Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இறந்துகிடந்த 5 வயது குழந்தை: பட்டினியால் இறந்ததாக தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இறந்துகிடந்த 5 வயது குழந்தை: பட்டினியால் இறந்ததாக தகவல்

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 
சிறுவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது குழந்தை தண்ணீர் இல்லாமல் பட்டினியால் உயிரிழந்ததாக உடற் கூறாய்வில் தெரியவந்தது. பெற்றோர் மற்றும் உறவினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மேலத் தெரு அருகே, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சிவகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரத்தில் தள்ளுவண்டி மூலமாக சலவை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி காலை, தள்ளுவண்டியின் மீது 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து, அக்கம்பக்கத்தினரிடம் கூறவே அனைவரும் அந்த சிறுவனை எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால், அச்சிறுவன் அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சியடைந்த‌ அப்பகுதி மக்கள், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை செய்தபோது, ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

மேலும் உயிரிழந்த சிறுவன் குறித்து அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழந்தையின் புகைப்படத்தை காட்டி விசாரணை மேற்கொண்டதில், குழந்தை அப்பகுதியை சேர்ந்த யாருடையதும் அல்ல என்பது தெரியவந்தது.

குழந்தையின் உடலில் எந்த காயமும் இல்லை. மேலும் யாராவது கடத்தி வந்து உயிரிழந்த நிலையில் துணி தேய்க்கும் தள்ளு வண்டியில் போட்டுவிட்டுச் சென்றார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் குழந்தையின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு உடற் கூறாய்வு‌ செய்ய அனுப்பி வைத்தனர்.

இந்தச் சூழலில் உயிரிழந்த குழந்தை உணவு இல்லாமலும், தண்ணீர் இல்லாமலும் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக உடற் கூறாய்வில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது யாருடைய குழந்தை என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் விழுப்புரம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை அந்த குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் என யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை என்பதால் குழந்தையின் குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.‌ அப்போது பேசிய அவர், "உயிரிழந்த குழந்தையை உடற் கூராய்வு செய்ததில், இந்த குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு இல்லை; குழந்தையின் மரணம் இயற்கையானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் உடலில் காயம் எதுவுமே இல்லை. ஆகவே உடலில் தண்ணீர் இல்லாமல், மற்றும் பட்டினியால் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்போது குழந்தை யாருடையது என்பதை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். குழந்தையின் பெற்றோர்‌ மற்றும் உறவினர்கள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்தகட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் இருக்கும் வாட்சப் குழுக்களுக்கு குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி பெற்றோரை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்," என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-59718878

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை.. ஆனால் ஹிந்தியாவோ வல்லரசுக் கனவில். சீனாவை வெல்ல போகுதாம். சீனா வேற லெவல்.

அதுகிடக்கட்டும்..  https://www.savethechildren.in/  இப்படியான நிலைக்குள்ளான குழந்தைகள் குறித்து இப்படியான சர்வதேச தன்னார்வ நிறுவனங்களின் கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம்.. தமிழகத்தில் குழந்தைகள் பட்டினியால் இறப்பதை தடுக்கலாம். 

தமிழர் நிலத்தை தமிழன் ஆண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா..??! இன்னும் தெலுங்கனுக்கும் கன்னடனுக்கும் மலையாளிக்கும் வாக்குப் போடும் மந்தைகளாக மக்கள் இருப்பதும்.. இந்த நிலைகளுக்கு ஒரு காரணம். தமிழகத்துக்கு... திராவிட மாயை தந்த பரிசுகளில் இவையும் அடங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது குழந்தை தண்ணீர் இல்லாமல் பட்டினியால் உயிரிழந்ததாக உடற் கூறாய்வில் தெரியவந்தது. பெற்றோர் மற்றும் உறவினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டிடம் வருடமொன்றுக்கு 5000ஆயிரம் கோடி +GST  கப்பமாக பெற்றுக்கொண்டு ஆயிரம் கோடிக்கு குறைவாக அபிவிருத்தி செய்தால் இப்படியான அசம்பாவிதம்கள் கூடுமே அன்றி குறையாது .

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள தொடர்பு பிரச்சனையினாலோ அல்லது கணவனோடு தகராறு பிரச்சனையினாலோ ஒரு குழந்தை பெற்றவர்களால் கைவிடப்பட்டு ஆகாரமின்றி இறந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் பசியினால் இந்த குழந்தை இறந்ததாக தெரியவில்லை.

தமிழகத்தில் பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை பராமரிக்க ஏராளமான காப்பகங்கள் அனாதை சிறார் இல்லங்கள் உள்ளன , அந்த குழந்தை வேண்டாமென்றால் அங்கு ஒப்படைத்திருக்கலாம்.அப்படியிருந்தும் வேண்டுமென்றே வெயிலில் கிடந்து உணவு நீர் இன்றி குடல் காய்ந்து  ஒரு குழந்தையை மரணிக்க செய்த அதன் பெற்றோர் மரண தண்டனைக்குரியவர்கள்.

மானசீகமாக தமிழகத்தை இந்திய அரசின் ஒரு பகுதியாக எப்போதும் மனசு நினைத்ததில்லை, அங்கு எந்த வடிவில் ஏற்படும் ஒரு அவலமும் எமது பகுதியில் ஏற்பட்டது போன்றதொரு உணர்வு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

..மானசீகமாக தமிழகத்தை இந்திய அரசின் ஒரு பகுதியாக எப்போதும் மனசு நினைத்ததில்லை, அங்கு எந்த வடிவில் ஏற்படும் ஒரு அவலமும் எமது பகுதியில் ஏற்பட்டது போன்றதொரு உணர்வு.

எமக்கும் ஈழம் அப்படித்தான்.

பிற இந்திய மாநில செய்திகளைவிட ஈழம் பற்றி செய்திகள் வந்தால், எம்மையும் அறியாமல் தன்னிச்சையாக கண்கள் வாசிக்கத் தொடங்கிவிடும், ஏனென தெரியாது. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

கள்ள தொடர்பு பிரச்சனையினாலோ அல்லது கணவனோடு தகராறு பிரச்சனையினாலோ ஒரு குழந்தை பெற்றவர்களால் கைவிடப்பட்டு ஆகாரமின்றி இறந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் பசியினால் இந்த குழந்தை இறந்ததாக தெரியவில்லை.

இந்த கருத்துக்கு வன்மையான கண்டனங்கள். 

இது முழுக்க முழுக்க தமிழக அரசின் பிழைதான்.

இது மட்டும் அல்ல கீழே உள்ள லிங்கில் தாய் 7 நாள் பார்ட்டியில் கூத்தடித்ததால் பட்டினி சாவடைந்த குழந்தை பற்றிய செய்தியுள்ளது.

இது லண்டனில் நடந்திருக்கலாம், ஆனால் இதற்கும் முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம்.

https://www.mylondon.news/news/south-london-news/baby-who-starved-death-teen-21251846.amp

#எரியுதடி மாலா

  • கருத்துக்கள உறவுகள்

India State Hunger Index (ISHI)

https://www.researchgate.net/figure/ndia-State-Hunger-Index-ISHI_fig2_277180626

Punjab, Kerala, Andhra Pradesh and Assam had the lowest scores. All other states had a hunger index score exceeding.

11 minutes ago, goshan_che said:

இது லண்டனில் நடந்திருக்கலாம், ஆனால் இதற்கும் முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம்.

தமிழகத்தை ஆளும் திராவிடக் கும்பல்களின் 50 ஆண்டுகளுக்கும் அதிக கால ஆட்சியின் பலன்... அதுக்கு எதுக்கு லண்டனை இழுத்து திராவிடக் கும்பல்களின் குதியாட்டத்துக்கு சாமரம் வீசுகிறீர்களோ..?!

எங்கும் எதிலும் நிதர்சனத்தை சந்திப்பதில் தங்களுக்கு கொஞ்சம் சங்கடம் தெரிகிறது. 

3 hours ago, nedukkalapoovan said:

தமிழர் நிலத்தை தமிழன் ஆண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா..??! இன்னும் தெலுங்கனுக்கும் கன்னடனுக்கும் மலையாளிக்கும் வாக்குப் போடும் மந்தைகளாக மக்கள் இருப்பதும்.. இந்த நிலைகளுக்கு ஒரு காரணம். தமிழகத்துக்கு... திராவிட மாயை தந்த பரிசுகளில் இவையும் அடங்கு

தமிழ் நட்டை தமிழ் நாட்டு மண்ணின் மைந்தர்கள்  எப்போதும் ஆண்டுவந்துள்ளார்கள். இப்போதும் ஆளுகின்றார்கள். இதுவரை இருந்த அனைத்து முதல்வர்களும் தமிழ் நாட்டு தமிழர்கள் தான். ஒரு வேளை நெடுக்கால போவான் தமிழ் நாட்டை ஆண்டால் அது அந்நியர் ஆட்சி.  

தமிழ் நாட்டை  ஆண்டுவரும் அந்த நாட்டு மண்ணின் மைந்தர்களை பார்தது அவர்கள் தமிழர்கள் அல்ல என்று  தமிழ் நாட்டு மண்ணுக்கு கொஞ்சமும் சம்பந்தம் அற்ற,  இலங்கையில் பிறந்து  பிரித்தானிய குடியுரிமை பெற்று வாழும் நெடுகால போவான்  கூறுவது நகைச்சுவை.   நாட்டு எல்லை கடந்து அடுத்த நாட்டில் இனவெறியை கக்கும் உங்களுக்கும்  சிங்கள இனவாதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

India State Hunger Index (ISHI)

https://www.researchgate.net/figure/ndia-State-Hunger-Index-ISHI_fig2_277180626

Punjab, Kerala, Andhra Pradesh and Assam had the lowest scores. All other states had a hunger index score exceeding.

தமிழகத்தை ஆளும் திராவிடக் கும்பல்களின் 50 ஆண்டுகளுக்கும் அதிக கால ஆட்சியின் பலன்... அதுக்கு எதுக்கு லண்டனை இழுத்து திராவிடக் கும்பல்களின் குதியாட்டத்துக்கு சாமரம் வீசுகிறீர்களோ..?!

எங்கும் எதிலும் நிதர்சனத்தை சந்திப்பதில் தங்களுக்கு கொஞ்சம் சங்கடம் தெரிகிறது. 

அப்படியா தெரியுது? இருக்கட்டும் இருக்கட்டும்.

தமிழ்நாட்டில் பசி இல்லை என நான் எழுதவில்லை. அங்கே தேனும் பாலும் ஓடுவதாகவும் நான் எழுதவில்லை.

ஆனால் இந்தியா முழுமைக்கும் இது ஒரு பெரிய பிரச்சனை என்பதை நீங்கள் தந்துள்ள மேப்பே காட்டுகிறது.

ஆனால் இந்த செய்தியில் குழந்தையை வைத்திருந்த பெரியோர் உணவுக்காக அலைந்து குழந்தை உணவின்றி இறந்ததாக குறிப்பு ஏதும் இல்லை.

செய்தியின் படி இன்னும் பெற்றோரையே கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆகவே இந்த குழந்தை நாட்டில் உள்ள பஞ்சத்தால் இறந்ததா அல்லது வேறு காரணங்களால் இறந்ததா என இந்த செய்தியை வைத்து முடிவுக்கு வர முடியாது.

அப்படி இருக்க அவசரப்பட்டு அரசை திட்டுவது - நமக்கு அவர்கள் மேல் உள்ள ஆத்திரத்தில் திட்டினால் போதும் என்ற மன நிலையில் எழுதுவதே.

லண்டன் உதாரணம் - இப்படி பெரியோரின் கவலையீனத்தால் இங்கும் பிள்ளைகள் பசியால் இறக்கிறன என்பதை சுட்டவே.

இந்தியா அளவு மோசமில்லை எனிலும் யூகேயிலும் அப்படி ஒன்றும் பசி இல்லாமல் இல்லை. ஒவ்வொரு சுப்பர் மார்கெட்டிலும் foodbank கலலெசன் நடக்கிறதுதானே.

https://news.sky.com/story/amp/thousands-of-people-in-the-uk-struggle-to-access-food-new-study-finds-12360661

The study from the University of Sheffield and the Food Foundation found the area worst hit by food insecurity is Wycombe, Buckinghamshire with 14% of people estimated to be hungry and nearly 30% of people struggling to access food.

This is followed closely by Hull in Yorkshire, where 13% of people said they are going hungry and more than one in five adults struggling to access food.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

ஆனால் இந்தியா முழுமைக்கும் இது ஒரு பெரிய பிரச்சனை என்பதை நீங்கள் தந்துள்ள மேப்பே காட்டுகிறது.

அப்பவும் பாருங்கள்.. நிதர்சனம் கண்ணுக்குத் தெரியவில்லை. அண்டை மாநிலங்களான.. கேரளாவும்.. ஆந்திராவும்.. திராவிட வேசம் போடாது மொழி ரீதியாக வாழும் பெரும்பான்மை மக்களால் ஆளப்படும்.. மாநிலங்கள்.. திராவிடம் ஆளும் தமிழகத்தை விட பசியை சிறப்பாக கட்டுப்படுத்தி இருக்கினம் தானே...?????!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

அப்பவும் பாருங்கள்.. நிதர்சனம் கண்ணுக்குத் தெரியவில்லை. அண்டை மாநிலங்களான.. கேரளாவும்.. ஆந்திராவும்.. திராவிட வேசம் போடாது மொழி ரீதியாக வாழும் பெரும்பான்மை மக்களால் ஆளப்படும்.. மாநிலங்கள்.. திராவிடம் ஆளும் தமிழகத்தை விட பசியை சிறப்பாக கட்டுப்படுத்தி இருக்கினம் தானே...?????!

நிச்சயமாக.

உங்கள் கேள்வி - திராவிட கட்சிகள் ஆண்ட தமிழ் நாட்டை விட, அவர்கள் ஆட்சி செய்யாத கேரளா, ஆந்திராவில் பசி சுட்டெண் குறைவா?

என்று இருந்தால் எனது பதில் ஆம் என்பதே.

ஆந்திரா, கேரளா அளவுக்கு தமிழ் நாட்டில் பசி சுட்டெண் இல்லாமைக்கு திராவிட கட்சிகள்தான் பொறுப்பு என்பதும் ஏற்புடையதே.

ஆனால் மேலே நான் சொன்ன விடயம் இந்த செய்தியில் நாட்டில் உள்ள பஞ்சத்தால்தான் இந்த குழந்தை இறந்தது என்று ஏதும் இல்லை என்பதையே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஆனால் மேலே நான் சொன்ன விடயம் இந்த செய்தியில் நாட்டில் உள்ள பஞ்சத்தால்தான் இந்த குழந்தை இறந்தது என்று ஏதும் இல்லை என்பதையே.

அந்தக் குழந்தை பெற்றவர்கள் பஞ்சம் காரணமாக.. அதனை வளர்க்கும் பொறுப்புச் செலவு கருதி விட்டுச் சென்றிருக்கலாம். அதனால்.. அந்தக் குழந்தையை யாராவது எடுத்து வளர்க்கட்டும் என்று எண்ணி இருக்கலாம். அது நடக்காமையால்.. குழந்தை பட்டினி கிடந்தே இறந்துவிட்டது..

இப்படியும் இந்தச் செய்தியை அர்த்தப்படுத்த முடியும்.

இந்த விடயத்தில்.. பெற்ற குழந்தையை வளர்க்க முடியாதவிடத்து தமிழக அரசு தொட்டிலில் போடும் நடைமுறையை ஒரு பெண்ணாக.. அம்மையார் ஜெயலலிதா ஆரம்பித்திருந்தார். அதையும்.. அரசியல் போட்டி பொறாமையால்.... இந்த திராவிடக் கும்பல் சிதைத்துவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

அந்தக் குழந்தை பெற்றவர்கள் பஞ்சம் காரணமாக.. அதனை வளர்க்கும் பொறுப்புச் செலவு கருதி விட்டுச் சென்றிருக்கலாம். அதனால்.. அந்தக் குழந்தையை யாராவது எடுத்து வளர்க்கட்டும் என்று எண்ணி இருக்கலாம். அது நடக்காமையால்.. குழந்தை பட்டினி கிடந்தே இறந்துவிட்டது..

இப்படியும் இந்தச் செய்தியை அர்த்தப்படுத்த முடியும்.

நீங்கள் “லாம்” விகுதி போடும் போதே அந்த கருத்து ஊகத்தின் அடிப்படையில் என்பது தெளிவாகிறது. 

ஒரு செய்தியை வாசித்து விட்டு, அதில் இல்லாததை “இப்படியும்” “அப்படியும்” “எப்படியும்” எமது நோக்கத்திற்கு ஏற்ப அர்தப்படுதலாம்.

அதைதான் நான் ஆரம்பம் முதலே சொல்கிறேன்.

9 minutes ago, nedukkalapoovan said:

இந்த விடயத்தில்.. பெற்ற குழந்தையை வளர்க்க முடியாதவிடத்து தமிழக அரசு தொட்டிலில் போடும் நடைமுறையை ஒரு பெண்ணாக.. அம்மையார் ஜெயலலிதா ஆரம்பித்திருந்தார். அதையும்.. அரசியல் போட்டி பொறாமையால்.... இந்த திராவிடக் கும்பல் சிதைத்துவிட்டது.

ஜெயலலிதா அம்மையாரும் ஒரு திராவிட கட்சியின் தலைவிதான் என்பதையும், தமிழ்நாடு கேரளா, ஆந்திரா போல் பசியை அடக்காமல் போனதில் அவருக்கும் பங்குண்டு என்பதையும் நினைவு படுத்துவதோடு,

தொட்டில் குழந்தை திட்டம் இன்னும் செயல்பாட்டில் உள்ளது என்றே நினைக்கிறேன்.

ஆனால் வடிவாக தெரியவில்லை அது பிறந்த பெண் சிசுக்களுகானது என நினைகிறேன்.

ஐந்து வயது ஆண் குழந்தையை அதில் போட முடியுமா தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

இதுவரை இருந்த அனைத்து முதல்வர்களும் தமிழ் நாட்டு தமிழர்கள் தான்.

முதலில் ஒங்க திராவிட ஸ்டாலினை தமிழ்த்தாய் வாழ்த்துப்பா படிக்கச்சொல்லுங்கள். அதன் மின் மேலதிகமாக பேசலாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஜெயலலிதா அம்மையாரும் ஒரு திராவிட கட்சியின் தலைவிதான் என்பதையும், தமிழ்நாடு கேரளா, ஆந்திரா போல் பசியை அடக்காமல் போனதில் அவருக்கும் பங்குண்டு என்பதையும் நினைவு படுத்துவதோடு,

தமிழ்நாடு தொட்டில் குழந்தை திட்டம்.. பெண் குழந்தைகளை பஞ்சம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக கொன்று போடும் பழக்கத்தை கட்டுப்படுத்த மனிதாபிமான அடிப்படையில் தனது சொந்த சிந்தனை சார்ந்து ஜெயலலிதா அம்மையார் தொடங்கி இருந்தார். அது அதிமுக திட்டமாக தொடங்கப்படவில்லை.

ஆனாலும்.. அதனை இன்னும் விரிவுபடுத்தி இருக்க முடியும்.. அடுத்த படி நிலைகளுக்கு. ஆனால்.. கருணாநிதி திராவிடக் கும்பல்.. அதனையும் சாத்தியப்படுத்த விடவில்லை. தானும் செய்யவில்லை. 

1 hour ago, tulpen said:

இதுவரை இருந்த அனைத்து முதல்வர்களும் தமிழ் நாட்டு தமிழர்கள் தான். ஒரு வேளை நெடுக்கால போவான் தமிழ் நாட்டை ஆண்டால் அது அந்நியர் ஆட்சி.  

எம் ஜி ஆர் தமிழ்நாட்டுத் தமிழரா..???!  அவர் கண்டியில் பிறந்த  மலையக மலையாளி.

ஜெயலலிதா.. கர்நாடக கன்னடர்

கருணாநிதி..  தமிழ் பேசும் தெலுங்கர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

முதலில் ஒங்க திராவிட ஸ்டாலினை தமிழ்த்தாய் வாழ்த்துப்பா படிக்கச்சொல்லுங்கள். அதன் மின் மேலதிகமாக பேசலாம். :grin:

🤣 அவரு இத படிகிறத நினைச்சேன்….

சிரிச்சு மாள முடியவில்லை 🤣.

நீராடும்….ஆக…

அடுத்து என்ன ?

கடலுணவா?….🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

🤣 அவரு இத படிகிறத நினைச்சேன்….

சிரிச்சு மாள முடியவில்லை 🤣.

நீராடும்….ஆக…

அடுத்து என்ன ?

கடலுணவா?….🤣

கோவில் பிரசாதமாம்....அவர் மனைவி துர்க்காவே ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.

நீங்க பாக்கல? 🤣

11 minutes ago, nedukkalapoovan said:

எம் ஜி ஆர் தமிழ்நாட்டுத் தமிழரா..???!  அவர் கண்டியில் பிறந்த  மலையக மலையாளி.

ஜெயலலிதா.. கர்நாடக கன்னடர்

கருணாநிதி..  தமிழ் பேசும் தெலுங்கர்.

இல்லை நெடுக்கு. அவர்கள் அனைவரும் தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தர்களே. அவர்களுக்கு  தமிழ் நாட்டை ஆட்சி செய்யும் உரிமை உண்டு. நீங்கள் அந்நியர். அவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்று கூறும் உரிமை உங்களுக்கு இல்லை. எனக்கும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

கோவில் பிரசாதமாம்....அவர் மனைவி துர்க்காவே ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.

நீங்க பாக்கல? 🤣

பார்தேன்…

கள்ள கூட்டம்…..

முருகன், முருகன்னு சொல்லீட்டு ஆந்திரா போய் திருப்பதில வெங்கட்கிட்ட மகனுக்கு துலாபரம் கொடுக்கிற மாரி வேலை….

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, tulpen said:

இல்லை நெடுக்கு. அவர்கள் அனைவரும் தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தர்களே. அவர்களுக்கு  தமிழ் நாட்டை ஆட்சி செய்யும் உரிமை உண்டு. நீங்கள் அந்நியர். அவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்று கூறும் உரிமை உங்களுக்கு இல்லை. எனக்கும் இல்லை. 

நீங்கள் சுவீஸ் நாட்டில் வாழ்பவர்.உரிமைகளும் உண்டு. உங்களை  சுவீஸ் மைந்தன் என சுவீஸ்காரன் சொல்ல மாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

பார்தேன்…

கள்ள கூட்டம்…..

முருகன், முருகன்னு சொல்லீட்டு ஆந்திரா போய் திருப்பதில வெங்கட்கிட்ட மகனுக்கு துலாபரம் கொடுக்கிற மாரி வேலை….

முருகர் அம்மா பார்வதி. பார்வதிட அண்ணன் வெங்கட். ஆக.. மருமகன் பக்தர்.. மாமாவை போய் பார்க்கிறதில என்ன தப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

முருகர் அம்மா பார்வதி. பார்வதிட அண்ணன் வெங்கட். ஆக.. மருமகன் பக்தர்.. மாமாவை போய் பார்க்கிறதில என்ன தப்பு. 

அட ஆமல்ல 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.