Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

ஒரு முன்னோடி என்பவர் தனது அடுத்த தலைமுறைக்கு வழி காட்டுபவராக இருக்க வேண்டுமே தவிர பழைய குப்பைகளையும் மூடப்பழக்கங்களையும் அடுத்த தலைமுறை மீது திணிப்பவரக இருக்கக்கூடாது.  

அவரது தவறான கருத்துக்களை  மாற்றி நீங்களும் ஒரு முன்னோடியாகலாம், யாரும் தடுக்கப்போவதில்லை. யார் யாரையோ பின்பற்றுகிற இந்த காலத்தில் உங்கள் கருத்துகளையும் பின்பற்ற மக்கள் முன் வருவார்கள்!

  • Replies 191
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

1. அன்னப்பறவைக்கு அப்படி ஒரு ஆற்றல் இல்லை. அது சும்மா எங்கள் புலவர்மார்கள் அரசர்மார்களுக்கு அவித்து விட்ட கப்ஸா

51 minutes ago, satan said:

தாங்கள் ஒருக்கா பரீட்சித்து முடிவை அறியத்தரலாமே?

குறுக்கே வருவதற்கு மன்னிக்கவும்.

தமிழ் இலக்கியங்களில் வரும் அன்னம், அன்றில் என்பன கற்பனையான அல்லது அழிந்து போன பறவையினங்கள் என்கிறார்கள்.

அவை இன்றைய Swans இல்லையாம்.

_____******______
 
கற்பனை உயிரினம்: தண்ணீரைப் பிரிக்கும் பறவை

51999.jpg

அன்னப்பறவை பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ராமாயணம், மகாபாரதம், வேதங்களில் இந்த பறவையைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் இதை ‘ஹம்சா’, ‘ஹம்சபட்சி’ என்று கூப்பிடுகிறார்கள். கோவிலுக்குப் போகும்போது அங்குள்ள சிற்பங்களில்கூட இந்தப் பறவையை நீங்கள் பார்க்கலாம். வீட்டில் அம்மா கட்டும் பட்டுப்புடவை, சாமிப் படங்களில்கூட இந்த அன்னப் பறவை இடம் பிடித்துவிடும்!

இமயமலையில் உள்ள மானசரஸ் ஏரியில் அன்னப் பறவைகள் வாழ்ந்ததாக இந்தியப் புராணங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

மகாபாரதத்தில் வரும் நள தமயந்தி கதையில் நளனுக்கும் தமயந்திக்கும் தூது போகும் பறவையாக இது இருந்துள்ளது.

பாலையும் தண்ணீரையும் கலந்துவைத்தால் தூய்மையான பாலை மட்டும் பிரிக்கும் அபூர்வ சக்தி இந்த அன்னப்பறவைக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

புராண காலத்தில் அழுக்கிலிருந்து சுத்தமானதைப் பிரிக்கும் பறவையாக அன்னங்கள் கருதப்பட்டனவாம். அன்னம் தூய்மையான முத்துகளை உணவாக உட்கொள்ளுமாம்.

நீரில் இருந்தாலும் அன்னத்தின் சிறகுகள் நனையாதவை. உலக வாழ்வில் இருந்துகொண்டே ஒட்டாமல் இருப்பதற்கு உதாரணமாக இந்த அன்னப் பறவைகளைச் சொல்கிறார்கள்.

அன்னைப் பறவையைப் போல வாத்தின் சிறகுகளும்கூட தண்ணீரில் ஒட்டாது. வாத்துகளும் சேற்று நீரிலிருந்து சேற்றைப் பிரித்து சுத்தமான நீரைக் குடிக்கும் திறமை பெற்றது.

அன்னப்பறவை பூமியில் நடக்கும். வானத்தில் பறக்கும், தண்ணீரில் நீந்தும்.

இந்தியப் புராணங்களைத் தவிர கிரேக்கப் புராணங்களிலும் அன்னப் பறவை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஐரிஷ் புராணக் கதைகளிலும் அன்னங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பகலில் அன்னங்களாக வானில் பறக்கும் பறவைகள் இரவில் அழகான பெண்களாக மாறுவதாக ஒரு கதை உள்ளது. ஐரோப்பாவில் அன்னப் பறவையைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன. தற்காலத்தில் உள்ள ‘ஸ்வான்’ (swan) என்று அழைக்கப்படும் அன்னப்பறவைகளும் புராணத்தில் வரும் அன்னப் பறவைகளும் ஒன்றல்ல.

https://www.hindutamil.in/amp/news/supplements/maya-bazar/51999-.html

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

நாவலரைப் போல சாதி வெறிக்கு தண்ணீர் ஊற்றாமல் நாம் இருக்க வேண்டும் என்கின்றீர்கள்.

போல வேண்டாம். நீங்கள் அவர் விட்ட தவற்றை சொல்லிக்கொண்டு திரிவதை விட மாற்றிக்காட்டுவதிலேயே "தில்" இருக்கிறது. பகுத்தறிவு உள்ளவர்கள் செயலும் அதுவே. சொல் வீரர் அல்ல செயல் வீரர் என்று எதிர்கால சந்ததி உங்களையும் கொண்டாடும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மகிந்த நினைத்தது நிறைவேறுகிறது 🤣.

யாரை கையில் எடுத்தால் - தமிழருக்குள் பிக்கல் பிடுங்கல் வெடிக்கும் என்று ஸ்கெட்ச் போட்டு மூவ் பண்றாப்பல.

கோசான் நீங்கள் நினைப்பது போல் அல்ல ஊர் நிலமை. சில தனியார் கோவில்களில் சாதீய பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால் பொதுவாக சாதீய வேறுபாடு குறைந்து வருகிறது.

எப்போதோ ஓர் தடவை நடந்த விடயத்தை யாழில் திரும்ப திரும்ப எழுதுவதால் அது மீண்டும் நிகழ்வதாக இருக்காது.

On 17/12/2021 at 13:25, zuma said:

நாவலர் சைவத்தை மாத்திரம் அல்ல சாதியையும் திறம்பட வளர்த்தவர். சிங்களவன் தமிழ் மக்களை சாதி ரீதியாக பிரிப்பதற்கு நல்ல தான் காய் நகர்த்துகின்றான், அதற்க்கு எம்முடைய உயர் குடி மக்களும் துணை போகின்றார்கள்.
 
மேலும் இங்கு மகிந்தவுடன் நிற்பவர்கள் எல்லோரும் சாதீயத்தை தூக்கிப் பிடிக்கும் உயர் குடிகள் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

குறுக்கே வருவதற்கு மன்னிக்கவும்.

தமிழ் இலக்கியங்களில் வரும் அன்னம், அன்றில் என்பன கற்பனையான அல்லது அழிந்து போன பறவையினங்கள் என்கிறார்கள்.

அவை இன்றைய Swans இல்லையாம்.

_____******______
 
கற்பனை உயிரினம்: தண்ணீரைப் பிரிக்கும் பறவை

51999.jpg

அன்னப்பறவை பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ராமாயணம், மகாபாரதம், வேதங்களில் இந்த பறவையைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் இதை ‘ஹம்சா’, ‘ஹம்சபட்சி’ என்று கூப்பிடுகிறார்கள். கோவிலுக்குப் போகும்போது அங்குள்ள சிற்பங்களில்கூட இந்தப் பறவையை நீங்கள் பார்க்கலாம். வீட்டில் அம்மா கட்டும் பட்டுப்புடவை, சாமிப் படங்களில்கூட இந்த அன்னப் பறவை இடம் பிடித்துவிடும்!

இமயமலையில் உள்ள மானசரஸ் ஏரியில் அன்னப் பறவைகள் வாழ்ந்ததாக இந்தியப் புராணங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

மகாபாரதத்தில் வரும் நள தமயந்தி கதையில் நளனுக்கும் தமயந்திக்கும் தூது போகும் பறவையாக இது இருந்துள்ளது.

பாலையும் தண்ணீரையும் கலந்துவைத்தால் தூய்மையான பாலை மட்டும் பிரிக்கும் அபூர்வ சக்தி இந்த அன்னப்பறவைக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

புராண காலத்தில் அழுக்கிலிருந்து சுத்தமானதைப் பிரிக்கும் பறவையாக அன்னங்கள் கருதப்பட்டனவாம். அன்னம் தூய்மையான முத்துகளை உணவாக உட்கொள்ளுமாம்.

நீரில் இருந்தாலும் அன்னத்தின் சிறகுகள் நனையாதவை. உலக வாழ்வில் இருந்துகொண்டே ஒட்டாமல் இருப்பதற்கு உதாரணமாக இந்த அன்னப் பறவைகளைச் சொல்கிறார்கள்.

அன்னைப் பறவையைப் போல வாத்தின் சிறகுகளும்கூட தண்ணீரில் ஒட்டாது. வாத்துகளும் சேற்று நீரிலிருந்து சேற்றைப் பிரித்து சுத்தமான நீரைக் குடிக்கும் திறமை பெற்றது.

அன்னப்பறவை பூமியில் நடக்கும். வானத்தில் பறக்கும், தண்ணீரில் நீந்தும்.

இந்தியப் புராணங்களைத் தவிர கிரேக்கப் புராணங்களிலும் அன்னப் பறவை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஐரிஷ் புராணக் கதைகளிலும் அன்னங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பகலில் அன்னங்களாக வானில் பறக்கும் பறவைகள் இரவில் அழகான பெண்களாக மாறுவதாக ஒரு கதை உள்ளது. ஐரோப்பாவில் அன்னப் பறவையைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன. தற்காலத்தில் உள்ள ‘ஸ்வான்’ (swan) என்று அழைக்கப்படும் அன்னப்பறவைகளும் புராணத்தில் வரும் அன்னப் பறவைகளும் ஒன்றல்ல.

https://www.hindutamil.in/amp/news/supplements/maya-bazar/51999-.html

கோசான் நல்ல வேளை இது @நிழலி சொல்லவது போல் எம்மவர்கள் மட்டும் விட்ட கப்சா அல்ல ஐரோப்பியர்களும் விட்ட கப்சா 😜

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. அன்னப்பறவை; சரியெது பிழையெது என பிரித்து நல்லதை பின்பற்றுபவர்கள். 2. கிளி; யாரும் சொல்வதை தன் சுய சிந்தனையில்லாமல் அப்படியே பின்பற்றுபவர்கள். 3. பன்னாடை;  நல்லவற்றை விட்டு தீயதை பின்பற்றுபவர்கள். அதையே நான் இங்கு சுட்டினேன்! வேறொரு ஆராய்ச்சியுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

நாவலர் அவரின் காலச் சமூகத்தை பிரதிபலித்து இதில் பதில்களை அளித்திருக்கிறார். ஏதோ நாவலர் தான் சாதியை உருவாக்கின மாதிரி இருக்குது சிலரது நாவலர் வெறுப்புக் கதை.  தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.. தமிழ் செம்மொழியாக உழைத்தவர் அவர் என்றால்.. அது மிகையல்ல. 

மேலும் நாவலர் வாழ்ந்த காலத்தில் இருந்த பிரித்தானிய காலனித்துவத்துள் சாதியப் பாகுபாடுகள் வர்க்கப்பாகுபாடுகளாகி.. மக்களின் வாழ்க்கை தரத்திலும் பாகுபாடுகள் இருந்ததால்.. நாவலர் தூய்மையை முன்னுறுத்தி.. தூய்மை இல்லாத பழக்க வழக்கம் உள்ளோரை தாழ்ந்த சாதி என்றிரைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. 

ஏன் இன்றும் தான்.. தூய உடை அணியாமல்.. குளிக்காமல்.. நாற நாற ஒருவர் அருகில் வந்தால்.. அந்த இடத்தில்.. இதில நாவலரை வெறுக்கிறவை குந்தி இருந்து உணவு அருந்துவினமா..???!

நாவலர் தன் காலத்தைப் பிரதிபலித்து மக்களுக்கு எளிமைப்படுத்த இப்படி உரைத்திருக்கலாம்.. தமிழையே எளிமைப்படுத்தி உரைத்த மொழியாளர் அல்லவா அவர். 

நாவலர் பெருமானர் தமிழுக்கும்.. தமிழர் நிலத்துக்கும் ஆற்றிய எவ்வளவோ அளப்பரிய விடயங்கள் இருக்க.. ஒரு சில அந்தக் காலப் பிரதிபலிப்புக்களை இன்றும் அவரின் பெயரை அவதூறாக்க காவித் திரிபவர்கள் தான்.. உண்மையான சாதி வெறியர்களாவர். 

இது தான் நடைபெறுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

கோசான் நீங்கள் நினைப்பது போல் அல்ல ஊர் நிலமை. சில தனியார் கோவில்களில் சாதீய பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால் பொதுவாக சாதீய வேறுபாடு குறைந்து வருகிறது.

எப்போதோ ஓர் தடவை நடந்த விடயத்தை யாழில் திரும்ப திரும்ப எழுதுவதால் அது மீண்டும் நிகழ்வதாக இருக்காது.

மேலும் இங்கு மகிந்தவுடன் நிற்பவர்கள் எல்லோரும் சாதீயத்தை தூக்கிப் பிடிக்கும் உயர் குடிகள் அல்ல. 

நன்றி மீரா,

எனது கணிப்பில் என் வாழ்நாளில் இப்போதான் ஊரில் சாதியம் அதிகமாக உள்ளதை நான் உணர்கிறேன்.

இங்கே யூகேயில் slave trade உடன் தொடர்புபட்ட சிசில் ரோட்ஸ் உட்பட பலர் அண்மையில் விமர்சனத்துக்கு உள்ளானதை தெரிந்திருப்பீர்கள்.

ஒரு பாதிப்பை ஏற்படுத்தி சென்ற மனிதர்களின் நல்லதும், கெட்டதும் நினைவுபடுத்தபடுவது வழமைதான். 

இதில் அடிபடவோ, இன்றைய விழுமிய பார்வையுடன் அன்றைய மனிதர்களை ஒப்பிடகூடாது என்பதை ஏற்கும் அதே வேளை, அவர்கள் செய்த காரியங்களில் ஒரு தொகுதி மோசமானது என்பதை குறித்து வைப்பதிலும் தவறில்லை.

இதே போல் அன்று வாழ்ந்த பல அறிஞர்கள் எல்லாரின் மீதும் இந்த குற்றசாட்டு வைக்கபடுவதில்லை என்பதையும் நாம் காணவேண்டும்.

7 minutes ago, MEERA said:

கோசான் நல்ல வேளை இது @நிழலி சொல்லவது போல் எம்மவர்கள் மட்டும் விட்ட கப்சா அல்ல ஐரோப்பியர்களும் விட்ட கப்சா 😜

எல்லாரும் கப்சா விட்டு நம்ம உயிர வாங்கி இருக்கிறாங்க🤣.

தமிழிலக்கியம் ஆண்டு10-11 நளவெண்பா, நாலடியார் ரெண்டிலும் இந்த அன்னம் வந்து பண்ணாத டாச்சர் இல்லை🤣.

8 minutes ago, satan said:

மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. அன்னப்பறவை; சரியெது பிழையெது என பிரித்து நல்லதை பின்பற்றுபவர்கள். 2. கிளி; யாரும் சொல்வதை தன் சுய சிந்தனையில்லாமல் அப்படியே பின்பற்றுபவர்கள். 3. பன்னாடை;  நல்லவற்றை விட்டு தீயதை பின்பற்றுபவர்கள். அதையே நான் இங்கு சுட்டினேன்! வேறொரு ஆராய்ச்சியுமில்லை. 

நீங்கள் சொன்ன பால்/நீர் கருத்து நாலடியாரில் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, MEERA said:

நீங்கள் நினைப்பது போல் அல்ல ஊர் நிலமை. சில தனியார் கோவில்களில் சாதீய பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால் பொதுவாக சாதீய வேறுபாடு குறைந்து வருகிறது.

மாறிவரும் உலகில் மனித சிந்தனைகளும் மாறிக்கொண்டே வருகிறது. காலத்தின் மாற்றத்தை உணர்ந்து  எல்லோரும் மனிதர்கள் என  எல்லோரையும் மதித்து ஏற்று வாழ முயற்சிக்க வேண்டும். அதை கள உறவுகள் நாங்களே உருவாக்கலாம்.  ஆழ வேரூன்றியதை உடனடியாக மாற்ற முடியாது, முயன்றால் சேதம் அதிகமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

நன்றி மீரா,

எனது கணிப்பில் என் வாழ்நாளில் இப்போதான் ஊரில் சாதியம் அதிகமாக உள்ளதை நான் உணர்கிறேன்.

இங்கே யூகேயில் slave trade உடன் தொடர்புபட்ட சிசில் ரோட்ஸ் உட்பட பலர் அண்மையில் விமர்சனத்துக்கு உள்ளானதை தெரிந்திருப்பீர்கள்.

ஒரு பாதிப்பை ஏற்படுத்தி சென்ற மனிதர்களின் நல்லதும், கெட்டதும் நினைவுபடுத்தபடுவது வழமைதான். 

இதில் அடிபடவோ, இன்றைய விழுமிய பார்வையுடன் அன்றைய மனிதர்களை ஒப்பிடகூடாது என்பதை ஏற்கும் அதே வேளை, அவர்கள் செய்த காரியங்களில் ஒரு தொகுதி மோசமானது என்பதை குறித்து வைப்பதிலும் தவறில்லை.

இதே போல் அன்று வாழ்ந்த பல அறிஞர்கள் எல்லாரின் மீதும் இந்த குற்றசாட்டு வைக்கபடுவதில்லை என்பதையும் நாம் காணவேண்டும்.

எல்லாரும் கப்சா விட்டு நம்ம உயிர வாங்கி இருக்கிறாங்க🤣.

தமிழிலக்கியம் ஆண்டு10-11 நளவெண்பா, நாலடியார் ரெண்டிலும் இந்த அன்னம் வந்து பண்ணாத டாச்சர் இல்லை🤣.

நீங்கள் சொன்ன பால்/நீர் கருத்து நாலடியாரில் வருகிறது.

கோசான் slave trade ஐ சட்டம் போட்டு தடுக்கலாம் ஆனால் சாதியத்தை

8 minutes ago, satan said:

மாறிவரும் உலகில் மனித சிந்தனைகளும் மாறிக்கொண்டே வருகிறது. காலத்தின் மாற்றத்தை உணர்ந்து  எல்லோரும் மனிதர்கள் என  எல்லோரையும் மதித்து ஏற்று வாழ முயற்சிக்க வேண்டும். அதை கள உறவுகள் நாங்களே உருவாக்கலாம்.  ஆழ வேரூன்றியதை உடனடியாக மாற்ற முடியாது, முயன்றால் சேதம் அதிகமாகும்.

இப்படிதான் ஓழிக்க முடியும், ஆகவே ஒரு சிலர் பன்னாடைகளாக இருக்காது சிந்திக்க தெரிந்த மனிதர்களாக மாறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

1. அன்னப்பறவைக்கு அப்படி ஒரு ஆற்றல் இல்லை. அது சும்மா எங்கள் புலவர்மார்கள் அரசர்மார்களுக்கு அவித்து விட்ட கப்ஸா

2. பன்னாடைக்கு வடிகட்டும் ஆற்றல் உள்ளது.

அன்னப்பறவை பற்றி உயிரியல் ரீதியாக அறியவில்லை.. ஆனால் வாழ்ந்து அழிந்த பறவைக் கூட்டங்களில் இது அடங்கி இருக்கலாம்.

ஆனால்.. அன்னத்தை ஒத்த வாழும் பறவை இனங்களில்.. தாரா வாத்து போன்றவை.. எந்தக் கழிவு நீர்நிலையில் வாழ்ந்தாலும் பகுத்து உண்ணும்.. குடிக்கும் இயல்புடையவை. அதற்காகவே அவற்றின் சொண்டுகள் இசைவாக்கமடைந்துள்ளன. 

https://www.zooportraits.com/birds-different-beaks-functions/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மேற்கத்தைய நாடுகளின் வரலாற்றில் அவர்கள் மதிக்கும் பல முன்னோர்களின் எதிர்மறையான  பல விடயங்களை மறைக்காமல் அதையும் வரலாற்று குறிப்பேடுகளில் பதிவு செய்வார்கள். எமது நாடுகளில் மட்டும் தான் ஒருரை முழுமையாக ஏற்று,  அவர் சமூகத்துக்கு செய்த தீமைகளை மறைத்து அவர் மாசற்ற நபர் போல் காட்டும் பழக்கம் உண்டு. அது எமது சமூகத்திற்கு தீமையை விளைவிக்குமே தவிர நன்மையை விளைவிக்காது. 

நீங்கள் மேற்கத்தை இலக்கியங்களை இன்னும் ஒழுங்காகப் படிக்கவில்லைப் போலும். அங்கும் எத்தனையோ சமூக பாகுபாடுகள் மத்தியில் வடிகட்டிய இலக்கியங்கள் தான் புகழ்பெற்றுள்ளன. காரணம்.. காலத் தேவையோடு பாகுபாடுகள் களையப்பட்டு வந்ததால்.

ஆனால்.. நீங்களோ நாவலர் சாதியை காத்தாரோ இல்லையோ அவர் வாழ்ந்து 150 ஆண்டுகள் ஆன பின்னரும் நாவலர் வெறுப்பு என்பதன் ஊடாக அதைக் காவி அவர் மொழிக்கும்.. தமிழுக்கும்.. தமிழ் மண்ணுக்கும் ஆற்றிய எவ்வளவோ நன்மைகளை இரண்டாம் நிலைப்படுத்துகிறீர்கள்.

இதுதான் ஆபத்தானது. கண்டிக்கத்தக்கது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

கோசான் slave trade ஐ சட்டம் போட்டு தடுக்கலாம் ஆனால் சாதியத்தை

இப்படிதான் ஓழிக்க முடியும், ஆகவே ஒரு சிலர் பன்னாடைகளாக இருக்காது சிந்திக்க தெரிந்த மனிதர்களாக மாறவேண்டும்.

மீரா நான் slave trade ஐயும் சாதியத்தையும் ஒப்பிடவில்லை.

இன்று அது வழக்கொழிந்து பல காலம் ஆன பின்பும், பெரும் தனவந்தர்களாக, இங்கிலாந்தின் முன்னோடிகளாக அறியபட்ட பலரும் இன்றும் slave trade இல் அவர்களின் பங்குக்காக கடும் விமர்சனதுக்கு ஆளாகி, பலரின் சிலைகள் கூட அகற்ற படுகிறது.

இதை போன்றதே நாவலர் மீதான விமர்சனமும்.

காலம் முழுவதும் அவரின் நன்மை நினைவுகூரப்படுவது போல் அவரின் தீமையும் நினைவுகூரப்படும். 

இதுதான் உலக வழக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எனது கணிப்பில் என் வாழ்நாளில் இப்போதான் ஊரில் சாதியம் அதிகமாக உள்ளதை நான் உணர்கிறேன்.

இதே கருத்தை தான் யாழ்பாண சமூகம் பற்றி நன்கு தெரிந்தவர்களும் சொல்கிறார்கள்.  இப்போது எல்லாம் ஒருவரும் சாதி பார்பதில்லை குறைந்து விட்டது என்று சாதி பற்று கொண்டவர்கள்  சொல்லி கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

காலம் முழுவதும் அவரின் நன்மை நினைவுகூரப்படுவது போல் அவரின் தீமையும் நினைவுகூரப்படும்.

பழைய தீயன கழிந்து, புதிய நல்ல சிந்தனைகளும், செயல்களும் புகுத்தப்படவேண்டும். அப்போதே நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். தீமைகள் நினைவு கூரப்படுவதால் அது வேகமாக பரவி சமுதாயத்தை அழித்து விடும், ஐதரில்லா செடி போல். தீமைகளுக்கு வலிமை அதிகம். இது என்வாழ்வின் அனுபவம் தந்த பாடம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்படியே வறணிகோயில்ல ஜேசீப்பி மெசின்ல தேர் இழுத்தவைக்கும் கரவெட்டியில் கோயில் குளத்துக்கு முள்ளுக்கம்பி போட்டவைக்கும் நீர்வேலியில் ராணுவத்தை வச்சு தேர் இழுத்தவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பாரதரத்னா விருதும் குடுத்து அழகுபார்க்குமாறு மாண்புமிகு பிரதமர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…

பி.குறிப்பு- நாவலற்ர சாதிவெறிக்கு முட்டுகுடுப்பவர்களுக்கு யாழ் இணையமும் ஏதாவது விருது குடுத்து அழகுபார்க்கலாம்..😂😂

ஏன் அடிக்கடி வரணிக்கு போகின்றீர்கள்?

கனடா பிரான்ஸ் லண்டன் ஜேர்மனியில்  எம்மவர்களுக்குள் சாதி வேறுபாடு இல்லையா?

நிற்க......

ஆறுமுகநாவலர் தமிழினத்திற்கு செய்த நற்செயல்கள் பற்றி ஏதாவது தெரியுமா?
தெரியாது. ஏனென்றால் நீங்கள் நிற்பது சாதி வட்டத்திற்குள் மட்டுமே. தலித் கட்சிகள் மாதிரி....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

மனிதரை பிறப்பினால் பேதப்படுத்தும் சாதி வெறி எந்த காலத்துக்கும் உகந்தது அல்ல. ஒரு முன்னோடி என்பவர் தனது அடுத்த தலைமுறைக்கு வழி காட்டுபவராக இருக்க வேண்டுமே தவிர பழைய குப்பைகளையும் மூடப்பழக்கங்களையும் அடுத்த தலைமுறை மீது திணிப்பவரக இருக்கக்கூடாது.  

பிறப்பின் வேறுபாடுகள் இயற்கையின் வினோதங்கள். அத்துடன் இவை மனிதன் ஓரிரு நாட்களிலோ அல்லது வருடங்களிலோ உருவாக்கியவையும் அல்ல. மில்லியன் கணக்கான வருடங்கள் பரிணாம வளர்ச்சியின் விளைவுகள் அவை.

நாவலர் பெருமான் 150/200 வருடங்கள் முன் தாம் வாழ்ந்த காலத்தில் நிலவிய சூழ்நிலையின் நிமித்தம் சாதி வேறுபாடுகளின் நடைமுறைகள் எவ்வாறு நடைமுறை வாழ்வியலில் சமய அனுட்டானங்களை கடைப்பிடித்து ஒழுகும், ஒரு சைவராக வாழும் ஒருவரால் பிரயோகம் செய்யப்படலாம் என விபரித்து உள்ளார்.

இங்கு உங்கள் பிரச்சனை என்ன? 

நாவலர் பெருமான் சாதி வெறி கொண்டவர் என்பது அபத்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பழைய தீயன கழிந்து, புதிய நல்ல சிந்தனைகளும், செயல்களும் புகுத்தப்படவேண்டும். அப்போதே நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். தீமைகள் நினைவு கூரப்படுவதால் அது வேகமாக பரவி சமுதாயத்தை அழித்து விடும், ஐதரில்லா செடி போல். தீமைகளுக்கு வலிமை அதிகம். இது என்வாழ்வின் அனுபவம் தந்த பாடம்.

தனிப்பட்ட வாழ்வில் இதை நானும் ஏற்று கொண்டாலும், பொது வாழ்வு குறிப்பாக வரலாறு என வரும் பொழுது இரெண்டும் பதியபட வேண்டும்.

ஆனால் இதில் அடிபட என்ன இருக்கிறது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

நாவலர் தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாறினார? ஆம்.

அவர் சாதிய எண்ணத்தில் செயல்பட்டாரா? ஆம்.

இரெண்டுமே facts இதில் எதை சொல்லுவதிலும் பிரச்சனை இருக்க கூடாது.

அவரின் ஒரு பக்கத்தை மட்டுமே வெளிக்காட்ட வேணும் என எண்ணும் போதுதான் பிரச்சனை வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடா! ஒராள் மூச்சைக் காணோமே என்று ஏங்கிப்போனேன் நான். ஆள் இங்கதான் நிக்கிறார்.

"ஓடும் குருதியிலும் வடிந்தொழுகும் கண்ணீரிலும் தேடிப்பார்த்து சாதி கண்டுபிடிப்பவர்கள்  நம்மவர்கள் கண்டீரோ!"  எல்லாவற்றையும் இழந்து ஓடினோம், இடம் தந்த நிலத்தில் தங்கினோம், கேள்வி ஏதும் கேட்கவில்லை, தோன்றவும் இல்லை. ஆனால் சொந்த இடத்திற்கு வந்தவுடன் பழையபடி ஏறிவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பிறப்பின் வேறுபாடுகள் இயற்கையின் வினோதங்கள். அத்துடன் இவை மனிதன் ஓரிரு நாட்களிலோ அல்லது வருடங்களிலோ உருவாக்கியவையும் அல்ல. மில்லியன் கணக்கான வருடங்கள் பரிணாம வளர்ச்சியின் விளைவுகள் அவை.

1) நாவலர் பெருமான் 150/200 வருடங்கள் முன் தாம் வாழ்ந்த காலத்தில் நிலவிய சூழ்நிலையின் நிமித்தம் சாதி வேறுபாடுகளின் நடைமுறைகள் எவ்வாறு நடைமுறை வாழ்வியலில் சமய அனுட்டானங்களை கடைப்பிடித்து ஒழுகும், ஒரு சைவராக வாழும் ஒருவரால் பிரயோகம் செய்யப்படலாம் என விபரித்து உள்ளார்.

2) இங்கு உங்கள் பிரச்சனை என்ன? 

3) நாவலர் பெருமான் சாதி வெறி கொண்டவர் என்பது அபத்தமானது.

1) சாதிய அமைப்பு முறையில் உள்ள தீமைகளை உணராத அளவுக்கு நாவலர் முட்டாளாக இருந்திருப்பார் என்று நீங்கள் கூறுகிறீர்களா ? நான் நாவலர் ஒரு முட்டாள் என நம்பவில்லை. 

2) நாவலருக்கு வெள்ளையடிப்பது.

3)  நாவலர் சாதி வெறி கொண்டவர் அல்ல என நம்பும் ஒரு பரிதாபகரமான மனிதராக நான் உங்களை நினைப்பது மிகவும்  அபத்தமானது என எண்ணுகிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பத் திரும்ப கதைக்கும் ஒரு விடயம்! நாவலர் சாதீயத்தை ஒழிக்க எதுவும் செய்யவில்லை. அதனை சைவ சமயத்தோடு தக்கவைக்கவே அர்ப்பணிப்புடன் செயலாற்றினார். 

நாவலரைப் பற்றிய முன்னைய திரிகள்

👆🏿தமிழ் சிறி ஐயாவின் ஆற்றாமை!

Quote

இளகிய.... இரும்பைக் கண்டால்...

அடிப்பவன், குண்டியைத் தூக்கித், தூக்கி அடிப்பானம்.

சைவ சமய விசயம், ஆறுமுகநாவலர் போன்ற.. வாய் பேசாத பிராணிகளுக்குள் வந்து, துப்புக்கெட்ட வீரத்தனம் காட்டும் உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கமில்லையா?

முஸ்லீம்... விசயத்தில் உங்களால்... ஒரு கருத்து எழுத துணிவிருக்கா?

உங்கள் முகத்தில் காறித் துப்புங்கள்.

நீங்களெல்லாம்... என்ன முகத்தை வைத்துக் கொண்டு, இந்த உலகில் வாழ்கிறீர்கள்.

தூ.................

👇🏾விசுகு ஐயா

Quote

ஆறுமுக நாவலர்

சாதி வெறியர் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று.

இன்றையநிலையில் இது எதற்கு?

என்பதே எமது கேள்வி?

👇🏾நிழலியின் சிக்ஸர்!

Quote

ஆறுமுகநாவலரையும், சாதியத்தையும் ஆதரித்துக் கொண்டு எக்காலத்திலும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அப்படி கொடுப்பது ஒன்றில் அறியாமை அல்லது தெரிந்து கொண்டும் சாதியத்தை கைவிட மறுக்கும் நேர்மையற்றதன்மை.

https://yarl.com/forum2/thread-3339.html

👆🏿இதில் 2005 இல் @narathar சொன்னதில் ஒரு மாற்றமுமில்லை.

எங்கெங்கு சைவம்,இந்துத்துவா வெறி உள்ளதோ அங்கெல்லாம் சாதிய வெறி தானே தழைத்து ஓங்குகிறது.

👆🏿யாழின் பல முன்னாள், இன்னாள் கருத்தாளர்களின் சுவாரசியமான கருத்துக்கள். இதுக்கு மேல் புதிதாக எதை உரையாடப்போகின்றோம்😄

சில சாம்பிள்ஸ்

நெடுக்ஸின் பம்மல்!👇🏾

Quote

தாழ்ந்த சாதியினர் என்பதனை நாவலர் அவர்களின் மனிதர்கள் சிலரிடம் இருந்த கெட்ட பழக்கங்களின் அடிப்படையில் வைத்திருக்கலாம். அவர் இதுதான் தாழ்ந்த சாதி என்று குறிப்பிடவில்லை அந்த இடத்தில். நாம் பாட் பீப்பிள் குட் பீப்பிள் என்பதைப் போல நாவலர் பாட் பீப்பிளை அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம். நாவல எதிர்ப்புவாதிகள் அதற்கும் சாதியச் சாயம் பூச முற்படுகின்றனர். :huh: 😛

Quote

நாவலர் வாழ்ந்த காலப்பகுதியில் சாதியப் பாகுபாடுகள் அதிகமிருந்திருக்கலாம். நாவலர் சாதி பார்த்தார் என்பதை நிறுவுவதல்ல இந்தத் தலைப்பின் நோக்கம். அவர் பார்த்திருக்கட்டும் விட்டிருக்கட்டும். ஆனால் நாவலரின் பெயரால் சாதிய எச்சங்களை பரப்புரை செய்வது அநாவசியமானது. எக்காலத்துக்கும் உபயோகமற்றது. அதுமட்டுமன்றி அது நாவலர் மீதான விரோதத்தை வளர்க்கும் செயல். இதைத்தான் பெரியார் போன்ற பகுத்தரிவு வாதிகளும் செய்தனர். பாகுபாடு இல்லை என்று கொண்டே பாகுபாட்டிற்கான வித்தை இட்டவர்கள். மனிதருக்குள் மோதல் மனப்பான்மையை சாதிய எதிர்ப்பின் பெயரில் ஆரம்பித்து இன்று அதுவே கட்சி அரசியல் என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது தமிழகத்தில். அது நாளை ஈழத்துக்கும் தாவலாம் என்பதற்கு யாழ் களத்தில் புதிதாக முளைத்துள்ள தலித்தும் தலித்தியமும் தமிழ் தேசிய தளத்துக்குள் செருகப்படும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆக சாதி இருப்புக் கோசமும் ஒழிப்புக் கோசமும் அவரவருக்கு வேண்டியதை அளிப்பதால்தான் இன்னும் அது வாழ வைக்கப்படுகிறது.

நாவலரைத் திட்ட எதிர்க்க சாதி வேண்டும். சாதி இருந்தால்தான் சாதி எதிர்ப்பு என்ற ஒன்றை வைத்து நாவலரை எதிர்க்கலாம். நாமெல்லாம் இந்த நிலைகளுக்கு அப்பால் சிந்திக்க கோருகின்றோம். நமக்கு நாவலர் வேறல்ல சாதாரண ஈழக் குடிமகன் வேறல்ல. காலவோட்டத்தில் நாவலர் சாதி பார்த்தார் என்பதற்காக நாவலர் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் சாதியச் சாயக்தை இன்னும் பூசிக்கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. சாதியச் சாயம் பூசப்பட்டவை அழிக்கப்பட வேண்டும். அதை விடுத்து நாவலர் சாதி பார்த்தார் என்று சாதியத்துக்கு நாவலர் சான்றிதழ் வழங்குதலையும் செய்யலாம். பார்க்க சாதி எதிர்ப்புப் போன்ரிஉந்தாலும் நாவலர் போன்ற தமிழ் தொண்டர்களே சாதி பார்த்திருக்கிறார்கள் ஏன் நாம் பார்க்க கூடாது என்ற கேள்வியை விதைக்க அது அதிக நேரம் எடுக்காது. சாதி என்பது அருகிவரும் நிலையில் சாதி எர்திர்ப்பு என்ற போர்வையில் விதைக்கப்படும் பொதுக்கருத்துக்களே சாதிய எச்சத்தை காவி நிற்கின்றன. அதற்கு விளக்கம் சொல்லி நிற்கின்றன. இந்த நிலை வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு.

வீடுகளுக்குள் சாதி மட்டுமல்ல இன்னும் பல விடயங்கள் பேசப்படுகின்றன. பேசட்டும் அதை யாரும் தடுக்க முடியாது. தடுக்க முடியும் என்பது சுத்த முட்டாள் தனமானது வாதம். ஆனால் வீட்டுக்குள் பேசப்படுவது சமூகத்தாக்கம் செய்யவல்லதாக அமைவதை தடுக்க முடியும். வீட்டுக்குள் பேசுவதை வீட்டோடு நிறுத்த முடியும். வீட்டுக்குள் பேசப்படுவதை நிறுத்த வேண்டின் பேசப்படும் விடயத்துக்கு பொதுத்தளத்தில் முக்கியம் அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஒன்றை ஒழிப்போம் என்பதே அதற்கு முக்கியமளிக்கும் என்ற எண்ணக்கருவை மறந்து விடுகின்றனர். அளிக்கப்படும் அந்த முக்கியம் சாதி என்ற மாயைத் தோற்றம் பற்றிய அறிவியல் நிலைகளூடு விளக்கப்படும் போது அவற்றின் அவசியம் தேவையற்றதாக்கப்படும் போது அவை நிராகரிக்கப்படும் போது மக்கள் அதைப் பற்றிப் பேசுவதையும் தவிர்த்துக் கொள்வர். ஆனால் ஒழிப்போம் துடைப்போம் என்பது எதிர்வினைகளையும் வளர்க்கும். ஒருவர் ஒழிக்கச் சொன்னால் மற்றவர் வளர்க்க முற்படுவார். அதனால் தான் கூறுகின்றோம் மனிதரில் ஏற்றத் தாழ்வுகளை உண்டு பண்ணும் அனைத்துப் பாகுபாடுகளும் அகற்றப்பட பொதுவான தளம் ஒன்றின் அடிப்படையில் சரியான அறிவியல் ரீதியான அறிவூட்டல் பிரச்சாரமே அவசியம். அதைவிடுத்து நாவலரை திட்டுவதாலோ தலித்தென்று தலித்தியம் பேசுவதாலோ பாகுபாடுகள் அழிக்கப்படாது மாறாக விதைக்கப்படும். :icon_mrgreen:

சபேசனின் விளக்கம்👇🏾 

Quote

நாவலர் ஒரு சாதி வெறியர் என்பதை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு சாதி வெறியர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் நடத்திய பாடசாலைகளில் வேளாளர் பிராமணர் தவிர்ந்த மற்றயை சாதியினரை சேர்த்துக் கொள்ள மறுத்தார். தாழ்ந்த சாதியனரோடு போசனம் செய்யக்கூடாது, வசிக்கக்கூடாது போன்ற விடயங்களை வெளிப்படையாக எழுதி வைத்துள்ளார்.

நாவலரின் தமிழ் தொண்டிற்காக அவரிடம் இருந்த அழுக்குகளை மறைப்பது அழகல்ல. நாவலர், ராமநாதன் போன்றவர்களிடம் இருந்த வெள்ளாள சாதி வெறி இன்று தமிழ் மக்கள் படுகின்ற பெரும் துயருக்கு முக்கிய காரணம். 

அன்றைய தமிழ் தலைமை தமிழர்களுக்கு ஒரு நாடு உருவாக்குவது குறித்து சிந்திக்கவில்லை. அவர்களுடைய பார்வையில் சாதியம் இருந்தது. இனத்துவம் இருக்கவில்லை.

வேளாளர் என்கின்ற உயர் சாதியும், கண்டிச் சிங்களவர் என்கின்ற உயர் சாதியும் இணைந்து தாழ்ந்த சாதிகளை ஆளுகின்ற ஒரு நாடு இலங்கை என்கின்ற பார்வையை அன்றைய தமிழ் தலைமை கொண்டிருந்தது.

அதனால்தான் நளை சிங்கள இனம் தமிழினத்தை அடக்கக்கூடும் என்பதைக் சிந்திக்க மறந்தனர். சாதியின் வலிமை அவ்வளவு தூரம் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாவலரை எதிர்ப்பதால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை.

சைவ சமய மறுப்பு கொண்டவர்கள் கூட (களவாக)  ஆடி அமாவாசை விதரம் இருக்கும் காலம் இது.

ஆனால் ஒன்று இங்கு யாழ் இணையத்தில் நாவலரை எதிர்ப்பவர்கள் ஊரில் இருக்கும் தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நாவலர் சாதியத்தை சைவ சமயம் ஊடாக ஊக்குவித்தவர் ஆகையால் நீங்கள் நாவலர் பெயரில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் புறக்கணியுங்கள் முடிந்தால் சைவ சமயத்தையும் புறக்கணியுங்கள் என்று கூவலாம்.

“ஆனால் தாயக மக்கள் புத்திசாலிகள் அவர்களுக்கு எது வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

“ஆனால் தாயக மக்கள் புத்திசாலிகள் அவர்களுக்கு எது வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்”

ஆம். ஊரில், குறிப்பாக நம்மூரில் இருப்பவர்களுடன், இதைப் பற்றி உரையாடுவதேயில்லை. ஏனெனில், கோயிலின் உள்ளே நுழைவதை முற்றாகத் தடுத்தும், கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதில் பாகுபாடு காட்டியும் பழைய “மரபை” புலிகளின் ஆளுகைக்குள்ளும் வெற்றிகரமாகத் தொடர்ந்தவர்கள். இப்போதும் அதே மரபை அப்படியே தொடர்பவர்கள்..

19 minutes ago, MEERA said:

இங்கு நாவலரை எதிர்ப்பதால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை.

சைவ சமய மறுப்பு கொண்டவர்கள் கூட (களவாக)  ஆடி அமாவாசை விதரம் இருக்கும் காலம் இது.

ஆனால் ஒன்று இங்கு யாழ் இணையத்தில் நாவலரை எதிர்ப்பவர்கள் ஊரில் இருக்கும் தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நாவலர் சாதியத்தை சைவ சமயம் ஊடாக ஊக்குவித்தவர் ஆகையால் நீங்கள் நாவலர் பெயரில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் புறக்கணியுங்கள் முடிந்தால் சைவ சமயத்தையும் புறக்கணியுங்கள் என்று கூவலாம்.

“ஆனால் தாயக மக்கள் புத்திசாலிகள் அவர்களுக்கு எது வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்”

மீரா, இங்கு நாவலரை எவரும் எதிரக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை. அவரின் எதிர் மறையினை, சமூகத்துக்கு அவர் செய்த தீமைகளை வரலாற்றில் பதிவு செய்வது ஒன்றும் அவரை வெறுப்பது  ஆகாது. தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய சேவை பாராட்டப்பட வேண்டியது. அதே வேளை சிறந்த கலவியை பெற்றிருந்தும் தமிழ் மக்களிடையே சாதி வெறியை ஒரு நன்நெறி போல் பரப்புனார் என்பது  வரலாற்று உண்மை. நாவலரே முழு மனதுடன் ஏற்றுக் கொண்ட ஒன்றை கூறுவது அவரை எதிர்ப்பதாகவோ  வெறுப்பதாகவோ நினைக்க வேண்டியதில்லை. 

 அவரை வெறுப்பதாக கருத்து சொல்லப்பட்டதாக நீங்களே கற்பனை செய்து அதற்கு பதிலளித்திருப்பதானது,  கேள்விக்கு விடை தெரியாத ஒரு பரீட்சாத்தி தனக்கு தெரிந்த விடைக்கேற்ப கேள்வியை எழுதியது போல் உள்ளது. 

Edited by tulpen
வசனத் திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மீரா, இங்கு நாவலரை எவரும் எதிரக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை. அவரின் எதிர் மறையினை, சமூகத்துக்கு அவர் செய்த தீமைகளை வரலாற்றில் பதிவு செய்வது ஒன்றும் அவரை வெறுப்பது  ஆகாது. தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய சேவை பாராட்டப்பட வேண்டியது. அதே வேளை சிறந்த கலவியை பெற்றிருந்தும் தமிழ் மக்களிடையே சாதி வெறியை ஒரு நன்நெறி போல் பரப்புனார் என்பது  வரலாற்று உண்மை. நாவலரே முழு மனதுடன் ஏற்றுக் கொண்ட ஒன்றை கூறுவது அவரை எதிர்ப்பதாகவோ  வெறுப்பதாகவோ நினைக்க வேண்டியதில்லை. 

 அவரை வெறுப்பதாக கருத்து சொல்லப்பட்டதாக நீங்களே கற்பனை செய்து அதற்கு பதிலளித்திருப்பதானது,  கேள்விக்கு விடை தெரியாத ஒரு பரீட்சாத்தி தனக்கு தெரிந்த விடைக்கேற்ப கேள்வியை எழுதியது போல் உள்ளது. 

துல்பன், மீண்டும் ஒருதடவை மேற்கோள் காட்டியதை வாசியுங்கள் ( கிருபன் ஜின்)

1 hour ago, கிருபன் said:

ஆம். ஊரில், குறிப்பாக நம்மூரில் இருப்பவர்களுடன், இதைப் பற்றி உரையாடுவதேயில்லை. ஏனெனில், கோயிலின் உள்ளே நுழைவதை முற்றாகத் தடுத்தும், கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதில் பாகுபாடு காட்டியும் பழைய “மரபை” புலிகளின் ஆளுகைக்குள்ளும் வெற்றிகரமாகத் தொடர்ந்தவர்கள். இப்போதும் அதே மரபை அப்படியே தொடர்பவர்கள்..

ஜி இதை நான் கூறவில்லை, இங்கு புலம்பெயர் தமிழ்தேசிய ஆதரவாளர்களுக்கு எதிராக குறிப்பாக  புலிகளுக்கு எதிராகவும் பாடம் எடுப்பவர்கள் தொடர்ச்சியாக எழுதி வந்தது, (அதனாலேயே இரட்டை மேற்கோள் குறியினுள் எழுதினேன்).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.