Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறைக்கு சொகுசு ரயில் சேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறைக்கு சொகுசு ரயில் சேவை

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு ரயில் சேவை இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ரயில் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் 02 பவர் என்ஜின்கள் உள்ளன.

இந்த ரயிலில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், உணவருந்துவதற்கான பகுதி, டிவி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.

இந்த ரயிலின் சேவையைப் பெற விரும்பும் பயணிகள், ஒரு மாதத்திற்கு முன்பே ஒன்லைனில் இ-டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இந்த ரயிலின் பெறுமதி 2500 மில்லியன் ரூபாயாகும்.

இந்த ரயில் சேவையின் ஆரம்ப சேவை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கல்கிசை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது.

பின்னர் அமைச்சர் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை ரயிலில் பயணித்தார்.
 
கல்கிசை, தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கோட்டை, பொல்கஹாவெல, குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், கோண்டாவில், சுன்னாகம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய ரயில் நிலையங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும்.

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு 1700 ரூபாயும், கல்கிசையிலிருந்து வவுனியாவிற்கு 1500 ரூபாயும், கல்கிசையிலிருந்து அனுராதபுரத்திற்கு 1200 ரூபாயும் அறவிடப்படுகின்றன.
 
https://www.tamilmirror.lk/செய்திகள்/காங்கேசன்துறைக்கு-சொகுசு-ரயில்-சேவை/175-288933

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வடபகுதியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் தென்பகுதிசென்று பணியாற்றினார்கள். அவர்களாலேயே ரயில்வே திணைக்களம் இழப்பின்றி இலாபத்தில் இயங்கியதாக செய்திகளும் வந்தன. இன்று வெகுசிலரே அங்கு சென்று பணியாற்றும் நிலையை இனவாதம் ஏற்படுத்தியுள்ளதால், இந்தச் சேவை நட்டத்தில் இயங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம்.🤔 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Paanch said:

இப்போ…. தமிழ்ப் பகுதிகளில், பல புதிய விகாரைகள் இருப்பதால்….
புனித யாத்திரை மேற்கொள்ளும் சிங்களவர் மூலம்,
இந்த ரயில் சேவை… நல்ல வருமானம் ஈட்டித்தர, வாய்ப்புகள் அதிகம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Paanch said:

அன்று வடபகுதியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் தென்பகுதிசென்று பணியாற்றினார்கள். அவர்களாலேயே ரயில்வே திணைக்களம் இழப்பின்றி இலாபத்தில் இயங்கியதாக செய்திகளும் வந்தன. இன்று வெகுசிலரே அங்கு சென்று பணியாற்றும் நிலையை இனவாதம் ஏற்படுத்தியுள்ளதால், இந்தச் சேவை நட்டத்தில் இயங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம்.🤔 

நானறிந்தவரை இப்போதும் (கொவிட்முன்) ஆதிக வருமானம் ஈட்டும் சேவை வடக்கு சேவைதான். மிக விரைவாக நாளுக்கு 1 என்பதில் இருந்து நாளுக்கு 5 வரை சேவையை உயர்த்தினார்கள் என நியாபகம்.

அப்படி இருந்தும் சிலசமயம் டிக்கெட் கஸ்டம் எடுப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நானறிந்தவரை இப்போதும் (கொவிட்முன்) ஆதிக வருமானம் ஈட்டும் சேவை வடக்கு சேவைதான். மிக விரைவாக நாளுக்கு 1 என்பதில் இருந்து நாளுக்கு 5 வரை சேவையை உயர்த்தினார்கள் என நியாபகம்.

அப்படி இருந்தும் சிலசமயம் டிக்கெட் கஸ்டம் எடுப்பது.

கட்டுநாயக்க ஏர் போர்ட்டில்  இருந்து யாழுக்கு ரெயில் சேவை இருக்கின்றதா ?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நானறிந்தவரை இப்போதும் (கொவிட்முன்) ஆதிக வருமானம் ஈட்டும் சேவை வடக்கு சேவைதான். மிக விரைவாக நாளுக்கு 1 என்பதில் இருந்து நாளுக்கு 5 வரை சேவையை உயர்த்தினார்கள் என நியாபகம்.

அப்படி இருந்தும் சிலசமயம் டிக்கெட் கஸ்டம் எடுப்பது.

அந்த ரயிலுக்கு 🚅🚄🚝சிங்கள சகோதரர்கள்….   அனுராதபுரம், மதவாச்சியில்…
கல்லு எறியாமல் விட்டார்கள் என்றால், இன்னும் கூடச் சனம் போகும். 🤣 🤪

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய புலம்பெயர் தமிழர்கள் போகினம். அதுதான் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் வெப்பநிலை 30 பாகை செல்சிஸாம். அதுதான் குளிரூட்டி சொகுசு வண்டி விட்டு சம்பாதிக்குது சிங்களம். எங்கடை ஆக்கள் போற இடத்தில வெக்க தாங்க மாட்டினம் எல்லோ..!! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

நிறைய புலம்பெயர் தமிழர்கள் போகினம். அதுதான் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் வெப்பநிலை 30 பாகை செல்சிஸாம். அதுதான் குளிரூட்டி சொகுசு வண்டி விட்டு சம்பாதிக்குது சிங்களம். எங்கடை ஆக்கள் போற இடத்தில வெக்க தாங்க மாட்டினம் எல்லோ..!! 🤣

“வின்ரர்” நாட்டிலை வாழ்ந்து விட்டு….  டக்கெண்டு, வெக்கை நாட்டுக்கு போகேக்கை…
உடம்பெல்லாம்… „பிசு பிசு“ என்று, வேர்த்தால்…. அசிங்கம் தானே. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமக்கள் சாப்பிடவே வழியில்லை, இதில சொகுசு ரயிலில் பயணம்? இந்தியாவின் கடன் உதவி ரயில், இன்னும் வரும் இந்தியாவில் தேங்கிக்கிடக்கும் உற்பத்திகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

“வின்ரர்” நாட்டிலை வாழ்ந்து விட்டு….  டக்கெண்டு, வெக்கை நாட்டுக்கு போகேக்கை…
உடம்பெல்லாம்… „பிசு பிசு“ என்று, வேர்த்தால்…. அசிங்கம் தானே.

நல்லா கிணறுகள் முட்டிக்கிடக்குதாம். அள்ளி நாலு தரம் குளிக்க வெக்க.. பிசி பிசுப்பு எல்லாம் பறந்திடும். போற வெள்ளையளே.. பிசு பிசுக்குது என்று அழேல்ல.. இவை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இந்த ரயிலின் பெறுமதி 2500 மில்லியன் ரூபாயாகும்.

அதையும் கடனுக்குத்தான் வாங்கி இருக்கானுவ.. இந்த மானங்கெட்ட ரெயில்ல போறதுக்கு நடந்தே கொழும்புக்கு போவலாம்..😂😂

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் தரம் எப்படி இருந்தாலும், ரயில் பாதை தரம் சரியில்லையே....

தூக்கி, தூக்கி எறிவதால், கொழும்பு முதல், வவுனியா வரை.... slow வா தான் போகுது. 25mph.

வவுனியாவுக்கு பிறகு 40 - 45 mph 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கட்டுநாயக்க ஏர் போர்ட்டில்  இருந்து யாழுக்கு ரெயில் சேவை இருக்கின்றதா ?

ஓம் இருக்கு. என்ன கட்டுநாயக்க-இராகம shuttle bus இல் போய் அங்கால ரயில் எப்படி வசதி 🤣.

சீரியசாக - ஒரு ஒற்றை ரயில் பாதை கோட்டை-கட்டுநாயக்க இடையே உண்டு. நாளுக்கு இரெண்டு தரம் ரயில் வரும் 🤣.

52 minutes ago, தமிழ் சிறி said:

“வின்ரர்” நாட்டிலை வாழ்ந்து விட்டு….  டக்கெண்டு, வெக்கை நாட்டுக்கு போகேக்கை…
உடம்பெல்லாம்… „பிசு பிசு“ என்று, வேர்த்தால்…. அசிங்கம் தானே. 😂 🤣

போறதில 90% ஆரெண்டு பாத்தால் வலு சத்தமா வெளிநாட்டில் “புறக்கணி சிறிலங்கா” எண்டு கத்திற ஆக்கள்தான் 🤣.

ஆனாலும் மிக தீவிரமான தமிழ் தேசிய உணர்வாளர்கள் சிலர், சிங்களவனுக்கு ஒரு சதமும் கொடுக்க கூடாது (வீசா fees ஆருக்கு எண்டு கேக்கப்படாது) என்பதால், கொழும்பில் ஷொப்பிங் செய்யாமல், கொப்பேகடுவ சந்தி வரை ஒரு பிளேன் டி கூட குடியாமல், யாழுக்கு கட்டு நாயக்கவில் இருந்து நடந்தே போவதும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

ஓம் இருக்கு. என்ன கட்டுநாயக்க-இராகம shuttle bus இல் போய் அங்கால ரயில் எப்படி வசதி 🤣.

சீரியசாக - ஒரு ஒற்றை ரயில் பாதை கோட்டை-கட்டுநாயக்க இடையே உண்டு. நாளுக்கு இரெண்டு தரம் ரயில் வரும் 🤣.

https://train-time.in/srilanka-stations/katunayake

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

ரயில் தரம் எப்படி இருந்தாலும், ரயில் பாதை தரம் சரியில்லையே....

தூக்கி, தூக்கி எறிவதால், கொழும்பு முதல், வவுனியா வரை.... slow வா தான் போகுது. 25mph.

வவுனியாவுக்கு பிறகு 40 - 45 mph 

நீங்கள் சொல்வது சரிதான். பொல்காவல வரை மித வேகம். பின் ஓமந்தை வரை மந்தம். பின் கூடிய வேகம்.

ஆனால் நீங்கள் சொல்லும் mph கணக்கு யாழ் தேவிக்கு என நினைக்கிறேன்.  

Intercity அண்ணளவாக 220 மைல் தூரத்தை ஏழரை மணத்தியாலத்தில் கடந்ததா நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

உத நம்பி ஏமாற வேண்டாம் நாதம். பிறகு பெட்டி படுக்கையோட கட்டுநாயக்க ரயில் நிலையத்யில நிக்க வேண்டி வரும் 🤣.

நான் 2015 இல் கோட்டையில் விசாரித்த போது 2 ரயில் என்றார்கள். இப்போ அவர்களின் வெப்சைட்டே ஒண்டும் இல்லை என்கிறது.

large.B2D9D671-A404-403D-833A-42E350260679.jpeg.5e5b85f0a55ecf90acb90913c68925c5.jpeg

https://eservices.railway.gov.lk/schedule/searchTrain.action?lang=en

பிற்சேர்க்கை

நாதம் நீங்கள் தந்திருப்பது கட்டுநாயக்க நகர ரயில் நிலையத்துக்கானது. 

கட்டு நாயக்க ஏர்போட் ஸ்டேசனுக்கு நாளைக்கு 2 ரயில் ஓடியது. இப்போ அதுவும் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கட்டு நாயக்க ஏர்போட்டில் இருந்து கட்டுநாயக்க நகர பஸ் நிலையத்துக்கு இலவச shuttle bus உண்டு. அதில் ஏறி நகரத்துக்கு போய், அங்கே இருந்து நகர ரயில் நிலையம் போய், கொழும்பு போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

ஆனாலும் மிக தீவிரமான தமிழ் தேசிய உணர்வாளர்கள் சிலர், சிங்களவனுக்கு ஒரு சதமும் கொடுக்க கூடாது (வீசா fees ஆருக்கு எண்டு கேக்கப்படாது) என்பதால், கொழும்பில் ஷொப்பிங் செய்யாமல், கொப்பேகடுவ சந்தி வரை ஒரு பிளேன் டி கூட குடியாமல், யாழுக்கு கட்டு நாயக்கவில் இருந்து நடந்தே போவதும் உண்டு.

அப்படியானவர்களை ஊக்குவிக்கும் முகமாக… 📺
ஏன்… ஒரு,  தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களும் பேட்டி கண்டு ஒளிபரப்பவில்லை. 😎

அப்படி நடந்து போகும் போது…. எத்தனை மணித்தியாலம் எடுக்கும்?
சுற்றுலா முடிந்து… திரும்ப கட்டுநாயக்கா வரும் போதும், நடராஜா தானா…. 🚶🏻🚶‍♂️🤣
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி ஒரு தகவலை திட்டமிட்டு தவிர்துள்ளது🤣.

அது:

இந்த ரயிலின் பெயர் ஸ்ரீதேவி என்பதாகும்.

#மயிலு பெயரில் ரயிலு

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

அப்படியானவர்களை ஊக்குவிக்கும் முகமாக… 📺
ஏன்… ஒரு,  தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களும் பேட்டி கண்டு ஒளிபரப்பவில்லை. 😎

அப்படி நடந்து போகும் போது…. எத்தனை மணித்தியாலம் எடுக்கும்?
சுற்றுலா முடிந்து… திரும்ப கட்டுநாயக்கா வரும் போதும், நடராஜா தானா…. 🚶🏻🚶‍♂️🤣
 
ஓம் 3 நாள் போக, 3 நாள் வர 🤣.

Rambling holidays in Sri Lanka led by an expert guide என்று வெள்ளையளின் தலையில் தாளிச்சு கொஞ்ச பேரையும் கூட்டிப்போனால் நல்ல காசும் பாக்கலாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சொகுசு ரயில் சேவை வருடக்கணக்காக உள்ளது. முன்னர்  5 ரயில் பெட்டிகளுடன் இயங்கியது. தற்போது 8 பெட்டிகளாக மாற்றிவிட்டு மக்களின் காதில் 🌼🌼🌼

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்கள் சொகுசு ரயில் கேட்டுத்தான்  அழுதார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

வடக்கு மக்கள் சொகுசு ரயில் கேட்டுத்தான்  அழுதார்களாம்.

அதான.. ஏற்கனவே முழுசனமும் மூண்டாவது கிளாசிலதான் போகுது… சாமான் விக்குர விலைக்கு இன்னும் குறைஞ்ச விலைக்கு நாலாவது கிளாஸ் இருந்தா அதிலும் போக ரெடி..

உது பிள்ளைக்கு பால் வாங்க வீட்டில காசு இல்ல ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூவா.. எண்ட கதைதான்..

  • கருத்துக்கள உறவுகள்

On 9/1/2022 at 22:48, goshan_che said:

நீங்கள் சொல்வது சரிதான். பொல்காவல வரை மித வேகம். பின் ஓமந்தை வரை மந்தம். பின் கூடிய வேகம்.

ஆனால் நீங்கள் சொல்லும் mph கணக்கு யாழ் தேவிக்கு என நினைக்கிறேன்.  

Intercity அண்ணளவாக 220 மைல் தூரத்தை ஏழரை மணத்தியாலத்தில் கடந்ததா நினைவு.

எப்படிப்பார்த்தாலும் சராசரி வேகம் 30 mph தானே வருது கோஷான்?? அதுவும் intercity க்கே !!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

சொகுசு ரயிலை கொடுத்தவங்க எரிபொருளையும் அனுப்புவாங்களா? இல்லையெண்டா  கொண்டுபோய் மூலையில் தள்ள வேண்டியதுதான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.