Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்விக்கு பொறுப்பேற்று கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன், மாவை, சுமந்திரன் பதவி விலகுவார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Courtesy: திபாகரன்

ஜனநாயகத்தின் உயரிய விழுமியமாகவும், கூர்முனையாகவும் அமைவது தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதாகும். அவ்வாறு பதவி விலகும்போது மற்றவர்களுக்குப் பொறுப்பு உணர்வு இயல்பாகவே ஏற்படும். அது தோல்வியிலிருந்து மீண்டு எழுந்து வெற்றியின் பக்கம் செல்வதற்கான புதிய வழிகளை அவர்கள் கண்டுபிடிக்க உதவும் அல்லது கண்டு பிடிக்க முயற்சிப்பார்கள். இதன் மூலம் புதிய ஆளுமைகள் பல முனைகளிலிருந்தும் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதே இதனுடைய அடிப்படைத் தத்துவமாகும்.

தோல்விக்குப் பொறுப்பேற்றல் என்பது ஜனநாயகத்தின் உயரிய விழுமியமும், நாகரிகமுமாகும். அது ஒரு மனிதனின் பொதுவாழ்வில் தனக்கு இருக்கின்ற பொறுப்புக்களையும், பண்பாட்டையும், உயரிய சமூகப் பொறுப்பையும், முன்னுதாரணத்தையும் வெளிக்காட்டி நிலைநிறுத்தும். அத்தோடு மற்றவர்களுக்கு உயர்ந்த வழிகாட்டியாகவும் அமையும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் புதிய செல்வழி ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தற்போது வரலாறு தமிழ் தலைமைகளிடம் கையளித்து இருக்கிறது.

உலகின் ஜனநாயக பண்பியல் வரலாற்றில் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகியவர்கள் என்ற பட்டியல் மிக நீண்டது. அது ஜனநாயக நாடுகளிலும் சரி, கூடவே இராணுவ ஆட்சியாளர்களாக இருந்தவர்களும் அத்தகைய முன்னுதாரணங்களைக் கொண்டிருப்பதை எம் கண்முன்னே காண்கிறோம். ""ஒரு வருடத்துக்குள் அரசியல் தீர்வு இல்லையேல் பதவி விலகுவோம்"". என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பல முறை பகிரங்கமாகப் பத்திரிகைகளுக்கும், காணொளி நேர்காணல்களுக்கும் செவ்விகள் வழங்கியிருப்பதை இணைய வழியாகவும், இலத்திரனியல் ஊடகங்களிலும் இன்றும் யாவரும் பார்க்க முடியும்.

இவ்வாறு சுமந்திரன் குறிப்பிடுவது போலவே திரு. சம்பந்தனும் "தைப் பொங்கலுக்கு முன் தீர்வு, தீபாவளிக்கு முன் தீர்வு, வருட இறுதிக்குள் தீர்வு" எனக் கடந்த 12 வருடங்களாக ஓயாது இத்தகைய வாக்குறுதிகளை வாய்கூசாமல் சொல்லி வருவதைப் பார்த்து தமிழினம் சலிப்படைந்து போய் கிடக்கிறது. இவ்வாறு இவர்கள் வாக்குறுதிகளை வழங்கினாலும் இவர்கள் கடந்த காலத்தில் அங்கம் வகித்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு குண்டுமணியைத் தானும் தமிழ் மக்களுக்காகப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. மாறாக தனக்குக் கிடைத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காலத்தைக் கழித்து பதவிக்கான அனைத்து சலுகைகளையும் அனுபவிப்பதிலேயே காலத்தைக் கடத்தி விட்டார். இத்தகைய தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகவும் இல்லை. இப்படியான ஒரு ஜனநாயக முறைமை இருக்கின்றது என்பதைக்கூட அவர் மனதில் எழுந்திருக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

அவ்வாறு சுமந்திரனும் ""இந்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு வரும் இல்லையேல் பதவி விலகுவேன்"" எனக் காணொளியில் சத்தியம் செய்தார். ஆனால் அத்தகைய ஒரு தோல்விக்குப் பொறுப்பேற்கும் மனப்பக்குவம் அவரிடம் சிறிதும் கிடையாது என்பதை தற்போது அவர் எடுத்துவரும் அரசியல் முனைப்புக்கள் சான்று பகர்கிறன. தங்கள் தோல்விகளுக்குப் பொறுப்பேற்காமல் தங்களைச் சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று சிறிதும் வெட்கமின்றி பேசுவது மிகவும் அநாகரீகமான மானரோசமற்ற செயல். அது அவருடைய தன்மானத்துக்கு பெரும் இழிவானது.

இதனைக்கூட இவர்கள் புரியாமல் இருக்கிறார்களா என்பது கேள்விக்குரியது. இவர்களைப் போலவே மாவை சேனாதிராஜாவும் எந்தக் குற்ற உணர்வும் அற்று மேடைகளில் முழங்குவதைக் காணமுடிகிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட மாவை சேனாதிராஜா மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோல்வி அடைந்திருக்கிறார். தான் தலைமை தாங்கி வழி நடத்தும் கூட்டமைப்பு என்கின்ற முகமூடி அணிந்திருக்கும் தமிழரசுக் கட்சி மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோல்வி அடைந்து இருக்கும் நிலையில் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற பதவியை தன்னுடைய தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும்.

ஆனால் அவரோ தொடர்ந்து அந்தப் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தலைவர் நாற்காலியில் குந்தியிருப்பதிலேயே குறியாக இருக்கிறார் என்பது வெட்கம் கெட்ட செயல். தோல்விக்குப் பொறுப்பேற்பது என்ற அடிப்படை மனிதப் பண்புகள் எதுவும் அற்றவர்களாக இவர்கள் இருப்பது தமிழ்ச் சமூகத்தின் உயரிய பண்பாட்டுக்கும், விழுமியத்திற்கும், பொறுப்புணர்வுக்கும் தீங்கான செயலாகும்.இது எதிர்கால சந்ததியினரைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்ற தவறான அரசியல் நடத்தை என்கின்ற நச்சு விதைகளை விதைக்கின்ற செயலாகவுமே அமையும்.   

இத்தகைய தோல்விக்குப் பொறுப்பேற்று பதவிவிலகல் என்ற ஜனநாயக பண்பையும் முறைமையையும் தென்னாசிய அரசியல் பண்பாட்டில் பார்ப்போமேயானால் இந்தியாவின் முன்னாள் பிரதமராக விளங்கிய லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் நேரு காலத்தில் இந்தியாவின் முக்கியமான அதாவது ஆறாவது பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவி ஆகிய ரயில்வே அமைச்சராகப் பதவியில் இருந்த காலத்தில் [ 1) பிரதமர், 2) உள்துறை அமைச்சர், 3) பாதுகாப்பு அமைச்சர், 4) வெளி விகார அமைச்சர் , 5) நிதி அமைச்சர், 6) ரயில்வே அமைச்சர்]

ரயில்வே போக்குவரத்து விபத்தொன்றில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தபோது அந்த தவற்றுக்குப் பொறுப்பேற்று பதவி விலகினார். அப்போது பலரும் அவரை பதவி விலக வேண்டாம் என வற்புறுத்திய போதும் அவர் பதவி விலகினார். அவ்வாறு 1962ல் சீன-இந்திய யுத்தத்தின்போது அமைச்சராகவிருந்த கிருஷ்ணமேனன் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிச் சென்றார்.

அவ்வாறு இந்திரா காந்தி அவர்களின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த வி பி சிங் சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை டிசம்பர் 31ம் திகதிக்குள் முற்றாக அடக்கி விடுவேன் என வாக்குறுதி அளித்தார். அவ்வாறு அந்த காலக்கெடு முடிவடைந்த அன்று பேட்டி வழங்கிக் கொண்டிருக்கின்ற போதே சாம்பல் பள்ளத்தாக்கில் பெரும் கொள்ளை சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதனைக் கேள்வியுற்ற மறுகணமே வி.பி.சிங் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்து வெளியேறினர்.

அப்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவரைப் பதவி விலக வேண்டாம் எனக் கேட்கப்பட்டபோதும் தான் ""ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் மனித விழுமியங்களுக்கும் பொறுப்பு உள்ளவனாக இருக்கிறேன்"" என்று கூறியே பதவியைத் துறந்தார். இவ்வாறு இந்திய அரசியல் ஜனநாயகத்தில் மூன்று முக்கிய முன்னுதாரணங்களைக் கூற முடிகின்றது. ஆசியாவின் ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன பாகிஸ்தானிய அரசியலிலும் இத்தகைய ஜனநாயக முன்னுதாரணங்களைக் காணமுடியும்.

1965 இந்தியப் பாகிஸ்தானிய எல்லைப் பகுதி யுத்தத்தின்போது பாகிஸ்தானின் தோல்விக்குப் பொறுப்பேற்று அயூப்கான் தனது ஜனாதிபதி பதவியைத் துறந்தார். அவ்வாறே பாகிஸ்தானிய ஜனாதிபதியாக இருந்த ஜெஹியாகான்1971ல் இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் பங்களாதேஷ் பிரிக்கப்பட்டதனால் அந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தன் ஜனாதிபதி பதவியைத் துறந்தார். இவ்வாறு இந்திய உபகண்டத்தில் இந்தியாவில் மூன்று அமைச்சர்களும், பாகிஸ்தானில் இரண்டு ஜனாதிபதிகளும் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகி இருக்கிறார்கள்.

இத்தகைய செயல்கள் இந்தப் பிராந்தியத்தின் ஜனநாயக முறைமைக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் ஜனநாயக அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறன என்பதை இங்கே நாம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இந்தப் பிராந்தியத்தின் ஜனநாயக மீட்சிக்கும், ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கும், ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கும் அவர்கள் நல்ல முன்னுதாரணங்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இவ்வாறு பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிச் சென்ற பிரதமர்கள் அமைச்சர்கள் என்ற வரிசை மிக நீண்டது. இத்தகைய ஜனநாயக பண்புகள் தமிழ் அரசியல் பரப்பில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இத்தகைய ஜனநாயக முறைமை என்ற ஒரு பண்பியல்பை தமிழ் அரசியல் வாதிகளின் மனதில் புகுத்தப்பட வேண்டும். கடந்த 12 ஆண்டுக்கால ஈழத்தமிழ் அரசியல் செயல்முறையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தங்களை இனங்காட்டி ஜனநாயகவாதிகளாகக் கூக்குரலிடும் தமிழரசுக் கட்சியின் முதன்மை தலைவர்கள் தாம் அங்கம் வகித்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழர் தாயக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களால் நிரப்பப்பட்டன.

பௌத்த விகாரைகளுக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டும், யாழ் குடாவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் சட்டத்தின் பெயரால் சுவீகரிக்கப்பட்டதனை தடுப்பதற்கான விதத்தில் இவர்களால் செயல்பட முடியவில்லை என்பது இவர்களுடைய தோல்வியை வெளிக்காட்டி நிற்கின்றது. மேலும் இவர்களுடைய வழிநடத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாக உடைந்துவிட்டது. கஜேந்திரகுமார் அணி, விக்னேஸ்வரன் அணி, சம்பந்தன் அணி என்ற மூன்று பிரிவினராகத் தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டுவிட்டது.

மூன்று பிரிவாகத் தமிழ்த் தேசியத்தை உடைத்துவிட்டு இப்போது தமிழ்த் தேசியத் தளத்தில் இருந்துதான் நாம் பேசுகிறோம் என்று சிறிதும் வெட்கமின்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது களத்தில் சம்பந்தன் அணியில் இருந்த கூட்டமைப்புக்குள் மேலும் இரண்டு பிரிவாக உடைவதற்கான உணர்வுகளும் கூச்சல்களும், சலசலப்புக்களும் வெளிப்படுகின்றன. இதனால் தமிழ் மக்களின் பலம் மேலும் மழுங்கடிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியம் பாரதூரமான பலவீனத்தைச் சந்தித்திருக்கிறது.

அத்தோடு கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழரசுக் கட்சி என்ற ரீதியில் அது பெரும் சரிவை, தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இப்போது புதிய அரசியலமைப்பு, அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என இவர்கள் கூறுவது முற்றிலும் அபத்தமானது. ஏனெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மாகாணசபைத் தேர்தல், மாகாண சபைகளை ஒழித்தல் என்பதையே தனது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் முன்வைத்து ""மக்கள் ஆணையை"" ஜனாதிபதி பெற்றிருக்கிறார்.

எனவே 13ஆம் திருத்தச் சட்டமோ, அல்லது மாகாண சபையோ தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச தீர்வாகத்தானும் இந்த புதிய அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. மாறாக ""ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரு மக்கள் "" என்ற அடிப்படையில் ஒற்றையாட்சி முறையிலான அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது, எனவே அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் தரும் என்று கூறி தமிழ் மக்களைக் காத்திருக்கும்படி கூறுவது ஒரு குற்றச் செயலே.

இத்தகைய குற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் சம்மந்தன், சேனாதிராஜா, சுமந்திரன் ஆகிய மூவருமே பொறுப்புக்கூற வேண்டியவர்கள். இவர்கள் தமது தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிச் சென்றால் இந்தக் கட்சியில் பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்னே வந்து பொறுப்பேற்பர். அவ்வாறு பொறுப்பேற்பவர்கள் கட்சியைச் சரியான வழியில் வழிநடத்துவர்.

தமிழ் அரசியல் பரப்பில் தலைமை தாங்குவதற்குத் தகுந்தவர்கள் யாரும் இல்லை என இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தமிழர்களை வழிநடத்துவதற்கு ஏராளமான ஆளுமை மிக்கவர்களைத் தமிழ்த்தாய் பிரசவித்திருக்கிறாள். அத்தகைய புதிய ஆளுமை மிக்கவர்களை வழிநடத்த வழிவிட்டு, தமிழ்த்தேசிய அரசியல் தரப்பிற்கு புதிய இரத்தத்தைப் பாய்ச்சி தமிழ் மக்களுக்கான தேசிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை அளிக்குமாறு இவ்வளவு காலமும் இனத்துக்காக மாண்டுபோன மக்களினதும், மாவீரர்களினதும் பெயராலும் பதவிவிலகிச் செல்லும்படி வரலாறு இவர்களுக்குக் கட்டளையிடுகிறது.

- திபாகரன் -

https://tamilwin.com/article/artical-about-tamil-nation-alliance-1639057533

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி தலைப்பை பார்த்த போதே ஊகித்தேன் இது தமிழ்வின் ஊடக வியாபாரிகள் செய்தி போலும் என்று. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

தோல்விக்கு பொறுப்பேற்று கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன், மாவை, சுமந்திரன் பதவி விலகுவார்களா?

மேலை நாடுகளில் அரசியல் தோல்வியென்றால் அந்தந்த அரசியல் தலைவர்கள் பதவி விலகி மற்றவர்களுக்கு இடம் கொடுப்பார்கள். சிறிலங்கா இந்தியாவிலை அப்பிடியில்லை....சாகும் வரை உண்ணாவிரத நாடகம் மாதிரி  தங்கடை பதவியையும் சாகும் வரைக்கும் வைத்திருப்பார்கள். 

இதிலை பகிடி என்னவெண்டால் மேலைத்தேய அரசியல் திட்டத்திலை வாழுற புலம்பெயர் தமிழ்ச்சனங்களும் இப்பவும் சம்பந்தன் கொம்பனிக்கு வடைமாலை போட்டுக்கொண்டு இருக்குதுகள்.....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

மூன்று பிரிவாகத் தமிழ்த் தேசியத்தை உடைத்துவிட்டு இப்போது தமிழ்த் தேசியத் தளத்தில் இருந்துதான் நாம் பேசுகிறோம் என்று சிறிதும் வெட்கமின்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது களத்தில் சம்பந்தன் அணியில் இருந்த கூட்டமைப்புக்குள் மேலும் இரண்டு பிரிவாக உடைவதற்கான உணர்வுகளும் கூச்சல்களும், சலசலப்புக்களும் வெளிப்படுகின்றன. இதனால் தமிழ் மக்களின் பலம் மேலும் மழுங்கடிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியம் பாரதூரமான பலவீனத்தைச் சந்தித்திருக்கிறது.

 சிங்களத்தின் திட்டத்தை முழுமையாக  நிறைவேற்றி விட்டார்கள், அடுத்து நிறைவேற்ற வேண்டியது .....

19 hours ago, பெருமாள் said:

13ஆம் திருத்தச் சட்டமோ, அல்லது மாகாண சபையோ தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச தீர்வாகத்தானும் இந்த புதிய அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. மாறாக ""ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரு மக்கள் "" என்ற அடிப்படையில் ஒற்றையாட்சி முறையிலான அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்

இதற்காகவே மக்களை காத்திருக்கச் சொன்னார்கள். கரையில் இருக்கும்போது காப்பாற்ற முடியாதவர்கள் நடுக்கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டபின் காப்பாற்றுவார்களா? அல்லது காப்பாற்றத்தான் முடியுமா இவர்களால்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

செய்தி தலைப்பை பார்த்த போதே ஊகித்தேன் இது தமிழ்வின் ஊடக வியாபாரிகள் செய்தி போலும் என்று. 

வெறுமனே ஊடக வியாபாரிகள் என்று சொல்வதை விட்டு சம்பந்தர் சுமத்திரன் மாவை செய்த உருப்படியான காரியங்களை சொல்லமுடியுமா ?

ஆதரவாளராய்  இருப்பது தப்பில்லை உண்மை எதுவென்பதை அறிந்து அதற்கேற்ப தலைவர்களை நடக்குமாறு நீங்க கேட்கணும் நல்ல ஆதரவாளர் என்பது தங்கள் தலைமையை நல்வழிப்படுத்துபவர்களாக இருக்கனும் உங்களால் முடியாது சம்பந்தனோ சுமத்திரனோ சிங்கள தலைமை என்ன சொல்லுதோ அதைத்தான்  செய்வார்களோ ஒழிய உங்களை ஒரு பொருட்டாகவே கவனத்தில் கொள்ளமாட்டார்கள் .

அதை விட்டு இங்கு வந்து மறுத்தான் ஆட்டம் ஆடுவது வீண் வேலை .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில சோனவரதும் மலையகத்தமிழரதும் நகர்வை எங்கட தமிழ் அரசியல்(வா)வியாதிகள் கொஞ்சம் அவதானிக்கவேணும். இல்லை நாங்க எங்கட அரசியலை, அதாவது யாழ் மேட்டுக்குடி அரசியல்தானென்று மேதாவித்தன அடம்பிடிப்பில் அழிந்துவருவது தமிழர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

வெறுமனே ஊடக வியாபாரிகள் என்று சொல்வதை விட்டு சம்பந்தர் சுமத்திரன் மாவை செய்த உருப்படியான காரியங்களை சொல்லமுடியுமா ?

ஆயுதம் தூக்கி ஆட்களுக்கு மண்டையில் போடாமல் சொந்த நாட்டிலேயே வாழ்ந்து பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் அரசியலில் ஈடுபடுகின்றார்கள்.

லிபரா மோபைல் கூட்டணியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரொம்பத்தான் முக்குகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆயுதம் தூக்கி ஆட்களுக்கு மண்டையில் போடாமல் சொந்த நாட்டிலேயே வாழ்ந்து பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் அரசியலில் ஈடுபடுகின்றார்கள்.

இதானே வேணாங்கிறது ஊர்ல இருந்து தமிழர்க்கு  அரசியல் செய்தால் பரவாயில்லை  சிங்கள அரசுக்கு  அடிமை அரசியல் செய்பவர்களுக்கு மிரட்டலா ? சிரிக்க  முடியலை வேணாம் இப்படியெல்லாம் பகிடி விடக்கூடாது நியாயத்தை கதைப்பம் என்று புனைபெயரில் வரும் நீங்க அநியாயத்தை கதைக்கக்கூடாது .....

கட்டுரையாளர் எதிர்பார்ப்பது போல் தமிழர் அரசியலில் கடந்த 70 ஆண்டுகளாக எவருமே தமது ஒரு அரசியல் செயற்திட்டத் தோல்வியடைந்தவுடன் தோல்விக்கு பொறுபேற்று மற்றவர்களுக்கு வழிவிட்டு தாம் விலகி கொண்ட சம்பவம் நடைபெறவில்லை.  

ஆயுத போராட்டதிற்கு முன்பும் தமிழ் அரசியல் கட்சிகள் அப்படி தான் இருந்தனர்.  ஆயுத இயக்கமும் அதே போல் தலைக்கு மேல்வெள்ளம் வந்து அனைத்துமே நாசமாகும் நிலை வரும்போது கூட அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. 

 இப்படி நிலைமை இருக்க அதே தமிழர் அரசியல் ஜீனில் இருந்து வந்த சம்பந்தனும் சுமந்திரனும் பழைய தமிழர் அரசியல் தலைமைகளின் முன்மாதிரியையே பின்பற்றுவர் என்பது கூட  தெரியாத அரசியல் கற்று குட்டியா இந்த கட்டுரையாளர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

கட்டுரையாளர் எதிர்பார்ப்பது போல் தமிழர் அரசியலில் கடந்த 70 ஆண்டுகளாக எவருமே தமது ஒரு அரசியல் செயற்திட்டத் தோல்வியடைந்தவுடன் தோல்விக்கு பொறுபேற்று மற்றவர்களுக்கு வழிவிட்டு தாம் விலகி கொண்ட சம்பவம் நடைபெறவில்லை.  

அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு வெளிநாடு வரதேவையில்லை  இப்ப இருக்கிறவையால் புலம்பெயரிகளிடம் தானே தேடி வருகிறார்கள் கட்டுரையாளர் இங்குள்ள அரசியல் நடைமுறையை சொல்லி கொள்கிறார் சம்பந்தன் சுமத்திரன் அனைவரும் தீர்வு இல்லையென்றால் தாங்கள்  அரசியலில் இருந்து ஒதுங்குவதாய் எத்தனை முறை சொல்லி தமிழ் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் இப்படி ஆயுதப்போராட்டத்துக்கு முன்பான தமிழர் அரசியலில் சொல்லி விட்டு செயலில் காட்டாமல் பதவியை அனுபவித்த சம்பவங்கள் இருந்ததா ?

17 minutes ago, tulpen said:

ஆயுத போராட்டதிற்கு முன்பும் தமிழ் அரசியல் கட்சிகள் அப்படி தான் இருந்தனர்.  ஆயுத இயக்கமும் அதே போல் தலைக்கு மேல்வெள்ளம் வந்து அனைத்துமே நாசமாகும் நிலை வரும்போது கூட அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. 

இந்த கருத்தை எல்லாத்திரிகளிலும் செருகுவது  சேர்வருக்கு தேவையற்ற சுமை என்பதை உணருங்கள் .

21 minutes ago, பெருமாள் said:

அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு வெளிநாடு வரதேவையில்லை  இப்ப இருக்கிறவையால் புலம்பெயரிகளிடம் தானே தேடி வருகிறார்கள் கட்டுரையாளர் இங்குள்ள அரசியல் நடைமுறையை சொல்லி கொள்கிறார் சம்பந்தன் சுமத்திரன் அனைவரும் தீர்வு இல்லையென்றால் தாங்கள்  அரசியலில் இருந்து ஒதுங்குவதாய் எத்தனை முறை சொல்லி தமிழ் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் இப்படி ஆயுதப்போராட்டத்துக்கு முன்பான தமிழர் அரசியலில் சொல்லி விட்டு செயலில் காட்டாமல் பதவியை அனுபவித்த சம்பவங்கள் இருந்ததா ?

இந்த கருத்தை எல்லாத்திரிகளிலும் செருகுவது  சேர்வருக்கு தேவையற்ற சுமை என்பதை உணருங்கள் .

பெருமாள் சம்பந்தன் சுமந்திரன் மட்டுமல்ல,  மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கைகளை கடந்த 70 வருடங்களாக இருந்த எல்லா  அத்தனை அரசியல் ஆயுத தலைமைகளுமே செய்தன. சம்பந்தர், சுமந்திரன் அதை தொடர்கின்றனர் என்று கூறலாம். 

அது சரி பெருமாள் உங்களுக்கு  தானே உங்கள் அரசியல் கொள்கையோடு ஒத்துப்போகும் பாரளுமன்றுக்கு பின்கதவால் வந்த, சவப்பெட்டி புகழ் கஜேந்திரன் என்ற அரசியல்வாதி   இருக்கிறாரே. அவரோடு சேர்ந்து தீர்வுக்கு முயற்சிக்கலாமே! 

35 minutes ago, பெருமாள் said:

இந்த கருத்தை எல்லாத்திரிகளிலும் செருகுவது  சேர்வருக்கு தேவையற்ற சுமை என்பதை உணருங்கள் .

 நடந்த வரலாற்று சம்பவலழங்களை  மறைக்காது பொது மக்கள் பார்வையில்  உண்மைகளை பேசுவது  உங்களுக்கு சுமை என்பது புரிகிறது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

அது சரி பெருமாள் உங்களுக்கு  தானே உங்கள் அரசியல் கொள்கையோடு ஒத்துப்போகும் பாரளுமன்றுக்கு பின்கதவால் வந்த, சவப்பெட்டி புகழ் கஜேந்திரன் என்ற அரசியல்வாதி   இருக்கிறாரே. அவரோடு சேர்ந்து தீர்வுக்கு முயற்சிக்கலாமே! 

அண்ணே எதிர் கீரைக்கடை சரியாய் இல்லையென்று எத்தனைமுறை எழுதுவது உங்களை போல ஒவ்வொரு திரியிலும் என்னால் முடியாது . அவரும் பேருக்கு சவுண்டு விடுகிறார் என்பது உண்மை .

யார் குற்றியும் அரிசி ஆகட்டும் அங்குள்ள  தமிழ் பேசும் மக்கள் நிம்மதியாக இருக்கனும் இனி நானோ நீங்களோ ஊர் போய்  இருக்கப்போவதில்லை அங்கு இருப்பவர்கள் நிம்மதியாக இருக்கட்டும் .

Just now, பெருமாள் said:

அண்ணே எதிர் கீரைக்கடை சரியாய் இல்லையென்று எத்தனைமுறை எழுதுவது உங்களை போல ஒவ்வொரு திரியிலும் என்னால் முடியாது . அவரும் பேருக்கு சவுண்டு விடுகிறார் என்பது உண்மை .

பெருமாள் நானும் நீங்களும் அதை தான் கூறுகிறோம். எல்லோருமே சவுண்டு பேர்வழிகள் தான். உந்த தீர்வு மண்ணாங்கட்டிகளை விட்டுவிட்டு முடியுமான வரை  ஏராளனின்  “புலர்” போன்ற அமைப்புகளுக்கு முடிந்த அளவுக்கு உதவி செய்து மக்களின் வாழ்க்கை தரத்தையும் கலவியையும் உயர்ததுவதே எம்மால் செய்யக் கூடிய ஆகக் கூடிய வினைதிறனான செயல். அதற்கு மேல் செய்யக்கூடிய வலு நமது தலைமுறைக்கு இல்லை. 

எதிர்கால சந்ததி அவர்களின் அறிவை உபயோகித்து அவர்களின் சொந்த ஐடியாவில் சிங்கவருடன் சமரசம் பேணி தீர்வை பெறட்டும்.  இந்த சந்ததியால் அது முடியாது என்பது உறுதி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

நடந்த வரலாற்று சம்பவலழங்களை  மறைக்காது பொது மக்கள் பார்வையில்  உண்மைகளை பேசுவது  உங்களுக்கு சுமை என்பது புரிகிறது.  

தவறுகள் எல்லாப்பக்கமும் இருக்குது குறிப்பிட்டவர்களை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக்கொள்வது மற்றைய தவறிழைத்தவர்களை தப்பிக்க வழிவகுத்து விடும் .

3 minutes ago, பெருமாள் said:

தவறுகள் எல்லாப்பக்கமும் இருக்குது குறிப்பிட்டவர்களை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக்கொள்வது மற்றைய தவறிழைத்தவர்களை தப்பிக்க வழிவகுத்து விடும் .

நான் எல்லோரையும் சேர்தது தான் கூறுகிறேன் பெருமாள். எந்த பேதமும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இதானே வேணாங்கிறது ஊர்ல இருந்து தமிழர்க்கு  அரசியல் செய்தால் பரவாயில்லை  சிங்கள அரசுக்கு  அடிமை அரசியல் செய்பவர்களுக்கு மிரட்டலா ? சிரிக்க  முடியலை வேணாம் இப்படியெல்லாம் பகிடி விடக்கூடாது நியாயத்தை கதைப்பம் என்று புனைபெயரில் வரும் நீங்க அநியாயத்தை கதைக்கக்கூடாது .....

சிங்கள அரசியல் மட்டுமா ? 

இந்தியாவை மறந்துவிட்டீர்களே(இலகுவாக)?

1 hour ago, tulpen said:

கட்டுரையாளர் எதிர்பார்ப்பது போல் தமிழர் அரசியலில் கடந்த 70 ஆண்டுகளாக எவருமே தமது ஒரு அரசியல் செயற்திட்டத் தோல்வியடைந்தவுடன் தோல்விக்கு பொறுபேற்று மற்றவர்களுக்கு வழிவிட்டு தாம் விலகி கொண்ட சம்பவம் நடைபெறவில்லை.  

ஆயுத போராட்டதிற்கு முன்பும் தமிழ் அரசியல் கட்சிகள் அப்படி தான் இருந்தனர்.  ஆயுத இயக்கமும் அதே போல் தலைக்கு மேல்வெள்ளம் வந்து அனைத்துமே நாசமாகும் நிலை வரும்போது கூட அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. 

 இப்படி நிலைமை இருக்க அதே தமிழர் அரசியல் ஜீனில் இருந்து வந்த சம்பந்தனும் சுமந்திரனும் பழைய தமிழர் அரசியல் தலைமைகளின் முன்மாதிரியையே பின்பற்றுவர் என்பது கூட  தெரியாத அரசியல் கற்று குட்டியா இந்த கட்டுரையாளர்.

இதில் சந்தேகம் வேறு.... ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சனநாயகப் பண்பு சொறீலங்கா வாழ் அரசியல் வியாதிகளிடம் இல்லை. அதுவும் தமிழ் கட்சிகள்.. ஒட்டுக்குழுக்களிடம் அறவே இல்லை.

தோற்றாலும் வென்றாலும் ஏன் துரோகங்களைச் செய்தாலும் கூட.. சாகும் வரை இவர்கள் அரசியல் வியாதிகளாக மக்களைப் பீடித்துக்கொண்டே இருப்பர். அதுதான் சாபக்கேடு அந்த மக்களின். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

மேலை நாடுகளில் அரசியல் தோல்வியென்றால் அந்தந்த அரசியல் தலைவர்கள் பதவி விலகி மற்றவர்களுக்கு இடம் கொடுப்பார்கள்.

என்னுடைய இந்த நம்பிக்கையை உடைத்தவர்கள் டிரம்பும், ஜோன்சனும்.

மூன்றாம் உலக தலைவர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு விதி மீறல், ஊழல், பொய், களவு, செயல்பாட்டீனம், (பொறுப்பை சரி வர கையாளமல்) மறைமுகமாக ஆயிரகணக்கில் சொந்த மக்கள் சாவுக்கு பொறுப்பு… இப்படி பலது நடந்தும் வெட்கம் கெட்டு பதவியில் ஒட்டி கொண்டிருக்க எல்லா முயற்சியும் செய்தார், செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் விளிம்பில் நின்று உதவிக்காய் மக்கள் அலறியபோது இவர்கள் எங்கே போய் ஒளிந்து இருந்தார்கள்? ஆறுதல் சொல்ல யாருமற்று இறந்த உறவுகளின் உடல்களோடு புலம்பியபோது இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மக்களின் அழிவில் அரசியல் செய்யும் விபச்சாரிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

என்னுடைய இந்த நம்பிக்கையை உடைத்தவர்கள் டிரம்பும், ஜோன்சனும்.

மூன்றாம் உலக தலைவர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு விதி மீறல், ஊழல், பொய், களவு, செயல்பாட்டீனம், (பொறுப்பை சரி வர கையாளமல்) மறைமுகமாக ஆயிரகணக்கில் சொந்த மக்கள் சாவுக்கு பொறுப்பு… இப்படி பலது நடந்தும் வெட்கம் கெட்டு பதவியில் ஒட்டி கொண்டிருக்க எல்லா முயற்சியும் செய்தார், செய்கிறார்.

உலகில் பலர் அரசியல்வாதிகள் உட்பட  நீங்கள் சொன்ன அந்த இருவரையும் அரசியல் தலைவர்களாக கணிப்பதே இல்லை.அந்த நாட்டின் மீதுள்ள மரியாதையின் நிமித்தம் கைகுலுக்கி உரையாடுகின்றார்கள். 

நீங்கள் என்னடாவெண்டால்......? 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.