Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

குருந்தூரில் புத்தர் சிலை நிறுவுதல் தடுத்து நிறுத்தம்

 விஜயரத்தினம் சரவணன்,சண்முகம் தவசீலன்
 
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்துக்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமாக இன்று (12) முன்னெடுக்கப்பட்ட முயற்சி, தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கெனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, குருந்தூர்மலையில் எவ்வித மதக் கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி அங்கு தொல்பொருள் அகழ்வாராட்சி என்னும் போர்வையில் புதிதாக பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட புதிய விகாரைக்குரிய விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், 'கபோக்' கல்லினால் ஆன புத்தர் சிலை ஒன்றினை குருந்தூர் மலையில் நிறுவுவதற்கும் பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச் சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
 
குறிப்பாக கடந்த பல நாட்களுக்கு முன்பிருந்தே இந்த விசேட வழிபாடுகளுக்குரிய ஏற்பாடுகளில் முப்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்ததுடன்,  முப்படையினர் இராணுவ உடையின்றி, சிவில் உடைகளில் இந்த வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளில் நேற்று (12) ஈடுபட்டிருந்தனர்.

இந்த விசேட வழிபாடுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து  பெருந்திரளான பெரும்பான்மை இனத்தவர்களும் பௌத்த பிக்குகளும் அதி சொகுசுவாகனங்கள் மற்றும் பஸ்கள் மூலம் வருகைதந்திருந்தனர்.

இவ்வாறாக வழிபாட்டு முயற்சிகள் இடம்பெறுவதற்கு அப்பகுதித் தமிழ் மக்கள் மற்று, பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான கி.சிவலிங்கம், இ.கவாஸ்கர், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் சமூக சயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள்  இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்கென வருகைதந்த மூவரை வழிமறித்த பொலிஸார் அவர்களைத் தாக்கி கைதுசெய்து, பின்னர் விடுவித்திருந்தனர்.

தொடர்ந்து குறித்த பகுதிக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன், குருந்தூர் மலையையும் பார்வையிட்டிருந்தார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த அனுரமானதுங்க, குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின்மூலம் கிடைத்த எச்சங்களை பேணிப் பாதுகாப்பதற்காக புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளையே தாம் முன்னெடுப்பதாகவும், அங்கு புதிதாக கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்தோடு தமது திணைக்களத்துக்கும், பௌத் துறவிகளுக்கும் இராணுவத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இருப்பினும் அவர் தெரிவித்த கருத்துக்கு மாறாக முன்பிருந்ததைவிட குருந்தூர் மலையில் பெரிய பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குருந்தூர்மலையில் பெருமளவான, பௌத்த பிக்குகளும், முப்படையினரும் வழிபாடுகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதேவேளை, இதன்போது குருந்தூர் மலையைச்சூழ உள்ள வயல்நிலங்கள் தொல்லியல் இடமெனக்கூறி, பௌத்தபிக்கு தமிழ் மக்களைத் தடுப்பது தொடர்பிலும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அவ்வாறு பௌத்த பிக்குகள் தடுப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என அவர் அதற்குப் பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த விசேட வழிபாட்டு முயற்சிகள் நிறுத்தப்பட்டது.

அந்தவகையில்  முன்னெடுக்கப்பட்ட விசேட வழிபாடுகளுக்கான முயற்சிகள் நிறுத்தப்பட்டதுடன், பிறிதொருநாளில் இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், தமிழ் மக்கள், இதனோடு தொடர்புடைய திணைக்களங்கள், அமைச்சர் உள்ளிட்டவர்களுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/கரநதரல-பததர-சல-நறவதல-தடதத-நறததம/46-298348

  • Replies 52
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, கிருபன் said:

இந்த விசேட வழிபாடுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து  பெருந்திரளான பெரும்பான்மை இனத்தவர்களும் பௌத்த பிக்குகளும் அதி சொகுசு வாகனங்கள் மற்றும் பஸ்கள் மூலம் வருகைதந்திருந்தனர்.

இலங்கையில் பஞ்சம் ,பசி , பட்டினி என்டு ஊரை ஏமாத்துகினமா.. ரெல் மீ..?

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, கிருபன் said:

மக்கள்  எதிர்ப்பு தெரிவித்தால், அரச இயந்திரத்தின் சூழ்ச்சியை 
முறியடிக்க முடியும் என்பதற்கு நல்ல உதாரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

மக்கள்  எதிர்ப்பு தெரிவித்தால், அரச இயந்திரத்தின் சூழ்ச்சியை 
முறியடிக்க முடியும் என்பதற்கு நல்ல உதாரணம். 

உண்மைதான்,     சிங்களத்திடம் எந்த மாற்றமும் நிகழாது என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தமிழ் அரசியல்வாதிகள் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக சிங்களத்துக்கு முண்டுகொடுப்பதையும், பிணையெடுப்பதையும் விடுத்து ஆக்கிமிக்கப்பட்ட, ஆக்கிரமிக்கப்படும் தமிழர் நிலங்களையும், அத்துமீறி பெனத்தரல்லாத தமிழரது வாழ்விடங்களில் அமைக்கப்படும் பௌத்த சின்னங்களையும் அடையாளப்படுத்துவதோடு, ஆவணப்படுத்தி  சிங்கள முற்போக்கு சக்திகளுட்படத் தூதுவராலயங்கள், ஐநா போன்றவற்றுக்கு அனுப்புகின்ற ஒரு தொடர்வேலைத்திட்டத்தை செய்வதனூடாக  இவற்றைத் தடுப்பதற்கான செயற்பாடுகளை ஏன் செய்கிறார்களில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

அங்கு புதிதாக கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

2 hours ago, கிருபன் said:

குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின்மூலம் கிடைத்த எச்சங்களை பேணிப் பாதுகாப்பதற்காக புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளையே தாம் முன்னெடுப்பதாகவும், அங்கு புதிதாக கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

2 hours ago, கிருபன் said:

பௌத்த பிக்குகள் தடுப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என அவர் அதற்குப் பதிலளித்திருந்தார்.

மாவிலும் நோகாமல், மாங்காயிலும் தேயாமல், இலகுவான, பொறுப்பான, தான் தப்பிக்கும் பதில். தான் குறித்த வேலைக்கென பொறுப்படுத்த காணிகளை அதற்குரிய வேலைகளுக்கு பயன்படுத்தி, தேவையற்ற காணிகளை உரியவர்களிடம் பொறுப்பு கொடுத்திருக்க வேண்டும். அல்லது குறித்த வேலையோடு தொடர்பில்லாதவர்கள் நுழைவதை தடுத்திருக்க வேண்டும். ஒரு விகாரை கட்டி, பிரதிஷ்டை செய்யிற அளவுக்கு வந்திருக்கு, தனக்கு எதுவும் தெரியாது என்று கையை விரிப்பது சுத்த சிறுபிள்ளைத்தனம், மொள்ளைமாரித்தனம். இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். எங்கே எங்கள் சட்டாம்பி? அழைத்து வாருங்கள்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குருந்தூர் மலையில் புத்தரின் சிலையை வைத்து வழிபட முயற்சி – ஜேசுதாசன் கண்டனம்

குருந்தூர் மலையில் புத்தரின் சிலையை வைத்து வழிபட முயற்சி – ஜேசுதாசன் கண்டனம்

தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்கு
அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலைப்பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு இனங்காணப்பட்ட தொல்பொருள் இடத்தில் புதிதாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விகாரையில் சிறப்பு வழிபாடு ஒன்றினை மேற்கொள்ள தென்னிலங்கையில் இருந்து பௌத்த மதகுருமார்கள், மக்கள் என பலர் நேற்று வருகைதந்தபோது எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்களின் நடவடிக்கையினால் இந்த வழிபாடுகள் கைவிடப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அன்ரனி ஜேசுதாசன் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்கு தென்னிலங்கையிலிருந்து குழுவாகச் சென்று பௌத்த பிக்குகள் எடுத்த முயற்சி அதற்கு பாதுகாப்பு படையினர் வழங்கிய பாதுகாப்பு இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாக இருக்கிறது.

30 வருட கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிலைமாறுகால நீதியினை நிலைநாட்டிநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு 2009-க்கு பிறகு ஆட்சிக்கு வந்த எந்த அரசும் சரியான முயற்சிகளை எடுக்கவில்லை.

இந்தநிலையில் வடக்குப் பகுதியில் இருக்கின்ற காணிகளையும் அந்த மக்களுடைய பாரம்பரிய சொத்துக்களையும் சூறையாடுவதற்கு எடுக்கின்ற முயற்சி மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

இராணுவமயமாக்கல், வன பாதுகாப்புத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என கூறி மக்களுடைய காணிகளையும் வரலாற்று சின்னங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கையினை இந்த அரசாங்கம் முற்றாக நிறுத்த வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

VideoCapture_20220613-120802-600x330.jpg

https://athavannews.com/2022/1286766

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nochchi said:

உண்மைதான்,     சிங்களத்திடம் எந்த மாற்றமும் நிகழாது என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தமிழ் அரசியல்வாதிகள் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக சிங்களத்துக்கு முண்டுகொடுப்பதையும், பிணையெடுப்பதையும் விடுத்து ஆக்கிமிக்கப்பட்ட, ஆக்கிரமிக்கப்படும் தமிழர் நிலங்களையும், அத்துமீறி பெனத்தரல்லாத தமிழரது வாழ்விடங்களில் அமைக்கப்படும் பௌத்த சின்னங்களையும் அடையாளப்படுத்துவதோடு, ஆவணப்படுத்தி  சிங்கள முற்போக்கு சக்திகளுட்படத் தூதுவராலயங்கள், ஐநா போன்றவற்றுக்கு அனுப்புகின்ற ஒரு தொடர்வேலைத்திட்டத்தை செய்வதனூடாக  இவற்றைத் தடுப்பதற்கான செயற்பாடுகளை ஏன் செய்கிறார்களில்லை. 

May be an image of 3 people, people smoking, people standing, indoor and text that says 'POLICE'

இந்த எதிர்ப்பு நிகழ்வில்.... கஜேந்திரகுமார் மட்டும்தான் கலந்து கொண்டவர் போல் தெரிகின்றது.

கூட்டமைப்பு எம்பிக்கள்... வழமை போல், கோமா நிலையில் ஆழ்ந்த உறக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people, people smoking, people standing, indoor and text that says 'POLICE'

இந்த எதிர்ப்பு நிகழ்வில்.... கஜேந்திரகுமார் மட்டும்தான் கலந்து கொண்டவர் போல் தெரிகின்றது.

கூட்டமைப்பு எம்பிக்கள்... வழமை போல், கோமா நிலையில் ஆழ்ந்த உறக்கம்.

பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பதால், விட்டிருக்கினம் போல கிடக்குது.....

நாளை, அரச ஊழியர்கள் ஜந்து வருட லீவில் வெளிநாட்டு வேலை போகலாம் என்ற பிரேரணை, அமைச்சரவைக்கு போகிறது.

அதாவது, உலகவங்கி கடன் கொடுக்க ஒரு நிபந்தனையாக, அரச, பாதுகாப்பு துறையில் ஆள்குறைப்பு செய்ய சொல்லி உள்ளது.

அதுக்கு முதல்படியே இந்த பிரேரணை.

அத்துடன், ராஜபக்சேக்கள் பலவீனமாக இருப்பதால்.... பழைய தினாவெட்டு இல்லை என்பதால் பேசாமல் கிளம்பிப் போயிருக்கிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பதால், விட்டிருக்கினம் போல கிடக்குது.....

நாளை, அரச ஊழியர்கள் ஜந்து வருட லீவில் வெளிநாட்டு வேலை போகலாம் என்ற பிரேரணை, அமைச்சரவைக்கு போகிறது.

அதாவது, உலகவங்கி கடன் கொடுக்க ஒரு நிபந்தனையாக, அரச, பாதுகாப்பு துறையில் ஆள்குறைப்பு செய்ய சொல்லி உள்ளது.

அதுக்கு முதல்படியே இந்த பிரேரணை.

அத்துடன், ராஜபக்சேக்கள் பலவீனமாக இருப்பதால்.... பழைய தினாவெட்டு இல்லை என்பதால் பேசாமல் கிளம்பிப் போயிருக்கிறார்கள்.

குருந்தூர் மலையில் புத்தரின் சிலையை வைத்து வழிபட முயற்சி – ஜேசுதாசன் கண்டனம்

அத்திவாரம் எல்லாம் போட்டிருப்பதால்... 
அடிக்கடி அலுப்பு கொடுத்துக் கொண்டு இருப்பார்கள்.
தேவையில்லாமல்... பல இடங்களில், மனித சக்தி வீணாகி கொண்டு இருக்கின்றது.
அந்த நேரங்களை...  வேறு நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தலாம்.
அது... இனவாத, மதவாத அரசுகளுக்கு புரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people, people smoking, people standing, indoor and text that says 'POLICE'

இந்த எதிர்ப்பு நிகழ்வில்.... கஜேந்திரகுமார் மட்டும்தான் கலந்து கொண்டவர் போல் தெரிகின்றது.

கூட்டமைப்பு எம்பிக்கள்... வழமை போல், கோமா நிலையில் ஆழ்ந்த உறக்கம்.

சுமந்திரா மகாத்தயா போன்ற ஐயாமாருக்கு ரணிலாரோடை டீல்போடவே நேரம் போதாமையிருக்கேக்க எப்பிடி இதுகளை யோசிக்கிறதாம்!

நன்றி

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கு, கிழக்கு மாகாண நிலத்தை பறித்து மதத்தை திணிக்கிறார்கள் - து.ரவிகரன்

வடக்கு, கிழக்கு மாகாண நிலத்தை பறித்து மதத்தை திணித்து கொண்டிருக்கின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் விகாரை வைப்பதற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் சாப்பிட வழியில்லை உணவுக்கு, எரிபொருளுக்கு, எரிவாயுவுக்கு என அலைகின்றார்கள். விலைவாசி ஏற்றம், மின்சார பற்றாக்குறை, இவ்வாறு தொடர்ச்சியாக மக்கள் அல்லல்பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அரசாங்கமும், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் தங்களுடைய வேலைகளை அதாவது காணி பறிப்பு வேலைகளையும், மதத் திணிப்பு வேலைகளையும், கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றார்கள். 

இப்படியான நடவடிக்கையால் மக்கள்  கஷ்டத்தின் மத்தியில்  துவண்டு போய் இருக்கின்றார்கள். உங்களுக்கு தெரியும். மூன்று தினங்களுக்கு முதல் வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் நில அளவை திணைக்களம் அளக்க வந்த போது அங்கு நாங்கள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மக்களுக்கான வழியிலே அதை மீட்க முடிந்தது. 

ஆனால் எப்போது திரும்ப வருகின்றார்களோ தெரியாது. 

அதே போல் இன்றைக்கு குருந்தூர் மலையில் பகிரங்கமாக ஒரு புத்தர் சிலையை வைக்கப் போவதாக அறிவித்துவிட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் கூட இங்கே வந்து தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். 

இப்படியான நேரத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு அறுபது பேருக்கு மேல் வந்து உடனடியாக அவர்களை ஒரு இடத்திலும் நுழைய விடாமல் இப்படியான விழாக்கள் போன்ற நடவடிக்கைகளை செய்யவிடாமல் புத்த மத திணிப்புகளை மேற்கொள்ளப்படாமல் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம். 

ஈற்றில் எங்களுக்கு பதில் வழங்கிய தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அல்லது அதனோடு சேர்ந்த காவல்துறையினர் எல்லோருமாக கூறிய ஒரு பதில் தாங்கள் உடனடியாக நிறுத்துகின்றோம் என்றும் மேற்கொண்டு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் உட்பட இதனோடு சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளை  அழைத்து இதற்கான ஒரு சரியான முடிவு கிடைத்ததன் பின்பு தாங்கள் இந்த பணிகளை தொடர்வதாக கூறி இருக்கின்றார்கள்.  ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. 

இப்போது இங்கே வந்து பார்த்த போது ஒன்று தெரிகிறது. இங்கே இருந்த எங்களுடைய  சைவ அடையாளங்களும் இல்லை. இப்படியான ஆக்கிரமிப்பானது சிங்கள, பௌத்த இனவாதிகளிடம் ஊன்றிப் போய் எங்களுடைய வடக்கு, கிழக்கு மாகாண  நிலத்தை இன்னும் பறித்து கொண்டிருக்கிறார்கள். 

மதத்தை திணித்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் மக்களுடன் சேர்ந்து மிகவும் சிரமத்தின் மத்தியிலே இதனை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/129444

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாப்பாட்டுக்கு சிங்கி அடித்தாலும் தமிழின விரோத செயற்பாடடை இவர்கள் நிறுத்தப் போவதில்லை. இந்த இலட்சணத்தில காலிமுகத்திடல் போராட்டத்திற்கு தமிழ்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். அதற்கு சுமத்திரன் போன்ற புல்லுருவிகளும் உடந்தையாக இருக்கிறார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது, இரத்தத்தோடு ஊறிய வியாதி. சும்மா இருந்து சாப்பிடுவதும், தமிழரோடு கொழுத்தாடு பிடிப்பதும். தமிழர் நிம்மதியாக வாழக்கூடாது என்பதற்காக அங்கங்கு சொறியிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, satan said:

இது, இரத்தத்தோடு ஊறிய வியாதி. சும்மா இருந்து சாப்பிடுவதும், தமிழரோடு கொழுத்தாடு பிடிப்பதும். தமிழர் நிம்மதியாக வாழக்கூடாது என்பதற்காக அங்கங்கு சொறியிறது.

இலங்கையில் தமிழர் மேல் சொறியலை நேரடியாக, ஒளிவு மறைவு இல்லாமல் நடாத்த தொடங்கியவர் சிறிமா.

அவரது காலத்தில் இருந்து இன்றும் தொடரும் இந்த சொறியல் பத்தி, இந்த கட்டுரையில் வாசியுங்கள்.

https://www.colombotelegraph.com/index.php/antics-of-rajapaksas-viceroy-in-the-volatile-north/

சரியாக பார்த்தால், கிறிஸ்தவ சிங்களவர்கள், அல்லது  பௌத்தர்களாக நடித்த கிறிஸ்தவ சிங்களவர்கள் தான் மிக அதிகமான துவேசம் காட்டி உள்ளனர்.

சொலமன் வில்சன் டயஸ் பண்டாரநாயக்க, அவரின் மனைவி, மகள், ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே, அவர் மகன் ரவி ஜெயவர்த்தனே, டான் ஆல்வின் ராஜபக்சேயின் மகன் மகிந்தா பெர்சி ராஜபக்சே சகோதரர்கள்.

அதுக்கு முன்னர் கல்லோயா திட்டத்தினை அறிமுகப்படுத்தி மறைமுகமாக துவேசம் காட்டிய, மலையக தமிழர்களை, திருப்பி அனுப்பிய, டொன் ஸ்டீபன் சேனாநாயக்க, அவர் மகன் டட்லி சேனநாயக்க... 

சிறில் மத்தியூ, நெவில் பெர்னாண்டோ, இந்த கட்டுரையில் சொல்லப்படும் டயஸ்.....

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Nathamuni said:

சரியாக பார்த்தால், கிறிஸ்தவ சிங்களவர்கள், அல்லது  பௌத்தர்களாக நடித்த கிறிஸ்தவ சிங்களவர்கள் தான் மிக அதிகமான துவேசம் காட்டி உள்ளனர்.

  இவர்களுக்கு ஒரு மதம் என்று ஒன்றில்லை, பதவிக்காக அங்கும் இங்கும் ஓடித்திருந்து, கலகங்களை ஏற்படுத்தி, சுயலாபம் அடைபவர்கள், எதிலும் நிலையாய் நிற்க மாட்டார்கள். அவர்களது மதம், கடவுள்: பணம், பதவி. இதற்குள் ஒன்றுமறியாத மதம் சிக்கி காயப்படுகுது. இந்த குருந்தூர் மலை விவகாரம் இப்போது பெரிது படுத்தப்படுவதன் நோக்கம்; ஒன்று சேர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கூர்ந்தது, தமிழரின் நிஞாயங்களுக்காக எழுந்த குரலை அடியோடு நசுக்கி, ஒரு இனமோதலை ஏற்படுத்தவே. அதுவரை இது ஓயாது, ஊதிப்பெருப்பிக்கப்படும். சர்வதேசத்தின் உதவியை நாடுவது நல்லது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  கோத்தா கோகமவை திசைதிருப்பி அமைதியான தமிழரின் வாழ்வில் பாயவிட திட்டமிட்டு அனுப்பப்பட்டுள்ளது. வடபகுதி மக்களை கோத்தாகமவுக்கு அழைத்தவரை இங்கு காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிறிஸ்தவர்களாக நடித்த சிங்கள பவுத்தர் என்றுதான் வந்திருக்க வேண்டும். காரணம் பவுத்தத்திலிருந்து பதவி, கல்விவாய்ப்புகளுக்காக கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் மீண்டும் அதே பதவி, அதிகாரத்துக்காக பவுத்தர்களாக மாறினார்கள். எனது தனிப்பட்ட கருத்து யாதெனில்; கிறிஸ்தவர்களாக  மாறிய பவுத்தர்களை மீண்டும் பவுத்தத்திற்கு இழுப்பதற்கே சில அரசியல் அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, nunavilan said:

தமிழகத்தில் இருந்து வந்த பிச்சையை வாங்கி திண்டு போட்டு, கொழுப்பு பிடிச்சு திரியிறாங்கள்....

இப்பவாவது, நமது ஆட்களுக்கு துணிவு வந்திருக்கு...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் சிவன் வழிபாடு நடந்ததாகக் கூறப்படும் தமிழர் பகுதியில் பௌத்த அடையாளங்களை வைக்க முயற்சி - பின்னணி என்ன?

  • மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 
இலங்கை குருந்தூர் மலை

இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை பிரதேசத்தில் ஆதி சிவன் வழிபாடுகள் நடந்து வந்த குருந்தூர் மலையில், பௌத்த அடையாளங்களை வைப்பதற்கு பௌத்த பிக்குகள் முயற்சித்தனர். இதை அந்தப் பிரதேச தமிழ் மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராஜா கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தினர்.

இலங்கை குருந்தூர் மலைப்பகுதியில் பண்டைய காலத்தில் தமிழ் மன்னர்களின் அரண்மனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. 1932ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் குறித்த பகுதி, தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இங்கு ஆதி சிவன் சைவ வழிபாடுகள் நடந்ததாக சான்றுகள் உள்ளன என்கிறார், நேற்று முன்தினம் பௌத்த பிக்குகளின் முயற்சிக்கு எதிர்ப்பினை வெளியிட்ட, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்.

உள்நாட்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், குறித்த இடத்தில் பௌத்த பிக்குகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்தனர். இதனால் அந்தப் பகுதியில் வழிபாடுகளில் ஈடுபட்டுவந்த தமிழ் மக்களுக்கும், பௌத்த பிக்குகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.

"நீதிமன்றம் உத்தரவிட்டும் அத்து மீறல்"

இலங்கை குருந்தூர் மலை போராட்டம்

படக்குறிப்பு,

போராட்டம் நடத்திய தமிழர்கள்

இந்தப் பின்னணியில் 2018ஆம் ஆண்டு இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அந்தப் பகுதியிலுள்ள தமிழ் மக்கள் - முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் எந்தவிதக் கட்டுமான வேலைகளையும் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அங்கிருந்த தமிழர்களுக்குரிய அடையாளங்களை அகற்றி விட்டு, பௌத்தர்கள் அங்கு கட்டுமானங்களை மேற்கொள்ள முயற்சித்தமை காரணமாகவே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்ததாக கஜேந்திரன் எம்.பி கூறினார்.

இவ்வாறிருக்க 2021 டிசம்பர் காலப்பகுதியில் அங்கு தொல்பொருள் திணைக்களத்தினர் அகழ்வுப் பணியொன்றை மேற்கொண்டனர். அதனால் அங்கு வெளியார் யாரும் செல்ல முடியாதிருந்தது.

"இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அந்த இடத்தில் பழைய தோற்றப்பாட்டைக் கொண்ட பௌத்த தாது கோபுரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது" என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்.

தற்போது நடந்தது என்ன ?

இலங்கை குருந்தூர் மலை போராட்டம்

அவ்வாறு அமைக்கப்பட்ட தாது கோபுரத்தில் கலசங்களை அமைத்து, புத்தர் சிலைகளை வைப்பதற்காகவே 13ம் தேதி அங்கு பெருமளவிலான பௌத்த பிக்குகள் வந்திருந்தனர். ஆனால், அந்த முயற்சிக்கு அந்தப் பகுதியிலுள்ள தமிழ் மக்கள் திரண்டு வந்து, தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.

ஜூன் 13ம் தேதி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை, இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியவாறு அங்கு இருந்தனர்.

"குருந்தூர் மலை பிரதேசம் தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த இடம் அப்படியே வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர, அங்கு புதிய கட்டுமானங்கள் எதனையும் மேற்கொள்ள முடியாது. ஆனால், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரும், அந்தத் திணைக்களம் சார்ந்தோரும் - முழுவதுமாக பௌத்த பிக்குகளுக்கு சார்பாகவும், வரலாற்றைத் திரிபுபடுத்தும் வகையிலும் அங்கே புராதன தாதுகோபுரம் ஒன்று இருந்ததைப் போன்ற தோற்றப்பாடொன்றினைக் காட்ட முற்படுகின்றனர்" என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிபிசி தமிழிடம் கூறினார்.

இப்போது ஏன் இந்த முயற்சி?

இலங்கை குருந்தூர் மலை போராட்டம்

தேவையற்ற விதத்தில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இன, மத முறுகலை ஏற்படுத்தும் நோக்குடன் இன்றைய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகவே தாம் இதைப் பார்ப்பதாக கஜேந்திரன் தெரிவித்தார். சிங்கள மக்களிடையே தமது செல்வாக்கினை உயர்த்தும் எண்ணத்துடன் தமிழர் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறான காரியங்களை ஆட்சியாளர்கள் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குருந்தூர் மலை விடயத்தில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி அங்கு கட்டுமான வேலைகள் நடப்பதற்கு தமிழ் மக்கள் நேற்றைய தினம் எதிர்ப்பை வெளியிட்டபோது, அவர்களில் மூன்று இளைஞர்களைப் பொலிஸார் பிடித்து மிக மோசமாக தாக்கியதாகவும், பின்னர் சில மணி நேரங்களின் பின்னர் அவர்களை விடுவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இதன்போது மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் கே. விமலநாதனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது; இது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைமுறையில் இருக்கும் போது, அங்கு நிர்மாண வேலைகள் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61813449

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ..கோட்டா கோஸ்டிக்கு கிடைத்த முதல் வெற்றி...இனவாதம் மதவாதம் தம்மால்தான் வெல்லமுடியும் என்று..சிங்கள இனத்துக்கு அடித்துச் சொல்ல ..நல்ல சந்தற்பம்... பிக்குமாரும் துவேசிகளும் பின்னால் திரள்வர்...மீண்டும் கோட்டா..மகிந்த ஆட்சி விரைவில்...பட்டினி கிடந்தாலும்...புத்தமே எமக்குமுக்கியம்..தமிழனுக்கு வெற்றியல்ல... தலையறுப்பு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காவி போர்த்திய இராணுவம் இங்கு வந்து வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு செய்து, மீண்டும் ஒரு இரத்தக்களரியை ஏற்படுத்தி, சிங்கள தமிழ் மக்கள் மோதலில் தங்கள் ஊழலை மறைத்து, அரசியலை தக்கவைத்து தப்பிக்கும் முயற்சியை தென்பகுதி மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் உடனுக்குடன் அறிவிப்பதன் மூலமே ஏற்படப்போகும் விபரீதங்களை தடுக்க முடியும். புலம் பெயர் தமிழரை அழைத்துக்கொண்டு செய்யும் வேலையா இது? இதுதான் புத்த தர்மத்தின் இரண்டு பக்கம். அண்மையில் ஒரு பிக்குவின் பாவ மன்னிப்பு பேட்டி இங்கு இணைக்கப்பட்டது, இன்று இந்தபிக்குகளின் அடாவடியை காணமுடிகிறது. திருட்டு; புத்தரின்  பெயரால். தமிழ் மக்களை வேண்டுமென்று சீண்டி, பிக்குகளின் மேல் கைவைக்கப்பண்ணி, அதைவைத்து பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஒவ்வொருவரின் புகைப்படமும் சர்வதேச, நாடளாவிய ரீதியில் வெளிப்படுத்தப்படவேண்டும். எங்கிருந்தோ காணி பிடிக்க வருகிறார்கள்,  தமிழரின் பிரதிநிதிகள் நாங்கள், கோத்தா கோகமாவுக்கு தமிழரும் போகவேண்டும் என்று அறிவுறுத்தியவர்கள் தங்கள் காணிகளை பாதுகாக்க வராதது ஏனோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குருந்தூர் மலை விவகாரம்: 23 ஆம் திகதி விசாரணை

சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன் 

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட  விஹாரை கட்டுமானப் பணித்தொடர்பிலும், வழக்குத் தொடர்பிலும்  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் பொலிஸாரிடம்  விளக்கம் கோரியுள்ளது. 

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் 12ஆம் திகதியன்று  'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விஹாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், குருந்தூர்மரை தொடர்பில் ஏற்கெனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பில், நேற்று (16) நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். 

அதன்போது, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அனைத்து நகர்த்தல் பத்திரங்கள், நீதிமன்றம் ஏற்கெனவே, வழங்கிய கட்டளைகளை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விஹாரை தொடர்பிலும்,  இந்த வழக்குத் தொடர்பில், நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை பொலிஸார் தொடர்ச்சியாக வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

அந்தவகையில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும், பொலிஸார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆழ்ந்து அவதானித்த நீதவான்,  வழக்குத் தொடுனரான பொலிஸார், குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் 23 ஆம்திகதி இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு திகதியிட்டுள்ளார்.

இது தொடர்பில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான  எஸ்.தனஞ்சயன் கருத்து தெரிவிக்கையில்,
குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற வழக்கு, குருந்தூர்மலை ஆதி ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சார்ந்த மக்களால்  நகர்த்தல் பத்திரம் அழைக்கப்பட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே சமர்ப்பணம் செய்யப்பட்டது.

இந்தவழக்கில் 13.09.2018 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால், மிகத் தெளிவான கட்டளை ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அக்கட்டளையிலே, குருந்தூர்மலைப் பிரதேசம் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் வருகின்ற பிரதேசம் எனவும், அப்பிரதேசத்திலே புதிதாக எவ்விதமான கட்டடங்களையும் அமைக்க முடியாது எனவும் அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் பரம்பரையாக வழிபாடுசெய்கின்ற சைவர்கள் அங்கு வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் எனவும், அதனை யாராலும் தடுக்க முடியாது. எனவும் அத்தோடு ஏனைய புதிய கட்டடங்களை அமைக்கும், விஹாரைகளை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களை கைதுசெய்யலாம் எனவும் கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

அந்தக்கட்டளையினை மீறியே தற்போது அங்கு புதிதாக ஒரு விஹாரை அமைக்கப்பட்டு, அந்தவிஹைரையில் 12.06.2022அன்று, விசேட பூசை வழிபாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இச்செயற்பாடுகளுக்கு எதிராக ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச்சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்ந நிகழ்வுளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இன்றையதினம் (நேற்று) இருதரப்பு வாதங்களையும் ஆழ்ந்து அவதானித்த நீதவான், வழங்குத் தொடுனர் தரப்பான பொலிஸார் இந்த வழக்குத் தொடர்பாக தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நீதிமன்றிலே கூறுவதற்காக, இந்த வழக்கு விசாரணைகளை இந்தமாதம் 23 ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/குருந்தூர்-மலை-விவகாரம்-23-ஆம்-திகதி-விசாரணை/175-298659

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.