Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

பிரபா சிதம்பரநாதன் தனது கருத்தை பக்கச்சார்பில்லாமல் போரால் பாதிக்கப்படுவோரின் குரலாக  எழுதியுள்ளார். 

ஆனால் நீங்கள் அவரையும் உங்கள் கருத்திற்கு துணையாக இழுப்பது கோழைத்தனமான இழி செயல்

வெட்கம்.

😏

பரவாயில்லை கப்பித்தான்...
என்னுடைய பதிவு கோழைத்தனமான இழி செயலாகவே இருக்கட்டும் ...

இந்த திரியில் நீங்கள் எழுதிய பல கருத்து கண்றாவியை திருப்பி வாசித்தீர்களா? ஆனால் அதில் கூட கப்பித்தானின் அரசியல் கேனைத்தனத்தையும், அவரின் மனிதம் சாரா  கேவலத்தையும் நான் கொஞ்சம்கூட மிஞ்சிவிடவில்லை என்று திடமாக நம்புகிறேன். 👍 

Edited by Sasi_varnam

  • Replies 477
  • Views 30.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

இங்கே புடினுக்கு ஆதரவாக எழுதியவர்கள் ஒருவரையாவது காட்ட முடியுமா..?

இதைத் தான் நானும் தேடுகிறேன்.
கண்டுபிடிக்க முடியலை.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன்காரன் தன்னுடைய வாயாலை…. ரஷ்யனிட்டை, செமத்தியாக அடி வாங்கி…
வீடுகள் எல்லாம் நொருங்கி, இருக்க இடம் இல்லாமல்,
இந்த வின்ரர் குளிருக்குள்ளை  பல லட்சக் கணக்காக… அகதியாக ரயில் ஏறி
அயல் நாட்டுக்குப் போகும் போதும்…..
அவர்களின் நகரங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் படித்த….
ஆசிய, ஆபிரிக்க மாணவர்களை ரயிலில் ஏற்ற விடாது….
”பிரவுண் நிறத்தவர்களும், கறுப்பு நிறத்தவர்களும் ரயிலில் ஏறப் படாது” என்று,
கதவை அடித்து சாத்தியவர்களுக்கு….
மனிதாபிமானம் பார்க்கும் ஆட்களைப் பார்க்க, சிரிப்பாக உள்ளது.

இவ்வளவு அவலப்படும் உக்ரேனியனுக்கு….
இன்னும் நிறத் துவேஷம் அடங்கவில்லை என்றால்…. 
புட்டின் முழு உக்ரேனையும் அடித்து பிடித்து….
ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். 💪
 
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நானும் தேடுகிறேன்.
கண்டுபிடிக்க முடியலை.

அண்ணா,
இதெல்லாம் இங்கே பதியப்பட்ட ஒரு சில வரிகள்...
இவை எனதும் இன்னும் பலரின்  கண்ணுகளுக்கும்  தன்னிச்சையுடன் புட்டின் தொடுத்த இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் / ஞாயம் கற்பிக்கும் (justifying)  கருத்துக்களாகவே படுகின்றன.
உங்களுக்கு எப்படி?

"நான் ரஷ்யனுடன் நிற்கிறேன், டான்பாஸ் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்தினார், அவர்கள் மே 2014 இல் அதை வென்றனர், ஆனால் மேற்கத்திய மற்றும் நேட்டோவால் ஆதரிக்கப்படும் உக்ரேனிய ஜனாதிபதி, அவை எதையும் கேட்க விரும்பவில்லை, எனவே ரஷ்ய மொழிபேசும் உக்ரேனிய மக்களின் விருப்பத்தை செயல்படுத்த ரஷ்யர்கள் அங்கு சென்று உள்ளனர்... "

"சோவியத்யூனியன் படை கட்டமைப்பு பற்றி நன்கு அறிந்து இருப்பதால் நேட்டோ வில் யுகரேனை இணையதே என்று புடினின கோரிக்கை சரியானது.
ரஷ்யா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறதா?"

யாரும் போரை விரும்பவில்லை, பூட்டின் உட்பட. ஆனால் அது அமெரிக்காவின் நலனுக்காக மற்றய‌ நாடுகள் மீது திணிக்கப்படுகிறது. அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் நிறுத்த வலுவான எதிரி அவசியம். அமெரிக்காவால்  திணிக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கு ஒழிக்கப்பட வேண்டும். இது ஐரோப்பாவில் நிகழ்வது வரவேற்க்கத் தக்கது. அதை பூட்டினால் தான் செய்ய முடியும்."

"உக்கிரேனியர்கள் ரஸ்ய டாங்கியை,போர்வீரர்களை மறித்து தூசணத்தால் திட்டி விரட்டும் அளவுக்கு ரஷ்யா போரில் மென்போக்கு கடைப்பிடிக்கிறது.. பொதுமக்கள் இழப்பை இயன்றளவு இல்லாமல் செய்கிறது ரஷ்யா.. தேர்ந்தெடுத்த ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது.."

"இதுவரை புடின் காட்டியது வெறும் "ரயல்"தான். 
சிங்கத்தை... நேட்டோவை வைத்து, தொடர்ந்து சீண்டினால்... 
கதையை, சுத்தமாக முடித்து விடுவார். 😜 😛 😂"

"வல்லரசு  ரஷ்யாவின், இருப்புக்கு…..
😋 வலசு உக்ரைனால், ஆபத்து வரும் என்று தெரிந்தால்….  🤔
புட்டின்… தனது நாட்டை காக்க,
உக்ரைனை….. அடித்து, நொருக்குவதில்… தப்பே இல்லை. 👍🏽 😁"

"போர் நடக்க முதலே அதை தடுக்க எவ்வளவோ வழி நோட்டோ நாடுகளுக்கும் , அமெரிக்காவுக்கும் இருந்தும் , வேடிக்கை பார்க்கும் அவர்களை விட புட்டின் எவ்வளவோ மேல்"

"புட்டினை... சர்வாதிகாரி என்று அழைப்பதை, மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
புட்டின்... தனது நாட்டை, காக்கும் தேச பக்தன். 👍"

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேடு கெட்ட…. உக்ரேனியர்கள்,
பல இடங்களில்… ஆசிய, ஆபிரிக்க மாணவர்களை தாக்கியும்,
பாலியல் துன்புறுத்தல்களும் மேற் கொண்டதாக
மாணவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

அந்த மாணவர்கள்… இவர்கள் நாட்டிற்கு இலவசமாக படிக்கப் போகவில்லை.
பெரும் தொகை பணம் கட்டி படிக்கப் போனவர்களை,
துன்புறுத்த…. இந்த அரை வேக்காடு உக்ரேனியனுக்கு என்ன கொழுப்பு இருக்கு. 😡
நல்லாய் ரஷ்யனிட்டை வாங்கிக் கட்டு. அப்பதான்… உனக்கு புத்தி வரும். 😁

  • கருத்துக்கள உறவுகள்

போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். சமதானமும் மகிழ்சியும் விரைவில் மலர வேண்டும்.
ரஷ்யாவின் மொஸ்கோ 90 களில் தமிழர்க‌ளின் ஆட்கடத்தும் ஒரு தளமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரைன்காரன் தன்னுடைய வாயாலை…. ரஷ்யனிட்டை, செமத்தியாக அடி வாங்கி…
வீடுகள் எல்லாம் நொருங்கி, இருக்க இடம் இல்லாமல்,
இந்த வின்ரர் குளிருக்குள்ளை  பல லட்சக் கணக்காக… அகதியாக ரயில் ஏறி
அயல் நாட்டுக்குப் போகும் போதும்…..
அவர்களின் நகரங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் படித்த….
ஆசிய, ஆபிரிக்க மாணவர்களை ரயிலில் ஏற்ற விடாது….
”பிரவுண் நிறத்தவர்களும், கறுப்பு நிறத்தவர்களும் ரயிலில் ஏறப் படாது” என்று,
கதவை அடித்து சாத்தியவர்களுக்கு….
மனிதாபிமானம் பார்க்கும் ஆட்களைப் பார்க்க, சிரிப்பாக உள்ளது.

இவ்வளவு அவலப்படும் உக்ரேனியனுக்கு….
இன்னும் நிறத் துவேஷம் அடங்கவில்லை என்றால்…. 
புட்டின் முழு உக்ரேனையும் அடித்து பிடித்து….
ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். 💪
 
ஒரு சில உக்ரேனிய அதிகாரிகள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் செய்த இந்த செயல் மிகவும் தவறு. கண்டிக்கப்படவேண்டியது.  
இவர்களின் செயல்  ஒட்டு மொத உக்ரேனிய மக்களை பிரதிபலிப்பதாக நான் நினைக்கவில்லை. 

சில வாரங்களுக்கு முன்னர் "கிளப் ஹவுசில்" ஒரு கூட்டம் இப்படி பேசிக்கொண்டது, அறுபதுகளில், எழுபதுகளில் யாழ்ப்பாணத்தவர்கள் பாமர சிங்கள, மலைநாட்டு வறிய இளம்பிள்ளைகளை தங்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு சொல்லெனா துயரங்களையும், மிகவும் மோசமான துவேசத்தையும் காட்டியதாக. அதானால் யாழ்ப்பாணத்தவர்கள் இன்றைக்கு வரைக்கும் அடையும் துன்பங்கள், படும் சீரழிவுகள் நியாயம் தான் என்று.  
ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை... இது ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்தவரின் பண்பு என்று நான் நினைக்கவில்லை. 
தமிழ் சிறி அண்ணா "கிளப் ஹவுஸ்" கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?  

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

பாலியல் துன்புறுத்தல்களும் மேற் கொண்டதாக
மாணவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

 "பாலியல் துன்புறுத்தல்" இது பற்றி பதிவுகள், செய்திகள் எங்கும் இருந்தால் தந்து உதவுங்கள்.
நான் கடந்த 15 நாட்களாக 505 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து உக்ரைன் ரஷியா பற்றி கருத்தாடல் செய்யும், (அரசியல்வாதிகள், அதிகாரிகள், ராணுவ ஆய்வாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மனித நேய செல்பாட்டாளர்கள், ஐ.நா பிரதிநிதிகள், பூகோள அரசியல் வல்லுநர்கள்) பங்குபற்றும் தளத்தில்,  அவர்களது கருத்துகளையும் கேட்டு உள்வாங்கி, என்னுடைய கருத்துகளையும் பகிர்ந்து வருகிறேன்.
நீங்கள் கூறிய "பாலியல் துன்புறுத்துதல்" இதுவரையிலும் பேசப்படாத ஒன்று. இது குறித்து ஒரு கவனத்தை ஏற்படுத்தலாம் அவ்வளவே. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Sasi_varnam said:

சில வாரங்களுக்கு முன்னர் "கிளப் ஹவுசில்" ஒரு கூட்டம் இப்படி பேசிக்கொண்டது, அறுபதுகளில், எழுபதுகளில் யாழ்ப்பாணத்தவர்கள் பாமர சிங்கள, மலைநாட்டு வறிய இளம்பிள்ளைகளை தங்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு சொல்லெனா துயரங்களையும், மிகவும் மோசமான துவேசத்தையும் காட்டியதாக. அதானால் யாழ்ப்பாணத்தவர்கள் இன்றைக்கு வரைக்கும் அடையும் துன்பங்கள், படும் சீரழிவுகள் நியாயம் தான் என்று.  
ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை... இது ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்தவரின் பண்பு என்று நான் நினைக்கவில்லை. 
தமிழ் சிறி அண்ணா "கிளப் ஹவுஸ்" கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?  

சசி வர்ணம்…. “கிளப் ஹவுஸ்” கூட்டத்துக்கு,
யாழ்ப்பாணத்தவர்கள் தான்…. இப்ப துன்பப் பட்டு சீரழிகின்றார்கள் என்று நினைப்பு ஆக்கும்.

அப்ப…. வன்னி, கிழக்குப் பிரதேசம், மலையக மக்கள் எல்லாரும்…
ஜாலியாக இருக்கிறார்கள் என்று கருதுகின்றார்களா? 

யாழ்ப்பாணத்தானுக்கு உள்ள கஸ்ரம் அவர்களுக்கும் உள்ளது என்பதனை,
நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
அப்போ… அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்பதனை….
”கிளப் ஹவுஸ்” ஆட்களிடம் கேட்டு சொல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல பதில் அண்ணா. 👍
இப்படி கருத்து பரப்புபவர்களும் இருக்கிறார்கள் பாருங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

 "பாலியல் துன்புறுத்தல்" இது பற்றி பதிவுகள், செய்திகள் எங்கும் இருந்தால் தந்து உதவுங்கள்.
நான் கடந்த 15 நாட்களாக 505 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து உக்ரைன் ரஷியா பற்றி கருத்தாடல் செய்யும், (அரசியல்வாதிகள், அதிகாரிகள், ராணுவ ஆய்வாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மனித நேய செல்பாட்டாளர்கள், ஐ.நா பிரதிநிதிகள், பூகோள அரசியல் வல்லுநர்கள்) பங்குபற்றும் தளத்தில்,  அவர்களது கருத்துகளையும் கேட்டு உள்வாங்கி, என்னுடைய கருத்துகளையும் பகிர்ந்து வருகிறேன்.
நீங்கள் கூறிய "பாலியல் துன்புறுத்துதல்" இதுவரையிலும் பேசப்படாத ஒன்று. இது குறித்து ஒரு கவனத்தை ஏற்படுத்தலாம் அவ்வளவே. 

யாழ். களத்தில்….. பாலியல் துன்புறுத்தல் பற்றி,
போர் ஆரம்பித்த சில நாட்களில்… அதனைப் பற்றிய செய்தி ஒன்று போட்டு இருந்தேன்.
அதனை… நிர்வாகம் நீக்கி விட்டார்கள்.
அத்துடன் நம் நாடுகளில்… இப்படியான துன்புறுத்தல்களில் பாதிக்கப் பட்டவர்கள்,
தமது எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று, வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் என்பதனை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன்.

நான் அறிந்த சம்பவங்கள்…. அவர்களுடன் தங்கி இருந்த சக மாணவர்களால் வெளியே தெரிய வந்தவை. இதனை பாதிக்கப் பட்ட மாணவி துணிந்து வெளிக் கொணர முற்பட்டாலும்,
அவரது….. பெற்றோர், உறவினர்களால் தடுக்கப்படும் என்பதனை புரிந்து இருப்பீர்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

எதோ மேற்குலக செய்திகளை மட்டுமே பார்த்து மூளை சலவை செய்யப்பட்டதாக நினைக்கும் சிலபேர் இங்கே இருக்குறீர்கள்... முடிந்தால் இலங்கையில் எழுதப்பட்ட இந்த கட்டுறையையும் வாசியுங்கள்.

For some of us who remember 1987, the “parippu drop” and subsequent signing of the Sri Lanka- India Accord . Ukraine recalls the vulnerability of small states situated near Big Powers and the difficulty of pursuing their dreams of independence.

https://dbsjeyaraj.com/dbsj/archives/76518#more-76518

கட்டுறை ஒரு சில வரிகள்...

Yet, lest we forget, Sri Lanka’s relations with Ukraine go back to the time of the armed conflict when the Sri Lankan Airforce had depended heavily on its four Ukraine built AN32 B aircraft to maintain the lifeline with the Palaly complex as described by Dr Gamini Goonetilleke in his book In the Line of Duty on recollections of treating war casualties and armed forces personnel injured in battles in the north. Initially the four purchased aircraft had even been flown by Ukrainian pilots. As I recall one Ukrainian pilot lost his life in a crash. Just recently the remaining planes were refurbished in Ukraine factories and returned to Sri Lanka .

  • கருத்துக்கள உறவுகள்

My 2¢

விரும்பியோ, விரும்பாமலோ எமது தாய்நாட்டை விட்டு வெளியேறி இன்னொரு நாட்டில் வாழும் நாம், எப்படி அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து வாழ்கிறோமோ, அதேபோல் அந்தந்த நாட்டு அரசுகளின் முடிபுகளை ஆதரித்தால் வரும் காலத்தில் நம்பகத்தன்மையுடைய, விரும்படும் இனமாக நாம் அடையாளப் படுத்தப்படுவோம்.

எமக்கு போதிக்கப்பட்ட சோசலிச / முதலாளித்துவ தத்துவம் எம்முடனேயே போகட்டும்.

இந்தநாட்டில் பிறந்து இந்தநாட்டின் குடிமக்களாக வாழும் எமது பிள்ளைகள்  இந்த நாட்டின் இராணுவத்தில் ( விரும்பியோ / கட்டாய பயிற்சி மூலமோ) சேர்ந்திருந்தால் அவர்களையும் வெறுக்கவா போகிறீர்கள்? அவர்களை கொல்பவர்களையா ஆதரிக்கப்போகிறீர்கள்?

நீங்கள் ரஸ்ஸியாவிலிருந்தால் அவர்களை ஆதரியுங்கள், மேற்கிலிருந்தால் மேற்கை ஆதரியுங்கள்.

When in Rome, do as the Romans do

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

 இதைத் தான் நானும் தேடுகிறேன்.
கண்டுபிடிக்க முடியலை

 சசிவர்ணம் அண்ணா  அது அவர் புரினின் மீது வைத்திருக்கும்  அளவற்ற பற்றின் காரணமக இங்கே எழுதிய நகைசுவை.
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

திரி போகும் திசையை பார்த்து விரக்தியில்

சர்வாதிகரி புரினின் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாயபடுத்த வேண்டுமே ☹️

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2022 at 00:57, ரஞ்சித் said:

உலகில் அடக்குமுறையாளர்களுக்கெதிராக, சர்வாதிகாரிகளுக்கெதிராக, போர்க்குற்றவாளிகளூக்கெதிராக அந்தந்த நாட்டின் மக்களின் எழுச்சியின் பின்னால் அமெரிக்க வல்லாதிக்கமே இருந்திருக்கிறதென்பது புலனாகிறது.

ஈராக், சிரியா, லிபியா முதற்கொண்டு பல நாடுகளில் அமெரிக்காவே அம்மக்களைத் தூண்டிவிட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? அல்லது தனது பாதுகாப்பிற்காக இந்த மக்களைஉசுப்பேற்றி விட்டு அரபு வசந்தம் உட்பட பல மக்கள் எழுச்சிகளை , அந்த மக்களின் விருப்பிற்கு எதிராகத் திணித்து தனது சுய லாபத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் செய்து வந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்லலாம்? இன்னொரு வகையில் சொல்லப்போனால் சிரியாவோ, லிபியாவோ, ஈராக்கோ தமது மக்களை ஒரு அடக்குமுறையின் கீழ் வைத்திருக்கவில்லை, சிறந்த ஜனநாயக நடைமுறைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தும், அமெரிக்கா தனது பாதுகாப்பிற்காகவே அந்த நாடுகளில் எழுச்சிகளை உருவாக்கி மக்களை உசுப்பி விட்டிருக்கிறது போல.

அந்தவகையிலேயே சோவியத் ஒன்றியம் என்கிற கட்டாய இணைப்பிற்குள் இருந்து வெளியேறியிருந்த பல தனியான இன மக்கள் கூட்டங்களைக் கொண்ட சுதந்திர நாடுகளில் ரஸ்ஸியாவுக்கெதிரான நிலைப்பாட்டினை உருவாக்கி ரஸ்ஸியாவின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி வருகிறது அமெரிக்கா. இன்னொரு வகையில் சொல்லப்போனால், உக்ரேனில் அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக, இல்லாத ஒரு பிரச்சினையினை உருவாக்கி, ரஸ்ஸியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தினை ஏற்படுத்தி விட்டிருக்கிறது அமெரிக்கா என்கிற முடிவிற்கு நாம் வந்திருக்கிறோம். 

முடிவாக, உலகில் இன்று நடக்கும் மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் அனைத்திலும் பின்னால் நின்று மக்களைத் தூண்டிவிடுவது அமெரிக்கா போலத் தெரிகிறது. அதாவது, மக்களின் விருப்பிற்கு எதிராக, இல்லாத ஒரு பிரச்சினையினை உருவாக்கி, அந்தந்த நாடுகளின் அல்லது அருகிலிருக்கும் சர்வதேச அல்லது பிராந்திய வல்லரசொன்றின் பாதுகாப்பினைக் கேள்விக்குறியாக்கி வருகிறது அமெரிக்கா. 

அப்படியானால், என்னிடம் ஒரு கேள்வியிருக்கிறது. ஈழத்தில் தமிழர்களுக்கென்று ஒரு பிரச்சினை இருந்ததா? நாம் எதற்காகப் போராடினோம்? இந்தியாவின் பாதுகாப்பிற்காக நாம் இல்லாத ஒரு பிரச்சினையினை முன்வைத்து இந்தியாவின் பின்புலத்துடன் இலங்கைக்கெதிராகப் போராடினோமா? அமெரிக்கா இன்று உக்ரேன் உட்பட பல நாடுகளில் செய்வது போல, இலங்கையில் இந்தியா தனது பாதுகாப்பிற்காக எம்மைப் பகடைகளாக்கி , இல்லாத ஒரு இனப்பிரச்சினையினை உருவாக்கி எம்மைக் காவு கொடுத்ததா?  இன்று உக்ரேனியர்கள் இல்லாத ஒரு பிரச்சினையை அமெரிக்காவின் தூண்டுதலால் செய்வதுபோல, நாமும் எந்தக் காரணமும் இன்றி இந்தியாவின் தூண்டுதலால் இலங்கைக்கெதிராகப் போராடினோமா? உக்ரேனின் இந்த தேவையற்ற எழுச்சியை ரஸ்ஸியா மிருகத்தனமாக அடக்குவது சரியென்றால், 2009 இல் இலங்கை அரசு எம்மை அழித்ததும் சரிதான் என்கிற நிலைக்கு நாம் வரத் தயாராக இருக்கிறோமா? 

ரஸ்ஸியாவின் பாதுகாப்பிற்கு பாதகம் ஏற்படுத்தும் வேலையினை உக்ரேன் அமெரிக்காவின் பின்புலத்துடன் செய்கிறது, ஆகவே அவர்களை அழிப்பது சரிதான் என்கிற முடிவிற்கு  நாம் வருவோமாக இருந்தால்,  இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிராக இந்தியாவின் தூண்டுதலால் நாம் "காரணம் ஏதுமின்றி" போராடியது முழுத்தவறு, ஆகவே சிங்களவர்கள் எம்மை அழித்தது இலங்கையின் பாதுகாப்பிற்கு அவசியமானது, ஆகவே அது தவறில்லை என்கிற முடிவிற்கும் நாம் வரவேண்டும். உக்ரேனில் நடப்பதும் ஈழத்தில் நடப்பதும் ஒன்றா என்கிற சிறுபிள்ளைத்தனமான கேள்வியெல்லாம் இங்கே எடுபடாது.

இனி போர்க்குற்றம் என்றோ, இனக்கொலை என்றோ, சுயநிர்ணய உரிமை என்றோ, பூர்வீகத் தாயகம் என்றோ புலிக்கொடி பிடித்துக்கொண்டு ஓடித்திரிவதை நாம் நிறுத்தவேண்டும். ஏனென்றால், அப்படியொரு பிரச்சினை எமக்கில்லை. இருந்தது எல்லாமே இந்தியாவின் பாதுகாப்பிற்காக, இலங்கைக்கெதிராக எம்மைப் பாவித்துத் திணிக்கப்பட்ட சதிதான். இன்று உக்ரேனியர்கள் தண்டிக்கப்படுவதுபோலவே ஈழத்தில் நாம் தண்டிக்கப்பட்டோம், இதில் தவறேதும் இல்லை. நாம் அழிக்கப்பட்டது சரிதான் என்கிற முடிவிற்கு நாம் இனி வரவேண்டும். 

அப்படியில்லை, எமக்கு உண்மையிலேயே சிங்கள பெளத்த அடக்குமுறையின் கீழ் பிரச்சினை இருந்தென்று நீங்கள் உண்மையாகவே கருதினால், உக்ரேன் மக்களின் வாழ்வுக்கான போராரஞ்சித் இந்த அளவுக்கு பந்தி பந்தியாய் எழுதவேண்டிய அவசியம் இல்லையே!! ஈராக், லிபியா, சிரியா, சோமாலியா இப்படி எத்தனையோ நாடுகளில் நடந்த போருக்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்தான் காரணம் என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியுமே!!!ட்டத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பின்புலத்தில் அமெரிக்கா இருந்தது, ஆப்பிரிக்கா இருந்தது என்கிற காரண காரியங்களைத் தேடுவதை விடுத்து. 

இல்லையேல், போலியான உங்களின் தேசிய முகமூடிகளை இனிமேல்  கழற்றி எறிந்துவிட்டு , இந்தியாவின் தூண்டுதலால் இலங்கையின் பாதுகாப்பிற்கு எதிராகச் செயற்பட்டதாலேயே அழிக்கப்பட்டோம் என்பதனையும் ஏற்றுக்கொள்ளுங்கள். 

ரஞ்சித் இந்த அளவுக்கு பந்தி பந்தியாய் எழுதவேண்டிய அவசியம் இல்லையே!! ஈராக், லிபியா, சிரியா, சோமாலியா இப்படி எத்தனையோ நாடுகளில் நடந்த போருக்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்தான் காரணம் என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியுமே!!!

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2022 at 09:13, கிருபன் said:

நன்றி சசி வர்ணம். 

இதற்கு மேல் ரதியின் கருத்துக்கு பதில் சொன்ன ஒன்றுமில்லை.

அதுசரி நாங்கள் சிங்களவனோடை அடிபடக்கை இந்திய எதிரிநாடுகளான சீனாவும் பாகிஸ்தானும்தானே எங்களுக்கு ஆயுதம் தந்தது!! முன்னவருக்கு நல்ல விளக்கம் பின்னவர் ஒத்தூதல் வேற!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சர்வாதிகரி புரினின் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாயபடுத்த வேண்டுமே ☹️

பிரபாவை உங்கள் கருத்துக்கு ஒத்தூத வைக்க முயற்சிக்கும் கோழைத்தனமான செயலை நிறுத்துங்கள். 

அவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றியே கரிசனை வெளியிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Sasi_varnam said:

குறைந்த பட்சம் நீங்கள் இணைக்கும் "எக்ஸ்டரா" தகவல்களையாவது முழுமையாக வாசித்து, அதற்கு எழுதப்பட்ட பிற கருத்துக்களை வாசித்து கிரகித்து, விடயத்தை உள்வாங்கி விட்டு; இங்கே கொண்டு வந்து வெட்டி ஓட்டுங்கள் ஓணாண்டியாரே. 

கிருபன்
October 29, 2006 இல் சொன்னது இன்று 2022 வில் கூட சாலப்பொருத்தமாய் தான் இருக்கு...
இணையத்தை பாவிக்கத் தெரிவதும், விசைப்பலகையில் உள்ள எழுத்துக்களை அடிக்கத் தெரிவதும், தேடல்பொறிகளைப் பாவிக்கத் தெரிவதும், (வாசிக்கமாலேயே) வெட்டி ஒட்டத் தெரிவதும் எம்மை அறிவாளிகள் என்று நாமே நம்பத் தேவையான தகுதிகள். 😀

ஜயா தாங்கள் மற்றும் ரஞ்சித் வகையறாக்கள் நீங்கள்.. மேற்கு ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் நிதானமாக இல்ல… மொதல்ல அமைதியா பதற்றப்படாமல் எல்லாப்பக்க செய்திகளையும் வாசியுங்க… அப்புறமா வந்து அமெரிக்காவுக்கு கூவுங்க...

நாங்கள் எல்லாம் வாசித்துதான் கொண்டுவந்து இணைக்கிறம்.. அதுவும் கிருபன் ஜீ கேட்டுக்கொண்டதால்தான் இணைச்சம்.. நான் வாசிக்காமல் இணைக்கிறத நீங்கள் பக்கத்த இருந்து பாத்து வெரிபை பண்ணித்தான எழுதிறியள்..

உன்னைத்திருத்து உலகம் தானா திருந்தும் எண்டு ஒரு பழமொழி..

தங்கட திறத்தில எங்களுக்கு ஒழுங்கா வாசிச்சு ஒட்டு எண்டு வகுப்புவேற…😂

ஊருக்கு உபதேசமாம் உனக்கு இல்லையடி…😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதிய கருத்தை வைத்து இப்படி 👇🏼நன்றாகவே செய்கிறார்கள்..

52-A0-AC33-48-FB-4634-BC5-C-7-D13-A101-B

ஆனால் நான் Master Yoda போல 👇🏼

7-B31-FBA1-7-D88-4-B5-B-B735-20-DE5-A976

நன்றி!      

உங்கள் எல்லோருக்கும் இனிய இரவு வணக்கம்😴

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

அண்ணா,
இதெல்லாம் இங்கே பதியப்பட்ட ஒரு சில வரிகள்...
இவை எனதும் இன்னும் பலரின்  கண்ணுகளுக்கும்  தன்னிச்சையுடன் புட்டின் தொடுத்த இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் / ஞாயம் கற்பிக்கும் (justifying)  கருத்துக்களாகவே படுகின்றன.
உங்களுக்கு எப்படி?

"நான் ரஷ்யனுடன் நிற்கிறேன், டான்பாஸ் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்தினார், அவர்கள் மே 2014 இல் அதை வென்றனர், ஆனால் மேற்கத்திய மற்றும் நேட்டோவால் ஆதரிக்கப்படும் உக்ரேனிய ஜனாதிபதி, அவை எதையும் கேட்க விரும்பவில்லை, எனவே ரஷ்ய மொழிபேசும் உக்ரேனிய மக்களின் விருப்பத்தை செயல்படுத்த ரஷ்யர்கள் அங்கு சென்று உள்ளனர்... "

"சோவியத்யூனியன் படை கட்டமைப்பு பற்றி நன்கு அறிந்து இருப்பதால் நேட்டோ வில் யுகரேனை இணையதே என்று புடினின கோரிக்கை சரியானது.
ரஷ்யா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறதா?"

யாரும் போரை விரும்பவில்லை, பூட்டின் உட்பட. ஆனால் அது அமெரிக்காவின் நலனுக்காக மற்றய‌ நாடுகள் மீது திணிக்கப்படுகிறது. அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் நிறுத்த வலுவான எதிரி அவசியம். அமெரிக்காவால்  திணிக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கு ஒழிக்கப்பட வேண்டும். இது ஐரோப்பாவில் நிகழ்வது வரவேற்க்கத் தக்கது. அதை பூட்டினால் தான் செய்ய முடியும்."

"உக்கிரேனியர்கள் ரஸ்ய டாங்கியை,போர்வீரர்களை மறித்து தூசணத்தால் திட்டி விரட்டும் அளவுக்கு ரஷ்யா போரில் மென்போக்கு கடைப்பிடிக்கிறது.. பொதுமக்கள் இழப்பை இயன்றளவு இல்லாமல் செய்கிறது ரஷ்யா.. தேர்ந்தெடுத்த ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது.."

"இதுவரை புடின் காட்டியது வெறும் "ரயல்"தான். 
சிங்கத்தை... நேட்டோவை வைத்து, தொடர்ந்து சீண்டினால்... 
கதையை, சுத்தமாக முடித்து விடுவார். 😜 😛 😂"

"வல்லரசு  ரஷ்யாவின், இருப்புக்கு…..
😋 வலசு உக்ரைனால், ஆபத்து வரும் என்று தெரிந்தால்….  🤔
புட்டின்… தனது நாட்டை காக்க,
உக்ரைனை….. அடித்து, நொருக்குவதில்… தப்பே இல்லை. 👍🏽 😁"

"போர் நடக்க முதலே அதை தடுக்க எவ்வளவோ வழி நோட்டோ நாடுகளுக்கும் , அமெரிக்காவுக்கும் இருந்தும் , வேடிக்கை பார்க்கும் அவர்களை விட புட்டின் எவ்வளவோ மேல்"

"புட்டினை... சர்வாதிகாரி என்று அழைப்பதை, மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
புட்டின்... தனது நாட்டை, காக்கும் தேச பக்தன். 👍"

ஆம் நான் வெளிப்படையாகவே சொல்லி வருகிறேன் உக்கிரேனில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு உரிமை வழங்கவும் மேற்குலக வல்லாதிக்கத்தின் ஏழைநாடுகளை புடுங்கிதின்னும் எண்ணத்தில் சம்மட்டியால் அடிக்கும் இந்த யுத்தத்தை நான் வெளிப்ப்டையாகவே ஆதரிக்கிறேன்.. இன்று இந்த யுத்தத்தை ரஷ்யா ஆரம்பித்திருக்காவிட்டால் நாளை ஆப்கான் ஈராக் லிபியா சிரியா என்ற வரிசையில் இன்னுமொரு நாட்டின் மீது இந்த வல்லாதிக்க சக்திகள் பொய்க்காரணம்கள் சொல்லிக்கொண்டு ஆரம்பித்துத்தான் இருப்பார்கள்… அதற்கு அவர்களின் ஊடகங்களால் கண் வாய் காது மூளை எண்டு முழுவதும் குருடான தங்கள்போன்றவர்கள் ஏதாவது ஒரு நியாயத்தோடு வருவீர்கள்..

ஆனால் இந்த போரை ஆதரித்தால் புடின் செய்வது எல்லாத்தையும் ஆதரிப்பவர்கள் என்பது தங்கள் எண்ணம் மட்டுமே.. எங்கள் எண்ணம் அதுவல்ல… நாம் இந்த கணத்தில் நிகழும் இந்தப்போர்,இந்தப்போரை நிகழ்த்த ரஷ்யாவுக்கு உள்ள நியாயமான காரணம் உக்ரைனில் உள்ள ரஷ்ய மக்கள் என இவற்றை சீர்துக்கி பார்த்து இந்த போரை மட்டுமே ஆதரிக்கிறோம்.. புடினை அல்ல.. புடினை ஆதரிக்க மேற்குலக ஊடகங்களால் மூளைச்சகவை செய்யப்பட்ட உங்களைப்போல் புடின் ஊடகங்களால் நாங்கள் மூளைச்சலவை செய்யப்படவில்லை.. அதற்கு புடினிடம் அவ்வளவு ஊடகபலமும் இல்லை.. இருந்த ஒண்டிரண்டு ஊடகங்களையும் உங்கட ஆட்கள் தடைபண்ணி விட்டார்கள்…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

அண்ணா,
இதெல்லாம் இங்கே பதியப்பட்ட ஒரு சில வரிகள்...
இவை எனதும் இன்னும் பலரின்  கண்ணுகளுக்கும்  தன்னிச்சையுடன் புட்டின் தொடுத்த இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் / ஞாயம் கற்பிக்கும் (justifying)  கருத்துக்களாகவே படுகின்றன.
உங்களுக்கு எப்படி?

"நான் ரஷ்யனுடன் நிற்கிறேன், டான்பாஸ் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்தினார், அவர்கள் மே 2014 இல் அதை வென்றனர், ஆனால் மேற்கத்திய மற்றும் நேட்டோவால் ஆதரிக்கப்படும் உக்ரேனிய ஜனாதிபதி, அவை எதையும் கேட்க விரும்பவில்லை, எனவே ரஷ்ய மொழிபேசும் உக்ரேனிய மக்களின் விருப்பத்தை செயல்படுத்த ரஷ்யர்கள் அங்கு சென்று உள்ளனர்... "

"சோவியத்யூனியன் படை கட்டமைப்பு பற்றி நன்கு அறிந்து இருப்பதால் நேட்டோ வில் யுகரேனை இணையதே என்று புடினின கோரிக்கை சரியானது.
ரஷ்யா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறதா?"

யாரும் போரை விரும்பவில்லை, பூட்டின் உட்பட. ஆனால் அது அமெரிக்காவின் நலனுக்காக மற்றய‌ நாடுகள் மீது திணிக்கப்படுகிறது. அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் நிறுத்த வலுவான எதிரி அவசியம். அமெரிக்காவால்  திணிக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கு ஒழிக்கப்பட வேண்டும். இது ஐரோப்பாவில் நிகழ்வது வரவேற்க்கத் தக்கது. அதை பூட்டினால் தான் செய்ய முடியும்."

"உக்கிரேனியர்கள் ரஸ்ய டாங்கியை,போர்வீரர்களை மறித்து தூசணத்தால் திட்டி விரட்டும் அளவுக்கு ரஷ்யா போரில் மென்போக்கு கடைப்பிடிக்கிறது.. பொதுமக்கள் இழப்பை இயன்றளவு இல்லாமல் செய்கிறது ரஷ்யா.. தேர்ந்தெடுத்த ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது.."

"இதுவரை புடின் காட்டியது வெறும் "ரயல்"தான். 
சிங்கத்தை... நேட்டோவை வைத்து, தொடர்ந்து சீண்டினால்... 
கதையை, சுத்தமாக முடித்து விடுவார். 😜 😛 😂"

"வல்லரசு  ரஷ்யாவின், இருப்புக்கு…..
😋 வலசு உக்ரைனால், ஆபத்து வரும் என்று தெரிந்தால்….  🤔
புட்டின்… தனது நாட்டை காக்க,
உக்ரைனை….. அடித்து, நொருக்குவதில்… தப்பே இல்லை. 👍🏽 😁"

"போர் நடக்க முதலே அதை தடுக்க எவ்வளவோ வழி நோட்டோ நாடுகளுக்கும் , அமெரிக்காவுக்கும் இருந்தும் , வேடிக்கை பார்க்கும் அவர்களை விட புட்டின் எவ்வளவோ மேல்"

"புட்டினை... சர்வாதிகாரி என்று அழைப்பதை, மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
புட்டின்... தனது நாட்டை, காக்கும் தேச பக்தன். 👍"

சசி,

இவர்கள் எவருமே ரஸ்ஸியாவையோ புட்டினையோ ஆதரிக்கவில்லையென்று திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். எமது நோக்கமும் அதுதானே? அதாவது அப்பாவிகளைக் கொல்லும் புட்டினை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பது நல்ல விடயம் தானே? 

ஆனால், நீங்கள் இணைத்துள்ள மேற்கோள்களை வைத்துப் பார்த்தால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேராவது ரஸ்ஸியாவின் மேலாதிக்கத்தை ஆதரிப்பதோடு, இந்த யுத்தத்தையும் ஆதரிக்கொண்டு, உக்ரேன் அழிக்கப்படுவதையும் மனதார விரும்புவது தெரிகிறது. இப்படியானவர்களால் இவர்களுக்குச் சார்பாக வாதிடும் கருத்தாளர்களின் கருத்துக்கள் அடிபட்டுப் போகின்றன, அதாவது "இங்கு எவரும் ரஸ்ஸியாவை ஆதரிக்கவில்லயே?" என்னும் கருத்துக்கள்.

மேற்குலகும் மக்களை முன்னர் கொன்றது, ஆகவே ரஸ்ஸியாவையும் கொல்ல விடுங்கள் என்பதுதான் இவர்களின் வாதம் போலத் தெரிகிறது.

விடுங்கள். இனிப் பேசிப்பயனில்லை.

எங்களால் முடிந்தவரை முயற்சித்துப் பார்த்தாயிற்று.  அவர்கள் உக்ரேன் அழிவதை விரும்புவதிலிருந்து எம்மால் மீட்டு வரமுடியாது என்பது தெளிவாகிறது.

ஆனால், எம்மைக் கொன்றபோது எக்காளமிட்டுச் சிரித்தவர்களும், மகிழ்ந்து கொண்டாடியவர்களுமென்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கும் இவர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லையென்பதே என்னால் இத்திரியின் மூலம் உணர்ந்துகொள்ள முடிந்தது.

இத்திரியினை ஆரம்பித்தது குறித்து வருந்துகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரஞ்சித் said:

எங்களால் முடிந்தவரை முயற்சித்துப் பார்த்தாயிற்று.  அவர்கள் உக்ரேன் அழிவதை விரும்புவதிலிருந்து எம்மால் மீட்டு வரமுடியாது என்பது தெளிவாகிறது.

 இங்கு யாருக்கும் சாதாரண அப்பாவி உக்ரைன் மக்கள் அழியவேண்டுமென்ற ஆசை இல்லை. அமெரிக்கா , நேட்டோ படைகளால் ரஷ்யாவை கண்காணிப்பதற்கும் பலவீனப்படுத்தவும் அமைக்கப்பட்ட ராணுவ இலக்குகள், தளபாடங்களை அவர்கள் அழிப்பதில் எந்தவித தவறும் இல்லையே. ரஷ்யாவும் சீனாவும் இல்லையென்றால் அமெரிக்காதான் உலக போலீஸ். அவர்கள் எதைச்சொன்னாலும் ஓத்தூத, பிரிட்டனும் மற்ற மேற்கு நாடுகள். கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஜயா தாங்கள் மற்றும் ரஞ்சித் வகையறாக்கள் நீங்கள்.. மேற்கு ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் நிதானமாக இல்ல… மொதல்ல அமைதியா பதற்றப்படாமல் எல்லாப்பக்க செய்திகளையும் வாசியுங்க… அப்புறமா வந்து அமெரிக்காவுக்கு கூவுங்க...

நாங்கள் எல்லாம் வாசித்துதான் கொண்டுவந்து இணைக்கிறம்.. அதுவும் கிருபன் ஜீ கேட்டுக்கொண்டதால்தான் இணைச்சம்.. நான் வாசிக்காமல் இணைக்கிறத நீங்கள் பக்கத்த இருந்து பாத்து வெரிபை பண்ணித்தான எழுதிறியள்..

உன்னைத்திருத்து உலகம் தானா திருந்தும் எண்டு ஒரு பழமொழி..

தங்கட திறத்தில எங்களுக்கு ஒழுங்கா வாசிச்சு ஒட்டு எண்டு வகுப்புவேற…😂

ஊருக்கு உபதேசமாம் உனக்கு இல்லையடி…😂

ஓணாண்டியாருக்கு  ...
நான் எழுதின வரிகள் எல்லாம் செவிடன் காதில ஊதின சங்குமாதிரி... 
இனி உந்த சங்குஊதுற வேலைக்கு நான் வரேல்ல. 
👇எதோ மேற்குலக செய்திகளை மட்டுமே பார்த்து மூளை சலவை செய்யப்பட்டதாக நினைக்கும் சிலபேர் இங்கே இருக்குறீர்கள்... முடிந்தால் இலங்கையில் எழுதப்பட்ட இந்த கட்டுறையையும் வாசியுங்கள்.

For some of us who remember 1987, the “parippu drop” and subsequent signing of the Sri Lanka- India Accord . Ukraine recalls the vulnerability of small states situated near Big Powers and the difficulty of pursuing their dreams of independence.

https://dbsjeyaraj.com/dbsj/archives/76518#more-76518

கட்டுறை ஒரு சில வரிகள்...

Yet, lest we forget, Sri Lanka’s relations with Ukraine go back to the time of the armed conflict when the Sri Lankan Airforce had depended heavily on its four Ukraine built AN32 B aircraft to maintain the lifeline with the Palaly complex as described by Dr Gamini Goonetilleke in his book In the Line of Duty on recollections of treating war casualties and armed forces personnel injured in battles in the north. Initially the four purchased aircraft had even been flown by Ukrainian pilots. As I recall one Ukrainian pilot lost his life in a crash. Just recently the remaining planes were refurbished in Ukraine factories and returned to Sri Lanka .

Edited by Sasi_varnam

எங்கள் மக்களில், அவர்கள் புலம்பெயர்ந்த மக்களானாலும் சரி, ஊரில் இருப்பவர்களானாலும் சரி, இந்தப் போரில் உக்ரைன் பக்கம் பெரும்பாலானோர் இல்லை. உக்ரைன் மக்களின் அழிவுகளில் சந்தோசப்படுகின்றவர்களாகவோ அல்லது அவர்கள் ரஷ்சியா வெல்ல வேண்டும் என்றோ விரும்புகின்றவர்களாகவோ இல்லை.

ஆனால் உக்ரை இந்தப் போரில் தோற்க வேண்டும் என்ற மன நிலையில் தான் எம் மக்களில் பெரும்பாலானோர்.

ஏன் இந்த கூட்டு மனநிலை என்று பார்க்கும் போது, அவர்களுக்கு (என்னைப் போலவே) இருக்கும் மேற்குலகின் மீதான கோபம், ஆத்திரம், தம்மை படுகுழியில் தள்ளி, தம் பலத்தின் குரல்வளையை நெருக்கி கொன்றவர்கள் என்ற ஆத்திரம். 

இலங்கை அரசுடன் இராணுவ சமபலத்துடன் இருந்த தம்மை /புலிகளை பேச்சுவார்த்தை என்ற பொறிக்குள் சிக்கவைத்து, இலங்கை அரசுக்கு பெருமளவு ஆயுதங்களையும் பயிற்சிகளையும்  கொடுத்து கொண்டு மறுவளமாக புலிகளின் அத்தனை ஆயுதக் கப்பல்களையும் வளங்களையும் அழித்து முற்றாக தம்மை இலங்கை அரசின் காலடிக்குள் சரணடைய வைத்தமை மீதான கூட்டு எதிர்ப்பு மனநிலை.

அப்படி என்றால் ரசியாவும் இலங்கை அரசுக்கு ஆயுதங்களைக் கொடுத்தது தானே? அவர்கள் மீதும் கோபம் ஆத்திரம் எல்லாம வர வேண்டியது தானே என்ற கேள்வி வருகின்றது அல்லவா?

அப்படி வராது. ஏனென்றால் தமிழ் மக்கள் ஒரு போதும் ரசியா தமக்கு உதவும் என்று நினைத்தது கிடையாது. எக்காலத்திலும் ரசியா தமிழ் மக்களின் நண்பராக தன்னை காட்டிக் கொண்டது கிடையாது. ஆனால் தமிழ் மக்கள் மேற்குலகை, முக்கியமாக ஐரோப்பாவை,பிரித்தானியாவை,  கனடாவை, பிரான்ஸை நம்பி இருந்தார்கள். இந்த நாடுகளும் தமிழ் மக்களின் நண்பர்களாக தம்மை காட்டிக் கொண்டன.தம் மீது நம்பிக்கை வைக்கும் படியாக நடந்து கொண்டன. 

ஆனால் தாம் மிகவும் நம்பிய இதே மேற்குலகின் அனுசரனையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போதுதான், ஐரோப்பிய யூனியன் புலிகளை தடை செய்து இலங்கை அரசின் பலத்தை அதிகரித்து பேச்சுவார்த்தை மேசையில் புலிகளை பலவீனமாக்கியது. நோர்வேயினூடாக எந்தளவுக்கு பலவீனமாக்க முடியுமோ அந்தளவுக்கு பலவீனமாக்கி ஈற்றில் அழித்தொழிக்க உதவி செய்தது.

தாம் நம்பியவர்களும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களில் கூட்டு பங்காளிகளில் ஒருவராக,  முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட இரத்ததின் கறையை தம் கரங்களில் கொண்டவர்களாக உள்ளார்கள் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து வைத்து இருக்கின்றார்கள்.

சரி, புலிகள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட பின்னராவது இவர்கள் தமக்கான தமிழ் மக்களுக்கான கெளரவமான நிரந்தர தீர்வுக்கு ஏதாவது ஒரு வழியில் தானும் உதவுகின்றார்களா என்று பார்த்தால், எம் அவல நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி எவ்வாறு சீனாவை இலங்கையின் செல்வாக்கில் இருந்து அகற்றுவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றார்களே தவிர தமிழ் மக்களுக்கான தீர்வில் அல்ல என்பதை அவர்கள் பார்த்து கொண்டு இருக்கின்றார்கள்.

இந்தப் போரில் எம் மக்களில் பெரும்பாலானோரின் கூட்டு மனநிலை உக்ரைனுக்கு எதிராக இருப்பதன் காரணம் தம்மை வஞ்சித்த மேற்குலகு இந்தப் போரில் உக்ரைனில் தோற்றுப் போக வேண்டும் என்ற மனநிலைதான். 

ரசியா வெற்றியடைந்தால் அதில் பெருமிதம் கொள்ள தமிழ் மக்களுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் உக்ரைன் தோற்றுப் போனால், மேற்குலகு தோற்றுவிட்டது என்று அகமகிழ நிறைய காரணங்கள் உள்ளன.

இந்த மகிழ்வுக்கு அவர்கள் நியாயம் கற்பிக்க பெரிய பெரிய கட்டுரைகளையோ, நீண்ட வரலாறுகளையோ கற்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த, அவர்கள் வாழும் சமகாலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளே போதும்.

இல்லை, வரலாறுகளையும் பெரிய பெரிய கட்டுரைகளையும் படித்து விட்டுத்தான் எவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். எவரை எதிர்க்க வேண்டும் என்று மக்கள் முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தால்
நீங்கள் ஒரு போதும் மக்களின் மனநிலையை புரியக் கூடியவர்களாக இருக்க மாட்டீர்கள்.

நன்றி வணக்கம்.

(அப்படி என்றால் ஏன் தமிழ் மக்கள் இன்னும் மேற்குலகில் வசிக்கின்றனர்... திரும்பி வரலாமே போன்ற மொக்குத் தனமான, அல்லது அமெரிக்கா லிபியாவிலும் ஈராக்கிலும் குண்டு வீசியதை நியாயப்படுத்துகின்ற முழு அமெரிக்க சார்பான, எந்தக் கேள்விகளுக்கும் என் பதில் ஒன்றும் இருக்காது)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.