Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சபிக்கப்பட்டவர்கள் கனவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. 

மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள்,

எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன.

இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது.

மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்பட்டன.

என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது.

நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த பின்னிரவில்,

நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது.

மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் பறந்தன.

நீரோடி வியாபித்த நீர்நிலைகள் வற்றி வறண்டன.

பள்ளத்தாக்குகள் சுக்குநூறாகப் பிளவுபட்டன.

கண்ணுக்கெட்டிய திசையெங்கும் கந்தகப் புகை வியாபித்தது.

மின்னலுடன் இடி முழக்கம், வானதிர்ந்தது. 

மிருகங்களின் உறுமல் சத்தம் இதயத்தை ரணமாக்கியது.

இரவின் கறுப்பில், இருண்ட வெற்றிப் பதாகைள் காற்றில் அசைந்தன.

பேயின் நகம் பட்ட மோசமான கீறல்கள் பெருவலியெடுத்தன.

போர் முடிவுக்கு வந்த பிறகு, பற்கள் மற்றும் நகங்களை நிமிர்த்தியபடி பேய்கள் அங்குமிங்கும் உலாவின.

லூசிபரின் சொந்த நரகத்தில் சபித்து வளர்க்கப்பட்ட கோர்கன்களின் கொடுஞ் செயலால்,

எண்ணற்ற உடல்கள் அங்கே பரிதாபமாக சுருண்டு கிடந்தன.  

எங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேறும்படி அவர்கள் வானதிரக் கூவினர்.

ஒருவர் பின் ஒருவராகச் சிறைப்பட நடந்த மக்களின் கூக்குரல்கள்,

அவர்களின் காதுகளை சென்றடையமுன் செத்துச் செயலிழந்தன.

எதிரிகளின் மூச்சு மக்களுக்கு விஷ நெருப்பை சுவாசிக்கத் தந்தது.

எங்கள் இனிய வாழ்க்கையின் மீது நிலவொளியின் இருண்ட பக்கங்கள் நுழைந்தன.

ஆனாலும், பிரபஞ்சத்தின் அனைத்தையும் பார்க்கும் உணர்வு மட்டும் இன்னும் இழக்கப்படவில்லை.

நரக கோபத்தில் பிறந்த மின்மினிப் பூச்சிகள், அழிந்தவர்களின் கடந்தகால பாவங்களை அள்ளிக் கோபத்தில் வீசின.

அடர் மிகு இருளில் அந்தி பேய்கள், நிழல் உலகின் தாதாக்கள் போல நிமிந்து நின்றன...

நான் முன்போல் மிகவும் சுதந்திரமாக இயங்க விரும்புகிறேன்.

மிளிரும் நட்சத்திரங்களைக் கண் முன்னே காண விருப்பம் கொள்கிறேன்.

என்னை உறுதியாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கடவுளின் கடிகாரத்திற்கு நன்றி!

எங்கள் வீட்டின் பின்புறத்தே அடர்ந்து பரந்துள்ள டான்டேலியன்களைப் பார்க்கிறேன்.

நாங்கள் டான்டேலியன்களைப் போன்றவர்கள்! 

எந்தத் தழும்புகளுக்கும் மருந்தளிக்கும் வல்லமை படைத்தவர்கள்.

பதற்றம் கலந்த பயங்கரமான பயத்தின் சுவட்டால், நான் தூங்குவதற்காக அழுதேன்.

ஆனால்,  நான் இப்போது கண்ணீர் விடமாட்டேன்!

நான் நெரிசலான தொழிற்சாலைகளில் இருந்து வளர்க்கப்படாத கோழி!

நிம்மதியாக பறக்கும் ஒரு பில்லியன் பறவைகளில் ஒருவன்.

எனக்கு நன்கு தெரிந்த என் நிலத்தில் என்னை விட்டு விடுங்கள்...

என் அற்புதமான காடுகளில் மட்டுமே என் மகிழ்ச்சியைத் நான் தேடுவேன்!

இறுதியாக ஒன்றை மட்டும் சொல்கிறேன், நாங்கள் டெய்ஸி மலர் போன்றவர்கள் 

என்றும் சாம்பியன்களாக இருப்பதையே விரும்புகிறோம்!

-தியா- 

நன்றி; பனிப்பூக்கள் 

https://www.panippookkal.com/ithazh/archives/23477?fbclid=IwAR2zMbJnH7bmVliDmTAMu2rrqxCNLMcnrA0JaGotxW6p7KuLtXMHqjxDb7o

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, theeya said:

கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தியா நீண்ட நாட்களின் பின்.

கவிதைக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

' நான் நெரிசலான தொழிற்சாலைகளில் இருந்து வளர்க்கப்படாத கோழி!

நிம்மதியாக பறக்கும் ஒரு பில்லியன் பறவைகளில் ஒருவன்.'

இதுதான் அடையாளம்.🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை பகிர்வுக்கு நன்றி....💐

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் theeya  .......!  👍

ஒரு சிறு விளக்கம் தேவை.......டான்டேலியன் என்றால் என்ன......எனக்குத் தெரியவில்லை....அதன் விஷேசமான குணம் என்ன..........!   

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிலாமதி said:

நன்றி சகோதரி........!   👍

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2021 at 08:27, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

மிக்க நன்றி 

On 26/12/2021 at 09:41, ஈழப்பிரியன் said:

என்ன தியா நீண்ட நாட்களின் பின்.

கவிதைக்கு பாராட்டுக்கள்.

நன்றி , உங்களை எல்லாம் பார்க்க வேணும் போல இருந்துது வெறுங்கையுடன் வாறது சரியில்லை என்று கவிதையுடன் வந்தேன் 

On 28/12/2021 at 09:09, வல்வை சகாறா said:

' நான் நெரிசலான தொழிற்சாலைகளில் இருந்து வளர்க்கப்படாத கோழி!

நிம்மதியாக பறக்கும் ஒரு பில்லியன் பறவைகளில் ஒருவன்.'

இதுதான் அடையாளம்.🙂

நன்றி!

On 28/12/2021 at 09:16, குமாரசாமி said:

கவிதை பகிர்வுக்கு நன்றி....💐

நன்றி!

On 28/12/2021 at 13:25, பாலபத்ர ஓணாண்டி said:

நல்ல ஒரு கவிதை..

நன்றி!

On 28/12/2021 at 14:11, suvy said:

நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் theeya  .......!  👍

ஒரு சிறு விளக்கம் தேவை.......டான்டேலியன் என்றால் என்ன......எனக்குத் தெரியவில்லை....அதன் விஷேசமான குணம் என்ன..........!   

நன்றி! நிலாமதி அக்கா பகிந்த வீடியோவைப் பாருங்கள். எண்கள் வீட்டின் பின் புறத்தில் அதிகம் உள்ளன. 

On 28/12/2021 at 14:19, நிலாமதி said:

நன்றி! நிலாமதி அக்கா 

On 28/12/2021 at 14:31, suvy said:

நன்றி சகோதரி........!   👍

நன்றி! 

  • கருத்துக்கள உறவுகள்

Graines de Dandelion officinale - Le Comptoir des Graines

இங்கும் நிறைய இருக்கின்றன .......!

இந்த மலர்களை எனக்குத் தெரியும் ஆனால் அந்தப் பெயர்தான் எதோ விசேஷமான நாயின் பெயர்போல் இருந்தது .....நன்றி சகோதரி.......!  😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.