Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றம் – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றம் – சுமந்திரன்

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று(புதன்கிழமை) விசேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு ’13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல்’ என இருந்த நிலையில், தற்போது ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல்  அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’  என மாற்றப்பட்டுள்ளது.

புதிய வரைவுதயாரிக்கப்பட்ட போது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே இருக்கிறது.

இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தை கட்சிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும்.

சில ஊடகங்கள் தொடரந்தும் தவறான தலைப்பில் இது சம்பந்தமான செய்திகளை வெளியிடுவதனால் இந்த முக்கிய ஊடக அறிக்கை வெளியிடப்படுகிறது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1258169

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் 30 பேப்பர்  , 30 × 2 = 60 பக்கம் .. 

என்னப்பா பேப்பரை வேஸ்ற் செய்கினம் 😢

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2021 at 17:14, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எப்படியும் 30 பேப்பர்  , 30 × 2 = 60 பக்கம் .. 

என்னப்பா பேப்பரை வேஸ்ற் செய்கினம் 😢

சீச்சீ நீங்கள் தப்பா எடைபோடக் கூடாது. அறிக்கைவிடுறது சும்மா ஏலுமே ஐயா!

12 ஆண்டுகளாக கதைச்சுச் சரிவரேல்லை. அதனால் ஒரு கடிதமூலம் தெரிவிப்பதோடு, சும்ஐயான்ரை ஆலோசனையோடு இந்திய ஒன்றியத்தை எச்சரிக்கிறதொனியிலும் ஒரு வரி இணைக்கப்பட்டிருக்குதாம். ஆனபடியால் இந்தக் கடிதம் மோடி மாத்தையன்ரை கையுக்கை போனோடனை  இந்தமுறை மகிந்த அரசுக்கு ஆப்புத்தானாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு விடயம் ஒரு பிரச்னையும் இல்லாமல் முடிந்து இருக்கு லெட்டர் போடுவதில் இருந்து வரைபு மாற்றுவதில  இருந்து எல்லாமே பிரச்னை மயம்தான் கடந்த 12 வருடங்களில் சுமத்திரன் பிரச்சனை படாமல் மற்ற கட்சிகளை  மதித்து அவர்களின் ஆலோசனையும் கேட்டு ஒற்றுமையாய் செய்த ஒருவிடயம் அவரின் அரசியலில் கிடையவே கிடையாது இப்படி தான் தோன்றி  தனமாய் தான் சொன்னதே சரி மற்றவன் எல்லாம் முட்டாள் என்பவரால் 12 வருடம் கழிந்து  இனியும் தீர்வு வரும் என அங்கொடையில் இருந்து வந்தவர்கள் கூட நம்ப மாட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கேயும் சுமந்திரன்  தெம்மாங்குதானா...😂 

  • கருத்துக்கள உறவுகள்
 
ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.
“நடக்காது, நடக்க முடியாது” என்றும் ஆரூடம் கூறியவர்களையும், “நடக்க கூடாது” என விரும்பியவர்களையும் தோல்வியுற செய்த நிகழ்வு.
தற்போது, தமிழ் பேசும் கட்சிகளின் ஆவண நகல் தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர்களுக்கு, இறுதி உடன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவண நகலில், இரண்டு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.
முதலாவது, பாரத பிரதமருக்கான கடிதம். இரண்டாவது, தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் ஏழு பிரதான பிரச்சினைகளின் பட்டியல்.
நேற்றைய ஒன்றுகூடலில் கடுமையான முரண்பாடுகள் தோன்றின. கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றன. அவை அனைத்தும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்தவையே.
ஆகவே அவற்றை எவரும் தனிப்பட்ட முரண்பாடுகளாக எடுத்துக்கொள்வதில்லை.
ஆவணங்கள் இன்னமும் நகல் கட்டத்திலேயே இருக்கின்றன. இவை இன்னமும் திருத்தப்பட இடம் உண்டு.
இறுதி வடிவங்கள் தேவையான நேரங்களை எடுத்துக்கொண்டு, தீர்மானிக்கப்பட்டதும், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு கட்சி தலைவர்கள் கையெழுத்திடுவார்கள்.
தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. மாறாக இது பிரிபடாத இலங்கைக்குள் கெளரவமாக, சமத்துவமாக, வாழ வழி தேடும் செயற்பாடு என நான் திரும்ப, திரும்ப சிங்கள மொழியில், சிங்கள ஊடகங்களில் கூறிவிட்டேன்.
அதேபோல் இந்த கட்சிகளின் ஒருங்கிணைவு, ஒரு தேர்தல் கூட்டணியும் அல்ல என்பதையும் கூறுகிறேன்.
இந்நிலையில் இந்த ஒருங்கிணைவை பற்றிய இந்த கட்டத்தின் உண்மை செய்திகளை பறிமாறுகிறேன்.
எமது ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது எனவும் வேண்டுகிறேன்.
267706182_10216135852428212_421516202765
 
268323184_10216135853268233_116214805268
 
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

இங்கேயும் சுமந்திரன்  தெம்மாங்குதானா

தெம்மாங்கு இல்லை .கடந்த 12 வருடத்தில் சுமத்திரனால் ஏதாவது ஒரு விடயம் தமிழர் சார்பாக பிரச்சனை இல்லாமல் முடிந்து இருக்கா இல்லியா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தெம்மாங்கு இல்லை .கடந்த 12 வருடத்தில் சுமத்திரனால் ஏதாவது ஒரு விடயம் தமிழர் சார்பாக பிரச்சனை இல்லாமல் முடிந்து இருக்கா இல்லியா ?

சிங்களத்திடம் இருந்து விடுதலை வேண்டி ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று சுமந்திரனிடம் இருந்து தமிழர்களை விடுவிக்கும் போராட்டமாக மாறிவிட்டது துரதிட்டம்தான்...😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

சிங்களத்திடம் இருந்து விடுதலை வேண்டி ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று சுமந்திரனிடம் இருந்து தமிழர்களை விடுவிக்கும் போராட்டமாக மாறிவிட்டது துரதிட்டம்தான்...😂😂😂

முதலில் அவரின் ஆதரவாளர்கள் எனும் கூட்டம் மக்களை அடக்குவதை நிறுத்தணும் மிகுதி மக்களே பார்த்து கொள்ளுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

முதலில் அவரின் ஆதரவாளர்கள் எனும் கூட்டம் மக்களை அடக்குவதை நிறுத்தணும் மிகுதி மக்களே பார்த்து கொள்ளுவார்கள் .

என்னால் கூறப்பட்ட கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

என்னால் கூறப்பட்ட கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. 

என்னவென்றாழும் இந்த 12 வருட காலத்துக்கப்பாலும் ஏதாவது அந்த பாவப்பட்ட சனத்துக்கு நன்மை கிடைத்தால் சரி .

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

சிங்களத்திடம் இருந்து விடுதலை வேண்டி ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று சுமந்திரனிடம் இருந்து தமிழர்களை விடுவிக்கும் போராட்டமாக மாறிவிட்டது துரதிட்டம்தான்...😂😂😂

சில அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது. 😜

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

சில அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது. 😜

பீட்டர் இளம் செழியனுக்கு தாடை உடைக்கப்பட்டது பகிடியாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

என்னவென்றாழும் இந்த 12 வருட காலத்துக்கப்பாலும் ஏதாவது அந்த பாவப்பட்ட சனத்துக்கு நன்மை கிடைத்தால் சரி .

அதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்திருப்பது. யார் மூலமாகவாவது நன்மை நடைபெறாதா என்று..😔

Just now, பெருமாள் said:

பீட்டர் இளம் செழியனுக்கு தாடை உடைக்கப்பட்டது பகிடியாக்கும் .

பெருமாள் Fake news sites மட்டும்தான் பார்ப்பீர்கள..😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

அதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்திருப்பது. யார் மூலமாகவாவது நன்மை நடைபெறாதா என்று..😔

சரி இப்ப என்ன செய்யப்போகிறீர்கள் அதையாவது சொல்லுங்க ?

2 minutes ago, Kapithan said:

பெருமாள் Fake news sites மட்டும்தான் பார்ப்பீர்கள..😂

Fake news sitesல் எங்கு இருக்கு பீட்டர் இளம் செழியனுக்கு தாடை உடைக்கப்படவில்லை என்று ?

முதலில் Fake news sites என்றால் என்னவென்று தெரியுமா ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

பீட்டர் இளம் செழியனுக்கு தாடை உடைக்கப்பட்டது பகிடியாக்கும் .

கேட்கிறவன் கேனையன் என்றால்  எருமை மாடும் ஏரோபிலேன் ஓடுமாம்.ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடாது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

கேட்கிறவன் கேனையன் என்றால்  எருமை மாடும் ஏரோபிலேன் ஓடுமாம்.ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடாது.

அப்ப  பீட்டர் இளம் செழியன் தாக்கப்படவில்லை என்கிறீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அப்ப  பீட்டர் இளம் செழியன் தாக்கப்படவில்லை என்கிறீர்களா ?

https://www.facebook.com/peter.ilancheliyan.1

https://ibctamil.com/article/mullaitivu-attack-police-1639467019?fbclid=IwAR37QwgjCw3VK7jtpTKKpfuQuMVmIovw7Zi3VmiQ5P2kpnHWoGZMPuEXGz4

அவர் தாக்கப்பட்டது தனிப்பட்ட பிரச்சனை காரணமாக.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, zuma said:

https://www.facebook.com/peter.ilancheliyan.1

https://ibctamil.com/article/mullaitivu-attack-police-1639467019?fbclid=IwAR37QwgjCw3VK7jtpTKKpfuQuMVmIovw7Zi3VmiQ5P2kpnHWoGZMPuEXGz4

அவர் தாக்கப்பட்டது தனிப்பட்ட பிரச்சனை காரணமாக.

அதை இங்கு மக்களுக்கு விளக்கமாக சொல்லுங்க ?அதோடு அன்று கொடுத்த வானொலி பேட்டியையும்  இங்கு இணைத்தால்  நல்லது . முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

அதை இங்கு மக்களுக்கு விளக்கமாக சொல்லுங்க ?அதோடு அன்று கொடுத்த வானொலி பேட்டியையும்  இங்கு இணைத்தால்  நல்லது . முடியுமா ?

நான் இணைத்த இணைப்பில் எல்லாம் உள்ளது. வாழைப்பழத்தை உரித்து வாயில் வைக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கின்றிர்களா ?

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அப்ப  பீட்டர் இளம் செழியன் தாக்கப்படவில்லை என்கிறீர்களா ?

சுமந்திரனின் கொள்கைகள், பேட்டிகள், அவரது கருத்துகள் தொடர்பாக விமர்சனங்களை தாராளமாக யாரும் வைக்கலாம். அதில் தவறேதும் இல்லை.

ஆனால் காழ்ப்புணர்வு காரணமாக யார் மீதும் வசவுகளை அள்ளி வீசுதல் ஏற்கத் தக்கதல்ல. 

உ+ம்; கள்ள வாக்குகள், பின்கதவால் வந்தவர்..........தாடை உடைத்தவர்...☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சுமந்திரனின் கொள்கைகள், பேட்டிகள், அவரது கருத்துகள் தொடர்பாக விமர்சனங்களை தாராளமாக யாரும் வைக்கலாம். அதில் தவறேதும் இல்லை.

ஆனால் காழ்ப்புணர்வு காரணமாக யார் மீதும் வசவுகளை அள்ளி வீசுதல் ஏற்கத் தக்கதல்ல. 

உ+ம்; கள்ள வாக்குகள், பின்கதவால் வந்தவர்..........தாடை உடைத்தவர்...☹️

உங்களின் வழமையான, முக்கியமான ஒரு காரணத்தை தவற விட்டு விட்டீர்கள் என்பதை நினைவூட்டுகிறேன் சகோதரா! இல்லை, தவிர்த்து விட்டீர்கள் என்றால் நீங்கள் திருந்தியது சந்தோசமே.

7 hours ago, zuma said:

நான் இணைத்த இணைப்பில் எல்லாம் உள்ளது. வாழைப்பழத்தை உரித்து வாயில் வைக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கின்றிர்களா ?

சுமா,  அப்படியே நீங்கள் வாழைப்பழத்தை உரித்து அவர்கள்  வாயில் வைத்தாலும் அது வாழைப்பழமல்ல மாம்பழம் என்று பொய்யுரைக்கும் தந்திரமே இங்கு பக்கங்களை நிரப்பிவருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, tulpen said:

சுமா,  அப்படியே நீங்கள் வாழைப்பழத்தை உரித்து அவர்கள்  வாயில் வைத்தாலும் அது வாழைப்பழமல்ல மாம்பழம் என்று பொய்யுரைக்கும் தந்திரமே இங்கு பக்கங்களை நிரப்பிவருகிறது. 

இரண்டு திரி உங்களுக்காக காத்துகொண்டு இருக்குது அங்குவந்து உண்மை சொல்லலாமே இங்கு ஏன் குழு வாதம் செய்கிறீர்கள் ?

6 hours ago, Kapithan said:

உ+ம்; கள்ள வாக்குகள், பின்கதவால் வந்தவர்..........தாடை உடைத்தவர்...

இதெல்லாம் நாங்க கண்டுபிடித்து சொல்லவில்லை அங்குள்ள மண்ணின் மைந்தர்களின்  வசனம்கள் .அவர்கள் அப்ப்டித்தான் கூப்பிடுகிறார்கள் சும்மை  உங்களால் மறுக்க முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

நான் இணைத்த இணைப்பில் எல்லாம் உள்ளது. வாழைப்பழத்தை உரித்து வாயில் வைக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கின்றிர்களா ?

சரி விதி யாரை விட்டது நாகரீகமாக இருக்கலாம் என்று பார்த்தால் சுமத்திரனை தரம்கெட வைக்க சும்மின் உங்களது ஆட்கள் காணும்  சுமத்திரனை என்ன கிழி  கிழி என்று கிழிக்கிறார் என்று பாருங்கள் 🤣🤣

1 hour ago, tulpen said:

சுமா,  அப்படியே நீங்கள் வாழைப்பழத்தை உரித்து அவர்கள்  வாயில் வைத்தாலும் அது வாழைப்பழமல்ல மாம்பழம் என்று பொய்யுரைக்கும் தந்திரமே இங்கு பக்கங்களை நிரப்பிவருகிறது. 

உங்களுக்கும் தான் மாம்பழம் வெட்டி பரிமாறிக்கிடக்கு முழுக்க பார்த்து பிரஷரை ஏத்தவேண்டாம் 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.