Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு – காலி முகத்திடலில்... 4ஆவது நாளாகவும், தொடரும் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கொழும்பு – காலி முகத்திடலில்... 4ஆவது நாளாகவும், தொடரும் போராட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது.

அதிகளவானோர் காலி முகத்திடலிலும் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடியும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குறித்த பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடாரங்கள், உணவு, தற்காலிக மலசலகூட வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

https://athavannews.com/2022/1276322

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கொலிடே கொண்டாட்டம்தான்...சாப்பாடு ஓசி..கோல்பேஸ்கடற்கரையில் தனித்தனி தங்குமிடம் ஓசி...

விரைவில் நீத்துப்போகும்..இந்த போராட்டம்

இன்று  சோபித தேரர் தலைமையில் பல பிக்குகள் காலிமுகத் திடலுக்கு வந்து ஆதரவு கொடுத்தனர். இதே போன்று பிரபல சிங்களப் பாடகியும் என்றும் இனவாதத்துக்கு எதிராக தன் குரலை பதிவு செய்கின்றவருமான நந்த மாலினியும் வந்து தன் ஆதரவினை கொடுத்துள்ளார். அத்துடன் பிரபல சிங்கள நடிகை சங்கீதா வீரரத்தினவும் இன்று காலிமுகத் திடலுக்கு வந்து ஆதரவு கொடுத்துள்ளார்.

 சிங்கள புதுவருட விடுமுறையின் கழிந்த பின் தான் இந்தப் போராட்டம் நீர்த்துப் போகுதா இல்லையா எனத் தெரியவரும். அத்துடன் கடந்த ஆண்டு போன்று இந்த நீண்ட விடுமுறை காலத்தின் பின் மீண்டும் கொரனா அலை இலங்கையில் எழுவதற்கு அத்தனை வாய்ப்புகளும் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு 9 மணியளவில் மதுப் போத்தல்களையும் பியர் போத்தல்களையும் ஆர்ப்பாட்டக்காறர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இத்தனை களேபரத்திற்கும் நடுவே இதனை பாரிய வாகனத்தில் வந்து  கொடுக்குமளவிற்கு யாருக்கு சக்தி  உள்ளது என்கின்ற கேள்வி தற்போது  எழுந்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற சிங்களம் தலை குனியும் படியான உரையாடல்கள் இப்போது வெளிப்படையாக நிகழ்கின்றன. ஆனாலும் நம்மவர் பக்கத்தில் இருந்து  ஒருவரும் இல்லை என்ற கவலை எனக்கு.
இதில் பேசும் இருவரில் ஒருவர் கிறிஸ்தவ பாதிரியார், மற்றையவர் முஸ்லீம் மௌலவி.
குறிப்பாக பேட்டி காணும் சமூதீத ஹிந்து (சைவர்களை) விட்டுவிடுவோம் என்று கூறுகிறார்...

21 minutes ago, Kapithan said:

நேற்று இரவு 9 மணியளவில் மதுப் போத்தல்களையும் பியர் போத்தல்களையும் ஆர்ப்பாட்டக்காறர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இத்தனை களேபரத்திற்கும் நடுவே இதனை பாரிய வாகனத்தில் வந்து  கொடுக்குமளவிற்கு யாருக்கு சக்தி  உள்ளது என்கின்ற கேள்வி தற்போது  எழுந்துள்ளது. 

காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கு கொண்டு ராப் இசை பாடல் கலைஞர் மாரடைப்பில் மரணம் எய்தியுள்ளார்.

அரசாங்கம் இந்த போராட்டத்தை குழப்புவதற்கு குடு, கேரளா கஞ்சா, சாராய சப்ளை தொடங்கி உள்ளது.

 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kapithan said:

நேற்று இரவு 9 மணியளவில் மதுப் போத்தல்களையும் பியர் போத்தல்களையும் ஆர்ப்பாட்டக்காறர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இத்தனை களேபரத்திற்கும் நடுவே இதனை பாரிய வாகனத்தில் வந்து  கொடுக்குமளவிற்கு யாருக்கு சக்தி  உள்ளது என்கின்ற கேள்வி தற்போது  எழுந்துள்ளது. 

ஸ்பெசல் டென்ட் எல்லாம்  அடித்து விதம் ,விதமாய் உணவு எல்லாம் கொடுபடுதாம்....இதுக்கு பின்னால் யார் நிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கதைக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாச காலத்தில், பம்பலப்பிட்டி தும்முள்ள சந்தியில் தொடர் போராட்டம். நடாத்தியவர்கள், பிக்குகள்.

பிக்குகள் மேல் கைவைக்க முடியாது என்பதால், பிரேமதாச சிக்கலில் என்றார்கள்.

ஒரு நாள், தீடீரென பிக்குமார்களிடையே சண்டை..... குடையால அடிபடுகினம்.

டிவியில சண்டை காட்டுப்படுது. பிறகு, போலீஸ் உள்ள புகுந்து, எல்லோரையும் பஸ்ஸில ஏத்திக் கொண்டு போகுது.

பஸ்கள் நாட்டின் நாலாபுறமும் போய், பிக்குமாரை கையில காசில்லாமல்... இறக்கி விட்டுட்டு வந்து விட்டார்கள்.

பிறகு ஒரு போலீஸ் அதிகாரி மூலம் தெரிந்தது..... போலீசார் தான், பிக்குகளாக, வேடம் இட்டு புகுந்து உள்ள புகுந்து..... தமக்குள் அடிபட்டு, போராட்டத்தை முடித்த கதை.

ஆக, ராசபக்சேக்கு இது சின்ன வேலை.... ஆனால் அவர்கள் தடுமாறுவது, கடன்பட வழியின்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பரிமாணம் காணும் கொழும்பு - காலிமுகத்திடல் போராட்டம்

(நா.தனுஜா)

 

  • படுகொலைசெய்யப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி பதாதைகள்

 

  • 'கோட்டா கோ கம'வில் தற்காலிக வைத்தியசாலை, நூலகமும் நிர்மாணிப்பு

 

  • போராட்டக்களத்தில் கலந்தனர் நாட்டின் முன்னணிக்கலைஞர்கள்

 

  • புதுமணத்தம்பதியரும் மணக்கோலத்தில் போராட்டத்திற்கு வருகை

 

Image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் நான்காவது நாளான இன்று போராட்டக்காரர்கள் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, போத்தல ஜயந்த, சிவராம், நிமலராஜன், கீத் நொயார் உள்ளடங்கலாக கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதி செயலத்திற்கு முன்பாக அவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

 Image

புதிய பரிமாணம் காணும் போராட்டம்

 

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குறிப்பாக பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் இளைஞர், யுவதிகள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து ஆரம்பித்த இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் புதிய சிந்தனைகளுடன் பிறிதொரு பரிமாணத்தைக் கண்டுவருகின்றது.

Image

அந்தவகையில் நேற்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் 'கோட்டா கோ கம'  என்ற பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டது. 

Image

அதில் சிங்களமொழியில் மாத்திரமே அப்பெயர் எழுதப்பட்டிருப்பதாக சமூகவலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களையடுத்து, அதனை அகற்றிய போராட்டக்காரர்கள் நேற்றைய தினம் 'கோட்டா கோ கம' என்று தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட வாசகங்களை காட்சிப்படுத்தினர்.

Image

அதேபோன்று அந்தப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடமாடும் மலசலகூடங்கள் அமைக்கப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் தங்கக்கூடியவகையில் கூடாரங்களும் அமைக்கப்பட்டன. 

Image

அதனைத் தொடர்ந்து இன்று அங்கு தற்காலிக வைத்தியசாலை வசதியை ஏற்படுத்தும் வகையிலான கூடாரமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

Image

மேலும் இளைஞர், யுவதிகள் இணைந்து அங்கு நூலகமொன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதுடன், அவ்வப்போது அரசியல் ரீதியில் மக்களை விழிப்பூட்டும் வகையிலான கருத்தரங்குகளை நடாத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர். 

Image

அத்தோடு குப்பைகளைப் போடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் உருப்படங்கள் ஒட்டப்பட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கமுடிந்தது.

 Image

 

போராட்டக்களத்தில் முன்னணிக் கலைஞர்கள்

 

எந்தவொரு அரசியல் கட்சியினதும் தலையீடின்றி மக்களால் தன்னிச்சையாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் சிறுவர்கள், இளைஞர், யுவதிகள், வயது முதிர்ந்தவர்கள், மதத்தலைவர்கள், முன்னணி கலைஞர்கள், பல்துறைசார் நிபுணர்கள் உள்ளங்கலாகப் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுவருகின்றமை விசேட அம்சமாகும். 

http://www.newswire.lk/wp-content/uploads/2022/04/Nanda-Malini-protest.jpg

அதன்படி பிரபல பாடகரான ஷிராஸ் யூனுஸ் இன்று அதிகாலை போராட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், போராட்டக்காரர்களை உற்சாகமூட்டும் வகையில் பாடல்களையும் இசைத்துக்கொண்டிருந்த நிலையில், திடீர் மாரடைப்பின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

May be an image of 9 people, people standing, outdoors and text that says 'RUTE Ros'

அதேவேளை இன்று காலை நாட்டின் முன்னணிக் கலைஞர்களான நந்தா மாலினி, சுனில் ஆரியரத்ன ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். 

அங்கு கருத்து வெளியிட்ட நந்தா மாலினி, 'புது உலகத்தைப் பற்றி நினைப்பது தண்டனைக்குரிய குற்றமாயின், நாட்டின் நீதிமன்றமும் சட்டமும் எதற்கு ? எனது வாழ்வில் இதைப்போன்ற மிகவும் கேவலமான ஆட்சியையும் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதையும் கண்டதில்லை' என்று தெரிவித்தார்.

 

சிறுபிள்ளைகள், புதுமணத்தம்பதியர் உள்ளிட்ட பலரும் பங்கேற்பு

 

மேலும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளையும் போராட்டக்களத்திற்கு அழைத்துவந்து உத்வேகத்துடன் போராடுவதையும், புதுமணத்தம்பதியர் மணக்கோலத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவதையும் கிறிஸ்தவ பாதிரிமார்களும் பௌத்த பிக்குகளும் அதில் பங்கேற்றிருப்பதையும் இளைஞர், யுவதிகள் இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பிவருவதையும் காணமுடிந்தது. 

Image

Image

Image

Image

அதுமாத்திரமன்றி போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு வாய்ப்புகிட்டாதவர்கள் காலிமுகத்திடலின் ஊடாக வாகனங்களில் செல்லும்போது வாகன ஒலிகளை எழுப்பி, போராட்டக்காரர்களை உற்சாகமூட்டிச்செல்வதையும் அவதனிக்கமுடிந்தது.

 Image

கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் போராட்டங்கள்

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு அப்பால் கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

நுகேகொடவிலுள்ள விஜேராம சந்தி, திம்பிரிகஸ்யாயவில் உள்ள புனித தெரேஸா தேவாலய அருகாமை, கொஹுவெல ஆகிய இடங்களில் பொதுமக்களும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகளும், லிபேர்ட்டி சுற்றுவட்டத்தில் கலைஞர்களும் அரச எதிர்ப்புப்போராட்டங்களை நடாத்தியிருந்தனர். 

அதேபோன்று சுதந்திர சதுக்கத்தில் தினமும் நடத்தப்பட்டுவரும் விழிப்புணர்வுப்போராட்டம் நேற்றை தினத்திலும் தொடர்ந்தது.

 

வெளிநாடுகளிலிருந்து மேலோங்கும் ஆதரவுக்குரல்

போராட்டங்களில் ஈடுபட்டுவரும் இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஒட்டுமொத்த அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த சில தினங்களாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

அந்தவகையில் நேற்றைய தினம் ஜெனீவாவில் இலங்கையர்களும் அந்நாட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு பிரிட்டனின் ஒலிவியர் விருது வழங்கல் நிகழ்வில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட ஹிரன் அபேசேகர, விருது வழங்கல் மேடையில் இலங்கையின் நிலை குறித்துக் கருத்து வெளியிட்டார். 

தற்போது இலங்கையர்கள் சற்றே கடினமானதொரு காலப்பகுதியில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வீதிகளில் இறங்கிப்போராடிவரும் மக்களைத் தான் நேசிப்பதாகவும் வெற்றி கிட்டட்டும் என்றும் வாழ்த்தினார். 

புதிய பரிமாணம் காணும் கொழும்பு - காலிமுகத்திடல் போராட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஸ்பெசல் டென்ட் எல்லாம்  அடித்து விதம் ,விதமாய் உணவு எல்லாம் கொடுபடுதாம்....இதுக்கு பின்னால் யார் நிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கதைக்கினம் 

நாடளாவிய ஆர்ப்பாட்டத்தின் பின்னால் மேற்கின் ஆசீருடன் இந்தியா இருப்பதாக நம்பக்கூடிய இடத்திலிருந்து தகவல்.

போதை வினியோகம் மகிந்த அன் கோ. 

ஆங்காங்கே  ஆர்ப்பாட்டத்தில் வன்முறையைத் தூண்டுவத்ற்கான வேலைகள் நடைபெறுவதாக யூகம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

 

Image

 

Image

 

 Image

Image

போராட்டத்தில் ரசித்த படங்கள்.
அதிலும்… “Gota போ கம” என மும்மொழிகளிலும் எழுதிய பதாகையும்,
அந்த குப்பைத் தொட்டி… ஐடியாவும் சிறப்பு.

இதே காலிமுகத் திடலில் தானே….
போர் வெற்றியையும், சுதந்திர தின கொண்டாட்டத்தையும், இராணுவ அணி வகுப்புகளையும்…. நடத்தியவர்கள்.
இன்று அதே… இடத்தில், குப்பைத் தொட்டியில் மகிந்த சகோதரர்கள்.
காலம்… எவ்வளவு விசித்திரமானது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, தமிழ் சிறி said:

கொழும்பு – காலி முகத்திடலில்... 4ஆவது நாளாகவும், தொடரும் போராட்டம்!

சிறித்தம்பி கேக்கிறனெண்டு கோவிக்க வேண்டாம்.
இப்ப எங்கடை தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்யினம்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி கேக்கிறனெண்டு கோவிக்க வேண்டாம்.
இப்ப எங்கடை தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்யினம்? 

ஓடு மீன் ஒடி…. உறு மீன், வரும் வரைக்கும்….
உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கினம்.
ரணில்…. வர வேண்டும் என்றும்,   நேர்த்திக் கடன் வைத்திருப்பினம்.
ரணில்… வந்தால், சம்/சும் மாறி,மாறி… முதுகு சொறிய, வசதியாக இருக்கும். 😂
 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

போராட்டத்தில் ரசித்த படங்கள்.
அதிலும்… “Gota போ கம” என மும்மொழிகளிலும் எழுதிய பதாகையும்,
அந்த குப்பைத் தொட்டி… ஐடியாவும் சிறப்பு.

இதே காலிமுகத் திடலில் தானே….
போர் வெற்றியையும், சுதந்திர தின கொண்டாட்டத்தையும், இராணுவ அணி வகுப்புகளையும்…. நடத்தியவர்கள்.
இன்று அதே… இடத்தில், குப்பைத் தொட்டியில் மகிந்த சகோதரர்கள்.
காலம்… எவ்வளவு விசித்திரமானது.

இலங்கை தேசியக்கொடியை மாற்றியமைத்தார்கள், தமிழில் தேசிய கீதம் பாடமுடியாது என்றார்கள், ஆனால் தங்கள்  தலைவிதியை மாற்ற முடியவில்லை.

11 hours ago, பிழம்பு said:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் நான்காவது நாளான இன்று போராட்டக்காரர்கள் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, போத்தல ஜயந்த, சிவராம், நிமலராஜன், கீத் நொயார் உள்ளடங்கலாக கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதி செயலத்திற்கு முன்பாக அவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

எங்களுக்கு நடந்த கொடுமைகளையும் வெளிக்கொண்டு வருவினமெல்லே! காத்திருப்போம் விடியுமட்டும். எங்களுக்கு நடந்த அனிஞாயங்களை தெளிவுபடுத்தும் படம்  சம்பந்தப்பட்டவர்களிடம் இல்லையாம் காட்சிப்படுத்துவதற்கு, இருப்பவர்கள் கொடுத்துதவவும்.

அப்போ போராட்டத்தின் போக்கு மாறினாலும் மாறும், எதற்கும் பொறுத்துப்பாப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.