Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு!

spacer.png

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாசையூர் கடற்கரை பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப் பணிகள்  இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் பிரதேச செயயாளர் சுதர்சன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

பல தசாப்த காலமாக பாஷையூர், குருநகர், சாவற்கட்டு, காக்கைதீவு, நாவாந்துறை உள்ளிட்டபல பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கமித்து தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பகுதியாக காணப்படும் இந்த இடத்தில் வெளிச்சவீடு  இன்மையால் கரையை அடையாளப்படுத்துவதில் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக, கடற்றொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த கடற்றொழிலாளர்கள் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு இணங்க கடற்றொழில் அமைச்சினால் குறித்த திட்டத்தை மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கீட செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்றிருந்த குழுவினர் குடாக்கடல் பகுதியில் ஏற்கனவே முற்றாக செயலிழந்திருக்கும் வெளிச்சவீடின் நிலைமைகளை பார்வையிட்டதுடன் அந்த இடத்திலேயே புதிதாக 30 அடி உயரமான புதிய வெளிச்சவீடு ஒன்றை கட்டுமாணம் செய்வதற்கான முன்னாயத்த செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

சுமார் 4 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் குறித்த கட்டுமானப் பணி  சுமார் 15 நாட்டிளுக்கும் நிறைவுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் ஐந்து மாடி குடியிருப்பு பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி குறித்த பகுதியில் உள்ள நீர்த்தாங்கியில் இடிதாங்கி அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரட் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த முன்னெடுக்கப்படும் குறித்த பணிகளையும் இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயயாளர் சுதர்சன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த திட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் 5 இலட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
https://athavannews.com/2022/1259984

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

4லட்சம் வெளிச்ச வீடு அமைக்க காணுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாதவூரான் said:

4லட்சம் வெளிச்ச வீடு அமைக்க காணுமா?

நாலு தடி கட்டி ரியூப் லைட்டை செருகிவிடுவார்கள் போலிருக்கு🙂

  • கருத்துக்கள உறவுகள்

30 அடி உயரத்திற்கெல்லாம் எதுக்கு 5 இவட்சம். கடைற்கரையோரமாய் உள்ள ஒரு உயர்நத கட்டடத்தின் உச்சியில் ஓரு சிவப்பு மின் விளக்கைப் பொருத்தி விட்டால் முடிறஞ்சுது அலுவல்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

4லட்சம் வெளிச்ச வீடு அமைக்க காணுமா?

அரிக்கன் லாம்பைக் கொழுவிவிடப் போறாங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

சுமார் 4 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் குறித்த கட்டுமானப் பணி  சுமார் 15 நாட்டிளுக்கும் நிறைவுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குத்தியர்! பனங்குத்தியை நட்டுவைச்சு லாம்பு கட்டித்தொங்க விடுற பிளான் போல....

  • கருத்துக்கள உறவுகள்

20ம் நுhற்றாண்டில்த் தான் வெளிச்சவீடு என்றால்

21ம் நுhற்றாண்டிலுமா?

5 hours ago, வாதவூரான் said:

4லட்சம் வெளிச்ச வீடு அமைக்க காணுமா?

இப்ப உள்ள சீமெந்து இரும்புகம்பி என்று பார்த்தாலே ஒரு தூண் செய்ய போதாதே?

  • கருத்துக்கள உறவுகள்

S'approvisionner en électricité sans soucis – L'approvisionnement en  électricité d'Alpiq |

இதுபோல் இரும்பில் டவர் செய்து பொருத்துவார்கள் என்று நினைக்கிறன்.......30 அடிக்கு தாங்கும்.......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

S'approvisionner en électricité sans soucis – L'approvisionnement en  électricité d'Alpiq |

இதுபோல் இரும்பில் டவர் செய்து பொருத்துவார்கள் என்று நினைக்கிறன்.......30 அடிக்கு தாங்கும்.......!  🤔

சுவி இதுக்கு அத்திவாரம் போடவே ஐயாவின் கணக்கு போதாதே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சுவி இதுக்கு அத்திவாரம் போடவே ஐயாவின் கணக்கு போதாதே?

படிமம்:Thanjavur Brihadeeswara Temple side view.JPG - தமிழ் விக்கிப்பீடியா

தஞ்சைப் பெரியகோவிலே 4 அடி அத்திவாரத்தில்தான் நிக்குது.....!

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் செய்தி ஊடகங்களின் தன் பெயர் அடிபடனும்.. இப்படி பல சின்னச் சின்ன ஆசைகள் அவருக்கு. அதனால் தான் ஆரம்பம் தொடக்கம் இப்ப வரை.. தனக்கு எங்கு வசதியோ அங்கு போய் சரணாகதி அடைந்து கொள்ளுறது. 

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தச் செய்தியில் எத்தனை தடவை  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் என்று வந்திருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள், அர்த்தம் புரியும். இது நடக்குமா இல்லையா? நீண்டு நிலைத்திருக்குமா என்பதெல்லாம் அடுத்த கேள்வி. தன்னை விளம்பரப்படுத்த வேண்டும், அதற்கு இதுவும் ஒரு வழி. 

7 hours ago, suvy said:

தஞ்சைப் பெரியகோவிலே 4 அடி அத்திவாரத்தில்தான் நிக்குது.....!

அப்போ! தஞ்சை பெரிய கோயில் மாதிரி கடலில ஒரு வெளிச்ச வீடு வரப்போகுது எண்ணிறியள். நடந்தாலும் நடக்கலாம் யார் கண்டா? பின் ஒரு காலத்தில் நிறைய சம்பாதிக்கலாம் இதை வைத்தே.

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தில் இனி சுரண்ட முடியாது. ஆதலால் கடலில் விரிக்கிறார் வலையை. 

இனி இவரிடமும் கடன் வாங்கலாம் சிறீலங்கா.

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இது பாசையூர்க் கடல் அல்ல. குடாக் கடல். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.