Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

எந்தவொரு நாடும் தங்கள் இறையாண்மைக்கு , தங்கள் நாட்டுக்கு பிரச்சனை வரப்  போகுது என்றால் பார்த்திட்டு சும்மா இருக்காது ...அதுவும் அவர்கள் நாட்டில் இருந்து பிரிந்து போனதொரு நாடு வீம்புக்கு எதிரி நாடுகளோடு சேர்ந்து பிரச்சனையை உருவாக்க முயலும் போது புட்டினும்  சரி  அவரது அப்பாவாக இருந்தாலும் சரி தாக்க முயற்சிப்பார்கள்.
தமிழீழம் என்று ஒரு நாடு கிடைக்க கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்க காரணம் தமிழ்நாடு பிரிந்து விடும் என்பதால் தான் 
கிருபன் , புட்டின் மேல் உள்ள கோவத்தில் உக்ரேனுக்கு சப்போட் பண்ணுகிறார் .
போர் நடக்க முதலே அதை தடுக்க எவ்வளவோ வழி நோட்டோ நாடுகளுக்கும் , அமெரிக்காவுக்கும் இருந்தும் , வேடிக்கை பார்க்கும் அவர்களை விட புட்டின் எவ்வளவோ மேல்.
உக்ரேன் , தனது அயல் நாட்டுடன் நட்பை பேணி இருக்க வேண்டும் ...அவர்களுக்கு அவர்கள் விரும்பியதை செய்ய உரிமை இருக்கு...ஆனால் , அது தனது  அயல் நாடுகளுக்கு எந்த வித  பாதகங்களை ஏற்படுத்தும் என்பதை யோசித்து முடிவு எடுத்திருக்க வேண்டும் .
உக்ரேனிய மக்களை பிழையான வழிக்கு இட்டு சென்று அவர்களது மரணத்திற்கும் ,இழப்பிற்கும்  முதலில் உக்ரேனிய ஜனாதிபதி பொறுப்பு ஏற்க வேண்டும் ...அவரோடு சேர்ந்து அமெரிக்காவும் , நேச நாடுகளும் இந்த பழியை ஏற்க வேண்டும்.
அமேரிக்கா தூண்டி விட்டு போட்டு பேசாமல் இருந்து விடும் ...எரிபொருள் ,காஸ் விலையேற்றங்களால் பாதிக்க பட போவது ஐரோப்பிய ,பிரித்தானிய வாழ் மக்கள் தான்.
அமெரிக்காவுக்கு வாழ் பிடிக்காத ஒரு நல்ல தலைவர் எப்ப பிரித்தானியாவுக்கு கிடைப்பா என்று பாத்திட்டு இருக்கன்.😀
இந்த சண்டை உக்ரேனிய மக்கள் தங்களாவே வலிந்து தேடிக் கொண்டது....அதன் பலனை அவர்கள் அனுபவிக்கிறார்கள்   

சபாஷ் ரதி. உறைக்கிற மாதிரி அருமையாக சொன்னீர்கள். 👍🏽
உக்ரைன்… இதை தானாக தேடிக் கொண்ட வினை. 😎

  • Replies 477
  • Views 30.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, ரதி said:

நேட்டோ போன்று அமெரிக்கா இல்லாத ஒரு அமைப்பை ஐரோப்பா உருவாக்க  பல காலமாக முயற்சிக்கின்றது. உலகில் அனைவரையும் அரவணைத்து சரிசமமாக வாழ வேண்டும் என்பதில் ஒருசில ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

சபாஷ் ரதி. உறைக்கிற மாதிரி அருமையாக சொன்னீர்கள். 👍🏽
உக்ரைன்… இதை தானாக தேடிக் கொண்ட வினை. 😎

"தமிழீழம் என்று ஒரு நாடு கிடைக்க கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்க காரணம் தமிழ்நாடு பிரிந்து விடும் என்பதால் தான்"...

"போர் நடக்க முதலே அதை தடுக்க எவ்வளவோ வழி ... தனது அயல் நாட்டுடன் நட்பை பேணி இருக்க வேண்டும்"...

"அவர்களுக்கு அவர்கள் விரும்பியதை செய்ய உரிமை இருக்கு...ஆனால் , அது தனது  அயல் நாடுகளுக்கு எந்த வித  பாதகங்களை ஏற்படுத்தும் என்பதை யோசித்து முடிவு எடுத்திருக்க வேண்டும்"...

"மக்களை பிழையான வழிக்கு இட்டு சென்று அவர்களது மரணத்திற்கும் ,இழப்பிற்கும்  முதலில்  பொறுப்பு ஏற்க வேண்டும் "... 

👆  
இதையும் தான் ரதி உறைக்கிற மாதிரி அழுத்தம் திருத்தமா சொல்லி இருக்கிறா.... 
அது பலருக்கு  உறைக்கவில்லையே என்று மிகப் பெரிய அதிர்ச்சியில் நான் இருக்கிறேன். 😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Sasi_varnam said:

எமது அரசியலும் உக்ரேன் அரசியலும் ஒன்றா சார்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2022 at 15:25, கிருபன் said:

ஆட்சியை இராணுவப்புரட்சி மூலமாகவா கவிழ்த்தார்கள்?

இப்படித்தான் உக்கிரேன் ஆட்சி ஜனநாயக வழியில் மாறியது..

  • ரஷ்ய ஆதரவாளர் விக்டர் யானகோவிச் 2010 தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுகிறார். நேட்டோவில் சேரும் திட்டம் கிடப்பில் போடப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைய வேண்டும் எனும் குரல் இதற்குப் பின் வலுவடைகிது
  • 2013 நவம்பரில் உக்ரைன் மக்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தாவது ரத்துசெய்யப்பட்டது
  • போராட்டம் வெடித்தது. முதலில் சில ஆயிரம் பேர் கொண்டதாக ஆரம்பித்த இப்போராட்டம், சில நாட்களிலேயே ஒரு லட்சத்தைத் தாண்டியது.  இடதுசாரி, வலதுசாரி, உக்ரைன் தேசியவாதி என்று பல தரப்பினரும் பங்கேற்ற போராட்டமாக இது வளர்ந்ததால், ஒரு மாதக் காலத்தில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டது . உக்ரைன் அரசு இதை ஒடுக்கும் விதமாகக் கடுமையாகவே நடந்துகொண்டது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
  • பிறகு 2014 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றம் கூடியபோது அதிபர் விக்டர் யானகோவிச் பதவி இழப்பது உறுதியானது. சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகியிருந்தது. விக்டர் யானகோவிச் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார்
  • இது நடந்த ஓரிரு மாதங்களிலேயே உக்ரைன் ஆளுகைக்குள் இருந்த கிரைமியாவிலும் டோன்பாஸிலும் பிரிவினை கோரி வந்தவர்கள் அந்தப் பகுதிகளை சுயாட்சிப் பகுதியாக அறிவித்துக்கொண்டார்கள்; இதன் பின்னணியில் ரஷ்யா இருந்தது. 
  • ரஷ்ய ஆதரவு அதிபரான விக்டர் யானகோவிச் தப்பி ஓடிய பிறகு நடந்த தேர்தலில், பொர்ஷென்கோ அதிபரானார்; இவர் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்.
  • பொர்ஷென்கோவின் ஆட்சி முடிந்து 2019இல் நடந்த தேர்தலில், தற்போதையை அதிபரான ஜெலென்ஸ்கி பதவிக்கு வந்தார்

தமிழிலிலேயே உள்ளது.. நான் இன்னும் வாசிக்காததால் இணைக்கவில்லை.

உக்கிரேனின் வலதுசாரி இனவெறியர்களுக்கு ஆக 2 வீதம் ஆதரவே தேர்தல்களில் இருந்தது. அதை ஊதிப் பெருப்பிக்க சிலருக்கு தேவையாக இருக்கலாம். அதைவிட கூடிய ஆதரவு இனவெறியர்களுக்கு ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியாவில் இருக்கின்றது.

பிரித்தானியாவின் Sun tabloid   தோற்றது போங்கள்...😆

ஏன் கிருபன், இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்ணணி/NATO வின் பங்கு/ அங்கு நடைபெற்ற வன்முறையில் வெளிநாட்டு கூலிப்படையினரின் பங்கு பற்றி ஏதும் நீங்கள் வாசிப்பதில்லை போல....

🤣

அண்மையில் பெலாருஸ்சில் நடைபெற்ற சம்பவங்கள், கசக்ஸ்தானில் நடைபெற்ற சம்பவங்கள், முன்னர் ஜோர்ஜியா ஆர்மேனியா.. மற்றும்OASC நாடுகளில் EU, NATO மேற்கொண்டுள்ள ஆட்சிக் கவிழ்ப்பு ந்டவடிக்கைகள் எதற்கும் உக்ரேன் மீதான படையெடுப்பிற்கும் தொடர்பேயில்லை என்பது போன்ற உங்கள் (தீக்கோழி மண்ணிற்குள் தலையப் புதைக்கும்) கூற்றுக்கள் உங்கள் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன..

உங்கள் வாசிப்பின் மீதான ஆர்வம் போற்றுதலுக்குரியதாக பார்க்கப்பட்டாலும், மற்றவர்கள் எழுத வாசிக்கத் தெரியாத்வர்கள் என்று நீங்கள் நினைப்பது பரிதாபத்திற்குரியது..😏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அடக்குமுறையாளர்களுக்கெதிராக, சர்வாதிகாரிகளுக்கெதிராக, போர்க்குற்றவாளிகளூக்கெதிராக அந்தந்த நாட்டின் மக்களின் எழுச்சியின் பின்னால் அமெரிக்க வல்லாதிக்கமே இருந்திருக்கிறதென்பது புலனாகிறது.

ஈராக், சிரியா, லிபியா முதற்கொண்டு பல நாடுகளில் அமெரிக்காவே அம்மக்களைத் தூண்டிவிட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? அல்லது தனது பாதுகாப்பிற்காக இந்த மக்களைஉசுப்பேற்றி விட்டு அரபு வசந்தம் உட்பட பல மக்கள் எழுச்சிகளை , அந்த மக்களின் விருப்பிற்கு எதிராகத் திணித்து தனது சுய லாபத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் செய்து வந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்லலாம்? இன்னொரு வகையில் சொல்லப்போனால் சிரியாவோ, லிபியாவோ, ஈராக்கோ தமது மக்களை ஒரு அடக்குமுறையின் கீழ் வைத்திருக்கவில்லை, சிறந்த ஜனநாயக நடைமுறைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தும், அமெரிக்கா தனது பாதுகாப்பிற்காகவே அந்த நாடுகளில் எழுச்சிகளை உருவாக்கி மக்களை உசுப்பி விட்டிருக்கிறது போல.

அந்தவகையிலேயே சோவியத் ஒன்றியம் என்கிற கட்டாய இணைப்பிற்குள் இருந்து வெளியேறியிருந்த பல தனியான இன மக்கள் கூட்டங்களைக் கொண்ட சுதந்திர நாடுகளில் ரஸ்ஸியாவுக்கெதிரான நிலைப்பாட்டினை உருவாக்கி ரஸ்ஸியாவின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி வருகிறது அமெரிக்கா. இன்னொரு வகையில் சொல்லப்போனால், உக்ரேனில் அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக, இல்லாத ஒரு பிரச்சினையினை உருவாக்கி, ரஸ்ஸியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தினை ஏற்படுத்தி விட்டிருக்கிறது அமெரிக்கா என்கிற முடிவிற்கு நாம் வந்திருக்கிறோம். 

முடிவாக, உலகில் இன்று நடக்கும் மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் அனைத்திலும் பின்னால் நின்று மக்களைத் தூண்டிவிடுவது அமெரிக்கா போலத் தெரிகிறது. அதாவது, மக்களின் விருப்பிற்கு எதிராக, இல்லாத ஒரு பிரச்சினையினை உருவாக்கி, அந்தந்த நாடுகளின் அல்லது அருகிலிருக்கும் சர்வதேச அல்லது பிராந்திய வல்லரசொன்றின் பாதுகாப்பினைக் கேள்விக்குறியாக்கி வருகிறது அமெரிக்கா. 

அப்படியானால், என்னிடம் ஒரு கேள்வியிருக்கிறது. ஈழத்தில் தமிழர்களுக்கென்று ஒரு பிரச்சினை இருந்ததா? நாம் எதற்காகப் போராடினோம்? இந்தியாவின் பாதுகாப்பிற்காக நாம் இல்லாத ஒரு பிரச்சினையினை முன்வைத்து இந்தியாவின் பின்புலத்துடன் இலங்கைக்கெதிராகப் போராடினோமா? அமெரிக்கா இன்று உக்ரேன் உட்பட பல நாடுகளில் செய்வது போல, இலங்கையில் இந்தியா தனது பாதுகாப்பிற்காக எம்மைப் பகடைகளாக்கி , இல்லாத ஒரு இனப்பிரச்சினையினை உருவாக்கி எம்மைக் காவு கொடுத்ததா?  இன்று உக்ரேனியர்கள் இல்லாத ஒரு பிரச்சினையை அமெரிக்காவின் தூண்டுதலால் செய்வதுபோல, நாமும் எந்தக் காரணமும் இன்றி இந்தியாவின் தூண்டுதலால் இலங்கைக்கெதிராகப் போராடினோமா? உக்ரேனின் இந்த தேவையற்ற எழுச்சியை ரஸ்ஸியா மிருகத்தனமாக அடக்குவது சரியென்றால், 2009 இல் இலங்கை அரசு எம்மை அழித்ததும் சரிதான் என்கிற நிலைக்கு நாம் வரத் தயாராக இருக்கிறோமா? 

ரஸ்ஸியாவின் பாதுகாப்பிற்கு பாதகம் ஏற்படுத்தும் வேலையினை உக்ரேன் அமெரிக்காவின் பின்புலத்துடன் செய்கிறது, ஆகவே அவர்களை அழிப்பது சரிதான் என்கிற முடிவிற்கு  நாம் வருவோமாக இருந்தால்,  இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிராக இந்தியாவின் தூண்டுதலால் நாம் "காரணம் ஏதுமின்றி" போராடியது முழுத்தவறு, ஆகவே சிங்களவர்கள் எம்மை அழித்தது இலங்கையின் பாதுகாப்பிற்கு அவசியமானது, ஆகவே அது தவறில்லை என்கிற முடிவிற்கும் நாம் வரவேண்டும். உக்ரேனில் நடப்பதும் ஈழத்தில் நடப்பதும் ஒன்றா என்கிற சிறுபிள்ளைத்தனமான கேள்வியெல்லாம் இங்கே எடுபடாது.

இனி போர்க்குற்றம் என்றோ, இனக்கொலை என்றோ, சுயநிர்ணய உரிமை என்றோ, பூர்வீகத் தாயகம் என்றோ புலிக்கொடி பிடித்துக்கொண்டு ஓடித்திரிவதை நாம் நிறுத்தவேண்டும். ஏனென்றால், அப்படியொரு பிரச்சினை எமக்கில்லை. இருந்தது எல்லாமே இந்தியாவின் பாதுகாப்பிற்காக, இலங்கைக்கெதிராக எம்மைப் பாவித்துத் திணிக்கப்பட்ட சதிதான். இன்று உக்ரேனியர்கள் தண்டிக்கப்படுவதுபோலவே ஈழத்தில் நாம் தண்டிக்கப்பட்டோம், இதில் தவறேதும் இல்லை. நாம் அழிக்கப்பட்டது சரிதான் என்கிற முடிவிற்கு நாம் இனி வரவேண்டும். 

அப்படியில்லை, எமக்கு உண்மையிலேயே சிங்கள பெளத்த அடக்குமுறையின் கீழ் பிரச்சினை இருந்தென்று நீங்கள் உண்மையாகவே கருதினால், உக்ரேன் மக்களின் வாழ்வுக்கான போராட்டத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பின்புலத்தில் அமெரிக்கா இருந்தது, ஆப்பிரிக்கா இருந்தது என்கிற காரண காரியங்களைத் தேடுவதை விடுத்து. 

இல்லையேல், போலியான உங்களின் தேசிய முகமூடிகளை இனிமேல்  கழற்றி எறிந்துவிட்டு , இந்தியாவின் தூண்டுதலால் இலங்கையின் பாதுகாப்பிற்கு எதிராகச் செயற்பட்டதாலேயே அழிக்கப்பட்டோம் என்பதனையும் ஏற்றுக்கொள்ளுங்கள். 

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

அது பலருக்கு  உறைக்கவில்லையே என்று மிகப் பெரிய அதிர்ச்சியில் நான் இருக்கிறேன். 😢

அது புரியாது சசி. சைக்கிள் காப்பில் ஒரு அடி விழுந்திருக்கிறது. ஆனால், அதனை நின்று நிதானித்து புரிந்துகொள்ள நேரமில்லாமல், ரஸ்ஸியாவை நியாயப்படுத்தி, தமக்குச் சார்பாக, தமது வாதத்திற்கு வலுச் சேர்க்க யார் வருவார்கள் என்று தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.😄

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

அது புரியாது சசி. சைக்கிள் காப்பில் ஒரு அடி விழுந்திருக்கிறது. ஆனால், அதனை நின்று நிதானித்து புரிந்துகொள்ள நேரமில்லாமல் ரஸ்ஸியாவின் நிலை சரியே என்கிற கருத்துக்களில் மட்டுமே தொங்கிக்கொண்டு நிற்கிறோம். 

இங்கே ரசியாவின் நிலைப்பாடு சரி என்று எவரும் வாதாடியதாக தெரியவில்லை

நீங்கள் உங்கள் கருத்துக்கு  வலுச்சேர்க்கும் வகையில் அதை ஊதி பெரிதாக்கி வருவதாகவே புரிகிறது?

எனது நிலையில் நான் என்றுமே தெளிவாக இருக்கிறேன்.

இன்று உக்ரைன் 

நாளை ரசியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

நீங்கள் உங்களையே ஏமாற்றுகிறீர்கள் அண்ணை. மேலே உங்களுடன் சேர்ந்து நின்று வாதாடும் அனைவரினதும் கருத்துக்களை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

தனிப்பட்ட ரீதியில் நீங்கள் ரஸ்ஸியாவின் நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வரவேற்கத் தக்கதே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருமே இங்கே ரஷ்யாவிற்கு சார்பாக கதைக்கவில்லை என நினைக்கின்றேன். மேற்குலகின் இரட்டை வேடத்தையும் அதன்  போலிக்கண்ணீரையுமே இங்கு விமர்சிக்கின்றனர். இதை விளங்காதா ஓரிருவர் உக்ரேனுக்கு மட்டும் அனுதாப கண்ணீர் சொரிகின்றனர்.

அமெரிக்கா குழப்பிய நாடுகளான ஈராக்,லிபியா,சிரியா,யேமன் போன்ற நாடுகளில் இப்போது என்ன நடக்கின்றது. அமைதி பூங்கா நாடுகளா? ஆளாளுக்கு குண்டு வைத்தும் சிறு இன விரோதங்களுமே அங்கு நடக்கின்றது.

அந்தந்த மக்களுக்கேற்ற ஆட்சி முறை அவசியம் தேவை. இல்லையேல் அந்த மக்கள் செம்மற்றிக்கூட்டத்தை விட மோசமாக இருப்பர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நீங்கள் உங்கள் கருத்துக்கு  வலுச்சேர்க்கும் வகையில் அதை ஊதி பெரிதாக்கி வருவதாகவே புரிகிறது?

இதில் ஊதிப் பெரிதாக்க என்ன இருக்கிறது?

எனது நிலைப்பாடு சுலபமானது.

உக்ரேனியர்கள் தனியான மக்கள் கூட்டம். அவர்களுக்குத் தேவையானதை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அதனை நிராகரித்து அவர்கள் மேல் அழிவு யுத்தம் ஒன்றினை ரஸ்ஸியா ஏவி இருப்பது அநீதியானது. எமக்கு இழைக்கப்பட்ட அநீதியிலிருந்து நான் உக்ரேனின் இன்றைய நிலையினைப் பார்க்கிறேன். அதனால், அவர்களின் வலி எனக்குப் புரிகிறது.

அவ்வளவுதான். 

2 minutes ago, குமாரசாமி said:

அந்தந்த மக்களுக்கேற்ற ஆட்சி முறை அவசியம் தேவை. இல்லையேல் அந்த மக்கள் செம்மற்றிக்கூட்டத்தை விட மோசமாக இருப்பர்.

அப்படியானால், உக்ரேன் மக்கள் தம்மை தமது விருப்பத்தின் பேரில் ஆள, சுதந்திரமாக வாழ விடுங்கள், அவர்கள் மீதான ரஸ்ஸியாவின் அழிவு ஆக்கிரமிப்பு யுத்தத்தினை ஆதரிக்காதீர்கள்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் உங்களையே ஏமாற்றுகிறீர்கள் அண்ணை. மேலே உங்களுடன் சேர்ந்து நின்று வாதாடும் அனைவரினதும் கருத்துக்களை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

தனிப்பட்ட ரீதியில் நீங்கள் ரஸ்ஸியாவின் நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வரவேற்கத் தக்கதே. 

மற்றவர்களுக்கு விளங்காதது உங்களுக்கு மட்டும் வித்தியாசமாக/புதினமாக விளங்கிறதாக்கும்.
ஆரம்பத்திலிருந்தே எமது கருத்துக்கள் ரஷ்யா சார்பானதில்லை என்றே சொல்லி வருகின்றோம்.
எல்லாம் மேற்குலகின் இரட்டை வேடத்தையே சாடி வருகின்றோம்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறீர்களே? ஓணாண்டி, தமிழ் சிறி என்று உங்களின் சார்புக் கருத்தாளர்கள் எழுதுவதைப் படிக்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ரஞ்சித் said:

அப்படியானால், உக்ரேன் மக்கள் தம்மை தமது விருப்பத்தின் பேரில் சுதந்திரமாக வாழ விடுங்கள், அவர்கள் மீதான ரஸ்ஸியாவின் அழிவு ஆக்கிரமிப்பு யுத்தத்தினை ஆதரிக்காதீர்கள்.

எதற்கு மேற்குலகம் உக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்கின்றது? பேசி தீர்க்கலாமே?

ஆயுதம் கொடுப்பதன் அர்த்தம் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

எதற்கு மேற்குலகம் உக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்கின்றது? பேசி தீர்க்கலாமே?

ஆயுதம் கொடுப்பதன் அர்த்தம் என்ன?

நாங்கள் ஏன் பேசித் தீர்க்கவில்லை? எதற்காக ஆயுதம் எடுத்துப் போராடினோம்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, ரஞ்சித் said:

முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறீர்களே? ஓணாண்டி, தமிழ் சிறி என்று உங்களின் சார்புக் கருத்தாளர்கள் எழுதுவதைப் படிக்கிறீர்களா? 

எனக்கு மற்றவர்களின் கருத்து பற்றிய அவசியம் இல்லை.

Just now, ரஞ்சித் said:

நாங்கள் ஏன் பேசித் தீர்க்கவில்லை? எதற்காக ஆயுதம் எடுத்துப் போராடினோம்? 

எமது அரசியலும் உக்ரேன் அரசியலும் புரியாவிட்டால் தனி திரி திறந்து வாருங்கள் விவாதிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

எனக்கு மற்றவர்களின் கருத்து பற்றிய அவசியம் இல்லை.

ஓ, அப்படியா? அப்படியானால் எதற்கு "நாம்" என்று விழித்தீர்கள்? எதற்கு இக்கருத்துக்களுக்குப் பச்சை குத்துகிறீர்கள்? ஏற்றுக்கொள்வதால்த் தானே? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை உங்களுக்கு எழுதி புரியவைக்கும் அளவிற்கு எனக்கு நேரமுமில்லை

2 minutes ago, ரஞ்சித் said:

ஓ, அப்படியா? அப்படியானால் எதற்கு "நாம்" என்று விழித்தீர்கள்? எதற்கு இக்கருத்துக்களுக்குப் பச்சை குத்துகிறீர்கள்? ஏற்றுக்கொள்வதால்த் தானே? 

பச்சை குத்துவது எனக்கு பிடித்த சொல்லாடல் இருப்பதினால் மட்டுமே.....எல்லாம் எல்லா நேரத்திலும் வரவேற்கத்தக்கது அல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அதை உங்களுக்கு எழுதி புரியவைக்கும் அளவிற்கு எனக்கு நேரமுமில்லை

உங்களின் புரியப்படுத்தலினை நான் எதிர்பார்க்கவும் இல்லை, நீங்கள் எழுதிப் புரியவைக்கும் நிலையிலும் நான் இல்லையண்ணை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, ரஞ்சித் said:

உங்களின் புரியப்படுத்தலினை நான் எதிர்பார்க்கவும் இல்லை, நீங்கள் எழுதிப் புரியவைக்கும் நிலையிலும் நான் இல்லையண்ணை!

உங்களைப்போன்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. அப்படி அவசியம் வந்தாலும் இந்த திரியில் இல்லை.

4 minutes ago, ரஞ்சித் said:

உங்களின் புரியப்படுத்தலினை நான் எதிர்பார்க்கவும் இல்லை, நீங்கள் எழுதிப் புரியவைக்கும் நிலையிலும் நான் இல்லையண்ணை!

பிற்கென்ன மண்ணாங்கட்டிக்கு இந்த திரியில் என்னுடன் வாதாடினீர்கள்?

மூன்றாம் உலகநாடுகளின் மீதான மேற்குலக அட்டூழியத்திற்கு பாடம் படிக்க உக்ரேன் நல்லதொரு தளம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

பிற்கென்ன மண்ணாங்கட்டிக்கு இந்த திரியில் என்னுடன் வாதாடினீர்கள்?

நீங்கள் வாதாடிய அதே மண்ணாங்கட்டிக் காரணத்திற்காகத்தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/3/2022 at 08:14, ரஞ்சித் said:

உங்களுக்கு பதில் எழுதி எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை.

நன்றி

டொட்.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனம் மேற்குலகம்!  உங்களை நம்பியது எங்கள் தவறு அதை துர்பிரயோகம் செய்தது உங்கள் தவறு.

இப்படிக்கு
புட்டின் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இதில் ஊதிப் பெரிதாக்க என்ன இருக்கிறது?

எனது நிலைப்பாடு சுலபமானது.

1) உக்ரேனியர்கள் தனியான மக்கள் கூட்டம்.
2) அவர்களுக்குத் தேவையானதை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

3) அதனை நிராகரித்து அவர்கள் மேல் அழிவு யுத்தம் ஒன்றினை ரஸ்ஸியா ஏவி இருப்பது அநீதியானது.

எமக்கு இழைக்கப்பட்ட அநீதியிலிருந்து நான் உக்ரேனின் இன்றைய நிலையினைப் பார்க்கிறேன். அதனால்,

4) அவர்களின் வலி எனக்குப் புரிகிறது.

அவ்வளவுதான். 

5) அப்படியானால், உக்ரேன் மக்கள் தம்மை தமது விருப்பத்தின் பேரில் ஆள, சுதந்திரமாக வாழ விடுங்கள், அவர்கள் மீதான ரஸ்ஸியாவின் அழிவு ஆக்கிரமிப்பு யுத்தத்தினை ஆதரிக்காதீர்கள்.

1) எப்படி ?

2) சரி

3) என்னுடைய (இரஸ்யாவின்) அழிவிலிருந்துதான்  சுதந்திரம் ஆரம்பமாகிறதா ? 

4) யுத்தத்தினை அனுபவித்ததன் காரணமாக 

5) யார் ஆதரித்தது ? யுத்தம் என்பதை ஒருவருமே ஆதரிக்கப்போவதில்லை. 

எனக்குள்ள கேள்வியெல்லாம் இதுதான்..

இதுவரை மேற்குநாடுகள் செய்த செய்கின்ற செய்யப்போகின்ற அழிவுகளுக்கு குத்தி முறியும் நீங்கள் எப்படி பதில் சொல்லப்போகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

275233738_5124283017665105_2718149963647

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.