Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதி சிங்கள தேசியவாதிகளும் , அதி தமிழ் தேசியவாதிகளும் சனநாயகத்தில் மேல்  நம்பிக்கை இல்லை,  அவர்களுக்கு தெரிந்தது சண்டித்தனம் ஒன்றே .இப்படிப்பட்ட செயல்களை இலங்கையில் ஞானசாரர், சுமன போன்ற  புத்த பிக்குகள் தான் செய்வார்கள், இவர்கள் ஒரே காசின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.
இருதரப்பினரையும் ஒரே அறையில் அடைத்து வைத்தால் தமக்கு தெரிந்த மொழியில் பேசி தீர்த்துக்கொள்வார்கள், அதனை நேரலையில் ஒளிபரப்பினால் big boss ஐ விட சிறந்த பொழுது போக்குக்காக இருக்கும்.அல்லது பழைய உரோமாபுரி கிளாடியேட்டர்கள் (Gladiators) மாதிரி திறந்த வெளியரங்கில் மோதவிட்டு  பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியும்.
 
  • Replies 469
  • Views 32.1k
  • Created
  • Last Reply

இதுவே 2009 ம் ஆண்டுக்கு முன்பு என்றால் சுவிஸ், ஜேர்மனியில் செய்தது  போல தமக்கு பிடிக்காதவர்களை அழைத்து கூட்டம்  ஒழுங்கமைத்தவர்களின் வீடு  புகுந்து அவர்ரகளின் கை, கால்களை  உடைத்து நொருக்கி இருக்கலாம். என றாலும் இப்போது சுமந்திரனின் கூட்டதிற்கெதிராக நடத்திய பாரிய ஆர்பாட்டத்தை பார்தது பயந்து போன அமெரிக்கா தமிழ் ஈழம் பெற உதவக்கூடும். 

1 hour ago, zuma said:

அதி சிங்கள தேசியவாதிகளும் , அதி தமிழ் தேசியவாதிகளும் சனநாயகத்தில் மேல்  நம்பிக்கை இல்லை,  அவர்களுக்கு தெரிந்தது சண்டித்தனம் ஒன்றே .இப்படிப்பட்ட செயல்களை இலங்கையில் ஞானசாரர், சுமன போன்ற  புத்த பிக்குகள் தான் செய்வார்கள், இவர்கள் ஒரே காசின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.
இருதரப்பினரையும் ஒரே அறையில் அடைத்து வைத்தால் தமக்கு தெரிந்த மொழியில் பேசி தீர்த்துக்கொள்வார்கள், அதனை நேரலையில் ஒளிபரப்பினால் big boss ஐ விட சிறந்த பொழுது போக்குக்காக இருக்கும்.அல்லது பழைய உரோமாபுரி கிளாடியேட்டர்கள் (Gladiators) மாதிரி திறந்த வெளியரங்கில் மோதவிட்டு  பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியும்.
 
சரியாக சொன்னீர்கள். தமிழ் தேசியம் என்ற உயர் லட்சியம் புலம் பெயர் நாடுகளில் அடாவடி புரியும் தீவிர தமிழ் தேசியர்கள் என்ற ரௌடி கும்பலின் வெற்றுக் கோசமாக மாறியது தமிழ் மக்களின் துரதிஷ்ரம். தேசியக்கொடி  என்று எல்லோராலும் ஒரு காலத்தில் மரியாதை செய்யப்பட்ட கொடியும் இப்போது இந்த தெருச்சண்டிர்களின் கொடியாக சுருங்கியதும் வேதனை தான். 

Edited by tulpen
இலக்கணத் தவறு திருத்தம்.

ஆனால் ஒன்று,

இந்த புலம் பெயர் புஸ்வாணங்களின் இப்படியான செயல்பாட்டால் ஒரு எதிர்பாராத நன்மை ஏற்படலாம்.

சீனா தமிழர் தரப்பை அணுகியதா இல்லையா என்பது எமக்குத்தான் தெரியாத விடயம் ஆனால் அமெரிக்காவிற்கு இதன் உண்மைதன்மையை கண்டு பிடிப்பது இலகு.

அப்படி இருக்க, நிலமையை இப்படியே விட்டால் - புலம்பெயர் தமிழர்களை சீனா தன் வசப்படுத்திவிடும் என்ற பயத்தில் அமெரிக்கா/மேற்கு ஒரு நியாயமான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

சுமந்திரனை திரத்துவதோடு வீட்டுக்கு போய் குவாட்டர் அடித்து விட்டு குப்புற படுக்காமல் -

ஒரு புலம்பெயர் கூட்டமைப்பை நிறுவி சீனாவுடன் தொடர்பை பெற முயச்சிக்க வேண்டும்.

ஆனால் அப்படி செய்தால் அவரவர் இருக்கும் நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் பார்வையில் இப்படி செய்பவர்கள் விழவேண்டி வரும்.

இனத்துக்காக இதை கூட செய்யமாட்டார்களா எங்கள் புலம்பெயர் வீரக்குட்டிகள்?

37 minutes ago, கோஷானின் ஆவி said:

இனத்துக்காக இதை கூட செய்யமாட்டார்களா எங்கள் புலம்பெயர் வீரக்குட்டிகள்?

உங்கு லண்டனில் அப்படியான வீரக்குட்டிகள் இருக்கலாம்.😂 ஆனால் இங்கு அவர்களை நான் நன்கறிவேன். தமது குடும்பம் என்று வந்தால், யதார்ததமாக சிந்தித்து நிதானமான முடிவுகள். 

இயக்கம், தேசியம் என்று வந்தால் வெட்டி விழுத்துவோம் என்று, கற்பனையில் வெடி விடும் வாய்ச்சவடால். இதுவே இங்கு புலம் பெயர்ஸ் புலிவால்களின் நிலை. இன்று மட்டுமல்ல என்றும் அப்படி தான். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு வற்சப்பில் செய்தி வந்தது. பின்னர் இந்த காணொலியும் வந்தது.

https://www.facebook.com/KrishnaLiveTelecast/videos/936092323686260/

கூட்டத்துக்கு வந்தவர்கள் குறைந்த அளவிலான ஆட்கள். குழப்ப வந்தவர்கள் அதிலும் மிக குறைந்த அளவு ஆட்கள். குழப்ப வந்தவர்களின் எண்ணைக்கையை விட காவல் கடமைக்கு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் போல் தோன்றியது. வந்தவரில் ஒருவர் பச்சை துரோகி பச்சை துரோகி என சத்தம் இட்டார். இன்னொருவர் சுமந்திரன் அவர்கள் களவு செய்து பாராளுமன்றம் சென்றதாக விளம்பினார். ஆக மொத்தத்தில் ரிம் ஹோட்டன் கோப்பியை குடித்துவிட்டு கனடா தமிழ் மக்கள் சிலர் தங்களின் குரலை பயிற்சி செய்துவிட்டு சென்று உள்ளார்கள். இனி அடுத்து..?

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

😔

7 hours ago, Kandiah57 said:

இந்த உலகில் எல்லாம் தெரிந்தவன் எவனுமில்லை....ஒன்றும் தெரியாதவர்களும். எவனுமில்லை.....இலங்கையிலிருந்து வந்து.  கனடாவில் அரசியல் படிப்பிக்க முடியாது ஆனால் கனடாகாரர். இலங்கைக்குச் சென்று. அரசியல் படிப்பிக்கலாம்.  இதனை சுமந்திரன்.  அனுபவரீதியாக. உணர்ந்து இருப்பார் 

சுமந்திரனின் நோக்கம்  ஆயுதப் போராட்டத்துக்கு முன்பு இருந்த நிலையை  இலங்கையில் தோற்றுவித்து  தங்கள் தொடர்ந்தும் அரசியல் செய்வது மட்டுமே   தமிழ் மக்களின் உரிமை பற்றி சுமத்திரனுக்கு. 1%கூட  கவலை...சிந்தனை கிடையாது ஆனால் இதனை சொல்லமாட்டார. 

கந்தையர்,

உங்களுக்கு சுமந்திரன் மீது பிரச்சனையா அல்லது இலங்கையில் இருக்கும் தமிழர்களுடன் பிரச்சனைய..?

இதே சிந்தனையோட்டத்தின் விளைவாக 2005ல் கிடைத்த மிக அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம். நினைவில் வைத்திருங்கள்.

😔

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, tulpen said:

உங்கு லண்டனில் அப்படியான வீரக்குட்டிகள் இருக்கலாம்.😂

வடிவேலு இரெண்டு பொக்கற்றையும் காட்டும் மீம்ஸை மனக்கண்ணில் காணவும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சரியாக சொன்னீர்கள். தமிழ் தேசியம் என்ற உயர் லட்சியம் புலம் பெயர் நாடுகளில் அடாவடி புரியும் தீவிர தமிழ் தேசியர்கள் என்ற ரௌடி கும்பலின் வெற்றுக் கோசமாக மாறியது தமிழ் மக்களின் துரதிஷ்ரம். தேசியக்கொடி  என்று எல்லோராலும் ஒரு காலத்தில் மரியாதை செய்யப்பட்ட கொடியும் இப்போது இந்த தெருச்சண்டிர்களின் கொடியாக சுருங்கியதும் வேதனை தான். 

நிதர்சனம்.

😔

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உஷார் மடையர்கள் சுமந்திரனை பேசவிடாமல் செய்தது வெற்றி என்று குதிக்கின்றார்கள். ஆனால் இது ஒன்றுக்கும் உதவாது. 

ஜனநாயக முறையில் எதிர்ப்பைக் காட்டி கேள்விகளைக் கேட்டிருக்கவேண்டும். முக்கியமாக ஒரு தேசிய இனமான தமிழ் மக்கள் இப்போது வெறும் சிறுபான்மைக் குழுவாக அழைக்கப்படுவதை சுமந்திரனும், கூடச் சென்ற அரசியல் சட்ட நிபுணர்களும் ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்டிருக்கவேண்டும். ஆனால் “வீ வோன்ற் ரமிலீலம்” என்பதற்கு அப்பால் எதுவும் தெரியாதவர்கள் சண்டித்தனத்தை மட்டும்தானே காட்டமுடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்காக பேசவல்ல  வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்கள்:

இன்று மாலை கனடா தேசியக் கூட்டமைப்பு ரொறன்ரோவில் நடத்திய பொதுக் கூட்டம் சுமுகமாக நடந்தது. ஆனால்  இறுதி நேரத்தில் எம்.ஏ. சுமந்திரன் பேசிக் கொண்டிருந்த போது மண்டபத்தின் பின்புறம் நின்று   கொண்டிருந்த சிலர் பேச்சைத் தொடரவிடாமல்  உரத்த குரலில் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.  
கூட்டத்தில் அரை மணித்தியாலம் பேசிய இராசமாணிக்கம் சாணக்கியன் எந்தக் குறுக்கீடும் இல்லாது பேசி முடித்தார். அவருக்கு பலத்த கைத்தட்டலும் கிடைத்தது.
அவையோர் எழுத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என்று பலமுறை சொல்லப்பட்டது. இருந்தும் அவற்றைச் செவிமடுக்காது தொடர்ந்து சுமந்திரனை பேச விடாது கூட்டத்தைக் குழப்பினார்கள். இதனால் கூட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத்  தள்ளப்பட்டோம். இப்படி நடப்பது இதுவே முதல் தடவை ஆகும். 
கூட்டம் தொடங்கு முன்னர் சிலர் மண்டபத்துக்கு எதிர்ப்புறமாக புலிக்கொடியுடன் நின்றிருந்தார்கள். கனடா நாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. கனடா ஒரு சனநாயக நாடு என்ற முறையில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட சட்டம் அனுமதிக்கிறது.
கனடிய தமிழ்ச் சமூகம் சட்டத்தை மதிக்கிற ஒரு சமூகம்.  இந்த நாட்டில் எல்லோருக்கும் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை நூறு விழுக்காடு இருக்கிறது. ஆனால் சட்டத்தை மதியாது சட்டத்தை கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. படித்தவர்களைப் பிடிக்காத  ஒரு சிலரே சட்டத்தை தங்கள் கையில் எடுக்கத் துணிகிறார்கள். 
இன்றைய பூகோள அரசியல் சூழலில் தமிழ்மக்களது உரிமைகளை சனநாயக வழிமுறையில் - பேச்சு வார்த்தைகள்  மூலம் - வெளிநாடுகளின் ஆதரவுடன்தான்  பெறமுடியும். எங்கள் வழி வன்முறைதான் என்றால் மேற்குலக நாடுகள் முன்னர் போல் எம்மைக் கைவிட்டு விடும்.
இதைத்தான் கூட்டத்தை குழப்பியவர்கள் விரும்புகிறார்களா எனக் கேட்க விரும்புகிறேன்.  அவர்களது சனநாயக விரோத செயலை வன்மையகக் கண்டிக்கிறேன்.
 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இருவரும் எமது தாயக மக்களால் சனநாயக முறையில் தெரிந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள். அந்த மண்ணில் நின்றுகொண்டு அந்த மக்களுக்காக நாடாளுமன்றத்துக்கும் உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுப்பவர்கள். 
அவர்களை அவமதித்தது அவர்களுக்கு வாக்களித்த மக்களை அவமதித்தற்கு ஒப்பாகும்.
தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற சிங்கள - பவுத்த பேரினவாதிகளின் பரப்புரைக்கு இந்தக் குழப்பவாதிகள் இன்று அவல் கொடுத்திருக்கிறார்கள் என்று மட்டும்  கூறிக்கொள்ள விரும்புகிறேன் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

படித்தவர்களை பிடிக்காதவர்களுக்கு கோபம் வரப்போகிறது..😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:
4 hours ago, குமாரசாமி said:

இதுவே அவுஸ்ரேலியாவாக இருந்திருந்தால்.....?:grin:

இனி, இங்கிலாந்தில்... என்ன நடக்கப் போகுதோ... 😂
அதையும்... பார்க்க, ஆவலாக உள்ளது

சுமந்திரனின் இங்கிலாந்து பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெகுவிரைவில் செய்தி வரும்.

அதுவரை அமைதி அமைதி.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

எம்.ஏ. சுமந்திரன் பேசிக் கொண்டிருந்த போது மண்டபத்தின் பின்புறம் நின்று   கொண்டிருந்த சிலர் பேச்சைத் தொடரவிடாமல்  உரத்த குரலில் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.  
கூட்டத்தில் அரை மணித்தியாலம் பேசிய இராசமாணிக்கம் சாணக்கியன் எந்தக் குறுக்கீடும் இல்லாது பேசி முடித்தார்.

👆🏼இதை சொன்னால் நம்மை மதவாதி, இனத்துள் பிரிவை உண்டுபண்ணும் 5ம் படை என்பார்கள்.

21 minutes ago, nunavilan said:

படித்தவர்களைப் பிடிக்காத  ஒரு சிலரே சட்டத்தை தங்கள் கையில் எடுக்கத் துணிகிறார்கள். 

தேவையில்லாமல் இதற்குள் ஏன் படிப்பை கொண்டுவாறார் இவர். முட்டாள்கள் எல்லா இடத்திலும் உள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கோஷானின் ஆவி said:

நான் போ விடுப்பு பார்க்க போறன்😎.

* போய் ( புது உறுப்பினர் எடிட் செய்யவும் ஏலாதாம்🤦‍♂️).

கல்லோ ஆவி

உங்களுக்கு அந்த சிரமம் இருக்காதென்றே எண்ணுகிறேன்.

இங்கிலாந்து தமிழர்களை நினைத்து எப்பவும் பெருமைப்படும் விடயம்

திடீர் திடீர் என்று ஒரு ஆர்ப்பாட்டம் என்றாலும் ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

அவர்களை அவமதித்தது அவர்களுக்கு வாக்களித்த மக்களை அவமதித்தற்கு ஒப்பாகும்.

உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கோஷானின் ஆவி said:

அண்ணை என்ன நரகத்தில போட்டுட்டாங்கள் அண்ணை.

இஞ்ச பிரேமதாசா, கொப்பேகடுவ, லலித் எல்லாரும் நிக்கினம்.

கதிர்காமர் சுமந்திரனை விசாரிச்சதா சொல்ல சொல்லுறார்🤣.

தலைவரின் படத்தைக் காட்டிப் பாருங்க.

எல்லா ஆவியும் பறந்திடும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

எழுத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என்று பலமுறை சொல்லப்பட்டது

நேரடியாக கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிடின் ஏன் பொது மக்களை அழைத்து கூட்டம் போடுகிறீர்கள்?

எழுத்தில் கேட்கும் கேள்விகளில் விரும்பியதுக்கு மட்டும் பதில் சொல்லலாம்.

ஒன்றில் மக்களை நேரடியா சந்தித்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் திராணி இருக்க வேண்டும். 

அல்லது சந்திக்க வரக்கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இதுவே 2009 ம் ஆண்டுக்கு முன்பு என்றால் சுவிஸ், ஜேர்மனியில் செய்தது  போல தமக்கு பிடிக்காதவர்களை அழைத்து கூட்டம்  ஒழுங்கமைத்தவர்களின் வீடு  புகுந்து அவர்ரகளின் கை, கால்களை  உடைத்து நொருக்கி இருக்கலாம். என றாலும் இப்போது சுமந்திரனின் கூட்டதிற்கெதிராக நடத்திய பாரிய ஆர்பாட்டத்தை பார்தது பயந்து போன அமெரிக்கா தமிழ் ஈழம் பெற உதவக்கூடும். 

ஏன் தம்பீ

புலிகளுக்கு முன்னரும் பின்னரும் அரசியல் பழிவாங்கல்கள் எதுவும் நடக்கலையோ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் சுமந்திரனுக்கு ஒருவர் பெரிய மாலை எல்லாம் போடுவதை கண்டேன். 

இப்ப என்னத்தை வெட்டி புடுங்கி விட்டார் என்று மாலை இவருக்கு?

சுமந்திரன் இந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

தேவையில்லாமல் முஸ்லீம் இன சுத்தீகரிப்பு, இனப்படுகொலை இல்லை, போன்ற அலம்பல்களை தவிர்த்து, வயலில் வீடியோ எடுக்கும் சினிமாதனக்களை தவிர்த்து, விக்கி போன்ற நேர்மையாளர்களை ஓரம் கட்டுவதை தவிர்த்து, தமிழ் மக்களின் பிரதிநிதியாக (மட்டும்) அவர்களுக்கு ஒரு கெளரவமான தீர்வை பெறுவதில் தன் முழு சக்தியையும் பிரயோகித்தால், வெற்றியோ தோல்வியோ, மக்கள் மதிப்பார்கள்.

19 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனின் இங்கிலாந்து பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெகுவிரைவில் செய்தி வரும்.

அதுவரை அமைதி அமைதி.

கிரேட் எண்டர்டெயின்மென்ட் ஜஸ்டு மிஸ்டு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

அதி சிங்கள தேசியவாதிகளும் , அதி தமிழ் தேசியவாதிகளும் சனநாயகத்தில் மேல்  நம்பிக்கை இல்லை,  அவர்களுக்கு தெரிந்தது சண்டித்தனம் ஒன்றே .இப்படிப்பட்ட செயல்களை இலங்கையில் ஞானசாரர், சுமன போன்ற  புத்த பிக்குகள் தான் செய்வார்கள், இவர்கள் ஒரே காசின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.
இருதரப்பினரையும் ஒரே அறையில் அடைத்து வைத்தால் தமக்கு தெரிந்த மொழியில் பேசி தீர்த்துக்கொள்வார்கள், அதனை நேரலையில் ஒளிபரப்பினால் big boss ஐ விட சிறந்த பொழுது போக்குக்காக இருக்கும்.அல்லது பழைய உரோமாபுரி கிளாடியேட்டர்கள் (Gladiators) மாதிரி திறந்த வெளியரங்கில் மோதவிட்டு  பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியும்.
 
பிரச்சனை என்னவென்று தெரியாமல் குற்றசாட்டுகளை சொல்லக்கூடாது சுமத்திரனை  நோக்கிய கேள்விகளுக்கு சுமத்திரனிடம் பதில் இல்லை அதனால் கேள்விகள் எழுத்தில் வேணுமென்று கேட்கப்பட்டது அதை கேள்வி கேட்டவர்கள் விரும்பவில்லை ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்த சுமத்திரனால் தான்தோன்றித்தனமாக நிபந்தனை ஏன் விதிக்கின்றார் இதில் வேதனையான  விடயம் சாணக்கியனையும் நரித்தந்திரமாய் சுமத்திரன் கோதாவுக்குள் இழுத்து விட்டது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

இதில் வேதனையான  விடயம் சாணக்கியனையும் நரித்தந்திரமாய் சுமத்திரன் கோதாவுக்குள் இழுத்து விட்டது .

அவர் ஏற்கனவே அவர்களுடன் இருந்தவர் தான்.

புலம்பெயர் தமிழர்களைத் தலைகுனிய வைத்த காட்டுமிராண்டித்தனமான இந்தக் குழப்பச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரனோ அல்லது கூட்டமைப்போ அன்று தொடக்கம் ஒழுங்காக நடந்திருந்தால் ஏனிந்த குழப்பங்கள் வருகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர்
கதிர் பாலசுந்தரம்:
 
கனடாவில் திரு. சுமந்திரன் உரையாற்றிய கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். எனது சக்கர முதுகுப் பக்கத்தில் மண்டப பின்சுவர் நீளத்துக்குப் பல பொலிசார்கள் நின்றார்கள். மண்டப பாதுகாவலர்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். திரு. சாணக்கியனை அடுத்து சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். எதுவித சலசலப்பும் இல்லை. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. பேச்சு முடிகிற நேரம்.
சபையின் பின் வரிசையில் இருந்த ஓரூவர் எழுந்து நின்று ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. இருக்கையில் இருந்த சபை முழுவதும் வினா எழப்பியவரை நோக்கியது. அவர் அருகே நின்ற இன்னொருவர் இரு கைகளையும் உயர்த்தி ஏதோ சத்தம் போட்டார். சபை முழுவதும் எழுந்து நின்று மௌனமாய் அவரை நோக்கியது. இன்னும் சிலர் கைகளை உயர்த்தி குரலெழுப்பினர்.
முதுகுச் சட்டையில் ஆங்கிலத்தில் பாதுகாவலர்கள் என்று எழுதியவர்களை நோக்கினேன். அவர்கள் மௌனமாய் நடப்பதை ரசித்துக்கொண்டு நின்றார்கள். பொலிசாரை நோக்கினேன். அழகான கருநீலச் சட்டைப் பொத்தான்களின் ஓளிவீச்சுகள் கண்களைக் கூசச் செய்தன. அவர்கள் அனைவரும் நட்டுவைத்த பாவைகள் போல பேசாமடைந்தைகளாய் காட்சி தந்தனர்.
அதுதான் கனேடிய ஜனநாயக பேச்சுச் சுதந்திரத்தின் பேரழகு. அதில் சில முதிய இளைஞர்கள் நஞ்சு பாய்ச்சுவதைப் பார்த்து இதயம் வலிபொறுக்காமல் ஓவென்றழுதது. இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.