Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம், சர்வதேச விமான நிலையம் ஊடாக... ஜூலை 1 ஆம் திகதி முதல், விமான சேவை ஆரம்பம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?

யாழ்ப்பாணம், சர்வதேச விமான நிலையம் ஊடாக... ஜூலை 1 ஆம் திகதி முதல், விமான சேவை ஆரம்பம்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, விமான நிலையத்தை பார்வையிட்டார்.

இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறினார்.

மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாகவும் அதனூடாக புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்திற்கு திரும்ப முடியும் என்றும் கூறினார்.

https://athavannews.com/2022/1287559

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்.இந்தியாவுக்கு மட்டுமா ஏனைய நாடுகளுக்கும் பறக்குமா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நல்ல விடையம்.இந்தியாவுக்கு மட்டுமா ஏனைய நாடுகளுக்கும் பறக்குமா.

பிரச்சணை இல்லை..... சுவிசுக்கு ஒரு பிளேனை விட்டாப் போச்சு...

அட உங்களுக்கு இல்லாமலே.... 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிரச்சணை இல்லை..... சுவிசுக்கு ஒரு பிளேனை விட்டாப் போச்சு...

அட உங்களுக்கு இல்லாமலே.... 😁

மொட்டை மாடிக்கு வந்தால் நல்லாய் இருக்கும்.😄

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?

ஆகா, நம்ம ராசவன்னியர் உல்டா படம் .... 🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

ஆகா, நம்ம ராசவன்னியர் உல்டா படம் .... 🤔

இதுதானே? 👇 🤭 🤗

maxresdefault.png

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறினார்.

13 hours ago, தமிழ் சிறி said:

அதனூடாக புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்திற்கு திரும்ப முடியும் என்றும் கூறினார்.

புலம் பெயர் தமிழரை கவரும் திட்டம். ஒருபுறம் வலிந்து அழைக்கிறார்கள், மறுபுறம் ஒரு இனமோதலுக்கு ஆயத்தப்படுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு வாற விமானங்களுக்கே எரிபொருள் நிரப்ப முடியலை.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காகத்தான் புலம்பெயர் தமிழரை மயக்குகினம் வலை விரிக்கினம்.

வடக்கின் வசந்தம் சொல்லிக்கொடுத்திருப்பாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'திருக்கேதீச்சர கும்பாபிஷேகத்திற்கான விசேட விமான சேவை திருச்சி (TRZ) சென்னை (MAA) இரு வழி ₹16,000 வரிகள் இரு வழி ₹20,000 யாழ்ப்பாணம் JAF) வரிகள் யாழ்ப்பாணம் (JAF) ஜூலை ஜூலை 14 (தினசரி சேவை) யாழ்ப்பாண்த்தில் தங்குமிட வசதிகள் (attached bath) நபருக்கு ₹ 2500 ++ twin sharing ₹ 2000 ++ தினசரி A/C பேருந்து போக்குவரத்து சேவை ₹ 500 நபருக்கு 1 நாளைக்கு சைவ உணவு ஆலய சுற்றாடலில் பெற்றுக்கொள்ளலாம் பயண ஒழுங்குகளுக்கு: SERFICEE IndSri Ferry Services Pvt Ltd (Chennai) +91 9500959345 91 9952199899 indsri.ferry@gmail.com'

சென்னை,  திருச்சியில் இருந்து....  
திருக்கேதீஸ்வர கும்பாபிஷேகத்திற்காக,  
விசேட விமான சேவைகள்... 1´ம் திகதியில் இருந்து ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவா? நீங்களும் மாதனமுத்தாக்களுடன் இணைந்து விட்டீர்கள் போலுள்ளதே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'திருக்கேதீச்சர கும்பாபிஷேகத்திற்கான விசேட விமான சேவை திருச்சி (TRZ) சென்னை (MAA) இரு வழி ₹16,000 வரிகள் இரு வழி ₹20,000 யாழ்ப்பாணம் JAF) வரிகள் யாழ்ப்பாணம் (JAF) ஜூலை ஜூலை 14 (தினசரி சேவை) யாழ்ப்பாண்த்தில் தங்குமிட வசதிகள் (attached bath) நபருக்கு ₹ 2500 ++ twin sharing ₹ 2000 ++ தினசரி A/C பேருந்து போக்குவரத்து சேவை ₹ 500 நபருக்கு 1 நாளைக்கு சைவ உணவு ஆலய சுற்றாடலில் பெற்றுக்கொள்ளலாம் பயண ஒழுங்குகளுக்கு: SERFICEE IndSri Ferry Services Pvt Ltd (Chennai) +91 9500959345 91 9952199899 indsri.ferry@gmail.com'

சென்னை,  திருச்சியில் இருந்து....  
திருக்கேதீஸ்வர கும்பாபிஷேகத்திற்காக,  
விசேட விமான சேவைகள்... 1´ம் திகதியில் இருந்து ஆரம்பம்.

பாடல் பெற்ற திருத்தலம் எண்டு போட்டால் தானே சனம் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பாடல் பெற்ற திருத்தலம் எண்டு போட்டால் தானே சனம் வரும்.

இந்த விளம்பரம்.... தமிழ்நாட்டில் இருந்து,
உல்லாச பயண முகவர்களால் வெளியிடப் பட்டது. 

தனியார் நிறுவனம் என்ற படியால்...
விமானம் நிரம்புற அளவுக்கு... ஆட்களை சேர்த்து விடுவார்கள்.
என நினைக்கின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

இதுதானே? 👇 🤭 🤗

maxresdefault.png

கடைசீல, நீங்கள் சொன்ன மாதிரி, எமிரேட்ஸ் இறங்க போகுது போல...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

கடைசீல, நீங்கள் சொன்ன மாதிரி, எமிரேட்ஸ் இறங்க போகுது போல...

சிங்கம் இறங்கி வந்தால் எல்லாம் இறங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சென்னை,  திருச்சியில் இருந்து....  
திருக்கேதீஸ்வர கும்பாபிஷேகத்திற்காக,  
விசேட விமான சேவைகள்... 1´ம் திகதியில் இருந்து ஆரம்பம்.

எங்க சார் ரிக்கட் எடுப்பது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்க சார் ரிக்கட் எடுப்பது?

அந்த விளம்பரத்தின் அடியில், 
சென்னை  தொலைபேசி இலக்கம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Ferry service என்று இருக்கு.ஒரே குழப்பமா இருக்கே?

14 minutes ago, தமிழ் சிறி said:

அந்த விளம்பரத்தின் அடியில், 
சென்னை  தொலைபேசி இலக்கம் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

Ferry service என்று இருக்கு.ஒரே குழப்பமா இருக்கே?

அதானே... சிலவேளை, டுபாக்கூர்  கொம்பனியோ.... 😮
எதுக்கும்... முதல் குரூப், திருக்கேதீஸ்வரத்துக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வரட்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அதானே... சிலவேளை, டுபாக்கூர்  கொம்பனியோ.... 😮
எதுக்கும்... முதல் குரூப், திருக்கேதீஸ்வரத்துக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வரட்டும். 🤣

சைவ உணவு வேற கோவில் சுற்றாடலில் எடுக்கலாம் என்கிறார்கள்.

அதுசரி கோவிலுக்கு போறவர்கள் விரதத்துடன் போய்வந்தால்த் தான் பலன் கிடைக்கும்.

இன்னும் 10 நாளில் விளையாட்டெல்லாம் தெரியும் தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

எங்க சார் ரிக்கட் எடுப்பது?

May be an image of text that says 'INTRODUCING DAILY DIRECT FLIGHT FROM JAFFNA TO CHENNAI / TRICHY FLIGHTS* DEPARTURE CHENNAI (MAA) JAFFNA (JAF) JAFFNA (JAF) TRICHY (TRZ) 08:00 ARRIVAL TRICHY (TRZ) JAFFNA (AF) 09:00 10:00 FARES" JAFFNA (JAF) -CHENNAI (MAA) 11:00 12:00 Rs.50,000 13:00 14:00 Rs.40,000 5:00 Rs.40,000 Rs.50,000 Starting from 1st July, 2022. AircoME iRCOME Travelss & Tours (Pvt) Ltd No. 303, Stanley Road, Jaffna Tel: +94 21-2219113 Mob: +94 77-7310414 +94 77-5052715'

யாழ்ப்பாணத்திலும் ஒரு விமானச்  சீட்டு நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
20´ம் திகதி (நாளை) முதல்  விமானச் சீட்டு  விநியோகிக்கப்படுமாம்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து... 
சென்னைக்கு ஒரு வழி கட்டணமாக 50 ஆயிரம் ரூபாவும் , 
திருச்சிக்கு ஒருவழி கட்டணமாக 40 ஆயிரம் ரூபாவும் அறவிடுகிறார்கள்.
 🧳Lagguage -25 Kg and Hand lagguage 5 kg👜,

Nirujan Selvanayagam

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'திருக்கேதீச்சர கும்பாபிஷேகத்திற்கான விசேட விமான சேவை திருச்சி (TRZ) சென்னை (MAA) இரு வழி ₹16,000 வரிகள் இரு வழி ₹20,000 யாழ்ப்பாணம் JAF) வரிகள் யாழ்ப்பாணம் (JAF) ஜூலை ஜூலை 14 (தினசரி சேவை) யாழ்ப்பாண்த்தில் தங்குமிட வசதிகள் (attached bath) நபருக்கு ₹ 2500 ++ twin sharing ₹ 2000 ++ தினசரி A/C பேருந்து போக்குவரத்து சேவை ₹ 500 நபருக்கு 1 நாளைக்கு சைவ உணவு ஆலய சுற்றாடலில் பெற்றுக்கொள்ளலாம் பயண ஒழுங்குகளுக்கு: SERFICEE IndSri Ferry Services Pvt Ltd (Chennai) +91 9500959345 91 9952199899 indsri.ferry@gmail.com'

சென்னை,  திருச்சியில் இருந்து....  
திருக்கேதீஸ்வர கும்பாபிஷேகத்திற்காக,  
விசேட விமான சேவைகள்... 1´ம் திகதியில் இருந்து ஆரம்பம்.

ஊரில் இருப்பவர்கள் போறதுக்கு வழியைக் காணோம்  😀அதில் இது வேற🤨 
நான் போனான் . பாலாவியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்திற்கு வாத்தேன் ...இத்தனைக்கும் எனக்கு சாமி நம்பிக்கை இல்லை ....என்னோடு வந்தவர்களின் மனம் நோகக் கூடாது என்பதற்காய் செய்தேன்😑 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, ரதி said:

இத்தனைக்கும் எனக்கு சாமி நம்பிக்கை இல்லை ....என்னோடு வந்தவர்களின் மனம் நோகக் கூடாது என்பதற்காய் செய்தேன்😑 

என்னதொரு பெரிய மனசு........என்னால தாங்க முடியல  :cool:

ஸ்ராட் மியூசிக் 🎶🎶🎶

  • கருத்துக்கள உறவுகள்

மதுரைக்கும் விமான சேவையைத் தொடங்குங்கப்பா, நம்ம வன்னியன் அண்ணா வந்து போக!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

மதுரைக்கும் விமான சேவையைத் தொடங்குங்கப்பா, நம்ம வன்னியன் அண்ணா வந்து போக!

வன்னியர் பிறந்த இடம் மதுரை. வளர்ந்த இடம் சென்னை. வேலை செய்யிற இடம் டுபாய்.😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.