Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யா – யுக்ரேன் மோதல்: எரிந்துபோன பீரங்கிகளின் மிச்சமும் பிணங்களும் - யுக்ரேன் நகர வீதிகளில் அழிவின் சாட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா – யுக்ரேன் மோதல்: எரிந்துபோன பீரங்கிகளின் மிச்சமும் பிணங்களும் - யுக்ரேன் நகர வீதிகளில் அழிவின் சாட்சிகள்

  • ஜெர்மி போவன்
  • பிபிசி செய்திகள், புச்சா
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 
யுக்ரேன் சந்திக்கும் அழிவுகளுக்குச் சான்றாக விளங்கும் புச்சா நகரம்

பட மூலாதாரம்,BBC/LEE DURANT

படக்குறிப்பு,

ரஷ்ய படையின் வாகனங்கள் சிதைந்து கிடக்கும் புச்சா நகரத்தின் புறநகர் தெரு

ரஷ்யா கீயவை சுற்றி வளைத்து, அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அரசைக் கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சியில் உருவான முதல் கல்லறைகளில் ஒன்றாக, புச்சாவின் புறநகர் பகுதியிலுள்ள ஒரு மரங்களடர்ந்த சாலை மாறியது.

பிப்ரவரி 24-ஆம் தேதியன்று ரஷ்ய படைகள் யுக்ரேனுக்குள் நுழைந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, யுக்ரேன் படைகள் புச்சா நகரத்தின் வழியாக கீயவ் நகருக்குள் நுழைய முயன்ற ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களின் நீண்ட வரிசையை அழித்தனர்.

பல யுக்ரேனிய படைகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில், ரஷ்ய படைகளின் முன்னேற்றம் தடுக்கப்பட்டு, அந்த வாகனத் தொடர்வரிசை அழிக்கப்பட்டது.

ரஷ்ய அதிபர் மாளிகையின் முடிவுகளின் ஒரு பகுதியாக, கிழக்கு யுக்ரேனில் நடத்தப்படும் போரில் கவனம் செலுத்தத் தொடங்கியதால், வெள்ளிக்கிழமை அன்று கடைசி ரஷ்ய வீரர்களும் புச்சாவிலிருந்து வெளியேறினார்கள் இதனால் பிபிசி குழுவால் புச்சாவுக்குள் செல்ல முடிந்தது.

யுக்ரேன் படைகளின் கடுமையான எதிர்ப்பு

ரஷ்யா, மத்திய யுக்ரேனில் அதன் போர் இலக்குகளை அடைந்துவிட்டதாகவும் அந்த இலக்குகளில் ஒன்றாக அவர்கள் கீயவை கைப்பற்றுவதை ஒருபோதும் சேர்க்கவில்லை என்றும் ஆதாரமோ நம்பகத்தன்மையோ இல்லாத வகையில், கூறியது.

உண்மை என்னவெனில், எதிர்பாராத விதமாக கடுமையான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட யுக்ரேனிய எதிர்ப்பு, ரஷ்ய படைகளை தலைநகருக்குள் நுழைய விடவில்லை. மேலும், அந்த புறநகர் தெருவில் வாகனத் தொடர்வரிசை அழிக்கப்பட்ட இடத்தில் துருப்பிடித்துக் கிடக்கும் போர் வாகனங்கள் அதற்கான சான்றுகளில் ஒன்றாக விளங்குகின்றன.

போர் தொடங்கி இரண்டு, மூன்று வாரங்கள் கடந்தபோது ரஷ்ய படைகள் வேகத்தை இழந்தன. புச்சாவின் தெருவில் அதற்கான காரணத்தை நம்மால் பார்க்க முடியும்.

ரஷ்யாவின் வான்வழிப் படைகளின் உயரடுக்கு படைகள் விமானம் சுமந்து செல்லக்கூடிய வகையில் இருக்கும் இலகுரக கவச வாகனங்களில் நகரத்திற்குள் நுழைந்தன.

படையெடுப்பின் முதல் நாளில் ஹெலிகாப்டர் மூலம் தரையிறக்கப்பட்ட ரஷ்ய பாராசூட் படைகளால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட, சில மைல்கள் தொலைவிலுள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்திலிருந்து அவர்கள் வந்தனர். அப்போதும்கூட, யுக்ரேன் படைகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேர்ந்தது.

கீயவ் செல்லும் வழியில் புச்சா வழியாக வாகனங்களின் அந்த நீண்ட வரிசை நகர்ந்தபோது, அவர்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர்.

யுக்ரேன் சந்திக்கும் அழிவுகளுக்குச் சான்றாக விளங்கும் புச்சா நகரம்

பட மூலாதாரம்,BBC/KATHY LONG

படக்குறிப்பு,

உள்ளூர் மக்கள், ரொட்டி சாப்பிட்டு நீண்ட நாட்களாகிவிட்டதாகக் கூறினார்கள்

அந்தச் சாலை குறுகியதாகவும் நேரானதாகவும் இருந்ததால், யுக்ரேன் படைகள் பதுங்கியிருந்து தாக்குவதற்குச் சரியான இடமாக அமைந்தது. துருக்கியில் இருந்து வாங்கப்பட்ட பேரேக்டர் ஆளில்லா தாக்குதல் விமானங்கள் மூலமாக யுக்ரேன் படையினர், வாகனத் தொடர் வரிசை மீது தாக்குதல் நடத்தியதாக சாட்சிகள் தெரிவித்தன. யுக்ரேனிய பிராந்திய பாதுகாப்பு தன்னார்வலர்களும் அந்தப் பகுதியில் இருந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர்.

தப்பியோடிய ரஷ்ய படையின் இளைஞர்கள்

யுக்ரேன் படையினர், ரஷ்ய படைகளின் முன்னணி வாகனங்களையும் அதற்குப் பின்னால் வந்த வாகனங்களையும் தாக்கியதோடு, மற்றவர்களைச் சிறையில் அடைத்தார்கள். 30 மிமீ பீரங்கி குண்டுகளின் பெல்டுகள் புற்களின் மீது கிடக்கின்றன. மேலும் பல ஆபத்தான மற்றும் சேதமடைந்த கைவிடப்பட்ட ஆயுதங்களின் துண்டுகளும் கிடக்கின்றன.

ரஷ்ய படைகளில் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இளைஞர்கள், அந்தச் சண்டையில் பிடிபட்டபோது யுக்ரேனிய படைகளிடம் தங்களை ஒப்படைக்க வேண்டாமென்று கெஞ்சியதாகவும் பிறகு அங்கிருந்து அவர்கள் ஓடிவிட்டதாகவும் உள்ளூர் மக்கள் கூறினார்கள். 'அங்கிள் ஹ்ரிஷா' என்று தன்னை அழைத்துக் கொள்ளும் 70 வயதான ஒருவர், "நான் அவர்களுக்காக கவலைப்பட்டேன். 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களாக அவர்கள் இருந்தனர். அடுத்து வரவுள்ள ஒரு முழு வாழ்க்கையும் அவர்களுக்கு மிச்சம் இருந்தது," என்கிறார்.

புச்சாவில் இருந்து வெளியேறத் தயாரான ரஷ்ய படைகள் மீது அவ்வாறு யாரும் பரிதாபம் காட்டவில்லை என்பதைப் போல் தெரிகிறது. யுக்ரேனிய படைகள் நகரத்திற்குள் நுழைந்தபோது, குறைந்தபட்சம் 20 பேர் தெருவில் உயிரிழந்து கிடந்தனர். அவர்களில் சிலருடைய கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. 280 பேரை பெரிய புதைகுழிகளில் புதைத்ததாக அந்த நகரத்தின் மேயர் கூறினார்.

யுக்ரேன் சந்திக்கும் அழிவுகளுக்குச் சான்றாக விளங்கும் புச்சா நகரம்

பட மூலாதாரம்,BBC/KATHY LONG

படக்குறிப்பு,

ரஷ்ய படைகள், காங்க்ரீட் லின்டெல்கள் மற்றும் கதவுக்கான தூண்களையும் அகற்றியதன் மூலம் கதவுகளைத் திறந்தனர்

உடைந்து நொறுங்கிய யுக்ரேனின் கனவு விமானம்

அங்கேயே தங்கியிருந்த சில பொதுமக்கள், எரிவாயு, மின்சாரம், தண்ணீர் விநியோகம் அனைத்தும் தடைபட்டதால், அவர்களின் க்ரூஷ்சேவ் காலத்து குடியிருப்புகளுக்கு வெளியே விறகு வைத்து தீ மூட்டி சமைத்தார்கள். அந்த மக்கள் ரஷ்ய படைகளைத் தவிர்க்க முயன்றதாகக் கூறினார்கள்.

தன்னார்வலர்கள் மேற்கு யுக்ரேனிலுள்ள லுவீவ் மற்றும் புவியியல் ரீதியாக போரில் இருந்து வெகு தொலைவிலுள்ள நாடுகளில் இருந்து பொருட்களைக் கொண்டு வருகிறார்கள்.

"38 நாட்களில் நாங்கள் சாப்பிட்ட முதல் ரொட்டி இது," என்று மரியா என்ற பெண், ரொட்டிகள் இருந்த ஒரு நெகிழிப் பையைப் பார்த்தபடி கூறினார். அவருடைய மகள் லாரிசா சோவியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்தை எனக்குச் சுற்றிக் காட்டினார்.

பாதுகாப்பான பகுதிகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் பலர் பாதுகாப்புக் கதவுகளைப் பூட்டியிருந்தனர். ஆனால், ரஷ்ய படைகள், காங்க்ரீட் லின்டெல்கள் மற்றும் கதவுக்கான தூண்களையும் அகற்றியதன் மூலம் அந்தக் கதவுகளைத் திறந்தனர்.

யுக்ரேன் சந்திக்கும் அழிவுகளுக்குச் சான்றாக விளங்கும் புச்சா நகரம்

பட மூலாதாரம்,BBC/JEREMY BOWEN

படக்குறிப்பு,

யுக்ரேனிய மொழியில் கனவு(மிரியா) எனப் பெயரிடப்பட்ட விமானம்

சில மைல்கள் தொலைவில், இந்தப் பேரழிவின் தொடர்ச்சி ஹோஸ்டோமல் விமான நிலையம் வரை நீளுகிறது. ரஷ்ய வான்வழி படைகள் அதை கீயவுக்குள் நுழைவதற்கான தளமாகப் பயன்படுத்த முயன்றன.

உலகின் மிகப்பெரிய போக்குவரத்து விமானம் தொடக்கத்திலேயே அழிக்கப்பட்டது. அதற்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான மேற்கூரை துப்பாக்கிக் குண்டுகள் தாக்கியதன் அடையாளமாக துளைகளால் நிறைந்திருந்தது. யுக்ரேனிய மொழியில் கனவு(மிரியா) எனப் பெயரிடப்பட்ட அந்த விமானம், உடைந்த பின்புறம், பெரும்பகுதி உறுகிய நிலையில், உள்ளன.

உலகமெங்கும், பெரிய திட்டங்களை உருவாக்கும் யுக்ரேனின் திறனுக்கான அடையாளமாக, பெரியளவிலான தேசிய பெருமையோடு இந்த விமானத்தில் முதலீடு செய்யப்பட்டது. அந்த விமானம் தற்போது, யுக்ரேனுக்குள் என்ன நடக்கிறது என்பதற்கான உவமையாக விளங்குகிறது.

https://www.bbc.com/tamil/global-60983303

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்சியப் படைகள் இங்கிருந்து விலகிச் சென்ற பின்னரும்.. கிட்டத்தட்ட 5 நாட்கள் கழிச்சுத்தான் சும்மா கிடந்த நிலங்களை உக்ரைன் படைகள் சண்டை இன்றி சென்று பார்வையிட்டுள்ளன.

ஆனால் பிபிசி போன்ற பக்கச்சார்பு ஊடகங்கள் இதே ஏதோ உக்ரைன் படைகள் சண்டை போட்டு மீட்ட இடங்கள் போலவும்.. இதெல்லாம் நேட்டோ நாடுகளின் ஆயுத உதவியாலும்.. உக்ரைன் படைகளின் வீரத்தாலும் நிகழ்ந்தது போலக் காட்டுகின்றன.

உண்மை அதுவல்ல. துருக்கியில் நடந்த பேச்சுக்களின் பின் ரஷ்சியா பகிரங்கமாகவே அறிவித்து விட்டுத்தான் தலைநகரையும் அதன் அண்டிய பிரதேசங்களையும் விட்டுப் படை விலகல் செய்தது. ஆனால்.. மேற்கத்தைய ஊடகங்களும்.. உக்ரைன் சனாதிபதியும்.. இதனை தமது வீரமாகக் காட்டிக்கொண்டு.. இருப்பதோடு.. உக்ரைன் சனாதிபதி மேற்குலகின் நலனுக்காக.. தயவுக்காக இன்னும் சொந்த மக்களையும் நாட்டின் சொத்துக்களையும் அழிப்பதையே குறியாகக் கொண்டியங்குவது வெளிப்படையாதக் தெரிகிறது.

இதனால் தான் ஹங்கேரியின் தலைவர் இந்த உக்ரைன் சனாதிபதியை வகையாக வசை பாடியுள்ளார்.

ஈழப்போரின் போது.. தடயங்கள் அழித்து.. போர் நடந்த அடையாளமே தெரியாத வகைக்கு செய்ய முற்பட்ட போதும்.. காட்டப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில்.. இனப்படுகொலையை உச்சரிக்கக் கூடத் தயங்கிய பிபிசி இங்கு நடந்த காட்சிகளின் அடிப்படையில் எந்த விசாரணையும் இன்றி இது இனப்படுகொலை தான் என்ற உக்ரைன் அதிபரின் வாசகத்தை அப்படியே மீண்டும் மீண்டும் ஒப்பித்துக் கொண்டிருக்கிறது. இது பிபிசியின் மேற்குலகின் கடைந்தெடுத்த இரட்டை வேடத்திற்கு நல்ல சாட்சியாகும். 

இந்த ரஷ்சிய - உக்ரைன் யுத்தம்.. மேற்குலகின் இரட்டை வேடத்தை அப்படியே உரித்துக்காட்டி உள்ளதைத் தவிர.. அதன் தூண்டுதல் மூலமான பேரழிவுகள் எப்படி அமையும் என்பதையும் இனங்காட்டி நிற்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யுத்தத்தின் மூலம் யார் வென்றார்களோ யார் தோற்றார்களோ தெரியா ஆனால் மேற்குலகின் போலி ஜனநாயக இரட்டைவேடம் தோலிருந்து தொங்குகிறது.. அம்மணமாகி நிற்கிறது மேற்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடகமாடும் உக்ரேனும் மேற்குலகும்.

Erschossene Menschen liegen mit gefesselten Händen auf der Straße in Butscha

Der Mann kam vermutlich gerade vom Einkaufen, als er erschossen wurde. Kartoffeln sind aus seiner Tüte auf die Straße gerollt

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த யுத்தத்தின் மூலம் யார் வென்றார்களோ யார் தோற்றார்களோ தெரியா ஆனால் மேற்குலகின் போலி ஜனநாயக இரட்டைவேடம் தோலிருந்து தொங்குகிறது.. அம்மணமாகி நிற்கிறது மேற்கு..

ரஷ்யாதானே வெல்லுது ஓணாண்டியார்.. ஏன் உங்களுக்கு டவுட்டு?😏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ரஷ்யாதானே வெல்லுது

கீவ்விலும், புச்சாவிலும் அழிவுகள் சிதைவுகள் படுகொலைகளை பார்க்கும் போது ரஷ்யாவின் வெற்றி தெரிகிறதே. மேற்குலக நாடுகளில் உள்ள  ஈழதமிழர்களுக்கும் வெற்றி தான் 💪

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கீவ்விலும், புச்சாவிலும் அழிவுகள் சிதைவுகள் படுகொலைகளை பார்க்கும் போது ரஷ்யாவின் வெற்றி தெரிகிறதே. மேற்குலக நாடுகளில் உள்ள  ஈழதமிழர்களுக்கும் வெற்றி தான் 💪

Westன் கயிற்றை எம்போன்றோர் விழுங்கவில்லை என்று விளங்க நினைத்துக்கொண்டேயிருப்பவர்களுக்கு மூக்கின்மேல் கோபம் போல. 

இதோ  உங்களுக்கு ஒரு உதாரணம்.

நாசிசத்தின் ஒரு வடிவம் இங்கே. இந்தக் காணொளிகளைப் பார்க்கும்போது  வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தாலும்  அதற்கு நான் பொறுப்பல்ல. 

இதுபோன்ற காணொளிகளை இங்கே இணைப்பதைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். இந்தக் காணொளி (எ)உங்களைப்போன்ற கண்ணிருந்தும் குருடர்களாகவும், காதிருந்தும் செவிடர்களாக வாழும் மனிதருக்காக தற்போது  இணைத்திருக்கிறேன். (இதனைக் copy and paste செய்து பார்க்கவும் ) எச்சரிக்கை. இந்தக் காணொளிகள் மிகக் குரூரமானவை.

south front.org/execution-of-Russian-pows-by-adult-and-Georgian-fighters-on-march-30-video-21

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நாடகமாடும் உக்ரேனும் மேற்குலகும்.

Erschossene Menschen liegen mit gefesselten Händen auf der Straße in Butscha

Der Mann kam vermutlich gerade vom Einkaufen, als er erschossen wurde. Kartoffeln sind aus seiner Tüte auf die Straße gerollt

இது ரஷ்யாவில் எடுத்தமாதிரி இருக்கு. Sign board ஐயும் மாத்தி ஆட்களையும் படுக்க வைத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இது ரஷ்யாவில் எடுத்தமாதிரி இருக்கு. Sign board ஐயும் மாத்தி ஆட்களையும் படுக்க வைத்திருக்கிறார்கள்.

யாயா.. வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்..

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

ரஷ்யாதானே வெல்லுது ஓணாண்டியார்.. ஏன் உங்களுக்கு டவுட்டு?😏

போரில் ஒரு பக்க வெல்வதும், மற்றைய பக்கம் தோற்பதும் இயற்கை. நாங்கள் தோற்கவில்லையா? நீதி எம்பக்கம் இருந்தும் தோற்றோமே? இவ்வுலகு நீதியின்பாலும், தர்மத்தின்பாலும் இயங்குகிறதென்று நான் நினைத்தால் அது யார் தவறு?

ரஸ்ஸியா வெல்வதாலோ, அல்லது உக்ரேன் தோற்பதாலோ நீதியும், தர்மமும் நிலைநாட்டப்பட்டு விட்டது என்று அர்த்தமா? இல்லையே? பலமுள்ளவன் வெல்கிறான், பலமில்லாதவன் தன் பக்கம் நியாயமிருந்தும் தோற்கிறான், எம்மைப்போல, அவ்வளவுதான்.

ஆனால் என்ன? இங்கே தெருக்களில் நாய்களைப்போல இறந்துகிடக்கும் மனிதர்கள் (அவர்கள் யாரா இருந்தாலும்) எனக்கு நினைவில் வருவது இந்திய ராணுவமும் இலங்கை ராணுவமும் எமது தாயகத்தை ஆக்கிரமித்துச் சென்ற பகுதிகளில் அநாதரவாக இறந்து கிடந்த எனது மக்கள் தான். உடனேயே வந்து உக்ரேன் சண்டை வேறு எமது சண்டை வேறு என்று எனக்குப் பாடம் எடுக்கமுன்னர், ஒரு கணம் நீங்களும் இந்தக் காட்சிகளை எங்கள் தேசத்தில் கண்டிருந்தால், ஏன் நிச்சயம் கண்டிருப்பீர்கள், அவர்களையும் ஒருகணம் நினைத்துப் பாருங்கள். அதன் பின்னர், எவன் சரி, எவன் பிழை என்பது பற்றிப் பேச நினைக்க மாட்டீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

ஆனால் நிச்சயமாக எமது மக்களில் இருவர் இப்படி கைகள் கட்டப்பட்டு கொலைசெய்யப்பட்டு வீதியில் கிடக்கும்போது நான் விசிலடித்துக்கொண்டு சைக்கிளில் செல்லமாட்டேன்!!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Eppothum Thamizhan said:

ஆனால் நிச்சயமாக எமது மக்களில் இருவர் இப்படி கைகள் கட்டப்பட்டு கொலைசெய்யப்பட்டு வீதியில் கிடக்கும்போது நான் விசிலடித்துக்கொண்டு சைக்கிளில் செல்லமாட்டேன்!!

https://countercurrents.org/vendhan100810.htm

உங்களால் முடிந்தால் இந்த இணைப்பில் இருக்கும் படங்களைப் பாருங்கள். இது வன்னியில் நடந்தது. சொந்த உயிர்காக்க ஓடும் மக்களும் வீதியோரத்தில் எரிந்துகிடக்கும் பிணங்களும் தெரியும். இது எங்கும் நடப்பதுதான். யார், எவர் என்று பார்க்கும் மனோநிலையின்றி, மக்கள் உயிர்காக்க மட்டுமே ஓடும் நிலை.

இல்லை, உக்ரேனிலோ அல்லது வன்னியிலோ மக்கள் கொல்லப்படவில்லை என்று  நீங்கள் நம்பினால், அந்த நம்பிக்கையினைக் குலைக்கும் நோக்கம் எனக்கு நிச்சயமாக இல்லை. 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

ஆனால் நிச்சயமாக எமது மக்களில் இருவர் இப்படி கைகள் கட்டப்பட்டு கொலைசெய்யப்பட்டு வீதியில் கிடக்கும்போது நான் விசிலடித்துக்கொண்டு சைக்கிளில் செல்லமாட்டேன்!!

இதன் மூலம் நீங்கள் எனக்குச் சொல்ல வருவது இவர்கள்கொல்லப்பட்ட மக்கள் இல்லை, ஆனால் இறந்ததுபோலக் கிடக்கும் நடிகர்கள், அதனால்த்தான் அருகில் சைக்கிளில் போகிறவர் விசிலடிச்சிக்கொண்டு போகிறார் என்பதுதானே?

அதற்கான பதில்தான் நான் மேலே உங்களுக்குச் சொன்ன படங்கள் பற்றிய குறிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

ரஞ்சித் 

தயவுசெய்து வெளிவரும் செய்திகளை நாலு பக்கமும் இருந்து வரும் செய்திக்ளினூடாக தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். 

ஒரு பக்கமோ அல்லது இரு பக்கமோ இருந்து வரும் செய்திகள் எப்போதும்  நம்பத்தகுந்தவை அல்ல.

பிணங்கள் எப்போதாவது எழுந்ததும் அங்கங்களை அசைத்ததும் உண்டா ? புச்சாவில் அப்படித்தான். 

இன்னமும் இந்த மேற்கு ஊடகங்களை நம்பியிருந்தீர்களென்றால் திரும்பவும் பாவமன்னிப்பு கேட்கவேண்டி வரும். ஆயத்தமாக இருங்கள்.

😉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஆனால் என்ன? இங்கே தெருக்களில் நாய்களைப்போல இறந்துகிடக்கும் மனிதர்கள் (அவர்கள் யாரா இருந்தாலும்) எனக்கு நினைவில் வருவது இந்திய ராணுவமும் இலங்கை ராணுவமும் எமது தாயகத்தை ஆக்கிரமித்துச் சென்ற பகுதிகளில் அநாதரவாக இறந்து கிடந்த எனது மக்கள் தான்

எனக்கு கண்முன்னே வருவது ஒபரேசன் லிபரேசன் நேரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டங்களில் சிங்களப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட முதியவர்களில் உடல்கள். சுடுகாட்டுக்குக் கூட கொண்டு செல்லமுடியாமல் அந்த இடங்களிலேயே பிணங்களை எரித்ததும் இன்னும் மறக்கவில்லை. இதைவிட மிகவும் மோசமாகவும், குரூரமாகவும் இறுதி யுத்தக்காலத்தில் வன்னியில் நடந்தது. அவற்றை எல்லாம் முந்தைய நேரடி அனுபவங்கள் மூலம் உணரமுடிந்தது. அது போலத்தான் சிரியாவில், ஈராக்கில் இப்போது உக்கிரேனின் நடப்பவற்றை உணரமுடிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

திரும்பவும் பாவமன்னிப்பு கேட்கவேண்டி வரும்

எதற்காக? யாரிடமிருந்து? எனக்குப் பாவ மன்னிப்புத்தரக் காத்திருக்கும் அந்தப் புண்ணியவான் யார்? 

  • கருத்துக்கள உறவுகள்

22 minutes ago, Kapithan said:

தயவுசெய்து வெளிவரும் செய்திகளை நாலு பக்கமும் இருந்து வரும் செய்திக்ளினூடாக தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். 

ஒரு பக்கமோ அல்லது இரு பக்கமோ இருந்து வரும் செய்திகள் எப்போதும்  நம்பத்தகுந்தவை அல்ல.

பிணங்கள் எப்போதாவது எழுந்ததும் அங்கங்களை அசைத்ததும் உண்டா ? புச்சாவில் அப்படித்தான். 

ரஷ்யா சொல்லுவதை அப்படியே நம்புகின்றீர்கள். ஆக்கிரமிப்பு இராணுவம், எந்த நாட்டு இராணுவம் எனினும், அப்பாவிகளைக் கொல்லுவதும், பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்குவதும் வழமை. எண்ணிக்கைகள் அந்த இராணுவத்தின் ஒழுக்கத்தை கட்டுப்படுத்தும் தலைமையைப் பொறுத்தது.

👇🏾 பிபிசி செய்தியை நீங்கள் நம்பவேண்டியதில்லை.. 

https://www.bbc.co.uk/news/60981238

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏன் உணர்ச்சி பிழம்பாக இருக்க வேண்டும்.? நாங்கள் கஸ்டப்பட்ட போது எங்களுக்கு பயங்கரவாதிகள் குத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் ஆயுதங்களை கொடுத்து எம்மை அழித்தது மேற்குலகம். யூக்ரேனோ ரஸ்யாவோ எமக்காக அழவில்லை, கவலை தெரிவிக்கவில்லை. 

ஒரு ஆக்கிரமிப்பு ராணுவத்தை நியாயப்படுத்தும் அல்லது அதன் கொடுமைகளை இல்லையென்று மறுக்கும் நாம், இதேவகையான ஆக்கிரமிப்பு மனோபாவம் கொண்ட இலங்கை ராணுவத்தின் செயல்களை மட்டும் தவறென்று எப்படிக் கூறுகிறோம்? எந்தவொரு ஆக்கிரமிப்பு ராணுவத்தினதும் மனோபாவம் ஒன்றுதானே? ஆக்கிரமித்தல், அழித்தல், கொல்லுதல், பாலியல் வன்புணர்வு புரிதல், தடயங்களை அழித்தல்..இவையெல்லாமே எல்லா ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் பொதுவானதுதானே?

இலங்கையில் சிங்கள ராணுவமும், இந்திய ராணுவமும் செய்ததும், காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்ததும், பங்களாதேஷில் இந்திய ராணுவம் செய்ததும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்த்தனிலும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் செய்ததும், 80 களில் ஆப்கானிஸ்த்தானிலும் இன்று  சிரியாவிலும் உக்ரேனிலும் ரஸ்ஸியா செய்வதும் ஒன்றுதானே? இதில் ஒரு ராணுவம் மற்றையதைக் காட்டிலும் நல்லதென்றோ அல்லது ஒரு ராணுவம் மக்களைக் கொல்லவில்லையென்றோ எப்படி எம்மால் கூறமுடிகிறது? 

ஒரேயொரு காரணம்  மட்டுமே இதற்கு இருக்கலாம். இந்த ஆக்கிரமிப்பு ராணுவங்களில் ஒன்றிற்கு நாம் ஆதரவாக இருப்போமானால், நிச்சயமாக அதன் கொலைகளை நாம் நியாயப்படுத்துவோம். 2009 வரை சிங்கள ராணுவம் எம்மீது புரிந்த இனக்கொலையினை சிங்கள இனம் நியாயப்படுத்தியது போல. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

மேற்கின் ஊடகங்கள் தங்கள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன என்பதால் ரஸ்யாவின் செய்திகளை நம்புவதாக அர்த்தம் அல்ல. 

BBC எப்போதோ அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. இலங்கை  விடயத்தில் இதனைத் தெளிவாக நாம் காணலாம். 

8 minutes ago, ரஞ்சித் said:

ஒரு ஆக்கிரமிப்பு ராணுவத்தை நியாயப்படுத்தும் அல்லது அதன் கொடுமைகளை இல்லையென்று மறுக்கும் நாம், இதேவகையான ஆக்கிரமிப்பு மனோபாவம் கொண்ட இலங்கை ராணுவத்தின் செயல்களை மட்டும் தவறென்று எப்படிக் கூறுகிறோம்? எந்தவொரு ஆக்கிரமிப்பு ராணுவத்தினதும் மனோபாவம் ஒன்றுதானே? ஆக்கிரமித்தல், அழித்தல், கொல்லுதல், பாலியல் வன்புணர்வு புரிதல், தடயங்களை அழித்தல்..இவையெல்லாமே எல்லா ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் பொதுவானதுதானே?

இலங்கையில் சிங்கள ராணுவமும், இந்திய ராணுவமும் செய்ததும், காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்ததும், பங்களாதேஷில் இந்திய ராணுவம் செய்ததும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்த்தனிலும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் செய்ததும், 80 களில் ஆப்கானிஸ்த்தானிலும் இன்று  சிரியாவிலும் உக்ரேனிலும் ரஸ்ஸியா செய்வதும் ஒன்றுதானே? இதில் ஒரு ராணுவம் மற்றையதைக் காட்டிலும் நல்லதென்றோ அல்லது ஒரு ராணுவம் மக்களைக் கொல்லவில்லையென்றோ எப்படி எம்மால் கூறமுடிகிறது? 

ஒரேயொரு காரணம்  மட்டுமே இதற்கு இருக்கலாம். இந்த ஆக்கிரமிப்பு ராணுவங்களில் ஒன்றிற்கு நாம் ஆதரவாக இருப்போமானால், நிச்சயமாக அதன் கொலைகளை நாம் நியாயப்படுத்துவோம். 2009 வரை சிங்கள ராணுவம் எம்மீது புரிந்த இனக்கொலையினை சிங்கள இனம் நியாயப்படுத்தியது போல. 

உண்மையைக் கண்டறியுங்கள் என்று கூறினால் அதைக் கூறுபவர்கள் மீது கோபம் வருகிறது. 

(மேற்கு நாடுகள் செய்த சிலவற்றை ஏற்றுக்கொள்வது நல்ல  அறிகுறி)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

நாங்கள் ஏன் உணர்ச்சி பிழம்பாக இருக்க வேண்டும்.? நாங்கள் கஸ்டப்பட்ட போது எங்களுக்கு பயங்கரவாதிகள் குத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் ஆயுதங்களை கொடுத்து எம்மை அழித்தது மேற்குலகம். யூக்ரேனோ ரஸ்யாவோ எமக்காக அழவில்லை, கவலை தெரிவிக்கவில்லை. 

சக மனிதன் அழிக்கப்படும்போது உணர்ச்சிவசப்படாமல் இருப்பதற்குப் பெயர் மனிதம் அல்ல. 

அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதனாலேயே இதுபற்றிப் பேசவேண்டியிருக்கிறது.

உக்ரேனியர்களுக்கு ஆதரவாகப் பேச எமக்கு விருப்பமில்லாமல்ப் போகலாம். அப்படியானால், எமக்குச் சார்பாகவும் மற்றையவர்கள் பேசவேண்டும் என்று கேட்கிற அருகதை எமக்கு இல்லாமல்ப் போய்விடும், பரவாயில்லையா? 

ஐ நா விடமோ,  அல்லது வேறெந்த அமைப்பிடமோ அல்லது நாம் வசிக்கும் கனடா, அமெரிக்கா, அவுஸ்த்திரேலியா போன்ற எந்த நாடுகளிடமோ நாம் இனிமேல் போர்க்குற்றம் பற்றியோ. இனவழிப்புப் பற்றியோ அல்லது எமக்கான அரசியல்த் தீர்வுபற்றியோ கேட்காதிருப்போம். நாம் அழிக்கப்பட்டால் அவர்கள் ஏன் உணர்ச்சிப் பிழம்பாக மாறவேண்டும்? 

16 minutes ago, Kapithan said:

உண்மையைக் கண்டறியுங்கள் என்று கூறினால்

நீங்கள் கூறும் உண்மையெது? உக்ரேனியர்களை ரஸ்ஸிய ராணுவம் கொல்லவில்லை, அன்பாக நடத்திவருகிறது என்பதுதானே? அந்த உண்மை எனக்கு நன்றாகவே தெரியும், இதில் கண்டறிவதற்கு இன்னும் ஏதும்  இருப்பதாக நான் நினைக்கவில்லை. உங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

சக மனிதன் அழிக்கப்படும்போது உணர்ச்சிவசப்படாமல் இருப்பதற்குப் பெயர் மனிதம் அல்ல. 

அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதனாலேயே இதுபற்றிப் பேசவேண்டியிருக்கிறது.

உக்ரேனியர்களுக்கு ஆதரவாகப் பேச எமக்கு விருப்பமில்லாமல்ப் போகலாம். அப்படியானால், எமக்குச் சார்பாகவும் மற்றையவர்கள் பேசவேண்டும் என்று கேட்கிற அருகதை எமக்கு இல்லாமல்ப் போய்விடும், பரவாயில்லையா? 

ஐ நா விடமோ,  அல்லது வேறெந்த அமைப்பிடமோ அல்லது நாம் வசிக்கும் கனடா, அமெரிக்கா, அவுஸ்த்திரேலியா போன்ற எந்த நாடுகளிடமோ நாம் இனிமேல் போர்க்குற்றம் பற்றியோ. இனவழிப்புப் பற்றியோ அல்லது எமக்கான அரசியல்த் தீர்வுபற்றியோ கேட்காதிருப்போம். நாம் அழிக்கப்பட்டால் அவர்கள் ஏன் உணர்ச்சிப் பிழம்பாக மாறவேண்டும்? 

13 வருடங்களாகியும்  ஆனாப்பட்ட எரிக் சொல்கைம் சொன்னது சிறிலங்காவில்  நடந்தது இனப்படுகொலை இல்லை என.
யூக்ரேனில் போர் தொடங்கி சில வாரங்களிலேயே அங்கு நடப்பது இனப்படுகொலை என முழு மேற்குலகமுமே சொல்கிறது. அதெப்படி என உங்களால் விளங்கப்படுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

13 வருடங்களாகியும்  ஆனாப்பட்ட எரிக் சொல்கைம் சொன்னது சிறிலங்காவில்  நடந்தது இனப்படுகொலை இல்லை என.
யூக்ரேனில் போர் தொடங்கி சில வாரங்களிலேயே அங்கு நடப்பது இனப்படுகொலை என முழு மேற்குலகமுமே சொல்கிறது. அதெப்படி என உங்களால் விளங்கப்படுத்த முடியுமா?

அவர்கள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஈழத்தில் நடந்ததற்கும், உக்ரேனில் நடப்பதற்கும் வேறுபாடு இருக்கென்று நினைக்கிறீர்களா? 

உடனேயே அங்கு ஒன்றரை லட்சம் கொல்லப்பட்டார்கள், இங்கு வெறும் ஆயிரம் பேர்தானே கொல்லப்பட்டார்கள், எப்படி இரண்டும் சமமாகும் என்று அவசரப்பட்டுக் கேட்டுவிட வேண்டாம். ஏனென்றால், ஈழத்தில் கொல்லப்பட்டது ஒன்ரரை லட்சம் என்பது சில வருடங்களுக்குப் பின்னரே வெளிக்கொணரப்பட்டது. ஆனால், உக்ரேனில் இன்னும் போர் நடக்கிறது. ரஸ்ஸிய ராணுவம் ஆக்கிரமித்து, பின் வெளியேறிய இடங்களில் கொல்லப்பட்ட மக்களையும், அரைகுரையாக மூடப்பட்ட மனிதப் புதைகுழிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். மொத்த போர்க்குற்றமும், இனவழிப்பும் வெளித்தெரிய நாளெடுக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

ஆனால் உங்களுக்கு நன்றாக இப்போதே தெரிந்திருக்கிறதே எப்படி ? இந்த மேற்லக ஊடகங்கள்? அப்படித்தானே ? 

ஆனால் இலங்கையில் நடந்த இனவழிப்பை வெளிக்கொண்டுவர 13 வருடங்களாகியும் ஏன் இன்னமும் முடியவில்லை?

கொசுறுச் செய்தி;

ரஸ்யா உக்ரேனில் செய்வது இனவழிப்பு என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா என Joe Biden னிடம் கேட்டபோது அவர், அது இனவழிப்பு அல்ல , போர்க்குற்றம்" என்று கூறியுள்ளார். 

ரஞ்சித், நுணாவிலான் கேட்டதற்கு உஅதிலைக் கூறுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

நுணாவிலான் கேட்டதற்கு உஅதிலைக் கூறுங்கள்.

கூறியவர் எரிக் சொல்கெயிம். ஏன் அப்படிக் கூறினார் என்பதை அவர்தான் கூறவேண்டும். நான் எரிக்கின் பிரத்தியேக ஊடக செய்தியாளர் அல்ல. நான் எரிக்கின் கூற்றை ஏற்றுக்கொள்லவில்லை, எம்மைப் பேச்சுவார்த்தைக்குள் இழுத்து அழித்ததில் எரிக்கின் பங்கு மிகவும் காத்திரமானது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எரிக்கின் பின்னால் இந்தியா நின்றதும், சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஒவ்வொரு கட்டத்திலும் எரிக் இந்தியாவுக்குச் சென்றே வந்தார் என்பதும் எனக்குத் தெரியும்.  இவ்விடயத்தில் இதைவிட, நுணாவுக்குத் தெரிந்ததை விட அதிகமாக எனக்குத் தெரியாது. ஏன் அவர் என்னிடம் இதைக் கேட்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.