Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாபய தலைவர் கைகளால் செத்திருக்கலாம்!! சிங்கள நடிகர் அதிரடி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய தலைவர் கைகளால் செத்திருக்கலாம்!! சிங்கள நடிகர் அதிரடி!!

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய தப்பியோடிய படையினரில் ஒருத்தர் எந்த தகுதியும் இன்றி அமரிக்கன் இரவு பலசரக்கு கடையில் வேலை பார்த்த ஒருத்தர் தமையனின் அரசியல் செல்வாக்கால் மீண்டும் இலங்கை  வந்தவர் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருக்கு நான் சொல்ல வருவது என்னவெனில் விடுதலைப்புலிகள் கொலையாளிகள் அல்ல. தமது மண்ணுக்கும் மக்களுக்குமாய் போராடியவர்கள்.தம் உயிரை துச்சமென மதித்து பல  வீரச்செயல்களை செய்தவர்கள். விடுதலைப்புலி இயக்கம் சிங்கள மக்களையோ சிங்கள அரசியல்வாதிகளை கொலை செய்வதற்காக உருவாக்கப்படவில்லை.

கோதாரி விழ....

இவ்வளவு கஷ்டங்கள் வந்தும் தமிழர்களை பற்றி ஏதாவது கதைக்கின்றானா பாவி? தமிழர் உரிமை/பிரச்சனைகள் பற்றி ஏதாவது வாய் திறந்து சொன்னானா? தன் இனத்தின் வயிறு காயுது என்றவுடன் துடிக்கிறான்.நா.....

இப்பிடியானவங்கள் இருக்க யாழ்ப்பாணத்திலை கோ கோத்தபாய எண்டு எங்கடையள் கத்துதுகள்....ஏனெண்டு எனக்கு விளங்கேல்லை? கோத்தா இருந்தால் என்ன போனால் என்ன எல்லாம் ஒண்டுதானே?

என்ன நான் சொல்லுறது சரிதானே? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இவருக்கு நான் சொல்ல வருவது என்னவெனில் விடுதலைப்புலிகள் கொலையாளிகள் அல்ல. தமது மண்ணுக்கும் மக்களுக்குமாய் போராடியவர்கள்.தம் உயிரை துச்சமென மதித்து பல  வீரச்செயல்களை செய்தவர்கள். விடுதலைப்புலி இயக்கம் சிங்கள மக்களையோ சிங்கள அரசியல்வாதிகளை கொலை செய்வதற்காக உருவாக்கப்படவில்லை.

எங்கள் போராட்டதைப்பற்றியும், எங்களைப்பற்றியும், தலைவரைபற்றியும் தவறான கருத்துக்களை சொந்த நாட்டிலும், சர்வதேசத்திலும் பரப்பியே ஆதரவு பெற்று நம்மை அழித்தார்கள். நாம் விடும் வாக்கு பொல்லாதது, அது திரும்பி வந்து நம்மைத்தாக்கும். அன்று அவர் கொலைகாரன் என்று பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் இன்று அவர் கையாலேயே செத்திருக்கலாம் என்று பகிரங்கமாக அறிக்கையிடுமளவிற்கு நாடு கொடுமையிலுள்ளது. என் தலைவனின் கையில் போராடும்பொழுது கைதியாக பிடிப்பட்ட சிங்கள இராணுவ வீரரை கேட்டால் சொல்வார்கள் அவரின் பெருந்தன்மையை. இந்த கோத்தா தானும் பொன்சேகாவும் போன வாகனத்திற்கு குண்டு வைத்து தாக்கியதாக பொன்சேகாவே; "அந்த தாக்குதலில் தான்மட்டுமே காயமடைந்ததாகவும், கோத்தா சிறு காயங்களை அடைந்ததாகவும்" ஒரு சமயம் கூறியிருந்தார். அதை காரணமாக்கி தமிழரை அழிக்க முடிவெடுத்து  இனவழிப்பு செய்தார் கோத்தா என்றே நான் நம்புகிறேன். இன்று புடின், உக்ரேயின் மீது போர் தொடுக்க கூறும் காரணமும், போர் செய்யும் விதமும் அன்று எமக்கு நடந்தவைகளோடு ஒத்துப்போகின்றன. இனவழிப்பு எங்கே நடந்தாலும் அதன் காரணங்களும் போக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கும். நாலும் நடந்து முடிந்த பின் தான் நல்லதும் கெட்டதும் புரியும், யாரும் சொன்னால் ஏளனம். ஆனால் முடிந்தபின் திரும்பிப்போய் திருத்த முடியாது அறுவடைதான்.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை கண்டதும்...மனதில் பட்டதை ஒரு கிறுக்கல்...அவ்வளவுதான் நண்பர்களே

கண்ணுக்கு முன்னே நீங்கள்..

பனங்கழி….சம்போ

பனங்கழி…சோப்பு

பனங்காய்  …சாப்பாடு

பற்றி எரியும் வயிறை நிரப்ப

பட்டபாடு எங்களுக்கு தெரியும்

அப்ப  உங்களுக்கு

பச்சை  அரிசியும் இருந்தது..

பகட்டய் பாவிக்க சோப்பும் இருந்தது..

பகரும் பீட்சாவும்

பசியாறியபின்  நாய்க்கும் போட்டீர்கள்..

பாணைப் பந்தாடியும் மகிழ்ந்தீர்கள்..

பச்சோந்தியாய்  வாழும் இனமொன்று..

பட்டினியால் வாழுமினத்திடம்

பகற் கொள்ளை அடித்தது….

பரிதவிக்கும் பெண்களை

பசியாராச் சாப்பிட்டுவிட்டு

பகிடி விட்டுச் சிரித்தது..

வீரவன்சவுடன் சேர்ந்து

வெட்டிபிரித்து வடகிழக்கை

வெட்டிச் சாய்ந்த உயிர்கள்

வன்னியில் கிடக்க

வந்தேறு குடிகள்

வவுனியாவில் பச்சரிசிப்

பால்சோறு செய்ததை மறக்கமுடியுமா

இப்ப உங்களுக்கு

சோறில்லை

பாண் இல்லை

கரண்டில்லை

காசில்லை…வாங்க

காசுமில்லை…எனினும் நாம்

எப்பவும்போல் ..இப்பவும்

ஏனெனில்

அரசன் அன்றறுப்பான்

தெய்வம் நின்ற்றுக்கும்..

இப்ப கண்ணுக்கு முன்னே…நீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

கோத்தபாய தப்பியோடிய படையினரில் ஒருத்தர் எந்த தகுதியும் இன்றி அமரிக்கன் இரவு பலசரக்கு கடையில் வேலை பார்த்த ஒருத்தர் தமையனின் அரசியல் செல்வாக்கால் மீண்டும் இலங்கை  வந்தவர் .

சுப்பர் மாக்கெட்டில வேலை செய்கிறவர்கள் ஜனாதிபதியாய் வரக் கூடாதோ?.....நல்ல காலம் தலைவர்  இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சுப்பர் மாக்கெட்டில வேலை செய்கிறவர்கள் ஜனாதிபதியாய் வரக் கூடாதோ?.....நல்ல காலம் தலைவர்  இல்லை 

உங்களுக்கு ஓர் போராளிக்கும் ஓர் நாட்டின் தலைவருக்கும் வேறுபாடு இன்னமும் புரியவில்லை.

என்ன செய்வது…..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, MEERA said:

உங்களுக்கு ஓர் போராளிக்கும் ஓர் நாட்டின் தலைவருக்கும் வேறுபாடு இன்னமும் புரியவில்லை.

என்ன செய்வது…..

 ஈழத்தமிழர்களுக்கு இவ்வளவு அழிவுகள் வந்தும் இன்னும் புலி வன்மத்தை கக்கும் உறவுகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். முகநூல் பக்கம் போனால் தலை வெடிக்கும். இப்படிப்பட்டவர்கள் ஏன் இன்னும் புலம்பெயர் தேசங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை ????? சொந்த நாட்டிற்கு போய் பிரச்சனைகளை தீர்க்க வேண்டியது தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அன்று நினைத்திருக்க மாட்டார் இல்ல, தன் வார்த்தையே தனக்கு எதிராக திரும்பும் என்று. அதிகாரம் தந்த பெருமிதம், எக்காளம், எப்போதும் சிங்கள மக்கள் தன் பக்கம் என்கிற மமதை  அப்படி பேசினார். இன்று தனித்து விடப்பட்டபோது உணர்ந்திருப்பார் தன் நிலையை, ஏனடா கோத்தாவை கொண்டுவந்தோம் என்று? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

சுப்பர் மாக்கெட்டில வேலை செய்கிறவர்கள் ஜனாதிபதியாய் வரக் கூடாதோ?.....நல்ல காலம் தலைவர்  இல்லை 

இனத்தில்  சொந்த நாட்டில் பற்று மிகுந்தவரா இருக்கனும் அல்லது சொந்தமாக படித்து குறைந்தபட்சம் ஒரு பட்டம் ஆவது பெற்று இருக்கனும் சுய சிந்தனையுள்ளவர் ஆக இருக்கணும்  மேலைநாடுகளுக்கும் ஸ்ரீலங்கா இந்தியா போன்ற நாடுகள் உள்ள வித்தியாசமே  இதுதான் 

பக்கத்தில் மோடி பல்கலை கழகம்  படித்தவர் என்கிறார்கள் எந்த பல்கலைக்கழகம் எத்தனையாம் ஆண்டு எவருக்குமே தெரியாது அதே போல் சுமத்திரன் தன்னுடைய படிப்பு சம்பந்தமாக வெளிவிடுவரா அவரால் முடியாது 😃இந்த  கோத்தா இந்த நாடே வேண்டாம் என்று USA சிட்டிசன் எடுத்தவர் எங்களுக்குத்தான் சிங்களவன் கலைத்தான் அவருக்கு யார் கலைத்தார்கள் சும்மா விளங்கியும் எதிர் கருத்து வைக்கணும் என்பதற்காக வைக்க கூடாது .

இப்படியான அரசியலில் எந்த நாடும் உருப்படாது உலகத்தில் உள்ள மிகப்பெரிய கொம்பனிகளில் தலைமை பொறுப்பு இந்தியர்கள் கைகளில் ஆனால் அதே கொம்பனிகள் இந்தியாவில் தலைமைபீடத்தை அமைத்தால் ஒருவருடத்தில் உலகில் காணமால் போய் விடும் காரணம் அரசியல் அதுவும் ஒருவகையான பரம்பரை அரசியல் இங்கும் ஸ்ரீலங்காவை நாசமாக்கிய சிங்கள தலைவர்கள்  யார் என்று தேடினால் விளங்கும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 07:19, குமாரசாமி said:

இவருக்கு நான் சொல்ல வருவது என்னவெனில் விடுதலைப்புலிகள் கொலையாளிகள் அல்ல. தமது மண்ணுக்கும் மக்களுக்குமாய் போராடியவர்கள்.தம் உயிரை துச்சமென மதித்து பல  வீரச்செயல்களை செய்தவர்கள். விடுதலைப்புலி இயக்கம் சிங்கள மக்களையோ சிங்கள அரசியல்வாதிகளை கொலை செய்வதற்காக உருவாக்கப்படவில்லை.

கோதாரி விழ....

இவ்வளவு கஷ்டங்கள் வந்தும் தமிழர்களை பற்றி ஏதாவது கதைக்கின்றானா பாவி? தமிழர் உரிமை/பிரச்சனைகள் பற்றி ஏதாவது வாய் திறந்து சொன்னானா? தன் இனத்தின் வயிறு காயுது என்றவுடன் துடிக்கிறான்.நா.....

இப்பிடியானவங்கள் இருக்க யாழ்ப்பாணத்திலை கோ கோத்தபாய எண்டு எங்கடையள் கத்துதுகள்....ஏனெண்டு எனக்கு விளங்கேல்லை? கோத்தா இருந்தால் என்ன போனால் என்ன எல்லாம் ஒண்டுதானே?

என்ன நான் சொல்லுறது சரிதானே? 😎

பெரியவர் இப்பிடி எழுத்திறதிற்கு மன்னிக்க வேணும்.

 எங்களுக்கு முட்டையில் மயிர் புடுங்கிறதே வேலையாய் போச்சு .

தலைவரின் கையால் இவன் செத்திருக்கலாம் எண்டு அவன் சொன்னது ஓரளவிற்கேனும்  முழுமையான  அங்கீகரிப்பின் ஒரு பகுதியாக தென்படவில்லையா.

 பல்கலையில் எங்கள் Batch  இல் 250 பேர் , சரி அரைவாசி தமிழும் சிங்களமும் (1979 நடப்பு இது) .

Whatsapp குரூப் வைச்சிருக்கிறம். ஒரு 75% ஆன ஆக்கள்  இருக்கினம்.

 அதில Putin  Hague war Crime Tribunal க்கு போக வேண்டி வரும் என்று இரண்டு நாட்களுக்கு  முன்பு  ஒருவன் பதிவிட , ராஜபக்ச சகோதரர்களையும் அதில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும் என்று  முதல் தடவையாக ஒரு சிங்கள நண்பன் பதிவிட்டிருக்கிறான் .

2009 இல்  கதவைத் தட்டிய சந்தர்ப்பம் , மீண்டும் ஒரு முறை கதவைத் தட்டி நிற்பதாக உணர்கிறேன்.

 எங்களுக்கு என்ன வந்தது என்ற அலட்சிய மனோபாவத்தைத் துறந்து,  பக்கத்து வீட்டுக் காரனுடன் நட்பை மீண்டும் கட்டி எழுப்பி, எமது பிள்ளைகள் எமது நாட்டில் நிம்மதியாகக் வாழ்வதற்கான வழிவகைகளை அமைப்பதில் எமக்கு இருக்கக் கூடிய தார்மீகப் பொறுப்புகளை பற்றி சீரியஸாக யோசிப்போமா….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது 12 ஆண்டுகளுக்கு முன்னர், வளரி தொலைக்காட்சிக்காக ஒளிப்பதிவான ஒரு நிகழ்ச்சி, இன்றைய நிலைவரத்தோடும், பொருந்திப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தட்டுப்பாடும் பட்டினியும் அங்கே தலை விரித்து ஆடுது .

வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர் பொருள் சேர்த்து வணங்காமுடியை  வாடகைக்கு அமர்த்தி அங்கே இருக்கும் எல்லோருக்குமே உதவியாக அனுப்பி வைப்பதை பற்றி யோசிக்கலாமே…

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சாமானியன் said:

இன்று தட்டுப்பாடும் பட்டினியும் அங்கே தலை விரித்து ஆடுது .

வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர் பொருள் சேர்த்து வணங்காமுடியை  வாடகைக்கு அமர்த்தி அங்கே இருக்கும் எல்லோருக்குமே உதவியாக அனுப்பி வைப்பதை பற்றி யோசிக்கலாமே…

வணங்காமுடி ரொம்பவும் பிசி புறோ.

நாங்க நினைத்த நேரத்துக்கெல்லாம் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இது 12 ஆண்டுகளுக்கு முன்னர், வளரி தொலைக்காட்சிக்காக ஒளிப்பதிவான ஒரு நிகழ்ச்சி, இன்றைய நிலைவரத்தோடும், பொருந்திப்போகிறது.

ஹாஹா.... இதை மஹிந்தா பார்த்தால் அப்பிடியே ஆடிப்போய்விடுவார். இணைப்புக்கு நன்றி நுணா! 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎04‎-‎2022 at 20:21, MEERA said:

உங்களுக்கு ஓர் போராளிக்கும் ஓர் நாட்டின் தலைவருக்கும் வேறுபாடு இன்னமும் புரியவில்லை.

என்ன செய்வது…..

ஏன் ஒரு போராளி தலைவர் நாளைக்கு நாட்டை ஆள கூடாதா? 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை ஆளுபவர்க்கு மனித நேயம், நாட்டில் பற்று, மக்களில் அன்பு, உண்மை, மக்களுக்காக உயிரை குடுத்து காப்பாற்றும் பண்பு இருக்கவேண்டும். மக்களை கொள்ளையடித்து, ஏப்பம் விடும் கொள்ளைக்குணம் இருக்கக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

ஏன் ஒரு போராளி தலைவர் நாளைக்கு நாட்டை ஆள கூடாதா? 

தலைவர் தான் அரசியலுக்குள் வரமாட்டேன் என்று கூறியது உங்களுக்கு தெரியாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.