்பாளர் இல்லையே.

அது சரி கோசான், 

ஒட்டுமொத்த தமிழர்களின் திருநாள் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அது சரி கோசான், 

ஒட்டுமொத்த தமிழர்களின் திருநாள் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? 

எனக்கும் தெரியேல்லை கற்பிதன். 

ஏதோ ஊரில நடந்திருக்கு. என்னெண்டு தெரியல்ல🤔.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

எனக்கும் தெரியேல்லை கற்பிதன். 

ஏதோ ஊரில நடந்திருக்கு. என்னெண்டு தெரியல்ல🤔.

கார்த்திகை 20 ஐ போரில் உயிரிழந்தவர்களின் நினைவாகக் கொள்ள வேண்டும் என்று ஆயர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதனைத்தான் இவர் கூறுகிறாரோ தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

கார்த்திகை 20 ஐ போரில் உயிரிழந்தவர்களின் நினைவாகக் கொள்ள வேண்டும் என்று ஆயர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதனைத்தான் இவர் கூறுகிறாரோ தெரியாது.

அப்படித்தான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

கார்த்திகை 20 ஐ போரில் உயிரிழந்தவர்களின் நினைவாகக் கொள்ள வேண்டும் என்று ஆயர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதனைத்தான் இவர் கூறுகிறாரோ தெரியாது.

இதுதான் விடயம் என்றால் ஆயர்கள் ஏன் மாவீரர் வாரத்துக்கு ஒரு நாள் முதல் இதை செய்கிறார்கள் என்ற கேள்வி முக்கியமானதே?

முள்ளிவாய்க்கால் நாள் அல்லது மாவீரர் நாளில் நினைவுகூரல்தானே பொருத்தமாய் இருக்கும்?

5 minutes ago, கிருபன் said:

அப்படித்தான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

ஏன் இந்து அமைப்புக்களால் இந்துக்களின் வறுமையை போக்க உதவ  முடியவில்லை?

இந்து அமைப்புக்கள் மட்டுமல்ல இலங்கையின் எந்த அமைப்புக்களூமே வறுமையை போக்க முன்வரமாட்டார்கள். வறுமை தீர்ந்துவிட்டால் கட்சிகளின் வறுமை ஆரம்பமாகிவிடும்.  மக்கள் வறுமையை பற்றி பேசி பேசியே  தமது மகன் மகள்களை  பணக்காரர்கள் ஆக்குவதே தெற்காசிய அரசியல்.

ஆயுத போராட்ட காலத்தில் தாயக நிலபரப்பில் தமிழர்கள் என்ற ஒன்றை மட்டுமே  பார்த்தோம். இப்போ தட்டி கேட்க ஆள் இல்லையென்று ஆனதும் அவரவர் தமக்கு பிடித்ததை கையில் எடுத்து கழுதை தேய்ந்து கட்டெறும்புபோல் ஆன எம்மினத்தை மீண்டும் சின்னதாக்க அவர்களால் முடிந்தவரை தேய்க்கின்றனர்.

அடிப்படை கத்தோலிக்கர்கள் தேவாலயத்துக்கு சென்று தொழுவதை தவிர்த்து தமிழர்கள் என்ற ஒரு விஷயத்தில் எப்போதுமே விலகி இருந்ததுமில்லை சிங்களத்துக்கு எம்மை விட்டு கொடுத்ததுமில்லை.

என்றைக்கு அல்லலூயா பெண்டிகோஸ் வரிசையின் மதமாற்று கோஷ்டிகள் எம் மக்களின் மத்தியில் நுழைந்ததோ இனி சிங்களவனை விட்டுவிட்டு நமககுள் மோதுவதிலேயே எம்மினத்தின் கவனம் குவியும்.

இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சேர்ந்து போராடிய எமது ஆயுத போராட்ட காலத்தில் இந்து அமைப்புக்கள் என்று எதுவும் தீவிரமாக இயங்கியதாக நினைவில் இல்லை, தாயக நிலப்பரப்பில் இந்துக்கள் முன்னிலைபடுத்தபட வேண்டுமென்று எந்த இந்துக்களுமே நினைத்ததுமில்லை.

தட்டி கேட்க அல்ல, தட்டி வைக்க தம்பி இல்லையென்று ஆன பின்பு தறுதலைகள் எல்லாமே சண்டியர்கள்தான்  அது கிறிஸ்தவர்களானாலும் சரி இந்துக்கள் ஆனாலும் சரி .

வேறொன்றும் சொல்வதற்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதுதான் விடயம் என்றால் ஆயர்கள் ஏன் மாவீரர் வாரத்துக்கு ஒரு நாள் முதல் இதை செய்கிறார்கள் என்ற கேள்வி முக்கியமானதே?

முள்ளிவாய்க்கால் நாள் அல்லது மாவீரர் நாளில் நினைவுகூரல்தானே பொருத்தமாய் இருக்கும்?

அதில் "யுத்தத்தில் இறந்த அனைவரையும் நினைவு கூருவதற்கு" என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே மாவீரர் வாரம் பக்கச் சார்பானதாக இருக்கும் என்று  நினைத்திருக்கலாம். 🧐

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kapithan said:

அதில் "யுத்தத்தில் இறந்த அனைவரையும் நினைவு கூருவதற்கு" என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே மாவீரர் வாரம் பக்கச் சார்பானதாக இருக்கும் என்று  நினைத்திருக்கலாம். 🧐

மாவீரர் எமது பக்கத்தினர்தானே? அவர்களை நாம் நினைவு கூறாமல் வேறு யார் நினைவுகூறுவது?

அடுத்து,

பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு நாள் என்றால் முள்ளிவாய்க்கால் நாளை விட பொருத்தமான நாள் ஏதும் இல்லையே?

மத பிரச்சனைகளுக்கு அப்பால், சம்பந்தமே இல்லாமல் நவம்பர் மாத 3ம் சனிகிழமை என்பது எனக்கு சரியாக படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

மாவீரர் எமது பக்கத்தினர்தானே? அவர்களை நாம் நினைவு கூறாமல் வேறு யார் நினைவுகூறுவது?

அடுத்து,

பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு நாள் என்றால் முள்ளிவாய்க்கால் நாளை விட பொருத்தமான நாள் ஏதும் இல்லையே?

மத பிரச்சனைகளுக்கு அப்பால், சம்பந்தமே இல்லாமல் நவம்பர் மாத 3ம் சனிகிழமை என்பது எனக்கு சரியாக படவில்லை.

அந்த அனைவருக்குள் யுத்தத்தில் கொல்லப்பட்ட  சிங்கள இராணுவத்தினரும் அடங்குகின்றனர். 

அந்த அறிக்கை என்னிடம் இருக்கிறது இணைக்க முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

அந்த அனைவருக்குள் யுத்தத்தில் கொல்லப்பட்ட  சிங்கள இராணுவத்தினரும் அடங்குகின்றனர். 

அந்த அறிக்கை என்னிடம் இருக்கிறது இணைக்க முடியவில்லை. 

நாலு தமிழ் மறைமாவட்ட ஆயர்களுக்கும் இது வேண்டாதவேலை.

Reconciliation தேவைதான் ஆனால் அது இருதரப்பில் இருந்தும் வரவேண்டும்.

எமது உறவுகளை நினைவுகூறவே தடை - இப்படி இருக்க எல்லாரையும் சேர்த்து தனியே தமிழ் ஆயர்கள் மட்டும் இப்படி ஒரு முன்னெடுப்பை செய்வது, அதுவும் மாவீரர் வாரத்துக்கு ஒரு நாள் முன்னதாக - தேவையில்லாத ஆணி.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

நாலு தமிழ் மறைமாவட்ட ஆயர்களுக்கும் இது வேண்டாதவேலை.

Reconciliation தேவைதான் ஆனால் அது இருதரப்பில் இருந்தும் வரவேண்டும்.

எமது உறவுகளை நினைவுகூறவே தடை - இப்படி இருக்க எல்லாரையும் சேர்த்து தனியே தமிழ் ஆயர்கள் மட்டும் இப்படி ஒரு முன்னெடுப்பை செய்வது, அதுவும் மாவீரர் வாரத்துக்கு ஒரு நாள் முன்னதாக - தேவையில்லாத ஆணி.

இது அவர்களின் தனிப்பட்ட முயற்சியாகத் தெரியவில்லை.  வேறு பின்புலம் இருக்கலாம் என நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

இது அவர்களின் தனிப்பட்ட முயற்சியாகத் தெரியவில்லை.  வேறு பின்புலம் இருக்கலாம் என நம்புகிறேன். 

நானும் அதையே ஊகிக்கிறேன்.

#ஆயர்களே மந்தையாகினரோ

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நானும் அதையே ஊகிக்கிறேன்.

#ஆயர்களே மந்தையாகினரோ

மொந்தை ஆகாதவரைக்கும் Okay 😉

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

இது அவர்களின் தனிப்பட்ட முயற்சியாகத் தெரியவில்லை.  வேறு பின்புலம் இருக்கலாம் என நம்புகிறேன். 

நிச்சயமாக உண்டு ஆயர்களையும் இரண்டுடாக பிரித்து விட்டார்கள் 

22 minutes ago, goshan_che said:

நானும் அதையே ஊகிக்கிறேன்.

#ஆயர்களே மந்தையாகினரோ

பணம் புகுந்து விளையாடியிருக்கலாம். 

2 hours ago, goshan_che said:

பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு நாள் என்றால் முள்ளிவாய்க்கால் நாளை விட பொருத்தமான நாள் ஏதும் இல்லையே?

ஆமாம் உண்மை  

2 hours ago, goshan_che said:

மத பிரச்சனைகளுக்கு அப்பால், சம்பந்தமே இல்லாமல் நவம்பர் மாத 3ம் சனிகிழமை என்பது எனக்கு சரியாக படவில்லை.

இதன் நோக்கம் அனைவரையும் நினைவு கூருவதில்லை மாறாக மாவீரர் நாள் கொண்டாட்டத்தை குழப்புவது என்ன செய்ய நடப்பதைப் பார்ப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஏராளன் said:

ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளர் சொன்னார் இவங்கள் படிச்சு முன்னேறினால் யார் கூலி வேலைக்கு வருவினம் என்று? இவர் எல்லாம் கல்விப் பணிப்பாளராக இருந்து என்ன செய்யப்போறார்?!

எல்லாருக்கும் டாக்குத்தர்,எஞ்சினியர்,எக்கவுண்டன் நினைப்பெண்டால்.... ஒரு காலத்திலை கடுதாசியையும் காவோலையையும் தான் தின்ன வேண்டி வரும்.:cool:

தோட்ட வேலை, கூலி வேலை எண்டால் கன பேருக்கு இழக்காரம். இந்த வருத்தம் தமிழ் சமூகத்தில் மட்டுமே உள்ளது.ஒருத்தனுக்கு பாசை தெரியேல்லை எண்டாலே நக்கலடிக்கும் ஈனக்கூட்டங்கள் நிறைந்தது எம் சமூகம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

வறிய நிலையிலுள்ள மக்களுக்கு பணத்தைக் கொடுத்து மதமாற்றம் செய்வதை முன்னெடுக்கிறார்கள் அது ஏற்கக் கூடிய ஒரு விடயமல்ல. நாங்கள் இந்துக்கள் எப்போதாவது எமது மதத்திற்கு மதம் மாற வேண்டும் என்று நாங்கள் எங்காவது கேட்டிருக்கின்றோமா? நாங்கள் கேட்க மாட்டோம் .

நீங்கள் கேட்க வேண்டாம் ஐயா! அவர்கள் கைகளை மடக்க வேண்டுமென்றால், உங்கள் கைகளை நீட்டுங்கள். அடிக்கவல்ல கொடுக்க.

கிறிஸ்தவ, இந்து மதங்களிலும் இறந்தவர்களை நினைவு கூரும் மாதம் கார்த்திகை மாதம். அதில் ஒரு நாளை பொதுவாக போரில் இறந்தவர்களை நினைவு கூர்வதில் தப்பில்லை. தானும் சேர்ந்து தாயாரித்திருக்கலாம், தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருப்பாரோ? அன்றி உரியவரிடம் ஆலோசனை பண்ணியிருக்கலாம். இது இன்னும் எதிரிக்கு தூபம் போடுவது போலல்லவோ உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

எல்லாருக்கும் டாக்குத்தர்,எஞ்சினியர்,எக்கவுண்டன் நினைப்பெண்டால்.... ஒரு காலத்திலை கடுதாசியையும் காவோலையையும் தான் தின்ன வேண்டி வரும்.:cool:

தோட்ட வேலை, கூலி வேலை எண்டால் கன பேருக்கு இழக்காரம். இந்த வருத்தம் தமிழ் சமூகத்தில் மட்டுமே உள்ளது.ஒருத்தனுக்கு பாசை தெரியேல்லை எண்டாலே நக்கலடிக்கும் ஈனக்கூட்டங்கள் நிறைந்தது எம் சமூகம்.:grin:

டாக்டர் என்ஜினியர் என்றால் தானே தமிழ் சமூகம் திருமணம் முடிக்க சம்மதம் அளிக்கிறது. அதாவது விருப்பம் இல்லாவிட்டாலும் தொழிலுக்காக சம்மதம் அளிக்கிறது.தொழிலை வைத்து சாதி சமயம் பிரிச்ச ஆட்கள்

கூலி என்றால் எப்போதும் இழக்காரமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.