Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த வயதிலும் முடியும்

Featured Replies

வயது நாற்பதைக் கடந்தால் போதும். இனி என்ன வயசு போட்டுது எண்டு புலம்பும் எங்களவர்களுக்கு ஒரு பாட்டியம்மா செய்தி தந்திருக்கின்றார். வண்டியும், தொந்தியுமா உடலைக் கவனிக்காமல் கொழுப்பையும், சீனியையும் உடலில் ஏற்றிக் கொண்டு திரிபவர்களுக்கு, தொலைக் காட்சித் தொடரே உலகம் எண்டு வீட்டுக்குள் விழுந்திருக்கும் எங்களவர்களுக்கு, இந்த வயதிலும் முடியும் என்று சாதித்துக் காட்டியிருக்கிறார் பேரப்பிள்ளைகளின் பேரப் பிள்ளைகளைக் கண்ட இந்த பாட்டியம்மா.

அவருக்கு வயது 94. ஏழு பிள்ளைகளின் தாயார். பேரப்பிள்ளைகள், அவர்களது பேரப்பிள்ளைகள் என பலதையும் பார்த்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி Phyllis Turner. தனது மருத்துவப் பட்டப் படிப்பை Adelaine இல் வெற்றிகரமாக முடித்து இன்று உலக சாதனையைப் படைத்திருக்கிறார். ஊடகங்கள் பல இவரது சாதனையை வெளியிட்டு மகிழ்கின்றன. எங்களது பங்குக்கு யாழ் இணையத்தின் ஊடாக நாமும் செய்தி வெளியிட்டு மகிழ்வோம்.

இவரது தந்தை தாயை விட்டுப் பிரிந்து போனதின் பின்னர் தாயாருக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்வதற்காக தனது 12ம் வகுப்புடன் பாடசாலையை நிறுத்திய Phyllis Turner ஏறக்குறைய 60 வருடங்களுக்குப் பின்னர் பல்கலைக்கழக புகுமுக பரீட்சை எழுதி தெரிவாகி பட்டப் படிப்பை முடித்து இப்பொழுது மருத்துவத் துறையிலும் பட்டம் பெற்று வெளி வந்திருக்கிறார்.

தான் இன்னும் இளமையாக இருப்பதாகவே நினைப்பதாகவும், தொடர்ந்தும் படிக்க ஆசையோடு இருப்பதாகவும் பேட்டிகளில் வெளுத்து வாங்குகிறார் இந்த உலக சாதனை தந்த பாட்டியம்மா Phyllis Turner

  • கருத்துக்கள உறவுகள்

முயற்ச்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வயது ஒரு பொருட்டு இல்லை என்னபதுக்கு எடுத்துக்காட்டு இந்தப்பாட்டி.இன்னுமொருவர் இப்படி வயாதான காலத்தில் சாதனை செய்ததாக யாழ் மூவம் அறிந்ததாக நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் லண்டனில் கூட ஒரு பல்கலையில் இருந்து 90 வயதான வாலிபர் தனது முதுகலைமானிப் பட்டத்தைப் பெற்றிருந்ததோடு தான் இன்னும் படிக்கப் போவதாகவும் சொன்னார்.

வயது என்பது மனிதன் மனிதனை தாழ்வுபடுத்த அதிகம் பாவிக்கப்படுகிறது. அதனைக் காட்டி மனிதத் தன்னம்பிக்கையை சிதைக்கவும் செய்கின்றனர். உலகில் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினமும் வயது என்ற ஒன்றைக் காட்டி செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதில்லை. இந்த வயது என்ற வரையறை பல திறமைசாலிகளை கூட முடக்கி விடுகிறது. தற்போது உலகம் இதனை உணரவும் ஆரம்பித்துள்ளது. தற்போதைய முறைகளின் கீழ் தனிநபர் விபரக் கோவைகளில் (சிவி) வயதிடக் கட்டாயமில்லை என்பது உணரப்பட்டுள்ளது.

நம்மளப் போல 90 வயதிலும் யாழில் உலவ முடியுது.. காரணம்.. வயசல்ல.. முயற்சி..! :P

Edited by nedukkalapoovan

நம்மளப் போல 90 வயதிலும் யாழில் உலவ முடியுது.. காரணம்.. வயசல்ல.. முயற்சி..! :P

ஆமாம் தாத்தா அது முயற்சி இல்லை அதையும் விட ஒரு படி மேல............தொடர்ந்து உங்கள் முயற்சியை தொடருங்கள்.................. :P

அவருக்கு வயது 94. ஏழு பிள்ளைகளின் தாயார். பேரப்பிள்ளைகள், அவர்களது பேரப்பிள்ளைகள் என பலதையும் பார்த்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி Phyllis Turner. தனது மருத்துவப் பட்டப் படிப்பை Adelaine இல் வெற்றிகரமாக முடித்து இன்று உலக சாதனையைப் படைத்திருக்கிறார். ஊடகங்கள் பல இவரது சாதனையை வெளியிட்டு மகிழ்கின்றன. எங்களது பங்குக்கு யாழ் இணையத்தின் ஊடாக நாமும் செய்தி வெளியிட்டு மகிழ்வோம்

அட பாட்டியை நினைக்க பெருமையாக இருகிறது............யாழில இருகிற தாத்தாமார்,பாட்டிமார் இதை வாசித்துவிட்டு தாங்களும் இப்படி முயற்சிக்கலாமே.......... :P

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாட்டியின் முயற்சி எங்களைப் போன்ற அப்புகளுக்கு புதிய தெம்பைத் தருகிறது.

இந்தப்பாட்டியின் முயற்சி எங்களைப் போன்ற அப்புகளுக்கு புதிய தெம்பைத் தருகிறது.

என்ன கந்தப்பு ஸ்கூலிற்கு போற பிளானோ ஆனா சைட் அடிகிறதில்லை சொல்லி போட்டேன்........... :P

  • தொடங்கியவர்

nedukkalapoovan தகவலுக்கு நன்றி-

Jamuna, மத்தவங்களுக்கு வயசு போட்டுது எண்டு சொல்லிட்டு நீங்கள் இளமையானவர் எண்டு தப்பப் பாக்கிறீங்களா?

சென்ற வருடம் உலக உதைபந்தாட்ட செய்திகள் ஊடகங்களில் முதன்மை பெற்றிருந்த நேரம் இந்தச் செய்தியும் பலரது கவனத்தை ஈர்ந்திருந்தது. அது- சன் பிரான்ஸிஸ்கோவில் உள்ள கலிலீயோ உயர் கல்லூரியில் தனது 98வது வயதில் ஜோசெப்பின் பெலாஸ்கோ என்ற மூதாட்டி தனது கல்லூரி படிப்பை முடித்திருந்தார். இவரும் அவரைப் போன்றே இளமையில் கற்க முடியாததை முதுமையில் முடித்திருக்கிறார்.

பெண்கள் வயது போனாலும் அசத்துறாங்கப்பா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு எங்களுக்கும் தெம்பிருக்கு பசைதான் இல்லை, வாற பசைகூட ஒட்டுதில்லை இந்தப்போக்கில உதுதேவயோ எண்டு கேக்குதப்பு தெம்பு. :mellow:

சின்னவயதிலை குடும்பப் பொறுப்புகளாலும், சமூகத்திலுள்ள பலரது அசட்டையினாலும் சாதிக்கமுடியாத பலர் இப்போது முதுமைக்காலத்தில் சாதித்து வருகிறார்கள். முதுமைக்காலத்தில் கல்வி கற்பது அவர்களுடைய அறிவு விருத்திக்காகவும், திருப்திக்காகவும் மட்டுமே இக்கல்வி பயன்படுகிறது. இவர்களுக்குச் சிறுவயதிலேயே யாராவது ஊக்கம் கொடுத்திருந்தால் அவர்களது வாழ்க்கை நன்றாக அமைந்திருந்திருக்கும். இருந்தாலும், இந்த வயதிலும் அவர்கள் ஆர்வமோடு கற்றுத் தேர்ந்ததற்கு அவர்களை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

எமது தமிழ் தாத்தா பாட்டிமார், மற்றும் பெற்றோர்களும் தங்கள் கல்வியைத் தொடர்ந்தால் எமது இளைய சமுதாயமும் முன்னேறும். எமது பெரியவர்கள் இன்னும் சிறிய வட்டத்திற்குள்ளேயே நிற்கிறார்கள். வீட்டிலுள்ள பெரியவர்கள் கல்விக் கழகங்களுக்குச் செல்வதன் மூலம் வெளியில் நடக்கும் பல விடயங்களை அறியக்கூடியதாக இருக்கும். தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை வழிநடத்திச் செல்வதும் சுலபமாக இருக்கும்.

என்னவொன்று, பாடங்களைக் கட் அடித்து ஊர்சுற்றுவதற்குத் தடை வந்திடும். கவனமா இருக்கோனும் :P :P :P :mellow::D^_^

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே இவர்களை வாழ்த்த முடியாது. அதனால் போற்றுகிறேன்.

நன்றி ஆரவள்ளி. :mellow::D

Jamuna, மத்தவங்களுக்கு வயசு போட்டுது எண்டு சொல்லிட்டு நீங்கள் இளமையானவர் எண்டு தப்பப் பாக்கிறீங்களா?

அக்கா எனக்கும் இப்ப தான் 5வயசு நான் பேபி ஆக்கும்.............. :P

என்னவொன்று, பாடங்களைக் கட் அடித்து ஊர்சுற்றுவதற்குத் தடை வந்திடும். கவனமா இருக்கோனும் :P :P :P :mellow::D^_^

தமிழச்சி அக்கா கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுறனீங்களோ.............. :P

உண்மையாகவே இவர்களை வாழ்த்த முடியாது. அதனால் போற்றுகிறேன்.

நானும் பெரியப்பாவை போற்றுகிறேன் நீங்களும் இப்படி ஒரு வைத்தியர் ஆக வேண்டும் இந்த முதுமையான காலத்தில்............ :mellow: :P

  • கருத்துக்கள உறவுகள்

குயீன் கிற்றார் வாத்தியக்காரர் இடை நடுவில் கைவிட்ட வானியல் கலாநிதிப்படிப்பை 36 வருடங்களுக்குப் பின்னர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் 9 மாதங்கள் ஆராய்ச்சி செய்து முடித்துள்ளார். எனவே எங்கள் கல்விக் கனவு நிறைவேற வயது ஒருபோதும் தடை இல்லை!

http://news.bbc.co.uk/1/hi/entertainment/6929290.stm

யமுனா, வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே? கட் அடித்து ஊர் சுற்றுவதில் உள்ள சுகமே தனி. பாடங்களில் கோட்டை விடாமல் இருந்தால் போதும்தானே? அதை மட்டும் செய்யமாட்டேன். அதற்காக என்ஜாய் பண்ணாமல் இருக்கவேண்டுமென்பதில்லையே!!!! :lol::lol::lol:

ஏனென்றால் நானும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என விரும்புகிறேன். இப்படியாவது நான் வளர்ந்த சமூகத்திற்கு ஏதாவது செய்வோமே. வரும்போதுதான் ஒன்றும் கொண்டுவரவில்லை. போகும்போதாவது ஏதாவதை விட்டு விட்டுப் போவோமே!!! :o:o :P :P

கிருபன் குறிப்பிட்டவரைப் போல, எமது தமிழ் சமூகத்திலும் பலர் முன்வந்து தங்கள் படிப்பைத் தொடரவேண்டும் என்பதே எனது ஆசை. படிப்பதால் அவர்களுக்கு மட்டுமின்றி தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உதவுகிறார்கள்.

Edited by Thamilachchi

படிப்பா :angry: அந்த பழம் புளிக்கும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவருக்கு வயது 94. ஏழு பிள்ளைகளின் தாயார். பேரப்பிள்ளைகள், அவர்களது பேரப்பிள்ளைகள் என பலதையும் பார்த்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி Phyllis Turner. தனது மருத்துவப் பட்டப் படிப்பை Adelaine இல் வெற்றிகரமாக முடித்து இன்று உலக சாதனையைப் படைத்திருக்கிறார். ஊடகங்கள் பல இவரது சாதனையை வெளியிட்டு மகிழ்கின்றன. எங்களது பங்குக்கு யாழ் இணையத்தின் ஊடாக நாமும் செய்தி வெளியிட்டு மகிழ்வோம்.

என்னத்தை படிசு்சு என்ன? மருத்துவம் படித்தது சரி.. இன்னும் எத்தினை வருடத்திற்கு அந்த சேவையை புரியப்போறா பாட்டி? 5 - 10 வருசம்..?

சாதனை என்றதைவிட வேற என்ன இலாபம்? இச் சாதனையூடாக பாட்டி சொல்லவாற செய்தியென்ன? 90 வயதிலை படியுங்கோ என்றதா?

அது சரி எந்த மருத்துவமனையிலை உவாக்கு வேலை குடுக்கப்போயினம்?

உதிலை காலத்தை கடத்தினதிலையும் பார்க்க அன்னை திரேசா மாதிரி ஏதாவது தொண்டு செய்திருந்தால் திருப்தியோடை போய்ச்சேர்ந்திருக்கலாம்.. புண்ணியமாவது மிஞ்சியிருக்கும்..

:P

Edited by Kishaan

  • தொடங்கியவர்

Kishaanஉங்களது கேள்விக்கு பதில் இதில் இருக்கிறது எண்டு நினைக்கிறேன்.

சின்னவயதிலை குடும்பப் பொறுப்புகளாலும், சமூகத்திலுள்ள பலரது அசட்டையினாலும் சாதிக்கமுடியாத பலர் இப்போது முதுமைக்காலத்தில் சாதித்து வருகிறார்கள். முதுமைக்காலத்தில் கல்வி கற்பது அவர்களுடைய அறிவு விருத்திக்காகவும், திருப்திக்காகவும் மட்டுமே இக்கல்வி பயன்படுகிறது. இவர்களுக்குச் சிறுவயதிலேயே யாராவது ஊக்கம் கொடுத்திருந்தால் அவர்களது வாழ்க்கை நன்றாக அமைந்திருந்திருக்கும். இருந்தாலும், இந்த வயதிலும் அவர்கள் ஆர்வமோடு கற்றுத் தேர்ந்ததற்கு அவர்களை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். எமது தமிழ் தாத்தா பாட்டிமார், மற்றும் பெற்றோர்களும் தங்கள் கல்வியைத் தொடர்ந்தால் எமது இளைய சமுதாயமும் முன்னேறும். எமது பெரியவர்கள் இன்னும் சிறிய வட்டத்திற்குள்ளேயே நிற்கிறார்கள். வீட்டிலுள்ள பெரியவர்கள் கல்விக் கழகங்களுக்குச் செல்வதன் மூலம் வெளியில் நடக்கும் பல விடயங்களை அறியக்கூடியதாக இருக்கும். தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை வழிநடத்திச் செல்வதும் சுலபமாக இருக்கும்.என்னவொன்று, பாடங்களைக் கட் அடித்து ஊர்சுற்றுவதற்குத் தடை வந்திடும். கவனமா இருக்கோனும்
ஒரு வயது போன மூதாட்டிக்கு இவ்வளவு தன்னம்பிக்கை இருக்கிறது எண்டால்... அது மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்காதா?வாழ்வது ஒருவரது உரிமை. அவர் தனது வாழ்நாள் எல்லாம் சமூகத்துக்கும், உலகுக்குமாக வாழ வேண்டும் எண்டு நினைப்பது அவ்வளவு நல்லது இல்லீங்க. அவன் அல்லது அவள் தனக்காகவும் வாழட்டும். தங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யட்டும். அதில் அவர்கள் திருப்தி காணட்டும். இதில் மற்றவர்களுக்கு ஒரு தீங்கும் இல்லையே?இதுக்குப் போய் அன்னை தெரசாவை இழுத்துக் கொண்டு வந்து... பாராட்ட முடியவில்லையா? மனசில்லையா? விட்டிடுங்க.

Edited by aaravally

இல்லை இவங்கள் வெள்ளையங்கள் 70 வயதில தானே தாய்லாந்து சிரிலங்கா போன்ற நாடுகளுக்கும் போறாங்கள்.......... அவங்களுக்கு வயசு ஒரு பிரச்சனையே இல்லை. எங்கட 70 வதுகள் கோயிலை சுத்துறதுதான் மிச்சம். ஒரு பொதுத்தொண்டு செய்ய வாங்கோ எண்டால் , ஏலாது தம்பி வயசு போய்ட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இவங்கள் வெள்ளையங்கள் 70 வயதில தானே தாய்லாந்து சிரிலங்கா போன்ற நாடுகளுக்கும் போறாங்கள்.......... அவங்களுக்கு வயசு ஒரு பிரச்சனையே இல்லை. எங்கட 70 வதுகள் கோயிலை சுத்துறதுதான் மிச்சம். ஒரு பொதுத்தொண்டு செய்ய வாங்கோ எண்டால் , ஏலாது தம்பி வயசு போய்ட்டுது.

ஓமோம். இளம் வயதில் பெட்டைகளைச் சுத்துவினம். முதியவயதில் கோவிலைச் சுத்துகினம். முதிய வயதில் கோவிலைச் சுத்துறது இருக்கட்டும். எத்தனை பேர் இளம்வயதில் உருப்பட்டீர்கள் என்று சொன்னால், கோவிலைச் சுத்துவது பற்றிக் கவலைப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

250_graduate.jpg

12 வயதில் பாடசாலையை விட்டு வெளியேறிய இந்த அம்மையார்.. 94 வது வயதில் (தற்போது) மருத்துவ விஞ்ஞானத்தில் முது விஞ்ஞானமானிப் பட்டத்தை பெற்றுள்ளார்.இவர் 90 வயதில் இக்கல்வியை Australia's Adelaide பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்துள்ளார். இவர் ஏற்கனவே சில பட்டங்களுக்கும் சொந்தக்காரர் ஆவார்.

முயன்றால் முடியாதது எதுவுமில்ல. இதற்கு முக்கியமாக சுற்றம் சூழல் என்ன சொல்லுது என்றதை.. காதில போட்டுக்காத தன்மையை.. வளர்த்துக்கனும்.

http://www.brisbanetimes.com.au/news/life-...5648037601.html

O/L ல பெயில் விட்டால் கராச்சில.. நிப்பாய் என்று சொல்லி வளர்க்கும் நம்மவர்கள் எங்க.. இந்தப் பாட்டி எங்க..??!

இன்று இளையவர்கள் கூட நண்பர்கள் நண்பிகளின் சுற்றத்தின் கதையைக் கேட்டு காதலிப்பவர்களை கூட நடுறோட்டில.. விட்டிட்டு.. ஓடுற காலமப்பா..!

இப்படியான பலவீனக்காரர்களை காதலிப்பதும் துரதிஸ்டம் தான்..! :lol::lol:

சாதிக்க அது காதல் என்றால் என்ன கல்வி என்றால் என்ன.. வாழ்க்கை என்றால் என்ன.. போராட்டம் என்றால் என்ன மன உறுதிதான் முக்கியம்..! :P :lol:

யமுனா, வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே? கட் அடித்து ஊர் சுற்றுவதில் உள்ள சுகமே தனி. பாடங்களில் கோட்டை விடாமல் இருந்தால் போதும்தானே? அதை மட்டும் செய்யமாட்டேன். அதற்காக என்ஜாய் பண்ணாமல் இருக்கவேண்டுமென்பதில்லையே!!!! :lol::lol::lol:

ஏனென்றால் நானும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என விரும்புகிறேன். இப்படியாவது நான் வளர்ந்த சமூகத்திற்கு ஏதாவது செய்வோமே. வரும்போதுதான் ஒன்றும் கொண்டுவரவில்லை. போகும்போதாவது ஏதாவதை விட்டு விட்டுப் போவோமே!!! :o:o :P :P

ஆமாம் தமிழச்சி அக்கா கட் அடித்து போட்டு ஊர் சுற்றுறதில் தனி சுகமே இருகிறது......நாமளும் அப்படி தான்.........ஆமாம் பாடங்களை கோட்டைவிடாம எஞ்ஜோய் பண்ணலாம் தப்பே இல்லை......... :o

அட வரும் போது ஒன்றும் கொண்டுவரவில்லை போகும் போது எதையாவது விட்டுவிட்டு போவோம் நல்லா இருக்கே............எப்படி இப்படி எல்லாம் கட் அடித்ததால வந்த ஞானமோ...........என்னும் கட் அடிக்க வாழ்த்துகிறேன்............. :P

படிப்பா :angry: அந்த பழம் புளிக்கும். :lol:

வாசகண் அண்ணாவிற்கு படிப்பி மேல ஏன் இவ்வளவு கோபம்.............டீச்சரிட்ட நல்லா அடி வாங்கினீங்களோ....... :P

அது சரி எந்த மருத்துவமனையிலை உவாக்கு வேலை குடுக்கப்போயினம்?

உதிலை காலத்தை கடத்தினதிலையும் பார்க்க அன்னை திரேசா மாதிரி ஏதாவது தொண்டு செய்திருந்தால் திருப்தியோடை போய்ச்சேர்ந்திருக்கலாம்.. புண்ணியமாவது மிஞ்சியிருக்கும்..

:P

கிஷான் அண்ணா உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் தோன்றுது..........மருத்துவமனையில வேலை கொடுக்க மாட்டீனம் ஆனா நாலு பேருக்கு சொல்லுவா தானே நான் வைத்தியர் என்று அது தான்......... :P

திரேசா மாதிரி செய்து இருக்கலாம் ஆனா இந்த பாட்டி பல்கலைகழகத்தில் இளைஞர்கள் என்ன எல்லாம் செய்வார்கள் என்று அறிய போய் இருப்பா.........அவாவின்ட ஆர்வத்தை பாராட்ட வேண்டும்.......அதுகாண்டி எல்லா பாட்டிமாரும் பல்கலைகழகதிற்கு வந்தா............பிறகு நான் அந்த பக்கம் போக மாட்டேன்.......... :lol: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.